Skip to content
Post Views: 3,564
உடைந்த மனங்கள் ஒட்டாதா?…
அத்தியாயம்7
மீனாக்கு கணவன் என்றால் பிடித்தம் என்பதையும் தாண்டி தன்னையே அர்ப்பணிக்கும் அளவுக்கு காதல். அதாவது, மீனாட்சி என்பவள் தனிமனிசியாக அல்லாமல் ஜெகனுக்குள் தொலைந்து போனவள்.
ஜெகன் எவ்வளவு அலைந்தும் பெரிதாக வேலை கிடைக்கவில்லை. எல்லா வகை மக்களையும் தன்னகத்தே ஏற்றுக் கொள்ளும் திருப்பூர் பக்கம் சென்று விடுவோம் என்று முடிவு செய்தான். அங்கு வேலை கிடைப்பது எளிது. என்ன.. தான் எதிர்பார்த்தது போல் கிடைக்காது. ஆனால், அவனுக்கு அவ்வளவு சிரமம் கொடுக்காது கணவனின் தேவை உணர்ந்து மீனா நகையோடு வந்து விட்டாள்.
Advertisement
ஜெகனால் நம்பவே முடியவில்லை. பரமுவை எதிர்த்து மனைவி தனக்காக வந்தது மனதை நெகிழ செய்தது.
“என்ன மாமா, அப்படியே திகைச்சு போய் பாக்குற?” என்றாள் மீனா.
நெகிழ்ந்த மனதை அடக்கி , முக சிரிப்போடு தமிழை தூக்கி கொண்டான். நீண்ட நாள் சென்று பார்க்கும் தந்தையை கண்டதும் பிள்ளை உதட்டை பிதுக்கி அழுக தயாரானது.
Advertisement
“என் லட்டு குட்டிக்கு என்னை தெரியலையா? அப்பாடா.. வண்டியில போவோமா.. வா வா போய் சாக்கி வாங்குவோம்” என்றவன், தங்களையே பார்த்து கொண்டிருந்த மனைவியை பார்த்தவன்,
Advertisement
“கொஞ்ச நாள் ஆச்சுல்ல. அதான் பாப்பா சிணுங்குது. நீ ரெஸ்ட் எடு மீனா. வீட்ட சுத்தம் பண்றேன். சாப்பாடு செய்றேன்னு எதுவும் பண்ணாத.. நானும் பாப்பாவும் போயி உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வரோம். என்னடா தங்கம்.. போவோமா வெளியே போய் அம்மாவுக்கும், குட்டி தம்பிக்கும் சாப்பாடு வாங்கிட்டு வருவோமா” என்று மகளைக் கொஞ்சிக் கொண்டே வெளியே சென்றான் ஜெகன்.
மீனா வீட்டை பார்த்தாள். ஒழுங்காக இல்லை. அவ்வளவு தூரம் வந்தது சோர்வாக இருக்க.. சிறிது படுத்து எழுந்தரிப்போம், பிறகு வேலை பார்ப்போம் என்று நினைத்தாள். லேசாக தான் கண்ணாசந்தாள். வயிற்றுப் பிள்ளை காரி நல்ல உறக்கம். மனதில் கணவனவே நினைத்துக் கொண்டிருந்தாலோ என்னவோ!… கணவனைக் கண்டதும் மனதில் அவ்வளவு நிம்மதி. அந்த நிம்மதியே நல்ல உறக்கத்தை கொடுத்தது.
உணவு பார்சலோடு வந்த ஜெகனும் உறங்கும் மனைவி முகத்தையே பார்த்த நின்றான். தன்மேல் உள்ள மனைவியின் காதல் அவனை வியக்க வைத்தது. நிச்சயம் அவர்களை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்தான்.
Advertisement
மகளுக்கும் உணவு கொடுத்து உறங்க வைத்தவன், மீனாவை தொந்தரவு செய்யாமல் வீட்டில் எல்லா வேலைகளையும் அவனே பார்த்துக் கொண்டான். மீனாவாக உறங்கி எழுந்து வரும் வரை ஜெகன் அவளை எழுப்பவே இல்லை.
“என்ன மாமா.. என்னை எழுப்பி இருக்கலாமில்ல. நீங்களே எதுக்கு எல்லா வேலையும் பார்த்தீங்க. சாப்டீங்களா?” கொஞ்ச நாள் பிரிவை மறந்தார் போல மீனாவும் பேச,
“நான் சாப்பிட்டேன் மீனா. உனக்கு சாப்பாடு இருக்கு பாரு.. நீ சாப்பிட்டு வா.. நான் வீட்டை துடைத்து முடிச்சிடுவேன். பெருசா வேலை இல்லை” என்றவன் நிமிர்ந்து மனைவியை பார்த்தான்.
தற்போது வயிறு நன்றாகவே வெளிய தெரிந்தது. ஒரு பக்கம் இடுப்பில் கைவைத்து சாய்ந்து நடந்தாள். தன்னுடைய பிரச்சனையில் மனைவியை கவனிக்கவில்லையே என்று நொந்து கொண்டான் ஜெகன்.
மீனா உணவை எடுத்துக்கொண்டு கணவன் அருகில் தான் வந்தாள். கால் நீட்டி தரையில் அமர்ந்து மீனா சாப்பிட.. ஜெகன் ஒன்றும் சொல்லாமல் மனைவியையே பார்த்தான்.
“என்ன மாமா?”
“அஞ்சு மாசத்துக்கு மேல இருக்குமில்ல” என்றான்.
“ஆறு தொடங்கியாச்சு” என்றாள்.
உணவை எடுத்துக் கொண்டு வந்த மீனா தண்ணி எடுத்து வரவில்லை. அதை உணர்ந்த ஜெகன்.
“நீ உட்கார், எழுந்தரிக்காதா..” என்றவன், தண்ணீர் கொண்டு வர சென்றான். திரும்பி வரும்போது மோரும் சேர்த்துக் கொண்டு வந்தான். மீனா எப்போதும் சாப்பாட்டை முடிக்கும் போது கொஞ்சம் மோர் விட்டுக் கொள்வாள்.
“ஹாஸ்பிடல் செக்கப் எல்லாம் போய் பார்த்தியா மீனா. நம்ம வீட்ல இருக்கும் போது இரண்டு தடவை போனது தானே” என்ற கணவனை உண்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
இந்த அக்கறையெல்லாம் இவ்வளவு நாள் எங்கே போனது. பெற்ற பிள்ளை தந்தையை மறக்கும் அளவுக்கு தள்ளி நின்று கொண்டானே.. தற்போது அவன் காரியம் கைகூடும் என்றதும் மகளை தூக்குகிறான், வயிற்றில் இருக்கும் பிள்ளையை விசாரிக்கிறான், மனைவியை அக்கறையாக கவனிக்கிறான்.
மனைவியின் பார்வையை உணர்ந்து தடுமாறினான் ஜெகன். மனைவியிடம் நகையை எதிர்பார்ப்பது உண்மைதான். அதற்காக இந்த அக்கறை கவனிப்பு எல்லாம் இயல்பாகவே மனைவி, பிள்ளை மேல் உள்ளது. பணத்தைக் கொண்டு மீனா எடை போட்டு விட கூடாது என்று நினைத்தான். மனைவி தன்னை புரிந்து கொள்வாளா என்று அவள் முகம் பார்க்க,
மீனா மனதில் நினைத்த எதையும் வெளியில் சொல்லவில்லை. “வேண்டாம், எதையும் கேட்டு திரும்பவும் ஒரு சண்டையில் முடிய வேண்டாம். இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நிச்சயம் நல்லபடியாக கொண்டு செல்வேன். என் கணவனும் அவ்வளவு மோசமானவன் அல்ல” மனதில் உறுதியாகி கொண்டாள்.
“என் மேல கோபமா மீனா” தயங்கி தான் கேட்டான் ஜெகன். பின்ன அவளிடம் போனில் கூட எப்படி இருக்கிறாய் என்று விசாரிக்க வில்லையே..
“கோபம் என்ன மாமா.. கொஞ்சம் வருத்தம். அது கூட இப்போ இல்லை. நீங்க தொழில் பண்ண தான நகையை கேட்டீங்க. எங்க அம்மாவுக்கு தான் புரிதல் இல்லை. நீங்க நல்லபடியா தொழில் செஞ்சு நிறைய சம்பாதிச்சா யார் நல்லா இருக்க போறது? நானும், நம்ம பிள்ளைகளும் தானே. உங்க சம்பாத்தியம் எல்லாம் யாருக்கு? நம்ம குடும்பத்துக்கு தான.. எங்க அம்மா அப்படித்தான், விடுங்க”
“என்னை தேர்ந்தெடுத்ததற்காக நீ வருத்தப்படாத அளவுக்கு உன்னை நல்லா பாத்துப்பேன் மீனா. நீ மட்டும் என்ன விட்டுட்டு போயிராத..” என்று அவள் கைகளை பிடித்து கொள்ள,
நான் எங்கடா போறேன்னு சொன்னேன். உங்க அம்மா வீட்டுக்கு போன்னு கையோட அனுப்பி வச்சிட்டு.. எதையும் வெளிக்காட்டாமல் வாழ்க்கையை சரி செய்ய பார்த்தாள்.
“எனக்குன்னு யாருமில்லை மீனா. நீயும், பாப்பாவும் மட்டும்தான் என் குடும்பம். நான் கோபப்பட்டாலும் இந்த உலகத்துல எனக்குன்னு இருக்கிறது நீங்க மட்டும் தான். நீயும் என்னை தள்ளி வைத்து பார்க்காத மீனா” என்று கணவன் விளக்கம் கொடுத்ததும், மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச சஞ்சலமும் மறைந்து போனது.
வாழ்க்கையை நிறைய நம்பிக்கையோடு எதிர்பார்த்தாள் மீனா. அன்று இரவே தன்னிடம் உள்ள எல்லா நகைகளையும் கணவனிடம் கொடுத்து விட்டாள் மீனா. அடுத்த நாளை ஜெகன் பேங்கில் வைத்து தேவையான பணத்தை புரட்டினான். அந்த காரியங்களில் எல்லாம் மீனா தலையிடவில்லை.
மீனா வீட்டு அளவில் போடும் நகைகளை தவிர மற்றவற்றை பேங்கில் வைத்தான். திரும்பவும் வாழ்க்கை நன்றாக போனது. ஜெகன் மனைவியை தாங்கினான். பிள்ளையை பார்த்துக் கொண்டான் வீட்டில் கூட மாட அவளுக்கு உதவி செய்தான். அங்கு இருக்கும் நல்ல மகப்பேறு மருத்துவரிடம் மனைவியை அழைத்துச் சென்றான்.
வேலை நேரம் போக மனைவி மகளோடு வீட்டிலே இருந்தான் ஜெகன். மீனாவுக்கு மிக திருப்தி. முன்மாதிரி ஆடம்பர செலவுகளில் அவள் ஈடுபடவில்லை. இரண்டு பிள்ளைகளின் தாய் என்ற பொறுப்பு இருந்தது. வீட்டிற்கும் மனைவி மகளுக்கும் என்ன தேவையோ அதை ஜெகனே பார்த்துக் கொண்டான்.
மீனாவுக்கு ஏழாம் மாதம் முடியும் நிலை.. தமிழும் நன்றாக நடக்கப் பழகி வீட்டையே ரவுண்டு கட்டினாள். சில நாட்களாக ஜெகன் வீட்டிற்கு தாமதமாகத்தான் வந்தான். பெரிய வயிற்றோடு கை பிள்ளையை வைத்துக் கொண்டு மீனாவுக்கு சிரமமாக இருக்க..
“மாமா, எங்க அம்மாவை வர சொல்லுவோமா?” என்றாள்.
“அதெல்லாம் வேணாம் மீனா. உங்க அம்மா வந்தா சும்மா இருக்க மாட்டாங்க. தேவையில்லாம உன்கிட்ட ஏதாவது சொல்லி நீ என்கிட்ட கேட்டு.. நமக்குள்ள தான் சண்டை வரும்”
“மாடி வீடு ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குது மாமா. என்னால முன்ன மாதிரி தமிழ்ல தூக்க முடியல. ராத்திரி நீங்க லேட்டா வர்றீங்க. தனியா இருக்கவும் பயமா இருக்கு. சில நேரம் எழுந்துக்கவே முடியாத அளவுக்கு போட்டு தள்ளுது.. பாப்பாவை சரியா கவனிக்க முடியாம போகுது மாமா”
அவள் வாதத்தை ஜெகன் ஏற்கவே இல்லை. இதுவரை மனைவியிடம் வரவு செலவு என்று கணக்கு கொடுத்ததில்லை. மீனா ஒரு வெகுளி. கணவன் தொழில் வைத்தது தான் தெரியுமே தவிர, அதில் வருமானம் என்ன? எங்கு போகிறான், வருகிறான், யாரோடு பழக்கம் என்றெல்லாம் ஒரு நாளும் அவள் கண்டு கொண்டதில்லை. ஜெகனின் கைப்பிடிக்குள் நிற்பாள். ஆனால், மீனாவின் தாய் எவ்வாறு கிடையாது. மீனாவுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். இதெல்லாம் அவனுக்கு ஒத்து வராது.
“இங்க பாரு மீனா உன்னால முடிஞ்சா வேலை செய் இல்லைன்னா விடு.. பாப்பாவ பார்த்துக்க கூட ஆள் வச்சுக்கலாம். அதை விட்டுட்டு சின்ன பிள்ளை மாதிரி அம்மா வேணும்னு அடம் பிடிக்காத.. நான் சொல்றது மீறி உங்க அம்மாவை வர வச்சா.. அவங்க ஏதாவது பேசி அதற்கு மறுப்பு தெரிவித்து நான் பேசி பெரிய சண்டையாகும். உங்க அண்ணனுக்கு வர வந்து தொந்தரவு பண்ணுவாங்க. அதுக்கு அப்புறம் நீ தான் பொறுப்பு” என்று கண்டிப்பாக ஜெகன் சொல்லவும், வாய் மூடி கொண்டாள் மீனா.
ஆரம்பத்தில் ஜெகன் கர்ப்பமாக இருக்கும் மனைவி என்று நிறைய உதவி செய்தான். தற்போதெல்லாம் அவன் வீட்டுக்கு வருவதை நடுராத்திரி தான். அவளுக்கே உடல் உபாதைகள் அதிகம் இருக்க, இதில் கையில் தமிழ் வேறு…
“அம்மா சொல்லும்போதே ஜாக்கிரதையா இருந்திருக்கலாம். மூணு வயசு கூட ஆகாம அடுத்த பிள்ளைக்கு வயித்த தள்ளிட்டு நின்று.. அவனுக்கு என்ன அவன் வேலையை பார்க்க கிளம்பிட்டான். இங்கு கையில் ஒன்னு, வயித்துல ஒன்னு வச்சுக்கிட்டு சிரமம் யாருக்கு” நொந்து கொண்டாள் மீனா.
தமிழ் வயிற்றில் இருக்கும் போதெல்லாம் ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டாள் மீனா. தற்போது ஏழு மாதம் நிறை வயிறு.. அவ்வளவு பெரிய வயிற்றை சுமந்து கொண்டு தான் தமிழை தூக்குவது, துணி துவைப்பது, காய் வாங்குவது, வீட்டு வேலை என்று நிற்காமல் சுழன்றாள்.
“மாமா, ராத்திரியாவது கொஞ்சம் சீக்கிரம் வாங்க மாமா. எனக்கு ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு ரெண்டு மணி நேரமாவது பிள்ளையை பார்த்துக்கோங்க. நெஜமாவே எனக்கு முடியல” என்றாள் கண்களில் கண்ணீரோடு..
“நீ பெத்த பிள்ளையை கூட உன்னால பார்த்துக்க முடியாத மீனா. பிள்ளை இல்லாம எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க. உனக்கு கடவுள் கொடுத்திருச்சு தங்கமா தாங்க வேணாம். நான் நேராகாலம் பார்க்காமல் வேலைக்கு போறேன். வீட்ல வந்து கொஞ்ச நேரமாவது நிம்மதியா படுத்து உறங்க வேணாமா? பிள்ளையை நான் வளர்ப்பதற்கு நீ எதுக்கு அம்மானு வீட்ல இருக்க” கொஞ்சம் கடுப்போடு தான் வந்து இருப்பான் போல..
மீனா முகம் வெளுத்து போனது. உண்மையில் அவளுக்கு பிள்ளையும் பார்த்து வீட்டு வேலையும் பார்ப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. வயிற்றில் இருக்கும் பிள்ளையை கவனிக்க கூட அவளுக்கு நேரமில்லை. சத்தான உணவை கூட எடுத்துக் கொள்ளாமல் கையில் இருக்கும் பிள்ளையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஜெகனின் பேச்சு அவளுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது.
முகம் சுருங்க நின்ற மனைவியை பார்த்து அவனுக்கும் சங்கடம்தான். மெல்ல அவளருகில் வந்தவன்,
“இங்க பாரு மீனா எனக்கும் நிறைய வேலை. பாப்பா ஸ்கூல் போற வர கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். முயற்சி எடுத்து பார்த்துக்கோ ப்ளீஸ்.. ரெண்டு பசங்களும் ஸ்கூல் போய்ட்டாங்கன்னா உனக்கு என்ன வேலை. அப்புறம் நீ ரிலாக்ஸா இருக்கலாம். கொஞ்ச நாளைக்கு மீனா ப்ளீஸ்” என்று மனைவியை தான் சமாதானம் செய்தான்.
“நீங்க வீட்டுக்காவது சீக்கிரம் வர பாருங்க மாமா. மாசம் வேற ஏறுது”
“நிறைய பங்க்ஷன் ராத்திரி தான் நடக்கும் மீனா. நேரமெல்லாம் முன்ன பின்ன தான் இருக்கும். நீ சின்ன பிள்ளை மாதிரி தனியா இருக்க பயப்படாம இரண்டு பிள்ளைக்கு அம்மா மாறி இரு.. சீக்கிரத்துல உன் நகையெல்லாம் திருப்பனும் தானே” என்றதும் எதுவும் பேச முடியாமல் அமைதியாகி போனாள்.
முதல் பிள்ளைக்கு இருந்த சொகுசு இரண்டாம் பிள்ளைக்கு இல்லாமல் போக மீனாவுக்கு எப்போதடா பிள்ளை தன்னை விட்டு வெளியே வரும் என்று நினைக்க தொடங்கினாள். ஆரம்பத்தில் லேட்டாக வந்த ஜெகன் சில நாட்களில் குடித்துவிட்டு வர தொடங்கினான். முதலில் மீனா அதை அறியவே இல்லை. நடு இரவாகிவிடும் ஜெகன் வர, அரை உறக்கத்திலும் உடல் வலியிலும் மீனா சோர்வாகக் கிடக்க, ஜெகன் கூடத்திலே படுத்து கொள்வான். மனைவி கண்டறியவும் இல்லை.
“வாரதே நடுராத்திரி.. அப்பவும் எதுக்கு ஹாலிலே குடும்பம் நடத்துறீங்க.. நாங்க ரெண்டு பேரும் தனியா தான் இருக்கோம் உள்ள வந்து படுத்தா என்ன?”
“நடுராத்திரி வந்து பாத்ரூம் போய் முக கழுவி லைட்ட போட்ட பாப்பா முழிச்சுக்கும். உனக்கும், பகலெல்லாம் வேலை பாப்பா பின்னாடியே ஓடி இருப்ப.. உனக்கும் ஓய்வு கொடுக்க தான்” நன்றாக சமாளித்தான்.
“அப்படி எல்லாம் இனி ஹாலில் இருக்காதீங்க மாமா. என்னமோ ஒரே வீட்டில் இருந்தும் தள்ளி தள்ளி இருக்கிற மாதிரி இருக்கு”
“கொஞ்ச நாள் மீனா உன் நகையெல்லாம் மீட்கிற வரைக்கும்.. அப்புறம் சம்பளத்துக்கு ரெண்டு பேரும் போட்டு நான் உன் கூடவே இருப்பேன்” என்று மனைவியை லேசாக அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் வைக்க, வேற எந்த கேள்வியும் இல்லை அவளிடம்…
ஆனால், பல நாள் திருடன் ஒருநாள் மாட்டிக் கொள்வது போல மனைவியிடம் மாட்டிக் கொண்டான்.
“என்ன மாமா இது? தினமும் இந்த கூத்து தான் நடக்குதா? என் புருஷன் மாதிரி உத்தமர் யாரும் இல்லைன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். ஒரு வீட்டுக்குள்ள எவ்வளவு களவாணித்தனம்” என்று மீனா கத்த,
“உனக்கு தொழில் பத்தி என்ன தெரியும் மீனா. இதெல்லாம் கஸ்டமர் பிடிக்கிற வேலை. காதுகுத்து கெடா வெட்டுன்னு போனா அவங்க சொல்றதை கேட்கணும்.. நான் என்னவோ முழு குடிகாரன் மாதிரி பேசுற.. எந்த வீட்டுக்கு போட்டோ எடுக்க போனாலும் அங்க ரெண்டு பேரு கட்டாயப்படுத்துறாங்க மீனா. தொழிலுக்காக தான்.. உன் புருசனை உனக்கு தெரியாதா? நான் என்னமோ மொடா குடிகாரன் மாதிரி பேசுற நீ..” அவனின் தப்பை மறைக்க சத்தமாக பேசினான்.
“எனக்கு மேல கத்தி பேசினா நான் வாய முடிக்குவேன்னு தான்னா கத்துறீங்க” என்றாள் கண்ணீரோடு..
“அப்படி இல்ல மீனா. குடிச்சிட்டு வந்து நான் என்ன ரோட்ல விழுந்து கிடக்கேனா, உன் கூட சண்டை போட்டேனா, அடிச்சேனா.. சத்தம் இல்லாமல் வந்து படுத்துக்கிறேன். அப்பவே உனக்கு தெரிய வேண்டாமா நான் எப்படின்னு.. நம்ம தொழில்ல முன்னேற இந்த மாதிரி சில விஷயம் இருக்கும். என்ன நம்பலையா மீனா நீ?”
“உங்களை நம்பாமாவா எங்க அம்மாவ எதுத்து கூட நான் திரும்ப உங்களிடம் நகையை தூக்கிட்டு வந்தேன்”
“அதுக்காக தான் மீனா உங்கள நல்லா வாழ வைக்க தான் நான் இப்படி இருக்கேன்” எப்போதும் கணவனின் பேச்சைக் கேட்டே பழகியவளுக்கு தொடர்ந்து வாக்கு வாதம் செய்ய தெரிய வில்லை. தன் கணவன் அப்படி ஒன்றும் கெட்டவன் கிடையாது என்ற நினைப்பையே மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.
தொழிலுக்காக சிறிது குடிக்கிறேன் என்றவன், அதையே தினமும் தொடர்ந்தான். மீனா கேட்டால் அவளையும் விட சத்தமாக பேசி, அவளை வாயடைக்க செய்து விடுவான். மீனாவுக்கு அவனை கட்டுப்படுத்தவே தெரியவில்லை. அவள் எவ்வளவு பேசினாலும் அதுக்கும் மேல் பேசி அவளை சரி கட்டினான்.
error: Content is protected !!