Skip to content
Post Views: 5,958

அர்ஜுனன் அவர்கள் வயலில் விளைந்த பொருட்களை வைத்து இருக்கும் இடத்தை நோக்கி தன்னுடைய ராயல் என்பீல்ட் பைக்கில் பறந்து கொண்டு இருந்தான்… வண்டியை அந்த கிடங்கின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்…
அங்கு இருக்கையில் உட்கார்ந்து இரு கைகளால் தலையை தாங்கி அமர்ந்து இருந்த சசிகுமாரை பார்த்து கவலையாக இருந்தது… இந்த மூன்று வருடமாக தான் மாறிவிட்டான்… சரியாக சொல்லவேண்டும் என்றால் ரேவதியை காதலித்த பின்னர் தான் அர்ஜுனன் எதிரியாகி போனான் சசிகுமாருக்கு…
இதற்குமுன் அண்ணன் சொல்லும் பேச்சை கேட்கும் தம்பியாக தான் இருந்தான்… அனைத்து விசயத்திலும் கேட்கமாட்டான்… முக்கியமான விஷயம் என்றால் அர்ஜுனனிடம் கட்டாயமாக கேட்பான்..
Advertisement
அர்ஜுனன் மெதுவாக சென்று சசிகுமாரின் தோளை தொட்டான்… அவனின் பரிசம் உணர்ந்து அவனை இடுப்போடு கட்டிக்கொண்டு கதறிவிட்டான் சசிகுமார்… அவனின் அழுகையை பார்த்து அர்ஜுனனுக்கும் கண் கலங்கியது…
அவன் அழுகட்டும் என்று விட்டுவிட்டான் அர்ஜுனன்.. சசிகுமாரோ அவனிடம் “என்னை மன்னிச்சுடு ண்ணா…அவ பேச்சை கேட்டு புத்தி கெட்டுப்போய் உன்னை எவளோ கஷ்டப்படுட்டுனேன்…. ஆனா நீ எப்பயும் எனக்காக இருக்க… எனக்கே என்ன நினச்சா கோவமா வருது ண்ணா…
நான் ராசியே இல்லாதவன்ல ண்ணா… நான் பொறக்குற அப்பயே அப்பன் இல்ல… இத்தனை வருஷம் நான் அப்பானு நினச்சவரு என் அப்பா இல்ல… என் குடும்பமும் இல்ல…
Advertisement
என்னை காதலிச்சு கல்யாணம் பண்ண என் பொண்டாட்டி சொத்துக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணேன்னு சொல்லிட்டு விட்டுட்டு போயிட்டா….
Advertisement
என்னை பெத்தவ நான் வீட்டை வெளியே போறேன்னு சொல்றேன்… என்னை தடுக்கமா அவங்களோட வாழ்க்கை தான் முக்கியம்னு இருந்து இருக்காங்க…என்னை யாருக்கும் பிடிக்கல தானு ண்ணா ” என்று அவனிடம் தன்னுடைய மனபாரத்தை இறக்கி வைத்து கொண்டு இருந்தான் சசிகுமார்…
அர்ஜுனன் அவனின் அழுகை அதிகமாவதை உணர்ந்து “சசி என்னை பாரு எதுக்கு அழகுற.. உனக்காக நான் இருக்கேன் கர்ணன் இருக்கான்… உன் ப்ரண்ட் இருக்கா டா எதுக்கு அழகுற” என்று அவனை தன்னிடம் இருந்து பிரித்து அவனின் கண்ணை துடைத்து விட்டான்…
“அவ என்கூட பேச மாட்டாளே ண்ணா… என்மேல கோவமா இருக்கா….” என்று சிறு பிள்ளை போல் கூறினான் இருபத்தி எட்டு வயது ஆண்மகன்…
Advertisement
“அவளுக்கு உன்மேல கோவம் தான்… ஆனா உங்க ரெண்டு பேருக்குள்ள நான் வர முடியாது…. இப்ப அடிசிப்பிங்க சேந்துப்பிங்க நான் நடுவுல வரமாட்டேன்… ஆனா அவளே பேசுவா” என்று கூறினான் அர்ஜுனன்
அவனும் சரி என தலை அசைத்தான்… அடுத்து என்ன பேசுவது என்று அவனுக்கு தெரியவில்லை…
மீண்டும் அர்ஜுனனே “அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க சசி..???” என்று கேட்டான்…
“தெரியல ண்ணா… எனக்கு மைண்ட் ப்ளாக்காகி இருக்கு… கொஞ்ச நாள் தனியா இருக்கணும்னு தோணுது” என்று கூறினான்…
“எங்க போலாம்னு இருக்க??” என்று அவனையே கேட்டான்…
“என் ப்ரண்ட் பெங்களூர்ல ரெஸ்டாரண்ட் வெச்சு இருக்கான் ண்ணா… ஆறு மாசம் முன்னாடியே ஒர்கிங் பார்ட்னரா வரியானு கேட்டான்.. நான் தான் இவ பேச்சை கேட்டு வரலன்னு சொல்லிட்டேன்.. அவன் நீ எப்ப வேணாலும் வா அப்டினு சொல்லி இருக்கான்…
அவன்கிட்ட கேட்கனும் ண்ணா… அவனுக்கு கேரளால பிரான்ச் இருக்கு.. அதுனால கேரளால ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன் ண்ணா” என்று கூறினான் …
“சரி ஓகே சசி… உன் ப்ரண்ட்க்கு கால் பண்ணி கேளு… ” என்று கூறி அவன் அருகில் இன்னொரு இருக்கையை போட்டு அமர்ந்தான்…
அவனோ சிறுபிள்ளை போல் முழித்து கொண்டு அமர்ந்து இருந்தான்… இவனின் பார்வையை வைத்து “என்ன டா??” என்று கேட்டான் அர்ஜுனன்..
“அது ண்ணா வீட்டை விட்டு வரும் போது போனையும் அங்கேயே வெச்சிட்டு வந்துட்டேன்…” என்று தலையை குனிந்தவாறு கூறினான்…
“இந்த என் போன் பேசு” என்று கூறி நீட்டினான்…
“போன் நம்பர் தெரியாது… நம்பர் போன்ல தான் இருக்கும் “என்று பாவமாக கூறினான்…
“சரி வா வீட்டுக்கு போகலாம்” என்று கூறினான் அர்ஜுனன் …
“இல்ல ண்ணா அங்க வர மாட்டேன்.. நீ என்னை அடிச்சாலும் பரவால்ல ஆனா அங்க வர மாட்டேன்” என்று உறுதியாக கூறினான் சசிகுமார்…
“சரி உன்னை வறுபுறுத்தலை…. ஆனா என்னிக்கும் இப்படியே இருப்பேன்னு நினைக்காத சசி….” என்று அவனிடம் கூறிவிட்டு கர்ணனுக்கு அழைத்து சசியின் அலைபேசியும் சுபா போட்டுவிட்ட மோதிரத்தையும் எடுத்து வருமாறு கூறிவிட்டு வைத்தான்…
அடுத்த ஐந்து நிமிடத்தில் கர்ணன் அலைபேசியுடன் வந்துவிட்டான்…. அவனிடம் மோதிரம் எங்கு என கேட்டான் அர்ஜுனன்… “ண்ணா அங்க அந்த மோதிரம் மட்டும் இல்ல… மத்த எல்லாமே இருக்கு” என்று கூறினான்…
அதை கேட்டு சிரித்துவிட்டு “அது உனக்கு இனிமே கிடைக்குறது கஷ்டம் தான் சசி.. முதல்ல உன் ப்ரண்ட் கிட்ட பேசு ” என்று அவனிடம் அலைபேசியை குடுத்தான்…
சசியும் அவனின் நண்பனுக்கு அழைத்து பேசினான்… அவன் நண்பனும் எப்போது வேண்டுமானாலும் வா எனக்கு சந்தோஷம் என்று கூறி அழைப்பை துண்டித்தான்…
சசிகுமார் கலினரி ஆர்ட்ஸ்(Culinary arts) படித்துள்ளான்….. அவன் டெல்லியில் படித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபலமான ரெஸ்டாரண்டில் செஃப்பாக பணியில் இருந்தான் அங்கு வேலையில் இருந்த போது தான் இவர்களின் ஊரின் பக்கத்துக்கு ஊரில் இருந்து வேலைக்கு வந்த ரேவதி இவனுக்கு ப்ரொபோஸ் செய்தாள்…
பக்கத்து ஊர் என்பதால் அவளுக்கு இவர்களின் சொத்து தெரியும் அதுனால் தான் ப்ரொபோஸ் செய்தாள்.. மூன்று மாதம் அவன் ஒத்துக்கொள்ளவில்லை…. அதன் பிறகு தான் தன்னை ஒருத்தி இப்படி காதலிக்கிறாளே என்று நினைத்து சம்மதம் சொன்னான்….
அன்றில் இருந்து அனைவரிடமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகினான் சசிகுமார்… ஒரு வருடம் காதலித்து அடுத்த வருடம் கல்யாணம்… அந்த முதல் ஒரு வருடத்தில் மெதுமெதுவாக கிரிஜாவை தன் பேச்சை கேட்பது போல் மாத்திவிட்டாள் ரேவதி…
தற்போது சசியின் நண்பன் கூறியதை சசி இருவரிடமும் கூறினான்…
“எப்போ போலாம்னு இருக்க சசி…. எத்தனை நாள் இருப்ப… உனக்கு கொஞ்ச நாள் தான் டைம்… நான் எப்போ இங்க வர சொல்றேனோ அப்ப இங்க ஊருல நீ இருக்கனும் சசி” என்று கூறினான் அர்ஜுனன்…
அவனும் அர்ஜுனன் கூறியதற்கு எல்லாம் சரி சரி என தலையாட்டி ஏற்றுக்கொண்டான்…
அர்ஜுனன் அவனிடம் “வீட்டுக்கு தானு வர மாட்டேன்னு சொன்ன…. நீ தோப்பு வீட்டுல இரு… ரெண்டு நாள் கழிச்சி ஜாப் ஜாயின் பண்ணிக்கோ” என்று கூறி அவனை கர்ணனுடன் அனுப்பி வைத்துவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான் அர்ஜுனன்…
இங்கு கோவமாக சென்ற ரேவதியோ பக்கத்து ஊரில் உள்ள தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்றாள்… லோயர் மிடில் கிளாஸ் தான் அவளின் வீடு.. அவளுடைய அப்பா அம்மா அக்கா உள்ளனர்…
இவர்களின் சம்பந்தம் இல்லாமல் தான் சசிகுமாரை கல்யாணம் செய்து கொண்டாள்… இவளின் அக்காவின் கல்யாணத்திற்கு சேர்த்து வைத்த நகையை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள்…
அதனால் இவளின் அக்காவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணம் நின்று போய் விட்டது…. ரேவதி மீது மூவரும் கோவமாக உள்ளனர்…
எப்போதும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள் ரேவதி.. பெற்றோரின் கஷ்டத்தை கண்டுகொள்ளாமல் எதாவது செலவு செய்து கொண்டே இருப்பாள்….
ஒரு நல்லவர் அவரின் அக்காவை கல்யாணம் செய்து கொண்டு தற்போது சந்தோசமாக உள்ளார் அவர்… அந்த நபர் இவளின் அக்காவை கல்யாணம் செய்யவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்று அவள் மீது தான் கோவத்தில் இருந்தனர்…
தற்போது அவள் வீட்டிற்கு நுழைய முற்படும் போதே அவளின் அம்மா அவளை பார்த்து கோவம் தீர அவளை அடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவினை பூட்டிவிட்டார்…
இவளின் அப்பா அங்குதான் இருந்தார்… சொந்த வீட்டிற்கு அவள் செய்த துரோகத்தை நினைத்து அவளின் அம்மா செய்த செயலை தடுக்கவில்லை…
அர்ஜுனன் வீட்டில் இருந்து வரும் போதே அவளின் அக்காவின் நகையை எடுத்து கொண்டு தான் வந்தாள்… அதை வைத்து பணம் வாங்கி இவர்கள் ஊரின் அருகில் உள்ள நகரத்தில் ஒரு ஹோட்டலில் அறையை புக் செய்து தங்கி கொண்டாள்…
கையில் இருக்கும் பணம் ஒரு மாதம் தான் பத்தும் என்பதால் அடுத்து என்ன செய்வது என்று அவள் யோசனையில் மூழ்கிவிட்டாள்…
இங்கு வீட்டிற்கு வந்த அர்ஜுனன் நேராக தன்னுடைய அறைக்கு தான் சென்றான்… அங்கு அவளின் மனைவி போனில் மகாபாரதம் பார்த்து கொண்டு இருந்தாள்… அவளை தொந்தரவு செய்யாமல் பாத்ரூம் சென்று பிரெஷ் ஆகி கொண்டு வெளியே வந்தான்…
இவன் வெளியே வரும் போது போனை வைத்துவிட்டு அவர்களின் மகனின் அருகில் அமர்ந்து இருந்தாள்…
இவள் அருகில் வந்து அமர்ந்து “மோதிரம் எங்க அம்மு???” என்று கேட்டான்…
அவளோ “என்ன மோதிரம் மாமா??? … தோ பாருங்க நீங்க எனக்கு போட்டு விட்ட மோதிரம் அப்படியே இருக்கு… வேற என்ன மோதிரத்தை கேட்குறீங்க?” என்று அப்பாவியாக கேட்டாள்….
“உன் ப்ரண்டுக்கு நீ குடுத்த மோதிரம்” என்று கூறினான் அர்ஜுனன்…
“நானா!!! என் ப்ரண்டா!!! எனக்கு ப்ரண்ட் யாரும் இல்லயே… நான் யாருக்கும் எந்த மோதிரமும் தரல மாமா” என்று கலங்கிய குரலில் கூறினாள் அவள்
“அப்பறம் ஏன் அம்மு உன் குரல் கலங்கி வருது… உன் முகம் ஏன் வாட்டமா இருக்கு…” என்று கேட்டான் அவன்…
“ப்ளீஸ் மாமா அதை பத்தி பேசாதீங்க… தம்பிய தூக்கிட்டு வாங்க எனக்கு பசிக்குது” என்று கூறி அவள் அவனை பேச கூட விடாமல் கீழே சென்று விட்டாள்…
அவன் கீழே வரும் போது பாசமலர் படம் ஓடிக்கொண்டு இருந்தது சுபாவின் இரு சகோதரர்களாலும் … நந்தினி தான் அவர்களை விரட்டிவிட்டு சாப்பிட அமர வைத்து அனைவருக்கும் பரிமாறினாள்..
அனைவரும் உண்டுவிட்டு அவரவர் அறைக்கு தூங்க சென்றனர்…
அர்ஜுனன் அறையில் ஆரவ் தூங்கி இருக்க போன் பேசிவிட்டு வந்த அர்ஜுனனிடம் “மாமா உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்… திட்ட கூடாது” என்று முன்னெச்சரிக்கையாகவே சொல்லிவைத்தாள் சுபத்திரா…
“அது நீ சொல்றது பொறுத்து அம்மு என்னனு சொல்லு” என்று கூறினான் அவன்…
அவள் தயங்கி கொண்டே கேட்ட விஷயத்தை கேட்டு அர்ஜுனன் அவளை முறைக்க ஆரம்பித்துவிட்டான்… சுபாவோ தலையை கீழே குனிந்தவள் நிமிராவே இல்லை…
அப்படி என்ன கேட்டு இருப்பா சுபா????
error: Content is protected !!