Skip to content
Post Views: 3,977
“நாட்ல பாதிப் பேர் அவங்களுக்குப் பிடிச்ச வாழ்க்கைய விட… அவங்களுக்குக் கிடைத்த் வாழ்க்கைய தான் வாழுறாங்க. அவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா…அப்படி வாழ முடியாத நீங்க எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? குழந்தை பெத்துகிட்டீங்க? நீங்க முதல்லையே ஒழுங்கா முடிவு எடுத்திருந்தா…. நான் பிறந்து இருக்க மாட்டேன், மத்தவங்களுக்குப் பாரமாவும் இருந்திருக்க மாட்டேன்.” மீரா கடைசி வரியை மீனாக்ஷியை பார்த்து சொன்னவள், தொடர்ந்து “என்னோட வாழ்கையில தலையிடுறது இதுவே கடைசி முறையா இருக்கட்டும்.” என்று ஷ்யாமளாவை எச்சரித்துவிட்டு அவள் அறைக்குச் செல்ல…வருணும் அவளோடு சென்றான்.
மீரா சென்றதும் ராம்நாத் எழுந்து நின்றவர் ஷ்யமளாவிடம், “நீ தயவு செஞ்சு வெளிய போ, என் பொண்ணு இது வரை பட்ட கஷ்ட்டமே போதும். உன்னால நானும் முட்டாள் தனமா நடந்திகிட்டேன். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தகுதி நமக்கு இல்லை. அவ வாழ்க்கைய அவளே முடிவு பண்ணட்டும்.” என்றார்.
“உங்களுக்குத் தகுதி இல்லைன்னு சொல்லுங்க, எனக்கு இல்லைன்னு நீங்க சொல்லாதீங்க. என் பொண்ணுக்கு ஒரு நல்ல சம்பந்தம் வரும் போது என்னால அதை விட முடியாது. அவ இன்னைக்கு எதோ என் மேல இருக்கிற கோபத்துல பேசுறா, அவ கோபம் குறையட்டும், நான் திரும்ப வரேன்.” என்று சொல்லிவிட்டு ஷ்யாமளா சென்றாள்.
மீரா தன் அறைக்கு வந்தவள், நேராகக் குளியல் அறைக்குச் சென்று ஷவரின் அடியில் நின்றாள். அவள் உச்சந் தலையில் இருந்த கோபம் இறங்கியதும் தான் வேறு உடை மாற்றி வெளியே வந்தாள். வெளியே வந்து தலையைத் துவட்டியவள், நேராகச் சென்று கட்டிலில் படுத்து விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வருணும் அங்கே தான் இருந்தான். மீரா அதை உணர கூட இல்லை. சிறிது நேரத்தில் இன்று ஏற்பட்ட அதிக மன உளைச்சலில் அவள் அப்படியே தூங்க, வருண் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கயே இருந்தான். அப்போது மீராவின் செல் அடித்தது, மீராவின் தூக்கம் களைந்து விடப் போகிறது என்று வேகமாகச் சென்று வருண் போன்னை எடுத்தான்.
வருண் ஹலோ என்று சொல்வதற்குள் அந்தப் பக்கம் இருந்த அர்ஜுன், “மீரா, ஏன் இன்னைக்கு ஸ்கைப்க்கு வரலை? இப்ப வரியா?” எனக் கேட்க…. “மீரா அக்கா தூங்குறா” வருண் சொல்ல…..
“ஹாய் வருண், எப்படி இருக்க? நான் அர்ஜுன், மீராவுக்கு உடம்பு சரி இல்லையா? அவ சாயங்காலம் தூங்க மாட்டாளே.” என அர்ஜுன் கவலைப்பட….
வருணுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை “இல்ல நல்லா தான் இருக்கா.” என்று மென்று முழுங்க…. அர்ஜுனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஒருவேளை அவள் சித்தி எதுவும் சொல்லி இருப்பாங்களோ என்று நினைத்தவன், “சரி வருண் அவ தூங்கட்டும், நான் கொஞ்சம் நேரம் கழிச்சு பேசுறேன்.” என்றான்.
அதே போல் அர்ஜுன் ஒரு மணி நேரம் கழித்துப் போன் செய்த போதும், மீரா தூங்கி கொண்டுதானிருந்தாள். அர்ஜுன் டென்ஷன் ஆகிவிட்டான். “வருண், உங்க அக்கா நெத்தியில கை வைச்சு பாரு, சுடுதான்னு…” அவன் சொல்ல… வருணும் சென்று மீராவின் நெற்றியில் கைவைத்து பார்த்தவன், “இல்லை நார்மலா தான் இருக்கு.” என்றான்.
அர்ஜுனுக்கு ஒரே குழப்பம். மீராவுக்கு என்ன ஆச்சு? ஏன் இந்த நேரம் தூங்கிறா? எப்போதும் இந்த நேரத்திற்கு மீரா தான் பேச மிகவும் ஆவலாகக் காத்திருப்பாள். அர்ஜுனும், மீராவும் மாலை ஆறு மணி போல் தான் வழக்கமாக ஸ்கைப்ல் பேசுவார்கள். அப்போது அர்ஜுனுக்கு இரவு பத்தரை மணி ஆகும். ஒரு மணி நேரம் பேசிவிட்டு அர்ஜுன் படுக்கச் செல்வான், மீரா படிக்க உட்காருவாள். ஆனால் இன்று மீரா இந்த நேரத்திற்குத் தூங்குகிறாள்.
“வருண், உனக்கு நிச்சயமா தெரியுமா… அவளுக்கு உடம்பு நல்லா இருக்குன்னு, அவ இந்த நேரம் தூங்க மாட்டா…. அது தான் கேட்கிறேன்.” என்றான் அர்ஜுன் தவிப்பாக…. வருணுக்கு அர்ஜுனின் தவிப்புப் புரிந்தது. அவனுக்குத் தெரியும் மீராவும், அர்ஜுனும் நண்பர்கள் என்று.
“மீரா அக்காவோட அம்மா இன்னைக்கு வந்தாங்க. அவங்களோட மீரா அக்கா சண்டை போட்டாங்க. அதுதான் டென்ஷனா இருந்தாங்க அப்படியே தூங்கிட்டாங்க.” என்றான்.
அர்ஜுனுக்கு இப்போது புரிந்தது. மீரா உடல் நலமில்லாமலோ அல்லது அசதியிலோ தூங்கவில்லை, இன்று ஏற்பட்ட அதிக மன உளைச்சலில் தூங்குகிறாள் என்று. அதனால் தான் தன்னிடம் பேசும் நேரம் என்பதையும் மறந்து தூங்குகிறாள் என்றும் புரிந்தது. ஆனால் அவள் அம்மாவோடு சண்டை போடும் அளவிற்கு என்ன பிரச்சனை என்று தான் புரியவில்லை. சரி எதுவாக இருந்தாலும் அதை மீராவிடமே கேட்போம் என்று நினைத்தான்.
“வருண் உங்க அக்கா தூங்கட்டும், ஆனா… அவ ஒன்பது மணி வரை எந்திரிக்கலைனா… நீயே அவளை எழுப்பிச் சாப்பிட சொல்லு சரியா…” அர்ஜுன் சொல்ல…. வருண் சரி என்று போன்னை வைத்தான்.
இரவு உணவு சாப்பிட ராம்நாத்தும், மீனாட்சியும் சென்று டைனிங் டேபிளில் அமர… பரிமாற வந்த பெண் இன்னும் மீராவும், வருணும் சாப்பிட வரவில்லை என்றதும், ராம்நாத் மீராவின் அறைக்குச் செல்ல…. அவர் பின்னே மீனாட்சியும் சென்றாள். மீராவின் அறைக்கதவை தட்டிவிட்டு ராம்நாத் உள்ளே செல்ல… அங்கே வருண் சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். மீரா உள் அறையில் தூங்கி கொண்டிருந்தாள்.
ராம்நாத் சென்று மீராவின் தலையைக் கோத… மீரா கண்விழித்துப் பார்த்தாள். ராம்நாத் “மணி எட்டரை ஆகுது மீரா, சாப்பிட வா…” என்றதும், மீரா “எனக்கு வேண்டாம்” என்று மறுபக்கம் திரும்பி படுக்க… வருண் எனக்கும் வேண்டாம் என்றான். மீரா சிறிது நேரம் கண் மூடி படுத்திருந்தவள், மெதுவாகக் கண் திறந்து பார்க்க…. அப்போதும் எல்லோரும் அவள் அறையில் தான் இருந்தனர். மீனாக்ஷியை பார்த்ததும் மீரா இதுக்கு வேற அப்புறமா பாட்டு கேட்கணும் என்று நினைத்தவள், வேகமாக எழுந்து சாப்பிட செல்ல… எல்லோரும் அவள் பின்னே சென்றனர்.
இன்னைக்கு என்ன புதுசா அக்கறை? மீரா முனங்கி கொண்டே தட்டில் உணவு பரிமாறிக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். வேகமாக இரண்டு சப்பாத்தியை முழுங்கி விட்டு, அவள் அறைக்குச் சென்று செல்லை எடுத்து அர்ஜுனிடம் இருந்து மிஸ்ட் கால் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். அப்படி எதுவும் இல்லை.
அவளுக்கு வருண் போன் எடுத்து பேசியது தெரியாது. அவனுக்கு இப்போது நேரம் நள்ளிரவையும் தாண்டி இருக்கும். நான் தான் இன்றைக்கு நடந்த பிரச்சனையில் போன் பண்ணலை அர்ஜுனும் ஏன் பண்ணலை? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே… அர்ஜுனே போன் செய்தான்.
“ஹாய் அர்ஜுன், இன்னும் தூங்கலையா?”
“நீ தான் இன்னைக்கு என்னைத் தூங்க விடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கியே, அப்புறம் எங்க நான் தூங்கிறது? கும்பகர்னி எவ்வளவு நேரம் டி தூங்குவ?”
“ஏய் உங்களுக்கு எப்படி நான் தூங்கினது தெரியும்?”
“ம்ம்ம்….வெத்தலையில மை போட்டுப் பார்த்தேன். வருண் சொன்னான். சரி சாப்பிட்டியா?”
“ம்ம்…. இப்ப தான் சாப்பிட்டேன்.”
“என்ன ஆச்சு? ஏன் இன்னைக்கு அன்டைம்ல தூங்கி இருக்க?”
“அது ஒன்னும் இல்லை தலைக்குக் குளிச்சேனா, அது தான் துக்கம் வந்துடுச்சு.”
“ஓ..அப்படியா… சரி மீரா நீ தூங்கு. உனக்கு என்கிட்டே எப்ப உண்மை சொல்லணுமோ அப்ப சொல்லு. bye.” என்று அர்ஜுன் போன்னை வைத்துவிட்டான். மீரா உடனே அவனைத் திரும்ப அழைத்தாள்.
“அர்ஜுன் அம்மா வந்திருந்தாங்க, அது தான் மூட் அவுட்.”
“மூட் அவுட் சரி, ஆனா நீ டென்ஷன் ஆகுற அளவு என்ன நடந்தது?”
“அவங்க மட்டும் வரலை, கூட ஒரு லண்டன் மாப்பிள்ளையை அழைச்சிட்டு வந்தாங்க. இத்தனை நாள் என் மேல எந்த அக்கறையும் காட்டாதவங்க, இப்ப எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது தான் ஆச்சர்யமா இருக்கு. அதுதான் கோபத்தில நல்லா கேட்டுட்டேன்.” மீரா தான் பேசிய அனைத்தையும் சொன்னாள்.
மீரா சொன்னதைக் கேட்ட அர்ஜுன், “மீரா அவங்க உன்னோட அம்மா, அந்த உரிமையில உனக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பாங்க, நீ உனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டு அமைதியா இருக்க வேண்டியது தான.” என்றான்.
“உங்களுக்கு அவங்களைப் பத்தி தெரியாது அர்ஜுன். அவங்க எதாவது யோசிச்சா சுயநலமா தான் யோசிப்பாங்க. அவங்க என் மேல உள்ள அக்கறையில் வந்திருக்க மாட்டங்க. அந்த மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிகிட்டா… அதனால அவங்களுக்கு எதாவது லாபம் இருக்கும், அதுக்குத் தான் வந்திருப்பாங்க. அதனால தான் இத்தனை நாள் என் மனசுக்குள்ள இருந்தது எல்லாத்தையும் சேர்த்து வச்சுக் கொட்டிட்டேன், தப்பா அர்ஜுன்.”
“இல்லைடா நீ செஞ்சது தப்பில்லை. இத்தனை வருஷம் அவங்களால நீ எவ்வளவு கஷ்டபட்டிருப்ப… நான் அதுக்காகப் பீல் பண்ணலை… நீ டென்ஷன் ஆகி உடம்பை வருத்திகிற பார்த்தியா… அதுதான் எனக்குக் கவலை… போதும் நீ அவங்களை நல்லா கேட்டுட்ட, இனி இது மாதிரி டென்ஷன் ஆகாத. இன்னும் ஒன்பது மாசம் தான் நான் வந்திடுறேன், நான் வந்த பிறகு பார்த்துக்கலாம் சரியா….”
“சரி அர்ஜுன்.”
“அப்புறம் இன்னைக்கு வளைகாப்பு முடிஞ்சு அண்ணி கிளம்பினதும் தான் நீ வந்தியா?”
மீராவுக்கு அப்போது தான் சஞ்சனா பேசியது நியாபகம் வந்தது. ஆனால் அவள் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையில் இப்போது இல்லை. அவள் சொன்ன விஷயம் என்றைக்கு இருந்தாலும் எல்லோருக்கும் தெரிய போகும் விஷயம் தான். அதிலும் தன் பெற்றோர் செய்ததற்குத் தான் என்ன செய்ய முடியும்? இதைப் பெரிதாக்கி அர்ஜுனிடம் சொன்னால், அவன் அவர்களிடம் சண்டைக்குச் செல்வான் என்று மீரா அர்ஜுனிடம் சஞ்சனா பேசியது பற்றி எதுவும் பேசாமல் வேறு விஷயங்களுக்குத் தாவ….. அர்ஜுனும், மீராவின் டென்ஷன் குறைக்க… அவளோடு இணைந்து கலகலப்பாகப் பேச…. இருவரும் விடிய…விடிய ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசிக்கொண்டிருந்தனர்.
அர்ஜுனும் மீராவும் நினைப்பது போல், ஷ்யாமளா இதோடு மீராவை விட்டு விலகி செல்வாளா?
Advertisement
error: Content is protected !!