“இப்படித்தான், எப்பபாரு உங்க அப்பாவுக்கு ஐஸ் வச்சு, ஐஸ் வச்சு, உன் காரியத்தை சாதிச்சிக்கற. ஆனால் இந்த தடவைகண்டிப்பா நான் ஒத்துக்கவேமாட்டேன்.இது என்னவிளையாட்டு விஷயமாஉனக்கு?இதுஉன்னோடவாழ்க்கையாழு” என தாயாய்மாதவி கவலையுடன்கூறினார்.
“நான்எங்கம்மா விளையாடுறேன்? எனக்கும் தெரியும் இது என்னோடவாழ்க்கைனு. அதுக்காக தான் நான் திரும்பத் திரும்ப பேசிட்டுஇருக்கேன்…”
“ஆமாபாப்பா பாப்பான்னு, சொல்லி சொல்லி நீங்கதான்அவளைகெடுக்கிறதே. அவளை என்ன, நீங்க இன்னும் அஞ்சாவது படிக்கிற பொண்ணுனுநினைச்சுட்டுஇருக்கீங்களா? அவளுக்கு கட்டி குடுக்குற வயசு வந்தாச்சு…”
Advertisement
“அதனாலதான் அவளும் கட்டி கொடுக்க சொல்லி கேக்குறா”
Advertisement
“உங்களுக்கு கிண்டலாஇருக்கா”
“அச்சோ… என் பேச்சை டைவட்பண்ணாதீங்கஇரண்டுபேரும். ப்பா, ப்ரணவ்வ உங்களுக்குமூணுவருஷமாதெரியும்தான. அவங்ககிட்ட நீங்கஏதாவதுஒரு குறை சொல்லுங்கபாப்போம். அவர்ரொம்பநல்லவர்ப்பா. நீங்கஎப்படியும்ஏதாவதுஒருத்தனை எனக்குமாப்பிள்ளையாபாப்பீங்க. அது ஏன்எனக்கு புடிச்சவரா இருக்க கூடாது”.
“எனக்குகல்யாணம்பண்ணலாம்னுமுடிவு எடுத்தது நீங்க. எனக்கு பிடிச்ச மாப்பிள்ளைய நான்கை காமிச்சாச்சு. இனி நீங்கதான்முடிவு பண்ணனும்…” என்றுகூறிவிட்டுசென்றுஅமர்ந்துகொண்டாள்.
“அதான, பத்திரிக்கையில வேலை செய்யறவளுக்குபேச கத்து தரனுமா என்ன…”
“ம்மா.., நான் சின்ன புள்ளையாஇருக்கும்போதே, நீதான் பேச கத்துகுடுத்த மறந்திட்டியா, இல்ல புதுசாஏதாவது கத்து தர போறியா….”
“ம்ம்ம்….. நக்கலு” என கூறிவிட்டுகணவரை பார்க்க,அவரோமாதவியை முறைத்துகொண்டிருக்க,
இந்தமனுஷன்ஏன் நம்மள இப்படி முறைக்கறாரு, என நினைத்தவர் “என்னங்கஎன்ன யோசனை?” என கேட்க,
அவளே இருந்திருந்து, இப்ப தான்கொஞ்சம்கெஞ்சி கேட்க ஆரம்பிச்சா, அதுக்குள்ளநடுவுல வந்து ஆட்டையகலைச்சு, அவளமலையேறவெச்சுட்டு, என்ன யோசனைனு கேள்விவேற என நினைத்தவர்,
“ம்ம்… ஒன்னுமில்லைமா,சும்மா தான்” என கூறிசமாளித்தார் திரும்பிமகளை காண,
அவளோ இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டிருக்க,
“எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் பாப்பா” என்றார்.
“என்னங்க நீங்க” என ஏதோ கூற வந்தவர்,கணவரின் ‘மாது’ என்ற ஆட்சேபணையில் எதுவும் கூறாமல் அமைதியாகி விட,
“அட போங்க, சின்ன வயசில அம்மா அம்மானுசுத்தினமாதிரி,இப்பவும்இருப்பாங்கனு நினைக்கிறது நம்மதப்பு.வயசு போக போக, அம்மாவும்அம்மிகல்லும்ஒன்னுதான்னு, நான்நல்லாபுரிஞ்சுகிட்டேன்…. தேவைப்படும்போதுதான்,நம்மகிட்டவேலை… இல்லீனாநாமளும்அந்த மூலையிலஉக்கார வேண்டியது தான்” என கண்ணீர் வடித்து,சேலை தலைப்பில் முகத்தைதுடைத்துக்கொண்டு,அடுப்படிவாயிலில்சென்றுஅமர,
அவரின் கண்ணீரில், ஒருவேளைநிஜமாவேஇவளுக்குதெரியாதோ, என நினைத்தார் சோமு..
நிஜமாவேஅம்மாவருத்தப்படுதாஎன ப்ரணவ்பார்த்தவன், தாயின் முக வாட்டத்தில், “அம்மாநான்எப்ப அப்படிநினைச்சேன்” என்று கேட்க,
“ பின்ன, உனக்குநான்முக்கியமாஇருந்தா நீ எங்கிட்டயில்லமொதசொல்லியிருக்கனும்”
“அ..ஆ ஆமா.. நா நான்தான்சொன்னேன்.அண்ணனுக்கும்அக்காவுக்கும்மாட்ட…., அப்பாஉனக்கும்ஒருபொண்ணைபாத்து, கட்டி வெச்சுட்டார்னாஎங்க கவலை எல்லாம்தீர்ந்திடும்னு. அதுக்காகநீயே பொண்ணுபாப்பியா, இங்க பாருதம்பி,நீ என்ன தான்எனக்குபிடிச்சபிள்ளைனாலும்எம் புருஷன்சொல்லாமநான் உனக்குபொண்ணு பார்க்கஒரு எட்டுஎடுத்துவைக்க மாட்டேன்பாத்துக்க, என்னனாலும்அவரு தான்எனக்குமுதல்லதெரிஞ்சுக்க” என கூறிதன்கணவரை காண,
தன்மனைவியைகண்டு பெருமையாய்புன்னகைக்க,
“ம்மா நான்சத்தியமா…”
“என்னசத்தியம்பண்ணிபோட்டியா, யாரை கேட்டு நீ அப்பிடிசெஞ்ச, என்ன உங்கஅப்பாசத்தியத்துக்குகட்டுப்பட்டவரு, செஞ்சுகொடுத்த சத்தியத்துக்காகதுணுஞ்சுநிப்பாருங்கறதைரியமோஉனக்கு” என்றவர்,
“ஏங்கஇவன்என்ன சொல்றான்னுபாருங்க” என்க,
“அதேனஎன்னடாஉன்மனசுல என்னதான்நினைச்சுட்டுஇருக்க”
“அது ப்பாவந்து”,
“ஏங்க நாம் இவ்வளவு தூரம்சொல்லியும்,இன்னும்வந்து போயினுட்டுஇருக்கான். இப்ப என்ன உனக்கு, அந்தபொண்ணைநாங்கவந்து பாக்கனும்அதுதானேசேரி நாம் போலாம்” என கூற, அவரது கணவர்இவரை முறைக்க,
அவரது காதுக்கருகில் வந்து “சும்மாபோயிபாத்துட்டுஇந்தபொண்ணபுடிக்கல, நீங்கவேறமாப்பிள்ளைபாத்துக்கங்கனுசொல்லிட்டுவந்திடுவோம்” என கூற,
அவர் நம்பாமல் பார்க்க “எத்தனையோபொண்ணு பாக்குறோம், அதுல இது ஒன்னுனுநினைச்சுக்குவோம்ங்க…. அதுமட்டுமல்லஎன்கிட்ட கூடஇவன்சொல்லல, அதான்ஒரு மாமியாவாஇப்படி பண்ணலாம்னுதோனிச்சு” என கூறிவிட்டுபார்க்க,
சிறிது நேரம் யோசித்தவர் “என்னமோசொல்றநம்புற மாதிரி இல்லபாப்போம்” என்றவர்,
“ஆனாஒன்னுசொல்லி வை உன் மவன் கிட்ட, இனி இதுமாதிரிஏதாவது தேவையில்லாமபண்ணிட்டுசத்தியம்கித்தியம்னுவந்துட்டான், புள்ளையே வேண்டாம்னுதலை முழுகிடுவேன்பாத்துக்க” என கூறியவர்துண்டை உதறி எடுத்துக் கொண்டுவெளியேசெல்ல,
தங்களதுஅறை வாசலில்நின்றுகவனித்து கொண்டிருந்த, ஆதவனின் மனைவி ஆனந்தி தன் மாமியாரையும்அருகில்இருந்த இரண்டுமகன்களையும், ஒரு பார்வை பார்த்து விட்டுஉள்ளேசென்றாள்.
“ம்ம்ஸ்ஸ்ஸ்அப்பாடா” என அதுவரைஇழுத்துபிடித்துவைத்திருந்தமூச்சை நிதானமாகவிட்டு சோஃபாவில்சென்றுஅமர்ந்தவர்,
“டேய்பெரியவனே, அந்த அடுப்படியிலமஞ்ச கலர் டப்பால, மைசூர்பா இருக்கும்அதை எடுத்துட்டுஒருசெம்பு தண்ணி கொண்டா”…
“டேய்சின்னவனேஅந்தபேன கொஞ்சம்வேகமாவையி”…
“டேய்பெரியவனே சீக்கிரம்கொண்டா”
“ம்மா, இதோ வந்துட்டேன்” என ஒருடப்பாவைநீட்ட, அதிலிருந்துஒருமைசூர்பாக்கினைஉடைத்து ஒருதுண்டு வாயில்போட,
“இப்படிஅவசரமாஸ்வீட்சாப்பிடுறஅளவுநாம் என்ன சாதிச்சிட்டோம்” என ப்ரணவ்கேட்க,
“ம்ம்…… டேய்மகனே, உங்கஅப்பாகிட்டஅரை மணிநேரம்பேசினாலேஉடம்புலஇருக்குறமொத்த சுகரும்இறங்கிரும், அதேமாதிரிஊர்லஇல்லாதபிரஷரும்மொத்தமாஏறிடும். அதபேலன்ஸ்பண்ண தான்இப்படி” என கூறிமீண்டும்ஒருகடிகடிக்க,
இரு மகன்களும்தாயை பார்த்துசிரித்தபடி அருகில்வந்தனர்.
“அடகத்தாதடா, போன மனுஷன்திரும்பிவந்திடபோறார். ஒருஒருஅடியா எடுத்துவெச்சா தான்நடக்க முடியும். ஒரேமுட்டா கால நீட்டினா, விழுக வேண்டியதுதான்”…
இரண்டு மகன்களும் அவரையே பார்க்க,
“என்னடாஅப்படிபாக்குறீங்கஇரண்டுபேரும்”
“ம்மா நீ ஒருயுனிக் பீஸ் மா” என்றான்ஆதவன்.
“நீஎப்படிமா அந்த பட்டிகாட்லபோயிபொறந்த?…..” என்றுப்ரணவ் கேட்க,
“ம்ம்…. டேய்மகனே, இந்தபட்டிகாடு தான்ஏதாவதுஐடியாபண்ணி, உன் கல்யாணத்தைநடத்திவைக்கும். வேணுமா? வேண்டாமா?”……
“தெய்வமே, இந்தஅறியாபிள்ளை தெரியாமல்பேசியதை மறந்திடு, மன்னிச்சுடு… என் அடி மடியில கை வெச்சுடாத தெய்வமே…. நீ இருக்குறநம்பிக்கையில தான்நானே இருக்கேன்” என காலில்விழுந்து புலம்ப,