விழி கொல்லும் விஷமா நீ.. Episode 25

விழி கொல்லும் விஷமா நீ
Episode 25
Advertisement
“இப்போ வரைக்குமான உன்னோட சேலரி இன்னும் டென் மினிட்ஸ்ல உன் அகௌன்ட்டுக்கு வந்துரும், இதுக்கப்பறம் உனக்கு இங்க வேலை இல்ல” என்றான் யாதவ் காட்டமான குரலில்.
Advertisement
நிஹாரிகாவுக்கு அதிர்ச்சிதான். ஆனால், உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவள், “ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்க, “உன்ன வேலையில வச்சுக்குறதா இல்லயான்னு முடிவு எடுக்குறதுக்கு எனக்கு முழு உரிமை இருக்கு. சோ… கெட் அவுட் ஃப்ரொம் மை சைட்” என்றவன் அலட்சியப் பாவனையோடு அவன் வேலையில் கவனமானான்.
Advertisement
ஆனால், அவனுக்கு போட்டியான பிடிவாதத்தோடு அப்படியே நின்றிருந்தாள் நிஹாரிகா.
Advertisement
“எனக்கும் காரணத்தை கேக்க முழு உரிமை இருக்கு. சரியான காரணத்த தெரிஞ்சிக்காம இங்கயிருந்து போக மாட்டேன்” அவளுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நிதானத்தோடும் அழுத்தமாகவும் வந்தன.
யாதவ்விற்கு இப்போதெல்லாம் அவளை எதிர்கொள்வதே சிரமமாகத்தான் இருந்தது.
“அது.. அது வந்து…” அவனுடைய வார்த்தைகள் தடுமாற, நெற்றியை நீவி விட்டுக்கொண்டவனோ அங்கிருந்து வேகமாக வெளியேறப் போனான்.
ஆனால், பெண்ணவள் விடவில்லை.
அவனெதிரே சென்று வழிமறைப்பது போல நின்றுக்கொண்டவள், “மிஸ்டர் யாதவ், வழக்கமா பர்சனலையும் பிஸ்னஸையும் குழப்பிக்க மாட்டீங்க, இப்போ என்னாச்சு? ஓ… ஒருவேள பயப்படுறீங்களா?” என்று கழுகுப் பார்வைக்கொண்டு கேட்க, “எனக்.. எனக்கெதுக்கு பயம்? மரியாதையா இங்கயிருந்து போயிரு..” என்றான் யாதவ் பற்களைக் கடித்துக்கொண்டு.
நிஹாரிகாவின் இதழில் ஒரு ஏளனப்புன்னகை தவழ்ந்தது.
“தப்புக்கும் மேல நான் தண்டனைய அனுபவிச்சிட்டதா தோனுதோ? ஒருவேள… அதனால நீங்க கில்ட்டியா ஃபீல் பண்றீங்களா? பட் அது தேவையில்ல சார், ஐ டிசெர்வ் தட். இதுக்கப்பறம் உங்க ஸ்டாஃப் அப்படிங்குறத தாண்டி என் மனசுல வேறெதுவும் இல்ல. இதுக்கப்பறமும் என்னை வேலைய விட்டு விலக்கதான் போறீங்கன்னா யுவர் விஷ்…”
அவள் சொல்லிவிட்டு விலகி நின்றுக்கொள்ள, ‘எங்களுக்குள்ள எதுவுமே இல்லயா நீஹா?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்ட யாதவ்விற்கு இதயத்தை கசக்கிப் பிழிவது போல வலித்தது.
உணர்ச்சிகளை முகத்தில் காட்டாது உள்ளுக்குள் அடக்கிக்கொண்டவன் கண்ணாடியிலான சுவற்றின் அருகே சென்று நின்றுக்கொண்டான்.
பதிலெதுவும் பேசவில்லை. அவன் பார்வை வெளியே பதிந்திருந்தது.
நிஹாரிகாவோ விரக்திப்புன்னகையோடு அவனைப் பார்த்தவள் அறையிலிருந்து வேகமாக வெளியேறி கண்ணீரைத் துடைத்தபடி ஆஃபீஸிலிருந்து வெளியே செல்ல, ஒருசில கணங்களில் நடந்தேறியது அந்த சம்பவம்.
இடதுபக்கமாக பார்கிங் ஏரியாவுக்கு சென்றுக்கொண்டிருந்த வாகனத்தை கவனிக்காமல் அவள் குறுக்கே சென்றுவிட, பெரிய சத்தத்தோடு ப்ரேக் ஓட்டுனர் காரை நிறுத்தியும் காரின் மேல் மோதிவிட்டாள் நிஹாரிகா.
அடி பலமாக இல்லை, ஆனால் எதிர்பார்க்காத அதிர்ச்சியில் அவள் தரையில் மயங்கி விழுந்திருக்க, கண்ணாடி வழியே வெளியே வெறித்துக்கொண்டிருந்த யாதவ்வின் விழிகளிலும் அது சரியாக பட்டது.
அதிர்ந்து விழித்தவன், “நீஹா…” என்ற அலறலோடு அறையிலிருந்து வெளியேறி ஓடினான்.
உடலிலிருந்து உயிரை பிரித்தெடுப்பது போல ஒரு வலியை உணர்ந்தான் ஆடவன். அவனையும் மீறி கண்கள் குளம் கட்டின.
முன்தெரியும் காட்சிகள் மங்கலாக, கால்கள் தடுமாறின.
சுற்றியிருந்த மொத்தப்பேரும் யாதவ்வைதான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆஃபீஸிலிருந்து வெளியேறி மூச்சு வாங்க தன்னவளைத் தேடியவனின் விழிகளில் தென்பட்டது நிஹாரிகாவை கையில் ஏந்திய வண்ணம் ஆரவ் பதற்றமாக நின்றிருக்கும் காட்சிதான்.
அதைப் பார்த்தவனோ அப்படியே சிலையாய் நின்றுக்கொண்டிருக்க, “யாதவ் ஹெல்ப்.. சீக்கிரம் கார் கதவை திற!” என்று மற்றவன் கத்தியதும் நடப்புக்கு வந்தவன் ஓட்டுனரை மறுத்துவிட்டு தானே காரை எடுத்துக்கொண்டு வந்து கதவைத் திறந்துவிட்டான்.
அடுத்த இருபது நிமிடங்களில் அந்த ப்ரைவேட் ஹாஸ்பிடலில் நிஹாரிகா அனுமதிக்கப்பட்டிருக்க, ஆரவ் ஒற்றைக்காலை மடக்கி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் என்றால், கரங்களைக் கோர்த்து இறுகிய முகமாக தரையை வெறித்த வண்ணம் இருக்கையில் அமர்ந்திருந்தான் யாதவ்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட சில நிமிடங்கள் கடந்திருக்க, சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த டாக்டரைப் பார்த்ததும் வேகமாக அவரின் அருகே சென்றான் ஆரவ்.
“இஷ் ஷீ ஆல்ரைட் அவளுக்கு ஒன்னு இல்லல்ல..” அவன் பதற்றமாகக் கேட்க, “அடி பெருசா இல்ல, பேனிக் ஆனதுல மயங்கியிருக்காங்க, அவ்வளவுதான். இன்னும் மயக்கத்துலதான் இருக்காங்க, கண் விழிச்சதும் போய் பாருங்க” என்றுவிட்டு சென்றார் அவர்.
நிம்மதி பெருமூச்சு விட்டவாறு திரும்பியவனுக்கு அங்கு ஹாஸ்பிடலில் இருந்தவர்களின் மொத்தப் பார்வையும் இருக்கையில் அமர்ந்திருந்த யாதவ்வையே நோக்குவதைக் கண்டதும் பக்கென்று இருந்தது.
அனைவரும் அலைப்பேசியில் அவனை புகைப்படமெடுப்பதையும் வீடியோ எடுப்பதையும் கண்டுகொண்டவன் அவனை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலிலிருந்த தனிப்பட்ட அறைக்குச் சென்றான்.
“நாளைக்கு ஹெட்லைன்னே நீதான் போல..” ஆரவ் கேலியாக சொல்ல, “மே பீ..” என்ற மற்றவனோ ஏதோ ஒரு இடத்தை வெறித்தவாறு அப்படியே நின்றிருந்தான்.
சில கணங்கள் மௌனத்தில் கழிந்தது.
“நான் உன்கிட்ட…” என்று ஆரவ் ஏதோ சொல்ல வர, “அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும். நீ.. நீ நிஹாரிகாவ கல்யாணம் பண்ணிக்க, ஐ திங் யூ டிசெர்வ் ஹெர்” என்றானே பார்க்கலாம்.
ஆரவ் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
திகைத்துப் பார்த்தவன், “வாட்!” என்று அடித்தொண்டையிலிருந்து கத்திவிட்டு வாய்விட்டு சிரித்தான்.
“அதுக்கு நீஹா ஒத்துக்கணுமே, அவ உன்ன மட்டுமே காதலிக்கும் போது என்னை எப்படி ஏத்துப்பான்னு நினைக்கிற?” என்று கேட்டான் பதிலுக்கு.
யாதவ்விடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆரவ்வே மீண்டும் தொடர்ந்தான்.
“அவ மேல நீ எந்தளவுக்கு கோபத்துல இருக்கேன்னு எனக்கு தெரியும். பட் யூ நோ வன்திங், நான் கரெக்ட்டா இருந்திருந்தா அவள நான் இழந்திருக்க மாட்டேன் யாதவ். அவள எனக்கேத்த மாதிரி மாத்த ட்ரை பண்ணி இப்போ… பட் யூ ஆர் லக்கி மேன், அவ காதல் உனக்கு கிடைச்சிருக்கு. அவ எதிர்பார்த்த ஒருத்தனா நீ அவ கண்ணுக்கு தெரிஞ்சிருக்க. யாரையும் ஃபார்ஸ் பண்ணி ரிலேஷன்சிப்ல வச்சுக்க முடியாது, அதை நான் ரியலைஸ் பண்ண இத்தனைநாள் ஆகியிருக்ககு. ஷீ மேக்ஸ் மீ ரியலைஸ்”
அவனுடைய வார்த்தைகள் வலியோடு வர, அவன் நினைவுகள் அன்று நிஹாரிகா அவனோடு பேசியதை நினைத்துப் பார்த்தது.
அன்று, நிஹாரிகா வீட்டிற்குள் நுழைய, அவளுக்காகவே காத்திருப்பவன் போல சோஃபாவில் அமர்ந்திருந்தான் ஆரவ்.
ஆதிராவோ கையில் பூரி கட்டையோடு சமையலறை வாசலில் நின்றுக்கொண்டிருக்க, “இங்க என்ன பண்ற?” என்று கேட்டாள் மற்றவள் கடுப்பாக.
“ஏன் நீஹா, உன்ன பார்க்க நான் வரக் கூடாதா? நீ என்னை வேணாம்னு சொன்னாலும் ஐ ஸ்டில் லவ் யூ..” என்றவன் அவளெதிரே வந்து நிற்க, எரிச்சலாக விழிகளை உருட்டினாள் அவள்.
“ஏன்டீ இப்படி என்னை சாவடிக்கிற, நான் பேசுறது உனக்கு எரிச்சலா இருக்கா? அந்த யாதவ் உன்ன கண்டுக்க கூட மாட்டேங்குறான். ஆனா நீ நாய் மாதிரி அவன் பின்னாடியே வர்ற, ச்சே! ஐ கான்ட் டோலரேட் நீஹா.. என் ஃபீலிங்க்ஸ் உனக்கு புரியலயா? நான்தான் சொல்றேன்ல, ஒழுங்கா இருக்கேன்னு ஏன்டீ புரிஞ்சுக்க மாட்டேங்குற?” என்று ஆரவ் தன்னை மீறி ஆதங்கத்தை கொட்ட, அவனை பாவமாகப் பார்த்தாள் நிஹாரிகா.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, “ஆரவ், நெஜமாவே உன்ன பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருக்கு. நான் இத்தனை வருஷம் அர்ஜூக்காக வெயிட் பண்ற மாதிரிதான் நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்க. நாம காதலிக்கிறவங்க நம்மள கண்டுக்காம இருக்கும் போது உள்ளுக்குள்ள அனுபவிக்கிற வலி எனக்கு நல்லாவே தெரியும்.
ஆனா… காதல ஃபார்ஸ் பண்ண முடியாது ஆரவ். அப்போவும் எனக்கு உன்மேல பயம்தான் அதிகமா இருந்துச்சு. இப்போவும் உன்னை பார்க்கும் போது அதே பயம்தான். நா.. நான் உனக்கு பொருத்தமானவ கிடையாது. அர்ஜூ என்னை ஏத்துக்கலன்னா கூட பரவாயில்ல, நான் இப்போலாம் தனியா வாழ ரொம்ப பழகிட்டேன்.
தப்புக்கு தண்டனை அனுபவிக்க வேண்டாமா! பட் உனக்கொரு வாழ்க்கை இருக்கு. என்ட்… காதலிக்கும் போது கூட நான் உன்கிட்ட எதுவுமே கேட்டதில்ல, நீயா என்னோட ஆசைகள நிறைவேத்தினதும் இல்ல. இப்போ ஒன்னே ஒன்னு கேக்குறேன், ஜஸ்ட் மூவ் ஆன் ஆரவ், உனக்கான வாழ்க்கைய அமைச்சுக்க”
அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்துப் போனது.
அதை சொல்லி முடித்தவன், “உன்ன பிரிஞ்சதுக்கு அப்பறம் அவ வாழ்க்கையில என்னாச்சு தெரியுமா…” என்று ராதாவின் இறப்பிலிருந்து அவள் மஹாதேவனிடமிருந்து தப்பி சென்றது வரை அனைத்தையும் கூறி முடிக்க, யாதவவ்வின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டன.
“யூ நோ ஐ ஸ்டில் லவ் ஹெர், பட் வேணாம், அவள நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அவளோட ஹேப்பீனெஸ்ஸ திரும்ப கொடுக்குறதுதான் நான் பண்ண தப்புக்கான தண்டனை. அது… நீதான் யாதவ், உன் ஈகோவால அவள இழந்துராத” என்றான் ஆரவ் அழுத்தமாக.
அவனிதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தாலும் அவன் விழிகள் வலியை அப்பட்டமாக பிரதிபலித்தன.
யாதவ்வுக்கு வார்த்தைகள் வரவில்லை. ஏதோ ஒன்று தொண்டையை அடைப்பது போல இருந்தது.
சட்டென அவர்களிருந்த அறைக் கதவு தட்டப்பட்டு திறக்கப்பட, “அவங்க கண் முழிச்சிட்டாங்க, போய் பார்க்குறதுன்னா பாருங்க..” என்றாள் தாதி ஒருத்தி.
ஒரு அடி முன்னே வைத்த ஆரவ், சட்டென நின்று, “யாதவ் ப்ளீஸ்..” என்று முன்னே செல்லும்படி காண்பிக்க, அதற்குமேல் காத்திருப்பானா என்ன!
வேகமாக சிகிச்சை அறை வாசல் வரை சென்றவன் உள்ளே நுழைய, அங்கு விழிகளை மூடி கட்டிலில் படுத்திருந்தாள் நிஹாரிகா.
யாதவ் அவளருகே செல்லவில்லை. இனம் புரியாத ஒரு உணர்வோடு அவளையே இமை வெட்டாமல் பார்த்திருந்தான்.
விழிகளை மூடியிருந்தவளுக்கு மனம் உந்த பட்டென்று விழிகளைத் திறந்தவள் எதிரே நின்றுக்கொண்டிருந்த யாதவ்வை திகைத்துப் பார்த்தாள்.
இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
நிஹாரிகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. யாதவ்வின் விழிகளில் வழக்கமாக தெரியும் கோபமோ வெறுப்போ இப்போது இல்லை, அதற்கு மாறாக ஒரு ஏக்கம், வலி அப்பட்டமாகத் தெரிந்தது.
விழிகளை சுருக்கி அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ சொல்ல வாயெடுக்க, யாதவ்வோ சட்டென்று அறையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டான்.
பூட்டிய கதவை அவள் வெறித்துப் பார்க்க, வாசலில் நின்றிருந்த ஆரவுக்கும் குழப்பம் மட்டுமே மிஞ்சியது.
அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில்,
‘இவன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான், இன்னைக்கு இவன் சாவு என் கையிலதான்.. எப்போ பாரு உம்மூணா மூஞ்சாட்டம் முகத்தை வச்சுக்கிட்டு வெறுப்பேத்துவான்ல, இன்னைக்கு அவன் வாயிலயே குத்துறேன்’
வாய்விட்டு கத்திக்கொண்டு மின்னல் வேகத்தில் காரை செலுத்திய சித்தார்த் யாதவ்வின் பீச் ஹவுஸின் முன்னே காரை நிறுத்தினான்.
“எங்கடா இருக்க பரதேசி, டேய்….” கதவைத் தள்ளிக்கொண்டு கோபமாக அவன் உள்ளே செல்ல, அங்கு மது போத்தலை வாயில் சரித்தபடி முழு போதையில் அமர்ந்திருந்தான் யாதவ்.
அதைப் பார்த்ததுமே திகைத்துப் போய் இரண்டடி பின்னே நகர்ந்தவனுக்கு, முதல் தடவை யாதவ் மது அருந்துவது ஆச்சரியத்தை தான் கொடுத்தது.
“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க, நான் லண்டன் போயிட்டு வர்ற கேப்ல இந்த பழக்கம் வேற வந்துருச்சா? வாட்ஸ் ரோங் வித் யூ யாதவ், நீஹா கூட பெட் ஷெயார் பண்ணி அவள ஏமாத்தியிருக்க, ஏதோ உத்தமன் மாதிரி பேசுவ, இப்போ எங்கடா போச்சு உன் நியாயம்? மொதல்ல இதை தூக்கி போடுடா ப்ளடி டேஷ்..”
சித்தார்த் காட்டுக்கத்து கத்திக்கொண்டு அவன் கையிலிருந்ததை பிடுங்கி தூக்கியெறிய, தோழனை கோபமாகப் பார்த்தான் மற்றவன்.
“ஹவ் டேர் யூ சித்து.. எனக்கு அது வேணும்டா, இந்த போதை மட்டும் இல்லன்னா அவ நினைப்பு என்னை சாவடிக்குதுடா, உனக்கு என் நிலைமை புரியுதா இல்லையா? நீஹாவ பத்தியே ஒவ்வொரு செக்கனும் யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு. என்னால முடியல சித்து..”
கோபமாக ஆரம்பித்தவன் இறுதியில் அழுகையோடு முடிக்க, மற்றவனோ விதிர்த்துப்போய் விட்டான்.
தன் நண்பனிடத்தில் இத்தகைய வார்த்தைகளை அவன் கேட்டதே இல்லை.
“அவ ஏன்டா என் லைஃப்ல வந்தா, நான் பாட்டுக்கு சிவனேன்னு கிரிக்கெட்டு மேட்ச்னு இருந்தேன். ஆனா இப்போ… நீஹா.. நீஹா மட்டும்தான் எனக்குள்ள இருக்கா. ஐ நோ ஐ லவ் ஹெர், அவள தவிர வேற எந்த பொண்ணுக்கும் என் வாழ்க்கையில இடம் இல்ல. பட் நான் ரொம்ப அவள காயப்படுத்திட்டேன்டா,
அவள ஒவ்வொரு தடவையும் வார்த்தையால கொன்னுட்டு நான் அழுதிருக்கேன், இதுலயிருந்து எப்படி வெளியில வரதுன்னு கூட தெரியல. இப்போ அந்த அம்மணிக்கு நான் வேணாமாம், அவ வாயால அதை சொல்லும் போது என்னால தாங்க முடியலடா. அவள என்னை விட்டு போக வேணாம்னு சொல்லு சித்து..”
போதையில் தன் மனதிலிருந்தை தோழனிடம் கொட்டித் தீர்த்தான் யாதவ்.
சித்தார்த்திற்கு அனைத்தும் புரிந்து போனது.
“டேய் யாதவ்…” என்று நண்பனை தாவி அணைத்துக்கொண்டவனுக்கு அவனை தேற்றக் கூட வழி தெரியவில்லை. ஆனால், ‘இப்போதாவது உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்தானே பாவி’ என்ற சந்தோஷம் அவனுக்குள்.
அன்றிரவு கழிந்து அடுத்தநாள் விடிந்தது.
இரு ஆடவர்களும் ஒருவருக்குமேல் ஒருவர் காலையும் கையையும் போட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்க, யாதவ்வின் எண்ணிற்கு தொடர்ந்து அழைப்பு வந்தது.
போதையில் உண்டான தலைவலி ஒருபக்கம் தூக்கக் கலக்கம் ஒரு பக்கம் என கஷ்டப்பட்டு கட்டிலிலிருந்து இறங்கியவனுக்கு சித்தார்த்தைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
“இவன் எப்போ வந்தான்?’ தலையை சொரிந்தவாறு யோசித்தவன் அலைப்பேசியை தே டி எடுத்து அழைப்பையேற்று காதில் வைத்தான்.
மறுகணம் மறுமுனையில் சொன்ன செய்தியைக் கேட்டு அவனுக்கு உலகமே தலை கீழாக சுற்றிவிட்டது.
***********
-Sheha zaki
