Skip to content
Post Views: 20,322
இலக்கணம் பெண்மையே!…
இறுதி அத்தியாயம் 2
அந்தரங்கம் புனிதமானது. அது அந்தரங்கமாக இருக்கும் வரை மட்டுமே. அந்தரங்கமும் அதன் வரையறைக்குள் மட்டுமே நிற்க வேண்டும். அப்படி அல்லாமல் வரையறை அற்ற, முறை கேடானா உறவு நிலை குறிய அந்தரங்கம், வரைமுறை அற்றது.
அப்படி பட்ட உறவு நிலை என்பது ஆணும், பெண்ணும் பொது வெளியில் உடல் உறவு கொள்வது போல தான். எல்லாம் வெளியரங்க மாக்கப்படும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை என்று ஒதுக்க பட மாட்டாது. கள்ள காதல் என்ற பெயரில் வீதிக்கு இழுத்து விமர்சிக்க படும். கணவன், மனைவிக்கான உறவு நிலை மட்டுமே புனிதமாக கருத படும். அதை தாண்டிய உறவு நிலை, பொது வெளியில் அசிங்க பட்டு, அவமான படுத்தபடும்.
Advertisement
கூனி குறுகி போனான் பிரகாஷ். கட்டிய மனைவியே என்ற போதும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. எவ்வளவு பெரிய வலி அவளுக்கு… இதை பார்க்கும் போது மனம் எப்படி துடித்து இருக்கும். இதன் முழு செயலுக்கும் காரணம் நான் தான். என்னாலே கண் கொண்டு வாசிக்க முடியவில்லை. அசிங்கமாக, அருவருப்பாக இருந்தது. எந்த பேய் புகுந்து என்னை ஆட்டி படைத்ததோ… கண்ணை மூடி பின்னால் சாய்ந்து கொண்டான். கண்களில் நீர் திரண்டது.
எல்லாம் பிரகாஷ், ஷாலினி அந்தரங்க பக்கங்கள் தான். வாசு தான் எல்லாவற்றையும் சேகரித்து இருந்தானே. போலீஸ், கேஸ் என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் ஒரு திருமணம் ஆகாத பெண் மீது பழி விழும் போது எப்படி வேண்டும் என்றாலும், யார் பக்கம் என்றாலும் கேஸ் திரும்பும் என்பதால் சர்வ ஜாக்கிரதையாக பிரகாஷ், ஷாலினி பற்றிய விபரங்கள் சேகரிக்க பட்டது. அது ஆதாரமாக போலீஸ் ஸ்டேசன், அதிகாரிகள் என்று எல்லா பக்கம் சுற்றி வந்து விட்டது.
இதில் நிதர்சனமான உண்மை என்னவென்றால் யாருமே தனிப்பட்ட அந்தரங்கம் என்று ஒதுக்க முடியாமல், விசாரணையாக விமர்சிக்க பட்டு விட்டது. எளிதாக மற்றவர்கள் பார்வைக்கு வலம் வந்து விட்டது. இது தான், இவ்வளவு தான் முறையற்ற வாழ்க்கைக்கான மரியாதை. இதை சிலர் உணர தான் மறுக்கிறார்கள்.
Advertisement
சாலாவும் அவற்றை பார்வையிட்டாள். மற்றவர்களுக்கு இது வெறும் ஆதாரம் மட்டுமே. வாசுவும் அந்த எண்ணத்தில் தான் கலெக்ட் செய்தது. ஆனால், சாலாவுக்கு?…
Advertisement
மிக பெரிய வலி. உயிரோடு அறுவை சிகிச்சை செய்வது போல நெஞ்சே பிளந்து கொண்டு வலிக்கும். வருடம் மூன்று கடந்த பின்பும் அதே வலி மட்டும் குறையாமல் இருக்கு. கதைகளில், சினிமாவில் கூட அந்தரங்க காட்சி முகம் சுழிக்க வைக்காமல் புனிதம் காக்க பட வேண்டும் என்று எண்ணுபவள். தன் கணவனுக்கும், வேற பெண்ணுக்குமான அந்தரங்க உறவை, அவர்களின் மகிழ்வை வார்த்தையாக கேட்கும் போது எப்படி இருக்கு…
அது ஒரு வகை தாங்கி கொள்ள முடியாத வலி. அதை தினம் தினம் அனுபவித்து முழுதாக முடிந்த பின் தான் கடந்து வந்தாள். இன்று சர்வ சாதாரணமாக காட்டி கேட்க முடிகிறது.
நடுத்தர வயதில் தன்னை ஒரு பெண் வாலிப காதலன் போல சுற்றி வருகிறதே என்ற கர்வம், அவளை ஈர்க்கும் ஆர்வம், இழுத்து பிடிக்கும் அவசரம், அவள் கதாநாயகனாக மாறும் ஆசை, அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமரும் வேகம், தன்னை தாண்டி பார்வை போக கூடாது என்ற கவனம், அவளின் பிரமிப்பு தன்னை சுற்றியே இருக்க வேண்டும் என்ற முனைப்பு எல்லாம் சேர்ந்து ஷாலினி நினைப்புக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டதன் வெளிப்பாடு. ஐ லவ் யூ என்ற ஒத்த வார்த்தையில் ஷாலினி முகம் பூவாக மலர்ந்து போகும். அதற்கு என்றே ஒரு நாளில் பார்க்கும் போது, பேசும் போது எல்லாம் அந்த வார்த்தையை சொல்லி விடுவான்.
Advertisement
ஏதோ ஒரு குருட்டாட்டத்தில் தொடங்கிய வாழ்வின் எதிர் விளைவை யோசிக்கவே இல்லை. தற்போது மனைவியை பார்க்கும் போது பயமாக இருந்தது. அஜய்க்கு இருவது வயது, எதுவும் தெரியாமல் ஒன்றும் இருக்காது. இதை எல்லாம் பார்த்தால் மகன் நிலை என்னவாக இருக்கும், அதுவும் அஞ்சு குட்டி… யோசிக்கவே நெஞ்சு நடுங்கியது. இதற்கு அன்றே நான் செத்து இருந்தால் பரவாயில்லை…
“ சாலா…” பெரும் தயக்கத்தோடு தான் அழைத்தான்.
அவனை நேர் கொண்டு பார்த்தவள், “நீங்களும் பல தடவை மன்னிப்பு கேட்டீங்க. நானும் பல தடவை விளக்கம் கொடுத்துட்டேன்… அப்புறமும் உங்களுக்கு எதுவும் புரியலையா?…” கண் முன் கிடக்கும் அனைத்தையும் காட்டியவள்,
“இதையெல்லாம் என்னைக்காவது மறந்து, கடக்க முடிஞ்சா… என்னால உங்களுக்கு மன்னிப்பை கொடுக்க முடியும். ஆனா, நான் செத்து என் உடம்புல தீ வச்சா கூட அந்த நினைப்பு போகாது…”
“ சாலா…” என்று கண்ணை மூடி கொண்டான். வார்த்தை குத்தியது.
“கள்ள உறவோட நிலை எங்கு முடியும். உடலுறவு தான?… ஆமா, இல்லாம வெறும் பழக்கம் எல்லாம் நட்பு என்ற வகையில் தான் வரும். ஆறுதல் தேட போனேன், ஆறுதல் கொடுக்க போனின்னு என்ன காரணம் அடுக்கி கொண்டாலும் முடிவு என்னவோ கட்டில் தான்…” என்றவள்,
தன் கணவனை பார்த்து, “ பொதுவா ஒரு பொண்ணு புருசனை முழுமையா உரிமை கொண்டாட முடியாது. பெத்த தாய்க்கும், பெத்த மகளுக்கும் விட்டு கொடுத்து தான் ஆகணும். அஞ்சுவும், அப்பாக்கு நான் தான் ஃபர்ஸ்ட் அப்படி சொல்லும் போது எனக்கு பெருமையா தான் இருக்கும். ஏன்னா எனக்கு தெரியும். ராத்திரி பத்து மணிக்கு மேல, பிள்ளைக உறங்குன பின்னாடி என் கணவன் காதல் என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு கர்வம் இருக்கு…”
“அதிலும் நீங்க ரொம்ப பொறுப்பானவர். எல்லாரும் உங்களை மரியாதையா தான் பார்ப்பாங்க. ரொம்ப அமைதி, அழுத்தம். ஆனா, எனக்கு தெரியும் என் புருசனோட அந்தரங்கம். சொல்லுவாங்க இல்ல அவன் ரொம்ப கோவகாரன், அவனை நெருங்காதீங்கன்னு. ஆனா, அவன் பொண்டாட்டிக்கு தெரியும், அவன் எவ்வளவு மென்மையானவன்னு… இது எல்லாம் ஒரு மனைவிக்கான பெருமை. என் புருசனை எனக்கு தெரியும்ன்னு… அந்த பெருமை நிச்சயம் எனக்கும் இருந்துச்சு…” சாலா தன்னை கட்டு படுத்தி கொண்டாள்.
“அது ரொம்ப ரகசியமான உரிமை. எங்க பக்கம் ஒரு சொல்லு உண்டு, “புருசன், பொண்டாடின்றது காலையில சண்டை போட்டா, ராத்திரி ராசியாகி போவாங்க…” புருசன் ரொம்ப ஈசியாவே பொண்டாட்டிய கவர் பண்ணிடுவாங்க. தெரிஞ்சே பொண்டாட்டியும் ஏமாருவாங்க… புருசன், பொண்டாட்டி உறவே தாம்பத்தியத்துல தான தொடங்கும். யாருக்கும் தெரியாம புருசன் கிட்ட பொண்ணுக்கு கிடைக்கிற ஆதரவு தான அவளை எல்லா கஷ்டங்களையும் தாண்டி அவனுக்காக நிக்க வைகுது, அவன் கூடவே வாழ்க்கையில போராட வைக்குது, காலத்துக்கும் துணை நிக்க வைக்குது…”
“அந்த உறவும், உரிமையும் தான என்னையும் உங்க கூட போராட சொல்லுச்சு. குடும்பத்தை கட்டி காத்து, அனுசரிச்சு, உங்க சுமையை என் தோளில் எந்திக்க சொல்லுச்சு. உடைச்சு சொல்லணும்ன்னா தாம்பத்திய சொந்தம் மட்டும் தான், கட்டுன பொண்டாட்டி கடைசி வரை சொந்தம் கொண்டாட போறது. அவ்வளவு புனிதமான அந்தரங்கத்தை, எனக்கு மட்டுமே உரிமையானத, நீங்க எவளோ ஒருத்திக்கு தூக்கி கொடுத்துட்டு , கழுத்துல கட்டுன தாலிக்கு நான் உண்மையா இருக்கேன்னு சொல்றது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்…” பிரகாஷ் நிமிரவே இல்லை. மறுப்பு சொல்ல வார்த்தை கூட வர வில்லை.
“ஆனா ரொம்ப ஈசியா எல்லாத்துக்கும் காரணம் நான் தான்னு சொல்லிட்டீங்க. நானும் அப்படியே நம்பி இருப்பேன். உங்க பொண்டாட்டி உங்க மேல அவ்வளவு பைத்தியம். கோவால உங்களையும், அந்த பொண்ணையும் ஒன்னா பார்த்த போதே கேட்டு இருந்தா, நீங்களும் அப்படி தான் சொல்லி இருப்பீங்க. நானும் நம்பி இருப்பேன். ஆமா, நாம சரியா புருசனை கவனிக்கல, முடியாம போச்சு. அவர் தப்புக்கு ஒரு வகையில நாம தான் காரணம்ன்னு நினைப்பு வந்து இருக்கும். அப்படி பட்ட முட்டாள் தான் நான்…”
“ஆனா கொஞ்சம் நிதானிக்க போய் தெளிவு கண்டேன். அது என்ன கட்டுன பொண்டாட்டிய தாண்டி ஒரு ஆசை, உடல் தேவை. எனக்கு அது புரியவே இல்லை. பொதுவா ஆம்பளைங்க தன்னை விட இளைய பொண்ணுகளை தான் கல்யாணம் பண்றாங்க. அவங்களுக்கான உறவு தாம்பத்திய வாழ்க்கையில இருந்து தான் தொடங்கும். ஆனா, அது மட்டுமே காலத்துக்கும் ஓட்டாது. முப்பது வருசம், நாப்பது வருசம் சேர்ந்து வாழ்ற கணவன், மனைவியை நாமும் பாக்குறோம். அவங்களும் எல்லா ராத்திரியும் கணவன், மனைவியா வாழவா செய்வாங்க. ஒருத்தருக்கொருத்தர் துணையா, ஆறுதலா, பாதுகாப்பா பக்கத்துல இருக்குறதே நிம்மதியா இருக்காது. அந்த உறவ தான நானும் நினைச்சேன்…”
பிரகாஷ் நிமிர்ந்து மனைவி முகம் பார்த்தான். அழுகை, வலி, வருத்தம், குறைந்த பட்ச சோகம் கூட இல்லை. நிர்மலமாக தெளிவாக இருந்தது. அதுவே அவள் கடந்து வந்து விட்டாள் என்று புரிந்து கொண்டான்.
“நமக்கும் வயசு ஆகி பேரன், பேத்தி எல்லாம் எடுக்கும் போது அந்தரங்கம் மேல இருக்குற ஆர்வம் குறைந்து போகும். வயசு மாறும் போது நினைப்பும் மாறி போகும். அப்போ அவங்க வாழ்க்கை துணை? அதுவும் வயது குறைந்த மனைவி? இல்லை நடுத்தர வயசுல கணவன் இல்லாம இருக்குற பெண்கள் எல்லாம் எந்த வகை? அவங்களுக்கு தேடல் இருக்காதா?… ஒரு பெண்ணுக்கான உணர்வுகள் அவ புருசனுக்கு மட்டும் உரியது. ஒரு ஆணுக்கான உணர்வுகள் அவன் கட்டிய மனைவிக்கு மட்டும் தான் உரியது. நீங்க ஒரு புருசனா உங்க தகுதிய இழந்தாலும் என் உணர்வுகள் கட்டவிழ்க்க படாது…”
“இன்னைக்கு நானும் ஒரு தொழில் பண்றேன். போற, வார இடத்துல ஆயிரம் ஆம்பளைகளை கடந்து தான் வாரேன். நான் உறுதியா சொல்லுவேன் என் முன்னாடி நூறு பேர் இருந்தாலும் என் பார்வை இடாறாம என்னால கடக்க முடியும். அந்த நம்பிக்கையை உங்களால எனக்கு தர முடியுமா?…”
“என் வலி பெருசு. உங்களை எவ்வளவு நம்பினேன் தெரியுமா?… நான் இல்லாம என் புருசனுக்கு வாழவே தெரியாதுன்னு நினைச்சு இருக்கேன். ஆபரேசன் பண்ணி படுத்து இருக்கேன் பெத்த பிள்ளைக்கு முன்ன உன் முகம் தான் வந்து நிக்கும். பிள்ளைக கூட அவங்கவங்க வாழ்க்கையை பார்த்து போயிடுவாங்க, நம்ம புருசன் தான தனியா நிக்கும். அதுக்காகவாது நான் எந்திருச்சு வரணும்ன்னு நினைச்சு இருக்கேன். என்னை தாண்டி உங்களுக்கு வாழ தெரியாதுன்னு என் நினைப்பு. எவ்வளவு பெரிய முட்டாள் நான்… என்னை தாண்டி தான் நீங்க உங்களுக்கான வாழ்க்கையையே வாழ்ந்து இருக்கீங்க…”
“தூக்கத்துல அசந்து உறங்கும் போதும் உங்களை தான் கூப்பிடுவேன். என் ஆழ் மனசுல கூட உங்க நினைப்பு தான். நீங்க கூட என்னடி தூக்கத்துல என்னை கூப்பிடுறன்னு சொல்லி கிண்டல் பண்ணுவீங்க… அவ்வளவு நேசிச்ச எனக்கு நீங்க கொடுத்தது என்ன? துரோகம். என் கண்ணு முன்னாடியே என் முதுகுல குத்தி இருக்கீங்க…”
பிரகாஷ் கைகளை கட்டி கொண்டு அமைதியாக மனைவியின் வார்த்தைகளை உள் வாங்கினான். தான் ஒரு செத்த பாம்பு என்று கருதினான்.
“ரொம்ப சர்வ சாதாரணமா தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடு. வேற எனக்கு என்னை சொல்ல, இனி தப்பு பண்ண மாட்டேன். அவ்வளவு தான். என் வலி, என் காயத்தோட அளவு, என் மனசோட ரணம் எதுவுமே உங்களுக்கு புரியல. பொதுவா என்ன நடக்கும்? நாலு சுவத்துக்குள்ள ஒரு சண்டை, நாலு பேர வச்சு பஞ்சாயத்து, நாலு நாள் அழுகை. அப்புறம் நிதர்சனம் இருக்குல?… குடும்பத்துல இப்படி ஒரு நிலைன்னா முதல்ல பாதிக்க படுறது குழந்தைகள் தான். அவங்களை யோசிச்சு பெத்தவ வாய முடிக்குவா… காலம் கடக்கும் போது காயம் மாறி போகும்…”
“ஆனா, உண்மை என்னன்னா என் நியாயம் தான் மாறி போச்சு. அன்னைக்கு நான் துரோகின்னு அடையாளம் காட்டும் போது நின்ன யாரும், இன்னைக்கு நிக்க மாட்டாங்க. காலம் மாறி போச்சு, என் நியாயத்தோட வீரியம் குறைந்த போச்சு. இன்னைக்கு பிரகாஷ் நல்லவன். பொண்டாட்டி கிட்ட மட்டும் தான் தப்பு பண்ணான். அதுவும் அந்த ஒரு விசயத்துல மட்டும் தான். சாலாவும் முடியாம கிடந்தா, ஒரு ஆம்பிளை என்ன பண்ணுவான். மத்தபடி நல்லவன் தான். லட்ச கணக்குல சம்பாதிக்கிறான், பிள்ளைகளை பாக்குறான், பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குறான். யார் செய்வா? ஊர், உலகத்துல நடக்காததா?… பிள்ளைக வாழ்க்கை தான் வெட்டியா போகும். பெத்தவ அப்படி யோசிக்க கூடாது…”
பிரகாஷ்க்கு மனைவி இங்கு தன்னை அனுமதித்ததன் காரணம் விளங்கியது.
ஒரு விரக்தி சிரிப்பு சாலா முகத்தில், “என்னோட இந்த ஓட்டம் உங்களை ஜெயிக்கன்னு நினைச்சீங்களா?… நிச்சயமா இல்லை. நீங்க வழி மாறி போயி, நான் தடு மாறி நின்னு, எதுவும் விபரீதம் ஆனா, எந்த பாவமும் பண்ணாத என் பிள்ளைக கதி. பதினேழு வருசம் இது தான் வாழ்க்கைன்னு அவங்களுக்கு காட்டிட்டு, நொடியில அதை பிடிங்கி போட்டு அனாதையாக நிக்கவா மடி தாங்கி பெத்தேன். நொண்டி காலா இருந்தா என்ன, எப்படியாவது எம் பிள்ளைகளை கரை சேர்க்க தான் ஓடினேன். பின்ன இது என்ன சினிமாவா?…”
“ எனக்கு துரோகம் பண்ணிட்டியா? பார் நான் யார்ன்னு? உனக்கு மேல நான் வளர்ந்து காட்டுறேன். இந்த நாள் உன் காலண்டரல குறிச்சு வச்சுக்கோன்னு ரஜினி மாத்தி டயலாக் பேசவோ இல்லை புரட்சி பெண்ணோ! புதுமை பெண்ணோ அல்ல. சாதாரண குடும்பத்து பெண். நம்ம வாழ்க்கை கெட்டாலும் நம்ம பிள்ளைகளை ஜெயிக்க வைக்கணும்ன்னு நினைக்கிற சாதாரண பொம்பளை. நாளைக்கே நீங்க எங்களை கை விட்டா, எம் பிள்ளைகளை தூக்கி நிறுத்த அவங்க அம்மா இருக்காங்க. அவங்களுக்காக ஓடின ஓட்டம் தான் இது…”
பிரகாஷ் பார்வை மனைவியை விட்டு அகல வில்லை. பிரமிச்சு போய் பார்த்தான்.
“இதோ, இந்த ஆதாரத்தை எல்லாம் காட்டி உங்க அப்பன் லட்சணம் இது தான்னு சொல்லி, உங்க கிட்ட இருந்து அவங்களை பிரிக்க எனக்கு ஒரு நிமிசம் போதும்…” சாலா சொல்லும் போதே, பிரகாஷ் கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது. அவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
“அது எதுக்கு?… வாழ்க்கையில அடுத்த கட்டத்துல நிக்கிற அவங்க வாழ்க்கையை என்னால திசை திருப்ப முடியாது. இதெல்லாம் ஒரு வடுவா, காயமா அவங்க மனசுல நின்னா, அவங்க எதிர்காலம் பாதிக்க பட்டா. சத்தியமா என்னால தாங்கிக்கவே முடியாது. ஒரு அப்பாவா அவங்களுக்கு நீங்க சரி, ஒரு அம்மாவா நானும் சரி தான்”
“என்னோட வலியையும், கஷ்டத்தையும் வலுக்கட்டாயமாக அவங்க மேல திணிச்சு, அதை பிடிவாதமா உணர வைக்கிறது சுயநலமா தோணுச்சு. அவங்களுக்காக நான் வாழ்றேன், அதுக்காக எனக்கு நீங்க நில்லுங்கன்னு சொல்லி என்னோட காயத்தை மட்டுமே யோசிக்க முடியல. பிள்ளைகளுக்காக தான இந்த பாடு, அவங்களுக்காக தான இந்த ஓட்டம். உங்களை மாதிரி நானும் சம்பாதிக்கிறேன். அந்த காசு, பணத்தை மட்டுமே வச்சு எம் பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பை, நிறைவை, குடும்ப அமைப்பை கொடுக்க முடியாது…”
“நீங்க இல்லாமேவே என்னால அவங்களை கொண்டு போக முடியும். ஆனா, ஏதோ ஒரு கட்டத்துல எங்க அப்பா இருந்திருந்தான்னு ஒரு நினைப்பு வந்தா போதும் எம் போராட்டம் எல்லாம் தோத்து போகும். என் ஒருத்திக்காக எதையும், யாரோட விருப்பத்தையும் மாத்த நினைக்கல. நிஜமாவே கூட நீங்க திருந்தி இருக்கலாம். எம் மனசு ஏத்துக்கல, பிள்ளைக மனசு ஏத்துக்கும் போது நான் தடுக்கல, விசயம் அவ்வளவு தான். உங்க கிட்ட ஒரு நல்ல மாற்றம் பிள்ளைக நல்ல வாழ்க்கைக்கு உதவும்ன்னா அதை ஏன் தடுக்கணும்…”
“எனக்கான வாழ்க்கை என்ன? எனக்கான நியாயம் தேடி எம் பிள்ளைகளை கூட ஒதுக்கி வச்சு ஓடி என்ன ஜெயிக்க போறேன். அப்படி நான் ஜெயிச்சு அது யாருக்கு? எனக்கான பாதையில யார் இருக்கா?…”
சாலா விழிகள் லேசாக கலங்கியது, “என்னைக்காவது ஒரு நாள் எம் பிள்ளைக என் வலியை உணருவாங்க. நம்ம அம்மா கொடுத்த இந்த வாழ்க்கை நமக்கு லேசா கிடைக்கலன்னு புரியும். என் நகையை வச்சு என் மகனை படிக்க வைக்கும் போது, என் நகை போகுதுன்னு எனக்கு துளி கூட கவலை இல்லை. அவ்வளவு பெரிய அகடமில கோர்ட் ஷூட் போட்டு என் மகன் முன்ன நிக்கும் போது வருமே ஒரு உணர்வு. அதை சொல்லவே தெரியலை. அவன் முகத்துல இருந்த கம்பீரம், நிம்மதி பார்த்து நான் பூரிச்சு போய்ட்டேன். எனக்கு வேற என்ன வேண்டும்?…” தன் கண்களை துடைத்து கொண்டு சாலா நிமிர, பிரகாஷ் மொத்தமாக தனக்குள் முடங்கி போனான்.
“எம் பிள்ளைகளுக்கு நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கையை கொடுத்து இருக்கேன். என்னோட நியாயத்தை முன் வச்சு இதை எல்லாம் ஓடச்சா அது பெரிய அநியாயம். எனக்கு ஜெய பிரகாஷ் என்ற ஒருத்தர் யாருமே இல்லை. அவரை நான் என்னைக்கோ கடந்து வந்துட்டேன்…”
பிரகாஷ் தன்னை பிணமாகவே உணர்ந்தான். விசாலாட்சி நேர் கொண்டு பிரகாஷை பார்த்தாள்.
“நீங்க ஒரு நல்ல மகன், நல்ல அண்ணன், நல்ல அப்பா. நீங்க ரொம்ப லேசா தூக்கி போட்டது, உதாசீன படுத்துனது விசாலாட்சின்னு ஒரு தனி மனுசிய, அவ கூட நீங்க வாழ்ந்த வாழ்க்கைய. அந்த வாழ்க்கையோட அர்த்தத்தை அவளும் தூக்கி போட்டா… நீங்க அவளுக்கு யாருமே இல்லை. ஒரே வீட்டுல இருக்குறதால சலன பட்டு நிக்க விசாலாட்சி ஒன்னும் ஜெய பிரகாஷ் இல்லை. புது வீட்டையும், நகையும் பார்த்து பரவசமாகி பின்னாடியே வர விசாலாட்சி ஒன்னும் ஷாலினியும் இல்லை…”
“ஒரே வீட்டுல இருந்தாலும் சரி, நாளைக்கு நீங்க ஒரே அறைக்கு வந்தாலும், ஒரே கட்டிலில படுத்தாலும் உங்களால என்னோட உணர்வுகளை தூண்ட முடியாது. என் வாழ்க்கையில உங்களுக்கான தேடல் என்னைக்கும் இருக்காது. நீங்க ஒரு உறுத்தலா கூட எம் மனசுல இல்லை. இந்த விசாலாட்சி என்னைக்கும் தனி தான்…”
error: Content is protected !!