சின்னஞ் சிறு பூவே
பூவே 2
Advertisement
அந்த செவ்வக வடிவில் இருந்த வாசலில், இருபத்தோர் புள்ளி வைத்து தாமரை கோலத்தை ஒரு புள்ளியில் இருந்து இன்னோரு புள்ளிக்கு இணைத்துக்கொண்டியிந்தவளின் கைகள்.
Advertisement
Advertisement
லாவகமாக , வளைவு சுழிவுகளை இழுத்துக்கொண்டிருந்தாள். கடைசி தாமரை பூவுக்கும் இலைகளின் வடிவத்தை கொடுத்தே! எழுந்து நின்று கோலத்தை பார்த்தவளுக்கு. இரு கண்கள் போதவில்லை, அந்த வீட்டில் அவளுக்கு பிடித்த இரண்டே இடம். ஒன்று அவள் தங்கியிருக்கும் அறை மற்றொன்று இந்த வாசல்.
கத்திரிபூ கலரில் பாவாடை , சட்டை அணிந்திருந்தவள் முகம் சிறு புன்னகையை கொண்டிருந்தாள் வேல்விழி..
Advertisement
“அட.. அட கோலம் போடுறதுல எம்பேத்தியை அடிச்சிக்க இந்த ஊர்லையே ஆள் இல்லை போ”! என்று கொள்ளுப்பேத்திக்கு. திண்ணையில் அமர்ந்தபடி புகழாரம் சூட்டிக்கொண்டிருந்தார் மயிலம்மா அந்த வீட்டின் ஆணி வேர்.
“க்கும். கண்ணு ஒழுங்கா தெரியலன்னா சொல்லுங்கத்தை , கண்ணாஸ்பத்திரி போய் பாப்போம். அதைவிட்டு நாலு கம்பியை இழுத்து வச்சியிருக்கா, இதை போய் கோலம்னு சொல்லுறீங்க” என்று சொல்லியபடி பின்கட்டிலிருந்து வந்து நின்றார் காளியம்மா.
மயில்லம்மாவின் மூத்த மருமகளும், வெற்றிவேந்தனின் அன்னையும் அவரே!.
“க்கும், ஆட தெரியாதவ! தெரு கோணலுன்னு சொன்னாலாம். எம்பேத்தி மாதிரி உன்னால கோலம் போட முடியுமாடியாத்தா, வயசு நாப்த்தஞ்சிக்கே குனிஞ்சா நிமிர முடியல, உட்கார்ந்தா எழுந்துக்க முடியலன்னு ஆயிரத்தெட்டு பாட்டு பாடுறவ. இதுல இவ வந்துட்டா கோலத்தை பத்தி பேசுறதுக்கு” தான் உனக்கு மாமியாராக்கும் என்று பேச்சிலே ஒரு குட்டு வைத்தார்..
“ஆமா, அவளை ஒன்னு சொல்லிட கூடாதே! வரிஞ்சிக்கட்டிட்டு வந்துடுங்க.. நீ என்னடி பொழுதன்னைக்கும் வாசல்லே தவம்கிடக்க போறீயா, போய் ஆகுற வேலையை பாருடி, பொழுது விடிஞ்சி சூரியன் உச்சிக்கு வந்துடுவான். இன்னும் வேலையான பாட்டை தான் காணோம்னு” எனக் சத்தமாக சொல்லிக்கொண்டு அடுப்பங்கறைக்கு சென்றார்..
“நீ, போத்தா உனக்கும் பள்ளிக்கொடம் போகனுமில்லை” என்று பேத்தியின் முகத்தை தடவி சொன்னதும்.
“சரி பாட்டி” என்று சிட்டாக உள்ளே பறந்தாள்.
உள்ளே போகும் பேத்தியை பார்த்தவர் கண்கள் கலங்கியது. மனது பிசைவது போலிருக்க. மெல்ல திண்ணையிலிருந்து எழுந்தவர் தன் ஊன்றுகோலை பிடித்தபடி வயல்பக்கம் பார்த்து நடந்தார்..
பின்கட்டு வந்தவள். ‘ மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்ய தொடங்கினாள். சாணியை மொத்தமும் மூங்கில் கூடையில் நிரப்பி சற்று தூரமிருக்கும் காலி இடத்தில் கொண்டு போய் கொட்டிட்டு வந்து . அந்த இடம் முழுவதும் சுத்தம் செய்து. ஒரு கூடை சாணியை இடுப்பில் தூக்கமுடியாமல் தூக்கி வந்தவள். சாணியை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதை உமியில் இன்னொரு தடவை உருட்டி அந்த குட்டி சுவற்றில் வட்ட வட்டமாக தட்டினாள். நேற்று தட்டியிருந்த வரட்டிகளை வெயில் படும் இடமாக பார்த்து கயப்போட்டாள்.
கைகளை முழங்கை வரை சோப்புப்போட்டு கைழுவி நிமிர்ந்தவள் உடல் முழுவதும் வியர்வை துளிகள் அங்கங்கே! தெரிந்தது..
“என்னாத்துக்குடி, இடுப்பு புடிச்சிட்டு நிக்குறவ” என்று கையில முறத்துடன் வந்தார் காளியம்மா.
‘சட்டென்று இடுப்பிலிருந்து கை எடுத்தவள்’ அமைதியாக நின்றாள்.
“இன்னும் என்னாத்துக்கு நிக்குறவ , போய் கிணத்துல தண்ணீ எடுத்துட்டுவா! சீக்கிரம் கொழா தண்ணீ வரதுக்குள்ள. வந்து சேரு அப்புறம் பள்ளிகொடம் நேரமாச்சுன்னு ஓடிபோவ” என்று அரிசியை புடைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி உறவிட்டபடி சொல்லிக்கொண்டிருந்தார்.
அமைதியாக அவர் சொன்னதை மொத்தத்தையும் கேட்டவள். நாலு கொடமும் கூடவே தண்ணி எடுக்க கயிறும், ரட்டினத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு , தெருவில் வரவும்.
“அடியே! இப்ப எழுந்து வரல சாணியை கரைச்சி தலையிலே கொட்ட போறேன்டி” என்று வரட்டு வரட்டு எனக் வாசலைபெறுக்கியடி கத்திக்கொண்டிருந்தது எதிர்வீடு.
‘இவளுக்கு சிரிப்பு வந்தது. ஏன்னா! திட்டு விழறது அவளது கூட்டாளிக்கு’ என்ற கூதுகலத்துடன் நடந்தவள்..
அடுத்த வீட்டை கடக்கும் போது ,
“நல்லா, பொண்ணை வளர்த்து கட்டிக்கொடுத்தா. என் அண்ணிக்காரி இன்னும் இழுத்துப்போர்த்திட்டு தூங்குறா! இவளை கட்டி வந்து நான் , ராணி மாதிரி இருக்கலாம்னு கானா கண்டா.. இவளுக்கு நான் வேலைக்காரி மாதிரி வேலை செய்யுறேன்னு” அடுத்த ரெண்டு வீடு தள்ளி சத்தம் போட்டார் சரளா.
“ஏன்! அத்தை உனக்கே இது சரியாபடுதோ! புது பொண்ணு கொஞ்சம் அப்படி, இப்படி தான் இருக்கும்.. கொய்ந்தன் என்னேரத்துக்கு தூங்க விட்டாங்களோ! ஒரு நாள் வேலை செய்யுறதுல ரொம்ப தான் சடைச்சிக்கிற போவியா! காலையிலே சத்தத்தை கூட்டி நான் மாமியாராக்கும்னு ஊருக்கு தம்பட்டம் அடிப்பியோ!” என்றாள் எதிர்வீட்டு வைதேகி.
“ஆமாண்டி, கலியாணமாகி மாசம் மூனாச்சி, இன்னும் புதுப்பொண்ணுன்னு நெனைப்பு தான் உந்தங்கச்சிக்கு” என்றார் நொடிப்பாக,
“ஹாகா, இந்த கதை தானே! வேணாண்றது. நாளையிலிருந்து, மாமனோடு சேர்த்து கொய்ந்தனுக்கும் படுக்கையை திண்ணைக்கு மாத்திடுத்தே! எந்தங்கச்சி நேரத்துக்கு எழுந்திடுவா , உங்களுக்கும் நேரத்துக்கு வேலையாகிடும்னு” அடுப்பை மொழுகியபடி சொன்னாள் வைதேகி.
“யாத்தே!” என நெஞ்சில் கை வைத்தவர்.. “ஏண்டியம்மா , எம்மவன் இப்பவே என்னை வீட்டை விட்டு துறத்தி விட, நீயே ! யோசனை சொல்லுவ போலிருக்கே”! என்றார் சரளாவும்..
“ஆமா, அப்படியே! உம்மயனுக்கு ஒன்னும் தெரியாது பாருங்க, நா யோசனை சொல்ல.. எந்தங்கச்சி தான் பாவம்.. அவளுக்கு தான் விவரம் பத்தல குடும்ப விகாரத்தை நா! புளி போட்டு விளக்கிடுறேன்த்தை” என்றாள்
“ நீ ஒருத்தி போதும்த்தா, நல்லா இருக்கிற எம்மருமகளை மாத்தி வூட்டுறாத ,உனக்கு புண்ணியமா போகட்டும்” என்றதும்.
சிரித்து விட்டாள் “என்னத்தை இப்படி சொல்லிட்டீங்க , எந்தங்கச்சிக்கு புரியுற மாதிரி சொல்லிகொடுக்கிறேனே”?
” வேணாம்த்தா, தீவனூர் மருமகளே உன் ஒத்த வாய்க்கே நெல்லூர் தாங்காதுடுயாத்தா” என்றார்.
“சரி பொழைச்ச போங்க” என்று கொள்ளைப்பக்கம் நகர்ந்தாள்..
ஊர் மத்தியில் இருந்த கிணற்றில் தான். மொத்த பெண்கள் கூட்டமும் அடங்கியிருந்தது.
‘சொயிங்.. சொயிங்’ என்று தண்ணீ எடுக்கும் சத்தம் மூன்று பக்கமிருந்தும் வந்தது.
கொடத்துடன் வந்த வேல்விழி ‘ராட்டிணம் மாட்ட கொக்கியை தேடினவளுக்கு. ஒன்று கூட கிடைக்கவில்லை, திண்டு மேலே ஏறியே! தண்ணீர் எடுக்க வேண்டியது தான்’ என எண்ணிக்கொண்டு.
கயிற்றோடு வாலியை இணைத்து முடிச்சு போட்டு தீண்டில் ஏறி நின்றாள்..
அவள் தட்டுத்தடுமாறி செய்ததை அங்க நின்றவர்கள் பார்வையில் விழுந்தாலும்.. ‘யாரும் கண்டுக்கொள்ளவில்லை மாறாக அவளை தான் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தனர்’.
“எக்கோவ்! முகம் களைகட்டுதோ! சீக்கிரம் உக்கார்ந்திடுவா , போல இருக்கேக்கா” எனக் தண்ணீர் இழுத்தபடி அருகிலிருந்தவள் காதை கடித்தாள் ஒருத்தி.
“அவ உக்காந்தா , ஊருக்கே திருவிழா தாண்டி.. காளியம்மா என்ன பண்ண போறான்னு பாக்கா வேணாம்” என்றாள் மற்றவள்..
“அப்ப ஒரு சிவகாசி வெடி கூடிய சீக்கிரம் காளியம்மா வூட்டுல வெடிக்க காத்திருக்குன்னு சொல்லுற , அப்டி தானே க்கா” என்றதும் இருவரும் மௌனமாக சிரித்துக்கொண்டனர்..
இவர்கள் பேசியது ஒருபக்கமிருக்க , அடுத்தப்பக்கம் நின்றவர்களோ! “ஏண்டி , உம்மாமியா என்னாத்துக்கு காலையிலே அலப்பறையை கூட்டிச்சு” என்றாள் மறுபக்கம் நின்றவள்..
“வேற என்ன என் நாத்தனாளை போன வரம் பொண்ணு பார்த்துட்டு போனவங்க , ஜாதகம் சேரலன்னு தாக்கல் சொல்லியிருக்காங்க.. அதுக்குத்தான் காலையிலிருந்து பாட்டா பாடிட்டியிருக்கு” என்றாள்..
இதை தவிர்த்து இன்னும் பல பெண்களின் பேச்சு சத்தம் அங்கே முணுமுணுத்துக்கொண்டிருந்தாலும்..
வேல்விழி எதையும் காதில் வாங்காமல் ‘கிணறு திண்டில் மேல் ஏறி நின்றவளோ! தட்டுத்தடுமாறி ஒரு குடத்தை நிரப்பி இருந்தாள்’..
‘சிறு பெண்ணாள், திண்டில் நின்றபடி தண்ணீரை குடத்தில் சரியாக ஊற்றமுடியாமல்.. பாதி தண்ணீர் கீழே சிந்தியதில் வீணாணது தான் மிச்சம்’ இவள் தடுமாற்றத்தோடு செய்யவதை பார்த்து. ஒருத்தி சிரித்துக்கொண்டே! தண்ணீர் எடுத்தவள் . முதுகிலே ‘சுரீர்’ என்று அடி விழவும்.
“அம்மா” என்று திரும்பியவள் , தன் தமைக்கையை கண்டு “எதுக்குடி என்னைய அடிச்ச” என்றாள் வலியில் முகத்தை சுருக்கி ,
“வேலு , தண்ணியெடுக்க ராட்டிணம் விட்டா ,என்னடி அவபாரு திண்டுல ஏறி நிக்குறா” என்று இவளிடம் கத்தியவள். வேலுவிடம் நெருங்கி வந்தாள்.
“வேலு , கீழேறங்கு” என்று காவ்யா சொல்ல,
“இல்லக்கா, இன்னும் ரெண்டு கொடம் தான் க்கா” என்றாள்.
“அது எனக்கும் தெரியும்டி , கீழேறங்கு புள்ள முதல்ல” எனறதும்.
அவளும் வேறு வழி இல்லாமல் கீழேறங்கி நின்றாள்..
“ரொம்பன கொடத்தை தூக்கிட்டு போ! காலி கொடத்துல, நா! தண்ணீ புடிச்சி வைக்கிறேன்” என்ற காவ்யாவை பார்த்தவள்..
தயங்கி “இல்லக்கா நானே”!
” நா, சொன்னதை கேளுடி கொடத்தை தூக்கிட்டு வூட்டுக்குப்போ..” என்றாள் கோவமாக,
வேலுவும் ரொப்பி வைத்த கொடத்தை தலையிலும் , இடுப்பிலுமாக.. அவளையே தூக்கிவிட சொல்லவும்..
“ஒன்னொன்னா தூக்கிட்டு போயேன்டி , கழுத்து வலிக்கப்போகுதுன்னு” சொல்லிக்கொண்டே தூக்கிவிட்டாள்..
“நாலு கொடத்துக்கு , நா நாலு தடவை நடக்கனும் க்கா.. ரெண்டா தூக்கிட்டா , ரெண்டு தடவை நடந்தா போதுமே” என்று கணக்கு சொன்னவளை ,செல்லமாக இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தாள்..
“நீ! இப்படி பாக்குறப்போ! ரொம்ப அழகா இருக்கக்கா” என்று ஐஸ் வச்சே நகர்ந்தாள்..
இவளும் சிரித்துக்கொண்டே கொடத்துடன் தங்கையருகே வந்தாள்…
“இங்க பாருக்கா, அவக் கொடத்துக்கெல்லாம் என்னால தண்ணீ எடுத்து கொட்ட முடியாது” என்றாள் வெடுக்கென்று.
“உனக்கு ஏண்டி , அவமேல இத்தனை கடுப்பு” என்று கேட்டுக்கொண்டே வாலியோடு கயிறை கிணற்றில் விட்டாள்..
“எல்லாரும் , அவளை தான் கொஞ்சுறீங்க நம்ம வீட்டுக்கு கடை குட்டி நான் தான்.. ஆனா அவ எப்ப பொறந்தாலோ! அதிலிருந்து நம்மவூட்டு கெழவிலிருந்து வெற்றி மாமாவரை அவளை தான் தூக்கி வச்சி கொண்டாடுறீங்க.. இதோ! இப்பக்கூட பாரு நீ எனக்குதான் அக்கா.. ஆனா, உனக்கு கூட அவமேல தான் பாசம்னு” புசு புசுவென மூச்சு விட்டபடி சொல்லிமுடித்தாள் அபிராமி
தங்கையின் சிறுபிள்ளை குறையை கேட்டு சிரித்தவள்.. “ஏய்! அவளும் நமக்கு தங்கச்சிடி” என்றதும்.
“அப்பன் பேர் தெரியாதவ, ஒன்னும் எனக்கு தங்கச்சி இல்லை” என்றதும் ‘பட்டென’ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். கன்னத்தில் கை வைத்துக்கொண்டு.
தன்னை கோவமாக பார்த்த காவ்யாவை பார்த்து. ‘உள்ளுக்குள் சிறு பயம் பிடித்தது இளையவளுக்கு’..
“உனக்கு யாருடி , இப்படியெல்லாம் பேச சொல்லி தர்றது” என்றாள் கண்களை உருட்டி ,
“அக்கா” எனக் வாயை திறக்க,
“போதும் அபி உனக்கு நிறைய தடவை சொல்லிட்டேன்.. வேலுவை அந்த மாதிரி சொல்லாதன்னு.. ஆனா ! நீ கேட்க மாட்டுற” என்று சொல்லும்போதே கண்கள் கலங்கியது அவளுக்கு..
“என்னவோ! நான் மட்டும் தான் அப்டி சொல்லுற மாறி பேசாதக்கா… ஊரே அப்படிதான் பேசுது.. ஏன் இப்போ! கிணத்தை சுத்தி தண்ணீ எடுத்தவங்க பேச்சும் அப்படித்தானே இருந்தது… என்னவோ! நான் மட்டும் தான் அவளை பேசுற மாதிரி வர்ற” என்றாள்.
“ஊர் ஆயிரம் பேசட்டம்டி , நீ எப்டி பேசலாம்.. நமக்கு அப்பா, அம்மா கூடவே இருக்காங்க.. ஆனா ! அவளுக்கு அப்படி யாருமே கூட இல்லடி , அவளுக்கு உரிமையான இடத்துல கூட அவ ஒதுங்கி தான்டி இருக்கா” என்றாள்..
இவர்கள் இருவரின் அருகே வந்த வேல்விழி “அக்கா, கொழால தண்ணீ வருது க்கா” என்றதும்..
“அதுக்குள்ளே! தண்ணீ வந்திடிச்சா வேலு” என்றவள் அவளுக்கு கொடத்தை தூக்கி விட்டு திரும்பி பார்க்க அக்கா, தங்கை இருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் கிளம்பிருந்தனர்…
___
‘இந்த மினிக்கி எங்க போயிட்டா, ஆளை காணலையே!’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டு வீட்டு வாசலில் கால் வைத்தானோ! இல்லையோ! உள்ளே இருந்து பறந்து வந்து விழுந்தது விளக்குமாறு,
‘ஆத்தி’ என்று இரண்டடி பின் வைத்தான். “ம்மோவ், எதுக்கு விளக்காமாத்த தூக்கி போடுற கட்டு பத்து ரூபா” என்றான்.
வெளியே வந்த பஞ்சவர்ணம் , மகனை பார்த்து “காலையிலே எங்குட்டுடா போனா, வரவர உன் போக்கு ஒன்னும் சரியில்லையே”! என்று இழுத்து நின்றார்.
“ நான் என்ன பண்ணேன்.. இந்த வெற்றி எருமை தான் காலையிலே என் உசுரை வாங்கி இழுத்துட்டுப்போனான்” என்றான்
“உன்னை இழுத்துட்டு போனபுள்ளை வூட்டுக்கு வந்து மணிநேரமாச்சு, நீ இப்பதான் வூடு வர”? என்றார் கேள்வியுடன்
‘படுபாவி வழக்கம்போல அவன் வேலையை காட்டிட்டான்.. இனி நான் என்ன சொன்னாலும் இந்த தாய்க்கெழவி நம்பாதே’ என்னடா மாறா உனக்கு வந்த சோதனை என்று மனதிலே புலம்பியபடி நின்றான்..
“என்னத்தை நீ! பொறுமையா கேட்டுட்டு இருக்க.. என்னை கழட்டி விட்டு அவன் யாரை பாக்க போனான்னு கேளு” என்று கடுங்காப்பி குடித்தபடி சொல்லிக்கொண்டு வந்தான் வெற்றி.
அவன் சொன்ன குற்றச்சாட்டில் இவன் அரண்டே விட்டான் “ம்மோவ், அவன் சொல்லுறதை நம்பாத” எனக் பதறி சொன்ன மகனை கண்டுக்கொள்ளாது..
வாசலிலே அமர்ந்தவர் “ஐய்யோ! ஆத்தா மாரியாத்தா காளியாத்தா என் குறையை கேக்க , எந்த சாமிக்கும் கண்ணுல்லாம போச்சோ” என்று இவர் புலம்பவும்…
“ம்மா, கண்ணால பாக்க தான் முடியும். கேக்க முடியாது ம்மா” என்றான் மாறன்..
“உன்னையை பெத்த கொடுமைக்கு , நான் புலம்புறேன்.. உனக்கு எகத்தாலம் கேக்குதோ! நாலு புள்ளை பெத்தா நடுத்தெருவில் சோறு, ஒத்தைப்புள்ளை பெத்தா உறியில சோறுன்னு பீத்திக்கிட்டு திரிஞ்சதுக்கு என்னை , இப்பவே நடுத்தெருவுல நிறுத்திட்டானே! எனக்கு யாரு , இருக்கா கட்டினவன் தெற்கு போய் வருஷம் பல தாண்டி போச்சு.. இப்ப கட்டுன புருஷனும் இல்லாம வயித்துப்புருஷனும் என்னை வூட்டை விட்டு துறத்த பாக்குறானே” என்று இவர் பாடின பாட்டை கேட்டு , மாறன் தலையில் கை வைத்தபடி நின்றான்..
வெற்றி உதடு பிரிக்காமல் சிரித்து வைத்தான்…
“தாய்க்கெழவி, எந்த வூட்டுல பாத்த நாடகத்தோட கதை” என்றான் பல்லைக்கடித்துக்கொண்டு.
“மெட்டிஒலி டா, பாவி அந்த ராஜம் லீலாவையும் அவ அப்பனையும் என்னெல்லாம் பேச்சு பேசிட்டா தெரியுமா” என்று இப்போது மகனிடம் பேச ஆரம்பிச்ச கதையை விட்டு, இவர் நாடகத்தை எடுத்ததும் வெற்றி ஒருபக்கம் விழுந்து விழுந்து சிரிக்க..
