Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..22(எபிலாக்)

உயிர் உருகும் காதல் எனதே……22(எபிலாக்)

“துக்காம்மா…..துக்காம்மா…..”என்றவனின் குரலே கட்டி போய் இருந்தது.

“என்னடா என் செல்லத்துக்கு…..”என்று அவனை வாரி அணைத்துக் கொண்டாள் துர்கா.மொட்டை அடித்திருந்ததால் மிகவும் அழுதிருந்தான் பரணி.இப்போது தான் வாசினி அவனை குளிப்பாட்டி அழைத்து வந்திருந்தாள்.

“க்கா இந்தா இந்த டிரஸை போடு…..உன் கிட்ட தான் அடம் பிடிக்காம போடுவான்…..”என்று வாசினி அவனிற்கான புது உடையை எடுத்துக் கொடுக்க,



Advertisement

“கொடு நான் போட்டுவிடுறேன்…..நீ போய் மத்த வேலையை பாரு…..”என்றாள் துர்கா.பரணிக்கு துர்கா என்றால் அத்தனை இஷ்டம் துக்காம்மா….துக்காம்மா….”என்று அவளின் பின்னே சுற்றிக் கொண்டு திரிவான்.துர்கா உடையை பரணிக்கு அனுவித்து அழைத்து வர,

“நீ இங்க தான் இருக்கியா….”என்றபடி வந்தான் வீரா.அவனைக் கண்டவுடன் அவனிடம் குழந்தை தாவ,

“வாடா குட்டி….”என்று அவனை தூக்கி கொள்ள,அவனின் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு அவனிற்கு எப்போதும் கொடுக்கும் சாக்லெட் இருக்கிறதா என்று பார்க்க அதில் அவனிற்கு பிடித்த கர்பெரி டைரி மில்க் இருந்தது.

Advertisement

“ஐஐஐ…..சாக்கி…..”என்றவன் வீராவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட,

Advertisement

“அட….இங்க துக்காம்மாக்கு ஒண்ணுமில்ல….ஆனா உன் சாக்கிப்பாக்கு மட்டும் முத்தமா….”என்று துர்கா முகத்தை தூக்க,

“கொடுத்துடுடா பட்டு…..இல்ல உன் துக்காம்மா கோச்சிப்பா….”என்றவன் துர்காவின் கன்னம் பக்கம் குழந்தையை கொண்டு போக அவளிற்கும் அதே போல முத்தம் கொடுத்தான் பரணி.

“அப்படியே நில்லுங்க….”என்று அங்கு வந்த சித்தார்த் கூறினான்.அவனை திரும்பி பார்த்தனர் மூவரும்.அவர்களை புகைப்படம் எடுக்க அவன்  தயாராக பரணி இருவரின் தோள்களிலும் கை போட்டுக் கொண்டு இருவரின் முகத்தையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள அது அழகாக புகைப்படம் ஆனது.

Advertisement

“சரி சரி கூட்டிட்டு வாங்க அவனுக்கு காது குத்தனும்….”என்று பின்னின்ற நிர்மலா கூற,

“நீங்க கூட்டிட்டு போங்க….நான் இதோ வந்துடுறேன்…..”என்று துர்கா வீராவிடம் குழந்தை ஒப்படைத்துவிட்டு செல்ல,

“போலாமா சாம்ப்….”என்று அவனை தூக்கி பிடித்துக் கொண்டு காது குத்துபவரிடம் சென்றான் வீரா.சித்தார்த் மற்றும் வீரா இருவரின் மடியில் அமர்ந்து தான் பிள்ளைக்கு காது குத்து என்று முடிவு செய்திருந்தனர்.அதனால் வீராவையும் நிர்மலா அமர சொல்ல அவனோ,

“அச்சோ எனக்கு பயமா இருக்கு….”என்று அலறினான்.

“சரியா போச்சு போ…..”என்று அங்கிருந்வர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.குழந்தைக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்த துர்காவிடம் இதை கூற அவளோ,

“சரியான பயந்தாங்கொலி…..”என்றாள் கணவனை பார்த்துக் கொண்டு,

“ஏய் என்ன நக்கலா….”என்று வீரா எகிறிக் கொண்டிருக்க,

“அட வீரா நீங்க வாங்க….அவங்களுக்கு உங்களை பத்தி தெரியலை….”என்று சித்தார்த் கூற,

“சாக்கிப்பா…சாக்கிப்பா….பா…பா….”என்று அவனை இரு கை நீட்டி அழைத்தான் பரணி.அதை பார்த்த வீராவிற்கு புன்னகை மலர,

“இதோ வரேன்டா பட்டு….”என்று கூறிக் கொண்டே அவனை தன் மடியில் அமர்த்திக் கொண்டான் வீரா.இதை அனைத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கற்பகம்,

“நேத்து வரை வரமாட்டேன்னு சொன்னவன்…..இன்னைக்கு என்னென்ன பண்றான் பாரு….”என்று துர்காவின் காதை கடிக்க,

“ம்ம்….விடு கற்பூ….பண்ணட்டும்…”என்று அவளும் கணவனை பார்த்துக் கொண்டே கூற,

“பெரிய மாப்பிள்ளைக்கு பரணி குட்டினா உயிரு…..சும்மா உங்க கிட்ட விளையாட்டுக்கு சொல்லியிருப்பாரு…..”என்று வானாதி வீராவிற்காக பேச,மாமியாரும்,மருமகளும் அவரை முறைத்தனர்.

“சரி சரி முறைக்காதீங்க….நான் பேசல….”என்று ஜகா வாங்கிவிட்டார் வானாதி.பின்னே இவர்களிடம் மாட்டிவிட்டால் மீள்வது அத்தனை எளிதல்லவே.

“அட விடுங்க இரண்டு பேரும்…..அங்க பாருங்க….என் பேரன் கூட அழலை உங்க பிள்ளை தான் அழுதுகிட்டு இருக்காரு…..”என்று நிர்மலா கூற,அங்கு பரணிக்கு இரண்டு காதுகளும் குத்தி முத்து பல் தெரிக்க சிரித்துக் கொண்டிருக்க வீரா கண்களை துடைத்துக் கொண்டிருந்தான்.பரணியின் காது குத்தும் வைபோவம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.சில உறவுகள் துர்கா,வீராவை பற்றி விமர்சித்த படி இருக்க,

“நீங்க வந்தது என் பேரன் விஷேத்துக்கு தான்….அவனை வாழ்த்திட்டு கிளம்புங்க…..எங்க வீட்டு பொண்ணை பத்தி பேசுற உரிமை உங்களுக்கு இல்லை….”என்று நிர்மலா ஒரே போடாக போட்டு விட அந்த கூட்டம் கலைந்து ஓடிவிட்டது.காலம் எதற்காவும்,யாருக்காவும் நிற்காமல் ஓடியது அதில் துர்கா,வீராவின் வாழ்வும் சின்ன சச்சரவுகளுடனும்,அதிக காதலுடனும் செல்ல துவங்கியது.அவ்வபோது குழந்தை என்று வீரா ஆரம்பிக்கும் போதெல்லாம் துர்கா அவனை அழகாக திசை திருப்பிவிடுவாள்.அவனும் மனைவி தன்னை திசைதிருப்புகிறாள் என்று தெரிந்தே  அந்த பேச்சை அத்துடன் விட்டுவான்.கற்பகம் இப்போதெல்லாம் கோவில்,யாத்திரை என்று செல்ல தொடங்கியிருந்தார் இப்போது வானாதியும் அதில் இணைந்திருக்க அவர்களின் பொழுதுகள் சற்று அமைதியாக நகர்கிறது.

அன்று காலைவேளை சூப்பர் மார்கெட்டில் கூட்டம் அதிகமாக இருக்க வீரா சிசிடிவியின் வழியே வெளியில் நடப்பதை பார்வையிட்ட படி தன் வேலைகளை செய்து கொண்டிருந்தான்.அப்போது அவனின் பேசி இசைக்க எடுத்து பார்த்தவன் திரையில் தெரிந்த புதிய நம்பரைக் கண்டு புருவம் சுருக்கியவாரே ஆன் செய்து காதில் வைக்க,

“ஹலோ…..”என்றவன் மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்து எழுந்து வெளியில் வந்து கொண்டே,

“இ….இதோ…வந்துட்டே இருக்கேன்…..”என்றவன் கடையின் உதவியாளரை அழைத்து சில விபரங்களை கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.அவனின் வண்டி சீறிப் பாய்ந்தது அந்த மருத்துவமனையின் முன் வண்டியை நிதானமில்லாமல் நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே வர,

“இதோ துர்கா ஹஸ்பெண்டே வந்துட்டாரு….இங்க வாங்க சார்…..”என்று ஒரு குரல் கேட்க,அவரிடம் விரைந்தவன்,

“துர்காக்கு என்னாச்சு????எங்க அவ??…..”என்று பரிதவிப்புடன் கேட்க,

“இங்க தான் இருக்காங்க வாங்க…..”என்று அவனை அழைத்து சென்றார் அவளுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர்.

“காலையிலிருந்தே அவங்க சரியா இல்ல….கிளாஸ்க்கு பெல் அடிச்சதும் கிளம்பி வாசல் வரை போனவங்க அங்கேயே மயங்கிட்டாங்க…..முகத்துல தண்ணி தெளிச்சும் எந்திரிக்கல அதான் நாங்க இங்க தூக்கிட்டு வந்துட்டோம்…..”என்று கூறிக் கொண்டே வந்தவர் துர்கா இருக்கும் அறையை காட்ட,வீரா அவர் பேசியதை காதில் வாங்கி கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தான்.

கட்டிலில் வாடிய மலரை போல் கிடந்தாள் துர்கா.அவளின் ஒரு கையில் அப்போது தான் கையில் சொருகிக் கொண்டிருந்தனர்.

“என்னாச்சு???…..”என்றவனின் குரல் அவனிற்கே கேட்டிருக்கோமோ என்னவோ நெஞ்சம் படபடக்க அவளின் அருகே நெருங்கிய நேரம்,

“மிஸ்டர்.வீரா…..”என்றபடி அறையின் உள்ளே வந்தார் பெண் மருத்துவர்.

“டாக்டர்…..என் துர்காவுக்கு என்னாச்சு…..”என்று கேட்டவனின் குரலே உடைந்துவிட்டது.

“ஹே….ஹலோ….மிஸ்டர்.வீரா….என்னதிது உங்களுக்கே குழந்தை வரப்போகுது…..ஆனா நீங்க குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு இருக்கீங்க…..”என்று கூற,வீராவிற்கு சில நொடிகள் எடுத்தது அவர் கூறியதை கிரகிக்க.

“எஸ்…ஷி யிஸ் பிரக்னெட்….”என்று கூற வீரா என்ன உணர்கிறான் என்று அவனிற்கே தெரியவில்லை.ஆனால் கண்கள் இரண்டும் மனைவியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.அழுத்தங்கள் குறைந்தாலும் மனைவியின் உடல் நிலை அவனை நிலையிழக்க செய்ய,

“அவ…அவளுக்கு….ஏன் இப்படி இருக்கா….”என்று அவளை தலை முதல் கால் ஆராய்ந்தபடி கேட்க,

“அது….அவங்களுக்கு உடம்பு கொஞ்சம் வீக்கா இருக்கு….அதனால தான் மயங்கிட்டாங்க….மத்தபடி பயப்பட ஒண்ணுமில்ல….இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க….”என்றுவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார்.

துர்கா அரை மணி நேரம் கழித்து தான் கண்விழித்தாள்.அவள் அந்த அறை சுற்றி பார்க்க வீரா அவளின் காலுக்கு அடியில் தலை சாய்த்து படுத்திருந்தான்.இவள் கண்விழிப்பதை பார்த்தவுடன் அவளின் அருகில் நெருங்கி,

“துர்காம்மா….எப்படி இருக்கு…..இரு….டாக்டர்…..”என்று கத்திக் கொண்டே வெளியில் செல்ல,அடுத்த இரண்டு நிமடங்களில் அந்த இடமே அத்தனை இரைச்சலாகி இருந்தது.வீரா வெளியில் சென்ற நொடி கற்பகம்,வானாதி,நிர்மலா,வாசினி நால்வரும் உள்ளே நுழைந்துவிட்டனர்.

“அடடா….இது என்ன ஹாஸ்பிட்டலா இல்ல…சந்தை கடையா….முதல்ல எல்லாரும் வெளில போங்க…..”என்று கத்தினார்.

“இதோ போறோம்…..வாங்க….”என்ற கற்பகம்,துர்காவின் கன்னவழித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்ல,அவரை முறைத்தபடி நின்றிருந்தான் வீரா.

“இப்ப எப்படி இருக்கு துர்கா…..”என்று மருத்துவர் கேட்க,

“ம்ம் பரவாயில்ல டாக்டர்….”என்றவளின் பார்வை முழுவதும் கணவனிடம் தான்.

“ஓகே….டிரிப்ஸ் முடிஞ்சதும் உங்களை டிஸ்ஜார்ஜ் பண்ணிக்கலாம்….”என்று கூற,

“இல்ல டாக்டர் அவளுக்கு இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு கூட்டிட்டு போறேன்…..அவ ரொம்ப டல்லா இருக்கா….”என்று வீரா பதற,

“நீங்க ரொம்ப பயந்துட்டீங்க….அவங்களுக்கு மசக்கையில இதெல்லாம் வரும்….பயப்படாதீங்க….”என்றவர் அவளுக்கு சில மருந்துகளை பரிந்துரை செய்துவிட்டு சென்றுவிட்டார்.இப்போது வீராவும்,துர்காவும் மட்டுமே,

“இங்க வாங்க…..”என்றவளின் குரலே மேல் எழும்பவில்லை.

“போடீ என்னை பயமுறுத்திட்ட….நான் வரமாட்டேன்….”என்று முகத்தை திருப்பிக் கொண்டு நிற்க,துர்கா அமைதியாக இருந்தாள்.அடுத்த நிமிடம் அவளிடம் நெருங்கி வந்தவன் அவளின் கைகளை பிடித்துக் கொண்டு,

“உனக்கு ஒண்ணுமில்லதான….”என்று கேட்க,

“நான் நல்லா தான் இருக்கேன்….”

“ஆனா டாக்டர் உன்னோட ஹெல்த் ரொம்ப வீக்கா இருக்குனு சொன்னாங்க….எனக்கு பயமா இருக்குடீ….”என்று கேட்க,அவனின் இன்னும் தன் பக்கத்தில் இழுத்தவள்,

“ஓய்….எனக்கு ஒண்ணுமில்ல…..”என்றுவிட்டு அவனின் கரத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு அவளின் மணி வயிற்றை வருட,வீராவின் உடலில் மின்னல் வெட்டியது.

“போடீ….நான் தான உன்கிட்ட சொல்லனும்….அதுக்குள்ள இந்த அம்மா சொல்லிடுச்சு….”என்று முகத்தை திருப்ப,

“அச்சோ முடியலை உங்களோட…..என் ஹெல்தை பார்த்துக்கலனு என் கற்பூவை திட்டியிருக்கீங்க…..”என்று கேட்க,

“அவங்களால தான உனக்கு இப்படி ஆச்சு…அவங்க உன்னை சரியா பார்த்துகல….”என்று கூற அவனின் காதை திருகிவிட,

“ஆஆஆ…என்னை விடுடீ……”என்றான் வீரா.இப்படி பலபல இன்பொழுதுகளுடன் அவர்களின் வாழ்வும் நகர தொடங்கியிருந்தது.

மூன்று வருடங்கள் கழித்து இன்று,

“அச்சோ ம்மா….அத்த என்னால முடியல…..”என்று துர்கா ஒரு புறம் கத்திக் கொண்டிருக்க,

“கொஞ்சம் பொருத்துக்கோடிம்மா….”என்று கற்பகம் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்க,

“ம்மா…..ம்மா…இந்தா தண்ணீ….”என்று துர்காவின் வாயில் பாட்டிலை வைத்தான் அவளின் மூத்த புதல்வன் மித்ரன்.வயது இரண்டு.

“ம்மா…ம்மா….எனக்கும் தண்ணீ வேணும்…..”என்று அண்ணனிடம் இருந்து வாங்கியது விமலன்.துர்காவின் இரண்டாவது புதல்வன்.வயது ஒன்று.

“டேய் அம்மாவை படுத்தாத…..”என்று ஒரு ஆரஞ்சு பழத்தை பிழிந்தபடி அமர்ந்திருந்தான் வீரா.பிழிந்த பழத்தை மனையாளிடம் நீட்ட அவளோ அவனை முறைத்தபடி இருந்தாள்.

“வாங்குங்க டீச்சரம்மா….உடம்புக்கு தெம்பு வேணும்ல….”என்று கூற,

“உங்களைஐஐஐ….”என்று பல்லைக் கடித்தாள் துர்கா.

“ம்க்கும்….இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை….அவன் சொன்னான்னு கேட்டுட வேண்டியது அப்பறம் குத்து குடையதுனு என் உயிரை வாங்க வேண்டியது….”என்று கற்பகம் முணகினார்.

“ம்மா….நல்லா வேண்டிக்கோ….”என்று வீரா தாயிடம் கூற,அவரோ,

“அடேய் என்னால முடியலடா….நான் போறேன்….வாங்கடா குட்டிகளா….நீ யாச்சு உன் பொண்டாட்டியாச்சு….”என்றுவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட,

“நான் என்ன சொல்லிட்டனு இப்ப உன் மாமியார் கோச்சிக்கிறாங்க….”என்று வீரா துர்காவை பார்க்க,

“என்னை படுத்தாதீங்கப்பா….”என்று துர்கா கெஞ்சுவது போல கூற,

“ம்ம் சரி….சரி….ஆனா எனக்கு பொண்ணை மட்டும் பெத்துக் கொடுத்துடு……ஓகே…..”என்று கூற,அவனை வெட்டவா,குத்தவா என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.ஆம் முதல் இரண்டு ஆண் பிள்ளைகள்.இந்த முறை பெண் பிள்ளை என்று வேண்டும் என்று வீராவின் வேண்டுதல்.ஆனால் ஒருவேளை ஆண் பிள்ளை பிறந்தால் என்று மருத்துவர் கேலியாக கேட்டுவிட அவ்வளவு தான் வீரா ஆரம்பித்துவிட்டான்.

“இது ஆம்பளை பிள்ளையா இருந்தா அடுத்த பிள்ளை பொண்ணு பிறக்கும் டாக்டர்…..”என்று கூற,மருத்துவர் அதிர்ந்துவிட்டார் என்றால் துர்காவோ தலையில் அடித்துக் கொண்டாள்.இப்படி பல அலப்பறைகளை கூட்டிக் கொண்டே தான் இருந்தான் வீரா.இதோ துர்காவை பிரசவறைக்கு அழைத்து செல்ல வீராவிற்கு நெஞ்சம் அடைத்தது.

“உன்னை கஷ்டப்படுத்துறேன்ல…..”என்று கூற,

“இல்லைனு சொல்லமாட்டேன்….வீராச்சாமி…..”என்று துர்கா கூற,கற்பகம் முகத்தை சுழித்துக் கொண்டார் என்றால் வானாதியோ சிரித்துவிட்டார்.பின்னே முதல் இரண்டு பிரசவத்திற்கும் இப்படி தானே இருவரும் பேசினர் என்று நினைத்து அவர் சிரிக்க,

“சும்மா இருங்க அண்ணி…..உங்க மருமகன் பார்த்தான்னா அதுக்கும் கத்துவான்…..”என்று கற்பகம் கூற,

“ஆமாம்மா…..அப்பறம் அத்தான் கிட்ட நீ தான் மாட்டிப்ப….பார்த்துக்கோ…..”என்று வாசினி கூறினாள்.அதன் பின் வானாதி சிரிப்பார்?அத்தனை பயம் வீராவின் மீது முதல் பிரசவத்தின் போது ஏதோ துர்கா கேட்டதற்கு அவரும்,கற்பகமும் சிரித்துவிட அவ்வளவு தான் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டான் வீரா.

பிரசவறையின் முன் நடைபயின்று கொண்டிருந்த வீராவின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்க,தன் கரத்தை நெஞ்சில் நீவிக் கொண்டான்.மனதின் போரட்டம் இப்போது இல்லை.

“பொண்ணு பிறந்திருக்கா…..”என்று நர்ஸ் கூற,வீராவிற்கு அத்தனை சந்தோஷம்.மகளை கையில் வாங்கும் போது உலகையே வென்றுவிட்டது போல் இருந்தது.குழந்தையை தன் மகன்களிடம் அவன் காட்ட,

“என் பாப்பா……என் பாப்பா…..”என்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு குழந்தைக்கு முத்தம் கொடுத்தனர்.கற்பகத்திற்கு வாழ்வு நிறைவு பெற்றது போல் இருந்தது.வீரா குழந்தையை யாரிடமும் தரவில்லை மனைவி வரும் வரை அவன் வைத்திருந்தான்.துர்கா விழித்ததும் அவளிடம் குழந்தையை காட்ட,

“உங்க பொண்ணு வந்துட்டாளா….இப்ப சந்தோஷமா…..”என்று கேட்க,

“ம்ம்….ஆனா….”என்று அவன் இழுக்க,

“என்ன????”

“இல்ல இவ உன்னை போலவே இருக்கா…..என்னை போல ஒண்ணு…..”என்று கூறி முடிக்கும் முன்,

“படார்….”என்று சத்தம் வேறு யாரு நம் கற்பகம் தான் மயங்கியிருந்தார்.

“உங்களால என் கற்பூ….மயங்கிடுச்சு….”என்று துர்கா சிரித்துக் கொண்டே கூற,

“அவங்க வரவர சரியில்ல….உங்க அம்மவோட சேர்ந்து கெட்டு போயிட்டாங்க…..”என்று கூற அவனை அடித்தவள் முகத்தில் நிறைவான புன்னகை.மேலும் இரண்டு நாட்கள் கழித்து தான் துர்கா வீடு வந்தாள்.அவளின் முகத்தில் எள்ளும்,கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

“அடியே மகராசி….உன் புருசன் கடைக்கு போயிருக்கான் வந்துடுவான்….அவன் வந்ததும் அவன் கிட்ட நீ பேசிக்க….”என்று கற்பகம் கூற,

“நீ பேசாத கற்பூ….நான் ரொம்ப கோபமா இருக்கேன்….”என்று துர்கா அவரிடமும் முகத்தை திருப்பினாள்.

“திருப்புனா திருப்பிக்கிட்டு போடீ…..உன் உடம்புக்கு ஆகுமா….அவன் தான் ஒரு கூறுகெட்ட பய….ஏதாவது பேசுவான்…..நீ உடனே அதுக்கு தலையாட்டிக்கிட்டு இருப்ப…..யாருடீ புள்ளைய பார்த்துபா…..”என்று கற்பகம் பொரிய துவங்கினார்.இன்னும் ஒரு குழந்தை வேண்டும் என்று வீரா கேட்டதற்கு தான் இவளும் சரி என்று தலையாட்ட கற்பகம் தான் மருத்துவரிடம் பேசி அவளிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டார்.அதற்கு தான் இப்போது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிகிறாள் துர்கா.

“ப்பா இவ கிட்ட ஒரு புள்ளை கேட்டது தப்பால போச்சு…..என்ன பாடு படுத்துறா…..”என்று கற்பகம் புலம்பிக் கொண்டே இருந்தார்.அத்தனையும் இன்பமான புலம்பல்கள் தான்.பிள்ளைகள் இருவரும் வானாதியிடம் இருந்தனர்.அவர்கள் இருந்தால் குழந்தை தூங்க வைக்கக்கூட முடிவதில்லை.என் பாப்பா என் பாப்பா என்று இருவரும் அவளை ப்யித்து எடுத்துவிட குழந்தையை வீரிட்டு அழவே தொடங்கியிருந்தாள்.அதனால் கற்பகம் தான் அவர்களை வானாதியிடம் அனுப்பிவிட்டிருந்தார்.

இரவு வீரா மித்ரன் மற்றும் விமலனை அழைத்துக் கொண்டு வர,

“ஏன்டா இவனுங்களை இப்ப அழைச்சிட்டு வர….”என்றார் கற்பகம்.

“ம்மா நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க…..”என்றவனை முறைத்தவர் வேறு எதுவும் கூறவில்லை.அவருக்கு தெரியும் பிள்ளைகள் இல்லாமல் மகன் இருக்கமாட்டான் என்று அவருக்கும் சந்தோஷமே மகனின் இந்த நிறைவான வாழ்வு.

அறையில் தன் மகளை கையில் வைத்தபடி வீரா உலாத்திக் கொண்டிருக்க துர்கா மகன்கள் இருவரையும் தூங்க வைத்துக்கொண்டிருந்தாள்.பிள்ளைகள் மூவரும் தூங்கிய பின் துர்காவிடம் வர அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு படுத்துக்கொள்ள அவளை பின் புறமாக அணைத்துக் கொண்டவன்,

“கோச்சிக்காதடீ…..உனக்கு முடியாது….நான் சும்மா தான் சொன்னேன்….”என்று அவளின் காதோரம் முத்தம் பதித்துக் கொண்டே கூற,

“போங்க….நீங்க ஆசையா கேட்டீங்க….”என்றாள் துர்கா,

“ஹா ஹா….என் செல்ல டீச்சரம்மாடீ நீ……”என்றவன் அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு முட்டிக் கொண்டவன்,

“போதும்டீ….எனக்கு இது போதும்…..நீ நான் நம்ம பிள்ளைங்க……நான் சந்தோஷமா இருக்கேன்…..இந்த உலகத்தயே ஜெயிச்சிட்டேன்…..என்னை ஜெயிக்க வச்சிட்டா என் டீச்சரம்மா…..”என்று கூற அவனின் கன்னத்தை கடித்திருந்தாள் துர்கா.வாகா இன்னுமொரு கன்னத்தையும் அவன் காட்ட அங்கேயும் செல்லகடி கடித்தாள் துர்கா.

“என்னோட உயிரை உருகவச்சது நீ தான்…..உன்னோட காதல் மொத்தமும் என்னக்கே எனக்கு தான்……எனக்கு மட்டும் தான்…..”என்றான் வீரா.

“உங்களுக்கு தான்….உங்களுக்கு மட்டும் தான்….”என்றவளை தன்னுடன் அணைத்துக் கொண்டு தங்கள் வாழ்வின் அடுத்த கனவுகளுடன் கண்ணயர்ந்தனர் இருவரும்.அவர்களின் கனவுகள் அனைத்தும் பலிக்க வேண்டும் என்ற பிராத்தனையுடன் நாமும் விடைபெறுவோம்.

(சுபம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!