Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 32

உனக்குள் என் உயிரே


அத்தியாயம் 32

ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு அர்ஜுனின் வீடே பரபரப்பாக இருந்தது. மீரா ஆருவை அழகாக அலங்கரித்துக் கொண்டு இருந்தாள். வித்யா, காயத்ரி மற்றும் ரஞ்சனா மூவரும் சேர்ந்து மாலை சிற்றுண்டி தயார் செய்து கொண்டிருந்தனர். கணேசனும், ஆதியும் ஏற்கனவே கடையில் இருந்து வந்து விட்டனர், இன்னும் அர்ஜுன் மட்டும் தான் வரவில்லை.

சரியாக மாலை ஐந்து மணிக்குச் சூர்யா தன் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் உள்ளே நுழைந்தான். அப்போது தான் அர்ஜுனும் வந்தான். வந்தவர்களை வாசல் வரை சென்று வரவேற்ற கணேசன் தம்பதியர் அவர்களை உள்ளே அழைத்து வந்து அமர வைத்தனர்.

வந்தவர்களுக்கு ரஞ்சனா டிபன் கொண்டு வந்து கொடுக்கஅதை எல்லோரும் எடுத்து கொண்டனர். சூர்யாவின் அக்கா மதுவும் தன் குடும்பத்தோடு வந்திருந்தாள். அவளின் கணவன் ஸ்ரீதரோடு ஆதி பேசிக்கொண்டிருக்க….கணேசன் சூர்யாவின் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தார். இப்படி அங்கிருந்த எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்க, சூர்யா இவங்க ஆருவை கண்ணிலேயே காட்டா மாட்டாங்க போலிருக்கே என்று நொந்தபடி அமர்ந்து இருந்ததான்.

அப்போது அவன் பக்கத்தில் வந்து அமர்ந்த அர்ஜுன், “அப்புறம் மாப்பிள்ளை ஏன் டல்லா இருக்க?” என்று கேட்க

டேய் நாங்க இங்க பொண்ணு பார்க்க தான வந்திருக்கோம், ஆனாடிபன் சாப்பிட வந்த மாதிரி எல்லோரும் அதிலேயே கவனமா இருக்காங்களே…” சூர்யா வருத்தமாகச் சொல்ல

ஏன் ஆரு இங்க வந்தா தான் உனக்கு டிபன் இறங்குமா, இல்லைனா இறங்காதா?” அர்ஜுன் பதிலுக்குக் கிண்டலடிக்க….”நான் பொண்ணு பார்க்கதான் வந்தேன், எனக்கு டிபன் வேண்டாம்.” சூர்யா பல்லை கடிக்க

அர்ஜுனின் மடியில் இருந்த ஐஷுவோடு விளையாடி கொண்டிருந்த ப்ரீத்தி, தன் அம்மா மதுவிடம் திரும்பி, “அம்மா…. மாமா பொண்ணு தான் பார்க்க வந்தாங்களாம், அவங்களுக்கு டிபன் வேண்டாமாம்.” என்று சத்தமாகச் சொல்லஹாலில் இருந்த அனைவரும் அதைக் கேட்டு சிரித்தனர்.

சூர்யா அசடு வழியஅர்ஜுன் சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். அர்ஜுனின் பெரியம்மா ரஞ்சனாவிடம்நீ போய் ஆராதனாவை அழைச்சிட்டு வா.” என்று சொல்லரஞ்சனாவும் ஆருவை அழைக்கச் சென்றாள்.

இந்தச் சின்னப் பிசாசு இருந்ததைக் கவனிக்காம சொல்லிட்டேன்.” என்ற சூர்யா தொடர்ந்துஆமாஇந்தக் குட்டி எப்படி? இது முன்னாடியாவது தைரியமா பேசலாமா…” என்று ஐஷுவை காட்டி அவன் கேட்க

மேடம் இன்னும் பேச ஆரம்பிக்கலைபேச ஆரம்பிச்சா தான் தெரியும்.” என்று அர்ஜுன் சொல்லிகொண்டிருக்கும் போதேஅங்கே ஆருவை அழைத்துக் கொண்டு ரஞ்சனாவும், அவர்களோடு மீராவும் வந்தாள். சூர்யா ஆருவை பார்க்கஅர்ஜுன் மீராவை பார்த்தான்.

ஆரு எல்லோருக்கும் பொதுவாக ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு, சோபாவில் சூர்யாவின் அம்மா அருகே சென்று அமர்ந்தாள். மீரா சற்று தள்ளி சென்று ஓரமாக நின்று கொண்டு ஹாலில் நடப்பதை கவனித்தாள். சூர்யாவின் அம்மா விஜயாவும், மதுவும் ஆருவிடம் எதோ கேட்க, அவள் அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

மீராவுக்கு அர்ஜுன் தன்னையே பார்ப்பது தெரிந்து தான் இருந்தது. ஆனால் அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தாள். மீரா இள மஞ்சள் நிறத்தில் காட்டன் புடவை கட்டி இருந்தாள். ஆனால் அதிலேயே பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். கழுத்தில் அர்ஜுன் அவள் பிறந்த நாளுக்கு என்று கொடுத்த செயின் மட்டும் தான் இருந்தது. மீரா இதுவரை அந்தச் செயின்னை கழட்டியதே இல்லை, அது அர்ஜுனுக்கும் தெரியும்.

மீரா சுற்றி எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அர்ஜுன் இருக்கும் பக்கம் திரும்பி, போதும் பார்த்தது என்று வாயசைத்து முறைக்க, அர்ஜுன் சிரித்துக் கொண்டே அவன் பார்வையை அவள் மேலிருந்து திருப்பினான்.

சூர்யாவின் பெற்றோர் ஏற்கனவே ஆருவை பார்த்து இருந்தாலும், இன்று முறைப்படி பார்த்ததும் அவர்களுக்கு மனதில் இருந்த சிறு சஞ்சலமும் மறைந்து அவளை ரொம்பவே பிடித்தது. அதே போலக் கணேசன் தம்பதியருக்கு, சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே பழக்கம் என்றாலும், இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள், இப்போது உறவினர்கள் என்னும் போது எப்படி இருப்பார்களோ என்று நினைத்திருந்தவர்களுக்கும், இன்று அவர்கள் நடந்து கொண்ட முறையில் மனதிற்குச் சந்தோஷமாக இருந்தது.

காயத்திரி பொதுவாக இரு குடும்பத்தினரிடமும், உங்களுக்குப் பிடிச்சிருக்கா மேற்கொண்டு பேசலாமா என்று கேட்கஇரு குடும்பமுமே ஒருவரை ஒருவர் பற்றி ஏற்கனவே விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தனர். அதனால் முழு மனதுடன் இந்தத் திருமணதிற்குச் சம்மதித்தனர். அதன்படி திருமணத்தை இன்னும் ஆறு மாதத்திற்குள் வரும் முகர்த்தம் பார்த்து வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

விஜயா மெதுவாக மதுவின் காதில் எதோ சொல்லஅவள் வெளியே சென்று காரில் இருந்து ஒரு கவரை கொண்டு வந்தாள். அதிலிருந்த தாம்பாளத்தை வெளியில் எடுத்து வைத்து, அதில் புடவை, பூ மற்றும் கற்கள் பதித்த ஒரு நெக்லஸ் வைத்து ஆருவிடம் கொடுத்தார். அதைப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தனர். மது ஆருவை அழைத்துக் கொண்டு புடவை மாற்ற சென்றாள்.

வித்யா டென்ஷன்னாகச் சமையல் அறைக்குள் செல்லஅதைப் பார்த்த ஆதி, அர்ஜுன் இருவரும் அவர் பின்னே உள்ளே சென்றனர்.


ஏன் மா டென்ஷனா இருக்கீங்க?” ஆதி கேட்க… “அவங்க நம்ம பொண்ணுக்கு நகை எல்லாம் போடுறாங்க, நாம பதிலுக்கு மாப்பிள்ளைக்கு ஒன்னும் போடலைனா நல்லா இருக்குமா…” வித்யா புலம்ப….

மாப்பிள்ளைக்கு என்ன போடணும்? பேசாம அவனையே போட்டுடலாமா.” அர்ஜுன் கேட்க… “டேய்…” வித்யா பல்லைக்கடிக்க….. அர்ஜுன் தன் பாக்கெட்ல் இருந்து ஒரு டப்பாவை எடுத்து திறந்து காமித்தான்.

அதில் ஒரே மாதிரி இரண்டு மோதிரங்கள் இருந்தது. அதைப் பார்த்ததும் வித்யா, “நீயா அர்ஜுன் வாங்கின, சமத்துடா நீ.” என்று அவன் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சினார். அர்ஜுன் மோதிரத்தை ஆதியிடம் கொடுத்து, “நீயே கொடு ஆதிஎன்றான்.

மது ஆருவிற்குப் புடவை மட்டும் கட்டி அழைத்து வந்தவள், நகையை அவள் அம்மாவையே போட சொன்னாள். விஜயா ஆரதனாவின் தலையில் பூ வைத்து, நகையைக் கழுத்தில் போட்டுவிடஅர்ஜுன் வீடியோ கேமராவில் எல்லாவற்றையும் படம் எடுத்தான். சூர்யா, ஆரு இருவருமே புன்னகையுடன் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஆதி அர்ஜுன் கொடுத்த மோதிரத்தை இருவருக்கும் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொல்லஅது எல்லோருக்கும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. சூர்யாவும், ஆராதனாவும் மகிழ்ச்சியுடன் மோதிரம் மாற்றிக் கொண்டனர். பிறகு எல்லோரும் அவரவர் ஜோடியுடன் சேர்ந்து சூர்யா, ஆருவுடன் நின்று போட்டோ எடுக்கஅர்ஜுன் மட்டும் எடுக்கவில்லை.

கணேசன் தம்பதியர் சூர்யாவின் குடும்பத்தினரிடம், அது தான் கல்யாணம் உறுதியாகி விட்டதேஅதனால் இரவு உணவு சாப்பிட்டுவிட்டே செல்ல வேண்டும் என்று அன்பாகக் கேட்டு கொண்டதால்…. அவர்களும் சரி என்றனர்.

பெரியவர்கள் எல்லோரும் கீழே அமர்ந்து பேசஇளையவர்கள் மாடிக்கு சென்றனர். அங்கே ஆரு, சூர்யாவோடு சேர்ந்து அர்ஜுனும், மீராவும் போட்டோ எடுத்து கொண்டனர். பிறகு எல்லோரும் சேர்ந்து அமர்ந்து சூர்யா, ஆருவை கிண்டல் செய்து ஓட்டினர்.

சூர்யா மதுவிடம்மீரா பெங்களூர்ல தான் இருக்கா..அங்க தான் வேலை பார்க்கிறா…” என்று சொல்ல… “அப்படியா ஏன் மீரா எங்க வீட்டுக்கு வரலை. அடுத்த வீக்எண்டு கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்.” மது அழைக்க…. அவள் கணவன் ஸ்ரீதரும்வீட்டுக்கு வாங்க மீராஎன்றான்.


சிறிது நேரம் கழித்துக் கீழே இருந்து வித்யா ஆதியையும், ரஞ்சனாவையும் அழைக்க…. அவர்கள் இருவரும் கீழே இறங்கி சென்றனர். அங்கே சஞ்சனா தன் கணவனோடு வந்து ஹாலில் அமர்ந்து இருந்தாள். அவளைப் பார்த்ததும் ரஞ்சனா வேகமாக அவளருகில் சென்றுசஞ்சு எப்படி இருக்க? நீ வரேன்னு சொல்லவே இல்லை.” என்று சந்தோஷமாக விசாரித்தவள், தினேஷையும் வரவேற்க தவறவில்லை.

நாங்க ரொம்ப நாளாவே வரணும்னு நினைச்சோம் அண்ணி. இன்னைக்குப் பீச்க்கு வந்தோமா, அப்படியா நீங்க வீட்ல இருந்தா…. இங்கே வரலாம்னு ஆதி அண்ணனுக்குப் போன் பண்ணோம். அவரும் வீட்ல தான் இருக்கோம், வாங்கன்னு சொன்னார். அது தான் பார்த்திட்டு போகலாம்னு வந்தோம்.” என்றான் தினேஷ்.

ரஞ்சனா ஆதியை ஆச்சர்யமாகப் பார்க்கஅவன்அவங்களுக்குச் சாப்பிட எதாவது கொண்டு வா….” என்றான். ரஞ்சனா உள்ளே சென்று அவர்களுக்கு ஸ்னாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

மாடி ஹாலில் சூர்யா, அருவோடு மதுவும் அவள் கணவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். மீராவும், அர்ஜுனும் அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அர்ஜுன் மெதுவாக மீராவை ஜாடை காட்டி தனியே அழைக்கஅவள் வர மாட்டேன் என்றாள்.

மீராகொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டு வரியா…” அர்ஜுன் சத்தமாகக் கேட்கமீரா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே கீழே சென்றாள். கீழே சஞ்சனா தன் கணவருடன் வந்திருப்பதைப் பார்த்தாள். அவர்கள் மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தனர்.

மீரா தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலே வந்தவள், அங்கே அர்ஜுனை தேடஅவன் அங்கு இல்லை. எங்குப் போனான் என்று சுற்றி பார்த்தவள், அவன் பால்கனியில் நிற்பதை பார்த்து அங்குச் சென்று, தண்ணிரை அவன் பக்கம் நீட்டதண்ணீரோடு சேர்ந்தது மீராவின் கை பற்றி மறைவாக இழுத்துச் சென்றான். மீரா வேகமாக அவனிடம் இருந்து விலகினாள்.

விடுங்க அர்ஜுன், யாராவது வரப்போறாங்க.” மீரா பயப்பட…”ச்சு….யாரும் வர மாட்டாங்க வா.” என்றவன், மறுபடியும் மீராவை பிடித்து அருகே இழுத்தான். மீரா அவன் அருகே சென்று நின்றாள்.

அர்ஜுன் பால்கனி விளக்கை போடவில்லை, அதனால் அந்த இடம் இருட்டாக இருந்தது. அர்ஜுன் மெதுவான குரலில்அழகா இருக்க மீரா.” என்றவன், அவள் எதிர் பார்க்காத நேரம், புடவை கட்டி இருந்ததால், பளிரென்று தெரிந்த அவள் இடையைப் பிடித்து அழுத்தமீரா துள்ளினாள்.

மேலும் முன்னேற துடித்த கையையும், மனதையும் அடக்கி அர்ஜுன் மெதுவாக அவன் கையை எடுத்ததும், மீராநான் கிளம்புறேன் அர்ஜுன்.” என்றாள்.

ஏன் மீரா அதுக்குள்ள கிளம்புற? மணி ஏழு தான ஆகுது. உனக்குப் பதினொரு மணிக்கு தான ட்ரைன்.”

கீழே போன போதுசஞ்சனா வந்திருக்கிறதை பார்த்தேன், அது தான் கிளம்பலாம்னு…” என்றதும்.

சரி மீரா நீ கிளம்பு, இன்னைக்கு நான் தான் கடைய மூட போகணும். அதனால நீ இன்னைக்குக் கார்ல ஸ்டேஷன் போய்டு.” அர்ஜுன் சொல்ல…. மீரா சரி என்றாள்.

சூர்யாவிடம் வந்த அர்ஜுன், “நான் கடைக்குக் கிளம்புறேன் டா. அண்ணியோட தங்கச்சி வந்திருக்காங்க, அதனால ஆதி இங்க இருக்கனும்.” என்றான். சூர்யாவும் நிலைமையை உணர்ந்து சரி என்றான்.


இரவு உணவுக்கு வெளியே ஒரு பெரிய ஓட்டலில் சாப்பாடுக்கு சொல்லி இருந்தனர். வித்யா மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் வந்த மீராவீட்டுக்கு கிளம்புறேன் ஆன்டி.” என்று சொல்லவித்யா ,”நைட் சாப்பிட்டுட்டு போ மீரா.” என்றார். “இல்லை ஆன்டி, இன்னைக்கு நைட் பெங்களூர் கிளம்புறேன். அதனால வீட்டுக்குப் போய்ச் சாப்ட்டுக்கிறேன்.” என்று விடைபெற்று சென்றாள்.

மீரா கிளம்பியதும், அர்ஜுன் அவன் அப்பாவிடம்நீங்களும், ஆதியும் வீட்ல இருங்க. நான் கடைக்குப் போய்ப் பார்த்துகிறேன்.” என்று சொல்ல…. அவரும் சரி என்றார்.
அர்ஜுன் தினேஷிடம் மட்டும் போயிட்டு வரேன் என்றவன், சஞ்சனா என்று ஒருத்தி அங்கிருப்பதே தெரியாதது போல், அவளைக் கண்டுகொள்ளாமல் சென்றான்.

எட்டு மணி ஆனதும் முதலில் சூர்யா வீட்டினரை சாப்பிட அழைத்து வித்யாவும், காயத்ரியும் உணவு பரிமாறினார்கள். சூர்யா பிறகு சாப்பிடுகிறேன் என்று சொன்னதால் மற்றவர்களுக்குப் பரிமாறினார்கள்.

வித்யா ரஞ்சனாவிடம்நீ போய் உன் தங்கையோட பேசிட்டு இரு, நாங்க பார்த்திகிறோம்…” என்று சொல்லரஞ்சனா, சஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றாள். ஆதி, சூர்யா, தினேஷ் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அவள் அறைக்கு வந்ததும்இன்னைக்கு ஆருவை பெண் பார்க்க வந்தாங்க, உனக்குச் சூர்யாவை தெரியும் இல்லைஅர்ஜுனோட ப்ரண்ட், அவர் தான் மாப்பிள்ளை.” ரஞ்சனா சொல்லசஞ்சனா ஒன்றும் பேசாமல் உர்ரென்று இருந்தாள்.

ஏன் டி.. உம்னு இருக்க, நீ இன்னைக்கு வருவேன்னு நான் சத்தியமா எதிர் பார்க்கலை.”

நானா எங்க வந்தேன்? நான் கட்டி இருகேன்னே ஒருத்தர், அவர்தான் என்னை இழுத்திட்டு வந்தார். ஏன் உங்க அக்கா நம்ம வீட்டுக்கு வர மாட்றாங்க? நீ ஏன் உங்க அக்கா வீட்டுக்கு போகலாம்னு சொல்ல மாட்றேன்னு ஒரே இம்சை, அதனால வேற வழி இல்லாமல் வந்தேன்.” சஞ்சனா கோபமாகச் சொல்ல

இவ இன்னும் திருந்தலை என்று நினைத்த ரஞ்சனாசரி அதை விடு, அப்புறம் சென்னையில வேற எந்த இடமெல்லாம் போனீங்க, எல்லா இடமும் சுத்தி பார்த்துடீங்களா?” என்று கேட்கசஞ்சனாவும் கொஞ்சம் மலை இறங்கி பதில் சொன்னாள். ஐஷுவும் அவர்களோடு இருக்கஅவளோடு இருவரும் விளையாடி கொண்டு இருந்தனர்.

கீழே சூர்யா வீட்டினர் சாப்பிட்டதும், வித்யா சஞ்சனாவை சாப்பிட அழைத்தார். சஞ்சனா, தினேஷோடு, சூர்யாவும், ஆருவும் சாப்பிட அமர்ந்தனர். அவர்களோடு ஆதியும் சாப்பிட அமர்ந்தான். வித்யா ரஞ்சனாவைநீயும் உன் தங்கையோட உட்கார்ந்து சாப்பிடு.” என்றவர், தினேஷிடம்ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை முழு நாளும், எங்க வீட்டுக்கு வந்து இருக்கணும்.” என்றார்.

கண்டிப்பா வரோம் சித்தி, நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. நீங்க யாரும் இன்னும் எங்க வீட்டுக்கு வரவே இல்லை.” தினேஷ் உரிமையாக அழைக்க….

அவன் பேசுவதில் இருந்தே அவன் உண்மையான பாசத்தில் அழைக்கிறான் என்பதை உணர்ந்த வித்யா, “கண்டிப்பா அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வரோம்.” என்றவர் தொடர்ந்து, “கொஞ்ச நாளா ஆருவுக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலை இருந்ததால தான் வர முடியலை, அவ கல்யாணம் முடிஞ்சிட்டாஅடுத்து அர்ஜுனுக்குப் பார்க்கணும்.” என்றார்.

அர்ஜுனுக்கு இன்னும் கல்யணம் ஆகலையாஅப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஒருத்தங்க கைல தண்ணி எடுத்துகிட்டு மாடிக்குப் போனாங்களேஅவங்க அர்ஜுன் மனைவி இல்லையா? நான் அவங்க தான் அர்ஜுன் மனைவின்னு நினைச்சேன்.” தினேஷ் மீராவை சொல்லஅது அர்ஜுன், மீரா காதலை பற்றித் தெரிந்தவர்கள் அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது.

ஆதியும், சூர்யாவும் சிரிப்பை அடக்கி சாப்பிடுவது போல் நடிக்க, ஆரு என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் எழுந்து உள்ளே சென்றாள். தினேஷ் அவளை ஆச்சர்யமாகப் பார்க்க

எதுக்கு இப்ப உனக்குக் கக்கபிக்கன்னுசிரிப்பு வருது?” என்று அவளை அதட்டிய வித்யா, தினேஷை பார்த்து, “அவ மீரா, எங்க அர்ஜுனோடு காலேஜ்ல தான் படிச்சாஅவனுக்கு ஜூனியர். அதோட ஆருவோட ப்ரண்ட், ரொம்ப நல்ல பொண்ணு. மத்தபடி வேறெதுவும் இல்லை. ரொம்ப வசதியான வீட்டு பொண்ணு, அவங்க நம்ம ஆளுங்க இல்லை.” என்றும் சேர்த்து சொல்லஅதைக் கேட்டு சற்று முன் புன்னகையுடன் இருந்த அனைவர் முகத்திலும் இருந்த சிரிப்பு மறைந்தது.

அதைக் கவனித்த தினேஷ், இவங்க நினைப்பது போல் இல்லைஅர்ஜுனுக்கும், மீராவுக்கும் கண்டிப்பாகச் சம்பந்தம் இருக்கிறது என்றே அவன் உள் மனம் சொல்லியது. அதன் பிறகு யாரும் அங்குப் பேசவில்லைஎல்லோரும் அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தனர்.



Advertisement

Advertisement

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!