Skip to content
Post Views: 773
“பாத்தீங்களா அண்ணி எப்படி அவன கட்டி பிடிச்சுட்டு நிக்கானு இத சும்மா விடக்கூடாது இப்ப நான் என்ன பண்றேன் பாருங்க அண்ணி” என்று யாருக்கோ போன் செய்ய அந்தப் பக்கம் அவன் போனை எடுத்ததும்,
“ஹலோ சுப்பு” என்றாள் வசுந்தரா.
“ஹலோ அக்கா நாளைக்கு கண்டிப்பா உன்னோட வட்டி
துட்ட நான் தந்துடறேன் கா இப்போ போன் பண்ணி எதுவும் திட்டாத வீட்ல எல்லாரும் குடும்பத்தோட வந்திருக்காங்க அக்கா” என்றான் சுப்பு என்ற சுப்பையா. வசுந்தராவிடம் வட்டிக்கு கடன் வாங்கி நாலு மாதமாக வட்டி துட்டு கொடுக்காமல் இருப்பவன்.
Advertisement
“டேய் கொஞ்ச நேரம் நான் சொல்றதை கேளுடா. இங்க பாருடா நான் ஒரு விஷயம் சொல்றேன். அத மட்டும் நீ பக்காவா பண்ணி முடிச்சிட்டா. இந்த நாலு மாசம் இல்ல இனி நீ வட்டி துட்டு தர வேண்டாம் அசல் மட்டும் தந்தால் போதும் சரியா”
“அக்கா உண்மையாவா சொல்ற வட்டி துட்டு தர வேண்டாமா” என்றான் ஆச்சரியமாக. ஏனென்றால் வட்டி காசில் பத்து ரூபாய் குறையாக இருந்தாலும் அதையும் அடுத்த மாதத்தில் வட்டியோடு வாங்குபவள் திடீரென்று நான்கு மாதம் வட்டி தர வேண்டாம் என்று சொல்லணும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“டேய் உண்மையா தான் சொல்றேன் நீ செய்வீயா செய்ய மாட்டியா” என்றாள் தான் சொன்னதை கேட்காமல் உளறிக் கொண்டு இருப்பவனை நினைத்து கடுப்பில்
Advertisement
“என்ன செய்யணும் சொல்லுக்கா எதுவா இருந்தாலும் பரவாயில்லை நீ சொல்லுக்கா உனக்காக நான் கொலை கூட செய்வேன்” என்றான் உற்சாகமாக
Advertisement
“யாரு நீ எனக்காக கொலை பண்ற ரத்தத்தை அதிகமா பார்த்தா மயங்கி விழுற நாயி நீ கொலை பண்றியா. அதிகமா பேசாம சொல்றது மட்டும் செய்டா” என்று அவள் இங்கே இருவரும் இருப்பதை சொல்லி என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி போனை வைத்துவிட்டு, இத்தனை நேரம் தன்னை அதிர்ச்சியோடு பார்த்திருந்த தனது அண்ணன் மனைவியை பார்த்தாள்.
“என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க”
“அண்ணி நீங்க வேற லெவல் போங்க. எப்படி அண்ணி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க. உங்ககிட்ட சண்டை போடுறதுக்கு முன்னாடி ஒரு வாட்டிக்கு பத்து வாட்டி யோசிச்சு சண்டை போடணும்னு நினைக்கிறேன்” என முன் வாக்கியத்தை சத்தமாகவும் பின்னாடி உள்ளதை வாய்க்குள்ளேயும் சொல்லிக் கொண்டாள்.
Advertisement
அவள் சொன்னதை கேட்டு சிரித்த வசுந்தரா, “பின்ன இந்த வசுந்தரானா சும்மாவா. இனி பாருங்க அவளையும் அவ பொண்ணையும் எப்படி அழ வைக்கிறானு”
“ஆனா ஒன்னு அண்ணி நல்லவேளை நம்ம வந்த கார் ரிப்பேர் ஆயிடுச்சு. அதனால தானே இந்த குறுக்கு வழியில நம்ம கோவில் போக வந்தோம் வந்ததுனால தான் இவங்க ரெண்டு பேரையும் பார்த்தோம் இல்லன்னா இந்த மாதிரி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைச்சிருக்குமா”
“அதுவும் சரிதான் அண்ணி. இன்னும் நம்ப முடியல பார்க்க பச்ச பிள்ளை மாதிரி இருக்குற இந்த பொண்ணு என்ன எல்லாம் பண்ணுது”
“ ஆமா அண்ணி இவளும் இவ அம்மாவும் முகத்தை இப்படி பச்ச பிள்ளை மாதிரி வச்சுட்டு தான் ஊரை ஏமாத்திட்டு அலையறாங்க. ஆனா ஒன்னு அண்ணி அம்மாவுக்கு தப்பாம பிறந்து இருக்கா”
“ஆமா அண்ணி நீங்க சொன்ன மாதிரி எங்க என் பையன கல்யாணம் பண்ணிட்டு எங்க வீட்டுக்கு வந்துருவான்னு நினைச்சேன். நல்ல வேலை என்னோட பையன் தப்பிச்சுட்டான் அண்ணி” என்றாள் நிம்மதியாக
“அட என்ன அண்ணி நீங்க நான் இருக்கிற வரைக்கும் இவளையும் இவங்க அம்மாவையும் நம்ம வீட்டுக்குள்ள வர விட்டுருவானா என்ன. இன்னும் பாருங்க ரெண்டு பேருக்கும் என்னலாம் நான் பண்றேன்னு” என்றாள் ஒரு வித வெறியுடன்
அவள் முகத்தைப் பார்த்து பயந்து போன கமலா, “சொந்த தங்கச்சிய இப்படி பழிவாங்க துடிக்கிறா. அவ வீட்ல நம்ம பொண்ணு எப்படி நிம்மதியா வாழ்வா”என்று தனது மகள் எப்படி இவள் வீட்டில் வாழ்வாள் என நினைக்கத் தொடங்கினாள் கமலா.
இவர்கள் இருவரும் சற்று உற்றுப் பார்த்து இருந்தால் அவளுடன் இருப்பது யார் என்று தெரிந்திருக்கும். அப்படி தெரிந்திருந்தால் இருவரும் இதனை பெரிது பண்ணி இருக்க மாட்டார்கள். ஆனால் என்ன பண்ண இருவரின் பக்கத்திலிருந்து விதி கைகொட்டி சிரித்ததை இருவரும் அறியவில்லை.
@@@@@@@@@@@@@@
“எங்க விடுங்க நம்ம ரெண்டு பேரும் பேச வந்து ரொம்ப நேரம் ஆச்சு பாரதி பாவம் தனியா நிக்கா விடுங்க நான் போறேன்” என்றாள் கீதா பாரதியின் மாமன் மகன் ராஜ்குமாரின் அணைப்பில் இருந்து கொண்டு
“ஏய் ப்ளீஸ் டி கொஞ்ச நேரம் டி இந்த ஒரு டைம் தான் உன் கூட இப்படி ஒன்னா இருக்க முடியும். ப்ளீஸ்மா என் செல்லம்ல பாரதி இன்னும் கொஞ்ச நேரம் நிப்பா. நீ வாடி” என்று அவளை அணைத்து முத்தம் விட முயல
“ஆசை தோசை ஆள பாருங்களேன் இதுக்கெல்லாம் வேற ஆளு பாருங்க நான் போறேன்” என்று அவனை பிடித்து தள்ளிவிட்டு வேகமாக பாரதி நின்ற இடத்தை நோக்கி ஓடினாள் கீதா.
“ஐயோ ஓடிட்டாளே. இனி இவ கூட எப்ப இந்த மாதிரி இருக்க முடியுமோ” என்று அவன் பெருமூச்சு விட்டு தனியே புலம்பி கொண்டு இருக்க, “எங்க இங்க வாங்களேன்” என்ற கீதாவின் சத்தத்தில் வேகமாக அவளின் அருகே சென்றான்.
“ஏய் என்னாச்சு டி எதுக்கு இப்படி கத்துற”என்று அவள் அருகில் வந்து கேட்க
“எங்க பாரதிய காணுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவளுக்கு வேற இருட்டுனா பயம். இந்த இருட்டுக்குள்ள எங்க போனாளோ. செத்தேன் எங்க அம்மா கிட்ட இப்ப மட்டும் நான் தனியா போனா அவ்வளவுதான்” என்று அவள் புலம்ப ஆரம்பிக்க
“நீ லூசு கொஞ்ச நேரம் புலம்பான நின்னு” என்றவன், “பாரதி.. பாரதி..” என சத்தமாக அழைத்துவிட்டு, “ஒருவேளை பாரதி ரொம்ப நேரம் ஆயிட்டதால தனியா போயிருப்பாளோ என்னவோ நீ போய் அங்க பாரு. நான் இங்கே எங்கேயாவது இருக்களானு தேடி பார்க்கேன்” என்று சொல்லி அவளைப் போகச் சொன்னான்.
“எங்க அவ தனியா எங்கேயும் போயிருக்க மாட்டா இங்கதான் எங்கேயாவது இருப்பா நீங்க எதுக்கும் கத்தி கூப்பிடுங்க அவ கண்டிப்பா வந்துருவா என்ன விட்டுட்டு தனியா போய் இருக்க மாட்டா. நீங்க அவள கூப்பிடுங்க” என்று சொல்லி, “பாரதி.. பா..ரதி எல்லாம் என்னோட தப்பு தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது. எங்கடி இருக்க பாரதி” என கத்தி அழ தொடங்கினாள்.
“ஏய் இங்க பாருடி அவ இங்க கண்டிப்பா இல்ல இருந்திருந்தா நம்ம குரலுக்கு கண்டிப்பா பதில் சொல்லி இருப்பா. அதனால நீ எதுக்கும் போய் அங்கே செக் பண்ணி பாரு. நான் இங்க பக்கத்துல எங்கயாவது போய் இருக்களான்னு பாக்கேன் சரியா நீ அங்க போய் பாரு” என்று அவளை சமாதானம் செய்து அனுப்பி வைக்க பார்த்தான்.
“இல்ல எனக்கு பயமா இருக்கு நீங்களும் என் கூட வாங்க. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போய் தேடுவோம்” என்று அவன் கையை பிடித்துக் கொண்டு விடாமல் கெஞ்சினாள்.
“சரி ஓகே கையை விடு நான் வரேன்” என்று சொல்லி இருவரும், “பாரதி பாரதி” என்று கத்தி அவளை தேடிக்கொண்டு கோவிலின் அருகே வர அங்கே கும்பலாக அனைவரும் செல்வதை பார்த்து தனது நண்பனிடம் போன் செய்து விசாரித்தான் ராஜ் குமார்.
“டேய் மச்சான் என்னடா பிரச்சனை எதுக்கு எல்லாரும் கும்பலா போறாங்க” என்று அவனிடம் கேட்க
“என்ன மாப்பிள்ளை நீ போன் பண்ற அப்போ உன் அத்தை பொண்ணு கூட இருக்கிறது நீ இல்லையா” என்றான் அதிர்ச்சியுடன் அவன்.
“டேய் என்னடா உளர ஒழுங்கா சொல்லு என்ன ஆச்சி” என்றான் கடுப்புடன்
“அது ஒன்னு இல்ல
மாப்பிள்ளை உன்னோட அத்தை பொண்ணு நம்ம கோயில சுத்தி இருக்கிற காட்டில ஏதோ ஒரு பையன் கூட தனியா இருக்கானு யாரோ நம்ம ஊர் தலைவர் கிட்ட சொல்லி இருப்பாங்க போல. அத கேட்ட பெருசுங்க எல்லாம் சேர்ந்து நம்ம ஊரோட மரியாதையே கெடுக்கிறா சொல்லி எல்லாத்தையும் கும்பளா கூட்டிட்டு போயிருக்காங்க. அங்க போனா தான் தெரியும் உன் அத்தை பொண்ணுக்கு என்ன தண்டனை கொடுக்க போறாங்கனு. இங்க கோவில்ல வச்சு உன் சின்னத்தைய ஊருக்காரங்க வேற ரொம்ப பேசிட்டாங்க. உன்ன மாதிரி தான உன் பொண்ணு இருப்பா. நீ எப்படி ஊருக்கு தெரியாம ஒருத்தனை இழுத்துட்டு ஓடிடுன அதே மாதிரி தான் உன் பொண்ணும் இப்ப பண்ணிக்கிட்டு இருக்கா சொல்லு உங்க தாத்தா வேற திட்டுனாங்க டா. அவங்க பாவம் டா ரொம்ப அழுதாங்க. உன்ன வேற காணலையா ஒருவேளை நீதான் அவ கூட இருக்குன்னு நான் நினைச்சேன்”
“டேய் மெண்டல் மாதிரி பேசாதடா. நீ எங்க இருக்க சொல்லு நான் வரேன்” என்று அவனிடம் அவன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டவன் குழப்பமாக கீதாவை பார்த்து, “ஏய் நீ போய் என்னன்னு விசாரி நான் பின்னாடியே வரேன்” என்று சொல்லி அவளை கூட்டத்துடன் அனுப்பி வைத்து மேலும் விஷயங்களை அறிய தனது நண்பனினை தேடி சென்றான்.
error: Content is protected !!