Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 28

அத்தியாயம் 28

 

“பல்லவி! என்ன டா இப்படி பேசுற?” என்ற லதாவிற்கு இப்பொழுது பயமும் சூழ்ந்தது.

 



Advertisement

ஏற்கனவே பல்லவி என்றால் அத்தனை பிடித்தம். இப்பொழுது மகனுமே அவன் விருப்பத்தை கூறிய பின் தனக்கு மருமகள் என்ற இடத்தில் அவளை வைத்து அவ்வளவு அழகு பார்த்திருக்க, பல்லவியின் பேச்சில் எதுவும் புரியவில்லை என்றாலும் அவள் கோபம் பயத்தை தான் கொடுத்தது.

 

“ம்மா! நீங்க டென்ஷன் ஆகாதீங்க!” என கீர்த்திஸ்வரன் தாயை தாங்க வர,

Advertisement

 

Advertisement

“ப்ச்! இப்ப ஏன் நீங்க வந்திங்க இங்க? இவ்வளவு நாளும் உங்க வேலையை பார்த்துட்டு தானே இருந்துருப்பிங்க. இப்ப மட்டும் என்ன என்னை தேடி?” என லதாவை அந்த நிலையில் காண முடியாமல் இன்னும் கோபமாய் பல்லவி பேச,

 

“ஷட்டப் பல்லவி! இங்க என்ன நடக்குதுன்னே புரியல. என்ன பிரச்சனை உனக்கு? என்னவோ சொன்னியே அசிங்கப்படுத்தினாங்கனு? யார் என்ன பண்ணினாங்க? எதுவும் எங்களுக்கு புரியல. அம்மா உன்னை தேடுறது வேற! ஆனா நீயும் தானே அம்மாவை பார்க்கனு வீட்டுக்கு வந்துட்டு இருந்த? அப்படி அவ்வளவு கிளோஸ்ஸா இருந்த பொண்ணு ரெண்டு வாரமா வரலையே என்னாச்சோனு தான் உன்னை தேடி இவ்வளவு தூரம் வந்தாங்க. அதுக்கு என்னென்னவோ பேசுற!” என்றவன்,

Advertisement

 

“என்கிட்ட பேச இஷ்டம் இல்லையா! ஓகே பேச வேண்டாம். அப்போ இவங்களை பேசவும் உனக்கு ரைட்ஸ் இல்ல ஓகே!” என்றவன் அழுத்தமான குரலும் கோபமும் என பல்லவியை விட லதா தான் மகனின் கோபத்தில் வாயடைத்து நின்றார்.

 

தான் ஒன்று நினைத்து வர, இங்கே சம்மந்தமே இல்லாமல் மகனுக்கும் பல்லவிக்குமான இந்த முட்டுதலில் மூச்சுமுட்டி நின்றார்.

 

“இப்படிலாம் பேசினா நான் பயந்துடுவேனா? உங்களால தான்… உங்களால தான் எனக்கு பிரச்சனையே! ஏன்! நான் ஏன் வரலைனு உங்களுக்கு தெரியாதா? நான் சொன்னேனா உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு?” என்று கேட்கவுமே கீர்த்திஸ்வரனும் அதிர்ந்து தான் அமைதியானான்.

 

“வந்து அந்த பேச்சு பேசுறாரு உங்க அப்பா. வெளில சுத்தி இருக்கவங்களை கூப்பிட்டு எங்களை ஊர் பார்க்க அசிங்கப்படுத்தி நிக்க வைப்பாராமே! எங்க, பண்ண சொல்லுங்க பார்ப்போம். நான் சொன்னேனா உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன்னு?” என்று மூச்சு விடாமல் பேசியவள்,

 

“என் பையனை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு மருமகளா வர என்ன தகுதி இருக்குனு கேட்குறாரு. நீங்க என்னவோ வந்து உங்களை பேச ரைட்ஸ் இல்லைன்றிங்க. ஏன்? உங்க காசுல படிச்சதை தவிர என்ன விதத்துல நான் குறைஞ்சுட்டேன்? முதல்ல அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என் வீட்டுக்கு வந்து என்னை பேச? அதுவும் அதுல ஒரு வார்த்தை கூட உண்மை இல்லாதப்ப?” என்றவள் பேச பேச லதாவின் அதிர்ச்சி எல்லாம் உச்சபட்ச நிலைக்கு சென்றிருந்தது.

 

“அதையெல்லாம் பேச வேண்டாம் பல்லவி” என்ற சித்ராவின் முகமும் என்னவோ அசூயையாய் மாற,

 

“பேச வேண்டாம்னா.. தேடி வந்தவங்களுக்கு தெரிய வேண்டாமா என்ன பேசினார்ன்னு… அதுவும் மயக்கிட்டேன் அது இதுன்னு என் அம்மா முன்னாடி…. “ என்று முகம் சுழித்த பல்லவி முகம் பார்த்து அந்த இடத்தில் தானும் சிதறி நின்றான் ஈஸ்வர்.

 

“இந்த ஒரு முகத்துக்காக தான் அந்த ஆளை நான் அன்னைக்கு அப்படியே அனுப்பி விட்டேனே” என்று லதாவைக் காட்டி சொல்லியவள்,

 

“உங்க வீட்டுக்கு வந்தா…. லதாம்மாவை பார்க்க வர்றேனே தவிர வேற என்ன அங்க வந்து நான் பண்ணிட்டேன்? இவரை பார்க்கவும் இவரை….. “ என்றவள் ஈஸ்வரைக்கு காட்டி அந்த வார்த்தையை சொல்லாமல் திணறி நின்ற போது கண்ணில் நீர் கட்டிவிட, சட்டென்று சுதாரித்து உள்ளிழுத்துக் கொண்டாள்.

 

அதைக் கண்டவனுமே உடைந்து தான் போனான். இது எங்கு ஆரம்பித்தது? தந்தை இங்கு வந்தாரா? எதுவும் அவனுக்கு தெரியவில்லை. முதலில் மகேஸ்வரன் ஏன் இங்கே வந்து அப்படியெல்லாம் பேச வேண்டும் என நினைக்கும் பொழுதே நெஞ்சம் பலமாய் அடித்துக் கொண்டது.

 

“இவ்வளவு நாளும் எவ்வளவோ விளையாட்டா சொல்லிருக்கேன். ஆனாலும் அப்படியெல்லாம் நடந்திடனும்னு தான் ஒவ்வொரு முறையும் நான் நினைப்பேன். ஆனா இப்ப சொல்றேன். இந்த வருஷம் என்னோட படிப்பை நான் கண்டிப்பா முடிப்பேன். முடிச்சே தீருவேன். கையோட என்னவோ ஒரு வேலைக்கு போய் நீங்க குடுத்த பைசால ஒரு பைசா மிச்சம் இல்லாம உங்க கடனை எல்லாம் அடைச்சுட்டு தான் நான் என் வாழ்க்கையை பார்ப்பேன்!” என்றவள் சொல்லில்,

 

“பல்லவி! அம்மாடி! என்ன டா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற!” என்று அவளை தன் முன் கொண்டு வந்து லதா நிறுத்த,

 

“நீங்க போங்க லதாம்மா! இனி நான் உங்களை பார்க்கவே வர மாட்டேன். வரவே மாட்டேன். எதுவும் வேண்டாம். அன்னைக்கு மட்டும் அந்த ஆள் பேசும் போது அது உங்க ஹஸ்பண்ட்டா இல்லாம இருந்திருந்தா இந்த பல்லவி யார்னு அவருக்கு தெரிஞ்சிருக்கும். நீங்க தான் எனக்கு வீக்நெஸ்ஸா ஆயிட்டீங்க” என்றவள் சொல்லில்,

 

“பல்லவி.. நாங்க என்ன டா…” என்று கண்ணீரோடு பேச வந்த அன்னையை கைப்பிடித்து தடுத்துவிட்டான் கீர்த்திஸ்வரன்.

 

“ஈஸ்வர்!” என அவனையும் தவிப்பாய் லதா பார்க்க,

 

“வேண்டாம் ம்மா. வாங்க போகலாம்!” என்றவனுக்கு பல்லவியை நேராய் பார்க்க முடியவில்லை. எத்தனை பேச்சுக்களை கேட்டிருந்தால் அன்னையிடம் அவளுக்கு இவ்வளவு கோபமிருக்கும். கூடவே தந்தை இப்படி செய்தது நியாயமே இல்லை எனும் போது அவளை சமாதானம் செய்வது எப்படி சரியாகும் என அங்கே நிற்கவே அதனை கடினமாய் இருந்தது.

 

கூடவே இத்தனை நாட்களில் அவளை அறிந்திருந்தான் ஈஸ்வரும். அவளை சீண்டுவதாய் தந்தை பேச்சு இருந்திருப்பதையும் இப்போழுது புரிந்து கொண்டான். அத்தனை கோபத்தில் அவள் இருக்க, இப்பொழுது எதையும் பேசி உடனே அவளை சமாதானப்படுத்திட முடியாது என்றும் தெளிவாய் புரிந்தது அவனுக்கு.

 

முதலில் தான் செய்ய வேண்டியது தந்தையிடம் பேசுவது தான். எதற்காக இங்கே வந்து இத்தனை தூரம் பிரச்சனை செய்தார் என்று தெரிய வேண்டுமே! அவர் கைகாட்டிய பெண்ணை தான் திருமணம் செய்யவில்லை என்ற கோபமா இல்லை வேறெதெனும் இதில் இருக்கிறதா என்று அதனை யோசித்துவிட்டான்.

 

அத்தனைக்கும் முடிவில் ஆயாசமும் கலக்கமுமாய் பல்லவியிடம் தான் வந்து நின்றது ஈஸ்வரின் கண்கள்.

 

இப்படி தன் மனதை தெரியப்படுத்தும் முன்பே இவ்வளவு தூரம் அவள் மனதில் இருந்து விலகிப் போவோம் என்று நினைத்ததே இல்லை அவன்.

 

“ஈஸ்வர்… பல்லவி டா!” என மகனையும் அப்படி காண முடியவில்லை அன்னையாய்.

 

“பார்ப்போம். வாங்க ம்மா!” என்று அழைக்க,

 

“லதாம்மா!” என்று அவரை அணைத்துக் கொண்டாள் பல்லவி.

 

அவரிடமும் பேசவே கூடாது என்று தான் இத்தனை நாட்களும் தவிர்த்தாள். நிச்சயம் இப்படி தேடி வந்து நிற்பார் என நினைக்கவே இல்லை.

 

அவர்கள் வீட்டில் என்ன பிரச்சனை? எதற்காக மகேஸ்வரன் வந்து அப்படி பேசினார் என எதுவும் தெரியாது. அவர்களின் குடும்பப் பிரச்சனைக்கு தன்னை வந்து காரணம் காட்டுவாரா என அத்தனை கோபம். அதில் வேறேதுவும் அவளால் யோசிக்க முடியவில்லை.

 

இப்பொழுதும் தன்னை இவ்வளவு தூரம் தேடி வந்து லதா முகம் வாடி செல்வதை பல்லவியால் ஏற்கவே முடியவில்லை.

 

“ஏன் வந்திங்க? எப்படியோ போறேன்னு உங்க வேலையை பார்க்க வேண்டியது தானே!” என கலங்கிய குரலில் கூறியவள்,

 

“ஆனா நான் சொன்னது தான். இனி வர மாட்டேன். வரவே மாட்டேன்” என்று சொல்லி அவரிடம் இருந்து பிரிய,

 

“ஆனா நான் வருவேன் பல்லவி. யார் என்ன சொன்னாலும் நான் பல்லவியை தேடி வருவேன். அதை நீயே நினைச்சாலும் தடுக்க முடியாது!” என்ற அன்னை வார்த்தைகளைக் கேட்டு கீர்த்திஸ்வரன் சட்டென்று வெளியில் சென்றுவிட்டான்.

 

அவன் செல்வதைப் பார்த்தவளும், “நீங்க பொண்ணை மட்டும் பெத்திருக்கலாம் லதாம்மா. என்னவோ ஆணழகனை பெத்துட்டதா நினைப்பு உங்க புருஷருக்கு.. ஆனா அவரை சும்மா மட்டும் விடவே மாட்டேன்!” என அதற்குள்ளே அந்த நினைவுகளுக்குள்ளே சுற்றிக் கொண்டிருந்தாள் பல்லவி.

 

மற்றவர்களை எல்லாம் உறவுமுறை வைத்து அழைக்காதவள் மகேஸ்வரனை மட்டும் மாமா என்று தான் அழைப்பாள். அப்படிப்பட்டவள் இன்று அவரை அழைத்த விதமே அவளின் கோபத்தின் அளவைக் கூறியது.

 

“நீ நம்புறியா இல்லையானு தெரியாது பல்லவி. ஆனாலும் சொல்றேன். அவங்க இங்க வந்தது பேசினது இது எதுவுமே எனக்கோ ஈஸ்வருக்கோ தெரியாது. நாங்க என்னென்னவோ நினைச்சு வந்தோம்” என்றவர் மகன் சென்ற வழிப் பார்த்தார்.

 

“ஆனா உனக்கு நடந்தது சரி இல்லை. இதை நானும் சும்மா விட போறதில்ல” என்றவர் உள்ளுமே அவ்வளவு ஆத்திரம்.

 

காலை வரை கூட அந்த வீட்டில் தான் தங்களுடன் இருந்தவர் இப்படி இவ்வளவு பிரச்சனையை இழுத்து வைத்து அதை மறைத்தும்விட்டார் தானே என உள்ளுக்குள் நெருப்பாய் எரிய தான் செய்தது.

 

“நான் கேட்காதீங்கனு எல்லாம் சொல்லவே மாட்டேன். அந்த ஆளை அப்படி விட்டது இன்னுமே எனக்கு அவ்வளவு கோபம் லதாம்மா!” என்றவள் சொல்லில் திரும்பி சித்ராவைப் பார்த்தார் பாவமாய்.

 

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணி. ஆனா இவ்வளவு தூரம் இது வந்திருக்க வேண்டாம். பல்லவி அதிகமா வாய் பேசுவா தான். ஆனா பேச வேண்டிய இடத்துல தான் பேசுவா. என்ன ஏதுன்னு நாங்க பாக்குறதுக்குள்ள அண்ணே…” அண்ணன் என்று கூற வந்து அதை நிறுத்திக் கொண்டாrர் சித்ராவும்.

 

“அவ்வளவு பேசிட்டார். என்னால அங்க அவரை எதிர்த்து பேச கூட முடியல. என் பொண்ணுக்கு நல்லது கெட்டது தெரியும். அவ பேசினது சரி தான்” என்று சித்ரா சொல்ல, வெளியில் காரில் ஹார்ன் சத்தம் கேட்டது வீட்டினுள்.

 

“உங்களுக்கு தான்… போய்ட்டு வாங்க.. உங்க மேல கோவமா தான் இருந்தேன். ஆனா மனசு கேட்கல. அந்த லாவண்யாவையே கல்யாணம் பண்ணி வைங்க உங்க பையனுக்கு. அப்பவாது உங்க ஹஸ்பண்ட்க்கு மூளை வளரட்டும்!” என்றெல்லாம் பேசி அவள் கோபத்தையும் காண்பிக்க, கவலையும் கோபமுமாய் தான் அங்கிருந்து கிளம்பி வந்தார் லதா.

 

அதற்குமேலான கோபத்தில் தான் வண்டியை செலுத்தினான் கீர்த்திஸ்வரன் கூட.

 

ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி தான் அவனுள் ஓடிக் கொண்டே இருக்க, அவரை நேரில் பார்த்து கேட்காமல் தன் நெஞ்சின் கோபம் குறையாது என அவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தான் அன்னையோடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!