Skip to content
Post Views: 5,231
உன் காதல் ஒரு வரமாய்…..20
அமிர்தா கண்விழிக்கும் போது அவளின் எதிரில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான் சிவா.மெல்ல விழிகளை சுழல விட பக்கத்தில் ஒரு போர்வையில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.அமிர்தா மெல்ல எழுவதைக் கண்ட சிவா,
“எத்தனை நாள் இந்த பழக்கம்….”என்று கேட்க,அவளோ இவன் எதைக் கேட்கிறான் என்று புரியாது திருதிருவென முழிக்க,
“என்ன புரியலையா….இதோ இது….”என்று ஒரு மாத்திரை அட்டையை காட்ட,அதைக் கண்டவளின் முகத்தில் எந்த அதிர்வும் இல்லை அதை வாங்கி வைத்தவள்,
Advertisement
“நான் ஒண்ணும் அவ்வளவு கோழை எல்லாம் இல்லை….”என்றவள் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர,திவ்யாவும் அவளின் கணவனும் வந்திருந்தனர்.
“என்னம்மா இப்ப எப்படி இருக்கு உடம்பு….”என்று கேட்க,
“அவளுக்கு என்ன நல்லா தான இருக்கா….பார்த்தா தெரியலை….”என்று நக்கலாக திவ்யா கூற,
Advertisement
“ஆமா நான் நல்லாதான் இருக்கேன்….”என்று அமிர்தாவும் பதில் கொடுக்க,
Advertisement
“சபாஷ் சரியான போட்டி….இப்ப தான் என் மனசே குளிர்ந்திருக்கு….”என்றான் திவ்யாவின் கணவன் கௌதம்.திவ்யா அவனை முறைத்துக் கொண்டு அடிக்க கைவோங்க,
“சீனியர் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா….”என்று சிவா அயர்ந்து கூற,
“சரிடா நல்லவனே உன் உடன்பிறப்பை நான் எதுவும் சொல்லலை….”என்று சரண்டர் ஆக,
Advertisement
“இப்ப புரிஞ்சுதா….அவனுக்கு நான் யாருனு…..நீ பேசினதுக்கு உன்னை கொன்னே போட்டிருப்பேன்….”என்று திவ்யா அகங்காரமாக கூற,
“கொல்லுங்க….”என்ற அமிர்தா தன் சமையல் கட்டிற்கு செல்ல,
“சாப்பாடு இங்க இருக்கு…..வந்து சாப்பிடு….”என்று சிவா கூற,பதிலேதும் கூறாமல் அவன் நீட்டிய பார்சலை வாங்கிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.அவளிற்கு முதலில் உடலில் வலுவில்லை பேசவே தெம்பு வேண்டும் என்பது போல இருக்க வாதம் புரியவில்லை.அமிர்தா அமைதியாக உண்ண அமர,
“பார்த்தியா இவ எப்படி பேசுறானு….”என்று திவ்யா குறைப்பட,
“நீயும் சாப்பிடு அப்புறம் சண்டை போடு….”என்றுவிட்டு சிவா கௌதமிடம்,
“சீனியர் வாங்க சாப்பிடலாம்….பசிக்குது….”என்று கூற,
“இங்க நான் பேசிக்கிட்டு இருக்கேன்…இவன் என்ன பண்றான் பாருங்க….”என்று திவ்யா கௌதமை அழைக்க,
“திவ்யா…..”என்ற ஒற்றை வார்த்தையில் அவள் அமைதியாகி விட்டது மட்டுமல்லாமல் சாப்பாட்டை பிரித்து உண்ணத் தொடங்க,அதுவரை இங்கு என்ன நடந்தால் எனக்கு என்ன எனக்கு சாப்பாடு தான் முக்கியம் என்ற ரீதியில் சாப்பிட்டு கொண்டிருந்த அமிர்தா நிமிர்ந்து கௌதமை பார்க்க,
“நீ கண்டுக்காதமா….அவ இப்படி தான் கொஞ்சம்…ம்ஹம் கொஞ்சம் ஜாஸ்தியாவே உணர்ச்சி வசப்படுவா….அதுவும் இவன் விஷயம்னா கேட்கவே வேண்டாம்…..”என்று எடுத்துரைக்க,
“இதெல்லாம் இவ கிட்ட சொல்லனுமா….”என்று திவ்யா அமிர்தாவை முறைத்துக் கொண்டு கூற,
“சொன்னா தான் தெரியும்…..என்கிட்ட இவருக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு குருக்கள் மனைவி தான் சொன்னாங்க….நான் பார்த்தபோது நீங்க இரண்டு பேரும் தான் நின்னுக்கிட்டு இருந்தீங்க…..”என்று அமிர்தா கூற,
“ஓ….பக்கத்துல நின்னா நாங்க….”
“திவ்யா…இப்ப நீ வாயை மூடிக்கிட்டு சாப்பிட போறியா இல்லையா….”என்று கௌதம் அதட்டல் போட அதன் பின் திவ்யாவின் குரல் கேட்கவில்லை.
“என்னமா இது….நீ….”என்று கௌதமிற்கே சற்று கஷ்டமாக போனது.இதனால் தானே இன்றளவும் அவனின் வீட்டில் அவர்களை இன்னும் சேர்க்கவில்லை.ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தவன் மனைவியின் மனது இப்போது எப்படி இருக்கும் என்று அறிந்தவனாக,
“சிவா நாம கிளம்பலாம்….நேரமாச்சி…..நாளைக்கு பேசிக்கலாம்….”என்று கூற சிவா எதுவும் கூறவில்லை,
“திவ்யா சாப்பிட்டு கிளம்பு….”என்றவன் அமிர்தாவின் புறம் திரும்பி,
“நீ நினைச்சது தப்புமா….இது…நா….”என்று அவன் கூற முடியாமல் தடுமாற,
“நீங்க சொல்ல வேண்டாம் எனக்கு புரியுது எங்கோ தப்பு நடந்திருக்கு….நானும் தப்பு பண்ணியிருக்கேன்….ஆனா முழுசா நான் தப்பு பண்ணலை…..அது ஏன்னா நான் தான் இவருக்கு யாரும் இல்லையே….அப்புறம் எனக்கு எப்படி தெரியும்….”என்று அமிர்தா கூறிவிட்டு எழுந்து கை கழுவ சென்றுவிட,திவ்யாவும்,கௌதமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அமிர்தாவிடம் அத்தனை பத்திரம் சொல்ல ஆனாலும் சிவாவிற்கு அவளை தனியாக விட மனமில்லை போல அதனால்,
“ஒழுங்கா இரு….எதையும் யோசிக்காத….நா….நான் உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசலாம் தான் வந்தேன்….முக்கியமா நம்மளை பத்தி…..உனக்கு புரியுதா….நான் என்ன சொல்லவரேன்னு….”என்றவன் விழிகள் முழுவதும் அவளிடம் தான்.
“புரியுது….ஆனா என்ன திடீர்னு…..அதான் புரியலை….”
“திடீர்னு எல்லாம் இல்லை….இதுக்கு தான் ரொம்ப நாளா வெயிட் பண்ணுறேன்….”என்று மேலும் கூற முடியாமல் சுற்றி பார்க்க,அமிர்தாவிற்கு புரிந்தது அவன் தன்னிடம் தனியாக கூற விழைகிறான் என்று.
“பராவாயில்லை நீங்க எனக்கு சொல்லனும்னு அவசியமும் இல்லை….அதனால கிளம்புங்க….”என்று வாசலைக் காட்டிவிட,
“ஏய் என்ன நினைச்சிக்கிட்டு இருக்க….உன்னை ரொம்ப விரும்புறான் அதனால தான் நான் ரொம்ப என்னை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன்…..இல்ல நடக்குறதே வேற…..”என்று திவ்யா எகிற,அவளை அமைதியாக பார்த்த அமிர்தா,
“நீங்க உங்களை கண்ட்ரோலே பண்ண வேண்டாம்….எனக்கு உங்க பிரண்டை சுத்தமா பிடிக்கலை கிளம்புங்க….”என்றுவிட,திவ்யாவின் முகம் கருத்துவிட அவள் மேலும் பேசுமுன்,
“திவ்யா….”என்று கூப்பிட,
“பேசல சாமி பேசல…..என்னை அடக்குறதுலே இருங்க….”என்றுவிட்டு குழந்தையின் பக்கத்தில் அமர்ந்துவிட்டாள்.அமிர்தாவிற்கு இவர்களின் உறவுமுறை முழுதாக புரியவில்லை என்றாலும் திவ்யா சிவாவின் வைத்திருக்கும் அன்பு அலப்பரியாததது என்று மட்டும் புரிந்தது.
“இப்ப கிளம்புறேன் திரும்பியும் வருவேன்…..”என்று சிவா கூற,
“வராதீங்க…..எதுக்கு வரனும் என்னை பார்க்கனும்….எனக்கு உங்களை பார்க்க வேண்டாம்….கிளம்புங்க….”என்றுவிட,
“என்னம்மா நீ….அவனும் என்ன தான் சொல்லுறான்னு கேளேன்….”என்று கௌதம் ஆத்தமாட்டாமல் கேட்டுவிட,
“கேட்க வேண்டாம்….எனக்கு எதுவும் வேண்டாம்….”என்று காதை பொத்திக் கொண்டு கூற,அவளின் அருகே வந்தவன் அவளின் கைகளை எடுத்துவிட்டு,
“கண்டிப்பா வருவேன்….அதனால ஒழுங்கா தூங்கு….இதெல்லாம் வேண்டாம்….”என்று தன் கையில் வைத்திருந்த மாத்திரை அட்டை எடுத்துக் காட்ட,
“அதான் முன்னவே சொல்லிட்டேனே….நான் கோழையில்லனு….”என்று கூற,
“அப்புறம் எதுக்குடீ….தூக்கமாத்திரை சாப்பிட்ட….”என்று பல்லிடுக்கில் சிவா கேட்க,
“எனக்கு ரொம்ப மனவுளைச்சல் ஏற்பட்டா சாப்பிட சொல்லி என்னோட டாக்டர் தான் கொடுத்திருந்தாங்க…..”என்று கூற சிவா அதிர்ந்துவிட்டான்.
“அப்படி என்ன மனவுளைச்சல் உனக்கு…..”என்று கேட்க,
“நீங்க தான் என் மனவுளைச்சல்….நீங்க தான்….போதுமா….”என்று கத்த,கௌதமும்,திவ்யாவுமே அவளின் இந்த பரிமாணத்தில் பயந்து தான் விட்டடனர்.சிவா சிலையாக நிற்க,
“டேய்….சிவா….”என்று கௌதம் அவனின் தோள்களை தொட,
“சீனியர் இவ என்ன சொல்லுறா….எனக்கு புரியலை….”என்று தொண்டை அடைத்தவுணர்வுடன் அவன் கூற,
“அவங்க கிட்ட எதுக்கு கேட்குறீங்க….என் கிட்ட கேளுங்க….”என்ற அமிர்தா இதுவரை தன் மனதில் அடைத்து வைத்திருந்த அத்தனையும் கொட்டிவிட,கேட்ட அனைவருமே சம்பித்து தான் போயினர்.அவர்கள் வேறு ஒன்று நினைத்திருக்க ஆனால் நடந்தது வேறு ஒன்று.
“என்னடா பண்ணிவச்சிருக்க நீ….”என்று திவ்யா அவனை விட்டால் கொலை செய்துவிடுபவள் போல முறைத்துக் கொண்டு நின்றபடி கேட்க,
“திவி இரு….இருடா…அவனே உடைஞ்சி போயிருக்கான்….”என்ற கௌதம்,சிலையாக நின்ற சிவாவை தன் தோள்களுக்குள் அனைத்துக் கொண்டு,
“ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லடா…நான் பேசுறேன்….”என்ற கூற,
“நா…நான்….எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது சீனியர்….என் மனசை இவ கிட்ட சொல்லி அவ படிப்பு வீணாப்போகக்கூடாதுனு தான் நினைச்சேன்….அதனால தான் அவளை அதட்டி படிக்க வச்சேன்….அதையும் மீறி அவ என்னை பார்த்தா எனக்கு புரிஞ்சிது அவ என்னை விரும்ப தொடங்கிட்டானு இருந்தும் படிப்பு கெடக்கூடாது தான் அவளை விட்டு ஒதுக்குனேன்….இவ….இவ….இப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியாது….”என்று சிவா உடைந்துவிட,அமிர்தாவின் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது.எத்தனை நாள் இந்த வார்த்தைகளை கேட்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டியிருக்கிறாள் ஆனால் இன்று அவனாக தன் மனதை கூறியும் அவள் சிலையாக நிற்க வைத்துவிட்டதே விதி என்று நொந்து கொண்டாள்.
வீடு திரும்பி கொண்டிருந்தனர் கௌதம்,திவ்யா தம்பதியனர்.பின் இருக்கையில் முழுவதும் உடைந்த நிலையில் அமர்ந்திருந்தான் சிவா.கார் கண்ணாடியின் வழியே அவனை பார்த்துக் கொண்டிருந்த கௌதமிற்கும்,திவ்யாவிற்கும் அத்தனை கஷ்டமாக இருந்தது.பெயருக்கு தானே அவன் சீனியர் மற்றபடி அவனிற்கே வழிகாட்டியாக இருந்தவன் சிவா தான்.
ஆம் மேஜர் ராஜவேலு ஒருமுறை தன் மகளுடன் ஒரு அனாதை ஆசிரமத்துக்கு சென்றிருந்த போது தான் சிவாவை கண்டது.துடிப்புடன் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்த சிறுவனை ராஜவேலுவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.தன்னால் முடிந்த உதவிகள் செய்ய ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆசரமத்திற்கு செல்வது வழக்கம் இந்த முறை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு வந்திருக்க,அங்கு தான் சிவாவை பார்த்தது.பார்த்தமாத்திரத்தில் அவருக்கு பிடித்துவிட,
“என்கூட வரியா….”என்று கேட்டுவிட்டார்.திவ்யாவிற்கு தந்தையா பேசியது என்று தான் பார்த்து நின்றாள்.அவர் எப்போதும் அனைவரிடமும் கோப முகம் தான் காட்டி பழக்கம் தாயின் இறப்பிற்கு பின் இன்னுமே இறுகி தான் போனார்.திவ்யாவிற்கு சின்ன வயதிலிருந்தே தந்தையை பற்றி தெரியும் என்பதால் அவளிற்கு அவரின் கண்டிப்பு எல்லாம் பழகிய ஒன்று தான்.அதோட அவளிடம் கண்டிப்புடன் இருந்தாலும் தன் மீது அதீத பிரியம் தன் தந்தைக்கு உண்டு என்றும் உணர்ந்தவள்.
“எதுக்கு உங்க கூட வரனும்….”என்று ஏழு வயது சிவா கேட்க,
“எதுக்கு???ம்ம்….உன்னை பிடிச்சிருக்கு அதனால தான்….”
“அப்ப இவங்களை எல்லாம் பிடிக்காதா….”என்று தன்னுடன் இருக்கும் மற்ற பிள்ளைகளை காட்டி அவன் கேட்க,ராஜவேலுவிற்கு அவனின் பதிலில் இன்னும் இன்னும் பிடித்தது.
“எல்லாரையும் பிடிக்கும்டா உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு அதான்…..”என்று கேட்க,
“ஏன் என்னை மட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு….”என்று அவன் அடுத்த கேள்வியை தொடுக்க,
“அடேய்….இப்படி கேள்வியா கேட்டுட்டு இருந்தா நான் என்ன பதில் சொல்ல….”என்று முதல் முறை ராஜவேலு ஒருவனிடம் தடுமாறி நின்றார் என்றால் அது சிவாவிடம் தான்.
“அதை நான் சொல்லுறேன்…..அதுக்கு நீ என்கூட வரனும்….ஓகே….”என்று தன் கைகளை நீட்டினாள் திவ்யா.ராஜவேலுவுடன் கேட்ட கேள்விகளை அவளிடம் கேட்கவில்லை கேட்க தோணவுமில்லை தன்னிடம் முதன் முதல் நீட்டப்பட்ட நட்பு கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டான் சிவா.இப்படி தான் சிவா எனபவன் திவ்யாவின் வாழ்வில் வந்தது.இருவரும் சம வயதுடையவர்கள் தான் என்பதால் நல்ல நண்பர்களாகி போயினர்.சில நேரங்களில் அவனிற்கு அவள் அன்னை என்றால் பல நேரங்களில் அவன் அவளிற்கு அன்னையாகி போவான்.
ராஜவேலு சிவாவை முறைப்படி தத்தெடுத்து கொண்டார்.இருவருக்கும் சம்மான முறையில் தான் அனைத்தும் செய்வார்.சிவா இவர்களின் வாழ்வில் வந்த பிறகு ராஜவேலுவின் குடும்பத்தாருக்கு பிடிக்காமல் போக அவர்கள் அவனை ஜாடையாக பேசுவதைக் கண்டவர் தனியாக வீடு பார்த்து வந்துவிட்டார்.அதோடு தன் குடும்பத்தாருடான உறவை முறித்துக் கொண்டார்.
சிவாவும்,திவ்யாவும் ஒரே பள்ளி,கல்லூரியில் தான் படித்தனர்.அவர்கள் கல்லூரி படிக்கும் போது பழக்கமானவன் தான் கௌதம்.கௌதம் ராமன் குழும்பத்தின் ஒற்றை வாரிசு.அரிசி ஆலை மற்றும் சூப்பர் மார்கெட் இது தான் இவர்களின் தொழில் சென்னை எங்கும் பல கிளைகள் உள்ளது.பணத்திலே பிறந்து பணத்திலே வளர்ந்தவன் கௌதம்.ஆனால் அவனிடம் அந்த கர்வம் என்பது என்றும் இருந்ததில்லை.எப்போதும் துருதுருவென இருக்கும் திவ்யாவை கௌதம் காதலித்து கைப்பிடித்தான்.அதுவும் பெற்றோர்களை எதிர்த்து அவர்களை விட்டு விலகி தான் திருமணம் செய்தான்.அவர்களின் எதிர்ப்புக்கு சிவா,திவ்யாவின் நட்பும் ஒரு காரணம்.ஆனால் கௌதமை பொறுத்தவரை சிவா என்பவன் திவ்யாவின் அன்னையாக தான் தெரிவான்.ராஜவேலு இப்போது உலகில் இல்லை என்றாலும் திவ்யாவிற்கு அன்னையாகவும்,தந்தையாகவும் இருப்பது சிவா தான்.
“சீனியர்…..”என்ற சிவாவின் குரலில் நிகழ்வுக்கு வந்த கௌதம்.
“வீடு வந்திடுச்சு….இறங்குங்க….”
“என்ன கனவா….இறங்குங்க பாஸ்….”என்ற திவ்யா கௌதமின் கைகளில் உறங்கிக் கொண்டிருந்த மகனை வாங்கிக் கொண்டு முன்னே செல்ல,
“என்னாச்சு சீனியர்….ஆர் யூ ஓகே….”என்ற சிவாவின் குரலே கரகரத்து தான் வந்தது.எப்போதும் துடிப்புடன் தான் பேசுபவன் இன்று முற்றிலும் உடைந்திருப்பதை பார்த்து தாள முடியவில்லை அவனிற்கு.
“டேய்….நீ டென்ஷன் ஆகாத….நான் பேசுறேன் அமிர்தா கிட்ட….”
“எதுக்கு நீங்க பேசனும்…..அதெல்லாம் நான் பேசிக்கிறேன்….இன்னும் இரண்டு நாள்ல உங்களுக்கு பிளைட்….போய் மூட்டை கட்டுற வேலையை பாருங்க….”
“சிவா பேக் டூத பார்ம்…..என்ன பண்ண போற….”
“ம்ம்….பேசிப்பார்ப்பேன் இல்லை தூக்கிட வேண்டியது தான்…..என்று கண்களை அடித்து சிரித்துக் கொண்டே கூற,
“அடப்பாவி நீ செய்வடா….செய்வ….”
“ஆனா அவ உன்னை கொன்னுட்டு தான் மறுவேலை பார்ப்பா….”என்று திவ்யாவின் குரல் பின்னிருந்து வர,
“டேய் மகனே சகுணமே சரியில்லை பார்த்துக்கோ….”என்ற கௌதமை திவ்யா துரத்திக் கொண்டு ஓட,அதை பார்த்து சிரித்துக் கொண்டே தனது பேசியை எடுத்தவன்,அமிர்தாவிற்கு அழைக்க அவளோ அவனின் அழைப்பை துண்டித்தாள்.சிரித்தவன் அவளின் எண்ணிற்கு,
“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை விட்டுவிடுவதுமில்லை…..உன்னை தொடரும் நிழல் நான்….”
error: Content is protected !!