Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-26

அத்தியாயம் -26

என்னதான் வசீகரனை மிஸ் செய்தாலும் திரும்ப வீடு வந்து சேர்ந்ததும் அதிதிக்கு அப்பாடா என்றிருந்தது. ஒருநாள் நன்றாக தூங்கி எழுந்து அம்மாவிடம் நன்றாக செல்லம் கொஞ்சிவிட்டு மறுநாள் ஆஃபீஸுக்குப் போனாள்.

அன்று மார்னிங் மீட்டிங்கில் எல்லோரும் அதிதியை பாராட்டி கைதட்டி வரவேற்றனர்..



Advertisement

“கிரேட் ஜாப் அதி..” என்று விக்ரமும் பாராட்ட அவளுக்கு கால் தரையில் படவில்லை..

அப்புறம் தனியாக பார்த்தபோதும் அவன்

“ஆமா என்ன மாயம் பண்ண..!! சிவா அங்கிள் உன்னை அப்படி புகழ்றாரு..!!” என்று சொல்லவும் அதிதிக்கு அன்று முழுவதுமே சந்தோஷமாக இருந்தது.

Advertisement

அதன்பின் அவள் அன்றாட வேலையில் மூழ்கிவிட அந்த வாரம் அப்படியே கழிந்தது

Advertisement

சனிக்கிழமை காலையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருந்தவளின் மேலே வந்து விழுந்தாள் வர்ஷினி..

“ஏய் அத்து எந்திரிடி..”

அதிதி திடுக்கிட்டு கண்விழித்தவள் வர்ஷினியைப்பார்த்து முதலில் சந்தோஷத்தில் கண்ணை அகல விரித்து சந்தோஷத்தில் மலர்ந்தவள்.. சட்டென்று நினைவு வந்தவளாக முகம் சுருங்கிப்போனாள்.

Advertisement

ஆனால் தனது உற்சாகத்திற்கிடையில் அவளது முக மாறுதல் எதையும் கவனியாத வர்ஷினி..

“சீக்கிரம் கிளம்புடீ.. வெளிய போலாம்..” என்று  அவசரப்படுத்தினாள்.

“எங்க..?” என்று கேட்டபடி கட்டிலிலிருந்து எழுந்தாள் அதிதி..

“சர்ப்ரைஸ்..” என்று சஸ்பென்ஸ் வைத்தவள்.. அதிதியை விடாமல் விரட்டி ரெடி ஆகவைத்து தனது ஸ்கூட்டியில் கூட்டிக்கொண்டு கிளம்பினாள்..

அவள் வண்டியை நிறுத்திய இடம் அவர்கள் அடிக்கடி போகும் பிட்சா கடை, பள்ளியில் படிக்கும் காலத்திலெல்லாம் நண்பர்கள் கூடும் இடம் அதுதான். ஆளுக்கு ஒரு ஸ்மால் பிட்சாவை வாங்கிவைத்துக்கொண்டு மணிக்கணக்காக அரட்டை கச்சேரி நடத்துவர்.

அந்த நேரத்தில் கூட்டம் பெரிதாக இல்லாமல் காலியாக இருந்தது. படி ஏறி மேல் தளத்தில் அவர்களது ஃபேவரிட் இடத்திற்கு போனாள் வர்ஷினி.. அங்கே ஏற்கனவே விஷால் இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

இவர்களைப்பார்த்ததும் சிரித்து கையாட்டினான்..

“ஹாய் அதி..எப்படி இருக்க.?” என்றான் சிரித்தமுகமாக

“ஃபைன்..” என்றபடி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள் அதிதி.. அவன் அருகில் அமர்ந்த வர்ஷினி

“வந்து நேரமாச்சா..?” என்று விசாரிக்க

“ஜஸ்ட் இப்பதான் வந்தேன் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி..” என்றான் கடுப்பைமறைத்த குரலில்.

அவர்கள் பேச்சில் நாட்டம் இல்லாமல் வேறு யாரோப்போல் அமர்ந்திருந்த அதிதி

“இதான் நீ சொன்ன சர்ப்ரைஸ் ஆ?” என்றாள் வர்ஷினியிடம்..

“இவனைப்போய் யார் சர்ப்ரைஸ்ன்னு சொல்லுவா.. அதில்லை..” என்று விஷாலை சீண்டவும்

அவன் முறைத்துவிட்டு

“கூப்ட்டுவச்சி அவமானப்படுத்துறியா..” என்றபடி எழ

“ஏய் உக்காருடா..” என்று அவன் கையைப்பிடித்து இழுத்து அமரவைத்தாள்.

இந்த நாடகத்தை எல்லாம் அசுவாரசியமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அதிதி.

அவள் மனம் ஆறவே இல்லை வர்ஷினியும் விஷாலும் சேர்ந்து இவ்வளவு பெரிய விஷத்தை மறைத்து அவள் வாழ்க்கையில் விளையாடியதை அவளால் மன்னிக்கவே முடியவில்லை.. ஆனால் அந்தப் பேச்சை எப்படி எடுப்பது என்றும் தெரியாமல் மனதிற்குள் உளன்று கொண்டிருந்தாள்.

“அதி..எப்படியோ இவனுக்கு ஒரு வழியா தைரியம் வந்து என்கிட்ட கன்ஃபெஸ் பண்ணிட்டாண்டி..” என்றாள் வர்ஷினி.

விஷால் வர்ஷினியை விரும்புவது அவர்கள் எல்லோருக்குமே தெரிந்த ரகசியம்தான்.. ஆனால் வர்ஷினி இல்லை என்று சொல்லிவிட்டால் தங்களது நட்பு விட்டுப்போகுமோ என்ற பயத்தில் இத்தனை நாள் அவன் தனது காதலை வெளிப்படுத்தாமல் இருந்தான்.

அதிதிக்கு தெரியும் வர்ஷினியும் அவனை விரும்புகிறாள் என்று ஆனால் அதை ஒப்புக்கொள்ளாமல், அவனாக வந்து சொன்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று இவ்வளவு நாளும் அவள் அவனை அலையவிட்டிருந்தாள்.

ஒரு வழியாக இருவரும் தங்கள் கண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்திக்கொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்தி கொண்டுவிட்டனர்.

“வீ ஆர் அஃபீஷியலி கப்புள்ஸ் நவ்..” எனும் போது வர்ஷினிக்கு கன்னம் லேசாக சிவந்திருந்தது..

என்ன இருந்தாலும் அவர்கள் அவளது உயிர் நண்பர்கள் இல்லையா.. அதிதிக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது

“கங்கிராட்ஸ் கைஸ் ஐயம் ரியலி ஹேப்பி ஃபார் யூ போத்..” என்று மனமாற வாழ்த்தினாள்.

“உன்கிட்டதான் மொதல்ல சொல்லனும்..அதுவும் ரெண்டு பேரும் சேர்ந்து நேர்லதான் சொல்லனும்னு மேடம் ஆர்டர் போட்டுட்டாங்க..” என்றான் விஷால் சிரித்தபடி

“ஆமா..அதிதான் என்னோட பெஸ்ட்ஃப்ரண்ட் அவளுக்குதான் நான் மொதல்ல சொல்லுவேன்..ம்ம்” என்று தலையை சிலுப்பினாள்.

“ஆமா என்கிட்ட எதையும் மறைக்காம எல்லாமே சொல்லிடுவ இல்ல வர்ஷ் ..” என்று சற்று ஏளனமாக வினவ, அவள் தொனியில் தெரிந்த வித்தியாசத்தை இருவரும் கவனித்திருக்கவில்லை.

“அப்பா.. என்ன கொஞ்ச நஞ்ச படாபடுத்துனா..? வேற ஒருத்தனா இருந்தா எப்பவோ ஓடிப்போயிருப்பான்.. நான் கன் பாடிங்கறதால இவ்ளோ நாள் தாக்குப்பிடிச்சேன்..” என்றான் விஷால்.

“ஆமா பெரிய கன் பாடி.. காலேஜ்லயே சொல்லுவான்னு எதிர்பார்த்தேன்.. இவ்ளோ வருஷம் இழுத்தடிச்சி இப்பதான் சொல்றான் இதுக்கு சீன் வேற..”

என்று அவனை கலாய்த்தாள்.

“ஆமா ஒருநாள் சிரிப்பா.. சரி சொல்லிடலாம்ன்னு தைரியத்தை வரவழச்சிட்டு பக்கத்துல போனா உடனே மொறைப்பா.. அப்புறம் எங்க சொல்றது..? இவ முன்னாடி விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸிலாம் தெய்வம்..” என்றான் விஷால் பாவனையுடன்..

“ஆமா இவன் இதயம் முரளியவிட மோசமா இருந்துட்டு என்னை சொல்லவந்துட்டான்..” என்று அவளும் திருப்பித்தர..

அதிதி அவர்களை வேடிக்கைப்பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.

இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும் அதைத்தாண்டி நட்பும் புரிதலும் அதிகமாக இருந்தது. அதுவே அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய வரமாக இருக்கும் என்று தோன்றியது.

இப்படி சிரித்தமுகமாய் இருப்பவர்களை கஷ்டப்படுத்தவும் பிடிக்காமல், சகஜமாக பேசவும் முடியாமல் அதிதி மனதிற்குள் போராடிக்கொண்டிருந்தாள்.

அப்போதுதான் முதன் முதலில் அதிதியின் அதிகபடியான அமைதியை கவனித்த வர்ஷினி..

“ஏய் என்னடி.. ஒரு மாதிரி இருக்க.. எதாவது பிரச்சனையா..? என்று கேட்டவள் திடுமென நினைவு வர

“ஆமா எங்கம்மா உன்னை ஒரு பையனோட சூப்பர் மார்க்கெட்ல பார்த்ததா சொன்னாங்க.. அதுவும் அவ்ளோ அழகா இருந்தான்னு வர்ணனை வேற.. யாருடி அது..?” என்றாள் புருவம் உயர்த்தி ஆர்வமாக

அவளையே பார்த்திருந்தவள்

“வசீகரன்..” என்றாள்  நிதானமாக..

இருவரும் ஒருகணம் திகைத்துப்போயினர்..

“வசீகரன்னா.. நம்ம காலேஜ் சீனியரா..?” என்று கேட்டாள் வர்ஷினி.

“ஆமா..”

“என்னடி சொல்ற அவன நீ எங்க மீட் பண்ண..?”என்று கேட்டாள் நம்பமுடியாத ஆச்சரியத்துடன்

அவளது கம்பெனியில் வசீகரனைப்பார்த்தது முதல் அவன் வீடு வந்த கதை வரை சுருக்கமாக சொன்னாள் அதிதி.

“என்னால நம்பவே முடியல.. இவ்ளோ நடந்திருக்கு..நீ  மூச்சுகூடவிடல.. என்கிட்ட சொல்லனும்ன்னு தோனவே இல்லைல்ல உனக்கு..” என்றாள் வர்ஷினி குற்றம் சாட்டும் குரலில்..

“ஏன் ஒரு விஷயத்தை சொல்லாம மறைக்கிற உரிமை உனக்குமட்டும்தான் இருக்கா வர்ஷினி..?” என்றாள் அதிதி சற்று கடுமையாக

வர்ஷினி திகைத்தாள் அதிதி அவளை வர்ஷினி என்று அழைத்ததே இல்லை எனலாம் முதன் முதலில் யாரோப்போல தள்ளி நிறுத்துவது போல அவளைப் பேசியதை அவளால் தாங்கமுடிவில்லை..

“என்ன பேசுற அதி..?” என்றாள் அடிபட்ட குரலில்..

“வசீகரன் உனக்கு ஃபோன் பண்ண விஷயத்தை என்கிட்ட சொல்லாம ஏன் மறைச்ச விஷால்..?”என்று அவனைப்பார்த்து கேட்டாள்.

விஷால் பதில் சொல்லமுடியாமல் திணறவும்.

“நான்தான் சொல்லவேண்டாம்னு சொன்னேன்.. இதுல இவன் தப்பு ஒன்னும் இல்ல.. எது கேக்கறதா இருந்தாலும் என்னை கேளு..” என்றாள் வர்ஷினி.

“எப்படி முடிஞ்சது வர்ஷ் உன்னால..? நான் அவன எவ்ளோ லவ் பண்ணேன்னு உனக்குத் தெரியாதா..?.” என்றாள் குரலில் ஆதங்க வலியுடன்..

“நீ அவன லவ் பண்ணதும் தெரியும் அதனால நீ பட்ட கஷ்டமும் எனக்குத் தெரியும்.. அதனால தான் நான் மறைச்சேன்.. அவனோட லவ்வர் வந்து எப்படி பேசினா அதெல்லாம் மறந்துடுச்சா உனக்கு..? அப்படிபட்ட ஒருத்தன் கூட உன்னை நான் எப்படி பேச விட முடியும் ?” என்றாள் வர்ஷினி கோபத்துடன்

“அய்யோ அது அவன் லவ்வரே இல்லை..” என்று பொறுமையிழந்து கத்தினாள் அதிதி.

“உனக்கு எப்படி தெரியும்..?அவன் சொன்னானா?” என்றாள் ஏளனத்துடன்.

“அந்த வைஷாலி தான் சொன்னா..?”

“இது எப்போ?”

“காலேஜ் அலுமினி மீட்டுக்கு போயிருந்தேன் அப்போதான் அவளைப்பார்த்தேன்.”

அன்று வைஷாலியைப் பார்த்தது அவள் இவளிடம் பேசிய விவரம் என்று எல்லாம் சொன்னாள் அதிதி.

“இந்த உண்மையை சொல்லத்தான் வசி எனக்கு கால் பண்ணியிருக்காரு.. ஆனா நான் அவருகிட்ட பேச விருப்பம் இல்லாம அவர் நம்பரை பிளாக் பண்ணிட்டதா நீங்க சொல்லியிருக்கீங்க.. என்கிட்டயும் சொல்லாம மறைச்சிருக்கீங்க..எனக்கான முடிவுகளை எனக்கு எடுக்கத்தெரியாதா..? நீங்க ஏன் எடுத்தீங்க..?” என்று குற்றம் சாட்டினாள் அதிதி

“அப்ப உனக்கான எல்லா முடிவுகளையும் நான்தான் எடுத்தேன் அதி. உன்னோட முடிவுக்கு விட்டிருந்தா நீ ஹாஸ்ட்டல் ரூமை விட்டு வெளியவே வந்திருக்க மாட்ட.. அப்புறம் நீ சொல்ற இந்த ஃபேக் ரிலேஷன்ஷிப் கதையெல்லாம்  அப்ப எங்களுக்கு எப்படி தெரியும் அதி..?அப்போ நீ எப்படி இருந்தன்னு நீ மறந்திருக்கலாம் நான் மறக்கமுடியமா..?ராத்திரி பகல்ன்னு பார்க்காம  எந்த நிமிஷம் நீ என்ன பண்ணிக்குவியோன்னு பயந்து பயந்து காவல் காத்ததெல்லாம் எனக்கு எப்படி மறக்கும்? எனக்கு தெரியாதுன்னு நெனைச்சியா நீ டெய்லி அழுதது..? ஆனா அப்போ அவன்கிட்ட இருந்து நீ விலகி இருக்கறதுதான் சரின்னு நான் உறுதியா நம்பினேன். ஏன்னா இன்னொரு ஹார்ட் ப்ரேக்க உன்னால தாங்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.. நான் உன்னை ப்ரொடெக்ட் பண்ணனும்னுதான் நெனைச்சேன் அதி.. உனக்குதுரோகம் பண்ண கனவுலயும் நான் நெனைக்கலை என்னைப்போய் இப்படி சொல்லிட்டியே..” என்றவள் கண்களில் கடகடவென்று கண்ணீர் வந்தது.

“அழாத வர்ஷ்..” என்று அவளைத் தேற்றியவன்

“வர்ஷினிக்கு சப்போர்ட் பண்றதா நினைக்காத அதி.. ஆனா அப்ப நீ தெளிவா முடிவெடுக்கற நிலைமையில இல்ல.. உன்கிட்ட தைரியமா கமிச்சிகிட்டாலும் வர்ஷினி உன்னை நினைச்சி எவ்ளோ உடைஞ்சிப்போனான்னு எனக்கு தெரியும்..தயவு செஞ்சி அவ லாயல்டிய சந்தேகப்படாத..” என்றான் விஷால்.

அதிதிக்கும் தெரியும்தானே அவள் அப்போது எந்த நிலையில் இருந்தாள் என்று

“சரி அப்ப சொல்லலைன்னாலும் இவ்ளோ வருஷத்துல எப்பவாது சொல்லியிருக்கலாமே..” என்றாள் ஆதங்கத்தை அடக்கமுடியாமல்

“சொல்லி என்ன பிரயோஜனம் அதி.. நீயே மறந்த ஒரு விஷயத்தை உனக்கு திரும்ப எதுக்கு நான் நியாபகப்படுத்தனும்..? நீ இப்போ நல்லா இருக்க அது போதும்ன்னுதான் நான் நினைச்சேன்.. உன்கிட்ட அந்த விஷயத்தை சொல்லனும்ன்னு எனக்குத் தோணல அதி…”

அப்போதும் அதிதியின் முகம் இளகாததைப் பார்த்த வர்ஷினி..

“நான் என்ன சொன்னாலும் நீ சமாதானம் ஆகமாட்ட அப்படிதானே.. சரி சொல்லு என்னோட நிலைமைல நீ இருந்திருந்தா என்ன பண்ணியிருப்ப..? சொல்லு..? கொஞ்சம் தேறி வந்த ஃப்ரண்ட்ட திரும்ப அந்த சுழல்ல சிக்கவிடுவியா..?” என்று கேட்டாள்.

அதிதி பதிலில்லாமல் வாயடைத்துப்போனாள்.. அவளால் உறுதியாக தான் என்ன முடிவு எடுத்திருப்போம் என்று சொல்ல முடியவில்லை..

டேபிளின் மேல் இருந்த அவள் கையை ஆறுதலாகப்பற்றிய வர்ஷினி..

“இப்பவும் நான் செஞ்சது தப்பா எனக்குத் தோணலை அதி.. சொல்லப்போனா அப்போ உனக்கு தெரியாம இருந்ததே நல்லதுன்னுதான் எனக்கு தோணுது.. அப்ப உனக்கிருந்த  மெச்சூரிட்டி லெவல்க்கு இந்த ரிலேஷன்ஷிப் எவ்ளோ தூரம் செட் ஆகி இருக்கும்னு தெரியல.. வசீகரனும் அப்போ என்னமோ குழப்பத்துல இருந்த மாதிரிதான் தெரிஞ்சது.. நீங்க இப்ப மீட் பண்ணதுதான் ரொம்ப நல்லது. யு ஆர் மெண்ட் டு பீ அதனாலதான் யுனிவர்ஸ் உங்கள திரும்ப சேர்த்து வச்சிருக்கு.. ஐயம் ரியலி ஹேப்பி ஃபார் யூ..” என்று எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்து தோளோடு அணைத்துக்கொண்டாள்.

அப்போதும் அதிதி சமாதானம் ஆகாததைக்கண்டு

“ஏய் சாரி டி..என்னை வேணா நாலு அடி கூட அடிச்சிக்கோ ப்ளீஸ் என்னை வெறுத்துடாத என்னால தாங்க முடியாது..” என்றாள் கவலையாக

“உன்ன யாரு இப்ப வெறுக்கறேன்னு சொன்னா..?” என்று கோபமாகக் கேட்டவள்

“சரி இது உங்களோட ஸ்பெஷல் டே நான் அதை கெடுக்கவிரும்பலை.. எப்படியோ ரெண்டு பேருக்கும் இப்பவாது புத்தி வந்ததே..” என்று இலகுவாக பேசவும் தான் வர்ஷினி ஆறுதல் பெருமூச்சு விட்டாள்..

“ஆனா செமல்ல..இப்ப உனக்கும் ஆள் இருக்கு…நெக்ஸ்ட் டைம் நாம டபுள் டேட் போலாம்..” என்றாள் வர்ஷினி உற்சாகமாக..

“அதுக்கு மொதல்ல அவன் என்கிட்ட கன்ஃபெஸ் பண்ணனுமே..” என்றாள் அதிதி பெருமூச்சுடன்

“என்னது இன்னும் பண்ணலையா .. ஏண்டீ அவன் கன்ஃபெஸ் பண்ணாமதான் அவன் வீட்டுக்குப்போய் தங்குனியா.?” என்றாள் ஆச்சரியமாக

“நான்தான் சொன்னேனே வேலை விஷயமாதான் போயிருந்தேன்னு..”

“இங்க பாரு.. அவங்களா வந்து கன்ஃபெஸ் பண்ணுவாங்கன்னு உக்காந்திருந்தா என்னை மாதிரி வருஷக் கணக்கா காத்திருக்க வேண்டியதுதான்.. டார்ச்சர் பண்ணியாவது கன்ஃபெஸ் பண்ணவெச்சிடனும்.. இல்லைன்னா இந்த மரமண்டைகளுக்கு அது புரியவே புரியாது..” என்றாள் வர்ஷினி விஷாலை குறிப்பாகப்பார்த்து..

“ஹே அதி.. இந்த சைக்கோ சொல்றதெல்லாம் கேக்காத.. அது என்ன ஆம்பளைங்கதான் லவ்வ சொல்லனுமா..? ஏன் எல்லாத்துலையும் சம உரிமைன்னு பேசுறீங்களே இதுலயும் உங்க உரிமைய எடுத்துகிட்டு நீங்க கன்ஃபெஸ் பண்ணவேண்டியதுதானே..” என்று வாதாடினான் விஷால்..

“அதெல்லாம் முடியாது போடா.. நீங்கதான் சொல்லனும்.. அப்போ கெடைக்குற ஃபீல் இருக்கே.. அதை சும்மா இந்த சமஉரிமைன்னு சொல்லி பெண்ணியம் பேசி இழக்கமாட்டோம்.. நீ அவன் பேச்சையெல்லாம் காதுல வாங்கிக்காத அதி.. உன் வசீகரன் லவ் கன்ஃபெஸ் பண்ற வரைக்கும் விடாத.. கதறவிடு..” என்று அவளை ஏற்றிவிடுவதையும் அதை கருத்தாகக் கேட்டுக்கொண்டிருந்த அதிதியையும் பார்த்து

“இந்த சாத்தான் வேற ஓத ஆரம்பிச்சிட்டாளே..இனிமே அந்த வசீகரன் நிலைமை என்ன ஆகுமோ..அந்த  கடவுள்தான் காப்பத்தனும்..” என்று மேலே பார்த்து வேண்டிக்கொண்டான் விஷால்.

அதிதி வர்ஷினி சொன்னபடி வசீகரனிடம் சரியாக பேசாமல் அவனைத் தவிக்கவிட்டாள்.

ஆனால் அதே சமயம் இவள் அவனைத் தவிர்ப்பதை பார்த்து ஏனென்றே தெரியாமல் அவன் குழம்புவதைப்பார்க்கவும் அவளுக்கு பாவமாக இருந்தது.

“ஹே வர்ஷ் பாவம்டி வசி.. நான் ஏன் இப்படி அவாய்ட் பண்றேன்னு தெரியாம முழிக்கறத பார்த்தா கஷ்டமா இருக்குடீ..” என்றாள்.

“ஹே நா உன்கிட்ட என்ன சொன்னேன்..பீ டஃப்.. உனக்கு அது ஏற்கனவே ரொம்ப கஷ்டம், உன்னைப்பத்தி தான் எனக்குத் தெரியுமே.. அவனைப்பார்த்தாலே அப்படியே உருகிடுவ.. இங்க பாரு நீ இப்ப ஸ்ட்ராங்கா இருந்தாதான் சீக்கிரம் அவன் லவ்வ சொல்லுவான்.. இல்லாட்டி இப்ப இருக்கறதே போதும்னு அதுலயே கம்ஃபர்டபிள் ஆகிடுவான்..அப்புறம் நீ கடைசி வரைக்கும் அவன் உன்னை லவ் பண்றானா இல்லையான்னு யோசிச்சி யோசிச்சி மூளை குழம்பிகிட்டு இருக்கனும். அனுபவப்பட்டவ சொல்றேன் கேளு..” என்றாள்.

“அவன்மட்டும் இல்லடி.. நானும்தான் அவன மிஸ் பண்றேன்.. அவனோட பேசனும் போல இருக்கு தெரியுமா..? என்று குறைபட்டாள்..

“இங்க பாரு இவ்ளோ நாள் தாக்குபிடிச்சிட்ட இன்னும் கொஞ்சம்தான் இப்ப விட்டுடாத..” என்று எச்சரித்தாள் வர்ஷினி.

நான்கு நாட்கள் ஆகிவிட்டது அதிதி அவனிடம் சரியாக பேசி.. ஃபோன் செய்தால் எடுப்பதில்லை..அப்படியே எடுத்தாலும் வேலை விஷயம் தவிர வேறு எதையும் பேசுவதில்லை..என்ன பிரச்சனை என்று கேட்டாலும் சரியாக பதில் சொல்லுவதில்லை.. அவளின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று அறியாமல் மண்டை காய்ந்தான் வசீகரன்..

நான்கு நாட்கள் பொறுத்தவன் அதற்கு மேல் முடியாமல் கிளம்பிவிட்டான்.

வசீகரனை ஆஃபீசில் பார்த்ததும் அதிதியின் மனம் துள்ளியது ஆனாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடித்தாள்.

நேராக அவள் இடத்திற்கு சென்று

“மிஸ் அதிதி உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.. வேலை விஷயமா..” என்று அழுத்தத்துடன் கூற.. அதற்குமேல் அவனைத் தவிர்க்க முடியாமல் போக.

“யெஸ் சார்..” என்றாள்.

“மீட்டிங் ரூம்ல பேசலாம்..” என்றவன் அவளது பதிலுக்கு காத்திராமல் வேக நடையுடன் சென்றுவிட்டான்.

அவள் சற்று பொறுத்து மீட்டிங் அறைக்கு சென்றாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் அவளை இழுத்து சுவருக்கும் அவனுக்குமிடையே சிறைபிடித்து நிறுத்தினான்.

அவள் அதிரிச்சியடைந்து கண்களை அகலவிரித்து அவனை ஏறிட்டுப்பார்க்க.

“என்னடி உன் பிரச்சனை….?” என்றான் சீற்றத்துடன்..

“என்ன பண்றீங்க.. இது ஆஃபீஸ்..” என்று அவன் மார்பில் கைவைத்து தள்ளமுயன்றாள், அவன் அசையாமல் பறையாக நிற்க அது வீண் முயற்சியாகிப்போனது..

தள்ள முயன்ற கைகள் அங்கேயே நின்றுவிட.

“என்ன விடுங்க..” என்று கோபமாக சொல்ல முயன்ற குரல் அவள் காதுகளுக்கே சிணுங்கலாகத்தான் ஒலித்தது.

அந்த குரலில் சட்டென்று இளகியவன் ஒரு கையால் அவள் இடையை சுற்றி வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அவளுடன் சேர்ந்து சுவரில் சாய்ந்து அவளை எங்கும் நகரமுடியாத படி செய்தான்.. வலது கையை உயர்த்தி அவள் கண்களை மறைத்து விழுந்த மயிற்கற்றையை மென்மையாக அவள் காதின் பின்னால் சொருக.

அந்த மென்மையாக ஸ்பரிசத்தில் தன்னை இழந்தவள் அப்படியே கண்ணைமூடி மயங்கிப்போனாள்..

குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு

“பேபி..” என்றான் கிசுகிசுப்பாக

அவள் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது..

அவள் மூடிய கண்களில் ஒன்றன் பின் ஒன்றாக முத்தமிட்டவன்

“என்னாச்சிடா..” எனவும்

அதுவரை அவன் மந்திரத்தில் கட்டுண்டிருந்தவள் விழிகள் பட்டென்று திறக்க..

“விடுங்க என்னை..” என்று தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள்..

ஆனால் அவன் பிடி தளர்வதாக இல்லை..

“உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லாம நான் விட மாட்டேன்..” என்றான் பிடிவாதமாக.

அதிதி செய்வதறியாமல் விழிக்க..

“சொல்லு..என்னை எதுக்கு அவாய்ட் பண்ற..?” என்றான்

“நான் யாரு உங்கள அவாய்ட் பண்ண..”

“நீ யாரா..? நீ என் கிட்டி..”

“அவ்ளோதானா ..?”

“வேற என்ன..?”

“ச்சு..”

“ஹேய் உனக்கு எதாவது வேனும்ன்னா வாய திறந்து கேளு..நான் எதாவது தப்பு பண்ணியிருந்தா நேரடியா சொல்லு அப்பதானே எனக்குத் தெரியும் அதைவிட்டு இப்படி பேசாம சைலண்ட் டிரீட்மெண்ட் குடுத்தா என்ன அர்த்தம்..?” என்று கடிந்தான்.

‘ஆமாம் பேசறதெல்லாம் மட்டும் வக்கனையா பேசுவான்.. ஆனா ஐ லவ் யூ மட்டும் சொல்லமாட்டான்’ என்று மனதிற்குள் திட்டியவள்…

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல விடுங்க.” என்றாள் எங்கோ பார்த்தபடி

“ஏய் சாவடிக்காதடீ..” என்றான் அவன் பொறுமையிழந்த குரலில்..

“நான் பேசலைன்னா உங்களுக்கு ஏன் அவ்ளோ கஷ்டமா இருக்கு..?” என்று கேட்டாள் அவனை நேராகப்பார்த்து..

“ஏன்னா..” என்று வேகமாகத் தொடங்கியவன் அவள் ஆர்வமே உருவாக அவனையே விழிவிரித்துப் பார்த்திருப்பதைக்கண்டு.. என்ன என்று யோசித்து சற்றுத் தயங்கினான்.

‘ஓ மேடம்.. அந்த மூனு மேஜிக்கல் வேர்டை நம்மகிட்ட இருந்து எதிர்பார்க்கறாங்க போல.’ என்று சரியாக கணித்துவிட்டவன்..

அவளிடம் விளையாடிப்பார்க்க முடிவெடுத்தான்.

“ஏன்னா நீ என் ஃப்ரண்டு..” என்றான் சிரிப்பை அடக்கியபடி..

அவனை எரித்துவிடுவதுபோல் முறைத்தவள்..

“நான் உங்களுக்கு ஃப்ரண்டா?” என்றாள் கொதிப்புடன்.

“அப்போ வேற யாரு..?” என்று அவன் திருப்பிக் கேட்க

இப்போது பதில் சொல்வது அவள் முறையாகிவிட.. அப்போதுதான் அவளை வேண்டுமென்றே சீண்டியிருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு..

“விடுங்க.. உங்க ஃப்ரண்டை இப்படித்தான் கட்டிப்பிடிச்சிட்டு நிப்பீங்களா..” என்று எரிச்சலாக கேட்டவாறு அவன் பிடியிலிருந்து வெளியேற முயன்றாள்.

“கட்டிப்பிடிக்கறது மட்டும் இல்ல கிஸ் கூட பண்ணுவேன்..” என்று அவள் இதழ்களை நோக்கி குனிய..

“ஊப்ஸ்… சாரி..” என்ற குரலில் இருவரும் துள்ளிக்கொண்டு விலகினர்..

மீட்டிங் ரூமுக்குள் வந்துவிட்ட பவித்ரா இவர்கள் இருந்த நிலையைப்பார்த்த அதிர்ச்சியில் சட்டென்று திரும்பிப்போயிருந்தாள்..

அதிதி கலவர முகத்துடன் அவள் முதுகை வெறித்தாள்.

“எல்லாம் உங்களால தான் .. உங்கள யாரு இங்க வர சொன்னா.. இப்ப பாருங்க பவித்ரா மேம் பார்த்துட்டாங்க.. போச்சி என் மானமே போச்சி.. என்னைப்பத்தி என்ன நினைப்பங்க.. அதைவிட மோசம் க்ளைய்ண்ட் கிட்ட வரம்பு மீறி பழகறேன்னு என்னைப்பத்தி மட்டமா நினைக்கப் போறாங்க…” என்று விடாமல் புலம்ப..

“ஹேய் கிட்டி.. இங்க பாரு அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க..” என்று அவளை சமாதானப்படுத்தவென்று மீண்டும் அவள் அருகில் வர..

“கிட்ட வராதீங்க… மொதல்ல வெளிய போங்க..” என்று எரிந்து விழுந்தாள்..

இப்போது சரியான தருணம் இல்லை என்பதை உணர்ந்தவன்.. கடைசியாக அவள் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

அதிதி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பவித்ராவைத் தேடிப்போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!