உயிர் உருகும் காதல் எனதே….13
உயிர் உருகும் காதல் எனதே…..13
துர்கா தன்னருகில் படுப்பதை உணர்ந்து வீரா அதிர்ந்து எழுந்து அமர்ந்துவிட்டான் வீரா.அதனைக் கண்டு துர்காவின் முகம் கூம்பி போக,
“சாரி…..”என்றாள்.
“சரி நீ மேல படு துர்கா….”என்றவன் அவள் கைபடாத தூரம் நகர்ந்து அமர்ந்து கொள்ள,அதை உணர்ந்த துர்கா வேகமாக எழுந்து கொள்ள,
Advertisement
“வீரா நாம கணவன்,மனைவி….நான் பேசினது தப்பில்லனு எனக்கும் தெரியும் இருந்தும் அது உங்க பழைய நினைவுகளை எழுப்பி இருக்கும்னு தான் உங்க கிட்ட சாரி கேட்டேன்….ஆனா உங்களுக்கு நான் பக்கத்துல உட்காரது கூட கஷ்டமா இருக்கா….”என்று ஆவேசமாக கேட்க,
“ப்ச் துர்கா நான் அப்படியெல்லாம் நினைக்கல…..இது வேற….உனக்கு புரியாது….”
“என்ன புரியாது…..”
Advertisement
“துர்கா ப்ளீஸ்….நீயாவது என்னை புரிஞ்சிக்கோயேன்…..”என்று வலி நிறைந்த குரலில் கூறிவிட்டு படுத்துக் கொள்ள,துர்காவும் மேற்கொண்டு அவனிடம் வாதிடாமல் படுத்துவிட்டாள்.ஒன்று மட்டும் புரிந்தது வீராவின் பழைய நினைவுகளை மறப்பது அத்தனை எளிதல்ல என்பது தான்.அதன் பின்னான இரண்டு நாட்கள் சற்று இறுக்கத்துடன் தான் சென்றது இருவருக்கும்.வீராவும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டுது போல் தெரியவில்லை.துர்காவிற்கு தான் முதல் முறையாக இந்த திருமணம் சரி தான என்ற ஐயம் எழ துவங்கியது.நாட்கள் அதன் போக்கில் செல்ல மேலும் ஆறு மாதங்கள் உருண்டோடி இருந்தது.
Advertisement
வீராவும்,துர்காவும் நண்பர்கள் என்ற போர்வைக்குள் வாழ்வை வாழ தொடங்கியிருந்தனர்.அன்று வீரா வீட்டிற்கு ஒரு வேலையாக வர வீடே பரபரப்பாக இருந்தது.
“துர்கா வரும் போதே பழம் வாங்கிட்டு வந்திடு….ஹாங் சரி சரி நானும் எடுத்து வச்சிட்டேன்….சரி சீக்கிரம் வா வச்சிடுறேன்….”என்றுவிட்டு கைபேசியை வைக்க,
“என்னமா ஒரே ஆர்பாட்டமா இருக்கீங்க என்ன விஷயம்….”என்று கேட்டுக் கொண்டே கையில் வைத்திருந்த பைலில் பார்வையிட,
Advertisement
“அதுவா எல்லாம் நல்ல விஷயம் தான் வீரா….நீ பெரியப்பா ஆகப்போற….துர்கா பெரியம்மா ஆகப்போறா……”என்று கூற வீராவிற்கு ஒன்றும் புரியவில்லை.அவன் திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க,
“உனக்கு எல்லாம் தெளிவா சொல்லனும்….அடேய் நம்ம வாசினி இருக்காள்ல அவ மாசமா இருக்கா….காலையில தான் வானாதி போன் பண்ணி சொன்னாங்க….அதான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுவோம்னு கிளம்புறோம்…..நீயும் வரியா….”என்று கேட்க,
“இல்ல எனக்கு வேலையிருக்கு….நான் வரலை நீங்க போயிட்டு வாங்க….”என்றுவிட்டு எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவன் போல் சென்றுவிட கற்பகத்திற்கு தான் அத்தனை வருத்தமாகி போனது.இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருக்க போகிறான் என்ற கவலை இருந்தாலும் ஒரளவிற்காவது மாறியிருக்கிறான் என்கிற மகிழ்ச்சியும் அதோடு முழுதாக மாற வேண்டும் என்ற வேண்டுதலும் இருந்தது.
மாலை துர்காவும்,கற்பகமும் வாசினியை பார்க்க அவளின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.அவளிற்கு திருமணமாகி ஒன்றை வருடம் கழிந்துவிட்டதே இன்னும் நல்ல செய்தி சொல்லவில்லையே என்று வானாதி இரண்டொருமுறை துர்காவிடம் புலம்ப,
“ம்மா….எதுக்கு இப்படியெல்லாம் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க….அது அது நடக்க வேண்டிய காலம் வரும் போது தானா நடக்கும்….நீங்க புலம்பாம இருங்க….”என்று திட்டியிருந்தாள்.அது போல இதோ அந்த நல்ல காலம் பிறந்துவிட அவரை பிடிக்கமுடியவில்லை.அத்தனை சந்தோஷம் அவருக்கு.காலை மகள் கூறியவுடனே அவளை பார்க்க வந்துவிட்டார்.
“வாடீ….எப்ப சொன்னேன் இப்ப தான் வர….”என்று தனிமையில் பெரிய மகளை வானாதி கடிய,
“ச்சு ம்மா….நான் ஸ்கூல் விட்டு தான வர முடியும்….”
“ஒரு நாள் லீவ் போட்டுட்டு வந்தா என்ன துர்கா….அவளுக்கு நம்மளை விட்டா யார் இருக்கா….”என்று கூற,ஆயாசமாக இருந்தது துர்காவிற்கு தன் நிலையை கூறிய பிறகும் இப்படி பேசபவருடன் என்ன கூறவது என்று அமைதியாகிவிட்டாள்.
வாசினி அவளின் அறையில் படுத்திருந்தாள்.அடிக்கடி வாந்தி வருவதை போல் இருப்பதால் அவளிற்கு உடல் தளர்ந்து படுத்திருந்தாள்.
“வாசினி உடம்பு எப்படி இருக்கு…..”என்று கேட்ட படி துர்கா அறைக்குள் வர,அவளின் பின்னே கற்பகமும் வந்தார்.
“எப்படிமா இருக்க….”என்று அவரும் கேட்க,
“ம்ம்….இப்ப பரவாயில்ல….நீ எப்படிக்கா இருக்க….”என்றாள் துர்காவை ஆராய்ந்தபடி,
“நல்லாயிருக்கேன்டீ….நீ உடம்பை பார்த்துக்கோ….ரொம்ப சோர்வா இருக்க….”என்று அவளின் தலையை கோதியபடி கூற,
“இப்ப இப்படி தான் இருக்குமாம் டாக்டர் சொன்னாங்க…..ஆனா எதுவும் சாப்பிட முடியலை…..”
“அப்படி தான்மா இருக்கும் ஆனா நீ நல்லா சாப்பிடு…..அப்ப தான் உடம்பு தெம்பா இருக்கும்….”என்று கற்பகம் கூற,
“ம்ம்….”
“இப்படி தான் சொல்லுவா ஆனா சாப்பிட தான் மாட்டேங்குறா…..இன்னும் அவ வீட்டுக்காரார் வரலைனு கோபம்….”என்று வானாதி கூற வாசினியின் முகம் மாற தொடங்கியது.அதை உணர்ந்த துர்கா,
“அம்மா விடு அவ பார்த்துக்குவா….வாங்க நாம வெளி போகலாம்….”என்று துர்கா அவர்களை வெளியில் அழைத்து வர,
“இன்னும் வரலைடீ அவரு….அப்படி என்ன வேலையாம்….எவ்வளவு சந்தோஷமான விஷயம் அவர் பக்கத்துல இருக்கனும் இல்ல….இவ கூப்பிட்டு இருக்கா போல ஆனா அவர் ஏதோ முக்கிய வேலை இருக்குனு சொல்லிட்டு நாளைக்கு வரேன் சொல்லிட்டாராம்….அதான் அவளுக்கு என்னவோ போல இருக்கா….”
“அவருக்கு வேலை இருக்கும் போல….வந்துடுவாரு…..”என்று கற்பகம் கூற,
“என்ன அண்ணி இப்படி சொல்லுறீங்க….இவளுக்கு தான் எதுவும் இல்ல….சின்னவளுக்கு ரொம்ப நாள் கழிச்சு நல்லது நடந்திருக்கு…..”என்று வானாதி சாதாரணம் போல கூற துர்கா,கற்பகம் இருவரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்.
“ம்மா…..சும்மா இருக்க மாட்ட….”என்று அதட்டி விட்டாள் துர்கா.கற்பகத்தின் முகம் விழுந்துவிட்டது.வானாதி பேசியதை கேட்டு,கண்கள் கலங்கிவிடாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார்.வானாதிக்குமே தான் கூறியதன் அர்த்தம் புரிய,
“அய்யோ சம்மந்தி நான் அந்த அர்த்ததுல சொல்லல….”என்று அவரின் கையை பிடிக்க,
“போதும் நீ எந்த அர்த்ததிலேயும் சொல்ல வேண்டாம்….”என்று துர்கா பல்லைக் கடித்துக் கொண்டு கூறிவிட்டாள்.
“என்னமா பார்த்திட்டியா….”என்றபடி வந்தார் நிர்மலா.
“பார்த்துட்டேன் அத்த….சோர்வா இருக்கா….அதான் படுத்துக்கோனு சொல்லிட்டு வந்துட்டேன்….”என்று துர்கா கூற,
“ம்ம்….அவளுக்கு கொஞ்சம் கோபம் சித்து இன்னும் வரலைனு….அவன் நேத்தே வந்திருப்பான்….நான் தான் உன் வேலை முழுசும் முடிச்சிட்டு வா ஒரு இரண்டு நாள் லீவ் எடுத்துட்டு வானு சொன்னேன்….அப்ப தான் அவனும் கொஞ்சம் ப்ரியா இருப்பான்….இல்லனா போன் வந்துக்கிட்டே இருக்கும்….”என்று நீண்ட விளக்கம் கொடுக்க துர்கா தாயை முறைத்தாள்.
கற்பகம் எதுவும் பேசவில்லை அவரால் அங்கு அமர்ந்திருக்கவே முடியவில்லை எப்போதடா கிளம்புவோம் என்ற நிலையில் அவர் அமர்நிதிருக்க,அதை உணர்ந்து கொண்ட துர்கா கிளம்பிவிட்டாள்.வானாதி சின்ன பெண்ணுடன் இருந்துவிட்டு வருவதாக கூறிவிட இவர்கள் இருவரும் தாங்கள் வந்த ஆட்டோவிலேயே கிளம்பிவிட்டனர்.
வீடு வரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.துர்கா இப்போது பேச வேண்டாம் வீட்டிற்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக அமர்ந்திருந்தாள்.ஆட்டோ வீட்டை அடைந்தவுடன் கற்பகம் வேகமாக இறங்கி உள்ளே போக வீரா வரவேற்பறையில் அமர்ந்திருந்தான்.
“வா மா….என்ன சீக்கிரம் வந்துட்ட….”என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே வேகமாக தன் அறையில் அடைந்து கதவை சாத்திக் கொண்டார் கற்பகம்.அவரின் பின்னே துர்கா நுழைவதைக் கண்டவன் ஏதோ பிரச்சனை என்று புரிய,
“என்ன துர்கா….”என்று கேட்க அவளோ அவனிற்கு பதில் கூறாமல்,
“அத்த….அத்த கதவை திறங்க….”என்று கற்பகத்தின் கதவை தட்ட தொடங்க,
“அம்மா கதவை திற….என்னாச்சு துர்கா உன்கிட்ட தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்….”என்று வீரா கேட்க,
“அப்புறம் சொல்லுறேன்….அத்தையை கதவை திறக்க சொல்லுங்க….”என்று கூற வீராவிற்கு பதட்டம் அதிகம் ஆனது.
“அம்மா அம்மா…..”என்று கதவை உடைக்கவே தொடங்க,
“வரேன்….கதவை உடைச்சிடாத….”என்று மெலிதாக கற்பகம் குரல் கொடுக்க,
“சீக்கிரம் கதவை திறங்கத்த…இல்ல நானே கதவை உடைச்சுடுவேன்….”என்று துர்காவும் கத்த,கதவை திறந்த கற்பகம்
“எதுக்குடீ கத்துற….அதான் கதவை திறக்குறேன்னு சொல்லிட்டு தான இருக்கேன்….”
“சொல்லகூடாது செய்யனும்….”என்றவள் வேகமாக அந்த அறையின் உள் நுழைந்து கொண்டு எதையோ ஆராய,
“தூக்ககெல்லாம் போட்டுக்க மாட்டேன்….”என்று கற்பகம் அவளை பார்த்து சொல்ல,வீரா அதிர்ந்துவிட்டான் என்றால் துர்காவோ அவரை அணைத்துக் கொண்டு,
“என்னை மீறி செஞ்சுடுவ நீ….அவ்வளவு சீக்கிரம் எல்லாம் விட்டுட மாட்டேன் பார்த்துக்க….”என்று கட்டிக் கொண்டு அழுதுவிட்டாள்.கற்பகமும் உடைந்து அழ தொடங்கிவிட்டார்.அனைத்தையும் பார்த்த வீரா தளர்ந்து அமர்ந்துவிட்டான்.என்ன வார்த்தை பேசிவிட்டார் தன் அன்னை அதுவே அவனின் மனதில் ஓடிக் கொண்டிருக்க இங்கு துர்கா,கற்பகத்தை சமாதான படுத்துவதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.
“வீரா…..”என்று துர்கா அவனின் தோளை தொடவும் நிகழ்வுக்கு வந்தவன்,சிறு குழந்தை போல என்ன நடந்தது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவனை பார்க்கையில் துர்காவிற்கு நெஞ்சம் அடைத்தது.
“எந்திரிங்க…”என்று துர்கா அவனை எழுப்ப,
“எந்திரிப்பா…..”என்று கற்பகமும் கூற,
“ம்மா….”என்றவன் அவரின் கையை பிடித்துக் கொண்டு அழுதேவிட்டான்.
“ய்யா…சாமி…நீ கலங்காத ய்யா….நான் நல்லதான் இருக்கேன்….சாமி…..இப்படி இருக்காதய்யா….”
“ப்ச்….எல்லாம் உன்னால தான் கற்பூ….வா வந்து தூக்கு….என்னால முடியலை….”என்று துர்கா பொறிய,கற்பகமும் வந்து வீராவின் கையை பிடிக்க வர வீராவே எழுந்துவிட்டான்.அவனை நாற்காலியில் அமர வைத்த துர்கா குடிக்க தண்ணீர் கொடுக்க,மறுக்காமல் குடித்தவன் இப்போது மனையாளை பார்க்க,அனைத்தையும் கூறிவிட்டாள்.
“இப்ப எதுக்குடீ எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு இருக்க…அவங்க ஏதோ தெரியாம பேசிட்டாங்க….”
“அப்ப நீ ஏன் அழுதியாம்….”என்று விடாமல் துர்காவும் கேட்க,
“போதும் இரண்டு பேரும் நிறுத்துங்க….துர்கா உள்ள வா உன் கூட கொஞ்சம் பேசனும்…..”என்றுவிட்டு வீரா தன் அறைக்குள் செல்ல,கற்பகத்திற்கு கிலி பிடித்தது தான் ஏதோ கோபத்தில் தான் ஒன்றை செய்ய போக அது மகனை பாதித்துவிட்டதே அதோடு அதன் விளைவுகள் மருமகளையும் பாதிக்குமோ என்ற அச்சம் உள்ளுக்குள் எழ,
“என்னமா இவன்….”என்று துர்காவை பிடித்துக் கொண்டு கேட்க,
“கற்பூ….இதுக்கெல்லாம் பயந்தா வேலைக்கு ஆகாது….உன் பிள்ளையை நான் பார்த்துக்குறேன்….நீ உன்னை பார்த்துக்கோ….ஆழாம போய் படு…..”என்று கட்டளை போட்டுவிட்டு அவள் அறைக்குள் செல்ல,
“கடவுளே என் மகனுக்கும்,மருகளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம பார்த்துக்கோப்பா….”என்று வேண்டுதலை வைத்துவிட்டு சென்றார்.
