Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 5

அய்யனார் அர்ஜுனன் உடம்பில் இருந்து இறங்கியவுடன் அவன் மயங்கி விழுந்தான்.. அதற்குள் வாணனும் வர்ணனும் அவனை தாங்கி பிடித்தனர்….

சுபா தான் பயந்து போய் அமர்ந்து இருந்தாள்… நந்தினியும் ஜனனியும் அவளை சமாதானம் படுத்தி கொண்டு இருந்தனர்…. ஆரவ் தன் தந்தையின் ஆக்ரோஷமான பேச்சில் பயந்து தன் சித்தப்பாவிடம் ஒன்றி இருந்தான்…



Advertisement

கர்ணன் தான் அவனிடம் “சாமி அப்பாக்குள்ள வந்துடுச்சு லிட்டில் சிங்கம்…. அதுனால தான் அப்பா அப்படி இருந்தாரு.. பயப்பட கூடாது… லிட்டில் சிங்கம் மாதிரி இந்த லிட்டில் சிங்கமும் எதுக்கும் பயப்படாது தானு…” என்று கூறி அவனை சமாதானம் படுத்தினான்…

பாலா அவமானம் கன்றிய முகத்துடன் வேக வேகமாக வீட்டிற்கு சென்றுவிட்டார்… கிரிஜாவோ ஐயோ அப்டி மட்டும் நடக்கவே கூடாது…. என்று மனதிலேயே அய்யனாரிடம் மன்றாடி கொண்டு இருந்தாள்..

ரேவதியோ இப்போதைக்கு இந்த விஷயத்தை செய்ய வேணாம் என்று பேசிக் கொண்டு இருந்தாள்.. இப்போதும் அவள் திருந்தவே இல்லை…

Advertisement

பாட்டிக்கு தெரிந்து விட்டது… தன் குடும்பம் பிரியப்போகிறது என… அதில் அவருக்கு வருத்தமாக இருந்தாலும் இவர்கள் செய்த வேலைக்கு இனிமேல் இந்த வீட்டிற்குள் வைத்துக்கொள்ள கூடாது என நினைத்து கொண்டு அர்ஜுனனை நோக்கி நடந்தார்….

Advertisement

சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜுனன் முதலில் பார்த்தது கவலை தோய்ந்த முகத்துடன் நின்று இருந்த சுபாவை தான்…

அவனுக்கு தெரிந்துவிட்டது.. சாமி கவலைப்படும் வகையில் எதோ குறி கூறி உள்ளது என… எதுவும் அவன் பேசவில்லை.. உடம்பு எல்லாம் அடித்து போட்டது போல் அவனுக்கு வலித்தது…

அவனை கைத்தாங்கலாக வாணன் பிடித்து கொள்ள வர்ணன் மற்றவர்களை அழைத்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்…

Advertisement

ஜீப்பின் பின்னிருக்கையில் முதலில் சுபா அமர்ந்து கொள்ள அவள் பக்கத்தில் அர்ஜுனன் உட்கார்ந்து அவளின் தோளில் சாய்ந்து கொண்டான்… அந்த ஜீப்பை வாணன் எடுக்க

வர்ணன் அவர்கள் வந்த காரை எடுத்தான்… ஆரவ் அவர்களுடன் சென்றுவிட்டான்…
பாட்டி கர்ணனின் காரில் ஏறிக்கொண்டார்…

வாணன் ஒரு இடத்தில ஜீப்பை நிறுத்தினான்… இரண்டு பாதை பிரிந்தது.. ஒன்றுக்கு வீட்டிற்கு செல்லும் பாதை… இன்னொன்று தோப்பு வீட்டிற்கு செல்லும் பாதை…

அர்ஜுன் “அத்தான் தோப்பு வீட்டுக்கே போங்க” என்று கூறினான்.. அவனும் தோப்பு வீட்டுக்கு ஜீப்பை செலுத்தினான்… அதை தொடர்ந்து வர்ணன் ஓட்டி வந்த காரும் பின்தொடர்ந்தது…

அர்ஜுனன் வீட்டிற்கு வருவான் என நினைத்த பாட்டி தற்போது அவன் தோப்பு வீட்டிற்கு சென்றதால் கவலை அடைந்தார்… இவர்கள் செல்லும் வரை அவன் வர மாட்டான் என தெரிந்துவிட்டது…..

இங்கு தோப்பு வீட்டில் சிறிய அறையில் அர்ஜுனும் சுபாவும் உறங்க செல்ல நந்தினியும் ஜனனியும் குழந்தைகளை தங்களுடன் அழைத்துக்கொண்டு பெரிய அறைக்குள் நுழைந்து விட்டனர்…

வாணனும் வர்ணனும் ஆளுக்கு ஒரு கயிற்று கட்டிலை எடுத்துவந்து ஹாலில் போட்டு படுத்தனர்…

அர்ஜுன் சுபா அறையில் அர்ஜுன் மறுத்தும் அவனின் கால்களை பிடித்துவிட்டு கொண்டு இருந்தாள் சுபா… அவளின் கண்களில் கவலைகள்…

“அம்மு ஏன் உன் முகம் வாட்டமா இருக்கு… சாமி என்ன சொல்லிச்சு…” என்று கேட்டான்..

அவள் உடனே தன் முகத்தை சீராக்கி கொண்டு “நல்லதா தான் மாமா சாமி சொல்லிச்சு.. தூக்கம் வருது அதுனால தான் முகம் அப்படி இருக்கு….” என்று கூறினாள்…

அவளை ஆழமாக பார்த்துவிட்டு “என்னோட தாரும்மாவுக்கு அவளோட மாமாகிட்ட பொய் சொல்லக்கூட தெரியுமா” என்ன என்று கேட்டான்….

அவனின் அந்த கேள்வியில் சுபாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…

அவளின் கண்ணீரை பார்த்து பதறிய அர்ஜுனன் அவளிடம் “டேய் தாரும்மா என்ன டா ஆச்சு… “என்று கொஞ்சம் படத்தமாகவே கேட்டான்…

“அஜ்ஜு மாமா” என்று கூறி நடந்தது அனைத்தையும் கூறினாள்… அதை கேட்டு அவனுக்கு ஒரு விஷயத்தை நினைத்து நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது…

“டேய் அம்மு அதுலாம் ஒன்னும் ஆகாது டா… எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிக்கலாம்.. இப்போ வா தூங்கு” என்று கூறி தட்டிக் குடுத்தான்…

அவளும் சிறிது நேரத்தில் உறங்கி இருந்தாள்… அவன் என்ன நடக்கும் என நினைத்துக்கொண்டே உடல் வலியில் தூங்கிவிட்டான்…

இருவரும் காலை பத்து மணிக்கு மேல் அர்ஜுனனின் அலைபேசி சத்தத்தில் கண் திறந்தனர்… வாணன் தான் அழைத்து இருந்தான்…

இவன் அழைப்பை ஏற்று “சொல்லுங்க அத்தான்” என்று கூறினான்…

“மாப்பிளை குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்… பத்து மணி மேல ஆகிடுச்சு… பாப்பா சாப்பிட்டு மாத்திரை போடணும்ல சீக்கிரம் வாங்க” என்று கூறி வைத்துவிட்டான்…

அவனும் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு மீண்டும் உறங்கிய சுபாவை எழுப்பி குளித்துவர கூறினான்… அவளும் வந்தவுடன் இருவரும் வெளியேறினர்

இருவருக்கும் நந்தினி பரிமாறினாள்… குழந்தைகளை ஜனனி பார்த்து கொண்டு இருந்தாள்… பின் பெண்கள் ஒரு ரூமில் ஐக்கியம் ஆகி விட்டனர் குழந்தைகளுடன்…

அர்ஜுன் வாணன் வர்ணன் மூவரும் தோப்பினுள் நடக்க தொடங்கினர்… வாணன் அர்ஜுனடியாம் “அர்ஜுன் பாப்பா சொன்னாளா??” என்று கேட்டான்

அவனும் ஆம் என தலையசைத்தான்… “அர்ஜுன் அந்த விஷயத்தை நினைக்காத பாப்பாக்கு தெரிஞ்சாலும் சமாளிச்சுக்கலாம்… உன் முகத்தை பார்த்து கண்டுபிடிச்சிடுவா.. அதனால எத பத்தியும் நினைக்காத” என்று கூறினான்..

வர்ணனும் அதுக்கு ஆமோதித்தான்…

அர்ஜுனன் “சரி அத்தான்” என்று கூறினான்…

வர்ணன் “எப்போ அந்த வீட்டுக்கு போவ அர்ஜுன்???” என்று கேட்டான்..

“தெரியல வர்ணா… ஆனா இப்ப அவங்க இருக்கறதுனால போகவே பிடிக்கல… ஒரு வாரம் இங்கயே இருக்கேன்… அதுக்கு அப்பறம் போறேன்” என்று கூறினான்…

“இல்ல அர்ஜுன் நீ போகனும் அங்க அவங்களுக்கு பயந்து இருக்குற மாதிரி இருக்கும் ரெண்டு நாள் கழிச்சி கூட போங்க ஆனா போகாம இருக்காதீங்க” என்று கூறினான்…

அவனும் “ஓகே அத்தான்” என்று கூறினான்…

மாலை வரை பேசிக் கொண்டு இருந்த சுபாவின் அண்ணன் குடும்பம் அதன் பின் அவர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டு அவர்கள் ஊருக்கு சென்றனர்… அய்யனார்புரத்தில் இருந்து பத்து நிமிட பயணத்தில் அவர்கள் ஊர் வந்துவிடும்…

இங்கு ஆரவ் ,  சிவனேஷ் கார்த்திகா சென்றவுடன் அவர்களை தேடி  கொண்டே இருந்தான்.. ஆரவ் இன்னும் தந்தையிடன் செல்லவில்லை… காலையில் இருந்து தன் மாமன்கள் அத்தைகளுடன் இருந்துவிட்டான்… சுபா அர்ஜுனன் இருவரும் அவனை பார்த்து கொண்டு தான் இருந்தனர்…

சுபாவுடனே சுற்றி கொண்டு இருந்தான்… தன் மாமனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆரவை அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றாள்.. அர்ஜுனன் அதை பார்த்தவாறே வெளியில் சென்று அங்கிருக்கும் கட்டிலில் படுத்து கொண்டான்…

இங்கு அறையில் “ஆரு குட்டி ஏன் அப்பா கிட்ட போக மாட்டிங்குறீங்க… அப்பாவ பார்த்து ஏன் பயபடுறிங்க … நம்ம அப்பா தானு… இப்ப பாரு நீ பேசலானு அப்பா சோகமா வெளிய போயிட்டாரு பாரு…” என்று கூறிக் கொண்டு இருந்தாள்…

“அம்மா அப்பா பயம்… ஆஆஆ கத்துனாரு… தம்பி பயம்… அப்பா போகல” என்று மழலை மொழியில் சொல்லி கொண்டு இருந்தான்…

“தம்பி அப்பாக்கு அப்ப நம்ம சாமி இருந்தாரு அதுனால கத்துனாரு…. இனிமே அப்படி கத்த மாட்டாரு… நீ குட் பாய்ல போ அப்பா கிட்ட பேசு” என்று கூறி அவனின் பயத்தை போக்கி அவனை அழைத்து கொண்டு வெளியே வந்தாள்…

தன் தகப்பனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் தாயை பார்த்தான்… அவள் போ என்று வாய் அசைத்து கூறினாள்…

அவன் கட்டிலில் அருகில் சென்று “ப்பா ப்பா தம்பி பாரு ப்பா” என்று அழைத்தான் அவன் பார்க்கவே இல்லை…

அவனே கட்டிலில் மேல் ஏறி அர்ஜுனனின் மேல் அமர்ந்து கண்ணை மறைத்து இருந்த கையை எடுத்துவிட்டு அவனின் கன்னத்தில் முத்தமிட்டு “ப்பா தம்பி வந்துட்டேன்… நீயும் உம்மா தா” என்று அவனின் கன்னத்தை காட்டினான்…

அர்ஜுனனும் அவனுக்கு முத்தமிட்டுவிட்டு “தம்பி அப்பாவை பார்த்தா பயமா இருக்கா” என்று கேட்டான்…

“ப்பா தம்பி லிட்டில் சிங்கம்… நோ பயம்” என்று கூறி அவனின் நெஞ்சில் படுத்து கொண்டான்….

தந்தை மகனின் பேச்சை ரசித்தவாறு நின்று இருந்தா சுபாவை தந்தை மகன் இருவரும் அழைக்க அவர்களுடன் சென்று விட்டாள் சந்தோசமாக….

இங்கு இப்படி இருக்க … அங்கு அர்ஜுனனின் வீட்டில் கிரிஜா கடந்த காலத்தில் தான் மறைத்த விசயத்தை நினைத்து பயந்து போய் அமர்ந்து இருந்தாள்…

தான் செய்த வேலை தெரிந்தால் அவ்வளவு தான்… கடவுளே யாருக்கும் தெரிய கூடாது யாருக்கும் தெரியக்கூடாது என அனைத்து கடவுளிடமும் வேண்டிக் கொண்டு இருந்தார் அவர்…

அவரின் வேண்டுதல் கேட்காதது போல் அடுத்த ஒரு வாரத்தில் நடந்தது…. அந்த நிகழ்வால் பாலா கிரிஜாவினை ஓங்கி அறைந்து இருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!