உயிர் உருகும் காதல் எனதே…..20
உயிர் உருகும் காதல் எனதே…..20
“இப்ப எப்படி இருக்க வாசினி???…..”என்று துர்கா கேட்டுக் கொண்டிருக்க அவளின் பின் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் வீரா.வாசினியின் வீட்டில் இருந்தனர் இருவரும்.
“ம்ம் நல்லாயிருக்கேன்…..”என்றவளின் பதிலே சுரத்தையில்லாமல் இருந்தது.துர்காவிற்கு தான் தங்கையை பற்றி நன்கு தெரியுமே அதனால் அவள் மேலும் அவளை எதுவும் கேட்கவில்லை.பொதுவாக நலம் விசாரித்துவிட்டு உடம்பை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு வந்துவிட்டாள்.வானாதியும் அங்கு தான் இருந்தார் அவரை பார்க்கவும்,இல்லை பேசவும் இல்லை துர்கா.வீரா அவரிடம் இரண்டு வார்த்தை பேசினான்.அவர் மகளிடம் பேச முற்பட,
“ம்மா இப்ப வேணாம் எனக்கு இன்னும் பேசினதோட காயம் ஆறல….கொஞ்ச நாள் ஆகும் காயம் ஆற….”என்றுவிட வானாதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
Advertisement
“ப்ச் ம்மா….நான் உன் கிட்ட ஏதாவது கோபமா பேசிடுவேன்னு தான் அப்படி சொல்லுறேன்….என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன்…..”என்று மன்றானலாகவே கூறிவிட,
“எதுக்கு அவங்களை கஷ்டப்படுத்துற….அத்த அவ ஏதோ கோபத்துல இருக்கா எல்லாம் சரியா போகிடும்….நீங்க இதெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க….”என்று வீரா கூறவும் வானாதி மனது நிம்மதி அடைந்தது.துர்காவோ கணவனை முறைத்துக் கொண்டு நிற்க அவளை பார்த்து அழகாக கண் சிமிட்டினான் வீரா.
இருவரும் சற்று நேரம் அங்கு இருந்துவிட்டு கிளம்பிவிட்டனர்.வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது துர்கா,
Advertisement
“எதுக்கு எங்க அம்மா கிட்ட அப்படி சொன்னீங்க….அவங்க தப்பு செஞ்சிட்டு கொஞ்சம் கூட அதை உணராம இருக்காங்க….”என்று துர்கா பொரிய துவங்க,
Advertisement
“விடு….என்ன இருந்தாலும் அவங்க உனக்கு அம்மா…..அதோட எனக்கு பெரிய உதவி செஞ்சிருக்காங்க அவங்களுக்கு நான் இன்னும் தான் செய்யனும்….”என்று கூற துர்கா அவனை முடிந்தமுட்டும் மொத்திவிட்டாள்.
“உங்களை வர வர பேச்செல்லாம் சரியில்ல…..இப்படி தான காலையிலேயும் என்னை படுத்தி எடுத்தீங்க….பாவம் என் கற்பூ….என்னனே புரியாம முழிச்சிக்கிட்டு நின்னுடுச்சு….”என்றவள் இன்று காலை நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தாள்.
நேற்றைய இரவின் மிச்சங்கள் இருந்த போதிலும் துர்கா எப்போதும் போல் எழுந்துவிட்டாள்.தன் இடைவளைத்திருந்த கரத்தை பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.மெல்ல வீராவின் தூக்கம் கலையாதவாரு எழுந்து குளித்துவிட்டு வர வீரா இன்னும் உறக்கத்தில் தான் இருந்தான்.
Advertisement
துர்கா சமையலறைக்குள் நுழையும் போது கற்பகம் அப்போது தான் பாலை அடுப்பில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.எப்போதும் தன்னிடம் ஏதாவது வலவலத்துக் கொண்டே இருப்பவள் இன்று அமைதியாக தன் வேலைகளை செய்து கொண்டிருக்க,
“என்னடீ….திரும்பவும் ஏதாவது பிரச்சனையா…..”என்று கவலையாக கேட்டார்.அவருக்கு துர்காவின் பொலிவான தோற்றம் எல்லாம் கண்ணில் தெரியவில்லை.நேற்று துர்கா வரும் போதே அவளின் முகம் கலங்கியிருப்பதை பார்த்துவிட்டார்.ஆனால் எதுவும் கேட்கவில்லை கேட்டாலும் துர்கா நினைத்தால் மட்டுமே அவளிடம் இருந்து பதிலை வாங்க முடியும் என்பதால் கேட்காமல் விட்டுவிட்டார்.இதோ இப்போது கூட முகம்,கண்கள் எல்லாம் சிவந்து நின்றவளை பார்த்ததும் மனது கேட்காமல் கேட்டுவிட்டார்.ஆனால் அவருக்கு இது மருமகளின் வெட்க சிவப்பு என்று புரியவில்லை.
துர்கா கற்பகத்திடம் என்ன கூறுவது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க,கற்பகம் ஏதோ பெரிய பிரச்சனை தான் போல என்று முடிவே செய்துவிட்டார்.
“என்னாச்சுமா????திரும்பவும் உங்க அம்மா எதாவது சொன்னாங்களா…..வீரா அதுக்கு கோபப்பட்டுட்டானா….”என்று அவளின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்க,
“அச்சோ இல்ல….”என்றவளுக்கு இதை எப்படி இவரிடம் சொல்லுவது என்று தெரியவில்லை.அவள் மேலும் தயங்கி நிற்கவும்,
“எல்லாரும் சேர்ந்து என் மருமகளை பேசி அவ மனசை புண்படுத்திறீங்களா….இரு வரேன்…”என்றுவிட்டு அவர் வரவேற்பறைக்கு வேகமாக செல்ல,
“இரு கற்பூ…….”என்று தலையில் அடித்துக் கொண்டு துர்காவும் பின்னோடு சென்றாள்.
“வீரா….வீரா….”என்று அவர் அறை வாயிலில் நின்று கத்த தொடங்க,
“அத்த….நான் நல்லா தான் இருக்கேன்….எனக்கு ஒண்ணுமில்ல…நீங்க வாங்க….”என்று அவரின் கையை பிடித்து துர்கா இழுத்தாள்.
“நீ சும்மா இரு…..இவன் தான உன்னை திட்டினான்…..எனக்கு தெரியும் உன் முகத்தை பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேனே….இன்னைக்கு இருக்கு இவனுக்கு…..வீராஆஆஆ……”என்று இன்னும் உரக்க கத்த,அப்போது தான் விழித்திருந்தவன் அன்னையின் சத்தத்தில் என்னவோ ஏதோ என்று அடித்துபிடித்து ஓடி வந்தான்.மேல் பனியன் இல்லாமல் வேட்டியுடன் தலை கலைந்து,கண்கள் சிவந்து வெளியில் வந்தவனை பார்த்தவருக்கு அவனின் தோற்றம் இன்னும் பயத்தை தான் கொடுத்தது.
“என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க நீ???என் மருமகளை என்னடா சொன்ன அவ முகமே சிவந்து போய் இருக்கு…..”என்று கற்பகம் திட்ட,என்னவோ என்று பயந்து வந்த வீராவிற்கு அன்னை கூறியதைக் கேட்டதும் தன்னையும் மீறி வெட்கம் வந்துவிட்டது.கற்பகத்திற்கு மகனின் வெட்கம் எல்லாம் எங்கே தெரிந்தது ஏற்கனவே இருவருக்குள்ளும் சண்டை இருக்க இன்று மீண்டுமா என்ற ரீதியில் பயந்து தான் போயிருந்தார்.
“என்னடா முழிச்சிக்கிட்டு இருக்க???…..”என்று மகனிடம் எகிறி கொண்டு இருக்க,
“கற்பூபூபூ….கொஞ்ச நேரம் சும்மா தான் இரேன்….”என்ற துர்காவின் பார்வை முழுவதும் கணவனிடம் சென்று சென்று மீள,அதில் அவளின் முகம் இன்னும் குங்கும நிறம் கொண்டது.
“பாரு உன்னை பார்த்ததும் என் மருமக முகமே மாறி போச்சு….உன்னைஐஐஐ…..”என்று கற்பகம் மகனை அடிக்கவே கை ஓங்க,
“ஆமா அடிக்க தான் செஞ்சேன்…..இப்ப என்ன அதுக்கு…..”என்றவன் அன்னைக்கு பதில் தந்தாலும் பார்வை என்னவோ மனைவியிடம் தான் இருந்தது.எப்போதும் வாய் ஓயாமல் பேசியே அனைவரையும் திணறடிப்பவள் இன்று திணறிக் கொண்டிருக்க அத்தனை அழகாக இருந்தது வீராவிற்கு.
“என்ன அடிச்சியா?????…….”என்று கற்பகம் நெஞ்சில் கை வைக்க,
“ஆமா…..நான் மட்டுமா அடிச்சேன்….அவளும் தான் அடிச்சா,கடிச்……”அடுத்த வார்த்தையை பேசவிடாமல் அவனின் கையை பிடித்து தங்கள் அறையின் உள்ளே இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
“ஏன்டீ என் வாயை மூடுற……”என்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள,
“என்னனென்ன எல்லாம் பேசுறீங்க….வாயிலே போடுவேன்…..விடுங்க….என்னை…..”என்று அவனிடம் இருந்து திமறிக் கொண்டே அவள் கூற,அவளை நகரவிடாமல் தன் வளைவிற்குள் இன்னும் இறுக்கியவன்,
“அப்படியெல்லாம் விட முடியாது டீச்சரம்மா…..”என்று அவளின் கழுத்து வளைவில் முகத்தை தேய்க்க,
“குளிக்க கூட இல்ல…..போங்க…..”என்றவள் அவனை அடிக்க தொடங்கியிருந்தாள்.
“டீச்சரம்மா ரொம்ப வாசமா இருக்கீங்க….”என்றவன் மேலும் இரண்டு நிமிடம் அவளை அணைத்து நின்றுவிட்டு தான் நகர்ந்தான்.
“இப்படி சொல்லிட்டு வந்திருக்கீங்களே இப்ப வெளில போனா அத்த கேட்பாங்க…..என்ன சொல்லட்டும்…..”என்று அவனை பார்த்துக் கேட்க,
“எல்லாம் என் புருஷன் கிட்ட கேட்டுக்கோங்கனு சொல்லு…..”என்றுவிட்டு குளியறைக்குள் மறைந்துவிட்டான்.துர்கா தயங்கியபடியே கதவை திறக்க,
“கடவுளே என்ன நடந்துச்சுனு தெரியலையே…..”என்று கற்பகம் இடிந்து போய் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்ததும்.அவளையும் மீறி சிரிப்பு பீறிட்டது.
“கற்பூ….எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு….”என்றபடி அவள் வர,
“அடியே நான் இங்க பதறிக்கிட்டு இருக்கேன்….நீ என்னடானா ஸ்கூலுக்கு போகனும்னு நிக்குற…..”என்றவரின் பார்வை இன்னும் அவளை ஆராய்ந்தபடி தான் இருந்தது.
“நீ எதுவா இருந்தாலும் உன் புள்ளை கிட்ட கேட்டுக்கோ…..இப்ப எனக்கு நேரமாச்சு…..”என்றுவிட்டு துர்கா கிளம்பிவிட்டாள்.இப்படி தான் காலை ஒரு அமளி செய்து தான் வந்திருந்தனர் இருவரும்.அதன் நியாபகத்தில் துர்கா அவனை அடிக்க,
“நான் சொன்னபடி சொல்லியிருந்தா உனக்கு ஏன் இந்த நிலமை….”என்று வீரா கூற,
“என்ன???நீங்க சொன்னதை தான நான் சொல்லிட்டு வந்தேன்…..”
“எங்க சொன்ன….நீ உங்க பையன் கிட்ட கேளுங்கனு சொல்லியிருக்க….நான் என்ன சொன்னேன் உன்கிட்ட…..”என்று கேட்க,துர்கா முகத்தில் வெட்கம் படற முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“பேச்சை பாரு….இப்ப அத்த வீட்டுக்கு போனா திரும்பவும் கேட்பாங்க என்ன சொல்லறதாம்…..”
“அதுக்கு நான் வழி பண்ணிட்டேன்…..நீ தான் அதுக்கு ஒத்துழைப்பு தரனும்…..”என்று வீரா ராகம் இழுக்க,
“என்ன??….”என்று புரியாமல் கேட்டவளிடம்,
“நம்ம வீடு வந்துடுச்சு இறங்கு….”என்று கூற,
“அதுக்குள்ள வந்துட்டா…..”
“எப்போதும் புருஷனையே பார்த்துக்கிட்டு வந்தா இப்படி தான்….”என்றவன் வண்டியை வீட்டின் உள்ளே விட்டபடி அவளை பார்த்து கண்ணடிக்க,துர்கா அதிர்ந்து சுற்றி முற்றியும் பார்த்தாள்.
“யாரும் இல்லைனு தான் அடிச்சேன் வா….”என்று விஷமாக புன்னகைக்க,
“தயவு செஞ்சு இப்படி சிரிக்காதீங்க….”என்றவளின் குரலில் தெரிந்த நடுக்கம் அவனை இன்னும் இன்னும் ரசிக்க தான் செய்தது.
“நைட் இப்படி தான சொன்ன….”என்றவன் வாயை மூடியவள்.
“பேசல சாமி….பேசல….”என்றுவிட்டு வீட்டின் உள்ளே சென்றுவிட,நிறைந்த புன்னகையுடன் அவளை பின் தொடர்ந்தான் வீரா.
துர்கா வீட்டிற்குள் நுழையும் போது கற்பகம் சமையலறையில் இருப்பது புரிய,அவரிடம் சென்றாள்.
“ஏட்டி நீ நிஜமா தான் சொல்லுறியா….வீரா தான் பேசினானா….”என்று பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
“அத்த….”என்ற துர்கா அழைத்ததும்.
“இருடீ துர்கா வந்துட்டா அப்பறம் பேசுறேன்….”என்றுவிட்டு பேசியை வைத்துவிட்டு மருமகளின் கன்னம் வழித்து முத்தமிட்டவரின் கண்கள் கசிந்திருந்தது.
“என்னாச்சு கற்பூ???……”என்று துர்கா பதற,
“அடி போடி நானே இன்னைக்கு தான் சந்தோஷமா இருக்கேன்….என் குலம் விரிச்சமாக போகுது எனக்கு எம்புட்டு சந்தோஷம் தெரியுமா….அதான் காலையில உன் முகம் அப்படி இருந்துச்சா….நான் ஒரு மடச்சி…இதெல்லாம் உன் கிட்ட கேட்டுக்கிட்டு….நானா புரிஞ்சியிருந்திருக்கனும்…..ஆனா நான் ஏதோ…..”என்றவர் உடைந்து அழுதுவிட்டார்.எத்தனை வருட வேண்டுதல் இது தன் மகனின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று எத்தனை கடவுளை வேண்டியிருந்தார்.
“அத்த என்னதிது…..நீங்க இப்படி அழுதா எனக்கு பிடிக்கலை…..”என்று அவரின் முகம் நிமிர்த்த பார்க்க முடியவில்லை.இன்னும் தான் அவரின் அழுகை கூடியது.
“நான் ரொம்ப சுயநலமா யோசிக்கிற மாதிரி இருக்குள்ள…..ஆனா நானும் ஒரு சராசரி அம்மா தான எனக்கு என் மகன்,மருமக நல்லாயிருக்கனும் அவ்வளவு தான்….”என்று அழுது கொண்டே கூறிக் கொண்டிருக்க,
“அதான் நல்லாதான இருக்கோம்….அப்பறம் எதுக்காம் அழுகை…..”என்றபடி வந்தான் வீரா.
“வாடா….வா….காலையில என்ன என்ன பேசிட்டு போன….உன்னை…..”என்று அவனை கரண்டி கொண்டு இரண்டு அடி அடிக்க,
“ஹி…..ஹி…..புரிஞ்சிடுச்சா…..”என்று அசடு வழிந்தான் வீரா.
“என்ன கற்பூ சொன்னாரு உன் புள்ளை…..”என்று துர்கா கேட்க,
“ம்ம் அதை நீ உன் புருஷன் கிட்டயே கேளு…..எனக்கு இப்ப நிறைய வேலையிருக்கு…..நாளைக்கு மதியம் கிளம்புறீங்களாடா…..”என்ற சந்தோஷமாக கேட்க,
“ஆமாம்மா….”என்றான் வீரா,
“எங்க எங்க போறோம்…..”என்று துர்கா கேட்க,
“அதையும் உன் புருஷ்ஷ்ன் கிட்டயே கேளு…..”என்று அவளின் கன்னத்தை இடித்துவிட்டு கற்பகம் சென்றுவிட,
“இவங்களுக்கு என்ன ஆச்சு…..”என்று துர்கா புரியாமல் விழித்துக் கொண்டு நிற்க,
“நான் சொல்லுறேன் டீச்சரம்மா….”என்றவன் அவளின் இடைவளைத்து தூக்கியிருக்க,
“அச்சோ என்ன பண்றீங்க….அத்த பார்த்துடுவாங்க…..”
“பார்த்தா பார்த்துட்டு போகட்டும்……எனக்கு என்ன கவலை…..”என்றவன் அவளை தூக்கிக் கொண்டு தங்கள் நுழைந்தவன் அவளை பேசவிடாமல் செய்ய அவள் மூச்சுக்கு திணறவும் விட,
“ப்பஹா…..உங்களைஐஐஐ……”என்று துர்கா அவனை இரண்டு தோள்களிலும் அடித்துக் கொண்டிருக்க,
“அடுத்த வாரம் ஸ்கூலுக்கு லீவ் சொல்லிடு…..”என்றான் வீரா.
“என்ன???ஏன்???……”
“ம்ம் நாம ஹனிமூன் போறோம்……”என்று கூற,அவனை முறைத்துக் கொண்டே,
“இதை தான் உங்க அம்மா சொன்னாங்களா…..”என்று கேட்க,
“ஆமா….நான் அத்தான்கிட்ட இதை பத்தி பேசியிருந்தேன்….”
“என்ன அவங்க கிட்ட வேற பேசினீங்களா….போச்சு…போச்சு….என்ன நினைப்பாங்க எல்லாரும்…..”என்று தன் முகத்தை கை கொண்டு மூட,அவளின் முகத்தை தன் கையில் ஏந்திய வீரா,
“யார் என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்ல…….என் வாழ்க்கை நான் வாழுறேன்…..இதுல என்ன தப்பு இருக்கு…..”என்று கேட்டுக் கொண்டே அவளின் நெற்றி,கன்னம் என்று முத்தமிட்டுக் கொண்டே வந்தவன்,
“எனக்கு ஒரு ஆசைடீ……என்னை உருகி காதலிக்க ஒருத்தி…..அவளை காதலிக்க நான்……என்னோட உயிர் காதல் நீ தான்….உன்னோட உயிர் காதல் நான் தான்…..என்ன நாம இணைய தாமதம் ஆகி போச்சு…..அதுவும் நல்லதுக்கு தான்…..”
“ப்பா என்னமா பேசறீங்க…..நீங்களா இது…..”என்று துர்கா ஆச்சரியமாக கேட்க,
“என்னை வழி நடத்த என் டீச்சரம்மா இருக்குறப்போ எனக்கு என்ன கவலை….உன் கை பிடிச்சிட்டு வரேன் டீச்சரம்மா…..”என்று அவளின் உதடு நனைத்து விடுவிக்க துர்கா பேச்சற்று தான் போனாள்.அவள் ஒரு நல்ல வாழ்வு வாழத்தான் நினைத்தாள் இத்தனை காதல் எல்லாம் தனக்கு கிடைக்கும் என்றெல்லாம் நினைக்கவில்லை.ஏற்கனவே காதல் அது தந்த தோல்வியில் வாழ்வை விட்டவன் மீண்டும் ஒரு காதலில் விழுவான் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.ஆனால் வீராவின் இந்த மாற்றம் எல்லாம் அவள் கனவிலும் நினையாதது.
“இது நிஜம் தான வீரா…..நான் உங்களை கட்டாய படுத்தலையே…..”என்று தன் மனதில் எழுந்ததை கேட்டுவிட,அவன் கோபப்படுவான் என்று இவள் பயம் கொள்ள அவனோ அவளின் நெற்றி முட்டி,
“நேத்து என் பர்பான்மஸ் சரியில்ல போலவே…..”என்று கூறிக் கொண்டே அவளுள் மூழ்க தொடங்க துர்காவும் விரும்பியே அவனுள் தொலைந்து போனாள்.
