Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்…..6

உன் காதல் ஒரு வரமாய்…..6

சிவாவை சந்தித்துவிட்டு வந்ததிலிருந்து அமிர்தாவிற்கு ஏதோ மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரமே அடங்கியது போல் ஒரு உணர்வு.இனி அனைத்தும் நல்லது நடக்கும் என்று ஒரு எண்ணம்.அதனாலே அந்த வாரம் முழுவதும் அவள் உற்சாகமாகவே இருந்தாள்.

“ப்ச் இது நல்லா இல்லை….இது எனக்கு டல்லா இருக்கும்….இது…..”என்று தன்னிடம் இருக்கும் சுடிதாரில் நன்றாக இருக்கும் நான்கை எடுத்து தன்மீது வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.விடியற்காலையில் இருந்து இந்த வேலை தான் நடந்து கொண்டிருந்தது நான்கையும் வைப்பது பார்ப்பது என்று இதை ஏதோ நாடகம் பார்ப்பது போல் தன் கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி.ஒரு கட்டதில் சோர்ந்து போன அமிர்தா,

“க்கா பார்த்துக்கிட்டு தான இருக்கீங்க….எனக்கு எந்த டிரஸ் போட்டா நல்லா இருக்கும்னு சொல்லாம்ல….”என்று அமிர்தா கேட்க,பாரதி அவளை அமைதியாக பார்த்தாளே தவிர பதில் ஏதும் சொல்லவில்லை.



Advertisement

“என்னக்கா பதில் சொல்லமாட்டேங்குறீங்க….”

“நீ படிக்க தான போற….”

“இது என்னக்கா கேள்வி அதுக்கு தான போறேன்….”

Advertisement

“இல்ல உன் நினைப்பு படிப்புல இருக்குற மாதிரி தெரியலை அதான்….”என்று பாரதி கூற அதுவரை மலர்ந்திருந்த அமிர்தாவின் முகம் காற்று போன பலூன் போல சுருங்கி விட்டது.

Advertisement

“புள்ள நான் சாதாரணமா தான் சொன்னேன்…..நீ என்னை தப்ப எடுத்துக்காத….”என்று பாரதி அவசராமாக கூற,

“இல்ல நான் அப்படி நினைக்கலை….”என்று அமிர்தா கூறினாலும் அவளின் கண்கள் கலங்கிவிட்டது.

“இந்தா புள்ள….அழாத எனக்கு கஷ்டமா இருக்கு….நான் என் மனசுல பட்டதை அப்படியே கேட்டுடேன்….அந்த பையனை பார்த்துட்டு வந்துலேந்து உன் முகத்துல ஒரு மலர்ச்சி இப்ப நீ இப்படி பார்த்து பார்த்து கிளம்பவும்….சாரி சாரி அமிர்தா….இது உன்னோட சொந்த விஷயம்…..சாரி….”என்று பாரதி உண்மையான வருத்துடன் கூற,அமிர்தாவிடம் பதில் இல்லை ஆனால் கண்கள் கலங்கி முகம் ஏதோ யோசனையில் ஆழ்ந்து விட்டது.ஒரு வாரமாக பட்டாம்பூச்சி போல திரிந்தவளை இன்று அழ வைத்துவிட்டோமே என்று பாரதிக்கு மனது தாளவில்லை,

Advertisement

“புள்ள மன்னிச்சுக்க….இப்படி இருக்காத….இப்ப என்ன உனக்கு எந்த டிரஸ் போட்டா நல்லா இருக்கும் தான கேட்ட இந்தா இந்த சிவப்பு கலர் சுடிதார் உனக்கு பொறுத்தமா இருக்கும்…..”என்று ஒரு சுடிதாரை எடுத்துக் கொடுக்க,

“க்கா….நான் ஏதாவது தப்பு பண்ணுறேனா….”என்று அமிர்தாவின் குரலே உள்ளடங்கி இருந்தது.

“உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கா….”என்று பாரதி மறுகேள்வி கேட்க,

“தெரியலை….நிஜமா தெரியலை….ஆனா….நான்….அம்மா இருந்தா நல்லா இருந்திருக்கும் அக்கா….அவங்கிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவேன் அவங்க தான் என்னை வழி நடத்துவாங்க….இப்ப….”என்று சிறு குழந்தை போல பேசுபவளை கண்ட பாரதி தாவி அணைத்துக் கொண்டாள்.

“அம்மா வேணும் க்கா…..எனக்கு என் அம்மா வேணும்…..ஏன் போனாங்க….என்னையும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாம்ல….”என்று குழந்தையாகவே மாறி அழ,பாரதியும் உடைந்துவிட்டாள்.

“அமிர்தாம்மா…..ஒண்ணுமில்ல….அழதா….”என்று பாரதியும் தன் அழுகையை அடக்கிக் கொண்டு பேச,அமிர்தாவின் அழுகை அதிகமானதே தவிர குறையவில்லை.ஒருகட்டத்தில் அவளை அழவிட்ட பாரதி அவளின் அழுகை குறைந்து தேம்பலாக மாறவும் அவளின் தலையை கோதிக் கொண்டே,

“எதுக்குடீ இம்புட்டு அழுகை….எந்திரி முதல்ல….”என்று கூற அமிர்தா அவளின் மடியில் படுத்துக் கொண்டு எழாமல் இருக்க,

“அட எந்திரி புள்ள கால வலிக்கு….”

“அச்சோ சாரி க்கா….”

“இந்தா இப்ப எந்திரிச்சிட்டல்ல…..”

“க்கா….”என்று சிணுங்கியவளின் கன்னம் கிள்ளிய பாரதி,

“சின்ன புள்ளை தான் நீயி….இப்ப கொஞ்சம் பரவயில்லையா….”

“ம்ம்….கொஞ்சம்…..”என்று தன் விரல்களால் குழந்தை போல சுருக்கி அவள் காமிக்கும் போது கூட அவளின் முகத்தில் சிறிதாக இழையோடிய ஏக்கத்தை பார்த்த பாரதிக்கு மனது கனக்க தான் செய்தது.அவளின் கைகளை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்ட பாரதி,

“உன் அம்மா எங்கேயும் போகல புள்ள உன் கூட தான் இருக்காங்க….உன் மனசு எப்பெல்லாம் அவங்களை தேடுதோ அப்ப கண்ணை மூடி இரண்டு நிமிஷம் நின்னா உன் பக்கத்துல இருக்குறத நீ கண்டிப்பா உணருவ….உனக்கு என்ன இப்ப அந்த பையனை நீ விரும்புறியா தெரியலை அதனா விடு…..ஏன் பெருசா எடுத்துக்குற….உன் மனசுல ஏதோ சின்னதா சஞ்சலம் அதான்…..”

“அப்படி தான் போலக்கா….ஆனா அதுவும் தப்பு தான்….நமக்கு இதெல்லாம் சரிவராது….”என்று கூற,அவளின் தலையில் தட்டிய பாரதி,

“இங்க பாரு….இப்ப தான் நீ அந்த பையனை பார்த்திருக்க…..அதுக்குள்ள நீயா ஏன் யோசனை செஞ்சு உன்னை குழப்பிக்கிற….உன்கிட்ட இந்த ஒருவாரமா கொஞ்ச மாற்றம் தெரிஞ்சிது அது நல்லது தான் ஆனா…..”என்றுவிட்டு அமிர்தாவின் முகம் பார்க்க அவளும் பாரதியின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஏதோ பாடத்தை கவனிக்கும் மாணவி போல.

“உன்கிட்ட இன்னும் பக்குவம் பத்தல அமிர்தா….இப்ப தான் உன்னோட சின்ன கூட்ட விட்டு நீ கொஞ்சம் வெளில வந்திருக்க…இந்த உலகம் ரொம்ப பெருசு….இங்க எந்தளவுக்கு நல்லது இருக்கோ அதே அளவுக்கு கெட்டதும் கொட்டி கிடக்கு….யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப முடியாது அதே சமயம் நம்பாம இருக்கவும் முடியாது….”

“என்னக்கா சொல்லுரீங்க எனக்கு புரியலை….”

“அதில்லை அமிர்தா உனக்கு அந்த பையன் மேல ஈர்ப்பு இருக்கு அப்படி தான….”என்று கேட்க,அமிர்தா பதில் ஏதும் கூறவில்லை ஆனால் அவள் மௌனம் பதில் கொடுத்துவிட்டது.

“பார்த்தியா உன்னோட மௌனம் தான் பதில்….அதுவே சொல்லுதே உன்னோட மனசை….”

“தப்பாக்கா….”என்று உடனே அவள் கேட்க,

“இதை நாம தப்புனு சொல்ல முடியாது….அதே சமயம் இது நல்லதுனும் சொல்ல முடியாது….காதலிக்கிறது தப்பு கிடையாது ஆனா பார்த்த உடனே காதல் இதெல்லாம் சரி கிடையாது….உனக்கு என்ன தெரியும் அந்த பையனை பத்தி…..”

“ம்ஹம் எதுவும் தெரியாது….”

“பாரு உனக்கு எதுவும் தெரியலை….நீ முதல்ல உன் மனசை ஒரு நிலை படுத்து….அது உனக்கு என்னைக்கும் நல்லது….நாம செய்யறது  தப்பா சரியானு உனக்கு நீயே கேட்டு உனக்குள்ள விவாதிச்சு அதுக்கு பிறகு முடிவெடு….நேத்து பையனை பார்த்தும் உனக்கு எப்படி லவ் வந்துச்சு….”

“அய்யோ அக்கா அது லவ் எல்லாம் இல்லை….”

“சரியில்லை இல்ல….அப்ப அந்த பையன் மேல உனக்கு எதுவும் இல்லை அப்படி தான….”

“அது….அது….”

“என்ன அது அது….எது சொல்லு….உனக்கே தெரியாம மனசுல ஒரு சலனம்….அதான….”அமிர்தா தலை குனிந்தாள்.ஆம் சிவாவை பார்க்கும் போது மனதில் ஏதோ ஒரு உணர்வு அது என்ன என்று புரியவில்லை.

“இந்த வயசுல மனசு சலனப்படுறது இயல்பு தான் ஆனா….அது தப்பான ஆள் மேல வந்துடக்கூடாது பாரு அதுக்கு தான் உன்னை….நீ என்னை தப்பா எடுத்துக்க மாட்டல்ல….நான் உன்னை என் தங்கச்சி மாதிரி தான் பார்க்குறேன்…”

“க்கா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க….நான் அப்படி நினைக்கல…ஆனா நான் தப்பு செஞ்சிட்டதா ஒரு நினைப்பு….”

“நீ செஞ்சது தப்பு தான்….நல்லா யோசி அமிர்தா….சிவாவை பத்தி உனக்கு எதுவும் தெரியாது இப்ப தான் பார்க்குற பேசுற…அவன் யாரு எப்படி பட்டவன் இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்….அதனால தான் சொல்லுறேன்….அவசரப்படாத இப்ப உன்னோட கவனம் முழுக்க நீ படிக்கறதுல தான் இருக்கனும்….மத்ததை ஆரப்போடு….நீ நல்லா படி படிச்சு மேல வா அப்புறம் இதை பத்தி யோசிச்சு முடிவெடு….இதை நான் இவ்வளவு தூரம் சொல்லுறேன்னா….என்னோட அக்கா இப்படி தான் பார்த்தும் காதல்னு ஊரை விட்டு ஓடி போனா ஆனா அவளை திரும்பி நாங்க பொனமா தான் பார்த்தோம்….விசாரிச்சா அவ காதலிச்சவன் அவளை ஏமாத்தி எங்கோ வித்து…..”என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல்  பாரதி அழ,அமிர்தாவிற்கு உள்ளம் திடுக்கிட்டது அவள் கூறியதை கேட்டு.

“அதனால உன்னை எச்சரிக்கை செய்யுறேன்….கவனமா இரு….”என்று கூற அமிர்தா தலையை ஆட்ட,

“சரி சரி….நாம பேசினது போதும் கிளம்பு….இப்ப நீ தெளிவாகிட்ட தான….”என்று கேட்க,

“ம்ம்…..நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும்….”என்று அழுத்தமாக கூற,

“இது தான் வேணும் எனக்கு….கிளம்பு நேரம் ஆகிட்டு….அந்த பையன் கிட்ட ஒழுங்கா கேட்டுகிட்டுவா…..”என்றவள் தன் கை பையில் இருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அமிர்தாவின் கையில் அவள் மறுக்க மறுக்க திணித்து,

“என்கிட்ட இது தான் இருக்கு….வச்சிக்க….ஏதாவது படிக்க வேணும்னா வாங்கிக்க….உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளு….”என்று கூற அவளை கட்டிக் கொண்ட அமிர்தாவின் முன் அவளின் தாய் தந்தையின் உருவப்படம் ஆசிர்வதிப்பது போல் இருந்தது.

கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் பார்க்கில் சிவா கூறிய நேரத்திற்கு முன்பே வந்துவிட்டாள் அமிர்தா.ஆனால் அரைமணிநேரம் கடந்தும் அவன் வந்தபாடில்லை ஒருவேளை மறந்துட்டாரோ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே பார்க்கின் நுழைவாயின் வழியே உள்ளே வந்து கொண்டிருந்தான்.

“ப்பா வந்துட்டாரு….”என்று வாய்விட்டே கூறினாள்.

“கரெட்டா வந்துட்ட…”என்று கூறியவன் பக்கத்தில் இருக்கும் பென்ஜில் அமர்ந்தான்.அவனது கைகளில் பெரிதாக இரண்டு புத்தகங்கள் இருந்தன.

“என்ன பார்த்துக்கிட்டே இருக்க….இங்க வா….உனக்கு சொல்லி கொடுத்துட்டு நான் படிக்கனும்….”

“உங்களுக்கு எப்ப எக்ஸாம்…..”என்று கேட்டுவிட்டு பின் நாக்கை கடித்துக் கொண்டாள்.

“இன்னும் நாலு மாசம் இருக்கு….”என்று கூற,

“நாலு மாசம் இருக்கா….”என்று அவள் இழுக்க,அவளை ஏற இறங்க பார்த்தவன்,

“நாலு மாசம் தான் இருக்கு….முதல்ல உன்னோட விஷயத்தை பாரு….அப்புறம் என்னை பத்தி கேட்கலாம்….”என்று கூற,

“அதான பார்த்தேன் கடுவான் முகத்தை காட்டலையேனு….சரியான கடுவான்…..”என்று முணுமுணுத்துக் கொண்டே நிமிர அவன் அவளை தான் முறைத்துக் கொண்டு இருந்தான்.

“என்ன முணுமுணுப்பு….”

“ஹிஹி….ஒண்ணுமில்ல….”எங்கே தன்னை திட்டுவானோ என்ற பயத்துடன் சமாளிக்க,

“சரி இதை பாரு…..”என்று ஒரு பேப்பரை காட்ட,அது ஒரு வேலைக்காக தபால் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட ஒரு விளம்பரம்.

“இதை முதல்ல முழுசா படி…..உனக்கு என்ன புரிஞ்சிதுனு சொல்லு….”

“இது…..இதுல இந்த வெப் சைட்ல அப்ளை பண்ண சொல்லியிருக்கு…..”என்று அந்த தபால் அலுவலகத்தின் வெப் சைட்டை அவள் வாசிக்க,

“ம்ம்ம்….அது தான் போஸ்ட் ஆபிஸ் வெப் சைட்….நீ இதுல தான் போய் பார்க்கனும்….அதுல வேலை வாய்ப்புனு இருக்கும் அதுல போய் நாம நமக்கு தகுதிக்கு உரிய அப்ளிகேஷனை மட்டும் டவுன் லோட் பண்ணி எடுத்து அப்ளை பண்ணும்….”

“டவுன் லோட் பண்ண தெரியும் தான….”

“ஆங் தெரியும்…..தெரியும்….”

“ம்ம் அப்படி டவுன் லோட் பண்ண அப்ளிகேஷனை பில் பண்ணி பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபிஸ்ல கொடுக்கனும்….முக்கியமா உன்னோட போன் நம்பர் சரியா எழுதனும்….ஏனா எதுவா இருந்தாலும் முதல்ல போனுக்கு தான் வரும்….நீ அப்ளை பண்ணதும் உன்னோட போனுக்கு ஒரு மேஸேஜ் வரும்….அதாவது நீ அப்ளிகேஷன் கொடுத்திருக்கனு சொல்லி வரும்…அதுக்கு அப்புறம் எப்ப எக்ஸாமோ அப்ப உன்னோட ஹால் டிக்கெட் போஸ்ட் ஆபிஸல வந்திருக்குனு சொல்லி வரும் நீ போய் வாங்கிக்கனும்…..இது தான் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணுற முறை புரியுதா…..”என்று கூற அமிர்தாவும் தலையாட்டினாள்.அவன் கூறிய அணைத்தையும் தனது கைபேசியில் இணையத்தின் உதவியுடன் அவளிற்கு செய்தும் காட்டியவன் அவளிற்கு எந்ததெந்த வேலைக்கு தகுதி உண்டு என்றும் கூற,

“என்ன தலையை மட்டும் ஆட்டுற…..ஒரு நோட் எடுத்து குறிச்சி வச்சிக்கோ….”என்று கூற,

“என் கிட்ட நோட் இல்லையே….”என்று கூற,அவளை முறைத்தவன்,

“எதுவும் கையில எடுத்துட்டு வராம எதுக்கு வந்த….நான் இப்ப சொன்னது எல்லாம் அப்படியே உன் மண்டைக்குள்ள ஏறிடுச்சா….”என்று கோபத்தில் கத்த,அமிர்தா பயந்து விட்டாள்.

“சாரி எனக்கு தெரியாது….”

“என்ன தெரியாது….”என்றவன் அவனுடைய நோட்டில் இருந்து ஒரு பேப்பரை கிழித்து கொடுத்து அவளை தான் கூறபவற்றை எழுத சொன்னான்.தொடக்கம் சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாகவே அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!