Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிர் தேடும் உன்னை

உயிர் தேடும் உன்னை 2 2

 எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என்னென்ன சமைக்க வேண்டும் என்று ஈமெயிலில் அவனுக்கு அனைத்தும் வந்திருந்தது நேரில் வந்து ஜே பி கம்பெனியோட மேனேஜர் இவனிடம்  பேசி விட்டு சென்றான்.

 சிவா,  மீனாட்சியை வாழ்க்கை தரத்தை  மாற்றப் போகும். நாட்கள் அருகில் வந்து கொண்டிருந்தது.



Advertisement

 அந்த  ஜே பி குரூப் ஆப் கம்பெனி வீட்டு வாசலில் முன் வந்து  நின்றிருந்தான் சிவா.

 கேட்டை நிமிர்ந்து  பார்க்கவே அவனுக்கு கழுத்து வலித்தது அவ்வளவு உயரமான  கேட்.

Advertisement

Advertisement

 இங்கே உள்ளவர்கள் எப்படிப்பட்ட ஆட்கள் என்று கொஞ்சம் பயந்து கொண்டே தான் தன் காரில் உள்ளே வந்தான் சிவா.

Advertisement

 காரை நிற்கும்  இடத்தில் காரை நிறுத்தி விட்டு.

அந்த வீட்டில் இன்ஜார்ச்  ஒருவர் வந்து சிவாவை பெரியவர் முன் அழைத்து வந்தான்.

 அந்தப் பெரிய வீட்டினுள் நடந்து வந்தான் சிவா.

 வீடு மாதிரி  இல்ல ,  அரண்மனையும் இல்ல அதற்கு மேல் இருப்பது போல் இருந்தது அவ்விடம், அதில் உள்ள அறைகளை எண்ணவே அவனுக்கு ஒரு நாள் போதாது என்பது போல் தோன்றியது.

அது 5, 6 அடுக்கு மாடிகள்  இருக்கும்  பங்களா வீடு.

 பெரிய பெரிய கற்கள் வைத்து கட்டியது போல் இருந்தது அந்த பங்களா.

 இவ்ளோ பெரிய வீட்டில் இருந்து என்னை சமைக்க   அழைத்திருக்கிறார்களா? சிங்கப்பூரில்  அவனுக்கு தெரிந்த இன்னும் பெரிய பெரிய ஹோட்டல் கேட்டரிங் இருக்கிறது.

அதை எல்லாம் விட்டு தனக்கு கொடுக்க காரணம் என்னவோ என்று  நினைத்தபடியே  வந்தான்.

 “இங்க உட்காருங்க” என்று ஒரு சோபாவை காட்டிய அந்த   இன்சார்ஜ் சிவாவை உட்கார சொன்னவன்.

பெரியவருக்கு போனில் அழைத்து வர சொல்ல .

 ஒரு பத்து நிமிடம் கழித்து ஒருவர் வந்தார் அவருக்கு  80,  90 வயசு இருக்கும்.

முதுமையிலும்  கம்பீரம் குறையவில்லை, அவர் நடந்து வரும் தோரணையிலே ஒரு  கம்பீரம் தெரிந்தது, கையில் ஒரு ஸ்டிக் வைத்திருந்தவர் அவரின் பூட்ஸ்   சத்தம்  வர, நிமிர்ந்து  நடந்து வந்தார்..

 சிவா  அவரை பார்த்து எழுந்து நின்றிருந்தான்.

 அந்தப் பெரியவரை அவனுக்கு எப்பொழுதோ பார்த்து பேசிய ஞாபகம்…

 அவரும் அவனைப் பார்த்து சிரித்த படியே வந்தவர்.

“உட்காரு  சிவா” என்றார்.

 “உங்களுக்கு என் பெயர் தெரியுமா”? என்றான் அந்த பெரியவரை பார்த்து.

 “உன் ஓட்டலில் அடிக்கடி வந்து சாப்பிடுற எனக்கு உன் பேர் தெரியாதா சிவா” என்றார்.

 அவனுங்கு  ஆச்சரியம் “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, என்  ஹோட்டலுக்கு சாப்பிட வந்திருக்கீங்களா”?  என்றான்.

 ஒரு தடவை வந்தேன் உன் ஹோட்டலுக்கு என் பேத்திகளோடு. எனக்கு உன் ஹோட்டல் சாப்பாடு மிகவும் பிடிக்கும், பின்பு அடிக்கடி   அடிக்கடி வந்து சாப்பிடுவேன் ஆனா நீ இருக்க மாட்ட உன் அக்கா என்ற ஒரு பெண் இருப்பாள்..

 உன் ஹோட்டலில் ஓடிக்கொண்டிருக்கும் முருகன் பாட்டை கேட்கவே நான் அடிக்கடி வருவேன்” என்றார்.

 “ஐயோ சாரி சார் ஓட்டலுக்கு நிறைய பேர் வருவதால்  நான் உங்களை கவனிக்கவில்லை” என்றான்.

 “உங்க ஹோட்டல்ல சமைக்கிற மாதிரி இங்கேயும் சமைக்கனும் இந்த ஒரு மாசம்” என்று கட்டளை போல் சொல்லி விட்டு, சிரித்திருந்தார்.

 சிவாவுக்கு பெரியார் பேசியதும்  மனதில் உள்ள பயம் நீங்கியது.

 சிவா  “நாங்க எங்க வச்சு சமைக்க  தர வேண்டும்”? என்று அவரிடம் கேட்க.

 பெரியவர் அவர்களின் வீட்டில் இன்சார்ஜை  அழைத்து அனைத்தையும் சிவாவிடம் சொல்ல சொல்லி. அவர் ரூம் சென்று விட்டார்.

 அந்த வீட்டில் ஒரு அமைதியான சூழல் இருந்தது. இந்த வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகமே வந்துவிட்டது சிவாவிற்கு.

 விசேஷம் தொடங்கும் ஒரு நாள் முன்பே அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து அவர்களுக்கு என்று  ஒதுக்கப்பட்டிருந்த பெரிய அறையில் வைத்து விட்டான்..

 இந்த வேலைக்காக அவன் எட்டு பேரை நியமித்து இருந்தான்,

 மீனாட்சியை  ஹோட்டலையும், பேக்கிரியையும் பார்த்துக்கொள்ள சொன்னவன் முழுமூச்சாக இங்கே வந்து தங்கி கொண்டான்.

 அவர்களுக்கு  தங்க

 மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன..

 ஒரு அறையில் பெண்களும் ஒரு அறையில் ஆண்களையும் தங்க வைத்தவன் ஒரு அறையில் அவன் இருந்து கொண்டான்.

 100 பேருக்கு சமைக்க வேண்டும்.

 டிபன் வகைகள் சரியாக இருக்க வேண்டும் எந்தெந்த நேரத்துக்கு என்னென்ன சமைக்க வேண்டும் என்று அவனுக்கு டெய்லி ஈமெயில் வந்து கொண்டே இருக்கும்

 நாளைக்கு சமைக்க இன்று இரவு ஈமெயில்  வந்துவிடும் ..

 உணவு பரிமாறவென்று அவர்கள் வீட்டிலே மூன்று பேர் இருந்தனர்.

 அதனால் சிவாவுக்கு ஒன்று அவ்வளவு பெரிய வேலைகள் இல்லை சமைத்து வைத்து,  அதை ஹாட் பாக்ஸில் அரை மணி நேரத்துக்கு முன்னாடி அடுக்கி வைத்திட வேண்டும் டைனிங் டேபிளில்.

அது  50 பேர் உட்கார்ந்து அமரக்கூடிய பெரிய டைனிங் டேபிள்.

 சிவா வந்து பத்து நாள் ஆகியிருந்தது ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர்.

 அமைதியாக இருந்த வீடு இப்பொழுது பார்க் போல் ஆகிவிட்டது.

 எங்கே பார்த்தாலும் ஆட்கள் தான்.

 தமிழ் இங்கிலீஷ் தெலுங்கு என்று பேசிக் கொண்டிருந்தனர்.

 இவன் தமிழ் உணவு  வகைகள் சமைக்க.

பக்கத்தில் உள்ள   இன்னொரு அறையில் இருந்தவர்கள் மலேசியா உணவுவகைகளை  சிங்கபூர்  உணவு வகைகளை  சமைத்துக் கொண்டிருந்தனர் ..

சிவா இங்கே வந்து 20 நாள் ஆகியிருந்தது, அன்று வீடே பரபரபாக இருந்தது, ஏன் என்று கேட்ட போது, பெரியவரின் மனைவி சாவித்திரி, அவங்க பேத்தி நிலா, அப்பறம் வீரா சார் அவர் குடும்பத்தோடு வர்ராங்க என்று சொல்ல.

அவனது ஈமேயில்  புதிதாக இன்னும் பத்து பேருக்கு சமைத்து மாடியில் உள்ள தனி டைனிங் டேபளில் வைத்து விட வேண்டும் என்று இவனுக்கு  நேற்றே  ஈமெயில் வந்திருந்தது, அதன் படி இன்று லஞ்சு மெனுவை சமைத்திருந்தான் சிவா.

பொதுவாக சிவா இப்போழுது சமையல் செய்வது இல்லை, ஏற்கனவே இருப்பவர்களுக்கு  100 பேருக்கு சமைக்கவே திணறிக்கொண்டு  இருக்க, இவனே அந்த பத்து பேருக்கு சமைக்க ரெடி ஆனான்,

அது கொஞ்சம் ஈசி மெனு கூட.

அனைத்தும் அசைவ வகைகள் பின்பு எக், சாலட் சூப் வகைகள் தான், அதனால சாலட், எக் எல்லாம் அவர்கள் வேலையாட்கள் செய்து வைத்ததில் இருந்து எடுத்து வைத்து விடலாம் என்று நினைத்திருந்தான்.

பெரியவரை நீண்ட நாள் கழித்து இன்று தான் பார்க்கிறான் சிவா, மனைவி வருவதாள் மனிதர்  வரண்டாவில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தார்,.

சிவா அவரை பார்த்து சிரித்ததும்.

“நல்ல பண்ணுறீங்க பா சமையல், எங்க சொந்தக்காரங்க கூட உங்க சமையலை பாராட்டுறாங்க” என்றிருந்தார்,.

“ரொம்ப நன்றி தாத்தா” என்றான்.

“அப்பறம் என் பேரன் வீரா அவன் குடும்பத்தோட இப்ப வந்திடுவான், லஞ்சு ரெடியா இருக்கு தானே” என்றார்.

“எல்லாம் ரெடி தாத்தா, ஒரு பத்து நிமிசத்துல கொண்டு போய் வச்சிடுவாங்க” என்றான் சிவா.

“ரொம்ப  நன்றி பா”. என்றதும்

“நீங்க எதுக்கு தாத்தா நன்றி சொல்றீங்க, இது என்னுடைய வேலை”.. என்று சொல்லி விட்டு சென்றிருந்தான்.

அவன் கிச்சன் சென்று உணவுவகைகளை  ரெடி செய்து மேலே உள்ள அறையில் வைத்து விட்டு கீழே வர.

 கீழே ஒரே சத்தமாக இருந்தது, சன்னல் வழியே வந்தவர்களை  பார்த்தான் சிவா.

பெரியவரின் மனைவி சாவித்திரி 80 வயது இருக்கும் அழகாய் இருந்தார் அந்த பாட்டி.

பட்டு புடவை கட்டி, கொண்டை போட்டு அளவான நகைகள் அணிந்து  காரில் இருந்து   இறங்கினார்   பாட்டி, அவரின் கைபிடித்த படியே ஐந்து வயது சிவாலி இறங்கினாள், பின்பு ஒவ்வொருவராக இறங்க, அவர்களை கவனிக்க விடமால் அடுத்த வேலை  சிவாவுக்கு வர, யாரையும் பார்க்காமல் வேலையை பார்க்க சென்று விட்டான்..

பெரியவருக்கு தன் மனைவி சாவித்திரியை பார்த்ததும் சந்தோஷம், முக மலர்ச்சியோடு மனைவியை வரவேற்றார், சிவாலி தன் கொல்லு தாத்தாவின் காலைதொட்டு வணங்க.

அவள் தாத்தா காலை தொட்டு வணங்கியது, அடுத்த வந்த பிள்ளைகள் அனைவரும் தாத்தா காலை தொட்டு வணக்க, அனைவரின் தலை மீது கைவைத்து ஆசி வழங்கினார் பெரியவர்..

கடைசியாக வந்த வீரா.

தன் தாத்தாவின் காலை தொட போக, அதை தடுத்த பெரியவர்…

“நீ யாரு காலிலும் விழ கூடாது வீரா” என்றவர் பேரனை அணைத்து கொண்டார்.

நிலா தன் தாத்தாவின் காலில் விழ, தன் பேத்தி நிலை பார்த்து வருந்தியவர், இவளுக்கு கூடிய சீக்கிரம் திருமண முடித்து வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

வீரா குடும்பம் வந்து  மூன்று நாள் ஆகிவிட்டது.

சிவாவுக்கு  வேலை சுமை அதிகமாக இருக்க, சிவாவுக்கு உடம்பு  முடியவில்லை.

 அன்று இரவே பீவர் வர.

அக்காவிற்கு அழைத்தான்..

உடனே மாத்திரையோடு வந்து விட்டாள் மீனாட்சி.. தம்பியை செக் செய்தவள், அவனுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விட்டு.

 வீடு வந்து சேர்ந்தாள்..

காலையில் சிவாவும் அவள்  போன் செய்த போது,.

“இப்போ பரவாயில்ல கா காலை டிபன் சாப்பிட்டு மாத்திரை போட்டேன்” , என்றான்..

“சரிடா உடம்ப பாத்துக்கோ, முடியலன்னா சொல்லு அக்கா வர்ரேன்” என்றிருந்தாள்..

நன்றாக தான் இருந்தான் சிவா, வீரா குடும்பத்து பாதி சமைத்து முடித்தவனுக்கு அதற்கு மேல் முடியவில்லை. அங்கே இருந்தவர்களை மீதியை  பார்க்க சொல்லி விட்டு, அறைக்கு வந்தவன் அப்படியே படத்து விட்டான், உடல் சூடு அதிகமாக இருக்க.

மீனாட்சிக்கு அழைத்து “இங்கே கிளம்பி   வா கா”  என்று மட்டும் சொல்லி போனை வைத்து விட.

தம்பி  அழைத்ததும் அடித்து பிடித்து டாக்சி புக் பண்ணி  வந்தவளுக்கு தெரியாது தன் வாழ்க்கை மாற்ற போகும் வீரா இங்கே இருக்கிறான் என்று,. பார்க்கலாம் வீரா மீனாட்சி சந்திப்பு எப்படி இருக்கிறது என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!