Skip to content
Post Views: 3,352
உனக்கென இருப்பேன் 22
மூலையில் ரத்தம் உறைந்துவிட்டது….அறுவை சிகிச்சை செய்த சொல்ல முடியும் என்று கையை விரித்துவிட்டனர் மருத்துவர் .
ICU விற்குள் தட்டுத்தடுமாறி நுழைந்தான் அஸ்வின் .
செயற்கை சுவாசத்தில் இருந்தவன் அஸ்வினை கண்டு கண்கலங்கினான்.
Advertisement
உனக்கும் ஒன்னும் இல்லடா வினோ ….ஒரு சின்ன ஆபரேஷன் தான் ஒரே வாரத்தில் வீட்டுக்கு போயிடலாம் . தம்பியை ஆறுதல்படுத்த முனைந்தான்.
வினோத்திற்கு தன் விதி தெரிந்துவிட்டது போலும் . மாஸ்க்கை கழட்டிவிட்டு சீரற்ற சுவாசத்துடன் கண்ணீர் சொறிய அஸ்வின் கரம் பற்றியவன் கீர்த்தி,தியானு உன் பொறுப்பு என்றான்.
டேய் ….லூசு கொஞ்சம் உளறாம அமைதியா இரு ! உன் பிள்ளை உனக்காக காத்திட்டு இருப்பான் ஆபரேஷன் முடிந்து வந்து சேரு …. கண்ணீரை கட்டுப்படுத்தி திடமாய் காட்டிக்கொண்டு அதட்டினான் அஸ்வின் .
Advertisement
‘……………………………”
Advertisement
பனிரெண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்னுயிர் நீத்து இந்த பூவுலகில் இருந்து விடைபெற்றான் வினோத்.
தலையில் இடிவிழுந்த அதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள் கீர்த்தி.
கிருஷ்ணன் தம்பதிகளுக்கு கொள்ளி வைக்க பிள்ளை என்பது மட்டும் தான் . ஆனால் கீர்த்திக்கு ….வாழ்க்கை ,எதிர்காலம் எல்லாம் பறிபோய்விட்டதே …..
Advertisement
ஊரே அழுதது கீர்த்தியின் நிலையை கண்டு ……சின்னஞ்சிறு பெண் அமங்கலி கோலம் கொள்ள போகிறாள் பெண்டு பிள்ளைகள் கத்திகதறியது .
இருப்பது மூன்று வயதில் கீர்த்தி ஐந்து மாத குழந்தையுடன் அழுது மாய்ந்தது கண்டு கல் நெஞ்சமும் கரைந்தது.
அஸ்வினால் தாங்க முடியவில்லை . கீர்த்தியின் கோலம் கண்டு புழுவாய் துடித்தான். இவளை இப்படியா பார்க்க வேண்டும் ? இறைவனை நிந்தித்தான்.
பொன்னுசாமி சரோஜினி அலறிஅடித்துக் கொண்டு ஓடிவந்தனர் .
அண்ணா என்று தமையனின் தோள் பற்றி கதறினார் கிருஷ்ணன். பொன்னுசாமியம் உடைந்து
அண்ணா என் பிள்ளையை பார்க்க வந்தியா ? அப்பா வினோ வராத பெரியப்பா நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு எழுந்து வாங்கன்னு கூப்பிடு சாமி …மனிதர் கதறி துடித்தார் . அப்பன் பார்க்க பிள்ளை சாவது எந்த ஜென்மத்து பாவமோ?!
என் குடும்ப விளக்கு அணைஞ்சுடுச்சே …இப்போ எல்லாருக்கும் சந்தோஷமா இருக்குமே …ஆஸ்திக்கு ஒன்னு பெத்து கறிவேப்பிலை கொத்தாய் வளர்த்தேனே இப்படி எமனுக்கு தூக்கி கொடுத்துட்டேனே…சரோஜினியை பார்த்து இன்னும் அங்காரமாய் அழுதார் பத்மினி.
மஞ்சள் பூசி பெரிய பொட்டு வைத்து தலை நிறைய பூவுடன் அமர்ந்திருந்த கீர்த்தியை கண்டவுடன் அக்ஷயா தேம்பி தேம்பி அழுதாள்.
தன் அண்ணனோடு மிக சிறந்த வாழ்க்கையை திகட்ட திகட்ட வாழ்ந்திருக்க வேண்டியவள் இந்த கோலத்திற்கா ஆளாக வேண்டும்.
கீர்த்தியின் கரம் பற்றி ஆறுதலாய் அழுத்தினாள் அக்ஷயா
“……………………………”
சித்தப்பா கீர்த்தி சின்ன பொண்ணு….தயவு செய்து எந்த சடங்கும் செய்ய வேண்டாம் கெஞ்சினான் அஸ்வின்.
தான் நடத்தி வைத்த திருமணம் இப்படி ஆகிப்போனதே ….மனம் தாளவில்லை அவனுக்கு.
என் கீர்த்தி பட்ட மரமாய் நிற்பாளே…..ஐயோ …எப்படி இதை கடந்து வருவாள் ?இந்த கொடுமையை நான் பார்க்க வேண்டுமா ? கீர்த்தி என்று ஒருத்தி என் வாழ்வில் வராமலே இருந்திருக்க்கலாமே … உள்ளுக்குள் நொறுங்கி விட்டான் அஸ்வின் .
மகன் தனக்கு கொள்ளி போடுவான் என்று எண்ணியிருந்த கிருஷ்ணன் மகனுக்கு அவர் கொள்ளி போட்டுவிட்டு வந்தார்.
“……………………………….”
ராசி இல்லாதவ… எம்புள்ளைய முழுங்கிட்டா ! பத்மினி வெளிப்படையாகவே திட்டத் தொடங்கினார்.
பத்மினி அந்த பொண்ணை வார்த்தையால் கொல்லாதே ! நீயும் ரெண்டு பொண்ணை பெத்தவ தானே …கிருஷ்ணன் அதட்டினார்.
ஜாதகம் பார்த்துச்சா நாளு கிழமை பார்த்துச்சா …நாலு காவாலி பயலுக சேர்ந்து தாலிக்கட்டி வச்சிட்டானுக ….பத்மினி அழுது கரைந்தார் திட்டி தீர்த்தார்.
கீர்த்தி அச்சத்தில் உறைந்துவிட்டாள் .
நிஷா ,சௌந்தர்யா தத்தம் கணவன்மார்களோடு அங்கேயே தங்கிவிட்டனர்.
சாப்பிட்டாயா சென்று கேட்க கூட நாதியற்று போனாள் கீர்த்தி .
மாமனாரின் திரண்ட சொத்துக்கள் நிஷாவின் கணவனை பிரகாஷ் கண்களை உறுத்தியது .
கீர்த்தியை விரட்டிவிட்டால் சொத்துக்கள் நமக்கே சேரும் என்ற சிறுமையான புத்தி அவனுக்கு.
“………………………….”
கீத்தியின் நிலையை அறிந்தே இருந்தான் அஸ்வின். கணவன் இருக்கும் போதே மதிக்காதவர்கள் அவர்கள் இப்போது அவளுக்கான மரியாதையை கேட்கவா வேண்டும் ?
கீர்த்தியை எப்படியாவது அவள் தாயுடன் சேர்த்து வைக்க எண்ணினான்.
மகள் விதவையாகி கைக்குழந்தையுடன் நிற்கிறாள் என்று துடித்து போவார் என்று எதிர்ப்பார்த்தான் அஸ்வின்.
என் தாலி அறுத்துட்டு போனா அவ தாலியை ஆண்டவன் அறுத்துட்டான் . கூசாமல் பேசினார் அவள் அன்னை பகவதி.
இந்த நிலையிலுமா உங்க மனசு இரங்கல….? அஸ்வின் கெஞ்சுதலாய் கேட்டான்.
அவ நாங்க வேண்டாம்னு ஓடிப்போனதோடு எல்லாம் முடிந்து போச்சு !
பெத்தவங்க மனசை கொன்னுட்டு போன பாவத்துக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை என்றான் அவளின் அண்ணன்.
ச்சே ….இவங்க மனுஷங்களா ? காரி உமிழாமல் வந்து சேர்ந்தான்.
“…………………………”
நள்ளிரவு அயர்ந்து உறங்கி கொண்டிருந்த கீர்த்தியை மோகம் முற்றிய பார்வை பார்த்தான் பிரகாஷ் .
அவளின் வழ வழப்பான காலை மெல்ல வருட ….திடுக்கிட்டு எழுந்தாள்.
அண்ணா நீங்களா ? அருவெறுத்து நின்றுவிட்டாள்.
நான் என்ன உனக்கு கூடப்பிறந்த அண்ணனா ? ஒரு முறைக்கு தானே அண்ணன்.
உன் புருஷனுக்கு அற்ப ஆயுசு அவன் போய் சேர்ந்துட்டான் . கொள்ளை அழகு கொட்டி கிடக்கு உன்கிட்ட ,அனுபவிக்க வேண்டிய வயசுல இப்படி தனி மரமா நிற்கிறியே…உனக்கு நான் இருக்கேன் செல்லம் !நாக்கை சுழற்றியயபடி அவள் கரம் பற்றினான்.
சீ …கையை விடுடா ! என்ன கேடுகெட்ட மனுஷன் நீ ! எரிக்கும் பார்வை பார்த்தாள்.
ஒரு மச்சினன் பொண்டாட்டிகிட்ட நடந்துக்கிற முறையா இது ? இப்போ சத்தம் போட்டேன்னு வை ….மூச்சிறைக்க மிரட்டினாள்.
போடு ….நல்லா போடு ! நீ தான் வர சொன்னேன்னு பிளேட்டை மாத்தி போட்டுடுவேன் கேவலமாய் சிரித்தான் பிரகாஷ் .
மரியாதையா குழந்தையை கூட்டிட்டு எங்காவது போயிடு . இல்லைனா என்னை அடஜஸ்ட் பண்ண ரெடியா இரு ! வெளிப்படையாய் மிரட்டி விகாரமாய் சிரித்தான்.
நாயே ….யார் வீட்ல இருந்துட்டு யாருகிட்ட பேசுற ? கொன்னு புதைச்சுடுவேன். ராஸ்கல் எப்படியாப்பட்ட பொறுக்கி நீ ! ரத்தம் கொதித்தது கிருஷ்ணனுக்கு .வரைமுறை இல்லாம உன் ஆத்தா கூட போய் படுத்திடுவியா ? ஓங்கி அறைந்தார் மருமகனை .
“…………………………..”
இளம் பெண்ணான மருமகளை காபந்து பண்னுவது கடினம் என்பதை உணர்ந்தார்.
அஸ்வினை வரச்சொல்லி பேசினார்.
அஸ்வின் கீர்த்தியை நீ லவ் பண்ணியா ?இல்லையா ? முகத்திற்க்கு நேரே கேட்டார் .
சித்தப்பா …அதிர்ந்து விட்டான் .
எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கறியா? உன் பிரண்ட் திவாகர் சொன்னான் .
வினோத் சாவுக்கு வந்தவன் அஸ்வினை கல்யாணம் பண்ணியிருந்தா இந்த பொண்ணுக்கு இந்த நிலை வந்திருக்காதுன்னு சொல்லி வருத்தப்பட்டான்.
அவனை கூப்பிட்டு விசாரித்தேன் …நீ எவ்வளவு கண்ணியமா அந்த பொண்ணை நேசித்தேன்னு சொன்னான்.
இப்போவும் கீர்த்தி மேல் அதே காதல் இருந்தால் சொல்லு !
எதுவும் பேசாது அமைதியாக தலை குனிந்து நின்றான். எப்படி நிமிர்ந்து பார்க்க ….
ஏன் இப்போ உன்னை கூப்பிட்டு இதை எல்லாம் பேசறேன்னு யோசிக்கிறியா? இரவு பிரகாஷ் நடந்து கொண்டதை சொன்னார்.
அவனுக்கு ரத்தம் கொதித்தது . பல்லை கடித்தான் .
அஸ்வின் அவன் என்னோட மருமகனா போயிட்டான் …இதில் நிஷாவோட வாழ்க்கையும் அடங்கியிருக்கு!
இப்படி ஒரு பொறுக்கியோட நிஷா வாழணுமா ? கண்மண் தெரியாத கோபம் அஸ்வினுக்கு .
நீ கேட்கிறது நியாயம் தான் . இதுக்கு என்னால் பதில் சொல்ல முடியாதுப்பா …பண்பாடு,கலாச்சாரம் என்றெல்லாம் பிரசங்கம் பேசவேண்டி வரும் . நான் தடாலடியா முடிவு எடுக்க முடியாதுப்பா …. மனிதர் துவண்டு போனார் .
சாரி சித்தப்பா அவர் கரம் பற்றினான்.
பிரகாஷ்ட்ட இருந்து நேத்து நான் காப்பாத்திட்டேன் . காலம் முழுக்க யார் காப்பாற்றுவா ? நடுங்கியது குரல்.
வினோத் மரண படுக்கையில் கேட்டது நினைவிற்கு வந்தது.
அவளையும் குழந்தையையும் பாதுகாக்க வேறு எவனோ ஒரு நல்லவனை தேடுவதை விட தானே பாதுகாக்க முடிவு செய்தான்.
நிச்சயம் தங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டர்கள் என்று அவனுக்கு தெரியும் . அதற்காக கீர்த்தியை விட்டுவிட முடியாது என்று உறுதியான முடிவை எடுத்து விட்டான்
நீங்க கீர்த்திட்ட பேசிட்டு சொல்லுங்க சித்தப்பா. கீர்த்தி சம்மதித்தால் நான் அவளை ஏத்துக்க ரெடியா இருக்கேன் என்றான் தீர்க்கமாய் .
அக்ஷயாவிடம் மட்டும் விஷயத்தை சொன்னான் . அவளுக்கு சந்தோஷம் தான்.
இனியாவது அண்ணன் வாழ்வில் வசந்தம் வீசட்டும் என்று புன்னகையுடன் வாழ்த்து கூறினாள்.
“………………………..”
கிருஷ்ணன் கீர்த்தியிடம் மனம் விட்டு பேசினார் .
அம்மா நானும் ரெண்டு பெண்ணை பெத்தவன் தான் ….உன் வாழ்க்கை பாலைவனமா போகிறதை நான் விரும்பல . உனக்கு பிறந்த இடத்திலும் சப்போர்ட் இல்லை ,புகுந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை .
நீ சின்ன பொண்ணு …இந்த பொல்லாத உலகத்தில் கையில் குழந்தையோடு நீ தனியா வாழ்ந்துட முடியாது.
அஸ்வின் உன்னை கண்ணுக்குள்ள வைத்து பார்த்துப்பான் . உன் குழந்தைக்கு சிறந்த அப்பாவா இருப்பான் .இனி நீயும் குழந்தையும் அவன் பொறுப்பு .
ஊர் உலகம் அதை சொல்லும் இதை சொல்லும்னு யோசிக்காதம்மா …நீ தனித்து போராடும் போது இந்த ஊரும் உலகமும் வராது .
நீ என்னை மதிக்கிறது உண்மைனா இதுநாள் வரை என்னை அப்பான்னு கூப்பிட்டது நிஜம்னா என் முடிவுக்கு நீ கட்டுப்பட்டு தான் ஆகணும் என்றார் உறுதியாக.
அப்பா ….அவள் அழுது கரைந்தாள். அவள் என்ன சொல்வாள் ?
புரியுதும்மா ! புருஷன் இறந்து இன்னும் ஆறு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள இன்னொரு கல்யாணமான்னு யோசிக்கிற !
இப்போ எதையும் யோசிக்க நேரம் இல்லை . நீ பாதுகாப்பா அஸ்வின் கையில் போய் சேர்ந்துடும்மா …. அஸ்வின் ரொம்ப நல்லவன் ! நான் உனக்கு நல்லது தான் செய்திருக்கேன்னு போகப் போக புரியும் . ரொம்ப யோசிக்காதேம்மா கை கூப்பினார் .
சரிப்பா ….நீங்க சொல்றதுக்கு சம்மதிக்கிறேன் அவர் கரம் பற்றி தேம்பினாள்.
அன்று இரவே அஸ்வினை அழைத்து அவனுடன் கீர்த்தியையும் குழந்தையையும் அனுப்பி வைத்து விட்டார் .
மறுநாள் நண்பர்கள் புடை சூழ குல தெய்வம் கோயிலில் வைத்து கீர்த்திக்கு தாலி கட்டி மனைவியாக்கி கொண்டான் அஸ்வின்.
அதுக்கு பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும் அண்ணி என்றாள்
அச்சு .
அக்ஷயா சொல்லி முடிக்க …..முகத்தை கையால் மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் கீர்த்தி.
error: Content is protected !!