Skip to content
Post Views: 4,224
உறவாக அல்ல உயிராக
அத்தியாயம் – 11
Advertisement
அழகாக விடிந்தது அந்த காலைப்பொழுது. நேற்று இரவு நடந்தது எல்லாம் கனவு போலா இருக்க.
Advertisement
Advertisement
கல்யாண மண்டபம் கலை கட்டியது. மணமகள் மாறியது மட்டுமே. மற்றபடி எல்லாம் அதன் படி நடக்க .
மணமகன் அறையில் பிரகாதீஸ்வரன் . விசில்யடித்துக் கொண்டே கண்ணாடியை பார்த்து ரெடியாக. இதை பார்த்து சுரேஷ் நேற்று நடந்தது என்ன. இப்போ இவன் எதுவும் நடக்காதது போல் இருப்பது என்ன என்று நினைத்தவன்.
Advertisement
சரேஷ் பிரகாவிடம் ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்காத.
சொல்லுடா.
இது திடீர் கல்யாணம் தானே.
ஆமாம்.
உன்ன பாரத்தா திடீர் கல்யாணம் பண்ணூறவனா மாதிரி தெரியலயே.
அப்போ வேற எப்படி தெரியுது.
லவ் மேரேஜ் பண்ணூற மாதிரி இருக்கு உன் முகம்.
உண்மையாவ சொல்லுற.
ஆமாம் கண்ணாடியை பாரு உன் மூஞ்சியை. நேத்து ரிஷப்ஷனில் கூட உன்முகம் இப்படி இல்ல. என்று சொல்ல.
பிரகாவோ அப்படியா? வெளியில் தெரியுது.
ஆமாம் என்றான் சுரேஷ்.
எனக்கும் , மகிழுக்கும் கல்யாணமுன்னு சொன்னப்பா. எனக்கு எந்த பிலிங்ஸ்சும் இல்ல. கல்யாணத்தை பத்தி ஆசையோ, வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற நெனப்போ இல்ல. ஏதோ அம்மா சொன்னாங்க அப்படி என்ற எண்ணம் தான். இப்போ அப்படியா.
வேற எப்படி, என்று சுரேஷ் கேட்க.
அது, அது வந்து. என்று சொல்ல வர.
சுரேஷ் அட பாவி . வெக்க படுறீயா.டேய் நீயா டா. அட ராமா ராமா. உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக வெக்கபடுற பிரகாவை எல்லோரும் பாருங்க என்று டி. வி. யில் சொல்லுவதை போல் சொல்லி சிரிக்க.
டேய் ரொம்ப ஓட்டாத.
டேய் உண்மையை சொல்லு இனியாவை நீ லவ் பண்ணியா.
லவ்வா நானா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா.எனக்கு மகிழ்கிட்ட ஒரு பிலிங்ஸ்சும் வரல. ஆனா இனியா கிட்ட ஏகாப்பட்ட பிலிங்ஸ் வருது.
சுரேஷ் ஒரே நாள்லேயே.
ஆமாம். சின்ன வயசுல இருந்து எனக்கும் அவளுக்கும் ஆகாது. எப்போதும் சண்டை தான். எப்படி என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்கா. என் மேல சொல்லு. நேத்து நடந்தது உனக்கு தெரியும். நீயும் பார்த்த தானே. இது ஒன்னு போதுமே.
நம்பிக்கை , ஒருத்தர் மேலே வர்ர நம்பிக்கை . அது தான் வாழ்க்கை
வாழ நமக்கு வேணும்.
நேத்து நடந்த ஒவ்வொரு விசயமும் , என் கண்முன்னாடி எல்லா விதத்திலும் இனியா எனக்கு புதுச தெரியுறா.
அத்தை கிட்ட பாசமா, மாமா கிட்ட பொறுப்பா , இனியனை கூப்பிடம் போது உரிமையா. மீனாட்சி பாட்டிகிட்ட கொஞ்சி கிட்டு வம்பு வளத்துக்கிட்டு, அப்பறம் என் குழந்தையிடம் குழந்தையா மாறி விளையாடுறா. பல விதமாக நான் அவளை ரசிக்கிறேன்.
இனியா கூட வாழுறத ஒவ்வொரு நிமிசமும். நான் எதிர் பார்த்து இருக்கேன். ஐ யம் சோ லக்கி என்று மணமாற கூற.
சுரேஷ் பிரகாவை கட்டி அணைத்து . ஆல்த பெஸ்ட் பிரகா வாழ்த்துக்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே .
பிரகாதீஸ்வரனின் பீ .ஏ. கணேஷ் வந்து சார் உங்கல கீழே கூப்பிடுறாங்க என்று கூற.
பிரகாவும் சுரேஷ் கீழே சென்றனர்.
மணமகள் அறையில் மீனாட்சியை முறைத்து கொண்டே கல்யாணத்துக்கு ரெடியாகி கொண்டு இருந்தாள் இனியா.
திருச்செல்வனும் நிர்மலாவும், இனியாவின் அருகில் வந்து . அம்மாடி நீ சொன்ன மாதிரி இப்போ போய் நம்ம கடையில் இருந்து . இந்த புடவை எடுத்துட்டு வந்தோம் . புது புடவை உன் பிளவுஸ்சுக்கு மேச்சாண புடவை கட்டிக்கோ. தாலியும் புதுசா வாங்கியாச்சு. உனக்கு ஓகே தானே.
“ஓகே தான் அத்தை . சாரி அத்தை உங்களுக்கு சிரமம் குடுத்துட்டேன். ” ” அதெல்லாம் ஒன்னும் இல்லடா . நீ என் மருமகளா வந்ததே போதும் சரியா”.
சரி அத்தை.
திருச்செல்வன் மகளை பார்த்து. உன்ன நெனச்ச எனக்கு பெருமையா இருக்கு தெரியுமா. நல்ல இருப்படா என்று சொல்லி சென்றார்.
கோமதி வந்து ,இனியா ரெடியாமா. ஐயர் கூப்பிடுறாரு.
கோமதியிடம் இனியா அம்மா மகிழ் எங்கே .
அவ காலையிலேயே வீட்டுக்கு போறேன்னு சொன்னா நம்ம டிரைவரை வீட்டில் விட சொன்னேன்.
மீனாட்சி , ” அவளை பத்தி பேசாத. நீ கிளம்பு.
கோமதியும் நிர்மலாவும், இனியாவை மணமேடைக்கு அழைத்து செல்ல.
மணமேடையில் பிரகதீஸ்வரன் வெள்ளை கலர் பட்டு வேஸ்டி , சட்டை அணிந்து கம்பீரமாக அமர்ந்து. ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக்கொண்டு இருக்க.
பொண்ணு வருது என்று பக்கத்தில் ஒருவர் சொல்ல. நிமிர்ந்து பார்த்தான் பிரகா . மெருன் கலர் பட்டு புடவை , பச்சை கலர் டிசைனர் பிளவுஸ், அணிந்து. திருச்செல்வன் வாங்கி கொடுத்த நகைகளை அணிந்து.நீண்ட பின்னல் இட்டு, மிதமான மேக்கப்பில் சொலித்தாள் இனியா.
பிரகாதீஸ்வரன் அவளையே பாரத்து இருக்க. சுரேஷ் டேய் பொண்ணு உன் பக்கத்தில் தான் வரும். நல்ல பக்கத்தில் வச்சு பாரு. இப்போ. ஐயர் சொல்லுறத செய் என்று சொல்ல.
இனியாவிடம் இருந்து பார்வையை திருப்பியவன். மந்திரங்களை சொல்லி கொண்டு இருக்க.
பிரகாவின் அருகில் வந்து அமர்ந்தாள் இனியா. பிரகாவை நிமிர்ந்து பார்க்கமல் தலை குனிந்து இனியா இருக்க.
” என்ன வெக்கமா? என்று கேட்டான் பிரகா” இனியாவிடம்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் மறுபடியும் கீழே குனிய .
பிரகா மெதுவாக இனியாவிடம் கீழே ஏதாவது விழுந்துருச்சா ரொம்ப நேரமா குனிஞ்சு இருக்க பார்த்து தலை சுளிக்க போகுது.
அத்தான் என்றவள் , பிரகாவை முறைக்க .
இயல்பா இரு இனியா. எல்லோரும் நம்மல தான் பார்க்குறாங்க. கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு நம்ம அம்மா , அப்பா வருத்தபடுவாங்க.
அப்போது தான் எல்லோரையும் பார்க்க. அனைவரும் இவளை வருத்ததோடு பார்ப்பது போல இருக்க.
இனியா தன் முகத்தை, கொஞ்சம் சிரிப்பது போல வைத்துக் கொண்டாள்.
இனியா பிரகாவிடம் , ப்பிரித்தம் எங்கே என்று கேட்க. பிரகா அங்கே என்று கை காண்பிக்க. விமல்ராஜ் ப்பிரித்தம்மை கையில் வைத்து இருந்தார்.
குழந்தை இனியாவை பார்த்து சிரித்து அவளிடம் வருவதாக சொல்ல.
இனியா தன் கை இரண்டை விரித்து வா என்று சொல்ல.
விமல்ராஜின் கையில் இருந்த ப்பிரித்தம் அவரிடம் இருந்து இறங்கி. இனியாவிடம் ஓடியது.
ஓடி வந்த குழந்தையை வாரி அணைத்து கொண்டாள் இனியா.
தன் செல்ல ஆண்டியை முத்தம் கொடுத்து . அவளின் மடி மீது அமர்ந்து கொண்டது குழந்தை.
இதை பார்த்த பிரகாவுக்கு நெகிழ்வாக இருந்தது.
பெரியவர்கள் அனைவரும் இதை பார்த்து மகிழ்ச்சியாக.
இனியாவின் முகத்தில் புன்னகையை கண்ட பிரகா.
என்ன டாக்டர் மேடம் . சின்ன பிரகாவை பிடிக்குது. இந்த பெரிய பிரகாவை பிடிக்கலியா என்று பிரகாதீஸ்வரன் கேட்க.
இனியா பிரகாதீஸ்வரனின் கண்ணை பார்த்து எனக்கு இரண்டு பிரகாவையும் பிடிக்கும்.
அப்படியா என்று கேட்க. ஆமாம் என்றாள்.
அப்போ பெரிய பிரகாவை . இந்த சின்ன பிரகாவை போல் பாத்துப்பியா.
ஓ நல்லா கவனிச்சா போச்சு ஆனா
என்ன ஆனா என்றான் பிரகா.
இவனை மாதிரி உங்களை என்றவள் சிரிக்க.
ஏய் என்ன சொல்லு.என்று பிரகா கேட்க.
ஐயர் ” மாப்பிள்ளை இங்கே கவனிங்கோ. அப்போறமா பொண்ணு கிட்ட பேசுங்கோ”
இவர்கள் இரண்டு பேரும் இவ்வளவு நேரம் மணமேடையில் அமர்ந்து இருப்பது தெரியாமல் பேசிக்கொண்டு இருக்க . அப்பொழுது தான் அனைவரும் இவர்களை பார்ப்பது தெரிந்தது. எல்லோரையும் பார்த்து சிரித்தவள். பிரகாவை பார்க்க. அவனும் இவளை பார்த்து சிரிக்க.
இனியன் இனியாவின் அருகில் வந்து. உன் போன் ரொம்ப நேரம் கால் வந்துட்டே இருக்கு . குமரன் காலிங் காலிக் வருது .
ஓ குமரனா ! குமரன் நம்ம கிட்ட வேலை பார்க்குறாரு.
நான் தினமும் காலையில் பேசுவேன் . இன்னைக்கு எதுவும் அவனுக்கு சொல்லல. நீ என்ன பண்ணுற வாட்சப்ல ஐ ஹம் பிசி. கால் யு லேட்டர். ஒரு மேசேஸ் போடு . நான் அப்பறம் பேசுறேன்.
சரி இனியா நீ இங்கே கவனி , என்று சொல்ல.
ஐயர் எல்லா சம்பிரதாயத்தை முடித்து தாலியை கோமதியிடம். கொடுத்து அனைவரிடம் ஆசிர்வாதம். வாங்க சொல்ல.
கோமதி எல்லோருரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு . ஐயரிடம் வர.
தாலித் தட்டை வாங்கி ஐயர். மாப்பிள்ளை நல்ல தெய்வத்தை வேண்டிகோங்கோ என்று பிரகாதீஸ்வரனிடம் தாலி செயினை கொடுக்க . அதை வாங்கியவன் இனியாவை பார்த்து. டாக்டர் மேடம் பிரகா அத்தானை கல்யாணம் பண்ண சம்மதமா என்று பிரகா கேட்க.
இனியா பிரகாதீஸ்வரன் கண்ணை பார்த்து தலையை ஆட்ட.
அவனும் அவள் கண்ணை பார்த்து கொண்டே தாலியை கட்டினான்.
இனியா திருமதி பிரகாதீஸ்வரனாக மாறினாள்.
அனைவரும் இருவர் மீது பூக்களை தூவி ஆசிர்வாதம் பண்ண. ப்பிரித்தம் இனியாவை பார்த்து சிரித்து அவன் பக்கத்தில் இருந்த பூ வை எடுத்து இனியாவின் மீதும் ,
பிரகாவின் தலையில் மீது போட்டு கைதட்டி சிரிக்க.
இனியா ப்பிரித்தம்மை கட்டி அணைத்து கொண்டாள் . என் பட்டு , செல்லம் , அறிவு என்று கொஞ்ச.
பிரகா இருவரையும் நிறைவாக பார்த்து இருந்தான்.
கல்யாண சடங்குகள் அனைத்தும் முடிந்து மணமேடையில் இருந்து கீழே இறங்கி மீனாட்சியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க இரண்டு பேரும் 100 வருஷம் சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்த.
இனியாவும் , பிரகாவும் தம் பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க.
திருச்செல்வன் இருவரையும் , சாப்பிட அழைத்து செல்ல . இனியா ப்பிரித்தமிற்கு ஊட்டி கொண்டே சாப்பிட. பிரகா இனியாவை இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா என்று சொல்ல.
போதும் அத்தான் நைட்டு தூங்கவே இல்ல. தலைவலிக்குது. ரொம்ப சாப்பிட்ட வாமிட் வந்துரும் . முதலில் தூங்கனும் என்று கொட்டாவி விட.
இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு சரியா தூங்க முடியாது இனியா .
ஏன் அத்தான் . அதல்லாம் நான் நேரம் கிடைச்சா தூங்கிருவேன்.
பிரகாவின் காதல் பார்வை பார்த்தவள். அவன் சொல்லியா வார்த்தையின் அர்த்ததை புரிந்தவள் . அவன் முன் இருக்கவும் சங்கோஷமாக இருக்க. போட்டோ எடுப்பவர் வந்து போட்டோ எடுத்தார். இருவரையும் ஊட்டி விட சொல்லி போட்டோகளை எடுத்து கொண்டு.
பிரகாவிடம் போட்டோ எடுப்பவர் இருவரையும் வைத்து தனி , தனியா , பின்பு சேர்த்து வைத்து போட்டோ எடுக்கனும். மண்டபத்துக்கு வெளியில் பார்க் இருக்கு அங்கே வைத்து சில போட்டோ எடுக்கனும் வாங்க சார் என்று அழைத்து செல்ல.
பிரகா இனியாவிடம் சொல்ல. சரி என்றவள் . இனியனை அழைத்து ப்பிரித்தம்மை பார்த்து கொள்ள கூறி விட்டு செல்ல.
இருவரை சேர்த்து மிக நெறுக்மான போட்டோக்கள் எடுக்க. இனியா ஒரு ஒரு போட்டோவிற்கு இப்படியா என்று தயங்கி தயங்கி நிற்க.
போட்டோ எடுப்பவரை சார் போதும் என்று சொல்ல. மேம் இன்னும் கொஞ்சம் தான் என்று சொல்லி நிறைய போட்டோக்கள் எடுக்க.
போட்டோ எடுப்பவர் . பிரகாவிடம் சார் மேம்மை தூக்குங்க என்று சொல்ல . இனியா அது எல்லாம். வேண்டாம். சும்மா பக்கத்தில் இருக்கிற மாதிரி எடுங்க போதும்.
மேம் பிரகா சாரை பாத்திங்கலா எப்படி உடம்ப. வச்சு இருக்குறாரு. உங்களை தூக்கி போட்டோ எடுக்கலன்னா நல்ல இருக்காது.
சார். மேம்மை தூக்குங்க என்று சொல்ல.
அலேக்காக தூக்கி இருந்தான் பிரகா இனியாவை .
மேம் சார் தோல் மேலே கையை வச்சு அவர் முகத்தை பாருக்க என்று கூற.
அவளுக்கோ என்னடா இது என்றே இருந்தது.
மேம் சிரிங்க என்று சொல்ல.
இனியா பிரகாவின் தோல் மீது கைவைத்து. அவனை பார்க்க .
பிரகாவோ அவளை ரசிக்கும் பார்வை பார்க்க.
இனியாவுக்கு அவனை பார்க்க முடியாமல். தலை குனிய. அவளை மேலும் தூங்கியவள். தன்னை பார் என்று சொல்ல .
பார்க்க மாட்டேன் என்றாள்.
ஏன் பார்க்க மாட்ட.
போங்க அத்தான் நீங்க பார்க்குற பார்வை சரி இல்ல. என்னால உங்கல , உங்க கண்ணை பார்க்க முடியாது.
நீ இப்போ பாங்கல . கீழே போட்டுவேன் . ஐ யோ கீழே விட்டுடாதீங்க அத்தான் என்றாள் இனியா. விட வா உன்னை கட்டி இருக்கேன்.
அப்போ என்னை பாரு . இனியா பிரகாவை பார்க்க. அவன் அவளை பார்க்க .இருவரும் ஒருவருள் ஒருவர், ஆழ்ந்த நேரம்.
சார் போதும் மேம்மை கீழே விடுங்க என்றார் போட்டோ எடுப்பவர்.
மனமே இல்லாமல் இறக்கி விட்டான் போதுமா என்று கேட்டு கொண்டே விட.
இனியாவிக்கு சிரிப்பு தாங்கவே முடியவில்லை . பிரகாவை பார்த்து சிரிக்க.
பிரகா இனியாவிடம் நைட்டு இருக்கு உனக்கு கச்சேரி என்று கூற.
என்ன கச்சேரி அத்தான் என்று கேலி பேச.
இருவரும் சிரிக்கும் நேரம்.
இனியன் இனியாவிடம் உன் போன் ரொம்ப நேரமா அடிக்குது.
போனை வாங்கி பார்த்தவள்.
குமரன் என்று வர. குமரனுக்கு போனில் அழைக்க .
அக்கா என்றவன் அனைத்தும் சொல்லி முடிக்க.
இனியா குமரனிடம் எல்லா சி.சி .டி. விடியோஸ் செக் பண்ண சொல்லு என்று கூறி. நான் இப்போ கிளம்புறேன் என்று கூறி.
பிரகாதீஸ்வரனிடம் அத்தான் நான் இப்போ பொள்ளாட்சிக்கு போகனும். நீங்க என் கூட வருவீங்களா என்று கேட்க.
error: Content is protected !!