Skip to content
Post Views: 6,012
உன் காதல் ஒரு வரமாய்…..26(எபிலாக்)
இரண்டு வருடங்கள் கடந்து இன்று,
தாம்பரம் அமிர்தா வீட்டில்,
“என்ன தான்டா நினைச்சிக்கிட்டு இருக்க நீ….நான் சொல்லறதை கேட்க கூடாதுனு முடிவு பண்ணிட்டியா….”என்று திவ்யா கத்திக் கொண்டிருக்க,வீட்டின் ஒரு மூலையில் கௌதம் தன் ஒரு வயது மகளை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க,பக்கத்தில் அமிர்தா கௌதமின் பெரிய மகனிற்கு படம் வரைய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
“டேய்….நீ என்ன சொன்னாலும் சரி அந்த வீட்ல எனக்கும் பங்கு இருக்கு….அதனால நானும் பணம் போடுவேன்….”என்று திவ்யா கத்த,
“திவி நான் சொல்லுறதை கேளு….”
“முடியாது…..”என்று ஒற்றை வார்த்தையில் பதில் தந்தவள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள,சிவா தான் செய்வதரியாது தலையை பிடித்துக் கொண்டு நின்றான்.
Advertisement
“என்னமா சண்டை முடிஞ்சிடுச்சா….”என்று கௌதம் அமிர்தாவிடம் கேட்க,
Advertisement
“இன்னும் இல்லைண்ணா….ஆனா ஒரு விக்கெட் அவுட் ஆகிடும் நினைக்கிறேன்….”என்று கூற,
“அவுட் ஆகிதான் ஆகனும்….இல்ல இந்த குள்ள பிசாசு என்னை விடாது….அதனால ஒத்துக்க வைச்சிடுமா…..உனக்கு புண்ணியமா போகும்….”
“அச்சோ நான் இல்லப்பா….”திடீர் என்று அமிர்தா எழ,
Advertisement
“ஏய்….உன்னை வேகமாக எழாதனு சொன்னேன் தான….”என்ற சிவா அவளுக்கு கையை கொடுத்து எழும்ப உதவினான்.
“மாட்டிக்கிட்டேனா….போச்சு….”என்று அசடு வழிந்தவாரே மனைவியின் முன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான் கௌதம்.
“உங்களை…”என்று திவ்யா பல்லை கடிக்க,
“அச்சோ டேய் சிவா….என்னை காப்பாத்துடா….அடேய் ஒத்துக்கோடா….என்னால நிஜமா முடிலை…”என்று விட்டால் அழுதுவிடுபவன் போல கூற,
“சீனியர் நீங்களுமா….”என்று சிவா நொந்து கொள்ள,
“ப்ச்…போதும் எல்லாரும் சண்டை போட்டது….நீங்க பணத்தை நாங்க கேட்குறப்ப கொடுங்க….இப்ப வேணாம் முதல்ல வீட்டை பார்த்து எல்லாம் ஓகே ஆனதும் மத்தது பார்த்துக்கலாம்….”என்ற அமிர்தா சிவாவிடம் திரும்பி,
“நீங்க சும்மா இருங்க….அது தான் அவங்களுக்கும் தாய் வீடு….அப்ப அவங்க பங்கும் இருக்கனும் நினைக்கிறாங்க…அதனால என்ன தரட்டுமே….”என்று சிவாவையும் பேசவிடாமல் வாயடைத்துவிட்டாள்.
“இந்தமா….பாப்பா…இதை குடி பேசி கலைச்சிருப்ப….”என்று அவளின் கையில் ஜூஸை திணித்தாள் திவ்யா.
“எல்லாருக்கும் இருக்கு….”என்றவள் நகர,
“அட இரும்மா நான் எடுத்துட்டு வரேன்….”என்ற திவ்யா மற்றவர்களுக்கும் கொடுக்க அனைவரும் அமைதியாக குடித்தனர்.ஆனால் சிவாவின் முகத்தில் தான் தெளிவில்லை.சிவாவிற்கும் இப்போது தாம்பரத்தில் தான் வேலை மாற்றல் வாங்கி வந்து ஒரு வருடம் ஆகிறது.தாம்பரத்திலேயே சொந்தமாக வீடு வாங்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான தொகையும் சிறுசிறுக சேர்த்து வருந்தனர் இருவரும்.
இதில் அமிர்தா குழந்தை உண்டாகி அதில் சில சிக்கல் ஏற்பட எதையும் யோசிக்காமல் சேமிப்பு பணத்தை எடுத்து தான் செலவு செய்தான்.இப்போது நல்ல இடத்தில் வீடு ஒன்று விற்பனைக்கு வர பணம் தட்டுப்பாடாகி போனது.அதை அமிர்தாவிடம் பகிர்ந்திருக்க விஷயம் திவ்யாவிடம் போய்விட்டது அதற்கு தான் இந்த சண்டை காலையில் இருந்து நடைபெற்று ஓய்ந்தது.
ஆம் ஓய்ந்துவிட்டது அமிர்தா ஒரு விஷயத்தை பேசிவிட்டால் சிவா அதன் பிறகு பேசமாட்டான் அதனால் தான் கௌதம் அமிர்தாவை பேச சொன்னது.திவ்யாவின் குடும்பம் மாலை வரை இருந்து கிளம்பினர்.இப்போது சென்னையில் தான் இருக்கின்றனர்.கௌதம் வேலையை விட்டுவிட்டு தந்தையின் தொழிலை பார்க்கிறான் திவ்யா அவனிற்கு உதவியாக இருக்கிறாள்.கௌதமின் வீட்டாருக்கு ஒருமுறை பட்டு பின் தான் புத்தி வந்தது போல உடல் நலிந்த போது வந்த சொந்தங்கள் எல்லாம் எதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தான் பார்த்தனர்.ஆனால் யாரை பணத்திற்காக திருமணம் செய்தாள் என்று கூறினார்களோ அவள் அவர்களின் அனைத்துமாகி போனாள்.ஆம் இப்போது அந்த வீட்டின் சக்தியாக சுழன்று கொண்டிருப்பது திவ்யா தான்.
ஏதோ யோசனையில் உழன்று கொண்டிருப்பவனின் முன் வளையல் அணிந்த கரம் பால் டம்ளரை நீட்ட,அந்த கண்ணாடி வளையல்களை ஆசையாக வருடியபடி நிமிர்ந்தான் சிவா.மூன்று நாட்களுக்கு முன்பு தான் அமிர்தாவிற்கு வளைகாப்பு முடிந்திருந்தது.பாரதி,கீதா என்று அனைவரும் வந்திருந்தனர்.இதில் கௌதமின் பெற்றோரும் அடங்குவர்.மண்டபத்தில் தான் வளைகாப்பு நடந்தது.அதன் பின் அமிர்தா பாரதி வீட்டில் ஒரு நாளும்,கீதா வீட்டில் ஒரு நாளும் இருந்துவிட்டு இதோ வந்துவிட்டாள்.அவளுடன் சிவாவும் சேர்ந்து சென்றது குறிப்பிடதக்கது.
பாரதியும்,கீதாவும் தாங்கள் பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூற சிவா மறுத்துவிட்டான்.அதில் எப்போதும் போல் கீதாவிற்கும் சிவாவிற்கும் முட்டிக் கொள்ள,பாரதி தான் சமாதானம் செய்ய வேண்டியதாகியது.
“கால் வலிக்குதா அம்மு….”என்று அவளின் கரத்தை மெல்ல இழுத்து தன்னுடன் அமர செய்த சிவா அவளை தோள் சாய்த்துக் கொள்ள,
“பாலை குடிங்க….நேரமாகுது தூங்கனும்…”
“ம்ம்….நீ படு நான் எண்ணெய் எடுத்துட்டு வரேன்….”
“இல்ல அதெல்லாம் வேணாம்….”என்று மறுத்தவளை முறைத்தவன்,
“எனக்கு தெரியும் நீ படு….”என்றுவிட்டு பாலை குடித்துவிட்டு அவளிற்கு காலில் எண்ணெய் தேய்த்துவிட,
“என்னங்க….நீங்க என்னை முதல்ல பார்த்ததை சொல்லுங்களேன்…..”
“ஆராம்பிச்சிட்டியா…..எத்தனை தடவைடீ கேப்ப…..தினமும் கேட்குற….அலுத்து போகலை….”என்று செல்லமாக அலுத்துக் கொண்டாலும் கூற தவறுவதில்லை.இருவருக்குமே அது இனிமையான நினைவுகள் தான்.
“என்னை பார்க்க என்னன்ன தகுடுதத்தம் பண்ணியிருக்கீங்க…..ஆனா என் கிட்ட ரொம்ப கண்டிப்பா நடந்துக்க வேண்டியது….”என்று அமிர்தா அவன் தலையில் செல்லமாக தட்ட,
“ம்ம் பின்ன உன்னை பார்த்தாலே நான் அவுட்டா ஆப் கண்ட்ரோல் ஆகிடுவேன்…..இதுல நீ என்னை காதல் பார்வை எல்லாம் பார்த்தா….அதுவும் அன்னைக்கு பார்க்குல எப்படி பார்க்குற அப்படியே உன்னை தூக்கிட்டு எங்கியாவது ஓடிப்போயிடலாம்னு இருந்துச்சு…..”என்று லயித்து கூற அமிர்தாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம் இந்த காதலை தான் எதிர்பார்த்தாள் இதோ கிடைத்துவிட்டது.இப்படி அவர்களின் காதல் கதையை கேட்டுக் கொண்டே உறங்கியும் போனாள் அவளின் அருகே தலை கோதியவாரே அவனும் உறங்கி போனான்.
மேலும் இரண்டு மாதங்கள் கடந்து இன்று தான் அந்த வீட்டை பேசி முடிக்க சென்றிருந்தனர் சிவாவும்,கௌதமும்.அமிர்தா கூறியபடி தான் அனைத்தும் நடந்தது திவ்யா தன் பங்கிற்கு பணம் கொடுக்க சிவாவிற்கு விருப்பமில்லை தான் ஆனாலும் இது அவளின் வீடு என்பதால் வாங்கிக் கொண்டான்.அவர்களின் கனவு இல்லம் அமிர்தா,திவ்யா மற்றும் சிவாவின் பெயரில் வாங்கப்பட்டது.
“இது உன் வேலையாடி…..”என்று திவ்யா பத்திரை பார்த்துவிட்டு ஆரம்பிக்க,
“ஆமாம்…..”என்றாள் அமிர்தா.
“எல்லாம் உன் இஷ்டம் தான் இல்ல….அவனும் உன்னை ஒண்ணும் கேட்குறது இல்லை….”என்று திட்ட,இப்போது சிவாவும்,கௌதமும் பார்வையாளர்கள் ஆனார்கள்.
“ஏன்டா அவ தான் சொன்னா நீயும் செய்வியா….”என்று சிவாவிடம் எகிற,
“அவங்க கிட்ட எதுக்கு சண்டை போடுறீங்க….இது உங்க வீடு அப்ப உங்களுக்கும் பங்கு உண்டுள்ள அதான்….என்னண்ணா நான் சரியா தான சொல்லுறேன்….”என்று கௌதமை கோர்த்துவிட்டு அமிர்தா போய்விட,
“அடேய்களா எப்ப பார்த்தாலும் என்னைய வச்சே டெஸ்ட் பண்ணுறீங்களே உங்களுக்கு நியமா….”என்று அவன் நொந்துகொள்ள,
“ஓஓ….இது உங்க வேலையா….”என்று அவனின் மனைவி அவன் முன் நெற்றி கண்ணை திறக்கும் நேரம் அவனிற்கு கடையில் இருந்து அழைப்பு வரவும்,
“கடையிலேந்து தான் போன்….இரு…இரு….”என்றுவிட்டு அவன் நகர,
“கிரேட் எஸ்கேப் சீனியர்….”என்ற சிவாவின் தோளில் அடித்த திவ்யா,
“எங்க எஸ்கேப் ஆகுறது….அவருகிட்ட நான் அப்புறம் பேசிக்கிறேன்….”என்ற திவ்யா அடுத்த சண்டைக்கு தயாராக,
“ப்ச் திவி….விடு….எனக்கே தெரியலை….ஆனா அம்மு சொன்னா எனக்கு நல்ல யோசனையா இருந்துச்சு செஞ்சிட்டேனே…..விடுடா….”என்று கூற,திவ்யாவிற்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை ஆனால் மனது அத்தனை அமைதியாக இருந்தது இன்று.ஆம் திருமணமான புதிதில் அவளை ஒன்றும் இல்லாதவள் என்று தானே கௌதமின் வீட்டார் பேசினர் அவர்கள் இன்று மாறிவிட்டாலும் அவர்கள் ஏற்படுத்திய வடு திவ்யாவின் மனதில் ஆழமாக பதிந்து போயிருந்தது என்னவோ உண்மை.
“சும்மா அழாதீங்க….”என்ற அமிர்தாவின் கையை பிடித்துக் கொண்டவள்,
“தேங்க்ஸ்….”என்று உளமார்ந்து கூறினாள்.சில விடயங்களை பணம் தான் தீர்மானிக்கிறது அது இந்த பணத்தை வைத்து இடைபோடும் மக்கள் இருக்கின்றவரை மாறாது.
ஆறு மாதங்கள் கடந்து,
இரவு எட்டு மணி,
“ஏய் அந்த தோரணத்தை நல்லா கட்டுப்பா….”என்று சரவணன் ஒரு புறம் கூறிக் கொண்டிருக்க,
“சாப்பாட்டுல இன்னும் ஒரு சுவீட் சேர்த்து சொல்லிடுங்க….”என்று பாண்டியன்(கீதாவின் கணவன்) கைபேசியில் சமையல் செய்பவரிடம் கூறிக் கொண்டிருந்தான்.நாளை சிவாவின் வீட்டு கிரஹ பிரவேசம் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.விடியற்காலை விழா என்பதால் அனைவரும் வந்துவிட்டனர்.
உறவுகளற்ற இருவருக்கு நண்பர்களே உறவுகளாக மாறி போயினர்.பாரதி,கீதா மற்றும் திவ்யாவின் குழந்தைகள் என்று அந்த இடமே வண்ணமயமாக இருக்க அவர்களுடன் புதுவரவான அமிர்தாவின் ஆறு மாத பெண் குழந்தை கை காலை ஆட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது.
அனைவரும் ஒவ்வொரு வேலையை இழுத்து போட்டுக் கொண்டு செய்ய அதைக் கண்ட கௌதமின் பெற்றொருக்கு தான் அத்தனை ஆச்சிரியமாகி போனது.அதோடு கழிவிரக்கமும் இருந்தது.கௌதம் திவ்யாவிற்கும் இந்த வீட்டில் பங்கு உண்டு கூறியதோடு அது எதனால் என்று கூறியிருக்க மனதிற்கு அத்தனை கஷ்டமாகி போனது.தங்களை குழந்தை போல தாங்கும் பெண்ணை அன்று அப்படி நோகடித்துவிட்டோமே என்று.காலம் தாழ்ந்து புத்தி வந்து என்ன பயன்.காலை விழா இனிதே நிறைவுற,
“ஏய்… பாப்பா….குழந்தைக்கு இந்த டிரஸ் போட்டுவிடு….”என்று கீதா ஒரு காட்டன் கவுனை கொடுத்தாள்.
“கொடுங்கக்கா….காலையிலேந்து ஒரே அழுகை….”என்று தன் மகள் அணிந்திருந்த பட்டாலான உடையை அவிழ்க்க,மீண்டும் வீறு கொண்டு அழுததது அமுதினி.இன்று தான் அவளிற்கு பெயர் சூட்டும் விழா.சிவா தான் அவளின் தேவதைக்கு பெயர் தேர்ந்தெடுத்தது.அவன் வாழ்வில் அமுதமாகி வந்தவள் என்று கூறிக் கொண்டே தான் பெயர் வைத்தான்.
“அச்சோ என் தங்கம் ஏன் அழறீங்க….”என்று வந்துவிட்டான் சிவா.
“இந்தா வந்துட்டாருல்ல….எங்கிருந்தான் வருவாரோ….அவருக்கு எப்படிடீ தான் அவரு பொண்ணு தான் அழுவதுனு தெரியுது….”என்று கீதா எப்போதும் போல் இடக்காக கேட்க,
“ஆரம்பிச்சிட்டா இவ….”என்று பாரதி தலையில் கை வைத்துவிட்டாள்.
“என் தேவதை எங்க இருக்கா என்ன பண்ணுறானு எனக்கு தெரியாதா….என்னடி பட்டு….”என்று கொஞ்சிக் கொண்டே செல்ல,
“ம்க்கும்….பார்த்தியாடீ….அவரு பொண்ணு தேவதையாம்….அப்ப நீ யாரு…”என்று கேட்க,
“அதை நான் சொல்லுறேன் மைனா….”என்று பாண்டியன் வர கீதாவின் குரல் உள்ளே சென்றுவிட்டது.என்ன தான் இன்று கணவனிடம் ஒன்றி வாழ்ந்து கொண்டிருந்தாலும்,ஏனோ பாரதி,அமிர்தாவிடம் ஒட்டியது போல் அங்கு ஊரில் உள்ளவர்களிடம் ஒட்டுதல் வரவில்லை.
“என்ன மைனா….பேச்சையே காணும்…..”என்று அவளின் கன்னம் கிள்ள,
“அச்சோ எனக்கு வேலையிருக்கு…பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கனும்….”என்று நழுவி விட,அனைவர் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
“மன்னிச்சுக்கங்க சிவா….அவ….”என்று பாண்டியன் சிவாவிடம் தனியாக கீதாவிற்காக மன்னிப்பை யாசிக்க,
“எதுக்கு மன்னிப்பெல்லாம்….எனக்கு அவங்க இப்படி என்கிட்ட உரிமையா இருக்கிறது தான் பிடிச்சிருக்கு….அவங்க எனக்கும் அக்கா போல தான்….”என்று கூற,
“ம்ம்….புரியுது….அவ அவளா இந்த இடத்துல தான் இருக்கா….அங்க ஊர்ல….ம்ஹம்…..நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன் முடியலை….”என்று வருத்ததுடன் கூற,
“எல்லாம் மாறும்….நாங்கெல்லாம் இருக்கோம் அவங்களுக்கு….”என்று கூறிக் கொண்டே வர,
“அப்பா நானும்….”என்ற மகனை கைகளில் ஏந்த,
“ப்பா நானும்…..”என்று பாரதியின் மகனும் வர இருவரையும் இரண்டு கைகளில் தூக்கிக் கொண்டு பாண்டியன் வர,
“ஏய் அப்படியே நில்லுங்க….”என்ற கௌதம் அதை புகைப்படமாக எடுத்தான்.
“என்ன அவங்களை மட்டும் தான் எடுப்பீங்களா எங்களையும் எடுங்க….”என்று திவ்யா வர,
“எல்லாரும் ஒண்ணா நின்னுங்க…….”என்ற பாண்டியன்,
“இந்தாப்பா எல்லாரையும் ஒரு போட்டோ எடு….”என்று போட்டோ கிராப்பரிடம் கூற,அனைவரையும் நிற்க வைத்து புகைப்படம் எடுக்க அழகான குடும்ப படம் ஒன்று உருவானது.அன்பில் இணைந்த இந்த இதயங்கள் அனைத்துமே வரம் பெற்றவர்கள் தான்.இங்கு சிவா,அமிர்தாவின் காதலுமே வரம் வாங்கி தான் உள்ளது.நல்ல உள்ளங்களை தங்களின் நண்பர்களாக பெருவது கூட வரம் தான்.மொத்தத்தில் இருவரில் யார் இதயத்தை யார் வென்றார்கள் என்பதை விட இருவரும் தங்கள் இதயங்களையும், பரிமாறிக் கொண்டு வாழ்வில் தோற்கவில்லை என்பது தான் உண்மை.
(சுபம்)
error: Content is protected !!