Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ -18

அவனின் அணைப்பில் நெஞ்சம் நெகிழ்ந்துதான் நின்றாள் சக்திப்ரியா ‘பிடிக்குமாமே அதும் ரொம்ப ரொம்ப’ அதிலும் அந்த முத்தமும் அணைப்பும் அடிவயிற்றில் என்னவோ ஒரு இம்சை ‘நமக்கும் பட்டாம்பூச்சி பறக்குதோ’ என்று எண்ணிக்கொண்டாள்.

 

அத்தனை பிடித்திருந்தும் ஏனோ அப்படி நிற்க முடியவில்லை மெல்ல அவனிடமிருந்து விலகி வெளியில் சென்றுவிட்டாள் அவன் மெலிதாகப் புன்னகைத்துக்கொண்டான்.

 



Advertisement

எப்படி வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை பார்லருக்கு வந்தவள் ஏதோ மந்திரித்துவிட்ட மனநிலையில் இருந்தாள் இரவு வீட்டிற்கு செல்லவே ஏதோ ஒருவித பதட்டம் பேசாம அம்மா வீட்டுக்குப் போயிடலாம் என்றுகூட யோசனை ஓடியது.

 

அவன்மீது கோபமும் வருத்தமும் இருந்தபோதே ஒரு நாள் கூடத் தாய் வீடு சென்று நிற்கவில்லை நேரம் கடந்து கொண்டிருந்தது.

Advertisement

 

Advertisement

“பிரியாமா” என்ற அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் சக்திரியா.

 

“எல்லாரையும் அனுப்பிவிட்டுட்டு தனியா பார்லர்ல என்ன ஆராய்ச்சி உனக்கு” என்று வந்தான் முத்து.

Advertisement

 

“நீங்க என்ன இங்க” என்றாள்.

 

“இங்க ஒரு வேலையா வந்தோம் அப்படியே சாப்பாடும் வாங்கிட்டு உன்னையும் கூட்டிட்டு போலாம்னு வந்தோம் அண்ணே கீழே நிக்குறாரு நீ அவர்கூட போ நான் பின்னாடி வண்டியை  எடுத்துட்டு வரேன்” என்றவன் அவள் அனுமதிக்கு காத்திருக்காமல் ஸ்கூட்டி சாவிய எடுத்துச்சென்றான்.

 

இவளும் பார்லரை பூட்டிவிட்டு கீழே வர இருவரும் அவளுக்காகத்தான் காத்திருந்தனர் அவனை நேரே பார்க்கவே தயக்கமாக இருந்தது திருமண நாள் அன்று கூட இவ்வளவு வெக்கம் அவளுக்கு வரவில்லை அமைதியாகச் சென்று அமர்ந்துகொண்டாள்.

 

 

முத்து அப்படியே சென்றுவிட்டான்,  வீட்டிற்கு வந்து குளித்து உணவை உண்டு அவசரமாக ஓடிப் போய்ப் படுத்துக்கொண்டாள் அரைமணி நேரம் கடந்தும் அவன் வரவில்லை உறக்கமும் வருவேனா என்று சண்டித்தனம் செய்துகொண்டிருந்தது, சிறிது நேரத்தில் வந்துவிட்டான் விளக்கை அணைத்துவிட்டு அவன் வந்து கட்டிலில் படுப்பதை உணர்ந்தவள்  விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

 

 

வெகுநேரம் எந்த அரவமும் இல்லை “அப்பாடா தூங்கிட்டார் போல” என்று எண்ணி அவள் உடல் தளர்ந்த நொடி அந்த வலிய கரங்கள் அவள் இடையோடு ஊர்ந்து வயிற்றில் அழுத்தமாகப் பதிந்து அதே வேகத்தில் தன்னோடு இழுத்து அணைத்தது,  இமைக்கும்  நொடிக்குள் அனைத்தும் நடந்திருக்க அதிர்ச்சியோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

மிக மிக எளிதாக அவளை அபப்டியே திருப்பித் தன்னை நோக்கிப் படுக்க வைத்தான்.

 

“என்… என்ன” என்றாள் தடுமாறி.

 

“என்ன என்ன” என்றான்.

 

“இது” என்றாள் அவன் அணைப்பை காட்டி.

 

“பிடிக்கலையா” என்றவனை தவிப்பாகப் பார்த்தாள்.

 

“சக்தி” என்றான் ஆழ்ந்த குரலில் விழிகளை இறுக மூடி இதழ் கடித்தாள் சக்திப்ரியா.

 

“ஒன்னும் செய்யமாட்டேன் பயப்படாத” என்றவன் “ஆனா ரொம்ப நாள் ஆசை ஒன்னு இருக்கு” என்க சட்டென்று விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

 

அவள் முகத்தை நன்றாக உயர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் அந்த மூக்கின் நுனியை மெல்ல கடித்தான் அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள் விழிகள் மெல்ல கசிந்தது.

 

“வலிக்குதா” என்றான்.

 

“இல்லை” என்றவள் இதழ்களில் புன்னகை.

 

“என்னைப் பாத்தாலே பத்தடி தள்ளி நிப்பாங்க எல்லாரும்,  ஆமா லவ் பண்றேன் அப்படித்தான் வருவேன் பாப்பேன்னு தைரியமா என்கிட்டே சண்டை போட்ட அந்தச் சக்தி எங்க போய்ட்டா”.

 

“சிவபாலனை காதலிக்க ஆரம்பிச்ச அப்புறம் சக்திப்ரியா அழுமூஞ்சி ஆயிட்டாளாம் என் மாமனார் என்கிட்டே சண்டைக்கு வரார் என் பொண்ணை கண்கலங்காம நான் வெச்சிருந்தேன் உன்னைக் கட்டி அவ கஷ்…” என்றவன் இதழ்களைத் தன் தளிர் கரம்கொண்டு மூடியவள் “இல்லை” என்று தலை அசைக்க.

 

“ஆனா இப்போல்லாம் நிறைய அழறடி எனக்குப் பிடிக்கல” என்றான் உள்ளார்ந்த குரலில்.

 

“இவ்வளவு பேசுவானா” என்று அவனையே விழிவிரித்து பார்த்தாள் அவள்.

 

அவளுடைய வலது கையை எடுத்துத் தன் கன்னத்தில் பதித்தவன் தாடியை  அழுத்தமாகப் பற்ற வைத்தான் “வலிக்கும்” என்றாள் மெல்ல.

 

“வேணும் அந்த வலிதான் வேணும் கொஞ்சம் வலிகுடுடி” என்றான் விழிகளை மூடி ரசித்து,  அவள் விரல்கள் அழுத்தமாகப் பிடிப்பதும் வருடுவதாகவும் இருக்க உறங்கியிருந்தான் அவள் உறக்கம் தான் தூர போயிருந்தது.

 

முதல் நாள் மூக்குத்திக்கு முத்தமிட்டான்,  மறுநாள் விழிகளுக்கும் சேர்த்து மூன்றாம் நாள் கன்னங்களும் சேர்ந்துகொண்டது முகத்துல வேற என்ன மிச்சம் இருக்கு என்ற எண்ணம் வரத் தன்னாலே அவள் விரல்கள் அவள் இதழைத் தொட்டு மீண்டது.

 

அன்று பவுனுத்தாயி கவிதாவுடனும் ஷர்மியுடனும் கோவிலுக்குச் சென்றிருந்தார் ஷர்மி கர்ப்பம் என்று அறிந்தது முதல் ஒரு பயம் உள்ளுக்குள் படர்கிறதே ஆகையால் விளக்கு போட்டுப் பூஜை செய்யச் சென்றிருந்தார்.

 

ஷர்மி விளக்கு வைத்து வேண்டிக்கொண்டு அதைக் கடவுள் சந்நிதியில் கொண்டு சென்று வைத்தாள்,  பவுனுதாயிக்கு கொஞ்சம் நிம்மதி என்றாலும் பரிகாரங்களை கேட்டுச் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்க.

 

கவிதா கொண்டு வந்த விளக்கு அவள் படியைத் தாண்டும்போதும் கால் இடறி தரையில் விழுந்தது பவுனுதாயிக்கு உயிரே துடித்து அடங்கியது அவர் உடல் நடுங்க தொடங்கியது இது என்ன அபசகுனம் யாருக்கு தீங்கு வருகிறது எதைக் காட்டுகிறது இது என்று பதட்டம் சூழ தலை சுற்றி விழுந்தார்.

 

கவிதாவும் கலக்கத்தில் நின்றதில் அவரைக் கவனியாமல் போயிருக்க கையில் நல்ல அடி பவுனுதாயிக்கு,  தண்ணீர் தெளிக்க கண்விழித்துவிட்டார் மருத்துவமனை போகலாம் என்று கவிதா சொல்ல இல்லை வேண்டாம் கோவிலுக்கு வந்துவிட்டு வீட்டிற்குத்தான் போக வேண்டும்  என்று அடமாக நின்றார்.

 

ஆட்டோ பிடித்து  எப்படியோ வீட்டிற்கு கொண்டுவந்துவிட்டனர் விஷயம் கேள்விப்பட்டு உறவுகள் வந்து பார்த்துச்செல்ல அவரிடம் பெரும் அமைதி இறுக்கம்.

 

சக்திப்ரியா அன்பரசிக்கு உதவியாக வருபவர்களுக்குக் குடிக்க சாப்பிட என்று கவனித்துக்கொள்ள அவளைப் பற்றி நல்லவிதமாக வந்தவர்கள் பேசிச்செல்வது கூட இவருக்கு எரிச்சலை கொடுத்தது.

 

அவள் ஏதேனும் எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்தாலே அவளை ஒரு வெறுப்பான பார்வை பார்த்து வைத்தார் பவுனுதாயி,  அதைக் கண்டுகொண்டவள் மாமியாரிடம் கொடுத்தனுப்பிவிட்டு ஒதுங்கிக்கொண்டாள்.

 

ஷார்மியை அவளின் வீட்டினர் வந்து அழைத்துச்சென்றனர் “அவங்களும் முடியாம இருக்காங்க ஆளுங்களும் வந்துபோகன்னு இருக்கு பிள்ளைக்கு மசக்கை வேற கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும்” என்று கேட்கச் சரி என்றுவிட்டான் கதிர்.

 

சிவபாலனுக்கு  புளிச்சக்கீரை கடையல் மிகவும் பிடிக்கும் என்று அன்பரசி சொல்லியிருக்க அன்று  அதைச் சுத்தம் செய்துகொண்டிருந்தாள் அடுப்பைப்பிடியில் அமர்ந்து அன்புக்கரசி மற்றவர்களுக்குச் சமைத்துக்கொண்டிருக்க.

 

“ஏன் அத்த அவர்தான் இங்க சாப்பிடுறதில்லயே உங்களுக்கு எப்படி தெரியும் இது அவருக்குப் பிடிக்கும்னு” என்றாள்.

 

அவள் சாதாரணமாகக் கேட்டுவிட அவருக்குத்தான் சுருக்கென்றது “உன் மகனைப் பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதே” என்ற உள்ளர்த்தம் அதில் இருப்பதாக அவரின் குற்றமுள்ள  நெஞ்சம் குத்திக்காட்டியது.

 

அது அம்மா சொல்லுவாங்க அவனுக்கு என்ன பிடிக்கும்னு… கீரை கடையிலும் சேப்பங்கிழங்கு வறுவலும் ரொம்ப பிடிக்கும் ஆனா அவங்க கையால கூட அவனுக்கு அதிகம் சாப்பிட குடுத்து வைக்கல,  பத்து வயசு வரைக்கும் அப்பா அம்மா இல்லங்குறதை தவிர குறை தெரியாமத்தான் வளத்தாங்க” என்றவரை பார்த்தவள்.

 

“அப்பா அம்மா ரெண்டு பேரும் இருந்தும் அவங்க இல்லாம வளர்றது  குறை இல்லையா அத்த” என்றாள் அவளை அதிர்ந்து பார்த்தார் அன்புக்கரசி,  அதைக் கேட்டுக்கொண்டு வந்த சிவபாலனும் அப்படியே நின்றுவிட்டான்.

 

“நான் ஆசை பட்டு விட்டுட்டு வரல பிரியாமா உண்மைய சொல்லனும்னா அந்த வயசுல நடந்ததை ஏத்துக்கவும் முடியாம வெளில வரவும் முடியாம  அதுக்குள்ள வயித்துல பிள்ளை,  இவன் எனக்கு வேண்டாத பிள்ளையாத்தான் பிறந்தான்” என்றபோது.

 

“அத்த” என்றவள் குரல் கலங்கி உடைந்து வந்தது “ப்ளீஸ் உங்க நிலைமை எனக்குப் புரியுது எல்லாமே சரிதான் ஆனா… ஆனா அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க அவர் பாவம் அத்த” என்றவள் கால் முட்டிகளில் முகத்தைப் புதைத்துத் தேம்பி தேம்பி அழுதாள்.

 

அவளால் அந்த வார்த்தையைத் தாங்கவே முடியவில்லை அவன் வேண்டாத பிள்ளையா இல்லையே தனக்கு அவன் வேண்டுமே,  அன்புக்கரசிக்கு நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டது போதும் இதுபோதும் அவன் வாழ்வு பிழைத்துக்கொள்ளும்.

 

மெல்ல அவள் அருகில் அமர்ந்தவர் “அது அப்போ அவன் பிறந்தப்போ என் மனநிலையை சொன்னேன் அப்போ நானும் சின்னப் பொண்ணு தானே எங்க அம்மா மட்டும் இல்லனா ஒருவேளை அப்போவே அவனை எங்கேயாவது தூக்கி கூடப் போட்டிருப்பேன்”.

 

“அப்போ அவ்ளோ மனசொடிஞ்சு இருந்தேன் ஏன் ஒருநாள் ராத்திரி அம்மா நல்லா தூங்கிட்டாங்க பிள்ளையைத் தூக்கிட்டு வெளில போய்ட்டேன் ஏதாவது கிணத்துலயோ குளத்துலயோ போட்டுடலாம்னு அம்மா வந்துட்டாங்க அன்னைல இருந்து என்கிட்டே அவனைக் குடுக்குறதே இல்ல நான் அவனுக்குத் தாய்ப்பால் கூடக் குடுத்ததில்ல” என்றார் விசும்பலோடு.

 

அவளுக்கு ஏனோ நெஞ்சடைத்தது இந்த நொடி அவன் அந்தத் துன்பத்தில் உழல்வதை போல அவள் உள்ளம் துடித்தது.

 

“எங்க அம்மாக்கு சத்யம் செஞ்சு குடுத்திருக்கான் போல அவங்களுக்கு ஏதாவது ஆயிட்டா என்கூடவே இருக்குறதாவும் என்னை… என்னை அம்மான்னு கடைசிவரைக்கும் கூப்பிடறதாவும்” என்றார்.

 

செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வேகமாக அறைக்குச் சென்றுவிட்டாள் சக்திப்ரியா  வந்த சுவடே தெரியாமல் கிளம்பிவிட்டான் சிவபாலனும்.

 

மனம் ஒரு நிலையிலே இல்லை சக்திப்ரியாவிற்கு கணவனின் அருகாமை தந்த தித்திப்பையும் தாண்டிக் காலை மாமியார் பேசியது மனதை என்னவோ செய்தது பத்து வயது வரை பாட்டியுடன்தான் இருந்தானாம் என்ன வாழ்க்கை வாழ்ந்திருப்பான்.

 

என்ன என்ன ஏக்கங்கள் இருந்திருக்கும் அந்தப் பிஞ்சு மனதில் தன்னுடைய சிறு பிராயம் கண் முன் நிழலாடியது எத்தனை அன்பு அரவணைப்பு பாதுகாப்போடு தன் நாட்கள் கழிந்தது,  வீட்டிற்கு செல்ல மனமே வரவில்லை அவனைப் பார்த்துவிட்டால் உடைந்துவிடுவேன் என்று விம்மிக்கொண்டிருந்தது இதயம்.

 

அவன் முன்னால் உடைந்து அழுதுவிட்டால் காரணம் கேட்ப்பானே என்ன சொல்லுவேன்,  நிலையில்லா மனதோடு சென்றவள் மங்கிய தெருவிளக்கின்  வெளிச்சத்தில் குழியைக் கவனைக்காமல் அதன் உள்ளே வண்டியை விட்டுக் கட்டுப்பாட்டை மீறிக் கீழே விழ அவளின் கால்மேல் விழுந்தது வண்டி.

 

நல்ல அடி வலி உயிர் போனது நல்லவேளை அந்தப் பக்கம் வந்தவர்கள் நிறுத்தி விசாரித்து அவளை எழுப்பி விட்டனர் அவர்களே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு  சாவியை அவளிடம் கொடுக்க ஒரு ஆட்டோவைப் பிடித்தவள் நேரே மருத்துவமனை சென்றாள்.

 

பிரச்சனையில்லை வண்டி விழுந்ததில் கொஞ்சம் ரத்தம் கட்டியிருந்தது பயப்பட ஒன்றுமில்லை என்றார் மருத்துவர் காலுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க சரியாயிடும் என்று மருந்தும் கொடுக்க வெளியில் வந்து இருக்கையில் அமர்ந்தவள் கணவனுக்கு அழைத்தாள்.

 

“ஹ்ம்ம்” என்றான் இப்பொழுதும் அவளிடம் மெல்லிய சிரிப்பு என்னவோ அவனின் “ஹ்ம்ம்” அவளைப் புன்னகைக்க வைக்கும்.

 

அவள் அமைதியாகவே இருக்க “சக்தி” என்றான் இப்பொழுது அழுத்தமாக இதுவும் அவளுக்குப் பிடித்தமே மருத்துவமனையின் பெயர் சொன்னவள் “வரீங்களா” என்றாள்.

 

“என்னாச்சு” என்றான் சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து.

 

“அது… அது கீழே விழுந்துட்டேன் சின்ன அடிதான்” என்றவள் கூறிமுடிக்கும் முன் அழைப்பைத் துண்டித்தவன் என்ன வேகத்தில் வந்தானோ அடுத்த பத்தே நிமிடத்தில்  அவள் முன் நின்றான்.

 

“என்னடி பண்ண” என்றவன் அருகில் அமர்ந்து அவள் காலை எடுத்து மடியில் வைக்கச் சக்திப்ரியா பதறிவிட்டாள்.

 

“அச்சூ என்ன செய்றீங்க ஒண்ணுமில்ல சின்ன அடிதான்” என்றாள் அங்கே  ஆட்களும் இல்லை என்றாலும் அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

 

“பேசாம இரு” என்றவன் “எங்க” என்றான் கால்களை ஆராய்ந்துகொண்டே.

 

“அது” என்றவள் தயங்க.

 

“என்னடி எங்க அடி பட்டுச்சு” என்றான்.

 

அவள் மெல்ல வலது காலின் முட்டிக்கு மேலே கையை வைத்து “வண்டி இங்க விழுந்துடுச்சு” என்றாள் சட்டென்று அவனிடம் அமைதி.

 

“டாக்டர் பாத்தாங்களா காயம் ஏதும் ஆகியிருக்கா” என்று கேட்டவன்  “லேடி டாக்டர் கிட்ட போலாம்” என்றான்.

 

“இவங்களும் லேடி டாக்டர் தான் காயம் ஒன்னும் இல்ல கொஞ்சம் ரத்தம் கட்டியிருக்கு அது கொஞ்சம் வலிக்குது” என்றாள் அவளை அழைத்துக்கொண்டு வந்தவன் வண்டியில் அமரவைத்து சீட்டிற்கு வர முத்துவிடமிருந்து அழைப்பு.

 

“அண்ணே பிரியாமா நல்லா இருக்கா வண்டியை நான் எடுத்துட்டேன் எந்த ஹாஸ்பிடல் நான் வரவா”  என்றான்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல நாங்க வந்திடுவோம் நீ அங்க பாத்துக்கோ ஆபிஸ் பூட்டிட்டு சாவி கொண்டுபோ காலைல சீக்கிரம் வந்திடு” என்றான்.

 

“சரிண்ணே” என்றவன் வைத்துவிட இவள் சீட்டில் சாய்ந்து விழிகள் மூடியிருந்தாள் முக்கிய சாலையிலிருந்து பிரிந்து ஒரு சிறு மண் சாலையில் நுழைந்தவன் கொஞ்சம் தொலைவில் ஓரமாக வண்டியை நிறுத்தினான்.

 

 அவள் என்னவென்று பார்க்கத் தண்ணீர் எடுத்து நீட்டினான் வாங்கி குடித்தவள் “பேஸ் வாஷ் செஞ்சுக்குறேன்” என்று வண்டியிலிருந்து கீழிறங்கி முகம் கைகளை நன்றாகக் கழுகிக்கொண்டாள்.

 

அவனும் இறங்கியவன் பின்னால் சீட்டை ஒருமுறை பார்த்து “இங்க படுத்துக்கோ ரொம்ப நேரம் உக்கார வேண்டாம்” என்றான்.

 

“இல்ல முன்னாடியே இருக்கேன்” என்றாள்.

 

அவளையே பார்த்தவன் பின் சீட்டில் அமர்ந்து “வா” என்றான் அவளிடம்.

 

அவளும் மெல்ல உள்ளே ஏற எட்டி கதவை அடைத்தவன் அவளை அப்படியே இடையோடு கைகொடுத்து தூக்கி தன் மடியில் அமர்த்தினான்.

 

“அத்தான் என்ன செய்றீங்க” என்றாள் பதறி.

 

“என்ன சொன்ன” என்றான் அவள் முகத்தைத் திருப்பி,  அவள் அமைதியாக இருக்க.

 

“அந்த வார்த்தையே வரமாட்டுது வாயில, குறிஞ்சி பூ மாதிரி எப்போவாவது ஒருதடவைதான் அம்மணி கூப்பிடுவீங்களோ” என்றான் அவளிடம் அப்பொழுதும் அமைதி.

 

கட்டைவிரலால் அவள் கன்னம்  வருடினான் அவளுள் பதட்டம் தொற்றிக்கொள்ள அங்கிருந்தே எட்டி அவளின் ஹாண்ட்பேகை எடுத்து ஒரு பேடாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள் அவன் அவளையே பார்த்திருக்க “ரொம்ப டென்ஷனா இருக்கு” அதான் என்றாள்.

 

“காலைல எதுக்குடி அப்படி அழுத”  என்றான்.

 

அவள் அவனை அதிர்வோடு பார்த்து “கேட்டுடீங்களா” என்றாள்.

 

“இதெல்லாம் எப்போவோ தெரியும் இருந்தாலும் அவங்க சொல்லிக் கேக்கும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யுது” என்றவன் அடர்ந்த தாடிக்கொண்ட தன் கன்னத்தை அவளின் பட்டுக் கன்னத்தோடு இழையவிட்டு “சக்தி” என்றான் அடர்ந்த குரலில்.

 

“கொஞ்சம் இந்த வலியைக் குறையேண்டி” என்றான் அவள் இடையை அழுத்தமாகப் பற்றி, அன்று எனக்கு இந்த வலி வேண்டும் வலி கொடு என்றான் இன்று சுமக்க முடியவில்லை வலியைக் குறையேன் என்கிறான்.

 

“அத்தான் நான்…” என்று துடித்த அவள் இதழ்களை மெல்ல மெல்ல தீண்டி அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்துக்கொண்டான்,  நிறுத்தி நிதானமாக ஆழ்ந்த இதழ் முத்தம் இதுவரை அவனுக்கு மட்டும் கொடுக்காமல் அவள் வைத்திருந்த பேடாவின் இனிப்பு அவள் இதழ்கள் வழி அவனைச் சென்று சேர்ந்தது.

 

“இப்படி எனக்குத் தரணும்னுதான் இதுவரைக்கும் எனக்கு மட்டும் தராமயே இருந்தியா” என்றான் அவள் நெற்றியில் முட்டி அவன்  விரல்களை நனைத்தது அவளின் விழிநீர்.

 

“மச் சக்தி” என்று அதட்டினான்.

 

“உங்க வலியை எப்படி குறைக்க சொல்லுங்களேன் என்ன செஞ்சா குறையும்” என்றாள் அவன் கன்னம்பற்றி.

 

“என் கூடவே இரு இப்படியே என்கூடவே என்னை விட்டுப் போயிடாதடி என் பாட்டிக்கு அப்புறம் எனக்கே  எனக்குன்னு  கிடைச்ச ஒரே சொந்தம் நீ,  இந்த மனசு அவ்ளோ பெரிய வலியெல்லாம் தாங்காதுடி” என்றவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் சிவாவின் சக்தி.

 

தேடல் வரும்
பொழுது என் உணர்வுகளும்
கலங்குதடி காணலாய்
கிடந்தேன் நான் உன்
வரவால் விழி திறந்தேன்
 இணை பிரியாத
நிலை பெறவே நெஞ்சில்
யாகமே தவித்திடும் போது
ஆறுதலாய் உன் மடி
சாய்கிறேன்
 காலம் தோறும்
நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் ஞாபகங்கள் தினம்
தினம்
கனவெல்லாம்
நீ தானே விழியே உனக்கே
உயிரானேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!