Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன் -5

உனக்கென இருப்பேன் -5

அவன் ஏதோ ஆலமரம் போலவும் அவனை அரவணைத்துக் கொள்வது மிகுந்த பாதுகாப்பு போலவும் அவன் மார்பில் தஞ்சமென அண்டிக் கொண்டாள் .

அவளது கடைக்கண்ணீர் வழிந்து அவன் பனியனை நனைத்தது .

கீர்த்தி ஸாரிம்மா …குலுங்கி அழும் அவள் தலை கோதினான் .



Advertisement

உனக்கு நல்லது பண்றதா நினைச்சு உனக்கு யோசிக்க டைம் கொடுக்காம தாலி கட்டிட்டேன் .

தலை தூக்கி அவன் முகம் பார்த்தாள் . பௌர்ணமி நிலவு போல் களங்கமற்று இருந்தது. 

மருண்டு ,அதிசயித்து ,வியந்து, குழம்பி என்று வெவ்வேறு முகபாவத்துடன் தன்னை நோக்கும் மனையாளின் மதிமுகம் பார்த்தான் .

Advertisement

சோறு பிசைந்த வலது கரத்தை கீழிறக்கி இடது கரத்தால் அவள் முகம் துடைத்தான் .

Advertisement

அவன் அக்கரையில் அதுவாய் கண்ணீர் மீண்டும் பெருகியது .

கீர்த்தி அழக்கூடாதுடா …தலை காயலம்மா ,,,சளி பிடிச்சுடும்! கொஞ்சமா சாப்பிடு ப்ளீஸ் …ஒரு உருண்டை எடுத்து ஊட்டினான் . மறுப்பேதும் கூறாமல் வாங்கிக் கொண்டாள் .

எனக்கு தியானேஷ் வேற நீ வேற இல்லம்மா ….உனக்கு மனசு விட்டு பேசணுமா ? வாய்விட்டு அழணுமா ? வயிறு வலிக்க சிரிக்கணுமா ? எல்லாத்துக்கும் எப்போவும் உன்னோட நானிருப்பேன்.    பேசிக் கொண்டே  ஊட்டி முடித்தான் .

Advertisement

வினோத்தை மறந்துட்டு புது வாழ்க்கை வாழலாம்னு நான் சொல்ல மாட்டேன் .

கணவன் மனைவி வாழ்க்கை எளிதா மறந்துட்டு வாழற பந்தம் இல்லை .

ஒரு நாள் ஒரு பொழுது வாழ்ந்தாலும் அது உயிர் உள்ளவரை நினைவோடு கலந்திருக்கும் .

இப்போதைக்கு உனக்கும் எனக்கும் தியானேஷ் பற்றின நினைப்பு தான் இருக்கணும் .

காலப்போக்கில் காலத்தோடு சேர்ந்து பயணிப்போம்  காலம் கடைசிவரை நணபர்களா வைத்தாலும் சரி கணவன் மனைவியா சேர்த்து வைத்தாலும் சரி …மனசு சொல்றபடி  வாழ்ந்துட்டு போவோம் சரியா ?.

ம்ம்ம்ம்ம் என்று தலை ஆட்டியவள் நன்றி மிகுதியில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்காமல் கைகூப்பினாள் .

ஏய் என்ன இது ? ரொம்ப டிரமாடிக்கா இருக்கு. சும்மா சும்மா தேங்க்ஸ் சொல்றதும்  அழுது வழியறதும்  …. கொஞ்சம் கூட நல்லா இல்லை .

நான் ஒன்னும் தியாகி இல்லை நான் மட்டும் உனக்கு வாழ்க்கை கொடுக்கலை…நீயும் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்க . அவள் கன்னம் வருடி தைரியம் சொன்னான் .

அவன் தீண்டல் இப்போது அருவெறுக்கவில்லை ஆயிரம் யானைகளின் அசுர பலத்தை கொடுத்தது .

“……………”

நீங்க சாப்பிடுங்க …சாப்பாடு போட்டு வைத்தாள் .

அமைதியாக சாப்பிட்டு முடித்தவன் நான் போய் குழந்தையை தூக்கிட்டு வரேன் என்றான் .

குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டிக் கொண்டே வந்தான் அது கிலுகிலுப்பைக்கு போட்டியாய் கிளுக்கி சிரித்தது .

மஞ்சுமா ரசம் சாதம் ஊட்டிவிட்டாங்களாம் . சார் தொப்பை நிறைஞ்சுட்டு  போல அதுதான் குஷியா சிரிக்கிறார் என்று குழந்தையின் வயிற்றில்  முகம் தேய்த்து  சிரித்தான் . கூச்சத்தில்  குழந்தை நெளிந்து சிரிக்க கீர்த்தனாவும் சிரித்து விட்டாள் .

நான் வீட்டை கொஞ்சம் க்ளீன் பண்றேன் நீங்க குழந்தையை கொஞ்ச நேரம் வெளியில் வச்சிட்டு விளையாடுங்க என்றாள் .

கிச்சன் கபோர்ட் எல்லாம் துடைத்து மளிகை சாமான்களை  அந்தந்த டப்பாக்களில் கொட்டி வைத்தாள் .

ஹாலை ஒட்டிய சிறிய அலமாரியை பூஜை அறையாக மாற்றி புதிதாய் சுவாமி படங்களை மாட்டி வைத்தாள் .

பெட், பில்லா கவர் . ஸ்க்ரீன் எல்லாவற்றையும்  மாற்றினாள்

கீர்த்தி போதும் எல்லா  வேலையும் ஒரே நாளில் இழுத்து போட்டு செய்ய வேண்டாம் . அவள் வேலையினூடே உள்ளே புகுந்தான் 

இதோ  ஆச்சு ….முகம் கழுவி வந்தவள் குழ்நதைக்கு பசியாற்றி உறங்க வைத்தாள் .

நைட்  டிபன் நாமளே பண்ணிக்கலாம் மஞ்சுமாக்கு ஏன் சிரமம் கொடுக்கணும் என்றாள்.

ம்ம்ம்ம்ம் நாமளேன்னா ? நானும் சேர்ந்து செய்யணுமா ? கேலியாய் புருவம் உயர்த்தி கேட்டான் .

“ஹலோ எனக்கு யாரோட ஹெல்பும் வேண்டாம்  நான் நல்லாவே  சமைப்பேன்…..”கோபத்தில் அவளுக்கு உதடு துடித்தது . இன்று தான் அவனிடம் குரல் உயர்த்தியிருக்கிறாள் .

அதை சாப்பிடறவங்க தான் மேடம் சொல்லணும் . மீண்டும் சிரித்தான் .

அது தான் நீங்க சாப்பிட போறீங்களே …

இன்ஷுரன்ஸ் இருக்கு பார்த்துக்கலாம் என்றான் சிரிக்காமல் .

அய்ய்ய ரொம்ப தான் …..முகத்தை முறுக்கி பழிப்பு காட்டிவிட்டு போனாள் .

குழ்நதைபோல் பழிப்பு காட்டிவிட்டு போனவளை பார்த்து உள்ளம் நெகிழ்ந்து சிரித்தான் .

கட்டிலில் வந்து  அமர்ந்தவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது .இது நான் தானா ?  நானா இப்படி பேசிவிட்டு வந்தேன் ….வியந்து போனாள் .

“…………….”

அந்தி சாயும் வேளை பால் பாக்கெட் ,பூ ,பழம் வாங்கி வந்தான்.

சுவாமி படத்திற்கு பூ போட்டு வெற்றிலை பாக்கு, பழம் வைத்து விளக்கேற்றி காய்ச்சிய பாலில்  கற்கண்டு கலந்து வைத்து கடவுளை வணங்கினாள்.

மூடிய விழிகளுக்குள் இறைவனுக்கு பதில் அஸ்வினே  வந்து நின்றான் .

அஸ்வின் கடவுளை வணங்கி விபூதி இட்டுக்கொண்டு குழந்தைக்கும் பூசி விட்டான் .

கீர்த்தி நீயும் கொஞ்சம் பூ வச்சிக்கலாமே…..சங்கடமாய் கேட்டான் .

ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி நிதர்சனம் உணர்ந்தவள் சிறு மல்லி சரம் கிள்ளி நடுங்கும் கரத்துடன் சூட்டிக் கொண்டாள் .

அவள் பூவோடும் பொட்டோடும் இருக்கத்தானே அவன் இவ்வளவு பாடுபடுகிறான்.

  கொஞ்சமும் தயங்காமல் குங்குமம் எடுத்து அவள் வகிட்டில் தீற்றி விட்டான் .

இதை தினமும் பாலோ பண்ணு ப்ளீஸ் என்றவன் இன்னும் கொஞ்சம் கூட பூ தாராளமா வைக்கலாம் அந்தளவுக்கு சம்பாத்தியம் இல்லாம இல்லை என்றான் .

“………………….”

அப்பா நைட்டுக்காவது சாப்பிடற ஐடியா இருக்கா ?இல்லையா ?

அலுத்துக்  கொண்டாள் அக்ஷயா . அவளும் எவ்வளவு தான் சமாதானம் செய்வாள் ?

சோறு ஒன்னு தான் குறைச்சல் ….சரோஜினி தலையில் அடித்துக் கொண்டார் .

ம்மா இன்னைக்கு பட்டினி கிடப்ப ஓகே …நாளைக்கு நாளன்னைக்கு கூட ஓகே …அதிக பட்சம் நாலு நாள் பட்டினி கிடக்க முடியுமா ? அதுக்கு பிறகு சாப்பிட்டு தானே ஆகணும் ? 

ரொம்ப பிகு பண்ணாம சாப்பிடுங்க ! ரெண்டு பெரும் Bp கேசுங்க . எனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்குற வரைக்கும் உயிரோட இருக்குற ஐடியா இருக்கா இல்லையா ? உங்க பிள்ளை பண்ணினதை நினைச்சு பொண்ணை அம்போன்னு விட்டுட்டு போயிவீங்க போல ….

எந்த பந்தை போட்டால் அவரக்ளை க்ளீன் போல்ட் பண்ண முடியும் என்று அறிந்து அந்த பந்தை போட்டாள் .

என்னம்மா இப்படி எல்லாம் பேசற ? கலங்கி விட்டார் பொன்னுசாமி .

சாரிப்பா …ப்ளீஸ் வந்து சாப்பிடுங்க ! கரம் பற்றி அழைத்து போய் தோசை வார்த்து கொடுத்தாள் .

“……………….”

வெஜிடபுள் உப்புமா தேங்காய் சட்னி பண்ணியிருக்கேன் வந்து சாப்பிடுங்க என்றாள் கீர்த்தனா .

எதே உப்புமாவா ? உள்ளே போன குரலுடன் அமர்ந்துவிட்டான் .

சாப்பிட்டு பாருங்க அதுதான் இன்சூரன்ஸ் எடுத்திருக்கீங்களே என்றாள் சிரிப்பை அடக்கிக்  கொண்டே ….

குட்டி உங்கம்மா சமையலை நம்பி சாப்பிடலாமா ? குழந்தையிடம் கேட்பது போல் பாவமாய் கேட்டான் 

ம்ம்ம்கும் ….முனங்கியபடியே கடாயோடு உப்புமாவை கொண்டு வந்து ஹாலில் வைத்தாள் .

குழ்நதையை மடியில் வைத்துக் கொண்டே சாப்பிட்டான் .

உண்பவன் முகத்தை ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் எதோ ISO 9000 சர்டிபிகேட் கொடுப்பது போல் .

அவள் ஆவல் உணர்ந்தவன் “நாட் பேடு “ என்று சிரித்தான் . அவன் சிரிப்பு கண்டு சிறு முறைப்பு முறைத்து வைத்தாள் .

குழந்தைக்கு பருப்பு சாதம் ஊட்டி சற்று நேரம் விளையாட்டு காட்டி தூங்க வைத்து தொட்டிலில் போட்டாள் .

கிச்சனுக்குள் சத்தம் கேட்கவே வேகமாய் உள்ளே நுழைந்தவள்  அப்படியே நின்றுவிட்டாள் . சமைத்தது சாப்பிட்டதை எல்லாம் அஸ்வின் கழுவி முடித்திருந்தான் .

அய்யயோ ….உங்களை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது ? பதறி போனாள் .

ஹே கூல் …நீ மட்டும் கைகுழந்தையை வச்சிக்கிட்டு எவ்வளவு வேலை செய்வ ?கரிச்சனையாய் கேட்டான் .

ப்ளீஸ் இனி இதெல்லாம் செய்யாதீங்க !  நான் வெட்டியா தானே இருக்கேன் .

கீர்த்தி நான்சென்ஸ் மாதிரி பேசாத சொல்லிட்டேன் . நீ வெட்டி ஆபிசர் இல்லை . A கிரேடு போஸ்டிங்கில் இருக்கும் ஆபிசர் பொண்டாட்டி நீ !

அவள் மௌனித்து நிற்க …போய் தூங்கு என்றவன் டிவியை ஆன் பண்ணி நியூஸ் பார்க்க தொடங்கிவிட்டான் .

“……………..”

போன் அழைப்பு பார்த்து புன்னகையுடன் எடுத்து காதில் வைத்தான் .

அண்ணா சாப்பிட்டாச்சா ?

நான் சாப்பிட்டாச்சு அச்சும்மா ….. உன் அண்ணி அசத்தலா உப்புமா பண்ணியிருந்தா .

நிஜமாண்ணா ?

அண்ணன் என்னைக்கு பொய்  சொல்லியிருக்கேன் ? 

சரி …சரி …அண்ணி கைப்பக்குவம் அபாரம் போல ….

அம்மா அப்பா சாபிட்டாங்களா ? கவலையுடன் கேட்டான் .

ம்ம்ம்ம் என்னவோ பேசி சரிக்கட்டி சாப்பிட வச்சிட்டேன் என்றாள் .

தேங்க்யூ அச்சு என்றான் நிம்மதி பெருமூச்சுடன் .

அண்ணி என்ன பண்றாங்க?

தூங்கிட்டாம்மா !

சித்தப்பா வீட்டுல நிலவரம் எப்படி இருக்கு ?

நம்ம பண்ணையாளு முத்து சம்சாரம் அவங்க வீட்டுல வேலை பார்க்குது  

முத்துவை விசாரித்தேன் , பத்மினி  சித்தி தான் கத்தி ஆர்ப்பாட்டம் பண்றாங்களாம் . வீட்டு மாப்பிள்ளைங்க ரெண்டு பேரம் அதிகாரம் பேசி உசுப்பி விட்டுட்டு இருக்காங்களாம் .

நிஷா அக்கா சௌந்தர்யா அக்கா ரெண்டு பெரும் இங்கே தான் டேராவாம் .

அந்த மனிதர்கள் அப்படித்தான் என்று தெரியுமே ….என்ன சொல்ல ?

சரி அச்சு ….அப்பா அம்ம்மாவை பார்த்துக்கோ ! அக்கம் பக்கத்துல யாராவது ஏதாவது பேசினா மைண்ட் பண்ணிக்காதீங்க .

தண்ணீர் எடுக்க வந்த கீர்த்தனா அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்தாள் கதவுக்குப்பின் நின்று .

இவன் என்னமாதிரி மனிதன் ! பிரம்மிப்பில் சிலையென நின்றுவிட்டாள் . இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு ஆணா ?

“……………..”

என்ன மேடம் தூக்கம் வரலையா ? அசைவற்று நின்றவளை கண்டுவிட்டான் .

இல்லை …நீங்க கட்டிலில் படுத்துக்கோங்க . நான் ….அவள்  பேசிக் கொண்டே தலை உயர்த்த …

அஸ்வின் பாய் விரித்து தரையில் படுத்தேவிட்டான் .

என்ன பார்க்கிற ? கட்டிலில் படுத்தால்  தான் குழந்தை அழுதா தூக்க கொள்ள உனக்கு சௌகரியமா இருக்கும் . நோ பார்மாலிட்டீஸ் …தூங்கு என்றான் .

என்ன நின்னுட்டே தூங்குற வியாதியா ? போய் படு ! விரட்டினான்

“………………….” 

இருவருக்கும் உறக்கம் வரவில்லை …

இன்றைய ஒரே பொழுதில் என்னென்னவோ நிகழ்ந்துவிட்டது …

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்தவன் என்பதால் அஸ்வின் அலட்டிக் கொள்ளவில்லை .

கீர்த்தனா தான் நடந்த நிகழ்வின் கணம் தாளாது தவித்துக் கொண்டிருந்தாள் .

உருண்டு  புரண்டு மனக்கிலேசம் அடங்கி ஒரு வழியாய் உறங்கிப்போன கீர்த்தனாவை இமை விலகாது பார்த்தான் . அவன் விழி நீர் திரண்டு பார்வையை மறைத்தது .

உனக்கு ஏனடி கண்ணம்மா இப்படி ஒரு வாழ்க்கை ? உன்னை பார்க்க கூடாத கோலத்தில் பார்க்கவா வினோத்தோடு வாழவைத்தேன்? வழிந்த நீரை அழுந்த துடைத்துக் கொண்டான் .

கொஞ்சநாளாய் மனதை அழுத்திய பாரம் இன்று கொஞ்சம் இறங்கிய உணர்வு . எந்த மனநிலையில் இருக்கிறாளோ என்ன சூழ்நிலையில் தவிக்கிறாளோ என்று படபடப்பு இல்லாத இரவாக இன்றைய இரவு அமைந்ததில் ஆசுவாசம் கொண்டான் .

அவன் கண்பார்வையில் இருக்கிறாள் . வஞ்சனையின்றி வார்த்தை சவுக்கை வீசும் மனிதர்களிடமிருந்து மீட்டுக் கொண்டுவந்து அடைகாத்துவிட்டான் .

…………..தொடரும் ………

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!