Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்….17

உன் காதல் ஒரு வரமாய்…..17

“ஒழுங்கா படி அமிர்தா….நான் தினமும் போன் பண்ணுவேன்….நீ தனியா எல்லாம் இல்லை நான் எப்போதும் இருப்பேன் உன் கூட….சரியா….நான் சீக்கிரம் வரப்பார்க்குறேன்….”என்று கீதா அழுது கொண்டே கூற,

“க்கா நான் என்னை பார்த்துக்குறேன்….நீங்க முதல்ல நல்லபடியா போய் உங்க குடும்பத்தோட சேருங்க….அது தான் உங்க இடம் இது இல்லை…நீங்க இப்படி தள்ளியே இருந்தா அவங்க எப்படி உங்களை மன்னிப்பாங்க…அதனால் அங்க இருந்தே மன்னிப்பு கேளுங்க கண்டிப்பா அவங்க மனசு மாறும்….”

“ம்ம் எனத்த மாறப்போகுது இனி….எல்லாம் நான் பண்ணனுன பாவம்….நானே எழுதிக்கிட்டது….”என்று கலங்கும் கண்களை துடைக்க,



Advertisement

“திருநெல்வேலி….திருநெல்வேலி…..”

“க்கா பஸ் வந்துடுச்சு பாருங்க….”என்ற அமிர்தா கீதாவின் பொதிகளில் பாதியை எடுக்க,மீதம் இருந்த பொதிகளை எடுத்துக் கொண்ட கீதா,

“என்னமோ என்கிட்டேந்து எல்லாம் வாங்கிக்குவாங்கனு நானும் வருஷா வருஷம் எல்லாம் தான் வாங்கிட்டு போறேன்….ம்ம் எங்க என்னை பார்த்தாக் கூட ஏதோ பிசாசை பார்த்த மாதிரி எல்லாரும் ஓடுறாங்க….”என்ற கீதா தன் பொதிகளுடன் பேருந்தில் ஏறி தனக்கான இடத்தில் அமர,அமிர்தா அவள் அமரவும் மீதி பைகளை அவளின் கையில் திணித்தவள்,

Advertisement

“பார்த்து போங்க அக்கா….பழசை நினைச்சிக்கிட்டே இருக்காதீங்க….இனி உங்களை யாரும் எதுவும் சொல்லமுடியாது….அதுக்கு விடவுமாட்டாங்க….”என்று கூறிவிட்டு இறங்க கீதாவிற்கு அவள் யாரை கூறுகிறாள் என்று புரிந்துவிட மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.சற்று நேரத்தில் பேருந்து நகர தொடங்க,

Advertisement

“அமிர்தா உடம்பை பார்த்துக்கோ….நல்லா படி புள்ள….எதுனாலும் எனக்கு பேசு சரியா….எனக்கும் உன்னையும் பாரதியையும் விட்டா யாரும் இல்ல புள்ள பேசுவதான….”என்று அழுதபடி ஜன்னல் வழியே கைகளை விட்டபடி கேட்க,அவளின் கையை பிடித்துக் கொண்ட அமிர்தா,

“நீங்க இந்த அமிர்தாவோட அக்கா….எப்படி மறப்பேன்….பத்திரமா போங்க….போயிட்டு போன் பண்ணுங்க…பாரதி அக்காவும் பேசுறேன்னு சொன்னாங்க….”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே பேருந்து நகர்ந்துவிட அமிர்தா தள்ளி நின்று கொண்டாள்.பேருந்து முன்னேறி சென்று புள்ளியாக மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றாள் அமிர்தா.அதுவரை அடக்கிங்யிருந்த கண்ணீர் துளிதுளியாக அவளின் கண்களில் இருந்து விழத் தொடங்கியது.

“அமிர்தா…இந்த ராக் புல்லா இந்த காமிக் புக்ஸை அடுக்கிடு…..”என்று ஒவ்வொரு ராக்லேயும் எதை அடுக்க வேண்டும் நூலக கண்கானிப்பாளர் கூறிக் கொண்டே வர அமிர்தாவும் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டாள்.

Advertisement

“சரிமா நாளையிலேந்து தொடங்கு…..”

“சரி சார்….நான் நாளைக்கு காலையில எட்டு மணிக்கே வந்துடுறேன்….”என்றவள் தனது விடுதிக்கு புறப்பட்டுவிட்டாள்.அமிர்தா இப்போது கீதா வேலை பார்த்த அந்த நூலகத்தில் தான் வேலை பார்க்கிறாள்.கீதா ஊருக்கு செல்லும் முன் அமிர்தாவிற்கு அந்த வேலையை வாங்கி கொடுத்துவிட்டு சென்றிருந்தாள்.அமிர்தாவிற்கு இப்போது படிப்பதற்கும் இங்கு உதவியாக இருந்தது.

“ம்ம்…பாரதிக்கா….எப்படி இருக்கீங்க….அண்ணா நல்லாயிருக்காங்களா….”என்று அமிர்தா பேசியில் கேட்க,

“நான் நல்லா இருக்கேன் அம்மு பாப்பா….நீ எப்படி இருக்க…”

“க்கா என்னை பாப்பா சொல்லாத….”

“நீ பாப்பா தான்டீ…அதை விடு படிப்பு எல்லாம் எப்படி போகுது….போன தடவை இரண்டு மார்க்குல போயிடுச்சுனு சொன்ன இந்த தடவை ஒழுங்கா எழுது புரியுதா…..அப்புறம் இந்த கீதா போன் பண்ணாளா…..”

“எங்க ஊருக்கு போய் இரண்டு தடவை பேசினதோட சரி….அப்புறம் நானா இரண்டு தடவை போட்டேன் அவங்க சரியா பேசலை…சரி ஏதோ அங்க சரியில்லைனு நான் வச்சிட்டேன் க்கா….”என்று அமிர்தாவும் கவலைபட,

“சரி விடுடி….இப்ப தான அவங்க அம்மா பேசியிருக்காங்கனு சொன்னா சீக்கிரம் எல்லாம் சரியா போகும் அப்ப அவளே பேசுவா….நீ படி…ஒழுங்கா எழுது….”என்ற பாரதி சற்று நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டிக்க,அமிர்தாவிற்கு மீண்டும் அனைத்தும் வெறுமையாக இருந்தது.அவளுடன் இப்போது வேறு ஒரு பெண் தங்கியிருக்கிறாள் தான் அவள் பாரதி,கீதா அளவிற்கு அமிர்தாவுடன் ஒட்டவில்லை.

தன் படுக்கையில் விழுந்து கண்களை மூடியவுடன் வந்து நின்றான் சிவா,

“என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம்….உனக்கா எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது….”என்று கேட்க,

“நான் என்ன பண்ணட்டும் இன்னைக்கு சனி கிழமை பாரதி அக்காகிட்ட பேசிட்டு வர லேட் ஆகிடுச்சு….”என்று அவள் கூற,

“நான் கோவமா இருக்கேன்…போடீ…”என்று அவன் முகத்தை திருப்ப,

“அச்சோ என் கடுவானுக்கு கோபம் வந்திடுச்சா……”என்று அவனின் கன்னம் தொட்டு கிள்ள அவளின் கைகளை தட்டிவிட,அவளோ அவனை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்யதபடியே உறங்கியும் போனாள்.இப்படி தான் இவளின் வாழ்வு போய் கொண்டிருக்கிறது.யாருமற்ற தனிமையை போக்க அவன் ஒருவனே அனைத்துமாகி போனான்.

அமிர்தாவின் தேர்வுக்கு மூன்று நாட்கள் இருந்தது.முன்பு போல் எல்லாம் பயப்படவில்லை இப்போது நல்ல முறையில் தன்னை தேற்றி கொண்டாள் அதே போல் படிப்பிலும் நல்ல முன்னேற்றம் இருந்தது.எப்படியும் இம்முறை தேர்ச்சி அடைந்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் தான் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் எதிர்பார்த்த தேர்வும் முடிவடைந்தது அமிர்தாவிற்கு எப்படியும் இம்முறை தேர்ச்சிக்கான சதவீதம் அதிகம் என்று நம்பினாள்.அதனால் அடுத்தகட்ட தேர்வுக்காக தயாரிக்க தொடங்கிவிட்டாள்.அதுவும் நூலகத்திற்க்கு வரும் ஒரு பேராசிரியரும் அவளுக்கு உதவி செய்ய முன்வர மறுக்காமல் ஏற்றுக் கொண்டவள் தெரியாதவற்றை கேட்டு தெரிந்து கொண்டாள்.

இந்நிலையில் தான் அவள் மீண்டும் சிவாவை பார்த்தாள்.தனது வேலை முடிந்து விடுதி திரும்பும் போது வழக்கமாக செல்லும் சூப்பர் மார்கெட் அல்லாமல் நகரத்தில் இருக்கும் பெரிய சூப்பர் மார்கெட்டிற்கு சென்றிருந்தாள் அன்று.தனக்கு தேவையான சில பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த சமயம்,

“சீக்கிரம் திவ்யா….எவ்வளவு நேரம் எடுப்ப….”என்ற குரல் கேட்கவும்,அமிர்தாவின் மனது தாளம் தப்பி துடித்தது.அவளையும் மீறி அந்த குரல் வந்த திசை நோக்கி சென்றவள் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்குத்தி நின்றுவிட்டன.

“டேய்…நீயும் உன் அம்மா மாதிரி ஏன்டா என் உயிரை எடுக்குற….”என்று ஒற்றை கையால் அந்த பிஞ்சின் கை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான் சிவா.அமிர்தாவிற்கு புரிந்தது அது சிவாவின் குடும்பம் என்று இதுவரை தன்னை கட்டுப்படித்திக் கொண்டிருந்தவளை மேலும் உடைக்கவே வந்தாள் அவள்.

“டேய் இரண்டு பேரும் சும்மா இருக்க மாட்டீங்க….ஒரு பொருளை எடுக்க விடுறீங்களா என்னை….எப்ப பாரு கத்திக்கிட்டே இருக்க வேண்டியது….இந்தா இதை பிடி நான் வந்துடுறேன்….”என்றவள் சிவாவின் கையில் கூடையை திணித்துவிட்டு உள்ளே சென்றாள்.செல்லும் முன் சிவா அவள் காதில் ஏதோ கூற அவளோ அவனின் தோள்களில் அடிக்க தொடங்கினாள்.அதற்கு மேல் நடந்தவற்றை பார்க்க அமிர்தா அங்கில்லை வேகமாக எடுத்த பொருட்களை கடையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.ஆனால் அவள் வெளியேறும் போது யாரோ தன்னை பார்த்தது போல் ஒரு யூகம் ஆனாலும் திரும்பவில்லை.எத்தனை வேகமாக தன் விடுதிக்கு வந்தாள் என்று தெரியவில்லை வந்து தன் படுக்கையில் விழுந்தவளுக்கு கண்கள் உடைப்பெடுத்தது.

அமிர்தாவிற்கு அந்த காட்சியே மனதில் தோன்றி மனதை தைக்க அதை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை அவளிற்கு.அழுதழுது உடலும்,மனமும் சோர்ந்தது தான் மிச்சம்.ஒருகட்டத்தில் உடலின் சக்தி வடிந்து அப்படியே உறங்கியும் போனாள்.அடுத்த நாள் அவள் எழும்பும் நேரத்தை தான்டி எழ,தலை ஒரு பக்கமாக சுற்றியது அதோடு ஏதோ தூரத்தில் ஏதோ சத்தம் கேட்க முதலில் என்ன என்றே புரியவில்லை பக்கத்தில் இருந்த நீரை முகத்தில் தெளித்து தெளிந்தவளுக்கு அப்போது தான் அது அவள் பேசியின் சத்தம் என்று புரிய எடுக்க நூலகத்திலிருந்து அழைத்திருந்தார்கள்.பேசி முடித்து வைத்தவள் தன்னையே நொந்து கொண்டு வேகமாக சாப்பிட்டு குளித்து வேலைக்கு ஓடி வந்தாள்.

“என்னமா நீ….இப்படி பண்ணிட்ட…உனக்கு உடம்பு முடியலைனா முன்னாடி சொல்ல வேண்டாமா….படிச்ச பொண்ணுனு கீதா சொன்னுச்சேனு உன்னை வேலைக்கு வச்சா என் வேலையை போக வச்சிடுவ போல….இது தான் கடைசி…”என்று காப்பாளர் கூற அமிர்தா எதுவும் பேசாமல் தலைகுனிந்துவிட்டாள்.தவறு அவளின் மீது இருக்கும் போது எதுவும் கூறமுடியாதே.

“மன்னிச்சிடுங்க சார்….இனி இப்படி நடக்காது….”என்று கூற,

“என்னமோ போ….சரி உள்ள வந்த புக் எல்லாத்தையும் வச்சிருக்கேன் எடுத்து அடுக்கிடு….”என்று கூற அவளும் தன் வேலை பார்க்க சென்றுவிட்டாள்.அவர் கூறியபடி புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டு நிமிர அடுத்த செட் புத்தகங்கள் அடுக்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது.ஆக அவளை மேலும் சிந்திக்க விடாமல் வேலைகள் அவளை இழுத்துக் கொண்டது.

அமிர்தா தன் விடுதிக்கு போகும் போதே மிகவும் சோர்ந்து தான் இருந்தாள் இன்று நேரமும் கடந்துவிட போகும் வழியிலேயே தனக்கான உணவை வாங்கி கொண்டு தான் வந்து கொண்டிருந்தாள்.அப்போது அவளின் உள்வுணர்வு தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க நடந்து கொண்டே சுற்றி பார்த்தாள் ஆனால் யாரும் இருப்பது போல் இல்லை.இது மேலும் இரண்டு நாட்கள் தொடர அமிர்தாவிற்கு பழையபடி பயம் பிடித்துக் கொண்டது.முன்பாவது தன்னுடன் பாரதி,கீதா என்று இருந்தார்கள் இப்போது அவரவர்  வாழ்வை அவரவர் வாழ்ந்து கொண்டிருக்க தனக்கு உதவி என்று கேட்க கூட ஆள் இல்லை.அதனால் என்ன செய்வது என்று புரியவில்லை.

அவள் வேலைபார்க்கும் இடம் அவளின் விடுதியின் பக்கத்தில் தான் என்பதால் நடந்து தான் வந்துபோவாள்.ஏழு மணியுடன் அவளின் வேலை நேரம் முடிந்துவிடும் சில நேரங்களில் புது புத்தகங்கள் வந்தால் அதை அடுக்கி வைத்துவிட்டு வர நேரமாகும் அதுவும் எட்டு மணியை தான்டாது.இங்கு சம்பளம் கம்மி என்றாலும் போய் வர படிக்க வசதியாக இருப்பதால் தான் இங்கு வேலைக்கு ஒத்துக் கொண்டது.இப்போது புதிதாக தன் மூளையில் முளைத்திருக்கும் கேள்வி தன்னை யாரும் தொடர்கிறார்களோ என்று.

என்ன முயன்றும் பயம் தொற்றிக் கொண்டது இதை எப்படி கையால்வது யாராக இருக்கும் என்ற பயம் எதற்கு தொடர்கிறார்கள் என்ற பயமும் இருக்க அடுத்த நாள் தான் செல்லும் நேரத்திற்கு முன்பே வேலைக்கு சென்றவள் வரும் போது சற்று நேரத்திற்கு முன்பே விடுதிக்கு திரும்பியும் விட்டாள்.ஆனால் இதை தொடர்வது சாத்தியமில்லை என்று புரிந்தது.

அன்றும் அதே போல் வேலை முடித்து வந்து கொண்டிருக்க அவளை இடிப்பது போல் நின்றது ஒரு இருசக்கர வாகனம் அமிர்தா பயந்து பின் நகர,

“ஹாய்….அமிர்தா….”என்றவன் தன் கெல்மட்டை கழட்ட,அமிர்தா பயந்து பின் நகர்ந்தாள்.

“ஏ….ஏய்….பயப்படாத….நான் உன்கிட்ட ஒண்ணு….”என்று ஏதோ பேச அமிர்தா பயந்தவள்,

“யார் நீ…நீங்க….என் பேரு எப்படி தெரியும்….”என்று பதட்டத்துடன் கேட்க,

“ஆ…ஆம்….தெரியும் நான் உன்னை பார்த்திருக்கேன் லைப்பெரில…..ஒரு வாரமா உன்னை பின் தொடருரேன்…”என்றவன் மேலும் பேசும் முன்,

“நீங்க யாருனே எனக்கு தெரியாது….தேவையில்லாம என்னை பின் தொடராதீங்க….”என்று படபடவென பொரிந்தவள் நில்லாமல் சென்றுவிட்டாள்.வேகமாக தன் விடுதிக்கு வந்தவளுக்கு தன் இதயத்தின் ஓசை அவளிற்கே கேட்க அதை தண்ணீர் குடித்து அடக்கியவளுக்கு இப்போது முளைத்திருக்கும் புதியவனை என்ன செய்து தடுப்பது என்று புரியவில்லை.முதல் முறையாக தனியாக இருப்பது போல் உணர்ந்தாள்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் புதியவன் கொடுத்த அதிர்ச்சியில் சிவாவை பார்த்ததை மறந்துவிட்டாள்.

ஆனால் அந்த புதியவன் அமிர்தாவை தொடர தொடங்கினான் லைபெரியிலும் அவளை தொந்தரவு செய்ய தொடங்க சொல்லி பார்த்தவள் ஒரு கட்டத்தில் வெடித்துவிட்டாள்.

“உங்களுக்கு சொன்னா புரியாதா….நான் வேற ஒருத்தரை விரும்புறேன்….அவரை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்….சும்மா என்னை தொந்தரவு செய்யாதீங்க….”என்று கூறிவிட,

“எ…என்ன சொல்லுற நீ….நான் உன்னை இந்த ஒரு மாசமா பார்க்குறேன்….என்னை அவாய்ட் பண்ண சும்மா பொய் சொல்லாத….”என்றான் அவன்.

“ஏய் இது தான் உனக்கு கடைசி…இனி என்னை பாலோ பண்ண நான் போலீஸ் கிட்ட போவேன்….”என்ற அமிர்தா கூறியவுடன் அவன் முகத்தில் ஒரு பயம் வந்து போக அதை கண்டு கொண்டவள்,

“நானும் சொல்லி சொல்லி பார்க்குறேன்….நீ ரொம்ப பண்ணுற…”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு சொல்லி கொடுக்கும் பேராசிரியர் வாணி,

“என்ன அமிர்தா எப்படி இருக்க….”என்று கேட்டவாரே வர,

“நான் உன்னை ரொம்ப விரும்புறேன் அமிர்தா….ப்ளீஸ் புரிஞ்சிக்க….”என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட,

“என்னமா என்ன பிரச்சனை….” என்று அவளின் முக மாற்றத்தை சரியாக கண்டு கொண்டு கேட்க,அமிர்தா எதையும் மறைக்காமல் கூறிவிட்டாள்.

“ம்ம் நினைச்சேன்…நீ பயப்படாத…அவன் பேரு கவின்…எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கான்…அவன் அமெரிக்கால வேலை பார்க்குறான் இப்ப லீவுக்கு வந்திருக்கான்…இன்னும் இரண்டு நாள்ல ஊருக்கு போயிடுவான்…பயப்படாத அவனை நான் பார்த்துக்குறேன்….நீ உன்னோட இண்டர்வியூக்கு ரெடியாகு….”என்று கூற,

“ம்ம் சரி மேடம்….”என்று கூற,

“என்ன சுதி இறங்குது…..”

“அப்படியெல்லாம் இல்லை மேடம்….”என்றவளுக்குள் இந்த முறையேனு தான் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்ற வேண்டுதல் தான்.

“கண்டிப்பா பாஸாகிடுவ…அதனால அடுத்ததுக்கு தயாராகு….தேவையில்லாத விஷயத்துக்கு எல்லாம் பயப்படாம….நீ உன் வேலையை கவனி…இதெல்லாம் வரும் போகும்…இதுக்கெல்லாம் பயந்தா நாம முன்னேறவே முடியாது…..இவனை மாதிரி ஆள் எல்லாம் இனி உன் லைப்ல நிறைய பார்ப்ப அதனால தயாராகு….”என்று கூறிவிட்டு செல்ல அமிர்தாவிற்கு அதுவரை இருந்த பயம் சற்று மட்டுபட்டது அதோடு அவர் கூற வருவதும் புரிந்தது.இனி நான் அனைத்தையும் தனியாக போராட பழகி கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!