Skip to content
Post Views: 9,771
அத்தியாயம் 3:
மதுமிதாவாம் அவள் பெயர்.
தேனினும் இனியவளாம், உண்மைதான். அடிநாக்கு வரை அவள் பெயர் இனித்தது.
ஆனால் என்ன பார்த்து திருடனு சொல்லிட்டாளே! என்ன பார்த்தா அப்படியா இருக்கு.
Advertisement
அவனுக்கு புரியவில்லை, உண்மையில் கூறினாளா, இல்ல இருக்காது . அவள் கண்ணில் குறும்பு இருந்தது. இறங்கும்போது கூட சிரிச்சிட்டேதான் இறங்கினாள்.
இதை பத்தி தெரிஞ்சே ஆகணும். இன்னும் அவளைபத்தி தெரிஞ்சிக்கணும். அவள் மச்சத்தை பத்தி, முடிய பத்தி, அவளின் குண்டு கன்னங்களை பத்தி எல்லாம் எல்லாம் தெரிஞ்சிக்கணும்.
அவள ட்ரைன்ல பார்த்த விநாடியிலிருந்து என் துக்கத்தை கூட மறந்துட்டேன். இந்த உணர்வு புதுசு. ஆனா பிடிச்சிருக்கு.
Advertisement
என் முப்பது வயது வரைக்கும் எந்த பொண்ணுக்கிட்டயும் வராத உணர்வு இது. அவளிடம் பழகி பார்த்து இந்த உணர்வுக்கு என்ன பெயர்னு தெரிஞ்சே ஆகணும்.
Advertisement
முடிவு செய்து விட்டான் ஹேரி . இதுவரை கணினியை பற்றி மட்டுமே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவன், இப்பொழுது மதுவின் இனிமையை பற்றி ஆராய முடிவு செய்து கொண்டான்.
ஆகவே அவனும் இறங்கிவிட்டான் மதுவுடனேயே.
மது ட்ரைனில் இருந்து இறங்கியவள், நேராக எப்போதும் செல்லும் “கிளேட்டன் ஹவுஸ்” இந்திய உணவகத்திற்கு சென்றாள்.
Advertisement
அங்கு வெயிட்ரஸாக பணிபுரியும் டீனாவிடம், பார்த்தி அண்ணா எங்கே என்று விசாரித்து கொண்டிருந்தாள்.
டீனா குஜராத்தி பெண். படித்து கொண்டே , பார்ட் டைமாக இங்கு வேலை பார்த்து கொண்டிருந்தாள்.
பார்த்திபன் இன்னும் வரவில்லை என்று டீனா சொல்லி கொண்டிருந்தாள். சரியென்று அவளிடம் பேசிக்கொண்டே , தாய் மீனாட்சியிடம் பேசி விடுவோம் என்று மொபைல் எடுத்து பார்த்து கொண்டிருந்தாள்.
ஏதோ வித்தியாசமாக தோன்ற நிமிர்ந்து பார்த்தால் , அங்கங்கே டேபிளில் இருந்த பெண்கள் பேசுவதை, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வாயிலையே பார்த்தனர்.
என்னடா நடக்குது இங்க? என்று மதுவும் வாயிலை திரும்பி பார்த்தாள். பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான்.
அந்த ஹேரிதான் ஏதோ கிரேக்க சிலை போல வந்து கொண்டிருந்தான். என்ன உயரம் , கம்பீரம்…அதுவும் அந்த நீல கண்களில் அலட்சியத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
ஐய்யயோ, இவனை ட்ரைனில் செயின் பறிப்பவன் ரேஞ்சுக்கு சொல்லிவிட்டு வந்தோமே. போச்சு போச்சு நம்ம கிட்டதான் வர்றான் போல.
சரி சரி, ஆனது ஆச்சி, உள்ள உதறுறத வெளில காட்டாத மது, கெத்தா உக்காந்துக்க, என்று நேராக அமர்ந்து கொண்டாள் .
அவனை பார்க்காதது போல் உணவை ஆர்டர் செய்வோம் என்று டீனாவை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவளும் ‘ஆ’வென வாயை பிளந்து ஹேரியை பார்த்து கொண்டிருந்தாள்.
ஆஹா இவளுக்கு வேற வேப்பிலை அடிக்கணும் போலயே என்று சிரித்துக்கொண்டே அவளை , “எம்மா எம்மா டீனா” என்று உலுக்கினாள்.
நினைவுக்கு வந்த டீனா ஹி ஹி னு சிரிச்சிட்டே “சொல்லுங்க மது” என்றாள்.
என்னத்த சொல்றது போ என்று நினைத்து கொண்டே , அவளிடம் ஒரு சமோசாவும் , ஆனியன் தோசையும் ஆர்டர் செய்து அவளை அனுப்பி விட்டாள்.
அதற்குள் நேராக மதுவிடம் வந்த ஹேரி “ஹாய் மடு , நானும் ஜாயின் செய்து கொள்ளலாமா?” என்று கேட்டான்.
ஹைய்யோ திரும்பவும் மடு வா, விடாது கருப்பு போல விடமாட்டான் போலயே. இன்று நாம் முழித்த முகம் சரியில்லை போல என்று மனதில் புலம்பிக்கொண்டே, வெளியில் அவனிடம் உட்காருமாறு கூறிவிட்டு அவன் முகத்தை நோக்கினாள்.
அவன் நேரடியாக அவளிடம், “உன்கிட்ட பேசனும் , அதனால்தான் உன்னை தொடர்ந்து வந்தேன், பேசலாமா” என்று கேட்டான்.
அவாய்ட் பண்ணிடலானு நினைச்சாதான் விட மாற்றியே , பேசும், பேசி தொலையும், என்று நினைத்து கொண்டே வெளியில் “பேசலாமே” என்று அனுமதி அளித்தாள்.
“ட்ரைனில் என்னிடம் உண்மையைத்தான் கூறினாயா, இல்லை என்னை பிராங்க் பண்ணினாயா?” என்றான்.
அப்பொழுது மதுவின் உணவை எடுத்து வந்துவிட்டாள் டீனா. மதுவிடம் பிளேட்டை வைத்துவிட்டு, ஹேரியை பார்த்து, “உங்களுக்கு என்ன உணவு வேண்டும்” என்று கேட்டாள் .
அதற்கு அவன் அவளிடம் , கொஞ்ச நேரம் எங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூறி அனுப்பிவிட்டான்.
டீனாவும் மதுவை பார்த்து ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.
மது அவனிடம் “நீ உணவு ஆர்டர் செய்யவில்லையா” என்றாள்.
“இல்ல நீ சாப்பிடு. நான் கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடமாட்டேன்” என்றான்.
ம்க்கும் அதான் ஜிம் பாடினு பாத்தாலே தெரியுதே என்று நினைத்துக்கொண்டே, “உன்ன பாக்கவச்சிட்டே நான் மட்டும் எப்படி சாப்பிடறது” என்றாள் .
அதற்கு அவன் “இல்ல பரவால்ல, நீதான் டயர்டா இருந்த , நீ சாப்பிடு, நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு, ஏன் அப்படி சொன்ன” என்றான்.
அதற்கு மது “உன்ன அவாய்ட் பண்ணத்தான் அப்படி சொன்னேன்” என்று உண்மையை கூறிவிட்டாள்.
ஹேரி அதற்கும் “ஏன்” என்று கேட்டான்.
அதற்கு மது பதில் கூறாமல் , “இதற்காகத்தான் என்னை பாலோவ் பண்ணி வந்தியா” என்று கேட்டாள்.
“இல்ல இன்னொரு விஷயமும் உன்ட்ட கேட்கத்தான் வந்தேன்” என்றான்.
“அதையும் கேளு , அப்புறம் பதில் சொல்றேன்” என்று சமோசாவை எடுத்து வாயில் வைத்தாள் மது.
“நாளை என்னோடு டேட்டிங் செய்ய வருகிறாயா?” என்று கேட்டான்.
மது வாயில் வைத்த சமோசா தொண்டையிலேயே நின்றுவிட்டது. சரியாய் அந்நேரம் தாய் மீனாட்சி கால் செய்தார்.
அவ்வளவுதான் மதுவின் உலகம் டேட்டிங், சமோசா, தாய் மீனாட்சி….. அதிலேயே உறைந்துவிட்டது.
ஹேரிதான் மதுவை தட்டி சுய நினைவுக்கு வரவழைத்தான் .
மது அவசரமாக சமோசாவை முழுங்கிவிட்டு, மொபைலை சைலன்டில் போட்டுவிட்டு, ஹேரியை பார்த்து “என்ன கேட்ட” என்று கேட்டாள்.
“என்னோட டேட்டிங் வருகிறாயா என்றுதான் கேட்டேன்” என்றான்.
“இப்படி எதுவும் நீ கேட்டுட கூடாதுன்னுதான், உன்ன அவாய்ட் பண்ணேன்” என்றாள்.
“ஏன்? நான் கேட்டதில் என்ன தப்பு. உன்ன எனக்கு பிடிச்சிருக்கு, அதான் பழகி பார்க்கலாம்னு கேட்டேன்” என்றான்.
“ஐயா சாமி, நீ பழகி பார்க்கலாம்னு டேட்டிங்கு என்ன கேட்டது எங்க அம்மாக்கு தெரிஞ்சுது , தொடப்ப கட்டையை எடுத்து என்னதான் வெளுக்கும்” என்றாள்.
அதற்கு ஹேரி ஆச்சரியமாக “தொடப்ப கட்டையா, அதால அடிப்பாங்களா! அடிக்கிறதே வன்முறை, இதுல துடைப்பம் வேறா” என்றான்.
அதற்கு மது “உனக்கு தெரியுது , எங்க ஊர்ல என்ன மாதிரி வயசு பொண்ணுங்க வச்சிருக்க பல அம்மாக்களுக்கு தொடப்ப கட்டைதான் மிகச் சிறந்த ஆயுதம்”, என்று சாலமன் பாப்பையா மாதிரி அடித்து கூறினாள்.
“ம் பெக்குளியர். நீ அடி வாங்கிருக்கியா இதுக்கு முன்ன” என்றான்.
“அதெல்லாம் நிறைய வாங்கிருக்கேன்”
“என்ன காரணத்துக்காக அடி வாங்குன”
ம் எதை சொல்வது என்று தீவிரமாக யோசித்த மது, “அம்மாட்ட சொல்லாம பார்லர் போய் ஹேர் கட் பண்ணிட்டு வந்ததுக்கு”,
சுவாரசியமாக “ம்” என்றான் ஹேரி .
“அப்புறம் இப்ப போட்ருக்க மாதிரியே ஜீன்சும், ஷார்ட் டாப்பும் போட்டுக்கிட்டு சென்னையிலிருந்து பஸ்ல எங்க ஊருக்கு போய் இறங்கிட்டேன். அன்னைக்கு வீட்டுக்கு போனப்புறம் செம்ம அடி”
“ஏன் இந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன” என்று அவளை மிக ரசனையாக பார்த்தான் ஹேரி .
பேச்சு சுவாரிசியத்தில் மது அதை கவனிக்கவில்லை. ஆனால் வேறு ஒரு ஜோடி கண்கள் கவனித்து புகையை கக்கி கொண்டிருந்தது.
மது கதையை தொடர்ந்தாள் .
“ஒரு தடவை அப்பா சட்டை பையிலிருந்து சிகரெட்டை சுட்டு யாருக்கும் தெரியாம மொட்டை மாடியில் அடிக்க ட்ரை பண்ணிட்ருந்தேன். அம்மா பாத்துட்டு செம்ம வெளு”
“ஹா ஹா வெரி இன்ட்ரெஸ்ட்டிங் அப்புறம்”,
“என்னாது, என் சோக கதையை கேட்டு சிரிப்பா இருக்கா உனக்கு, இதுல இன்டரெஸ்டிங் வேறயா, ஏம்ப்பா தெரியாமத்தான் கேக்கறேன், உனக்கு ஏதும் வேல வெட்டி இல்லையா, உக்காந்து என்னோட மொக்க கதையை கேட்டுட்டுருக்க”, என்றாள் .
“என்னோட இப்போதைய பெரிய வேலை உன்ன பத்தி தெரிஞ்சிக்கிறதுதான். அதுக்குதான் டேட்டிங் கூப்பிட்டேன்” என்றான்.
“என்ன நீ, இவ்வளவு நேரம் மதுமிதா புராணம் கேட்டு, கடைசியில மதுவோட அம்மா ரொம்ப …நல்லவங்கனு சொல்றா போல திரும்ப டேட்டிங் பத்தி கேட்கிற. மொதல்ல டேட்டிங்னா என்ன, அது என்ன கலாச்சாரம் , அதை பத்தி சொல்லு”, என்றாள்
“டேட்டிங்னா தெரியாதா ? உங்க நாட்ல டேட் பண்ண மாட்டாங்களா” என்றான்.
“இப்பதான் பெரிய சிட்டில எல்லாம் டேட்டிங் கலாச்சாரம் வந்துட்டுருக்கு. நான்லாம் பக்கா கிராமத்து பொண்ணு. ஏதோ கேள்விஞானம் தான், முழுசா தெரியாது. அதான் உன்கிட்ட கேக்குறேன், நீ சொல்லு”, என்றாள்.
“ஒ அப்படியா” என்று கேட்டுவிட்டு டேட்டிங் பற்றி சொல்ல ஆரம்பித்தான் ஹேரி .
மதுவும் தோசையை சாப்பிட்டுக்கொண்டே கதை கேட்க ஆரம்பித்தாள்.
“மொதல்ல ஒரு பொண்ணும் பையனும் பார்த்து பிடிச்சதுனா, எங்கயாவது பொதுவா ஒரு இடம் செலக்ட் பண்ணி அங்க போய் பேசி பழகுவாங்க”.
“ம் அப்புறம்”
“ஒரு 3,4 தடவை இதமாதிரி சந்திச்சாலே அவங்களுக்கு தெரிஞ்சிடும், நமக்குள்ள அலைவரிசை ஒத்து போகுதா, ஈர்ப்பு இருக்கானு”.
“ம் அப்புறம்”
“அப்புறம் செக்ஸ் ரிலேஷன்ஷிப்க்குள்ள போவாங்க”
“ம் அப்புறம்” என்று ப்ளோவில் சொல்லிக்கொண்டே தோசையை வாயில் வைத்த மதுவிற்கு புரையேற ஆரம்பித்துவிட்டது.
“ஹே என்ன ஆச்சு மடு” என்று கேட்டுக்கொண்டே தண்ணீரை எடுத்து கொடுத்தான் ஹேரி .
அடப்பாவி, சொல்றதெல்லாம் சொல்லிட்டு என்ன ஆச்சினா கேட்குற, என்று நினைத்து கொண்டே தண்ணீரை குடித்து விட்டு, “ம் அப்புறம்” என்றாள் மது.
அவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு திரும்பவும், “செக்ஸ் ரிலேஷன்ஷிப் பிடிச்சிருந்ததுன்னா, சேர்ந்து வாழ ஆரம்பிச்சிருவாங்க, லிவிங் டுகெதர்”
மது தலையை நிமிர்த்தவே இல்லை. குனிந்துகொண்டே “ம் அப்புறம்” என்றாள் .
கொஞ்ச நேரம் சத்தமே இல்லை.
என்ன ஆயிற்று என்று நிமிர்ந்து பார்த்தாள் மது.
கையை நெஞ்சில் கட்டிக்கொண்டு அவள் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருந்தான் ஹேரி.
முகமெல்லாம் சிவந்து போய்விட்டது மதுவிற்கு. திரும்பவும் தலையை தட்டிலேயே புதைத்து கொண்டாள்.
அவளையே பார்த்து கொண்டிருந்த ஹேரிக்கு மனம் கனிந்து விட்டது.
அவளை பார்த்து மென்மையாக “லுக் மடு பேபி. பசி, தூக்கம் போல செக்ஸும் ஒரு உணர்ச்சிதான். அதற்கு எதுக்கு நீ இவ்ளோ எம்பாரஸ் ஆகிற” என்றான்.
மது அதற்குள் சுதாரித்து கொண்டாள்.
“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும், நீ மேல சொல்லு . ஆனா லிவிங் டுகெதர்ல இருந்து ஆரம்பி” என்றாள்.
ஹா ஹா என்று சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் ஹேரி. இவன் என்ன இப்படி சத்தமா சிரிக்கிறான் என்று யாரும் பார்க்கிறார்களா என்று தங்களை சுற்றி தலையை திருப்பி பார்த்தாள் மது.
அப்பொழுதுதான் தங்களையே முறைத்து பார்த்து கொண்டிருந்த கண்களை சந்தித்தாள் மது. சட்டென்று சங்கடமாகி விட்டது அவளுக்கு.
அந்த கண்களுக்கு சொந்தக்காரன் பிரபஞ்சன்.
மூன்று மாதங்களுக்கு முன்பு மதுவிடம் லவ் ப்ரொபோஸ் செய்தான்.
(வருவாள்)
error: Content is protected !!