Skip to content
Post Views: 12,432
உன் சுவாசம் என் மூச்சில்…….13
கதிரவன் கிளம்பி சென்று இரு நாள் முடிந்த நிலையில் மிகவும் சோர்வாக இருந்தாள் எழில்விழி. மனது முழுதும் குழம்பிய நிலைதான்.
ஏற்கனவே இன்னும் ஒரு வாரத்தில் தனி குடுத்தனம் என்று கதிரவன் கூறிய நிலையில் தனியா கதிரவனுடன் இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் கதிரவனின் திடீரென கோவப்படும் குணமும் எப்போது எப்படி பேசுவான் என்று தெரியாத நிலையிலும் என குழம்பிய மனதில் இருந்தவளிடம் தனியே செல்வதற்கு முழுக்காரணம் எழில்விழிதான் என வார்த்தைகளால் அவளின் மனதை நொறுக்கிக் கொண்டிருந்தார் தெய்வானை.
Advertisement
“ அடேங்கப்பா!!!…… பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு ஆளை பார்த்தது இல்லை. என்ன அழகா கம்முன்னு இருந்தே காரியத்தை சாதிச்சுக்கிட்டு இருக்குறா. அம்புட்டும் விஷம். ஒன்னும் சொல்றத்துக்கு இல்ல. எனக்கு எல்லாம் இந்த சாமர்த்தியம் பத்தாதும்மா. எப்பிடி இருந்த மகன் இன்னைக்கு இவ முந்தானைய பிடிச்சுக்கிட்டு சுத்தி இவளையும் கூட கூட்டிட்டுப்போக பார்குறானே அப்போ எப்படி பட்ட வசியக்காரியா இருப்பா. என்னத்த சொல்ல எல்லாம் நான் வாங்குன வரம் இப்படி இங்க எல்லார்கிட்டயும் இருந்து சீப்படணும்ன்னு….. ” என தெய்வானை வாய்க்கு வந்ததை எழில்விழி காதுப்படவே புலம்பிக்கொண்டு நகர,
இந்த இரு நாளாக கேட்பதுதான் என்றாலும் என்றும் போல இன்றும் எழில்விழி மனதில் சுருக்கென வலித்தது. எழில்விழி அனைவருக்கும் டீயை போட்டு குடுத்துவிட்டு பாத்திரத்தை விளக்க அங்கு வந்த சாரதாவோ டங் என்று டம்பளரை வைத்துவிட்டு,
“ ஹம்ம்ஹும் இந்த வீட்டுல எல்லாரும் என்னையைத் தான் குறை சொல்லுவாங்க வீட்டு வேலை செய்யலன்னு. ஆனா நீ செய்றே செய்றேன்னு நைசா தனியா போக பிளான் போட்டுட்ட. ஆனா இந்த மாமா கண்னுக்கு இந்த வீட்டுக்குள்ளையே இருக்குற நான் வில்லி நீ மட்டும் குலமகள் அது எப்பிடித்தான் உன்னைய மாதிரி உள்ள ஒன்னு வச்சு வெளிய ஒன்னு பேசுறவங்கள பிடிக்குதோ ” என சாரதாவும் தன் பங்குக்கு பேச
Advertisement
‘ அப்பிடி நான் என்னத்த பேசி கேட்டுடுச்சுன்னு இந்தக்கா இப்படி பேசுது ’ என மனதில் எண்ணிக் கொண்டு எதுவும் கூறாது எழில்விழி அமைதியாக தனது வேலையை தொடர
Advertisement
“ நான் ஒருத்தி இங்குன கத்துறேனா என்னன்னு ஒரு வார்த்தை கேட்காம நீ வாட்டுக்கு உன் வேலையை பார்க்குற ” என சாரதா எழில்விழியிடம் எகுற
“ என்னக்கா வேணும்?? ” என தளர்வாக கேட்ட எழில்விழியிடம்
“ ஹ்ம்ம் நிம்மதி வேணும் கிடைக்குமா??…. எப்பிடி கிடைக்கும்???….. உனக்கு கிடச்சமாதிரியா எனக்கு வாச்சுருக்கு. உன்னைய ஒன்னு சொன்னா பொறுக்க மாட்டேங்குது உன் புருசனுக்கு. இங்க….. பேசுறதே என் புருஷந்தானே ” என புலம்பிக் கொண்டு சாரதா சென்றுவிட தலையில் கை வைத்து நின்றுவிட்டாள் எழில்விழி.
Advertisement
“ என்னடா கொடுமை இது. இங்க என்னமோ என் புருஷன் ஆசைல கூட்டிட்டுப்போற மாதிரில எல்லாரும் என்னையவே திட்டுறாங்க. இந்த அத்தை தான் சொன்னாங்க ரொம்ப துள்ளாத என் மகன் நீ இங்க இருந்தா அவனை மதிக்கமாட்ட வாய் அதிகம் பேசுவ அதான் உன்னைய அவன் கண்ட்ரோல்ல வச்சுக்க கூட்டிட்டு போறான்னு சொன்னாங்க.
இன்னைக்கு முந்தானை அது இதுன்னு என்னனோமா பேசுறாங்க இவுங்களுக்கு இவுங்க பையனே பரவா இல்லை ” என புலம்பலுடன் வேலையை தொடர்ந்தாள்.
மீதி இருந்த நாட்களும் வேகமாக சென்றது. இந்த நாட்களில் அதிகமாக ஸ்வாமிநாதனிடம் தான் எழில்விழியின் பேச்சு. தெய்வானை சாரதாவிடம் பேச பயந்து கொண்டு எழில்விழி ஒதுங்கி போக மாமியார் மருமகள் உறவில் பெரிய விரிசல் விழுந்தது.
அன்று இரவு கதிரவன் வந்துவிட இரவு உணவு உண்ணும்போது மறுநாள் எழில்விழியை அழைத்து செல்வதாக பொதுவாக கூற அதில் கடுப்பான தெய்வானை,
“ என்னடா உன் இஷ்டத்துக்கு பண்ணுற. அதான் உன் பொண்டாட்டிய கூட்டிட்டுப்போறன்னு உறுதியாகிடுச்சே. அப்புறம் என்ன நல்ல நாளு எல்லாம் பார்க்கவேணாமா??… உன் இஷ்டத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்ற ” என கத்த
“ அம்மா உனக்கு என்ன பிரச்சனை சும்மா கத்தாத. எல்லா நாளும் போலீஸ்காரனுக்கு நல்ல நாலுதான் கெட்ட நாலுதான் சும்மா எதாவது சொல்லாத நளைக்கு போறோம் வேணும்ன்னா நீயும் அப்பாவும் வாங்க வந்து பாலை காச்சி குடுத்துட்டு கிளம்புங்க. நாளைக்கு காலைல வண்டி வரும் இவ ஜாமான் எல்லாம் எடுத்துட்டு போறதுக்கு ” என கூறி சாப்பிட்டு கதிரவன் அறைக்கு சென்றுவிட,
தெய்வானை புலம்பலுடன் இருக்க இரவு வேலையையும் முடித்துவிட்டு அறைக்குள் வந்தாள் எழில்விழி.
வந்தவள் கட்டிலில் கதிரவன் அருகில் படுத்துக்கொண்டு உறங்காது,
‘ கேட்போமா…. வேணாமா… ’ என மனதில் எண்ணிக்கொண்டு கதிரவனை பார்ப்பது பின் கண்ணை மூடுவதுமாக இருக்க,
“ என்ன வேணும் உனக்கு??…. எதுக்கு சும்மா கண்ணை துறக்க மூடன்னு இருக்க ” என கதிரவன் கேட்க
‘ அச்சச்சோ பார்த்துட்டாரு ’ என பயந்து
“ இல்ல சும்மா ”
“ என்ன சும்மா?…. ”
“ சும்மா உங்ககிட்ட ஒன்னு கேட்கலாம்ன்னு….”
“ கேட்கணும்ன்னா கேளு அதுக்கு எதுக்கு கண்ணை மூட திறக்கன்னு இருக்க ”
“ இல்ல நீங்க திட்டுவீங்களோன்னு யோசனை ”
“ அப்போ திட்டுறமாதிரி எதோ கேட்கப்போற ”
“ அப்பிடி இல்லங்க திடிர்ன்னு நீங்க கோச்சுக்கிட்டா ”
“ திடீர்ன்னு கோச்சுக்க நான் என்ன லூசா??? ”
“ ஐயையோ!!!… இல்லைங்க ” என எழில்விழி பதற
“ அப்புறம் ”
“ நான் ஒண்ணுமே கேட்கலங்க ”
“ இல்ல நீ கேளு. எனக்கு தெரிஞ்சுக்கணும் நீ என்ன கேட்கப்போறன்னு. ”
“ அது நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பனும் ” என மெதுவாக தயங்கி கேட்டாள் எழில்விழி.
அதில் கதிரவன் கோவமாக முறைக்க ஆரம்பித்தான் எழில்விழியை. கதிரவனின் கோவ பார்வையை கண்டு,
‘ என்ன கேட்டுட்டேன் எத்தனை மணிக்கு கிளம்பணும்ன்னு தானே இதுல என்ன தப்பு இருக்கு ’ என எண்ணி பயத்தில்
“ என்னங்க அது நாளைக்கு கிளம்ப தோதா இருக்கும்ல அதான் கேட்டேன் ” என ஒருவாறு கூறிமுடித்த எழில்விழியிடம்
“ அப்போ நீ எப்படா இங்க இருந்து போலாம்ன்னு இருந்திருக்க அதான் எத்தனை மணி என்னனு ரொம்ப ஆர்வமா இருக்க ”
‘ ஆத்தி இதை இப்படி யோசிக்கலாம் போல ’ என எண்ணியவள்
“ என்னங்க நான் அப்படி நினைச்சு கேட்கலங்க ”
“ அப்புறம் என்ன??.. கீழ நான் சொல்லும்போது எத்தனை மணிக்குன்னு கேட்டுருக்க வேண்டியது தானே இப்ப யோசிச்சு கேட்போமா வேணாமான்னா என்ன அர்த்தம்??…. ” என கதிரவன் நிறுத்த எழில்விழியோ பயத்தில்
“ என்ன அர்த்தம்??? ” என முணுமுணுக்க அதை சரியாக கேட்ட கதிரவன்,
“ என்ன நக்கல் பண்ணுறியா??… ” என கேட்க
“ அச்சச்சோ சத்தியமா இல்லங்க ”
“ அப்புறம் என்ன அர்த்தம்ன்னு நீயும் சொல்லுற ”
“ இல்ல அது ப்லோவ்ல… ”
“ அப்போ ப்லோவ்ல என்னவும் சொல்லுவியா??… ”
“ இல்லங்க…. ”
“ இங்க பாரு நீ இப்போ இவ்வளவு நேரம் கழிச்சு எத்தனை மணிக்குன்னு கேட்கும் போதே தெரியுது நீ எவ்வளவு சந்தோஷத்துல இருக்கன்னு. ஒரு விஷயம் நல்லா உன் காதை குடுத்து கேட்டுக்கோ. எங்க அப்பா அம்மா எனக்கு ரொம்ப முக்கியம். அவுங்க இல்லாம நான் இல்ல.
அதுலயும் என் அப்பாவை விட என் அம்மாதான் ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தது. அதனால நான் என் அம்மாவை பேசுறேன்னு நீ எதாவது மரியாதை குறைச்சலா நடந்த நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. என் அம்மாவுக்கு அப்புறம் தான் மிச்ச எல்லாரும். சீக்கிரம் தூங்கு காலைல ஒரு ஆறு மணிக்கு கிளம்பனும் ” என கூறி கதிரவன் உறங்கிவிட,
உறக்கம் வராமல் எழில்விழி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். ‘ என்ன கேட்டேன் அதுக்கு எதுக்கு இவ்வளவு கோவமா பேசுறாரு ம்ப்ச் ’ என சலிப்பே வந்தது எழில்விழிக்கு இந்த வாழ்க்கையை எண்ணி.
மறுநாள் அழகாக விடிய காலை ஆறு மணி போல் ஸ்வாமிநாதன் தெய்வானை கதிரவன் எழில்விழி என அனைவரும் புதுக்கோட்டைக்கு கிளம்பினர். இரவு நடந்த உரையாடலில் எழில்விழி இனி என்னவோ என பயம் அதிகம் இருக்க ஒருவித நடுக்கத்துடன் கிளம்பினாள்.
ஒரு வழியாக ஊர் வந்து சேர வாடகை வீட்டிற்கு சென்றனர். அங்கு எழில்விழிக்கு சந்தோச அதிர்ச்சியாக அன்னலெட்சுமியும் வெங்கடேசனும் நின்றிருந்தனர். அவர்களை கண்டதும் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் குறைய வேகமாக அன்னலெட்சுமியை அணைத்துக் கொண்டு கண்ணீர் சிந்த
“ இப்போ என்ன புருஷன்கூட தனியா தானே இருக்க போற அப்புறம் என்னமோ நரகத்துல தள்ள போற மாதிரி உங்க அப்பா அம்மாவ பார்த்துட்டு அழற. போ…. போயி வீட்டை திறந்து பால் காச்ச என்ன வேலைன்னு பாரு என கடுப்புடன் கூறிய தெய்வானையை கண்ட “ அன்னலெட்சுமி, “ வாங்க மதினி ” என அழைக்க வெங்கடேசனும்,
“ வாம்மா தங்கச்சி ” என கூற
“ ஹ்ம்ம் அதோ வந்துட்டோமே இன்னும் என்ன???.. எல்லாரும் உள்ள வாங்க ” என கூறிவிட்டு
“ இவுங்களை எல்லாம் கூப்ட்டுருக்கான் என்கிட்டே இவுங்க வரதை சொல்லவே இல்ல ” என தெய்வானை முணுமுணுப்புடன் நகர அது அங்கு இருந்த அன்னலெட்சுமி வெங்கடேஷன் எழில்விழி காதிலும் விழ,
அவர்கள் சங்கடத்துடன் மனம் சுணங்க நிற்க சரியாக வண்டியில் இருந்து இறங்கி வந்த ஸ்வாமிநாதன்,
“ அடடே!!… மச்சான் வாங்க வாங்க நீங்க வரப்போறதை சொல்லவே இல்லையே இந்த பைய. வாம்மா தங்கச்சி எப்பிடி இருக்கிங்க ” என கேட்டவரிடம்
“ நல்லா இருக்கோம் மச்சான். நேத்து சாயங்காலம் தான் மாப்பிள்ளை சொன்னாங்க இந்த மாதிரி வீடு குடிபோறோம்ன்னு. அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போவோம்ன்னு வந்தோம் ” என வெங்கடேசன் கூற
“ சரி மச்சான் வாங்க ” என இருவரையும் அழைத்துக்கொண்டு ஸ்வாமிநாதன் வீட்டினுள் செல்ல அதற்குள் எழில்விழி உள்ளே வேலை பாத்துக்கொண்டிருந்தாள்.
பின் கதிரவனும் வந்தவர்களை வரவேற்றான். ஒரு பெரிய விசாலமான கூடம் ஒரு அடுக்களை ஒரு சிறிய படுக்கை அறை வீட்டினுள் கழிவறை குளியலறை தனியாக கூடத்தின் மூலையில் இருந்தது எழில்விழி கதிரவன் இந்த புதிய இல்லம்.
வேலைகள் சீக்கிரம் முடிய வீட்டை வேகமாக சுத்தம் செய்து ஒருவழியாக சாமான்களை பாதி அடுக்கி வைத்து பாலை காய்ச்சி முடிக்க மதியம் ஆகிவிட மதிய உணவையும் வெளியே கதிரவன் வாங்கி வந்து தந்தான். அனைவரும் உண்டு சிறுது நேரம் படுக்கை அறையில் தெய்வானை படுத்திருக்க கூடத்தில் ஸ்வாமிநாதன் படுத்திருந்தார். நாற்காலியில் அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருக்க,
அடுக்களையில் மீதி வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்விழி அவருக்கு உதவியாக அன்னலெட்சுமி செய்து கொண்டிருந்தார். வெங்கடேசன் அடுக்களை வாசலில் நின்று அன்னை மற்றும் மகளின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
“ ஏன் எழிலு உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் ஒன்னு பிரச்சனை இல்லைல ” என அன்னலெட்சுமி கேட்க
“ என்னம்மா ஏன் அப்பிடி கேட்குறீங்க நான் நல்லாத்தான் இருக்கேன் ”
“ இல்ல நீங்க ஒன்னும் சிரிச்சுக்கூட பேசிக்குற மாதிரி தெரியலையே அதான் ”
“ ம்மா அதுக்காக எந்நேரமும் சிரிச்சுகிட்டேவா இருப்போம் ” என எழில்விழி இரவு நடந்ததை கூறாது பேச
“ அப்போ சரி இந்தா இதுல வாஷிங் மெஷின் பிரிட்ஜ் டிவி எல்லாம் வாங்க காசு இருக்கு மருமகன் கிட்ட குடுத்து உங்களுக்கு பிடிச்சமாதிரி வாங்கிக்கோங்க ” என கூறி அன்னலெட்சுமி பணத்தை எழில்விழியிடம் குடுக்க
“ அச்சச்சோ இது எல்லாம் வேணாம் ம்மா ” என பதறினாள் மகள் அதில்,
“ ஏன்டி இப்ப பயப்புடுற காசு தானே கொடுக்குறோம் காசா கேட்டோம் ” என அன்னலெட்சுமி குழப்பத்துடன் கேட்க
“ அம்மா நீயே உன் மருமகன்கிட்ட குடு நான் கொடுக்கமாட்டேன் யாரு வாங்கிக் கட்டிக்குறது”
“ இவ ஒருத்தி கல்யாணமாகி ஒரு மாசம் ஆக போகுது இன்னும் பயப்புடுறா புருஷன் கிட்ட பேச ” என புலம்பிக் கொண்டு அருகில் இருந்த வெங்கடேஷிடம் “ என்னங்க ” என அழைக்க
“ என்ன அன்னம்??… ”
“ இந்தாங்க காசை மருமகன்கிட்ட குடுங்க ” என கூற
“ எது நானா!!…. ”
“ என்ன நானா….. பொண்ணுக்கு அப்பன் நீங்க குடுக்காம யாரு குடுப்பா போங்க”
“ இல்ல அன்னம் ” என கூறி அன்றைக்கு வீட்டில் எண்ணெய்க்கு பேசிய பேச்சே மனதில் நிற்க தயக்கத்துடனே நின்றார் வெங்கடேசன்.
“ ம்ப்ச் என்ன யோசனை போங்க போய் குடுங்க ” என அன்னலெட்சுமி கூறி பணத்தை வெங்கடேசனின் கையில் திணித்து அனுப்ப தயக்கத்துடன் போய் கதிரவன் அருகில் நின்றார்.
போனை பார்த்துக்கொண்டிருந்தவன் அருகில் மாமனார் இருக்கவும்,
“ என்ன மாமா உட்காருங்க ” என கூறி அருகில் நாற்காலியை நகர்த்தி போட வெங்கடேசனும் எதுவும் கூறாது அமைதியாக அருகில் அமர்ந்தார்.
தயக்கத்துடனே தன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேசனின் முகத்தை பார்த்த, கதிரவன்
“ என்ன மாமா எதுவும் பேசணுமா???.. ” என கேட்க
“ ஹ்ம்ம் ஆமாப்பு ”
“ என்ன??… ”
“ அது…. பணம்…. ”
“ வேணுமா???… ”
“ இல்ல ”
“ அப்புறம்??… ”
“ பணம் குடுக்கணும் ”
“ யாருக்கு??… ஊருல கடன் எதுவும் இருக்கா அதுக்கு பணம் தேவைப்படுதா??? ”
“ இல்ல இல்லப்.பு உங்களுக்கு ”
“ எனக்கு என்ன??… ”
“ ம்ப்ச் உங்களுக்கு பணம் குடுக்கலாம்ன்னு ”
“ எதுக்கு நான் கேட்கலையே ” என கதிரவன் கூற,
‘ மனுஷன் நம்மள பேசவிடமாட்டேங்குறாரே. வேமா சொல்லிப்புட்டு போகணும் ’ என எண்ணி அன்னலெட்சுமியை காண அவரோ கண்களால் முறைத்துக் கொண்டிருந்தார்.
அருகில் இருந்த மகளிடமோ,
“ பார்த்தியா உங்க அப்பாவ. என்னமோ புது பொண்ணு மாப்பிள்ளைக்கிட்ட பேசுற மாதிரி ஒத்த ஒத்த வார்த்தை யா பேசுறதை ” என புலம்ப அங்கு வெங்கடேசனோ மனைவியின் கோவ பார்வையில்
“ இல்ல வீட்டுக்கு தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கலைலப்பு ”
“ ஆமா மாமா இப்போதான் குடி வந்துருக்கோம் இனிமே தான் எல்லாம் வாங்கணும் ”
“ அதான் வாங்க காசு கொண்டு வந்துருக்கோம் ” என கூறி பணத்தை நீட்டிய வெங்கடேசனை கண்டு ஒன்றும் கூறாது “ விழி!!!… ” என கத்த அந்த குரலில் இருந்த அழுத்தத்தில் பயந்த எழில்விழி தடதடக்கும் இதயதுடன் வேகமாக வந்து கதிரவன் எதிரில் நிற்க அன்னலெட்சுமியும் மருமகனின் குரலில் சிறுது நடுக்கம் வர வெங்கடேசனின் அருகில் வந்து நின்றார்.
“ நான் எதுவும் வாங்கித்தர மாட்டேன்னு உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி என்கிட்டே காசு குடுக்க சொன்னியா??? ” என கதிரவன் எழில்விழியிடம் கேட்க
“ ஐய்யயோ!!….. இல்லைங்க அவுங்கதான்…. ”
“ என்ன அவுங்கதான் என்னைய என்ன கையாலாதவன் ஒன்னும் செய்யமாட்டேன்னு நினைக்குறியா??….. அந்த நினைப்பு இருந்தா இப்பவே நீ உன் அம்மா அப்பா கூட ஊருக்கு கிளம்பு. நீ ஒன்னு அவ்வளவு கஷ்டப்பட்டு இங்க இருக்க வேணாம்” என கதிரவன் கூற அதில் அதிர்ந்து எழில்விழி கண்ணீர்விட வேகமாக அன்னலெட்சுமியோ,
“ ஐயோ!!.. மாப்பிளை எங்க பொண்ணு எதுவும் கேட்கல நாங்களா தான் எங்க பொண்ணுக்கு வாங்கி கொடுப்போம்ன்னு ” என பேசிக் கொண்டிருக்கையில்
“ அப்போ உங்க பொண்ணுக்கு நீங்க வாங்கிக் கொடுங்க. என் பொண்டாட்டிக்கு இல்ல. என் சம்பளத்துல என்ன முடியுமோ அதுல தான் அவ குடும்பத்தை நடத்தணும் சும்மா ஒவ்வொண்ணையும் நீங்க வாங்கி குடுத்தா அப்போ நான் எதுக்கு இங்க ” என அன்னலெட்சுமியிடம் எகுறிய கதிரவனை கண்டு அனைவரும் அதிர்ந்து நிற்க,
இவனின் சத்தத்தில் முழித்த சுவாமிநாதனும் தெய்வானையும் என்ன ஆச்சு என கூடத்திற்கு வந்தனர். அதற்கு ஒன்றும் கூறாது அமைதியாக கதிரவன் நிற்க மருமகளின் கண்ணீரில் ஸ்வாமிநாதன் அவளிடம் என்னவென விசாரிக்க எழில்விழியோ விசும்பலுடன் நடந்ததை கூறி,
“ நிஜமா நான் எதுவும் எங்க வீட்டுல கேட்கல மாமா ” என கூற
தெய்வானையோ, ‘ இவன் எல்லாம் இந்த காலத்துல பிழைக்கிற மாதிரிதான். அவனும் கேட்க மாட்டான் செய்றதையும் வேணாம்ன்னு சொல்லிடுவான் என மனதில் புலம்பிக்கொண்டு ’,
“ டேய்!!!… இப்போ என்ன ஊரு உலகத்துல செய்யாததையா செய்றாங்க ”. அவுங்க பொண்ணுக்கு செய்றாங்க. இதுக்கு எதுக்கு கத்துற ” என தெய்வானை மகனை கடிய
“ அம்மா நீ இப்போ எதாவது வாயை துறந்த நான் என் மாமனார் ஊருக்கு ட்ரான்ஸ்பெர் வாங்கிட்டு போயிட்டே இருப்பேன் ” என கூற அதில் அதிர்ந்து தெய்வானை அமைதியாக
கதிரவன் தனது கூரிய விழிகளால் பார்த்துக்கொண்டே எழில்விழியை,
“ நீ எதுவும் கேட்கல சரி ஆனா பணம் கொண்டுவந்து என்கிட்ட குடுக்க போறாங்கன்னு உனக்கு தெரியும்தானே ” என கேட்க
அதுக்கு ஒன்றும் கூறாது அமைதியாக தலையசைத்து ஆம் என கூற கதிரவன் கோப விழிகளால் அவனின் விழியை முறைத்துக் கொண்டிருந்தான்.
“ அப்போ உனக்கு தெரிஞ்சே குடுக்க சொல்லிருக்கன்னா என்ன அர்த்தம்??… உனக்கு நான் வாங்கி குடுப்பேன்னு என் மேல நம்பிக்கை இல்ல. என்கிட்ட கேட்டியா ஒரு வார்த்தை உனக்கு அப்போ நான் முக்கியம் இல்ல உனக்கு இஷ்டத்துக்கு செய்வ….” என கதிரவன் வார்த்தைகளை கத்தி போல வீச அது சரியாக எழில்விழியின் இதயத்தை பதம் பார்த்தது.
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை
வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை
என்னை விட …
உன்னை விட
error: Content is protected !!