Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 20

 அத்தியாயம் 20:

 

பார்க்கை விட்டு வெளியில் வந்த மது ஹேரியின் காரிடம் செல்லாமல் அதை தாண்டி நடந்தாள் .

பின்னால் வேகமாக வந்த ஹேரி அவளை பிடித்து நிறுத்தி “எங்க போற பேபி” என்றான்.



Advertisement

 “என்ன விடு. நா ட்ரைன்ல போறேன்” அவனை உதறி விட்டு நடக்க போனவளை நிறுத்தி “இங்க பாரு ட்ரெஸ்லாம் ஈரமா இருக்கு. இதோட எப்படி ட்ரைன்ல போவ. ப்ளீஸ் பேபி கார்ல வந்து ஏறு. நா உன்ன வீட்ல மட்டும் கொண்டு வந்து விட்டறேன்” என்று அவன் கூறியதும் கீழே குனிந்து அவள் ட்ரெஸ்ஸை  பார்த்தாள். பிறகு ஒன்றும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.

 ஹேரியும் ஒன்றும் பேசாமல் காரை எடுத்தான். மது  அவனை பார்க்காமல் வெளிப்புறமாக திரும்பி பார்த்து கொண்டே வந்தாள். அவளுக்கு குளிரும் என்பதால் காரில் ஹீட்டரை ஆன் செய்திருந்தான்.

 அவள் வீட்டிற்கு சிறிது முன்னரே காரை நிறுத்தியவன் “ஹனி என்ன பாரு” என்று அவளை அழைத்தான்.

Advertisement

 மது திரும்பாமல் காரின் கதவை திறக்க முயன்று கொண்டிருந்தாள். “நான் லாக் பண்ணிருக்கேன் பேபி. உன்னால திறக்க முடியாது. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு. அதுக்கப்புறம் நா கதவை திறந்து விடறேன்” என்றவன் வலுக்கட்டாயமாக அவள் கன்னத்தை பிடித்து தன் புறம் திருப்பினான்.

Advertisement

 முகத்தை திருப்பினாலும் அவனை பார்க்க கூடாது என்று கண்களை இறுக்கி  மூடியிருந்தாள். அவளை அப்படி பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த டென்ஷன் மறைந்து ஹேரிக்கு சிரிப்பு எட்டி பார்த்தது. இருந்தும் அவளை மேலும் கோபப்படுத்த விரும்பாமல்

 “நான் உன்னட்ட அனுமதி வாங்காம உன்ன கிஸ் பண்ணது வேணா தப்பா இருக்கலாம் பேபி. ஆனா உன்னட்ட என் காதலை சொன்னது உண்மை. அது மட்டும் இல்லாம நா உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை படறேன். என் வாழ்நாள் முழுக்க உன்ன என் கூடவே வச்சுக்கணும்னு எனக்கு ஆசை. உன்ன யார்ட்டயும் விட்டு குடுக்க என்னால முடியாது. காலைல சொன்னியே என் கல்யாணத்துக்கு கெஸ்ட்டா வானு. அப்டி எதாவது நடந்துடுமோன்னு பயத்துலதான் நா இப்பவே இத பேசறேன். உனக்கும் என்ன  பிடிக்கும்னு எனக்கு தெரியும் பேபி. உங்க அம்மா அப்பா உங்க ஊர் இதெல்லாம் இழந்துடுவோம்னு பயத்துல என்ன வேண்டாம்னு சொல்லிடாத பேபி. என்ன கல்யாணம் பண்ணிக்கிறதால அந்த மாதிரி எந்த ஒரு இழப்பும் உனக்கு ஏற்படாம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு பேபி. என்ன நம்பி உன் வாழ்க்கையில என்ன சேத்துக்க பேபி. ப்ளீஸ் என்ன வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத பேபி” என்று இறைஞ்சியவன் அவள் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிவதை பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டு, காரை எடுத்து கொண்டு போய் அவளின் அபார்ட்மெண்ட் வாசலில் நிறுத்தி டோரின் லாக்கை விடுவித்தான்.மதுவும் அவனை பார்க்காமல் கண்களை துடைத்து கொண்டே இறங்கி உள்ளே செல்ல போனாள்.

 அவளை நிறுத்தியவன் அவள் கைகளில் அவள் ஷாப்பிங் பண்ணிய கவர்களை கொடுத்து விட்டு அவள் அவனுக்கு எடுத்த டிஷர்ட்டை கொடுப்பாள் என்று கையை நீட்டினான். 

Advertisement

 அவன் கேட்பது புரிந்தாலும் கண்டுகொள்ளாமல் சென்றாள்  மது. அவள் அப்படி சென்றவுடன் காரின் கதவிலேயே சாய்ந்து கண்களை மூடி நின்றான் ஹேரி. பிறகு சிறிது நேரம் கழித்து காரை எடுத்து கொண்டு சென்றான்.

 அவன் நீட்டிய கையை தவிர்த்து விட்டு வந்த மது வீட்டிற்குள் நுழைந்து கதவை சாத்தியவுடன் அழ ஆரம்பித்து விட்டாள். அவன் முத்தம் கொடுத்ததற்கா,  காதல் சொல்லியதற்கா இல்லை அவன் டீ சர்ட்காக கை  நீட்டியும் கொடுக்காமல் வந்ததற்க்கா  என்று எதற்கு அழுகிறோம் என்று இல்லாமல் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அழுதாள் மது

.அவன் முத்தம் கொடுத்ததை விட  தானும் அதை தடுக்காமல் ஏற்று கொண்டு நின்றதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை மதுவால். இன்னும் அதை நினைத்தால் அவன் மீது வெறுப்பு வரவில்லை அவளுக்கு. அதை நினைத்தும் பயந்து அழுதாள். இன்னும் அவள் காதலை நினைத்து அழுதாள். ஆம். அவள் மனதுள் இதுவரை ஏற்றுக்கொள்ள படாமல் பதிய வைக்க படாமல் இருந்த காதல் , இன்று அவன் கொடுத்த முத்தத்தின் மூலம் அழுந்த பதிய வைக்க பட்டது.

 இப்படி எல்லாவற்றுக்கும் அழுது அழுதே உறங்கியவளுக்கு விடியற் காலையில் காய்ச்சல் வந்து விட்டது. உடம்பெல்லாம் வலி தாங்க முடியாமல் எழுந்தவளுக்கு  அப்பொழுதுதான் நேற்று  உடையை கூட மாற்றாமல் சோபாவிலேயே  உறங்கியது தெரிந்தது. 

 காய்ச்சலுக்கு மாத்திரையாவது போட வேண்டும். வெறும் வயிற்றில் போட கூடாதே, பாலாவது குடித்து விட்டு போடலாம் என்று எழ முயற்சிதான் செய்தாள்.முடியவில்லை. நைட்டும் சாப்பிடாதது, காய்ச்சல் எல்லாம் சேர்ந்து மயக்கமாக வந்தது. தனியாக மயங்கி கிடந்தால் என்னாவது என்ற பயம் வேறு சேர்ந்து அழுகையாக வந்தது.அழுது கொண்டே அரை மயக்கத்தில் படுத்திருந்தவளுக்கு எங்கோ கதவு தட்டும் சத்தம் கேட்டது.பிறகு மொபைல் ஒலித்தது.

 அவனாகத்தான் இருக்கும் என்று மனது சொல்லியது. நல்ல வேளையாக ஹேண்ட் பேக் , நேற்று ஷாப்பிங் பண்ணிய கவர்கள் அனைத்தும் சோபாவுக்கு  பக்கத்தில் கீழேயே கிடந்தது. பேகிலிருந்து போனை எடுத்து யாரென்று பார்த்தால் ஹேரிதான். போனை எடுத்து அவள் சொல்லிய  ஹலோ என்ற  ஒரு வார்த்தையிலேயே “என்னாச்சு பேபி , என்ன செய்யுது” என்றான்.

 மதுக்கு அழுகை தேம்பலாக  மாறி வெளி வந்தது.

 ஹேரி “வந்து கதவை திற பேபி . நா வாசல்லதான் நிக்கிறேன் ” என்றான்.

மதுவுக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. அப்பாடா வந்துட்டான் , பக்கத்துலதான் இருக்கான் என்று நிம்மதியானவள்  கஷ்ட பட்டு எழுந்து வந்து கதவைத்திறந்தாள்,

 கதவை திறந்து விட்டு அவனை பார்க்காமல் திரும்பவும் சோபாவிலேயே வந்து படுத்து விட்டாள். அவள் பின்னோடு வந்தவன் அவளின் நெற்றியில் கை  வைத்து பார்த்தான்.ஹெவி ஃபீவராக இருந்தது. நேற்று மாலை மதுவை விட்டு விட்டு கிளம்ப மனதே இல்லாமல் கிளம்பியவன் வீட்டிற்கு சென்று அன்றைய நிகழ்வையும் மதுவையும் யோசித்து கொண்டே படுத்திருந்தான்.

 ஜானும் சிட்னியில் உள்ள அவர்களின் ஆஃபீஸிற்கு சென்றிருப்பதால்  ஹேரி தனியாகத்தான் இருந்தான். ஹேரியும் மாற்றி மாற்றி எல்லா ப்ராஞ்சிற்க்கும் அவ்வ பொழுது விசிட் செய்வான்.

 ஆனால் மதுவை சந்தித்த நாளாக நியூ யார்க் மட்டும்தான் சென்று வந்தான். பிறகு மெல்பர்னிலேயே தங்கி விட்டான். ஜான் மட்டுமே வெளியூர் வேலைகளுக்கு சென்று வருகிறான்.

 யோசித்து கொண்டே தூங்கியவன் விழிப்பு வந்து மணி பார்க்கும் போது விடியற்காலை நான்கு ஆகியது. அவனின் பேபியை பார்க்க வேண்டுமென்று மனம் அடித்து கொண்டது. யோசிக்காமல் உடனே கிளம்பி வந்து விட்டான். அவனின் வீட்டிலிருந்து அரை மணி நேர தூரம் தான் அவள் வீடு இருப்பது.

 இப்போது மதுவின் பீவரை பார்க்கும்போது நல்ல வேளையாக வந்தோம் என்று நினைத்து கொண்டே அவளை எழுப்பினான். “கிளம்பு பேபி டாக்டரை பார்த்துட்டு வரலாம்”

 மது எழும்பாமல் படுத்தே கிடந்தாள். ஆனால் தூங்கவில்லை. அவளின் உடையை பார்த்தவன் நேற்று உடையை கூட மாற்றாமல் ஈர உடையுடன் தூங்கியிருக்கிறாள். அதுதான் இவ்வளவு காய்ச்சலாக இருக்கிறது என்று நினைத்தவன் எல்லாவற்றுக்கும் தான்தான் காரணம் என்று வருத்த பட்டான். அவளை கிளப்பி கிளப்பி பார்த்தவன் அவள் கிளம்பாமல் படுத்திருப்பதை பார்த்து, இது சரி வராது என்று அவளின் இடுப்பில் கை  கொடுத்து தூக்க போனான்.

 அவ்வளவுதான் மது அடித்து பிடித்து எழுந்து உட்கார்ந்தாள். என்ன என்பதாக அவனை பார்த்தவளை “வா டாக்டர்ட்ட காட்டிட்டு வரலாம்” என்றான். அதற்கு வர மாட்டேன் என்று தலையாட்டியவளிடம் “சரி அப்ப இரு. நா தூக்கிட்டு போறேன்” என்று திரும்பவும் அவளை நெருங்கினான்.

 சட்டென்று மது எழுந்து நின்றவள் தடுமாறி விழ போனாள். அவளை விழாமல் பிடித்து கொண்டவன், அவனிடம் இருந்து விலக முயன்றவளிடம் “பேசாம இரு பேபி. உன்ன நா ஒன்னும் செஞ்சிர மாட்டேன்” என்றவன்  அவளை கைத்தாங்கலாக அழைத்து போய் காரில் ஏற்றி பக்கத்தில் இருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று வந்தான்.

 தலையில் தண்ணீர் கோர்த்ததால் வந்த நார்மல் ஃபீவர்தான் என்று சொல்லி மருந்து எழுதி கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பி விட்டார்கள்.

 திரும்பவும் வீட்டிற்கு அழைத்து வந்து மருந்து கொடுப்பதற்கு முன்பு பால் மட்டும் மது கேட்டதால் ஓவனில் வைத்து சூடு பண்ணி கொடுத்தான்.

 பாலை மிக சிறிதளவு மருந்து சாப்பிடுவதற்காக குடித்தவள், மருந்துகளையும் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டாள்.

 பன்னிரண்டு மணி வாக்கில் எழுந்தவளுக்கு காய்ச்சல் ஓரளவு குறைந்திருந்தது. பிறகு சிறிது சிறிதாக நேற்று நடந்தது, இன்று ஹேரி வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றது என்று ஒவ்வொன்றாக நியாபகம் வந்தது.

 தன்  மேலேயே  கோபமும் வந்தது. நேற்று அவ்வாறு நடந்து கொண்டவனின் உதவியையே திரும்பவும் நாடியிருக்கிறோம் என்று.

 மெதுவாக பெட் ரூமிலிருந்து வெளியில் வந்தாள். ஹேரி பால்கனியில் நின்று யாரிடமோ போனில் பேசி கொண்டிருந்தான்.

 ஹாலில் சோபாவில் மது அமர்ந்தவுடன் அவளை திரும்பி பார்த்து விட்டு போனை கட் பண்ணிவிட்டு வந்தான். அவள் நெற்றியில் சூடு எப்படி இருக்கிறது என்று பார்த்தவனை நிமிர்ந்து பார்த்தாள் மது 

 அவளது பார்வையை சந்தித்தவன் “என்ன பேபி. இப்ப ஓகேவா. பெட்டரா பீல் பண்றியா ” என்றான்.

 தலையை ஆட்டியவள்  “நீ செஞ்ச உதவிக்கு நன்றி. இனிமே என்ன சந்திக்க வராத. இப்ப முதல்ல என் வீட்ட விட்டு கிளம்பு ” என்றாள் 

 அவளது கண்களை பார்த்திருந்தவன் கண்களில் வலி தோன்றியது. அதை பார்த்தவள் தலையை திருப்பி கொண்டு பால்கனி வழியாக வெளியே பார்வையை பதித்து எச்சில் கூட்டி விழுங்கினாள். அதை பார்த்ததும் அவனுக்கு வலி மறைந்து சிரிப்பு தோன்றியது. சொல்லிவிட்டு அவள்தான் சிரம படுகிறாள் என்று புரிந்து கொண்டவன் , இந்த உடல் நிலையில் அவளை மேலும் சிரம படுத்த கூடாது என்று நினைத்தவன் “ஓகே பேபி. உன் ஆசை அதுதான்னா நா கிளம்புறேன். டேக் கேர் ” என்றவன் கிளம்பி விட்டான்.

 அவ்வளவு தானா.போன்னு சொன்ன உடனே போய்ட்டானா என்று அதற்கும் கடுப்பாகி கதவையே பார்த்து கொண்டு எவ்வளவு நேரம் உக்காந்திருந்தாளோ அந்த கதவை தட்டி விட்டு பார்த்தி உள்ளே வந்தான்.

 அவனை ஆச்சரியமாக பார்த்தவள் “வாங்கண்ணா ” என்று அழைத்தாள்.

 “இப்ப எப்படி இருக்க மது ” என்று பார்த்தி கேட்ட கேள்விக்கு “எனக்கு உடம்பு சரியில்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்ண்ணா” என்று கேட்டாள் மது.

 “ஹேரி ரெஸ்டாரண்ட்ல வந்து என்ன பாத்து சொல்லிட்டு போனார் மது” என்று பார்த்தி சொல்லியதற்கு மது ஒன்றும் சொல்லாமல் யோசனைக்கு சென்றாள்.

 பார்த்தி அண்ணாட்ட போய் இவன் என்ன சொன்னான் என்று யோசித்து கொண்டிருந்தாள்.

 பார்த்தி கிச்சனுக்கு சென்று அவளுக்கு சாதம் குக்கரில் வைத்துவிட்டு  ரசம் செய்து கொண்டிருக்கும் போதுதான் சுய நினைவுக்கு வந்தவள் “அண்ணா என்ன பண்றீங்க”என்றாள் .

 “உனக்கு பசிக்கலையா.ஒன்னும் சாப்பிடல. பால்தான் குடிச்சன்னு ஹேரி சொன்னார்”

 ம்க்கும் சொன்னதும் ஒடி போயிட்டு பெரிய அக்கறை இருக்க மாதிரி போய் சீன போட்ருக்கான் என்று மனதில் அவனை திட்டி கொண்டிருந்தவள் பார்த்தியிடம் “ரொம்ப பசிக்குதுண்ணா” என்றாள் 

 “குக்கர் விசில் வந்தோன்ன சாப்டலாம்  மது” என்று சொல்லி கொண்டே எல்லாவற்றையும் ரெடி செய்து அவளுக்கு சாதத்தில் ரசத்தை ஊற்றி கரைத்து குடிக்க கொடுத்தான்.

 குடித்ததும் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தவள் “நா குளிச்சுட்டு வரேண்ணா” என்று கிளம்பினாள்.

 “உட்கார் மது. யாராவது சாப்பிட்ட உடனே குளிப்பாங்களா .கொஞ்சம் நேரம் போகட்டும்” என்றவன் “ஏன் காச்சல் வந்தது உனக்கு” என்று விசாரணையை ஆரம்பித்தான்.

 ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா என்று புலம்பிக்கொண்டே “மழையில் நனைஞ்சுட்டேண்ணா” என்றாள் மெதுவாக.

“சரி அதுல ஹேரிக்கு என்ன சம்மந்தம். உனக்கு காய்ச்சல் வந்தது எனக்கு தெரியாம அவர்க்கு  எப்படி தெரிஞ்சது”

 ம்க்கும் அவனால தான காச்சல் வந்தது, அவனுக்கு  தெரியாம எப்படி இருக்கும். பச்சை புள்ள உதட்டை பிடிச்சு கடிச்சு வச்சா காச்சல் வராம என்ன செய்யும் என்று மனதினில் நொடித்து கொண்டவள் “அவன் உங்கட்ட என்னண்ணா சொன்னான்” என்று பவ்யமாக கேட்டாள்.

 ரெண்டு பேரும் பயங்கர உஷார் என்று மனதில் நினைத்த பார்த்தி “உன்னட்ட கேட்டு தெரிஞ்சிக்க சொன்னார்” என்றான்.

 உண்மையும் அதுதான்.ரெஸ்டாரண்டுக்கு சென்ற ஹேரி பார்த்தியை சந்தித்து “மதுக்கு ரொம்ப ஃபீவர். காலைல இருந்து ஒன்னும் சாப்பிடல. நீங்க போய் உடனே பாருங்க” என்று அவசர படுத்தினான் .

 பார்த்தி எப்போதும் போல் நிதானமாக “அது எப்படி உங்களுக்கு தெரியும்” என்று கேட்டான்.

 “நா மது வீட்ல இருந்து தான் வரேன்” 

 “அப்ப அவ காச்சலுக்கும் உங்களுக்கும் எதோ லிங்க் இருக்கு”

 “அத நீங்க அவகிட்டத்தான் கேக்கணும்” 

 சரி என்று அமைதியாக கிளம்பிய பார்த்தியை காரில் ஏற்றி மது வீட்டில் இறக்கி விட்டதே ஹேரிதான்.

 

                                                                                                                                                                                             (வருவாள்…)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!