உளமாற உனதாகிறேன் – 11
உளமாற உனதாகிறேன் – 11
சில மணி நேரங்கள் முன்…
“ப்ச்ச் இப்போ எதுக்கு அர்ஜூன் என்ன வரச்சொன்ன… இன்னும் கொஞ்சம் நேரத்துல எனக்கு பெங்களூருக்கு பஸ்… இப்போ எதுக்கு அவசரமா பார்க்கனும்னு சொன்ன…”
“லுக் வெண்பா… நான் பூசி மொழுகல நான் நேரடியாவே கேட்கிறேன்… எனக்கு உன் ஹெல்ப் வேணும்… இனியாக்கூட எனக்கு கொஞ்சம் பேசணும்…” என்றதும்…
Advertisement
“என்ன பேசப் போற”
“அதையேன் உன்கிட்ட நான் சொல்லனும்… உனக்கு ஹெல்ப் பண்ணி தான் என் லவ் அந்தரத்துல தொங்குது… உனக்கே தெரியும் தானே… இனியாவை எனக்கு பேசி இருக்கிறது…”
“அதெல்லாம் சின்ன வயசுல பேசுனது அர்ஜூன்… ஆனா இனியாளோடு மனசுல நீ இல்ல… அதனால இதை அப்படியே விடுறது தான் எல்லாருக்கும் நல்லது” என்றதும் சுர்ரென்று ஏறிய கோவத்தை தனக்குள் அடக்கியவன்…
Advertisement
“சரி விட்றலாம்… ஆனா எனக்கு இனியா நல்லா சந்தோஷமா இருக்காளான்னு தெரியனும்… அதுக்கு நீ அவ வீட்டுக்கு போய் நேருல ஒரு முறை பார்த்திட்டு எனக்கு சொல்லு… நான் விட்டுற்றேன்…” என்றதும் அவள் யோசிக்க…
Advertisement
“பிளிஸ் வெண்பா எனக்கு அவ சந்தோஷமா இருக்கனும்… அது மட்டும் தான்” என்றதும் சரியென்று தலையாட்டியவள் இனியாளின் இல்லம் செல்ல பயணமானாள்…
அடுத்த வேலையாய் தன் அண்ணனுக்கு அழைத்த அர்ஜூன்… அவர்கள் எப்போது வாசு இல்லம் செல்வார்கள் என்ற நேரத்தை கேட்டறிந்து எல்லாத்தையும் கணக்கிட்டவன் தனக்குள்ளே சிரித்து கொண்டான்…
‘போ வெண்பா போ… ஒன்னு நீ அங்க போய் அந்த வளையாபதிக் கூட பெரிய பிரச்சனை ஆகனும்… அப்படி இல்லைன்னா அந்த போலீஸ்காரனை மிஸ் பண்ணிட்டன்னு நீ பீல் பண்ணனும்… ரெண்டுல எது நடந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்’ என்றபடியாய் தனக்குள் சிரித்துக் கொண்டான் அர்ஜூன்…
Advertisement
•••••••••
இனியாளோடு வாக்கு வாதம் செய்துவிட்டு தன் புல்லட்டில் வந்திருந்த வாசுவை கலைத்தது மங்களத்தின் அழைப்பேசி…
அதில் அவர் என்ன சொன்னாரோ… ‘சீக்கிரம் வரேன்’ என்பதை பதில் கூறியவன் சர்ரென்று தன் புல்லட்டை சாலையில் பறக்க விட்டிருந்தான்… ஆனால் மனம் மட்டும் தந்தையை நினைத்து கொதித்துக் கொண்டிருந்தது… கோவம் என்பதனை தாண்டி ஆற்றாமை என்று கூட சொல்லலாம்… எல்லோருக்கும் தந்தை தான் ஸ்பெசல்… வாசுவுக்கும் அப்படியே… ஆனால் அது அவன் தந்தையின் மற்றொரு முகம் தெரியும் வரையில் தான்…
பனிரெண்டாவது முடித்து விட்டு விடுமுறையில் நண்பர்களோடு சந்தோஷமாய் விளையாடி கொண்டு இருந்தவனை புரட்டி போட்டது அந்நிகழ்வு… அவன் கண் முன்னே வளையாபதியை கைது செய்து இழுத்து போயினர்…
‘எதிர்கட்சியில் இருந்த முக்கிய நபரை யாரையோ கொன்று விட்டாராம்’ என்ற வதந்திகள் பரவியது… உண்மையில் மங்களமும் வாசுவும் தவித்து தான் போயினர்…
நேரில் பார்க்க போலீஸ் அனுமதி மறுத்த போதே இறந்தவர் பெரிய இடத்தை சேர்ந்தவர் என்பது புரிந்து போனது… சரியாக ஆறு மாதம் சிறை தண்டனை பெற்று மீண்டு வந்தார் வளையாபதி… ஆனால் பழைய வளையாபதியாக அல்ல…
வீட்டிற்கு வந்த வளையாபதி செய்த முதல் வேளையே வாசுவை தூக்கி சுற்றியது… என்னவோ மகன் என்றால் அத்தனை பிரியம்… இத்தனை மாதங்கள் பிரிந்து இருந்தது இதுவே முதல் முறை… வாசுவுக்கும் அந்த ஏக்கம் இருப்பினும்… உண்மையை அறியவே அவன் மனம் விரும்பியது…
“அப்பா எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க… நெஜமா நீங்க யாரையாச்சும் கொன்னுட்டீங்களா ப்பா…”
மகனையே பார்த்திருந்தவர்… “நீ என்ன நினைக்குற வாசு” என்று கேட்டிடா… அவனோ வேகமாக இல்லையென்பதாக தலையாட்டினான்.
அதை கண்டு சிரித்தவர்… “ஆமா வாசு… நான் யாரையும் கொல்லல” என்றதும் தான் அவன் மனம் நிம்மதி அடைந்தது… ஆனால் அதற்கு ஆயுசு குறைவு என்பது போலவே அடுத்தடுத்து அவர் பேச்சிய வார்த்தைகள் எல்லாம் அவன் மனதை ரணமாய் கீறியது…
“நான் யாரையும் கொல்லை வாசு… எனக்கான வாய்ப்பை நான் உருவாக்குனேன் அவ்ளோ தான்… தலைவர் பையன் போதையில் எதிர்க்கட்சி ஆளை அடிச்சிட்டான்… ஆளு போய் சேர்ந்திட்டான்… அவனுக்கு பதிலா தான் நான் ஜெயிலுக்கு போனேன்… இப்போ அதனால எனக்கு கட்சியில சீட்டும் கொடுப்பாங்க… அந்த பெரிய ஆளை அடிச்சிட்டேன்னு மக்களுக்கும் என் மேல கொஞ்சம் பயம் இருக்கும்… அந்த பயம் இருக்கனும்… அப்போ தான் நம்மையே நினைச்சுட்டு இருப்பாங்க… இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது…” என்றுவிட்டு அவர் சென்றுவிட அவன் அப்படியே நின்றுவிட்டான்…
தன்னை தோளில் சுமந்த தந்தை… தான் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்கும் தந்தை… கட்சி.. அரசியல்… பதவி… இதற்காக எதையும் செய்வார் என்பதை அவனால் ஜீரணிக்க இயலவில்லை…
முதலில் அமைதியாய் தன் எதிர்ப்பை காட்டியவன்… அடுத்து அடாவடியாய் காட்ட ஆரம்பித்தான்… அன்று ஆரம்பித்த மோதல் தான் இன்று வரை தந்தைக்கும் மகனுக்கும் நடையில் யுத்தமாகவே நடந்து கொண்டிருக்கிறது…
‘அப்பா… பிளிஸ்… எதையும் செஞ்சு வைக்காதிங்க… நான் அவ்ளோ தான் வந்துட்டேன்’ என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டவன் புல்லட்டை நிறுத்தியது என்னவோ அவன் வீட்டின் முன்பு தான்…
புயலென உள்ளே நுழைந்தவன் அங்கே என்ன நடக்க போகிறது என்பதை முன்னதாகவே யூகித்தது போன்று இனியாளுக்கும் வளையாபதிக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தான் வாசு…
இனியாளின் கண்களோ ரத்தமென சிவந்து இருக்க… பொங்கும் கண்ணீரை அடக்கியபடி அவனையே பார்த்துக் கொண்டு இருக்க… அவனின் பார்வையும் அவள் மீது தான்… இனியாளின் பின் அதிர்ந்த முகமாக நின்றிருந்த வெண்பாவின் பார்வையும் வாசு மீது தான்… அங்கு அதோடு காட்சி முடிய…
அடுத்த காட்சியாய் தன் வீட்டு சோஃபாவில் மீது கால் போட்டு அமர்ந்தபடி போன் பார்த்து கொண்டு இருந்த அர்ஜூனின் வீட்டில்…
“டேய் அர்ஜூன் என்னடா செய்ற… போன் பார்த்திட்டு இருக்கியா… இந்தா இந்த போட்டோவை யெல்லாம் பார… யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லு பேசி முடிச்சிடலாம்…” என்ற ஞான செல்வியை நிமிர்ந்து பார்த்தவன் தன் வேலையில் கவனமாக…
“இங்க பாருடா உன்கிட்ட தான் சொல்றேன்… எதாச்சும் பதில் சொல்றியா… அப்படி அந்த போனுல என்ன தான் இருக்கு” என்றபடி போனை பறித்திட… அதில் இனியாளின் போட்டோ ஒளிர்ந்து கொண்டிருந்தது…
“ஏன்டா டேய்… ஏன்டா உன் புத்தி இப்படியெல்லாம் போது… அவ தான் இப்ப வேற ஒருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா இல்ல… இன்னுமும் அவளையே ஏன்டா நினைச்சிட்டு இருக்க… உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…” என்று கத்த
“ஆமா… ஆமா எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு… எனக்கு அவ தான் வேணும்…” என்றபடி போனை போட்டு உடைக்க… சில்லு சில்லாய் நெருங்கிய திரையில் மின்னி மின்னி ஒளிர்ந்தது இனியாளின் முகம்…
தொடரும்…

Adei arjun nee seriyaradhuku vechi seiya poraan vasu
Wow story semaya poitu eruku antha arjun semaya namba vasu kaila vangaporan athuku aprumathu adankuvana santhegam than nejama story sema namba vasuvaiun iniyavaium sekirama sethu vainga ❤️❤️❤️❤️❤️❤️❤️