Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்…..21

உன் காதல் ஒரு வரமாய்….21

சிவா அந்த காபி ஷாப்பின் உள் நுழையும் போதே அமிர்தா அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டான்.தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.

“என்ன கப்பல் கவுந்துடுச்சா….”என்று கேட்டபடியே அவளின் முன் அமர,அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் அதே போல அமர்ந்து கொள்ள,

“கேட்டா பதில் சொல்லனும் அமிர்தா….”என்றவனின் குரலில் பழைய கண்டிப்பு,



Advertisement

“சரியான கடுவான்….”என்று அமிர்தாவின் உதடு முணுமுணுக்க,

“என்னமா பண்ண நான் உன்கிட்ட ஹீரோவாக தான் டிரை பண்ணுறேன் ஆனா  நீ தான் என்னை கடுவானா மாத்துற….”என்று அதற்கும் அவளை கேலி செய்ய,

“ப்ச்….உங்களுக்கு என்ன தான் பிரச்சனை…ஏன் என்னை படுத்துறீங்க…..”என்று அமிர்தாவின் குரலில் ஏகத்தும் கோபமும் விரக்தியும் தான் இருந்தது.சற்று நேரம் அமைதி மட்டுமே இருவரிடமும் சிவா எதுவும் பேசவில்லை ஆனால் அவளை தான் ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தான்.முகத்தில் முன்பிருந்த குழந்தை தனம் இல்லை அப்போதெல்லாம் ஏனோ தானோவென்று தான் உடை அணிந்திருப்பாள் இன்று நேர்த்தியாக இருந்தாள்.முகத்தில் தெளிவுடன் கூடிய தன்னம்பிக்கை அவளை இன்னும் பேரழகியாக காட்டியது.அமிர்தாவிற்கு அவனின் பார்வை ஒருவித கூச்சத்தை தந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

Advertisement

“ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்காத….பார்த்தாலே தெரியுது நீ பயப்படுறனு…..”என்றவன்,

Advertisement

“சரி விடு….முதல்ல ஒரு காபி குடிப்போம் அப்புறம் பேச்சை ஆரம்பிக்கலாம்….”என்று கூற,

“இல்லை எனக்கு வேணாம்….நான் வந்தவுடனே சாப்பிட்டேன்….நீங்க சாப்பிடுங்க….”என்றுவிட அப்போது தான் சிவாவும் அவர்கள் அமர்ந்திருந்த டேபிலை பார்த்தான் ஒரு காபி கோப்பை காலியாகியிருந்தது.

“நான் வரத்துக்குள்ள ஏன் குடிச்ச….”என்று அவன் குறைப்பட்டுக் கொண்டே தனக்கு ஒன்றை ஆடர் செய்ய,

Advertisement

“சீக்கிரம் என்ன விஷயம்னு சொல்லுங்க எனக்கு வேலையிருக்கு…..”என்று கூற,

“இது  இது தான் உன்னோட பிரச்சனை….அன்னைக்கே நான் சொன்னதை கொஞ்சம் பொறுமையா கேட்டிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது…..நான் அன்னைக்கு உன்னை கூப்பிட்டதே திவ்யாவை உனக்கு அறிமுக படுத்த தான் ஆனா அன்னைக்கு நீ என்னை பேசவே விடலை….இதோ இப்பவும் பேசவிடமாட்டேங்குற…..முதல்ல என்னை பேசவிடு அப்புறம் உன் முடிவை சொல்லு…..”

“சொல்லுங்க…..என்ன சொல்லனும்….”என்றவளை ஆழமாக பார்த்தான் சிவா.புரிந்தது அவள் தனக்கான முடிவை எடுத்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்றும் அது கண்டிப்பாக தனக்கு சாதகமானது இல்லை என்றும் புரிந்தது.

“அமிர்தா….நான் சொல்லுறதை கொஞ்சம் கேளு….உன்னை எனக்கு சின்ன வயசுலேந்தே தெரியும் எப்போதும் உன் அம்மா கூட கை பிடிச்சிகிட்டு கோவிலுக்கு விளக்கு போட வருவ….அப்போவே உன் மேல ஏதோ ஒரு ஈர்ப்பு ஆனா அது காதலா மாறும்னு எல்லாம் நான் அப்ப எதிர்ப்பார்க்கல…..அது காதலா மாறுனப்ப தான் நான் ஒன்னை உணர்ந்தேன் அது இந்த காதல் எல்லாம் நான் முதல்ல நல்லபடியா வாழ்க்கையில செட்டில் ஆன பிறகு தான்னு முடிவு பண்ணேன் அதனால தான் நான் ஒதுங்கியே இருந்தேன்….”என்றவன் சற்று நேரம் இடைவெளிவிட்டு அவளை நிமிர்ந்து பார்க்க அவளின் முகத்தில் எந்த மாறுபாடும் இல்லை கதை கேட்கும் விதமான முகபாவனை.சிவாவின் மனது வலித்தது இருந்தும் தொடர்ந்தான்,

“ஆனா எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு மாதிரி நீயா என்கிட்ட வந்த எனக்கு கொஞ்சம் பயம் எங்க என்னையே அறியாம உன்கிட்ட என் காதலை சொல்லிடுவேனோனு அதனால தான் உன்னை தள்ளி நிறுத்தினேன்….அதையும் மீறி நீ என்னை விரும்ப தொடங்குன….எனக்கு புரிஞ்சிது அதோட இதனால நீ படிப்பை கவனிக்க மாட்டியோனு தான் நான் உன்னை இன்னும் தள்ளி நிறுத்துனேன்….நம்ம இரண்டுபேருக்குமே வேலைன்றது ரொம்ப அத்தியாவசியமான ஒண்ணு அதனால தான் நான் விலகி நின்னேன்….ஆனா நீ இப்படி என்காக தவிச்சு போயிருப்பேனு நினைக்கலை….தப்பு தான் மன்னிச்சிடு……”என்று கூறிவிட்டு அவளை பார்க்க,

“சொல்லி முடிச்சிட்டீங்களா….இதுக்கு என்னோட பதில் வேண்டாம்….நீங்களும் உங்க காதலும் இரண்டுமே வேண்டாம்….நான் ரொம்ப கஷ்ட்டப்பட்டேன் இது…இந்த காதலால நான் நானா இல்லை என்னையே சோதிச்சிக்கிட்டு அதனால கஷ்ட்டப்பட்டு பைத்தியமாகி…..”என்றவள் தலையை பிடிக்க,அவளின் முன் காபி கோப்பையை நகர்த்தி வைத்தான்.

“எடுத்துக்க…உனக்கு சேர்த்து தான் ஆடர் பண்ணேன்….”என்று கூற,அமிர்தாவிற்கும் இப்போது தேவையாக இருப்பதால் எதுவும் கூறாமல் எடுத்துக் கொண்டாள்.இருவரும் அமைதியாக பருகினர் எதுவும் பேசவில்லை.

“ம்க்கும்….நான் எனக்கு இப்ப எதுவும் இல்லை…..அதனால என்னை தொந்திரவு பண்ணாதீங்க….ப்ளீஸ்….”என்றுவிட்டு எழ,

“ம்ம்…சரி நாம காதலிக்க வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாம்….”என்று சிவா சாவகாசமாக கேட்க,அமிர்தா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“என்ன இவன் லூசானு நினைக்கிறியா….”

“இல்ல ரொம்ப புத்திசாலி….வார்த்தைகளை ரொம்ப கவனமா தான் உபயோக்கிறீங்க…..ஆனா எனக்கு கல்யாணத்திலேயும் விருப்பமில்லை….”என்றவள் தனது கை பை எடுத்துக் கொண்டு நடக்க,அவளுடன் சேர்ந்து கொண்ட அவனும்,

“சரி வேண்டாம் அப்ப நாம ஒண்ணா இருக்கலாம்….”என்று கேட்ட நொடி அவனை பார்த்து முறைத்தவள்,

“உங்களுக்கு என்ன பைத்தியமா….நான் தான் நீங்க வேண்டாம்னு சொல்லுறேன் தான….அப்புறம் எதுக்கு என்னை படுத்துறீங்க….”

“கத்தாத அமிர்தா….நான் எப்பவும் உன்கூட தான் இருப்பேன்…ஒண்ணு சேர்ந்து இல்லைனா விலகி….அதாவது தூரமா….ஆனா உன்னை விட்டுட்டு எல்லாம் நான் போகமாட்டேன்….”

“ஓஓ….நீங்க என்கூடவே இருந்தீங்க….அப்படி தான அப்ப இத்தனை நாள் எங்க இருந்தீங்க….”

“விலகி இருந்தேன் அதுவும் உன் நல்லதுக்காக தான்….கொஞ்சம் பொறுமையா யோசி உனக்கே புரியும்….நான் செஞ்ச ஒரே தப்பு உன்னை வதைச்சது தான்…அதுவும் என்னை அறியாம தான் நடந்துச்சு….அதுலேயும் நீ தான் உன்னை தேவையில்லாம வதைச்சிருக்க….நான் உன் கவனம் படிப்புல மட்டும் தான் இருக்கனும் சொன்னேன் நீ தான் தவற விட்டுருக்க…”என்று கூறவும் அமிர்தா அந்த இடத்தை விட்டு வேகமாக சென்றுவிட்டாள்.அவனிற்கு புரிந்தது தான் அவளை காயப்படுத்திவிட்டோம் என்று இருந்தும் அது தானே உண்மை என்று நினைத்தவன் இனி என்ன செய்து அவளை சரி செய்வது என்று தன்னையே திட்டிக் கொண்டு அவளின் பின்னே சென்றான்.

அமிர்தா வீட்டிற்கு வந்து கடவடைத்துக் கொண்டாள்.மனதில் பெரும் அலையாக சுனாமி உருவாக அதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை.எளிதாக கூறிவிட்டான் நீ தான் உனது நிலைக்கு காரணம் என்று ஆனால் அதை ஏற்க தான் அவளால் முடியவில்லை.எப்போதும் போல் தன் அன்னையின் புகைப்படத்தை கட்டிக் கொண்டு படுக்கையில் விழுந்துவிட்டாள்.அடுத்த இருபது நிமிடம் கடந்து வீட்டின் கதவு தட்டப்பட கதவை திறக்கும் எண்ணமில்லாமல் படுத்துக்கிடந்தவளின் செவிகளில்,

“அமிர்தா…கதவை திற….”என்று சிவாவின் குரல் கேட்க,வேகமாக எழுந்து கதவை திறக்க,

“ஏய்….சாரி….நான் உன்னை காயப்படுத்தனும் சொல்ல….”

“விடுங்க….நான் அதை பத்தி பேச விரும்பல….என்னை தொந்தரவு செய்யாதீங்க…..”என்று கெஞ்சுவது போல அவள் கேட்க,சிவா கலங்கி நின்றான்.

“அம்மு….முடியாதுடீ….நான்….எனக்கு ஒரு வாய்ப்பு கொடேன்….”என்று கேட்க,

“இல்ல என்னால முடியாது….எனக்கு பயமா இருக்கு….நான் கண்டிப்பா உங்களை காயப்படுத்துவேன்….வேண்டாம்….விட்டுடுங்க….”என்றுவிட சிவா எதுவும் கூறாமல் வெளி சென்று,

“என்னாலையும் முடியாது அம்மு….என்னை மன்னிச்சிடு….”என்று விட்டு வெளியேறிவிட அமிர்தா தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

“இவனை தானே காதலித்தாய்….இவன் தான் உலகம் என்று நம்பினாய் பிறகு ஏன் வேண்டாம் என்கிறாய்…..”என்று மனம் கூற,

“இத்தனை நாள் நீ தவித்த தவிப்பிர்க்கு இவன் காரணமில்லையா…..இவனால் தானே எல்லாம்….”என்று ஒரு மனம் கூற,

“இது அனைத்திற்கும் காரணம் நீ மட்டும் தான்….நீ ஒருவளே காரணம் இதில் மற்றவர்களை கூறாதே…..என்று ஓங்கி குரல் கொடுத்தது மூளை,அமிர்தாவிற்கு புரிகிறது தன்னால் தனக்கு இத்தனை இன்னல்கள் என்று ஆனால் சிவாவை பார்த்த நிமிடத்திலிருந்து அனைத்திற்கும் காரணமாக அவனை பார்க்கிறேன் என்று நினைத்தவள்.இனி அவனை பார்க்கவோ நினைக்கவோ வேண்டாம் என்ற முடிவில் இருக்க அவனோ இவளை எப்படி தன் வழிக்கு கொண்டுவரலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை அமிர்தா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் திவ்யாவும்,கௌதமும் வந்தனர்.

“என்னமா இப்ப உடம்பு நல்லாயிருக்கா…..”என்று கௌதம் கேட்க,தலையாட்டல் மட்டுமே அமிர்தாவிடம் இருந்து வந்தது.

“சரி நாங்க ஊருக்கு கிளம்புறோம் அதான் உன்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்….”என்ற திவ்யா அமிர்தாவின் அருகில் வந்து அவளின் கைகளை பற்றிக் கொண்டு,

“அவன் தான் எனக்கு எல்லாம்…..அவனை நோகடிக்காத….சாரி உன்கிட்ட ரொம்ப ரூடா நடந்துகிட்டதுக்கு…..”என்று கூற,அமிர்தா எதுவும் கூறவில்லை அமைதியாக இருக்க,

“அதெல்லாம் அவ தப்பா எடுத்துக்க மாட்டா….திவி….நீ கவலைப்படாத….”என்றபடி உள்ளே வந்த சிவா அமிர்தாவை பார்த்து கண்களை சிமிட்ட,அதுவரை அமைதியாக இருந்த அமிர்தா வெடுக்கென்று திவ்யாவின் கைகளை உதறிவிட,

“டேய் உன்னாலே அவ உன்னை வேணாம் சொல்லப்போறா….எருமை…..”என்று அவனின் தோள்களில் அத்தனை அடி அடிக்க,

“விடு திவி….”என்ற கௌதமிடம் திரும்பியவள்,

“உங்களுக்கு என்ன தெரியும் அன்னைக்கு சூப்பர் மாக்கெட்லேயே என்கிட்ட சீக்கிரம் எனக்கு கல்யாணம் பண்ணி வைனு சொல்லி அடி வாங்கினான்….”என்றவள் அமிர்தாவிடம் திரும்பி,

“அதுமட்டுமில்ல அவன் இன்னும் என்ன எல்லாம் செஞ்சிருக்கான் தெரியுமா…..”என்றவளின் வாயை கை கொண்டு மூடிய சிவா,

“சீனியர்….இவளை முதல்ல தூக்கிட்டு போங்க நான் வரேன்….”என்று சிவா கத்த,திவ்யாவை திமிற தூக்கி தான் சென்றான் கௌதம்.போகும் முன்,

“அடேய் நல்லவனே எனக்கு பிளைட்க்கு டையம் ஆகுது….சீக்கிரம் வா….”என்று கூறிவிட்டே சென்றான்.

“ம்ம்…அம்மு பாப்பா…எப்படி இருக்க….”என்று அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டுக் கொண்டே கேட்டான்.வேலைக்கு செல்ல தயாராகி இருந்தாள் நீல நிற காட்டன் சுடிதார் அவளிற்கு பொருத்தமாக இருந்தது.

“ரொம்ப அழகா இருக்க….”என்று கூற,அவனை முறைத்து பார்த்தவள்,

“கிளம்புங்க எனக்கு வேலைக்கு நேரமாகிட்டு….”

“சரி எப்ப கல்யாணத்துக்கு ஓகே சொல்லப்போற….”என்று கேட்க,

“அப்படி ஒண்ணு நடக்க போறதில்லை…..”

“நடக்கும் கண்டிப்பா நடக்கும்….”என்றவனின் உறுதியில் அமிர்தா பல்லை கடித்து பார்க்க,

“கோபப்படாத அம்மு….”

“அம்மு சொல்லாதீங்க எரிச்சலா இருக்கு கிளம்புங்க ப்ளீஸ்….”

“சரி சரி இப்ப எனக்கும் நேரமில்லை அதனால கிளம்புறேன்….ஆனா உன்னை விட்டு எல்லாம் போகறதா இல்லை…..அதனால உன் மனசை மாத்திக்க முயற்சி பண்ணு…..”என்று கூறியவனின் முகத்திலும் சரி குரலிலும் சரி விளையாட்டில்லை.

அமிர்தா அந்த குரலிலேயே அமைதியாகிவிட்டாள் இவனிடம் பேசி பயனில்லை என்று உணர்ந்தவள் தனது கைபை எடுத்துக் கொண்டு அலுவலகத்திறுக் கிளம்பிவிட,சிவாவும் அவளுடன் சேர்ந்தே வந்தான்.

அங்கு காரில் அமர்ந்திருந்த கௌதம் இவர்களை வருவதைக் கண்டு,

“சரிமா பார்த்துக்கோ….நாங்க வரோம்….”என்று விடைபெற,அமிர்தா தலையாட்டி அவனிற்கு விடை கொடுக்க,

“அவனையும் பார்த்துக்கோ அப்படி அவன் தான் உன்கிட்ட சொல்ல சொன்னான்…..”என்று திவ்யா கூறவும் அவளை முறைத்துவிட்டு சிவாவையும் முறைக்க,

“போதும் போதும்….அமிர்தாவை சீண்டாதீங்க இரண்டு பேரும்….கிளம்புங்க….”என்று கௌதம் கூறியவுடன் சிவாவும் அவளிடம் தலையசைத்துவிட்டு அவர்களுடன் ஏறிக் கொள்ள கார் கிளம்பியது.

ஆகிற்று சிவா வந்து சென்று ஒரு வாரம் கடந்திருந்தது.அதன் பிறகு சிவா அவளை தொந்தரவு செய்யவில்லை ஆனால் காலையில் ஒரு குட் மார்னிங் மெஸேஜ்,இரவுஒரு குட் நைட் மெசேஜ் அனுப்புவான்.அதை அவள் பார்த்தாலும் இவள் பதிலேதும் அனுப்பமாட்டாள்.இப்படியே ஒரு மாதம் கடந்த நிலையில் வாணி மேடத்தின் மகளுக்கு திருமணம் என்று அழைப்பிதழ் வர அதற்கு சென்றுவிட்டு வந்ததவளிற்கு கூடவே பழைய பிரச்சனையும் சேர்ந்தே வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!