உறவாடும் கனவே தொடருதே – அத்தியாயம் -9
அத்தியாயம்..9
வெற்றி அங்கிருப்பவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை. அவன் பாட்டுக்கு வெண்பாவின் கைப்பிடித்து, அழைத்து கொண்டு போக, வெண்பாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
Advertisement
“மாமா, கையை விடுங்க” என அவள் பதற, அவன் அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. இதனை கண்ட நாச்சியாருக்கு தாங்கவே முடியவில்லை. அதுவும் இளங்கோ, ராகினி முன்னிலையில் அவன் இப்படி நடந்து கொள்வதை ஏற்று கொள்ள முடியாமல் தவித்தார்.
“வெற்றி..,” என அவர் அழுந்த குரல் கொடுக்க, அதில் அவனின் நடை தடைபட்டது. மெதுவாக அவன் திரும்பி பார்க்க, நாச்சியாரோ,
“வெற்றி வேலை இருக்குனு சொன்ன, இப்போ ஹாஸ்பிடல் போறேன்னு சொல்ற?” என கேட்க, வெற்றியோ,
Advertisement
“ஆமாம் அப்பத்தா வேலை இருக்கு தான், ஆனால், நான் அத்தையை ஹாஸ்ப்பிடல் கூட்டிட்டு போறேன்னு ஏற்க்கனவே சொல்லி இருந்தேன். அதான் கூட போறேன். நான் போய்ட்டு வந்துறேன்”
Advertisement
என்றவன் அவர் பதிலை கூட எதிர்பார்க்கவில்லை. அவளை அழைத்து கொண்டு வெளியே வந்து விட்டான்.
“பைக் வேண்டாம், நாம காரில் போவோம்” என வெண்பாவிடம் கூறியவன், காரை இயக்க, அவளோ தயங்கி தயங்கி நின்றாள்.
“ஏறு தமிழ், நேரத்துக்கு போகணும். சீக்கிரம்” என அவன் அழுத்தி கூற, வெண்பாவிற்கு அவனுடன் செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.
Advertisement
காரை எடுத்து கொண்டு அவன் வெளியேற, இங்கு நாச்சியாரை முறைத்து பார்த்து கொண்டிருந்தார் அமுதவல்லி. அவரின் பார்வையை உணர்ந்தவர்,
“நீ ஒன்னும் தப்பா நினைக்காதே அமுதா. அவனை பத்தி தான் தெரியும்ல, யாருக்காகவது ஏதாவது ஒன்னுன்னா உடனே ஓடி போய் உதவி பண்ணுவான். அது போல தான் இதுவும்” என அவரை சமாதானப்படுத்த,
“ம்மா, நீங்க பேசுறது உங்களுக்கே அபத்தமா தெரியல. என் பொண்ணை வெளியே கூட்டிட்டு போ சொன்னா முடியாதுனு சொல்லிட்டு, அவளை கூட்டிட்டு போறான்னா என்ன அர்த்தம்? அது கூடவா எனக்கு புரியாது. இதில் என் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும் வேற சொல்றீங்க? என்று சற்று கட்டமாகவே பேசினார் அமுதவல்லி.
“அமுதா, ஏன் டி என்னென்னமோ பேசுற. நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவுமில்ல. என் விருப்பத்துக்கு மாறா வெற்றி ஒரு நாளும் செய்ய மாட்டான். எதார்த்தமாக நடந்த ஒன்னை தப்பா எடுத்துகிற நீ” என கூற, அமுதவல்லியோ முகத்தை திருப்பி கொண்டார்.
“என்ன அமுதா சொல்ற? வெற்றிக்கும் ராகினிக்கும் கல்யாணமா? இதைப்பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லலையே நீ” என எதுவும் தெரியாதது போல இடைமறித்தார் இளங்கோ.
“ஆமாங்க, அம்மாவுக்கு நம்ம வெற்றிக்கும், ராகினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை. என்கிட்ட சொன்னாங்க. நான் உங்க கிட்ட கேட்டு சொல்றேன் சொன்னேன். ஆனால் நடக்கிறத பார்த்தா, இது சரியா வராது போல” என அமுதவல்லி கூற, உடனே,
“அப்படியெல்லாம் சொல்லாதே அமுதா” என அவளை தடுத்தார் நாச்சியார்.
“ஏன் அத்தே, அமுதா சொல்றது உண்மையா?!!” என இளங்கோ கேட்க, அவரும்,
“ஆமாம் மாப்பிள்ளை, வெற்றிக்கு ராகினிய கல்யாணம் பண்ணி வச்சா சொந்தம் விட்டு போகாது. நம்ம பிள்ளைங்க, நம்ம வீட்டில் சந்தோஷமா வாழுவாங்க தான் இந்த முடிவு எடுத்தேன்.
நான் இன்னும் திரு கிட்ட கூட இதைப்பத்தி இன்னும் பேசல. முதலில் உங்க முடிவை தெரிஞ்சுகிட்டு பேசுவோம் தான் காத்திட்டு இருந்தேன்” என அவர் முடிவெடுத்ததை பற்றி இளங்கோவிடம் கூறினார்.
சிறிது நேரம் யோசித்த இளங்கோ, “எனக்கும் இதில் சம்மதம் அத்தே. வெற்றி போல ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சு இருக்கணும். நீங்க மேல் கொண்டு பேசுங்க” என இளங்கோ கூறியதும், சந்தோஷம் தாளவில்லை நாச்சியாருக்கு.
“நீங்க மச்சான் கிட்டயும், வெற்றி கிட்டயும் பேசுங்க. அவங்களுக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேசுவோம்” என அவர் முடிவை கூற, நாச்சியாரோ,
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு. நான் ரெண்டு பேர் கிட்டயும் பேசி நல்ல முடிவா சொல்றேன்” என உளம் மகிழ்ந்தார் நாச்சியார்.
“அவங்க கிட்ட கேட்கிறதெல்லாம் இருக்கட்டும், முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.
வெற்றி எதுக்கு இப்போ வெண்பாவை கூட்டிட்டு போனான். அவ அம்மாவை அவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா இவனுக்கு என்ன? ராகினி போல தான் வெண்பாவும் வெற்றிக்கு அத்த பொண்ணு. அதனால் அவனுக்கு வெண்பா மேலே வேற ஏதாச்சும் இருக்குதோ என்னவோ?” என அமுதவல்லி சந்தேகப்பட,
“அமுதா உன் புத்தி என்ன டி இபப்டியெல்லாம் யோசிக்குது. வெற்றி என் பேரன், அவன் நான் சொல்றதை தான் கேட்பான். அவனை போய் சந்தேகப்படுற. இதெல்லாம் நல்ல இல்ல சொல்லிட்டேன்” என அவர் கொஞ்சம் கோபமாக தான் பேசினார்.
“அமுதா விடு, வெற்றி எதோ எதேச்சையா செஞ்சதை எதுக்கு சீரியஸா எடுத்துகிற. அத்தை தான் இவ்வளவு சொல்றாங்கள, அவங்க பேசிட்டு சொல்லட்டும். நீ உள்ள வா” என அவரை அழைத்து கொண்டு உள்ளே சென்றார் இளங்கோ.
கூடவே ராகினியும், ஆகாஷும் சென்று விட, நாச்சியார் தான் கடுகடுவென நின்றிருந்தார். எப்படியாவது இதனை சரி செய்ய வேண்டும் என்று பல யோசனைகள் அவர் மனதில் ஊர்வலம் வந்தன.
இங்கு, வெற்றியும் வெண்பாவும் நேராக கனகவல்லி இல்லத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, கனகவல்லியோ வெண்பாவிடம்,
“என்ன வெண்பா வெற்றி வந்து இருக்கான், நீ ஏன் கூப்பிட்டு வந்த? அங்கே உன்ன அம்மாச்சி இல்லையா?” என மெதுவாக வெண்பாவிடம் கேட்க,
“நான் எங்க மா கூட்டிட்டு வந்தேன், அவரா தான் வந்தார். அம்மாச்சி அங்க தான் இருந்தாங்க. அவங்க முன்னாடியே ஹோஸ்பிடல் போறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டார்” என அவள் விளக்க ஐயோடா என்றிருந்தது கனகவல்லிக்கு.
“என்ன டி சொல்ற? அவங்க முன்னாடியே கூட்டிட்டு வந்துட்டானா? இதுக்கு உன் அம்மாச்சி ருத்ரதாண்டவம் ஆடுவாங்களே!! என்ன பண்றது?” என அவர் கலக்கமாக கேட்க,
“எனக்கும் ஒன்னும் புரியல ம்மா. விடுங்க பார்த்துப்போம். முதலில் ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு வருவோம்” என அவருக்கு தைரியமூட்ட, மூவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.
அங்கு கனகவல்லிக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள் எல்லாம் நடக்க, வெற்றி கூடவே இருந்து அனைத்தும் பார்த்து கொண்டான்.
உண்மையில் வெற்றி அவர்களுடன் வந்தது மிகவும் உதவிகரமாக இருந்தது. இல்லையென்றால் தனியே வெண்பா மிகவும் திணறி இருப்பாள். இங்கு அங்கு என, மாற்றி மாற்றி கனகவல்லியை அழைத்து கொண்டு ஒவ்வொரு இடமாக சென்று பரிசோதனை செய்து மருத்துவரை பார்த்து, பின் ஆலோசனைகளை வாங்கி, முடிவில் மருந்து மாத்திரைகள் வாங்கும் வரை அவள் ஓடி கொண்டே இருந்திருப்பாள். வெற்றி உடன் இருந்ததால் அவளால் எல்லாமே சமாளிக்க முடிந்தது.
“நீ அத்த கூட இரு தமிழ். நான் போய் ரிபோர்ட்ஸ் வாங்கிட்டு வரேன்…”
“நீ இரு நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்..”
“நீ இரு நான் மெடிசன்ஸ் வாங்கிட்டு வரேன்..”.
“இந்தா இதை குடி. வந்ததிலிருந்து ஒன்னுமே சாப்பிடல நீ” என அவன் விடாமல் அவளை கவனித்து கொண்டே இருந்தான்.
எல்லாம் முடிந்த பின்னரும் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டு, என்னென்ன மருந்துகள் எந்தந்த நேரத்தில் கொடுக்க வேண்டும், என்பதை தெளிவாய் கூறிவிட்டு,
“நீ எதுவும் சமைக்காதே தமிழ், ரெஸ்ட் எடு. நான் வள்ளி கிட்ட சாப்பாடு கொடுத்து விடுறேன்” என எல்லாவற்றையும் செய்துவிட்டே அங்கிருந்து கிளம்பினான்.
அவன் சென்ற பின் யோசனையாக அமர்ந்திருந்த கனகவல்லியிடம் வெண்பா,
“என்ன ம்மா, எதையோ டோசிச்சுட்டு இருக்கீங்க? என்ன விஷயம்?” என சாதரணமாக கேட்க,
“ஒன்னும் இல்ல வெண்பா, எல்லாம் நம்ம வெற்றியை பத்தி தான். நான் தூக்கி வளர்த்த பிள்ள அவன். எனக்கு ஒன்னுனதும், இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு, என் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அண்ணன் பையனுக்கு என் மேலே எவ்வளவு பிரியம்ல.
“அம்மாவை தவிர, என் அண்ணா, அண்ணி, அண்ணன் பசங்கனு எல்லாருக்கும் என் மேலே உள்ள பாசம் அப்படியே இருக்குன்னு நினைக்கும் போது வேறென்ன வேணும் இந்த வாழ்க்கைக்கு அப்படின்னு தோணுது.
நாமளும் காசு பணம் செல்வ செழிப்போடு இருந்திருந்தா இந்நேரம் வெற்றிய உனக்கே கல்யாணம் பேசி முடிச்சு இருப்பேன்” என கூறியதும் தான் தாமதம், வெண்பா அவரை அதிர்ந்து பார்த்தாள்.
“அம்மா, என்ன பேசுற நீ? மாமாவுக்கும் ராகினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறதா அம்மாச்சி சொல்லிட்டு இருக்காங்க, இந்த நேரத்தில் இப்படி பேசுறது சரியில்ல ம்மா. இப்படியெல்லாம் யோசிக்காதே! மாமா எங்க இருந்தாலும் நல்ல இருக்கணும்னு நினை. இனி இப்படி பேசாதே ம்மா” என கண்டிப்புடன் கூற, அவரும்,
“ஆமாம் வெண்பா, ஏதோ ஒரு ஆசையில் சொல்லிட்டேன். இது மட்டும் உங்க அம்மாச்சி காதில் விழுந்துச்சு அவ்வளவு தான். இனி இப்படி பேச மாட்டேன்” என்றவர் ஓய்வெடுக்க படுத்து கொண்டார்.
நாட்கள் நகர, நாச்சியார் வெற்றியின் திருமணத்தை பற்றி திருநாவுகரசிடமும், விசாலட்சியிடம் பேச முடிவெடுத்து, அன்றைய நாளில் அனைவரும் உறங்க சென்றபின், அவர்கள் அறையை நோக்கி சென்றார்.
லேசாக கதவை தட்டிவிட்டு அவர் உள்ளே செல்ல, அங்கே விசாலாட்சி படுபதற்காக மெத்தையை சரி செய்து கொண்டிருந்தார்.
“வாங்க அத்தே, உள்ள வாங்க” என அவர் அழைக்க, கட்டிலில் அமர்ந்திருந்த திருநாவுகரசும் “வாங்க ம்மா, என்ன இந்த நேரத்தில்?” என அழைத்தார்.
உள்ள வந்தவர் அவனருகில் வந்து அமர, இருவரும் அவரை கேள்வியாய் பார்த்தனர்.
மெதுவாக படுக்கையை தொட்டு பார்த்தவர், மருமகளை திரும்பி பார்க்க, விசாலாட்சியோ,
‘ஆத்தி, இந்தம்மா என்னத்த சொல்ல போதோ தெரியலையே!’ என மனதிற்குள் அலறினார்.
“ஏன் விசாலாட்சி, மெத்தையில் இவ்வளவு தூசி இருக்கே! உன் கண்ணுக்கு தெரியலையா. இதோட படுத்தா என் பிள்ள, உடம்புக்கு ஒத்துக்குமா? நீ எந்த வேலையை தான் ஒழுங்கா பார்ப்ப” என வழக்கமான மாமியாராக மாற, விசாலட்சியோ,
“ஏன் அத்த, இதை பேசவா இந்த நேரத்துக்கு வந்தீங்க?” என கேட்க, அவரை முறைத்து பார்த்தார் நாச்சியார்.
மாமியாரின் முறைப்பை பார்த்ததும், கப்சிப் என்று ஆகிவிட்டார் விசாலாட்சி.
“திரு, நம்ம வெற்றிக்கு கல்யாண வயசு வந்துடுச்சு. அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணனும்னு உனக்கு எண்ணம் இருக்கா? இல்லையா?” என நாச்சியார் கேட்க,
“ம்மா, அவன் என் பையன் ம்மா, எனக்கு தோணாமல் இருக்குமா? பெரியவங்க நீங்க பேசுவீங்க தான் நான் பேசாமல் இருந்தேன்” என்றவருக்கு,
“அதான் நான் ஒரு முடிவு பண்ணிட்டு உன் கிட்ட பேச வந்தேன். நம்ம ராகினிய, வெற்றிக்கு முடிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். நீ என்ன சொல்ற?” என நேரடியாக அவர் விஷயத்தை போட்டு உடைக்க, திருநாவுக்கரசு யோசனையுடன் அவரை பார்த்தார்.
அவர் முன்னமே இந்த விஷயத்தை கணித்து இருந்தார் தான். நாச்சியாரின் நடவடிக்கை, அமுகவல்லியின் வருகை, என அவருக்கு இதைப்பற்றி கொஞ்சம் சந்தேகம் இருந்தது தான்.
தற்பொழுது அன்னையே நேரடியாக விஷயத்தை கூறியதும், அவரால் சட்டென்று எதுவும் பேச முடியவில்லை.
“ராகினியவா, அவ வேணாம் அத்தே” என சட்டென்று விசாலாட்சி மறுக்க,
“உன் வாயில நல்ல வார்த்தையே வராதா விசாலாட்சி? எதுக்கு எடுத்ததும் அபசகுணமா இப்படி சொல்ற? என நாச்சியார் கோபப்பட,
“அப்படி சொல்லல அத்தே அந்த பொண்ணு வெளிநாட்டில் வளர்ந்த பொண்ணு. நம்ம வீட்டுக்கு செட் ஆகுமானு தான் சொல்ல வந்தேன்”
பார்த்தாலே தெரியுது, அடுப்படி பக்கமே போனதில்லைன்னு. வீட்டு வேல ஒன்னும் தெரியாது போல. அந்த பொண்ணை போய் இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்தா எப்படி சரிப்படும்”,என கேட்க,
“நீ கல்யாணம் பண்ணிட்டு வந்த போது கூடத்தான் உனக்கு ஒன்னும் தெரியாது. அப்போ என்ன? கல்யாணம் ஆகி இத்தன வருஷம் ஆகி கூட தான் உனக்கு ஒன்னும் தெரியல. நீ இந்த வீட்டு மருமகளா இருக்கல?!! அதே போல தான், ராகினியும் இருப்பா! நம்ம வீட்டில் வேலை செய்ய ஆளா இல்ல. என் பேரனும், பேத்தியும் சந்தோஷமா வாழ்ந்தா அதுவே போதும். அதனால் நீ உன் வாயை மூடிட்டு இரு” என்றதும், விசாலாட்சி முகத்தை திருப்ப கொண்டார். மகனின் முகத்தை பார்த்த நாச்சியார்,
“நீ என்ன ப்பா சொல்ற?” என கேட்க,
“இதில் நான் சொல்ல என்ன இருக்கு ம்மா, வெற்றி தானே சொல்லணும். நாம என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனால் வெற்றிக்கு பிடிக்கணுமே. காலமெல்லாம் வாழ போறது அவன். அவன் முடிவை தானே முதலில் கேட்கணும் என திடமாய் கூறினார் திருநாவுக்கரசு.
“அவன் கிட்ட நான் பேசுறேன் பா. உனக்கு சம்மதமா அது தான் வேணும். நான் மாப்பிள்ளை கிட்ட கூட பேசிட்டேன். அவர் உனக்கும் வெற்றிக்கும் சரி ன்னா அவருக்கும் சம்மதம்னு சொல்லிட்டார்” என நாச்சியார் கூற, விசாலாட்சியோ,
“ப்பா, என் மாமியார் என்னா ஸ்பீடு எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் பேசுறாங்க” என மனதோடு பேசி கொண்டார்.
“சரி ம்மா, வெற்றி கிட்ட பேசுவோம். அவனுக்கு பிடிச்சு இருந்தா, நல்ல நாளா பார்த்து கல்யாணத்தை முடிச்சுடுவோம்” என திருநாவுக்கரசு கூற, நாச்சியாருக்கு மிகுந்த சந்தோஷம் தான்.
“ரொம்ப சந்தோஷம் பா, நீ தூங்கு. மீதி நாளைக்கு பேசிப்போம்” என அங்கிருந்து வெளியேற, இருவரும் படுத்து கொண்டனர்.
“எனக்கு என்னவோ வெற்றி இதுக்கு சம்மதிக்க மாட்டான்னு தோணுதுங்க” என விசாலாட்சி திருநாவுக்கரசிடம் கூற,
“ஏன் அப்படி சொல்ற?”
“வெற்றி நான் பெத்த பையன் ங்க. அவனுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காதுனு எனக்கு தெரியாதா? உங்க அம்மா, எப்பவும் எல்லா அவங்களுக்கு தான் தெரியும்ன்ற மாதிரி தான் பேசுவாங்க. ஆனால் என் பசங்க பத்தி அவங்களை விட எனக்கு தான் நல்ல தெரியும். அதனால், வெற்றி நிச்சயமா ராகினிய கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டான் தான் தோணுது” என உறுதியாக கூற, திருநாவுக்கரசோ,
“பார்ப்போம்” என்றதோடு முடித்து கொண்டார்.
நாச்சியாரோ, இனி வெற்றி கிட்ட மட்டும் தான் சம்மதம் வாங்கணும், அதையும் வாங்கிட்டா, சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சசுடலாம்” என திட்டமிட்டு கொண்டிருந்தார். ஆனால் வெற்றியிடம் பேச அவருக்கு சந்தர்ப்பமே அமையவில்லை.
ஒருவாரம் கடந்திருக்கும், வெண்பா வேலை பார்த்து கொண்டிருக்க, அறைக்குள் இருந்த கிஷோரோ, தனக்கு ஜூஸ் வேண்டும் எடுத்து வரும் படி கூறி இருந்தான்.
அதன்படி, வெண்பாவும் அவனுக்கு பழச்சாற்றை எடுத்து கொண்டு சென்றாள்.
அறைக்குள் வந்தவளை, “வெண்பா வா வா, உள்ள வா” என பிரகாசமாக அழைக்க, அவளோ, “ஜூஸ் கேடீங்களாமே, இந்தாங்க” என அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு கிளம்பினாள்.
இரு வெண்பா, என்ன அவசரம்? கொஞ்ச நேரம் என்கிட்டே பேசிட்டு போலாம்ல” என அவன் அசடு வழிய எரிச்சலாக இருந்தது வெண்பாவிற்கு.
இதோ பாருங்க, வீட்டுக்கு விருந்தாளியா வந்து இருக்கீங்க தான் நான் அமைதியா இருக்கேன். நீங்க பேசுறது நடந்துகிறது எதுவும் சரியில்ல. இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நான் எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியது வரும். பார்த்து இருந்துக்கோங்க”
என கண்டிப்புடன் கூறியவள் அங்கிருந்து நகர,
“ஏன் வெண்பா என்னை வெறுப்பாவே பார்க்கிற? நான் என்ன பண்ணேன் உன்னை, ஜஸ்ட் பிரெண்ட்லியா தானே பேசுறேன். இன்பேக்ட், உண்மைய சொல்லனும்னா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு. நீ பாரின் வரியா நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்றவனை முறைத்து பார்த்தாள் வெண்பா.
இவனிடம் எதுக்கு நின்று பேச வேண்டும் என தோன்ற, அவன் பேசி கொண்டிருக்கும் போதே அங்கிருந்து வெளியேற போனாள் வெண்பா.
அவள் திரும்பியதும், சட்டென்று அவள் கை பிடித்து நிறுத்தினான்.
அவன் அப்படி செய்ததும் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, ஓங்கி அவன் கன்னத்திலே அறை விட, கன்னத்தை பொத்தியப்படி, அவளை அதிர்ந்து பார்த்தான் கிஷோர்.
வெறும் நெருக்கங்கள் மட்டுமே
நேசத்தை தருவதில்லை!!
என் பார்வையிலிருந்து
அகன்ற பொழுதும்
உன் நினைவினை சுமந்து நிற்பதில்
பொதிந்து கிடக்கிறது
என் நேசம்!!
கனவுகள் தொடரும்…
SPELL CHECK பார்க்கல. TYPE பண்ணதை அப்படியே போடு இருக்கேன். SORRY
