Skip to content
Post Views: 12,528
உன் சுவாசம் என் மூச்சில் 25
“ ஏன் கோவமா இருக்கேன்னு உனக்கு தெரியாது??….” என கோவமாக கேட்ட கதிரவனின் கண்களை கண்டு பயத்தில் மிரண்டு ஓரடி பின்னடைந்த எழில்விழி கலக்கத்துடன்,
“ இல்லங்க தெரியல நான் எதுவும் தப்பு பண்ணுனேனா??…” என அவளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் திரட்டி பேசிய எழில்விழியை கண்டவன்
Advertisement
“ என்ன தப்பா????… ஏன் உனக்கு தெரியாது ” என கேட்டவனிடம்
“ இல்லங்க நீங்க எதுக்கு கோவமா இருக்கீங்கன்னு தெரியலைங்க ”
“ ஹ்ம்ம் உனக்கு எப்பிடி தெரியும் நீங்கதான் இங்க கஷ்டபட்டுட்டு இருக்கீங்களே. உங்களுக்கு கவலைகளே அதிகமா இருக்கும். இதுல என்னை பத்தி என் மனசை பத்தி யோசிச்சா பேச போற??….” என கேட்டவனின் கண்களில் இருந்த வலியில் அவனை நெருங்கியவள்
Advertisement
“ என்னங்க நான்….. நான்…. என்னங்க செஞ்சேன்??… எதையாவது அப்பிடியே செஞ்சிருந்தாலும் என்ன அறியாம உங்கள கஷ்டபடுத்திருப்பேன் ஒழிய என் மனசறிஞ்சு ஒன்னும் செஞ்சுருக்க மாட்டேங்க” என கலங்கிய கண்களுடன் பேசிய எழில்விழியை கண்டவன்
Advertisement
“ நீ அம்மா கிட்ட பேசும்போது என்ன சொன்ன??…” என கேட்ட கதிரவனை கண்டு
“ நான் என்ன சொன்னே??…” என மெதுவாக முழித்துகொண்டு கேட்டவளை கண்டு பல்லை கடித்துக்கொண்டு கதிரவன் எழில்விழியை முறைக்க
“ இல்லங்க நெஜமா எனக்கு நியாபகம் இல்ல. அப்போ குழந்தைப்பத்தி பேசுனதுல எதுவும் அத்தைகிட்ட மரியாதை இல்லாம பேசிட்டேனா??…” என மெதுவாக சந்தேகத்துடன் கேட்டவளை கண்டு முறைத்துக்கொண்டு
Advertisement
“ ஹ்ம்ம் நீ பிறக்குற உன் மகளுக்கு உன்கிட்ட இல்லாத தைரியம் தன்னம்பிக்கை படிப்பு வேலை எல்லாம் குடுக்கனும்ன்னு சொன்ன”
“ ஹ்ம்ம் ஆமாங்க ”
“ அப்புறம் என்ன சொன்ன??… நல்ல வாழ்க்கை குடுக்கணும்ன்னு சொன்னியே அதுக்கு என்ன அர்த்தம்??… அப்போ உனக்கு நல்ல வாழ்க்கை அமையல.. நான் அப்படி என்னம்மா கொடுமை படுத்திட்டேன்??… நீ என்ன இங்க அவ்வளவு கஷ்டப்பட்டுட்டா இருக்க??..” என கோவமாக வலியுடன் பேசியவனை கண்டு
“ ஐயையோ!!!… என்னங்க நான் பொதுவா எனக்கு கிடைக்காதது என் மகளுக்கு கிடைக்கணும்ன்னு சொல்லும்போது அப்படியே நல்ல வாழ்க்கைன்னு சொன்னேனே தவிர்த்து என் மனசார எதையும் சொல்லலைங்க ” என கெஞ்சல் குரலில் கூறியவளிடம்
“ அது எப்பிடி உன் மனசுல இல்லாமலையா உன் வாயில அந்த வார்த்தை வந்திருக்கும் ”
“ ஐயோ!!.. இல்லங்க…..” என மறுபடியும் மறுத்து கூறவந்தவளிடம் பேசவி டாது
“ அப்புறம் என்ன சொன்ன என் புருஷனே நினைச்சாலும் இந்த குழந்தையை அழிக்க மாட்டியா??.. அப்போ நான் உன்னைய குழந்தையை அழிக்க சொல்லுவேன்னு நினைச்சியா??.. ”
“ இல்லங்க…. அது… அது… நீங்க அமைதியா நின்னீங்க….”
“ நின்னா??….. சொல்லு நின்னா நான் குழந்தையை அழிக்க சொல்றேன்னு அர்த்தமா??…. நான் என்ன அவ்வளவு கொடூரமானவனா??.. அவ்வளவுதான் என்னை பத்திய உன் புரிதல். பரவாயில்லை விடு.
ஒரு குழந்தைய கருல அழிக்கிறது தப்பு. அதை நான் ஒரு போலீஸ்காரனா இருந்துகிட்டு எப்பிடி செய்வேன்னு என்னைய பத்தி நினைச்ச??..
. அப்படி கோவமா கத்துற எனக்கு பெண் குழந்தை வேணும்ன்னு. ஏன் நான் அங்க இல்ல நான் பேசமாட்டேன். அப்படியா அம்மா பேச்சை கேட்டு என் பிள்ளையை வேணாம்ன்னு சொல்லுவேனா நான். ஆமா கோவம் வந்தா கத்துவேன் திட்டுவேன் தான் அதுக்காக ஒரு குழந்தையை கருல கொல்லுற கொலைகாரன்னு நினைச்சியா??…”
“ ஐயோ!!.. இல்லை இல்லங்க… அந்த நேரம் எதோ ஆதங்கம் பெண் குழந்தை ஏக்கம் நீங்களும் இதுவரைக்கும் பெண் பிள்ளை வேணும்ன்னு சொன்னது இல்லை…..” என எழில்விழி தன்னை புரிய வைத்துவிடும் நோக்கத்தில் பேசும் போது
“ ஆமா சொன்னது இல்ல. ஏன்னா எனக்கு பெண் குழந்தை பத்தி சிந்தனை இல்லை ஆசையும் இல்ல. அதோட இப்பவும் எனக்கு பெண் குழந்தை பிறக்கணும்ன்னு நினைக்கவே இல்ல. அதுக்கு காரணம் எங்க அம்மா சொன்ன மாதிரி நகை நட்டு சீறு அது எல்லா இல்ல.
நான் எதாவது சொன்னாலே அது கோவப்பட்டு கத்துறேன் திட்டுறேன்னுதான் என் அம்மா அக்கா ஏன் நீ கூட நினைப்பீங்களே தவிர்த்து என்ன காரணம், நமக்கு என்ன நல்லது இருக்கு, கதிரு காரணம் இல்லாம சொல்லமாட்டானேன்னு நினைக்க மாட்டீங்க. என் மேல கோச்சுக்குவீங்க. இதுல நாளைக்கு பிறக்குற பிள்ளையும் அப்படித்தான் நினைக்கும். இந்த அப்பாவுக்கு வேற வேலை இல்லைன்னு” என கதிரவன் பேசிக்கொண்டிருக்கையில் இடைநிறுத்திய எழில்விழி,
“ நம்ம பாப்பா அப்படி எல்லாம் நினைக்காதுங்க…..” என பிறக்காத மகவுக்காக பேசியவளை கண்டவன்
“ நினைக்காது நினைக்கல நான் என் எண்ணத்தை சொல்லுறேன். ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு அம்பது வயசுல ஒரு பெரியவர் எங்க ஸ்டேஷனுக்கு வந்தாரு. கட்டட தொழிலாளி போல. கை காலு எல்லா அந்த சிமெண்டுலையே வேலை பார்த்ததால ஒரே புண்ணு பொத்தல் பொத்தலா இருந்துச்சு. அவரு வந்து எங்க இன்ஸ்பெக்டர் காலுல விழுந்து கதறுனாரு” என கூறி நிறுத்தி கதிரவன் எழில்விழியை நோக்க அவளோ புரியாது கணவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ எதுக்கு தெரியுமா??… அவரோட ஒரே மக இருபது வயசு பிள்ளை காலேஜு கடைசி வருஷம் போல. எதிர்த்த வீட்டு பையல லவ் பண்ணி வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணிக்கிச்சு.
அந்த பையன் சரியான பொறுக்கி போல. தண்ணி கேசு வேற அதோட ரெண்டு பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு அப்புறம் கழட்டிவிட்டுருக்கான். என் மகளை மீட்டு என்கிட்டே ஒப்படைங்க ஐயான்னு அந்த பெரிய மனுஷன் கதறுனாரு.
சரின்னு நாங்களும் அந்த பிள்ளையையும் அந்த பையனையும் கூப்பிட்டு விசாரிச்சா நான் என் அப்பகூட போ மாட்டேன் எனக்கு என் காதல்தான் பெருசுன்னு சொல்லுது அந்த பிள்ளை.
அந்த மனுஷன் பெத்த மனசு கேட்காம அந்த பிள்ளை காலுல கூட விழுந்து வீட்டுக்கு வான்னு கெஞ்சியும் அந்த பிள்ளை அப்பாவே வேணாம்ன்னு அவன் கூட போயிடுச்சு. அப்போ அவரு அழுத அழுகை இருக்கே சொல்ல முடியல விழி.
உனக்கு தெரியுமா ஒரு ஆம்பளைங்க அவ்வளவு சீக்கிரம் அழமாட்டாங்க. ஆனா அன்னைக்கு அந்த மனுஷன் அழுததை பார்த்துட்டு மனசு கேட்காம அவருகிட்ட போய் விடுங்க சார் போய் தொலையுது பட்டாதான் தெரியும் பெத்தவங்க அருமைன்னு சொல்லி ஆறுதல் படுத்துறேன்.
அதுக்கு அந்த மனுஷன் சொல்லுறாரு ஐயோ சார் என் மக வாழ்க்கை போச்சேன்னு அப்பையும் அவரு பொண்ணு வாழ்க்கை பத்தி யோசிச்சுதான் அழுத்துருக்காரு. இதை யோசிக்கலையே எனக்கு பயம் தான் வருது விழி. ஒரு வேளை என் மகளும் இப்படி ஒரு நிலைமைல நிக்க வச்சுட்டா நான் அப்பவே நெஞ்சு வெடிச்சு செத்துடுவேன். அதான் பொம்பள பிள்ளைன்னா பயமா இருக்கு. ம்ப்ச் பாப்போம் ஆண்டவன் என்ன எழுதிருக்கான்னு ” என பேசிக்கொண்டே உறங்க சென்றுவிட கணவன் சென்ற திசையை பார்த்துக்கொண்டே இருந்த எழில்விழிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
கதிரவனின் பேச்சில் அவனுடைய பயம் நியமானதுதான். ஆனால் அதற்காக எல்லா குழந்தைகளும் அப்படி என்று சொல்ல முடியாதே!!…. குழந்தை நன்முறையில் வளர்ப்பது பெற்றவர்கள் கையில் தானே இருக்கிறது. இதில் அனைத்து தவறுகளையும் குழந்தைகள் மேல் வைக்க முடியாதே??…
அதில் பெற்றவர்கள் பங்கும் இல்லாமல் இருக்காதே. நாம் நல்ல பெற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் அறிவோடும் சுயஒழுக்கத்தோடும் நன்முறையில் வளர்க்கலாமே என நேர்மறையாக எண்ணியவள் கதிரவன் மனதில் இருந்த எண்ணங்களை புரிந்து கொண்டதில் மன வருத்தம் கூட குறைய,
‘ நாளை காலை கணவனோடு தெளிவாக பேசிக்கொள்ளலாம்’ என எண்ணி உறங்க சென்றாள் எழில்விழி.
இங்கு கதிரவனுக்கோ எழில்விழியிடம் பேசியதில் மனசு பாரம் குறைந்தாலும் ஒரு வித பயமும் எரிச்சலும் மனதில் ஏற்பட அதில் மனசு இறுக்கமாக உணர ஆரம்பித்தது.
அதனால் எங்கு எழில்விழி கருத்தரித்திரிக்கும் இந்த நிலையில் நிச்சயம் தன்னுடைய மன இறுக்கத்தில் பேசியே மனைவியை காயப்படுத்திவிடுவோம் என்ற எண்ணமும் மனதில் வர நீண்ட நேர சிந்தனைக்கு பின் ஒரு முடிவு எடுத்தவனாக உறங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலையில் எழுந்த எழில்விழி வேலைகளை முடித்துவிட்டு கணவனிடம் பேச எண்ணி நேரம் பார்த்துக்கொண்டிருக்க கதிரவனோ எழில்விழி எண்ணம் புரியாது அவளின் எண்ணத்திற்கு வாய்பளிக்காமல் அவன் வேலை என சீக்கிரம் கிளம்பி விட ஒரு மாதம் அப்பிடியே சென்றது.
எழில்விழியால் கணவனிடம் தன் மனதில் உள்ள சிந்தனைகளை பேசமுடியவில்லை. கதிரவனுக்கோ எங்கே மனைவியை நெருங்கிவிட்டால் நிச்சயமாக காயப்படுத்திவிடுவோம் என்ற எண்ணத்தில் விலகலை ஏற்படுத்திவிட எழில்விழி இன்னும் தவித்து போனாள்.
காலமும் வேகமாக செல்ல கண்ணா வயிற்றில் இருக்கும் போது கணவனிடம் கிடைத்த அன்புக்கு சேவைக்கு மனசு ஏங்க அவளுடைய ஏக்கம் புரியாது ஐந்தாம் மாதத்தில் கதிரவன் பெரிய குண்டை தூக்கி போட்டான்.
நீண்ட நாளுக்கு பின்,
“ விழி இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என கதிரவன் மனைவியை அழைக்க,
எழில்விழி சந்தோஷத்தில் அவனின் அருகில் அமர்ந்துகொண்டு, “ என்னங்க??..” என ஆவலாக கேட்ட அவளின் விழியில் தெரிந்த காதலில் அவளின் முகத்தில் தெரிந்த பரவசத்தில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துவிட்டான் கதிரவன்.
“ என்னங்க???….” என எழில்விழி மீண்டும் கேட்டு அவனின் தோலினை பற்றி உலுக்க அதில் சுயம் பெற்றவன்,
“ ஹான்!!… விழி”
“ என்னங்க??..”
“ அது நாளைக்கு நாம மதுரைக்கு போறோம்”
“ எதுக்குங்க??.. அதான் அப்பா அம்மா மாசம் ரெண்டு தடவை வந்துட்டு போறாங்களே” என புரியாது குழப்பத்துடன் கேட்டவளிடம்
“ அது நான் இன்னும் ரெண்டு நாளுல கமாண்டோ ட்ரைனிங் போறேன். அதான் உன்னைய தனியா விட வேண்டாம்ன்னு மதுரைக்கு போக சொல்லுறேன்” என கதிரவன் கூற
“ என்னது கமாண்டோ ட்ரைனிங்கா!!… அதுவும் ரெண்டு நாளுலய்யா??… சொல்லவே இல்ல. எப்போ வருவீங்க??…” என கேட்டவளை கண்டு அவளின் விழி நோக்காது தலையை திருப்பி கொண்டு,
“ வர அஞ்சு மாசம் ஆகும். இடைல லீவு போட முடியாது” என கதிரவன் கூற அதில் அதிர்ந்தவள்,
“ என்னங்க சொல்லுறீங்க!!!… எதுக்கு போறிங்க அது எல்லாம் வேணாம் நீங்க என்கூட இருங்க. நீங்க இல்லாம நான் எப்பிடி இருப்பேன்னு கொஞ்சமாது யோசிச்சிங்களா??… நீங்க போக வேணாம் இங்க எனகூட இருங்க” என அவனின் பிரிவு நினைத்து எழில்விழி படபடக்க அதில் கடுப்பான கதிரவன்,
“ ஏய்!!… என்ன??.. நான் இங்கையே இருந்து உனக்கு எடுபிடி வேலை பார்க்கணுமா??… கடைசி வரைக்கும் நான் இப்படி கான்ஸ்டபிலவே இருக்கனும். என்ன நினைச்சுகிட்டு இருக்க??…” என கத்த அவனின் கத்தலில் அதிர்ந்தவள்
“ இல்லங்க அது…. அது…. நீங்க இல்லாம நான் எப்படி??….” என மெதுவாக இழுக்க
“ ஏன் நான் என்ன செத்தா போக போறேன்???… சும்மா அது என்ன நீங்க இல்லாமன்னு சொல்ற.”
“ ஏங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க” என எழில்விழி கண் கலங்க
“ என்ன பெரிய வார்த்தை…. சும்மா ஏதாவது சொல்லுவியா??… ஒரு மனுசன் நல்ல விஷயம் பேசுறப்போதான் கடுப்பேத்துவ. என்ன இப்போ உன்னைய உன் அம்மா வீட்டுக்குத்தானே அனுப்புறேன் இல்ல ஆளப்பிறந்தானுக்கு அனுபுறேனா. எப்படியும் நீ பிரசவம் குழந்தை வளர்ப்புன்னு நீ ஒரு மூணு மாசம் அங்கதான் இருக்கப்போற நானும் என் ட்ரைனிங் முடிஞ்சு வந்துடுவேன்” என கதிரவன் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில் பேசிய கணவனிடம்
“ ஏங்க என் பிரசவத்தப்ப கூட வரமுடியாதா??….” என விழி நீரை அடக்கியபடி கேட்ட எழில்விழியிடம் எதுவும் கூறாது அமைதியாக நின்றவன் மனதில் முதன் முதலில் மகனை ஏந்திய நொடி நியாபகம் வர முகத்தில் மென்மையை தத்தெடுக்க தன்மையான குரலில்,
“ ட்ரைனிங்க்கு இடைல வர முடியாது விழி. அங்க மலை பகுதினால நிச்சியம் சிக்னலும் இருக்காது. கொஞ்சம் கஷ்டம்தான். நீ தேவை இல்லாம எதையாவது யோசிச்சு மனசை உடம்பை கெடுத்துக்காம நல்லபடியா குழந்தையை பெத்து எடு அது போதும்.
அதோட என் மனசும் ஒருவித இறுக்கமாதான் இருக்கு. உன்னோட இருந்தா நிச்சயமா எதாவது பேசி உன்னைய காயப்படுத்துவேன் விழி. அதான் இத்தனை நாளா உன்கூட பேசாம கொஞ்சம் தள்ளி இருந்தேன். ஆனா உன்னைய பக்கத்துல வச்சுக்கிட்டு பேசாம இருக்குறதுக்கு கஷ்டமா இருக்கு.
அதான் சொல்றேன் நானும் ட்ரெய்னிங் போயிட்டு நீயும் உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா இந்த இடைப்பட்ட பிரிவு நிச்சயம் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும். மனசும் ஒரு மாதிரி ரிலாக்ஸ் ஆகிடும். புருஞ்சுக்கோ நீ அழுதுகிட்டே வழி அனுப்புனா எனக்கு அங்கேயும் நிம்மதியா இருக்க முடியாது ” என கதிரவன் பேச அவனின் பயமும் கோவமும் புரிந்தவள் ஒன்றும் கூறாது சரி என தலை ஆட்டிவிட்டாள்.
பின் கதிரவன் எழில்விழியையும் கண்ணாவையும் மதுரையில் விட்டுவிட்டு அவனுடைய வீட்டிலும் சொல்லிவிட்டு ட்ரைனிங்குக்கு போய்விட்டான்.
கதிரவன் வேலை என்று வந்துவிட்டால் அவன் வேறு எதை பற்றியும் சிந்திக்க மாட்டான். இதில் அவனுடையது கமாண்டோ ட்ரைனிங். அதில் கடுமையான பயிற்சியில் இருப்பவனுக்கு வீட்டில் இவனின் பிரிவால் ஏங்கி இருப்பவள் பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாது இருக்க அவளுடைய அழைப்பு வரும் போது மட்டும் அவளுடைய சிந்தனையும் குழந்தை பற்றிய சிந்தனையும் வரும்.
எழில்விழிக்கோ கதிரவன் பற்றிய சிந்தனை மட்டும்தான். அவனின் இந்த பிரிவு காலம் அவளுக்கு கதிரவன் மேல் இன்னும் அதிகமான காதலை குடுத்தது.
காலமும் வேகமா செல்ல சரியாக ஒரு திங்கட்கிழமை காலை எட்டு மணி அளவில் பிரசவ வலி வந்து எழில்விழியை மருத்துவமனையில் சேர்த்திருக்க அவளின் அதிக வலியில் அலறலில் கதிரவன் எழில்வியின் ரெண்டாவது பிள்ளையாக ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அவர்களில் புதல்வி பிறந்த அதே நேரம் கதிரவன் மலை பகுதியில் கயிறு மூலம் ஏறும் பயிற்சியில் கீழே விழுந்து கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த தகவலையும் கதிரவன் வீட்டிற்கு தெரியப்படுத்த ஸ்வாமிநாதன் விஷயம் அறிந்து துடித்து போய்விட்டார். தெய்வானை அழுகையுடன் கோவிலுக்கு சென்றுவிட கணேசனும் விஜயனும் கதிரவனை வீட்டிற்கு அழைத்துவர ஏற்பாட்டை செய்தனர்.
ஸ்வாமிநாதன் மூலம் விஷயம் அறிந்த வெங்கடேசன் உடனடியாக அன்னலெட்சுமியிடம் கூற அவரோ.
“ ஏங்க இப்ப எழில் கிட்ட சொல்ல வேண்டாம். இப்பதான் பிரசவம் ஆகி இருக்கு இன்னும் ரெண்டொரு நாள் சென்று சொல்லலாம்ங்க” என அன்னலெட்சுமி கூற
“ ஏன் அன்னம்??…”
“ இல்லங்க மாப்பிளைக்கு காலுல அடிபட்டுருக்குன்னு சொன்னா அவ தாங்க மாட்டா. அதோட இப்போ தான் பிரசவம் ஆகிருக்கு அழுது இப்போவே போணும்ன்னு அடம்பிடிச்சா பச்சை உடம்பு காரிங்க அதான் சொல்லுறேன். மாப்பிளைக்கு காலுல தானே அடி வேற ஒன்னும் இல்லைலங்க ” என அன்னலெட்சுமியும் கேட்க வெங்கடேசனோ
“ இல்ல அன்னம் காலுலதான் நல்ல அடியாம். மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா எழுந்து நடக்க மாசக்கணக்குல ஆகும்போல ”
“ ம்ப்ச் என்னங்க பிள்ளை பிறந்துருக்க நேரம் பார்த்து இப்படி ஆகுது ” என அன்னலெட்சுமி கூற
“ ஏண்டி நீ வாயை வச்சுகிட்டு சும்மா இரு மாப்பிளை விழுந்ததுக்கு இப்போ பிறந்த பிள்ளை என்ன செய்யும் ” என வெங்கடேசன் கடிய,
“ ஐயோ!!… நான் அப்படி சொல்லலைங்க பிள்ளை பிறந்த நேரம் அவரு பிள்ளை பார்கவர முடியாம போச்சேன்னு கவலையா இருக்குன்னு சொல்றேன் ” என அன்னலெட்சுமி பதற
“ சரி சரி நீ எழிலை பாரு நான் சம்பந்திக்கு பேசிட்டு வரேன் ” என கூறிவிட்டு சுவாமிநாதனுக்கு அழைக்க
“ மச்சான் சொல்லுங்க ”
“ இல்லை மாப்பிளைக்கு எப்படி இருக்குன்னு கேட்கத்தான் போன் செய்தேன் ”
“ இப்போதான் கணேசன் கூட்டிட்டுவந்தான். பாப்பா எப்படி இருக்கு மச்சான் ” என ஸ்வாமிநாதன் பேச
“ ஹ்ம்ம் எல்லாரும் நல்லா இருக்கோம். மாப்பிள்ளை கொஞ்சம் தெளிவானவுடனே பேசலாமா மச்சான் ” என வெங்கடேசன் தயக்கத்துடன் கேட்க
“ எதுக்கு தயங்குறீங்க மச்சான். அவன் தூங்குறான் எழுந்தவுடனே எழிலுகிட்ட பேச சொல்லுறேன் நீங்க மனசை போட்டு குழப்பமா பேர பிள்ளைகளையும் மருமகளையும் பாருங்க ” என ஸ்வாமிநாதன் பேச சிறுது நேரம் பேசிவிட்டு போனை வைத்தனர்.
சுவாமிநாதன் போனை வைத்துவிட்டு கதிரவனை காண அறைக்குள் செல்ல அங்கு காலில் பெரிய கட்டும் தலையில் இருந்த காயத்துக்கு தையலுடன் கட்டும் போட்டு முகத்தில் உடலில் சிறு சிறு சிராய்ப்புகளுடன் அசந்து உறங்கிக்கொண்டிருந்தவனை கண்டு கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு வெளியே வர,
கூடத்தில் தெய்வானை சத்தம் அதிகமாக கேட்டது. வேகமாக ஸ்வாமிநாதன் அங்கு விரைய சாரதாவை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு தெய்வானை நிற்க அவரை பிடித்துக்கொண்டு கணேசன் விஜயனும் நின்றுகொண்டிருந்தனர்.
சாரதாவோ பயத்தில் சற்று முன் கணேசனிடம் வாங்கிய அறையில் வீங்கிய கன்னத்தை பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்க சுவாமிநாதன் சத்தம் போட்டு என்னவென்று விசாரிக்க,
சாரதா கணேசனிடமும் தெய்வானையிடமும்,
“ எதுக்கு கதிரவனை இங்கு வைத்து பார்க்கனும். அதான் அவரு தனியா போய்ட்டாருல்ல அவரு பொண்டாட்டி பார்த்துக்குவா. நமக்கு என்ன தலை எழுத்தா??… ” என வழக்கம் போல பேச கணேசன் அடித்துவிட்டார் கோவத்தில்.
அதில் சாரதா ஆங்காரமாக கத்தி தெய்வானையிடம் பேச வர, ஏற்கனவே தன் மகனை வைத்து பார்த்துக்கொள்ள வேண்டாம் என கூறிய சாரதா மேல் கடுப்பாகி நிற்க இதில் சாரதா கத்தியதில் அவரும் கையை ஓங்கிவிட்டார் அடிப்பதற்கு என நடந்ததை விஜயன் கூறி முடிக்க,
ஒரு வழியாக சுவாமிநாதன் பிரச்சனையை முடிக்க பார்க்க, தெய்வானை முடிவாக சாரதாவிடம்,
“ இங்க பாரு சாரதா இத்தனை நாலு அண்ணே பொண்ணுன்னு அமைதியா போனேன். அதுக்குன்னு எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டேன். என் பிள்ளைகளுக்கு அப்புறம்தான் மத்தவங்க எல்லாம். சும்மா எதையாது உளறாம போய் பொழப்பை பாரு” என கோவமாக கூறிவிட்டு நகர்ந்துவிட அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
ஒரு இரண்டு நாள் கடந்த நிலையில் எழில்விழிக்கு கணவனிடம் இருந்து அழைப்பு வராத நிலையில் அவளே கதிரவனுக்கு அழைக்க சரியாக அவனின் அலைபேசி தெய்வானையிடம் இருந்தது. அதனை எடுத்தவர்,
“ ஹலோ…” என கூற அவரின் குரலில்
“ அத்தை எப்பிடி அத்தை இருக்கீங்க??… எல்லாரும் நல்லா இருக்காங்களா??… அவரு பக்கத்துல இருக்காங்களா??…” என எழில்விழி கேட்க அவளின் குரலில் கடுப்பின் உட்சத்திற்கு சென்றவர்,
“ ஏன் பக்கத்துல இருந்தா அவன் உயிரையும் எடுக்கவா??…” என தெய்வானை கத்த அந்த சத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த கதிரவன் விழித்து பார்க்க அங்கு எழில்விழியோ தெய்வானையின் கோவத்திற்கு காரணம் புரியாது,
“ அத்தை எதுக்கு கோவப்படுறீங்க??…” என கேட்க
“ ஹ்ம்ம் கோவப்படாம உன்னைய கொஞ்சவாங்களா??… படிச்சு படிச்சு சொன்னே இந்த பிள்ளை வேணாம்ன்னு கேட்டியா??… இப்போ பாரு அந்த பிள்ளை பிறந்த நேரம் என் மகன் செத்து பொழச்சு வந்துருக்கான் ” என தெய்வானை கத்த
அதில் அதிர்ந்தவள்,
“ அத்தை!!!… என்ன…. என்ன அத்தை சொல்றிங்க??… இப்போ அவுங்க எங்க நான் பேசணும் போனை குடுங்க அத்தை ” என அழ ஆரம்பித்த எழில்விழியின் வேதனை புரியாது
“ எதுக்கு…. எதுக்கு பேசணும்??… என் மகன் துரு துரு இருப்பான் உன் மக பிறந்த ராசி இப்படி படுக்கையில தள்ளிடுச்சு ” என பேசிக்கொண்டிருக்கையில்
“ அம்மா!!!… ” என கத்திய கதிரவன்
“ போனை குடும்மா ” என கூறி போனை கையில் வாங்கியவன்,
“ நீ போ போய் எனக்கு குடிக்க எதையாவது கொண்டுவா ” என கூற
“ ஆமா அவளை ஒன்னும் சொல்லவிட்டுறாத கிரகம் எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு ” என புலம்பிக்கொண்டு தெய்வானை அறையைவிட்டு சென்றுவிட போனை காதில் வைத்தவன்,
“ விழி…. ” என அழைக்க அந்த குரலில் அதுவரை அதிர்ச்சியில் இருந்தவள் சுயம் பெற்று,
“ என்னங்க… என்னங்க… என்ன ஆச்சு??… அத்தை என்னமோ சொல்லுறாங்க என்னங்க ஆச்சு ” என கதறிய எழில்விழியின் குரலில்
“ ஏய்!!.. நிறுத்துடி. நான் இப்போ நல்லாத்தான் இருக்கேன் எதுக்கு இப்போ ஒப்பாரி வைக்குற” என கதிரவன் கத்த அவள் சத்தத்தை குறைத்துக்கொண்டு சிறு குரலில் தேம்ப,
“ சரி என்ன குழந்தை??…” என கதிரவன் கேட்க
“ பெண் குழந்தைங்க ” என மெதுவான குரலில் எழில்விழி கூறிவிட்டு அவனின் பதிலுக்காக காத்திருக்க,
“ ஹ்ம்ம் உன் ஆசைப்படி பொம்பள பிள்ளை பெத்துட்ட சரி வச்சுடவா எனக்கு ரொம்ப அசதியா இருக்கு ” என கதிரவன் கூற
“ என்னங்க என்னங்க நான் ஒன்னு…. ” என எழில்விழி பேசிக்கொண்டிருக்கையில் போனை வைத்துவிட்டு கதிரவன் விட்டத்தை பார்த்துக்கொண்டு யோசனையில் இருக்க,
எழில்விழியோ உடனடியாக வெங்கடேசனிடம் நடந்ததை தெரிந்துகொண்டு தன்னவனின் வலியை உணர்ந்து கண்ணீரை சிந்திக்கொண்டிருந்தாள்.
பின் ஒரு மாதம் கடந்த நிலையில் ஆளப்பிறந்தான் கதிரவன் இல்லத்தில் கூடத்தில் கால்களை மேஜை மீது நீட்டிக்கொண்டு அமர்ந்து சத்துமாவு கஞ்சியை கதிரவன் குடித்துக்கொண்டிருக்க தெய்வானை அவனின் அருகில் அமர்ந்து,
“ ஏன் கதிரு டாக்டர் என்ன சொல்றாரு??… எப்போ கட்டை பிரிக்குறது??… எப்போ நடந்து பழகுறது??…” என கேட்க அதற்கு ஸ்வாமிநாதனோ கதிரவன் அருகில் அமர்ந்துகொண்டு
“ இன்னும் ரெண்டு மாசம் கட்டு இருக்கணுமா தெய்வா. அப்புறம்தான் பிரிப்பாங்களாம்” என பேசிக்கொண்டிருக்கையில் வாசலில் சத்தம் கேட்டு மூவரும் திரும்ப,
அங்கு கையில் ஒரு மாதம் ஆன எழில்விழி தங்கள் பெண் மகவை கையில் வைத்துக்கொண்டு நிற்க அருகில் மூன்று வயது கண்ணாயிரம் அன்னையின் சேலை முந்தானையை பிடித்துக்கொண்டு நிற்க அவர்களின் பின் அன்னலெட்சுமியும் வெங்கடேஷனும் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர்.
இவர்களை அங்கு எதிர்பாராததில் மூவரும் அதிர்ந்தது ஓர் நிமிடம் தான் அதற்குள் ஸ்வாமிநாதன் வேகமாக எல்லாரையும் வரவேற்க,
தெய்வானையும் கதிரவனும் ஒரு சேர எழில்விழியையும் அவள் கையில் இருந்த குழந்தையையும் முறைத்துக்கொண்டிருந்தனர்.
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!
காதல் சுகமானது..!
error: Content is protected !!