Skip to content
Post Views: 8,706
மனம் மலரும் ஓசை..
அத்தியாயம்.. 3
ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.. காலை எட்டு மணிக்கு வேலைக்கு கிளம்பும் ஆதிரைக்கு வீடு வர ஒன்பதாகிடும். மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்தில் பேக்கரியில் பில் போடும் பணியிலமர்த்தியிருந்தார் மாணிக்கம்.
ஆதிரை மூன்று வேலையும் இங்கேயே சாப்பிட்டுகொள்ளவும் காஞ்சனா தன்னொருத்திக்கென பெரிதாய் சமைக்கமாட்டார். மாதம் பதினைந்தாயிரம் என்பது முன்பு இவர்கள் வருமானத்திற்கு மிக மிக அதிகமே. மகளுக்கென சுடிதார் வாங்குவதற்கும் காஞ்சனா ஒருவரின் சாப்பாடு செலவிற்கும் சேர்த்து மொத்தம் ஐந்தாயிரத்திற்குள் முடித்துகொள்வார். மாதம் ஒன்பதிலிருந்து பத்தாயிரம் வரை மகளுக்கென சேமிக்க ஆரம்பித்தார் காஞ்சனா. ஐந்து மாதமாக மிக சந்தோசமாக வேலைக்கு சென்று கொண்டிருந்தாள் ஆதிரை.
Advertisement
கர்ணன் அமெரிக்கா சென்று ஒரு மாதம் முடிந்திருந்தது. கர்ணன் அமெரிக்கா சென்றதிலிருந்து வேலை முடித்து வரும்போது முடிந்தவரை கர்ணனின் குழந்தைகளை பார்த்துவிட்டுதான் வீடு வருவாள் ஆதிரை.
மாமன் குழந்தைகளை பார்க்கும் நாட்களில் இரண்டு தெருவிற்கு முன்பாகவே வேன் டிரைவரிடம் கேட்டு இறங்கிடுவாள். இன்றும் அதேபோல் இறங்கிட காஞ்சனா அழைத்தார்.
மொபைல் எடுத்தவள்.. ‘சொல்லுமா..” என்க.. ‘எத்தனை முறை ஃபோன் செய்யிறது.? ஃபோன் செய்தா எடுக்கமாட்டியா.?” என திட்டினார்.
Advertisement
‘அச்சோ.. சாரிமா..” என குரலிறங்கியவள் பின்னே வந்த அழைப்பை பார்த்து.. ‘என்ன விசயம் நாலுமுறை போன் செய்திருக்க..?” என்றாள்.
Advertisement
‘எங்கயிருக்க.?” என்றார்.
‘வேன்லயிருந்து இறங்கி கர்ணா மாமா வீட்டுக்கு போய்ட்டிருக்கேன்..”
‘எங்கயும் போகவேணாம்.. முதல்ல வீட்டுக்கு வா..” என்றார்.
Advertisement
எப்பவும் இப்படி சொல்லமாட்டாங்களே என யோசித்தவாறு..’சரிம்மா..” என இணைப்பை துண்டித்தாள்.
ஆதிரை வீட்டிற்கு வர அங்கே கம்பீரமாய் நின்றிருந்தவரைப் பார்த்ததும் யார் இவங்க என யேசிக்க.. அருகிலிருந்த கான்ஸ்டபிளைப் பார்த்ததும் சிறு பதட்டத்தோடு அருகே வந்தாள்.
‘இவதாங்க என் பொண்ணு ஆதிரை.. நீங்க தேடிவந்த பொண்ணு இவ இல்லதானுங்க..?” என்றார் காஞ்சனா.
காஞ்சனா கேள்வியை ஒதுக்கிய இன்ஸ்பெக்டர்.. ‘ஒரு பொண்ணை காப்பாத்த இன்னைக்கு காலைல நூறு நம்பர்க்கு போன் செய்தது நீதானமா.?” என்றார் கனிவாகவே.
‘ஆ..ஆமாம் சார்..” என்றாள் ஆதிரை.
காஞ்சனா அதிர்ச்சியில் உறைய.. ‘ஓ.கே.. நாளைக் காலைல ஸ்டேசன்க்கு வந்து ஒரு கம்ப்ளைன் கொடுத்திடு..” என்றார்.
‘சார்.. ஆபத்துக்கு உதவறவங்களை இப்படி ஸ்டேசன்க்கெல்லாம் வரவைப்பிங்களா.?” என்றாள் சற்றே தயக்கத்தோடு.
‘நீங்க ஃபோன் செய்ததாலதான் அந்த பொண்ணை காப்பாத்த முடிஞ்சது.. இதேபோல நிறை பொண்ணுங்களுக்கு நடக்குது.. அதை கொஞ்சமாவது குறைக்கனும்னா தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கனும்.. அதுக்கு சம்மதப்பட்டவங்க கம்ப்ளைன் கொடுக்கனும்.. அந்த பொண்ணோட அப்பாம்மா பொண்ணு மானம் போய்டும்னு கம்ப்ளைன்லாம் வேணாம்னுட்டாங்க.. இப்படியே போனா குற்றவாளிங்களுக்கு இன்னும்தான் தைரியம் அதிகமாகும்..” என்றார் பொறுமையாக.
காஞ்சனா.. ‘சார்.. அந்த பொண்ணோட அம்மாவே அப்படி சொன்னதுக்கப்புறம் நாங்க எதுக்கு அல்லாடனும்.? இது ஆம்பிளையில்லாத வீடு.. கோர்ட்டு கேசுன்னு எங்களுக்கு எதுக்கு சார் தேவையில்லாத பிரச்சனை.? என் பொண்ணை விட்டுடுங்க சார்..” என்றார் கெஞ்சலாக.
‘ஸ்டேசன்க்கு வரது ஒன்னும் பெரிய குற்றமில்லம்மா.. “ என பொறுமையாய் எடுத்துரைக்க.. அப்பொழுதும் காஞ்சனா மறுக்கவும்..
‘பகல்ல யுனிஃபார்மோட வந்தா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னுதான் இந்த டைம்ல மப்டில வந்திருக்கேன்.. நாளைக்கு உங்க பொண்ணுக்கு இதுபோலன்னா அமைதியா இருப்பிங்களா.? பாதிக்கப்பட்ட பொண்ணை உங்க பொண்ணா நினைச்சி கம்ப்ளைன் கொடுங்க.. உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
இருவரும் பதட்டத்தோடிருக்க.. ‘நாளை காலை பத்து மணிக்கு ஸ்டேசன்க்கு வரலைன்னா நான் யுனிஃபார்ம்ல இங்க வருவேன்..” என்று சற்று மிரட்டலோடு சொல்லி கிளம்பினார்கள்.
‘யாரை கேட்டு இப்படில்லாம் செய்த.?” என காஞ்சனா கண்ணீர்விட.. ‘ம்மா.. அந்தபொண்ணு விட்டுடு விட்டுடுன்னு கெஞ்சுற சத்தம் கேட்டுச்சி.. எப்படிம்மா கண்டுக்காம போறது.? நாலு பேருமா..” என வருந்தியவள்.. ‘ஆனாலும் இப்படி போலீஸ் வீடுதேடி வருவாங்கன்னு எனக்கு தெரியாதுமா..” என்றாள் சிறு பயத்தோடு.
செய்வதறியாது இளங்கோவிற்கு அழைத்து விசயத்தை சொன்னார் காஞ்சனா. இளங்கோ வீட்டிற்கு வரவும்.. ‘சித்தப்பா அந்த பொண்ணை காப்பாத்தலாம்னுதான் போலீஸ்க்கு போன் செய்தேன்.. இப்படி பிரச்சனைகளை அந்த நேரம் நான் யோசிக்கல..” என்றாள் பாவமாக.
‘நடந்தது நடந்திடுச்சி.. அழாதிங்கண்ணி பார்த்துக்கலாம்..” என்றான் தேறுதலாக.
‘இப்ப என்ன செய்யிறது இளங்கோ.?” என காஞ்சனா பதற.. ‘வந்த அதிகாரி நல்ல மனுசன் போல.. இல்லனா இத்தனை தன்மையா பேசியிருக்கமாட்டாங்க.. ஆதி மொபைல்லயிருந்து போன் செய்திருக்கு.. கம்ப்ளைன் கொடுத்துதான் ஆகனும்.. வேற வழியே இல்ல..” என்றான் இளங்கோ.
‘அச்சோ.. கோர்ட்டு கேசுன்னு சாட்சி சொல்ல கூப்பிடுவாங்களே.. மாட்டின பசங்க பெரிய இடமாயிருந்து கம்ப்ளைன் கொடுத்த நம்மளை பழிவாங்க நினைச்சா நான் என்ன பண்ணுறது.?” என காஞ்சனா பதற..
‘ரொம்பவும் பயந்துக்கவேணாம் அண்ணி.. ஆதிமேல எந்த தப்பும் இல்ல.. விடுங்க பார்த்துக்கலாம்..” என்றான்.
அடுத்தநாள் இளங்கோவும் ஆதிரையும் காவல்நிலையம் வந்திருக்க.. அங்கே நால்வரில் ஒருவனைப் பார்த்த இளங்கோ.. ‘ஆனது ஆகட்டும்.. தைரியமா கம்ப்ளைன் கொடுமா.. இப்படிபட்டவனுங்க ஜெயில்லதான் இருக்கனும்..” என்றான் கோபமாக.
இந்த பொண்ணுக்கு நீங்க யாரு என இளங்கோவை விசாரித்து பின்னே ஆதிரையிடம் கம்ப்ளைன் எழுதி வாங்கிக்கொண்டு.. ‘உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன்.. ஆனா யார் சொன்னாலும் கம்ப்ளைனை மட்டும் வாபஸ் வாங்கறேன்னு வந்து நிக்கக்கூடாது..” என்றார் கட்டளையாக.
‘இல்லைங்க சார்.. அப்படியெதுவும் நடக்காது..” என திடமாய் கூறினான் இளங்கோ. தன் சித்தப்பாவை ஆச்சர்யமாய் பார்க்க.. ‘நீங்க கிளம்பலாம்..” என அதிகாரி சொல்ல வெளியே வந்ததும்.. ‘வரும்போது இனி தேவையில்லாத விசயத்துல மூக்கை நுழைக்க கூடாது.. அந்த பொண்ணை கெடுக்க பார்த்தாங்கனா அக்கம் பக்கம் அழைக்கிறதை விட்டுட்டு இப்படித்தான் ஸ்டேசன்கு போன் செய்வியா.? இப்பப்பாரு தேவையில்லாத தொல்லைன்னு அத்தனை திட்டு திட்டினுங்க.. இப்போ இப்படி பேசுறிங்க.?” என்றாள் ஆச்சர்யமாக.
இளங்கோ..‘இங்க எதுவும் பேசவேணாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்..” என்க.. ‘பதினொரு மணிவரைக்கும்தான் சித்தப்பா பர்மிசன் கேட்டிருக்கேன்.. நான் பேக்கரிக்கு போகும்முன்ன என்னன்னு சொல்லுங்க..” என்றாள்.
‘ஒரு விசயமும் இல்ல.. இந்த இனஸ்பெக்டர் இரண்டு நாள் முன்னதான் இங்க வந்திருக்காராம்.. ரொம்ப நேர்மையானவராம்.. தப்புன்னு உறுதியாகிட்டா எந்த கொம்பனாயிருந்தாலும் தண்டனை வாங்கிதராம விடமாட்டாராம்..” என நேற்றிரவு சேமித்த தகவல்களை பகிர்ந்து..
‘உன்மேல எந்த தப்பும் இல்லைன்னுதான் நேத்து அத்தனை பொறுமையா பேசியிருக்கார்.. இல்லனா வந்து கம்ப்ளைன் கொடுன்னு மிரட்டிருப்பாங்க.. ஒரு குற்றவாளியும் அவர்கிட்டயிருந்து தப்பிக்க முடியாதாம்..” என்றார் அங்கிருந்த அரவிந்தனின் நினைவில்.
ஆதிரைக்கு அரவிந்தனை தெரியாது ஆதலால்.. ‘கொஞ்சம் புரியுது.. கொஞ்சம் புரியல.. புரியாததை நைட் வந்து கேட்டுக்கிறேன்..” என சித்தப்பாவிடம் விடைபெற்று அவசரமாய் கிளம்பினாள் பேக்கரிக்கு.
இளங்கோ வரவும்.. காஞ்சனா.. ‘எதுவும் பிரச்சனைங்களா.? இல்ல கம்ப்ளைன் வாங்கிட்டு விட்டுட்டாங்களா.?” என்றார் பதட்டமாக.
‘ஒரு பிரச்சனையும் இல்லண்ணி.. அங்க இருந்த குற்றவாளிங்க நாலுபேருல ஒருத்தன் உங்க அப்பாவோட பேரன்..” என்றான். குரலில் எதையோ சாதித்த பாவனை.
‘என்ன.?” என அதிர்ந்த காஞ்சனா.. ‘இளங்கோ இவதான் கம்ப்ளைன் கொடுத்தான் தெரிஞ்சா அந்த பொம்பள ரொம்ப ஆடுவாங்க..” என்றார் பதட்டமாக.
‘அவன் இதுல சம்மதப்பட்டிருப்பான்னு யாருக்கு தெரியும்.? என்னவோ ப்ளான் செய்து பழிவாங்குற மாதிரி பயந்துக்கிறிங்க..” என சிறு கடுப்போடு சொன்னவன்.. ‘நேத்து இங்க வந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப நேர்மையானவர்.. ரொம்ப நல்லவரும் கூடன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.. நம்ம ஆதிக்கு எந்த தொந்தரவும் வராம பார்த்துக்கிறாராம்.. ஆனா ஒரு கண்டிசனும் வச்சார்..” என்க..
காஞ்சனா முகம் பயம் கொள்ள.. ‘பயப்படற அளவுக்கு ஒன்னுமில்லண்ணி.. கொடுத்த கம்ப்ளைன வாபஸ் வாங்ககூடாதுன்னார்.. அவர் சொல்றமாதிரி நடந்துகிட்ட நம்ம ஆதிக்கு எந்த பிரச்சனையும் வராது..” என்றான்.
காஞ்சனாவிற்கு பயம் அதிகரித்தாலும்.. இளங்கோவிற்கு இதில் பெருத்த சந்தோசம்.. எப்படியெல்லாம் நம்ம அண்ணியை மனதால வதைச்சாங்க.. கடவுள் இல்லாமலா போய்டுவார்..?” என்றான்.
கொழுந்தனை அறிந்தவராய்.. ‘பழிவாங்கும் எண்ணம் வந்துட்டா நம்ம நிம்மதியும் சேர்ந்துதான் போகும்.. அவங்க சங்காப்த்தம் நமக்கு வேணாம் இளங்கோ..” என்றார் காஞ்சனா.
‘நானா தேடிப்போய் யாரையும் பழிவாங்கலண்ணி.. ஒரு பொண்ணை காப்பாத்த ஆதிம்மா நினைச்சிருக்கு.. அதுல உங்கப்பா பேரன் மாட்டியிருக்கான்.. இதுக்கு நாம என்ன செய்ய முடியும்.?” என அசால்டாய் சொல்லி.. ‘நைட் ஆதிம்மா வந்ததும் வரேன்.. “ என கிளம்பிய இளங்கோவிற்கு நினைவுகள் பின்னோக்கின.
இரண்டு வருடங்களுக்கு முன்..
கணவனின் மருத்துவ செலவிற்காக காஞ்சனா பணத்திற்கு எத்தனை சிரமமெடுத்தும் பலனில்லாமல் போக.. தன்னை படிக்க வைக்கும் செலவில்லையென்றால் கையிருப்பு சிறிதாவது இருந்திருக்கும்.. அதை வைத்து தந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் மனதில் ஆழமாய் பதிய.. பதின்மத்திலிருக்கும் ஆதிரைக்கு தந்தையின் மரணத்திற்கு தானே காரணமாகிவிட்டோம் என்ற குற்றவுணர்வை தவிர்க்க முடியாமல் திண்டாடினாள்.
தந்தையின் இழப்பிற்கு சற்றும் குறையாத வலி அவளின் அண்ணனின் இழப்பு.. இறப்பதற்கு ஒருவருடம் முன்தான் வேலைக்கு சேர்ந்தான்.. பரதனின் ஒரு வருட சம்பாத்தியத்தில் இதுவரை வாங்கிய கடனை அடைத்து முடித்து அடுத்த மாத சம்பளத்தில் அன்னைக்கு தந்தைக்கு தனக்கென சர்ப்ரைசாக நிறைய வாங்கி வருவதாக சொல்லியிருந்தான்.. ஆனால் அண்ணனின் மரணச் செய்திதான் வந்தது..
அடுத்த நாள் சொந்தத்தில் ஒரு விசேசத்திற்கு சென்று வருகையில் விபத்து நடந்திட பரதனின் உடல் பிணவறையிலும் கணவனின் நிலைமை கவலைக்கிடத்திலும் என்ற நிலையில்தான் பணம் கேட்டு தந்தையிடம் சென்றார் ஆதிரையின் அன்னை காஞ்சனா.
error: Content is protected !!