Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-4

 

அத்தியாயம்-4

வண்ண  வண்ண பட்டாம்பூச்சிகள் சுற்றி திரியும் கல்லூரி..சூரியன், உக்கிரமாய் இருக்கும் உச்சி பொழுது..மதிய உணவு இடைவேளை நேரம்..தோழர் தோழிகள் புடை சூழ, கான்டீன் நோக்கி சென்று கொண்டிருந்தாள் மது..

“மது.. மது..”
அவளை அழைத்துக் கொண்டு, வேகமாய் அவள் பின்னால் ஓடி வந்தான் யாதவ்..



Advertisement

அந்த அழைப்பில் நின்று, அவனை திரும்பி பார்த்தாள் மது..

“சொல்லு யாதவ்..”

“கொஞ்சம் தனியா பேசனும்..”

Advertisement

சுற்றிலும் நிற்கும் நண்பர் குழாமை ஒரு பார்வை பார்த்து விட்டு,

Advertisement

“இவங்களுக்கு தெரியாம..என் கிட்ட ஒரு சீக்ரெட்டும் இல்ல..பரவால்ல சொல்லு..”

சற்று தயங்கி நின்றான் யாதவ்..

“வந்தி…அவன் தயங்குறான்..நீ பேசிட்டு வா.. நாங்க கான்டீன் போறோம்..”

Advertisement

தோழர்களில் ஒருவன், அவளிடம் கூறிவிட்டு,மற்றவர்களோடு சென்றான்..

“சொல்லு..இப்போ..என்ன பேசணும்..”

மறைத்து வைத்திருந்த, சிகப்பு ரோஜாவையும் வாழ்த்து அட்டையும் எடுத்து, அவளிடம் நீட்டினான்..
அதை கண்கள் விரிய பார்த்தவள்,

“என்ன இது??”

“ஐ ஆம் இன் லவ் வித் யூ மது..”

அவன் சொன்னதும்,
சத்தமாய், கண்களில் நீர் வர சிரித்தாள் மது..

மன சுணக்கத்துடன் பார்த்தான் யாதவ்..

“ஆர் யூ கிரேஸி யாதவ்..”

“நோ மது சீரியஸ்லி..”

[the_ad id=”6605″]

“இங்க பாரு யாதவ்..எனக்கு இந்த காதல்,கத்திரிக்காய், இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல..ஐ வான்ட் டு பி ரிச் இன் தி வேர்ல்ட்..அதுக்கு  ஏத்த ஆள் பார்த்து கல்யாணம் பண்ணிக்குவேன்..மத்தபடி..”

கைகளை அசைத்தாள் ,இதில் எல்லாம் விருப்பம் இல்லை என்று..

“நானும் ரிச் தான் மது..”

“எஸ்,பட் எங்க அளவுக்கு தான்.. எனக்கு உலக அளவு,இல்லைனா அட்லீஸ்ட், இந்த நாட்டுல இருக்குற டாப் மோஸ்ட் ஆளு வேணும்..அதுக்கு, நீ செட் ஆக மாட்ட..”

“அப்போ, பணம் தான் எல்லமுமா மது??”

“நிச்சயம் யாதவ்..அதில் என்ன சந்தேகம்..இப்போ, நீ எனக்கு சமம்ன்னு தான், உன் கிட்ட நின்னு பேசிட்டு இருக்கேன்..இல்லைனா..நான் ட்ரீட் பண்ணுற விதமே வேற..இனி இந்த மாதிரி உளரிட்டு, என் பின்னாடி வராத..புரியுதா..??”

சொல்லி விட்டு, அவனை திரும்பியும் பார்க்காமல், அங்கிருந்து சென்றாள்..

அவன் கையில் இருந்த பூவையும்,வாழ்த்து அட்டையையும், தூக்கி எறிந்து விட்டு,அங்கிருந்த கல் இருக்கையில்  அமர்ந்தான் யாதவ்..தலையை, தன் இரு கைகளால் தாங்கியவாரு..

அவன் நண்பன்  அவனை நெருங்கி, அவன் தோள் தொட்டான்..
அவனை நிமிர்ந்து பார்த்தான் யாதவ்.

“நான் தான் சொன்னேன் இல்ல..இவ திமிர் பிடிச்சவன்னு.. விடு டா.. இவ இல்லைனா, ஆயிரம் பொண்ணு..”

“இல்ல..மச்சான்..அவ நல்ல பொண்ணு தான்.. அவ வளர்ந்த சூழ்நிலை..சரி விடு..”
ஒரு பெருமூச்சுடன் எழுந்தான் யாதவ்..

இருவரும் எழுந்து, வகுப்புக்கு சென்றனர்..

யாதவ்,கொஞ்சம் கொஞ்சமாய், அவளை மறக்க முயன்றான்.

அந்த வார இறுதி நாளில், மறுபடியும் பப்பில் இருந்தாள் மது..இந்த முறை, அளவான போதையோடு..

“என்ன டி..பார்த்து பார்த்து குடிக்குற..”

“என் மாம் கூட சமாளிச்சுடுவேன்.. என் டாட்.. ஊப்ஸ்.. அவருக்கு கோபம் வராது.. வந்தா.. நான் காலி.. முதல் கட்டமாய், அட்வைஸ் பண்ணி கொல்லுவார்.. அடுத்து, அதிரடி நடவடிக்கை தான்.. என் மாம்மால கூட தடுக்க முடியாது..”

சிறு வயதில் வாங்கிய அடி  நினைவு வந்து, கண்கள் மூடித் திறந்தாள்..

“அவ்ளோ நல்லவளா நீ..”

“டெபனட்லி நாட்..பட் தேவை பட்டா, அப்படி நடிக்கவும் செய்வேன்..”
கண் அடித்துக் கூறினாள்..

அப்பொழுது, ஒரு நாற்பது வயது மதிக்க தக்க ஆள்.. இவளை பார்த்து விட்டு, இவள் அருகில் வந்தான்..

“கண்ணு…யாரு கண்ணு நீ..”
அவள் கன்னம் தடவிக் கேட்டான்..

அவன் கைகளை தட்டி விட்டவள்,
“ஏய்,இடியட்.. என்ன பண்ணுற.. கண்ட்ரி புரூட்.. தொடுற வேலை எல்லாம்  வச்சுக்காத..”

“என்னமா கோவம் வருது உனக்கு..அப்படியே, கன்னம் எல்லாம் சிவந்து போச்சு பாரு..ஆப்பிள் மாதிரி..”

[the_ad id=”6605″]

“பிரணா, லெட்ஸ் கோ..”
தோழியிடம் கூறி விட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்..

“கண்ணு, யாருன்னு சொல்லாம போறியே..”

கேட்டபடி  தள்ளாடி நடந்து, அவளை பிடிக்க முடியாமல் தடுமாறி, தன் கையாளை பிடித்த படி நின்றான், கரிகாலன்..எக்ஸ் எம்எல்ஏ பையன்..வெளியே அரசியல் வாதி..உள்ளே, சட்டத்திற்கு புறம்பான அனைத்து வேலைகளும் பார்க்கும் ரவுடி..

“டேய் செல்வம்..இவ எனக்கு வேணும் டா.. யாரு  என்னன்னு விசாரி..”

“அண்ணன்,அவ பெரிய இடத்து பொண்ணு ண்ணா.. உங்க கிட்ட எல்லாம் சிக்க மாட்டா..”

அவன் கன்னத்தில் அறைந்தான் கரிகாலன்..

“நாளைக்கு, அவளை பத்தி எல்லா விவரமும்  எனக்கு வேணும்..புரியுதா..முறை படியோ,முறை இல்லாமலோ..நான் நினைச்சதை  நடத்திக்  காட்டுவேன்..”

கன்னத்தை பிடித்த படி, தலை ஆட்டினான் செல்வம்..

மறுநாள், தன் அலுவலகத்தில் இருந்த ராஜசேகரிடம்,வரவேற்பு பெண் தொடர்பு கொண்டு,

“சார்..உங்களை பார்க்க, கரிகாலன்னு ஒருத்தர் வந்திருக்கார்.. மாஜி எம்எல்ஏ சன்னாம்.. அப்பாயின்மெண்ட் இல்ல..பார்க்க முடியாதுன்னு சொன்னா, கேட்க மாட்டேங்குறார்..”

“ஏதாவது டொனேஷன் விஷயமா இருக்கும்..ஜிஎம் கிட்ட சொல்லி, பார்க்க சொல்லு..”

“இல்ல சார், உங்கள தான் பார்க்கணுமாம்..”

“ஓ..”
சற்று திரும்பி, தன் பிஏ விடம்,

“இப்போ ஏதும்  அப்பாயின்மெண்ட் இருக்கா..??”

“இல்ல சார்..இனி அப்டெர் லஞ்ச் தான்..”

“ஓகே..”

“சரி,அவங்களை உள்ள அனுப்பு..”

“ஓகே சார்..”

தன் சகாக்கள் புடை சூழ, உள்ளே வந்தான் கரிகாலன்..

“வணக்கம் மாமா..”

“மாமா…??”

“ஆமா..உங்க பொண்ணை கல்யாணம் பண்ண போறேன்..அப்போ நீங்க, என் மாமனார் தானே..”

எந்த வித முன் அறிவிப்பும் இன்றி, போட்டு உடைத்தான் விஷயத்தை..

“பாருங்க மாமா..என்னை பத்தி, நான் சொல்ல வேண்டியது இல்ல..உங்களுக்கு தெரியும்..ரெண்டு தலைமுறையா, அரசியல் பண்ணுறோம்..செல்வாக்கான குடும்பம்..உங்க தொழில்ல ஏதும் பிரச்சனைனா கூட சொல்லுங்க..சரி பண்ணிடுறேன்..”

“இங்க பாருங்க மிஸ்டர்..”

“என்ன மாமா..ஒன்னுக்குள்ள ஒன்னா ஆக போறோம்..மூணாம் மனுஷன் மாதிரி..மிஸ்டர் போட்டுகிட்டு..உரிமையா மாப்பிள்ளைன்னு கூப்பிடுங்க..”

“இல்ல..கரிகாலன்..அது சரியா வராது.. அவ சின்ன பொண்ணு..படிச்சுட்டு இருக்கா..”

“அதுனால என்ன மாமா..நம்ம வீட்டுல வந்து படிக்கட்டுமே..பொண்டாட்டி பெரிய படிப்பு படிச்சா, நமக்கு பெருமை தானே..வயசு என்ன வயசு..பிடித்தம் தானே முக்கியம்..”

“என் பொண்ணுக்கு, உங்களை பிடிக்கனுமே..”

“நீங்க  கல்யாண தேதியை முடிவு பண்ணுங்க..உங்க பொண்ணுக்கு பிடிக்க வைக்குறது என் பொறுப்பு..என்னை பிடிக்காம போயிடுமா என்ன..??”

மீசையை முறுக்கி கொண்டு, கூறினான்..

“இங்க பாருங்க கரிகாலன்..உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..”

“அதுனால என்ன??என் முதல் பொண்டாட்டி, அடையார்ல இருக்கு..ரெண்டாவது  பட்டிகாடு, கிராமத்துல இருக்கு..மூணாவத, உங்க பொண்ணு..அவளுங்க ரெண்டு பேர்த்தையும்
விட, அதிகம் வசதி பண்ணி கொடுக்குறேன்..அப்புறம் என்ன??”

“இது,சரி வராது கரிகாலன்..”

“இங்க பாருங்க மாமா..நீங்க  பெரிய இடம்ன்னு தான், பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன்..இதே, வேற யாரு பொண்ணுனாலும்..இப்போ, அவ என் வீட்டுல இருப்பா.. நீங்க, அங்க வந்து கெஞ்சனும்..அதெல்லாம் தேவை இல்லைன்னு,பொறுமையா, முறையா பேசுறேன்..சும்மா பேசுனதே திரும்ப திரும்ப பேசுறீங்க..

[the_ad id=”6605″]

நீங்களா கட்டி கொடுத்தா, நல்லா இருக்கும்..இல்ல, காலேசு போன பிள்ளை, வீடு திரும்பாது..அப்புறம் ரோசிச்சு, பிரியோசனம் இல்ல..நீங்க, எந்த போலீஸ்,வக்கீல், அரசியல்வாதி வேணாலும் பார்த்து பேசுங்க..கடைசில, என் கிட்ட தான் வரணும்..நான் யாருக்கும், பயப்பட மாட்டேன்..

மூணு நாள் டைம் கொடுக்குறேன்..ரோசிச்சு சொல்லுங்க..முடிவு, எனக்கு சாதகமா தான் இருக்கனும்..பார்த்துக்கோங்க..
வாங்க டா.. கிளம்பலாம்..”
கூறிவிட்டு சென்றான்..

“என்ன சார்..அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கான். பார்த்துட்டு இருக்கீங்க..நமக்கு இருக்குற செல்வாக்குக்கு, இவன் எல்லாம் கால் தூசி..இவன் கிட்ட பொறுமையா பேசுறீங்க..”
அவர் பிஏ ஷியாம் ஆதங்கப்பட்டார்..

“முட்டாளுங்க கிட்ட எப்போவுமே, வாதம் பண்ண கூடாது ஷியாம்..இவன் பாம்பு மாதிரி..புத்துக்குள்ள கையை விட்டா, நமக்கு தான் ஆபத்து..இப்போ சத்திரியன் அஹ் இருக்குறதை விட, சாணக்கியனா இருக்கனும்..”

அன்று முழுவதும்  இடைவெளி கிடைக்கும் போதெல்லாம், யோசித்தார்..

வீட்டிற்கு திரும்பியதும்,
“மது..மது..”

மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மது..அவர்கள் அறையில் இருந்து பிரமிளாவும்.

“எஸ் டாட்..”

“கரிகாலனை தெரியுமா..??”

“எந்த கரிகாலன் டாட்..??”

“எக்ஸ் எம்எல்ஏ பையன்..”

“ஐ டோன்ட் நோ டாட்..”

நெட்டில் தேடி, அவன் புகைப்படத்தை எடுத்து,அவளிடம் காட்டினார்..

அதை பார்த்தவள், ஒரு நிமிடம் திகைத்து,

“எஸ் டாட், நேத்து பார்த்தேன்..”

“எங்க??”

பப்பில் என்று சொன்னால்,ஏற்படும் பின் விளைவுகளுக்கு யோசித்து,

“நேத்து டின்னர்க்கு, பிரெண்ட்ஸ் கூட போய் இருந்தேன்..அப்போ வந்தான்..இன்டீசென்ட் இடியட்..”

“எதுவும் பேசுனானா??”

“ஆமா,ஏதோ உளறினான்..நான் கண்டுகலை..ஒய் டாட்..”

“இன்னிக்கு,ஆபீஸ் வந்து..உன்னை பொண்ணு கேட்டான்..”

“வாட்..அந்த பட்டிக்காட்டு முட்டாளுக்கு,எவ்ளோ தைரியம்..”

“சரி தான்,அவன் முட்டாள் தான்.. அந்த முட்டாள் கண்ணுல  நீ மாட்டுனது தான், இப்போ பிரச்சனை..”

“அவனை பார்த்தா, வயசானவன் மாதிரி இருந்தது..இன்னுமா கல்யாணம் ஆகலை..”

“அவனுக்கு, ரெண்டு தடவை கல்யாணம் ஆயிடுச்சு..அதோட, ஊருக்கு ஒன்னு வேற இருக்கு..”

அதற்கு மேல்  விரிவாக ஏதும் மகளிடம் சொல்ல முடியாமல், அமைதி காத்தார்..

“அவன் பொண்ணு கேட்டா, நீங்க அமைதியா கேட்டுட்டு வருவீங்களா??அவன் மூச்சியை பேத்திருக்கணும்.. இல்ல, கமிஷ்னர் கிட்ட  ஒரு கம்பிளைன்ட் கொடுத்து, உள்ள தள்ளி இருக்கனும்..இங்க வந்து  தகவல் சொல்லிட்டு இருக்கீங்க..”
இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த பிரமிளா, பொங்கினார்..

“புரியாம பேசாத பிரமி..அவன் வெளில தான் அரசியல்வாதி.உள்ள, அண்டர் கிரவுண்ட் வேலை அத்தனையும் பார்க்கும் ரவுடி..அவன் கிட்ட  நேரடியா மோதினா, நமக்கு தான் சேதாரம் ஆகும்..நம்ம கிட்ட  பண பலம் மட்டும் தான் இருக்கு..அவன் கிட்ட, அடியாள் கூட்டமே இருக்கு..உன் பொண்ணு, காலேஜ்ல இருந்து  வீடு திரும்பாதுன்னு சொல்லுறான்..

அவனை உள்ள போட்டுடலாம்..அப்புறம், நம்ம பொண்ணை ஆள் வச்சு கடத்தினா.. அதுக்கு பிறகு, என்ன பண்றது..நடத்ததுக்கு பிறகு  வருத்த பட கூடாது..”

[the_ad id=”6605″]

“அதுக்காக, அவனுக்கே இவளை  கட்டி வைக்கலாம்னு சொல்லுறீங்களா..??”

“உவ்வேக் ..வாட் இஸ் திஸ் மாம்..”

“உங்க அப்பா  அப்படி தான் பேசுறார்..”

“பிரமி,கொஞ்சம் நான் சொல்லுறதை கேளு..”

“என்ன சொல்ல போறீங்க..??”

“கொஞ்சம் நாள் மதுவை, எங்கையாச்சும் அனுப்பி வைக்கலாம்..கொஞ்ச தூரமா.. அப்புறம், இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிட்டு..திரும்ப கூப்பிட்டுகளாம்..”

“இவனுக்கு பயந்து.. நம்ம பொண்ணை  தூர அனுப்பனுமா..??அதுவும், படிக்குற பிள்ளையை..படிப்பை விட்டுட்டு.. புள்ளைப்பூச்சிக்கு பயந்து..”

“படிப்பை விட பொண்ணு முக்கியம் பிரமி..”

“ஓகே டாட்..என்  யூஜி பிரெண்ட்ஸ் எல்லாம், வேர்ல்ட் டூர் போக  முடிவு பண்ணி இருக்காங்க.. த்ரீ மந்த் டூர்..என்னையும் கேட்டாங்க..நான் எம்பிஏ ஜாயின் பண்ணதால, வர்லைனு சொல்லி இருந்தேன்..இப்போ சொல்லி, டிக்கெட், விசாக்கு, ஏற்பாடு பண்ண சொல்லுறேன்..”

“அதெல்லாம் தேவை இல்லை..நீ, என் தங்கச்சி வீட்டுக்கு போற..”

“அது எங்க இருக்கு??”

“அந்த பட்டிக்காட்டுக்கு, என் பொண்ணு போனுமா??”

“வாட் பட்டிகாடா..??என்ன டாட்.. பட்டிக்காட்டுக்கு எல்லாம்  என்னால போக முடியாது..”

“ரெண்டு பேரும் கொஞ்சம்  பேசாம இருக்கீங்களா??”
அவர்களின் பேச்சில், எரிச்சல் ஆன சேகர், கத்தினார்..

இருவரும் அமைதி ஆகினர்..

“அவன், மூணு நாள் தான் டைம் கொடுத்துருக்கான்.. அதுக்குள்ள, இவளை எங்கையாச்சும் அனுப்பனும்..வெளிநாட்டுக்கு, விசா ஏற்பாடு செஞ்சு அனுப்புற அளவு நமக்கு நேரம் இல்லை..அதோட, அவ்வளவு தூரத்துக்கு, இவளை தனியாவும் அனுப்ப முடியாது..இங்க, நம்ம கண்ணு முன்னாலையே, அன்னைக்கு குடிச்சுட்டு, லேட் நைட் வரா.. இதுல, கண் காணா தூரத்துல எப்படி இருப்பாளோ..அதுனால, இவ மரகதம் வீட்டுக்கு தான் போறா..”

இது தான் இறுதி, என்பது போல சொன்னார்..குரலில்  கடுமை விரவிக் கிடந்தது..

இந்த குரலில் சொன்ன பிறகு, மறுத்து பேச முடியாது..இதுவரை, கணவனுடன் வாழ்ந்த அனுபவத்தில் கண்டது..

“இங்க கமிஷ்னர் கிட்ட பேசி,அவன் மேல இருக்குற      பழைய கேஸ் எல்லாம், தூசி தட்டி எடுக்க சொல்லி இருக்கேன்..அதுல, அவனை வசமா சிக்க வச்சு, உள்ள அனுப்பிட்டு..அப்புறம் உன்னை, இங்க கூப்பிட்டுகிறேன்..அது வரை  அங்க ஒழுங்கா இரு..”

அப்பொழுது தான், அவள் உடையை பார்த்தார்..
முட்டிக்கு மேல் வரை இருக்கும் ஷார்ட் மிடி..லேஸ் வைத்த  மெல்லிய டாப்ஸ், அணிந்து இருந்தாள்..

“என்ன டிரஸ் இது??நீ போக போறது கிராமம்..அங்க, என் தங்கச்சி  பெரிய குடும்பத்து மருமக..இப்படி அங்க உடுத்தி,அவ பேரோட, என் பேரையும்   சேர்த்து கெடுத்துடாத..ஒழுங்கா, சுடிதார்,சேலை,தாவணின்னு, எடுத்து வச்சுக்கோ..
போய்  நல்ல பொண்ணா இருந்துட்டு வா..”

“என்ன, ரொம்ப ரூல்ஸ் போடுறீங்க..??”

“நீ வாயை மூடு..உன்னால தான் அவ இப்படி இருக்கா.. ஒழுங்கா உடுத்தி,தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருந்திருந்தா, இப்படி சிக்கல்ல  மாட்டி இருக்க மாட்டா..”

“அப்படி இருக்குற பொண்ணுக்கு, பிரச்சனை வரதில்லியா??”

“நன்மையையும் தீமையும்  பிறர் தர வாரா.. எல்லாத்துக்கும் மூல காரணம், நாமளா தான் இருப்போம்..தேடி வந்தா சமாளிச்சுக்கலாம்..தேடி போய் மாட்ட கூடாது..”
கூறிவிட்டு, அறைக்குள் சென்றார்..

அம்மாவும் பொண்ணும், அவரை முறைத்துக் கொண்டு நின்றார்கள்..

அறைக்குள் சென்றவர்,
தன் தங்கைக்கு அழைத்தார்..

“சொல்லு ண்ணா.. நீ எப்படி இருக்க??அண்ணி,மது கண்ணு எல்லாம், எப்படி இருக்காங்க..”

“ஹ்ம்ம்..இருக்கோம்..”

“ஏன் ண்ணா.. ஒரு மாதிரி பேசுற..உடம்பு முடியலையா..??”

“இல்ல..மரகதம்..நல்லா தான் இருக்கேன்..உன் கிட்ட  ஒரு உதவி..”

“என்ன ண்ணா பெரிய வார்த்தை எல்லாம் பேசுற..செய்யுன்னு சொன்னா, செஞ்சுட்டு போறேன்..”

“என் பொண்ணு மதுவை அங்க அனுப்பி வைக்குறேன்..கொஞ்ச நாள் இருக்கட்டும்..”

“கொஞ்ச நாள் என்ன, எவ்ளோ நாள் வேணா இருக்கட்டும் அண்ணா…இதுக்கு ஏன் தயக்கம்..நீயும் கூட, அண்ணியை கூட்டிட்டு இங்க வந்து தங்கிட்டு போ..மதுக்கு, மொட்டை அடிச்சு காது குத்தும் போது  வந்தது அவங்க..நீ வந்தும், ரெண்டு மூணு வருஷம் ஆகுது..”

“வரேன் மா..சீக்கிரம் வரேன்..இப்போ, மதுவை மட்டும் அனுப்பி வைக்குறேன்..அவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ..”

“இதை சொல்லணுமா ண்ணா.. உன் பொண்ணு, என் பொறுப்பு..”

“சரி மா..நாளைக்கு மறுநாள், காலையில கிளம்பி நைட்குள்ள வந்துருவா..”

“தனியாவா அனுப்புற..நீ கூட்டிட்டு வா ண்ணா..”

“இல்ல மா..இப்போ, அது சரி வராது.. அவ கூட, கார்ல ஒரு ஆள் துணைக்கு வருவான்..டிரைவரும் இருப்பான்..அவ வந்ததும், காரை திருப்பி அனுப்பிடு..”

“சரி ண்ணா..”

“சரி மா..வச்சுடுறேன்..”

பேசி விட்டு யோசனையோடு அமர்ந்தார் ராஜசேகர்..

மதுவின் அறையில்,
“மாம்,என்னால, அந்த பட்டிக்காட்டுல போய் இருக்க முடியாது..ஐ காண்ட்..”

“எனக்கும் தான், அவர் சொந்த பந்தம் எதுவும் பிடிக்காது..அதுனால தான், இவர் கூட பிறந்த மூணு அக்காவையும், கிட்டவே சேர்க்காம ஒதுக்கி வச்சேன்..அதுங்களும், ஒதுங்கி போய்டுச்சுங்க..இவ மட்டும் ஒட்டி கிட்டு போக மாட்டேங்குறா..இத்தனைக்கும் இவ, இவர் சித்தப்பா பொண்ணு..”

“மாம், என்ன பண்ணுவியோ தெரியாது..நான் அங்க போக மாட்டேன்..”

“ஹ்ம்ம்..யோசிப்போம் டார்லிங்..வெயிட்..”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!