Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உயிர் தேடும் உன்னை

உயிர் தேடும் உன்னை 2 1

அத்தியாயம் -2.



Advertisement

சரவணனுக்கு அக்கா ஏன் அடித்தாள் என்று தெரியவில்லை..

Advertisement

 அவன்  கன்னத்தை பிடித்த படியே நிற்க.

Advertisement

 அவனின் கையை பிடித்து  வெளியே இழுத்து வந்தவள்.

Advertisement

 ஹாலில் உட்கார்ந்து இருக்கும் மூன்று பேரையும்  காட்ட.

   சரவணன் ஒரு நிமிடம் பயந்து  போனான்.

 அதுவும் நீமூஜியை பார்த்து அவன் என்னவென்று கண்களால் கேட்க அவளோ வேகமாக  வந்து சரவணனை அணைத்துக் கொண்டவள்..

அவள்   சொன்ன செய்தியில் சரவணன் கூட கொஞ்சம் ஆடித் தான் போனான்.

 அக்கா எப்படி இதை தாங்குவாள்  என்று அவள் முகத்தை அவன் பார்க்க அவளோ தேம்பி,தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

 தன் தம்பியா இப்படி என்று.

 வந்தவர்கள் யார் என்று  சிவாவுக்கு தெரியவில்லை.மீனாட்சி அழுவதை பார்த்தவன், அக்காவிடம் வந்து  “ஏன்  அழுகுற கா  யார் இவங்க”? என்று கேட்க.

 “அதை உன் தம்பி கிட்ட கேளு”? என்றாள் கோபமாக..

 அப்பொழுது தான் சரவணனை திரும்பி பார்த்தான் சிவா.

 சரவணன் தற்போது தங்கள்  வீட்டுக்கு   வந்த பெண்ணை அணைத்த  படியே நிற்க..

 சிவாவுக்கு  விஷயம் புரிந்தது..

“அவங்க ரெண்டு பேர் லவ் பண்றாங்களா அக்கா,?  அதுக்கு நீயேன்  அழுகிற” என்றான் சிவா.

 “இவன் லவ் மட்டும்  பண்ணா பரவால டா. அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்தி இப்ப கல்யாணத்தை தள்ளி போட்டுக்கிட்டு இருக்கானாம்..

 அந்த பொண்ணு இப்போ பிரக்னண்டா இருக்களாம்” என்று சொல்லி   தன் தலையில் கைவைத்து கொண்டு அழுதாள் மீனாட்சி.

  “என் தம்பியா இப்படி எல்லாம் செய்தான், அவனை எவ்வளவு  பெருமையா  நினைத்தேன் எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துல சுக்கு நூறா உடைச்சுட்டானே இவன்” என்று அழுதாள்.

 அக்கா அழுவதை  தாங்க முடியாத சரவணன்  அவள்   பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு மீனாட்சியின்  கையை  பிடிக்க வர.

” தள்ளிப்போடா” என்றவள்.

” என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல.

 நான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே டா”? என்றவளுக்கு.

 சரவணன் செய்த காரியத்தை நினைக்க வேதனையாக இருந்தது..  வந்தவர்கள் சொன்னதை அவளால்  நம்பவே முடியவில்லை, நீமூஜியின் அழுகையை  பார்த்து தான் புரிந்து கொண்டாள் மீனாட்சி.

 அவர்கள் பாரம்பரியமாக மலேசியா வாசிகள் மிகவும் நல்லவர்கள் போல் பேசினார்கள் மீனாட்சியிடம்.

 மீனாட்சிக்கு அவர்கள்  உண்மைதான் பேசுகிறார்கள் என்று புரிந்த பின் தான் தம்பியை  போய் அடித்திருந்தாள்.

 ஒரு நிமிஷம் தம்பியிடம் புலம்பியவள் அடுத்த நொடி வந்தவர்கள் முகத்தை பார்த்து..

 “சாரி சாரி நான் எமோஷனல் ஆகிட்டேன்  மன்னிச்சிடுங்க” என்று சொல்லி விட்டு அவர்களுக்கு  குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்..

 வந்தவர்கள் மிகவும் நல்லவர்கள் போல் தெரிந்தது. ரொம்ப வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அதை காண்பித்து கொள்ளவில்லை,  இனிமையாக பேசினார்கள் அவர்களுக்கு ஒரே  ஒரு ஆசை  தான், தங்கள் முறைப்படி கல்யாணம் செய்து  வைக்க வேண்டும் என்று அதை மீனாட்சியிடம் சொல்ல.

 உடனே சம்மதம் சொல்லிவிட்டாள் மீனாட்சி..

 சரவணன்   இங்கே சிங்கப்பூரில் வேலை செய்யும் கம்பெனி பிரான்ச் மலேசியாவில் ஒன்று உள்ளது.

 அங்கேதான் நீமூஜி வேலை செய்கிறாள்.

 கம்பெனி விஷயமாக அடிக்கடி மலேசியா செல்லும்போது சரவணனுக்கு  பழக்கமாகினாள் நீமூஜி..

 முதலில் நண்பர்களாக பழகினார்கள் பிறகு இருவருக்கும் இடையே ஒரு அழகான காதல் உருவானது.

 கடந்த இரண்டு வருடமாக தான் இருவரும் காதல் செய்கிறார்கள் காதல் வேறு கட்டத்துக்கு செல்லும்போது நீயும், நானும்  கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நீமூஜி  சொல்ல.

 சரவணன் கொஞ்சம் காத்திரு அக்காவுக்கும்,  அண்ணனுக்கும் கல்யாணம் முடித்த பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி வைத்திருந்தான்.

 அந்த மலேசியா காரருக்கு ஒரே ஒரு பெண்  நீமூஜி..  அவளை பக்கத்தில் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் ஆசை அவர்களுக்கு..

 அதை மீனாட்சியிடம்  சொல்ல மீனாட்சி இதற்கு சம்மதம் என்றாள், எங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை, என் தம்பி நல்லா இருந்தால் போது என்று சொல்லிவிட்டாள்..

 சரவணுக்கு சிங்கப்பூரை  விட மலேசியாவில் அதிக சம்பளம் தான்

 அவனுக்கு,  மனதில் மலேசியாவுக்கு செல்ல வேண்டும் என்று தான் ஆசை. அதை மீனாட்சியிடம் எப்படி சொல்வது அக்கா தப்பாக புரிந்து கொண்டால் என்று தான் தயங்கிக் கொண்டே இருந்தான். இப்பொழுது அவன் தயக்கத்தை மீறி அவன் சொல்ல மீனாட்சிக்கு சந்தோஷமே.

 “வாழ்க்கையில் நமக்கு எப்பொழுதாவது  தான் அதிர்ஷ்டம் வரும்.. வரும்  போது தட்டி விட கூடாது.. உனக்கு சிங்கப்பூரை விட மலேசியா பெஸ்ட் என்று நீ நினைத்தால், என்கிட்ட சொல்லி இருக்கலாமே டா” என்றவள்.

 சரவணனுக்கு ஆதரவாக பேசியவள்  அடுத்த வந்த நல்ல  முகூர்த்த நாளில்,  நீமூஜி வீட்டின் முறைப்படி சரவணனுக்கும், நீமூஜிக்கு திருமணம்  முடித்து வைத்திருந்தாள் மீனாட்சி..

 மீனாட்சி மிகவும் சந்தோஷம்.. சரவணனுக்கு திருமணம் நல்லபடியாக முடிந்து  விட்டது என்று.

 அவனும் தன்னைப்போல் பல சுமைகளை தாங்கிக் கொண்டுதான் வாழ்ந்தான்,  அவனும் நன்றாக இருக்கட்டும் என்று அவனுக்கு தனிமை கொடுத்து மலேசியாவில்  விட்டு விட்டு வந்து விட்டனர் சிவாவும் மீனாட்சியும்,

நாட்கள் செல்ல.

 புதிதாக ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னான் சிவா.

 தம்பி சொன்னதுக்கு “சரி” என்றாள் மீனாட்சி.

சிவா ஹோட்டலையும்  சேர்த்து சிறிய கேட்டரிங் போல செய்யலாம் என்று நினைக்கிறேன் என்று  சொல்ல அதற்கும் சந்தோஷப்பட்டவள், நானும் உதவி செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டாள்.

 முதியோர் இல்லத்தில் அதிக ஆட்கள் இருப்பதால் அவளுக்கு வேலை சுமை அதிகமாக இருந்தது அதனால் அவள் பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ் வேலையை விட்டுவிட்டவள் தம்பியோடு முழுமூச்சாக ஹோட்டல் பிசினஸ்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

  அவள் வேலையை விட்டதுக்கு இன்னொரு காரணம் உள்ளது ஆண்டாளை சரியாக பார்த்துக் கொள்ள முடியவில்லை அவளால்.

 ஆண்டாள்  ஸ்கூல் டைம் மாறி மாறி வருவதால் ரொம்ப கஷ்டமாக இருந்தது ஹோட்டல் பிசினஸ் என்றால், எப்பொழுதாவது செல்லலாம் வரலாம் என்று தம்பியோடு இணைந்து விட்டாள் மீனாட்சி..

 இருவரும் சேர்ந்து பெரிய ஹோட்டலை   ஆரம்பித்திருந்தார்கள்.

 சரவணனுக்கு அழகாக ஆண் குழந்தை பிறந்தது.

 மாதத்திற்கு ஒருமுறை மலேசியா  சென்று சரவணனை பார்த்து விட்டு  வருவார்கள் சிவாவும்,  மீனாட்சியும்.

 சிவா வைத்திருந்த  செந்தில் ஆண்டவர் ஹோட்டல் மிகவும்  பிரபலமானது.

 பல கல்யாண கேட்டிரிக்  ஆடர்கள் பேக்ட்டரி, பிசினஸ் பார்ட்டி என்று நிறைய ஆர்டர்  சிவாவுக்கு வர.

 அந்த வேலைகளை நன்றாக  பார்த்துக் கொண்டான் சிவா. ஹோட்டலை மீனாட்சி பார்த்துக் கொண்டாள்..

   சிங்கப்பூரில்  உள்ள தமிழர்களுக்கு செந்தில் ஆண்டவர் ஹோட்டல் உணவு  என்றால் மிகவும் பிடித்தது.. மலேசியா வாசிகள் கூட பல பேர் வந்து உண்டு விட்டு நன்றாக இருப்பதாக சொல்லி சென்றனர்.

 மீனாட்சி,  ஹோட்டலில் பக்கத்திலேயே புதியதாக  ஸ்னாக்ஸ் பேக்கரி கடை போல் வைக்கலாம் என்று சொல்ல அதற்கும் சரி என்று இருந்தான் சிவா.

 ஸ்னாக்ஸ் வகைகள்  என்றால் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சிறுதானியத்தில்  செய்யும் ஸ்னாக்ஸ் வகைகள்.

 அங்கே உள்ள தமிழர்களுக்கு அது மிகவும் பிடித்த போக பெரிய அளவில் பேசப்பட்டது.

 வாடகைக்கு வாங்கி இருந்த கடையை சொந்தமாக்கி கொண்டனர் அக்காவும், தம்பியும்.

 வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்து விடுவார்கள் ஹோட்டலுக்கு.

 அன்று  ஒரு நாள்முழுக்க ஆண்டாள் கூட தான் பொழுதை கழிப்பார்கள்.

 இன்று தம்பியிடம் பேசி விட வேண்டும் என்று நினைத்த மீனாட்சி சிவாவை கல்யாணம் செய்து கொள். பெண் பார்க்கிறேன் என்று சொல்ல..

 ‘”அவனோ  நீ முதலில் கல்யாணம் பண்ணு,  அப்புறம் நான் முடித்துக் கொள்கிறேன்” என்று பேச்சை முடித்து இருந்தான்.

 மீனாட்சிக்கு பயம். சிவாவுக்கு வயது ஏறிக்கொண்டே   போகுதே நல்ல பெண் அமைய வேண்டுமே,  சரவணணுக்கு அமைந்த நல்ல வாழ்க்கை  மாதிரி.. இவனுக்கு நல்ல பெண் அமைய வேண்டும் என்று பிராத்தனை வைத்தாள் முருக பெருமானிடம்..

 அன்று முகமலர்ச்சியோடு வந்த தம்பியை பார்த்த மீனாட்சிக்கு “என்னடா” என்று கேட்க.

 “அக்கா ஒரு பெரிய ஆர்டர் கிடச்சிருக்கு” என்றான்..

 “என்ன ஆர்டர் சிவா” என்றாள் தம்பியிடம்.

 “அக்கா நம்ம ஜே,பி குரூப் கம்பெனி தெரியுமா? “என்றான்.

 “இல்ல டா  எங்கயே  கேள்விப்பட்ட மாதிரி இருக்கு சரியா தெரியல”?  என்றாள்.

 “அக்கா அவங்க  தமிழ்நாட்டிலிருந்து இங்க சிங்கப்பூர்ல பெரிய சாப்டுவேர் கம்பெனி வச்சிருக்காங்க பெரிய கோடிஸ்வரங்க,  மூன்று  தலைமுறையா இங்கே தான் இருக்காங்க அவங்க வீட்ல ஒரு கல்யாணமாம் அதுக்கு எனக்கு சமைக்க ஆர்டர் கொடுத்து இருக்காங்க”.. என்றதும்.

 “அப்படியே டா ரொம்ப சந்தோசம், நல்லா சமச்சு கொடுடா” என்றாள் மீனாட்சி .

 “அக்கா சமைக்கிறதுன்னா ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல,  ஒரு மாசம் ஆர்டர்” என்றான்.

 “என்னாடா ஒரு மாசமா கல்யாணம் பண்றாங்க” என்றாள்.

 “அக்கா கல்யாணம் ஒரு மாசம் இல்ல தமிழ்நாட்டில் இருந்து அவங்க சொந்த பந்தம் 100 பேர் மேல  வராங்களாம். டெய்லி அந்த 100 பேருக்கு சமைச்சு கொடுக்கணும் கல்யாணம் அஞ்சு நாள் நடக்கப்போகுது” என்க.

 “டேய் அப்ப பெரிய ஆர்டர் டா நமக்கு .” என்றதும்..

 “ஆமாக்கா இன்னொரு ஹோட்டல் தொடங்கினாலும் ஆச்சரியப்பட போகுறதுக்கு ஒன்னுமில்ல” என்றவன்.

மீனாட்சியை  தோளோடு அணைத்துக் கொண்டான்.

 “சரிடா நல்ல பண்ணு” என்றாள் தம்பியை..

 மீனாட்சி ஹோட்டலை பார்த்துக்கொள்ள  அந்த கோடீஸ்வரர் குடும்பம் நடக்கும் திருமணத்திற்கு கேட்டரிங் செய்ய அனைத்து வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தான்    சிவா.

 இன்னும் இரண்டு நாள் இருக்கிறது  ஜேபி இல்லம் செல்ல. அனைத்து வேலைகளும் முடிந்து ரெடியாக இருந்தான் சிவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!