Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 9(1)

உளமாற உனதாகிறேன் – 9(1)

 

கடந்த கால நினைவுகளில் உழன்றவன்… கார் இனியாள் வீட்டின் முன் நின்றதும் நிகழ்காலம் உணர்ந்திட… இனியாளின் கரம் பிடித்து வீட்டினுள் நுழைந்தான். என்ன தான் வளையாபதியின் மகன் என்றாலும்… மருமகன் ஆயிற்றே… வெட்டிவிட முடியாத உறவு… பிடித்தாலும்… பிடிக்கவில்லை என்றாலும் வரவேற்று ஆகவேண்டிய கட்டாயம்.

 



Advertisement

“வாங்க… வா இனியா” என்று மொட்டையாக அழைத்த நமச்சிவாயத்தின் குரலில் மலர்ச்சி இல்லை… கடமை மட்டுமே இருந்திட… அதை அங்கிருந்த அனைவருமே உணர்ந்தனர்…

 

“அட என்ன மாமா… அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை… இப்படி மொட்டையா கூப்பிட்டா எப்படி… அப்புறம் அவரு நம்ம வீட்டை பத்தி என்னை நினைப்பாரு” என்று கிடைக்கிற கேப்பில் தன் பந்தை வீசினான் பெருமாள். நொடியில் அவ்விடத்தின் சூழலே மாறியது…

Advertisement

 

Advertisement

“ப்ச் விடுங்க சகல… இதுக்கெல்லாம் நான் பீல் பண்ண மாட்டேன்… அவரு எப்போ மாப்பிள்ளைன்னு கூப்பிட தோனுதோ… அப்போ கூப்பிடட்டும்… உண்மையை சொல்லனும்னா இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு… சில அரசியல்வாதிங்க மாதிரி மனசுல ஒன்னை வைச்சிட்டு வெளியே ஒன்னு பேசல இல்ல… என்ன சகல இப்படி முழிக்குறிங்க… உங்களை சொல்லல நான் பொதுவா சொன்னேன்” என்றவனை ஆச்சரியமாக பார்த்தார் வாசகி.

 

நிச்சயம் வாசுவிடம் இந்த எதிர்வினையை அவர் எதிர்ப்பார்க்கவில்லை… பெரிதாக ஏதோ நடக்க போகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்க… அதை ஒன்றும் இல்லாது வாசு ஆக்கிவிட… முதல் முதலாய் அவனை பற்றி நல்ல அபிப்பிராயம் தோன்றிட… விருந்துக்கு உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தார் வாசகி.

Advertisement

 

இனியாளுக்கு இவை எல்லாம் பெரும் ஆச்சரியம் கிடையாது… அவனை பற்றி ஓரளவு அறிந்திருந்ததால் அமைதியாகவே நின்றிருந்தாள்…

 

அதன்பின் மடமடவென்று நேரம் கழிந்திட விருந்தும் முடிந்தது… முதல் நாள் விருந்து நன்றாகவே முடிந்திட… பெருமாளும் பிரபாவதியும் அவர்கள் இல்லம் சென்றுவிட்டனர்.

 

அன்றைய நாள் அவ்வாறு அமைதியாகவே கழிந்தது. ஆனால் அதன் பின் வந்த நாட்கள் எல்லாம் அவ்வாறு அமையவில்லை…

 

ஆறு நாட்கள் கடந்திருந்தது…

மணி இரவு இரண்டு… ஆனால் இன்னும் வாசு வீடு வரவில்லை… ஒரு வாரம் மறு வீடு தங்குவது என்று ஏற்பாடு… வாசுவிடம் கேட்டதற்கு அவனும் மறுப்பு சொல்லவில்லை… ஆனால் அவன் செயல்கள் அதற்கு அப்படியே எதிர்பதமாக அமைந்தது…

 

விருந்துக்கு என்று முதல் நாள் வந்தவன் அன்றைய நாள் மட்டுமே வீட்டில் இருந்தான்… அதன் பின் வந்த நாட்களில் வேலை என்று சென்றுவிட்டவன்… இரவு மட்டும் தலையை காட்டிவிட்டு மீண்டும் மறைந்துவிடுவான். பின் நள்ளிரவு நேரம் தான் வருவான்…

 

தாயோ இவளிடம் என்னவென்று விசாரிக்க தந்தையோ பார்வையாலே வினா எழுப்பினார். எதற்கும் பதில் சொல்ல இயலாது மென்று முழுங்க… இன்று அவன் வந்ததும் விடுவதில்லை என்று முடிவு எடுத்தவள் அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்…

 

அவள் நினைப்பை பொய்யாக்காது அன்றும் ஒன்றரை மணிக்கு மேலே தான் வந்தான்… வந்ததும் தூங்காமல் கட்டில் மீது அமர்ந்து இருந்தவளை கண்டு புருவம் உயர்த்தியவன் எதுவும் கேட்காது… தன்னை சுத்தபடுத்தி கொண்டு கட்டிலில் படுத்துவிட… கோபம் பொங்கியது இனியாளுக்கு…

 

“இங்க ஒருத்தி பேயாட்டம் முழிச்சிட்டு காத்திட்டு இருந்தா… எனக்கென்னன்னு படுத்தா என்ன செய்றது… உங்ககிட்ட தான் பேசனும்” என்று தண்ணீர் ட்மபளரை நங்கென்று வைத்தாள்.

 

“என்கிட்ட தான் பேசிட்டு இருக்கியா இனி… என்ன விஷயம்…” என்று படுத்திருந்தவன் பேசுவதற்கு ஏதுவாக கட்டிலில் சாய்ந்து அமர…

 

“என்ன சொல்றேன்னு புரியாது மாதிரி நடிக்காதிங்க… மறுவீடு வரப்பிடிக்கலன்னா அப்பவே சொல்ல வேண்டியது தானே… எல்லாத்துக்கும் சரின்னு மண்டையை ஆட்டினவர்… இப்படி கோழி திருடனாட்டும் நைட்டு மட்டும் வீட்டுக்கு வந்தா எப்படி… என்னை தான் கண்டுக்கலயே தவிர… உங்களுக்கு என்ன மரியாதை குறை வைச்சாங்கன்னு இப்படி செய்றீங்க” என்று கோலத்தில் பொறிந்தாள் இனியாள்.

 

மறுவீடு வந்த அன்று தன்னிடம் பேசாது அமைதியாய் இருந்த பெற்றோர்கள் இவனிடம் அப்படி இருக்கவில்லையே… அவனின் மரியாதைக்கு எந்த குறையும் வைக்கவில்லையே… அப்படி இருக்க வாசுவின் செயல்கள் இவளை காயப்படுத்தியது உண்மையே…

 

“என்ன சொல்றதா இருந்தாலும் தெளிவா சொல்லு இனி… எனக்கு தூக்கம் வருது…”

 

“ம்ம்… வரும்… வரும்…‌ இங்க ஒருத்தி தூக்கத்தை கெடுத்திட்டு நீங்க நிம்மதியா தூங்குவிங்க… வேறென்ன சொல்ல போறேன்… எப்படியும் நாளைக்கு ஒரு நாள் தான் இங்க இருக்க போறோம்… அதுனால கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாங்க…”  என்றிட அனைத்தையும் உள்வாங்கியவன்…

 

“ஓ… உன்னோடு டைம் ஸ்பென்ட் பண்ணனுமா… அதையேன் மறைமுகமா சொல்ற… நேராவே சொல்லு… ஐ அம் யுவர்ஸ்(I am yours)” என்றதும் அவளிடம் மெல்லிய அதிர்ச்சி….

 

“ஹான்… நான் எப்போ அப்படி சொன்னேன்… வீட்டுக்கு சீக்கிரம் வாங்கன்னு தான் சொன்னேன்…”

 

“அதுக்கு அதுதான் மீனிங்…” என்றதும் அவளுக்கே குழம்பி தான் போனது…  சரி எப்படியோ வீட்டிற்கு வந்தால் சரி என்ற ரீதியாக மண்டையை ஆட்டிவிட்டு படுத்து விட… அவனிடம் வெற்றி புன்னகை…

 

அடுத்த நாள் ஞாயிறு… பிரபாவதி காலையிலே தன் மகள் ரோஜாவோடு வந்து விட்டாள். சமையற்கட்டே அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது… அதே சமையல்கட்டு… அதே ஞாயிறு பரபரப்பு… ஆனால் என்னவோ  வித்தியாசமாக உணர்ந்தாள் இனியாள்… தன் வீடே அந்நியமாய் தோன்றிட… யோசனையில் இருந்தவளை கலைத்தது வாசுவின் குரல்…

 

“இனி ஒரு கப் டீ கொண்டு வா…” என்றவனின் குரலில் அவனுக்கு பிடித்த மாதிரி ஏலக்காய் இஞ்சி தட்டி டீ வைத்தவள்… அதை அவனிடம் கொண்டு போய் கொடுத்திட… சமையற்கட்டில் அம்மா பின்னே நின்றபடி வாசுவை எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தாள் பிரபாவின் மகள் ரோஜா…

 

அதை அவனும் கண்டு கொண்டான்… மெல்ல அவள் பார்க்கும் போது இவன் முகத்தை மறைத்து கொள்வது… மீண்டும் பார்ப்பது என்று விளையாட்டு காட்ட… குழந்தைக்கு ஒரே குதுகலம்… விளையாட ஆள் கிடைத்துவிட்டதாய் மனமெங்கும் மகிழ்ச்சி…

 

மெல்ல மெல்ல அவனிடம் நெருங்கிய குழந்தை… அவனை தொட்டு பார்ப்பதும்… சிரிப்பதுமாய் இருந்திட… அச்சிரிப்பு அப்படியே மறைந்து போனது ஞானசெல்வியின் வரவால்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!