Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 35

அத்தியாயம் 35

 

“காத்திருந்து பழி வாங்கறியோ?” என மகேஸ்வரன் கேட்க,

 



Advertisement

“உங்களை எதுக்கு நான் பழி வாங்கிகிட்டு? என் பையனை அவன் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ விடாம ஒரே இடத்துல தேக்கி வச்சதுக்கே உங்களுக்கு நான் என்ன வேனா பண்ணி இருக்கலாம்! அப்பவே சும்மா இருந்துட்டேன். இப்ப enna பண்ணிட போறேன்?” என்ற லதாவின் எதிர்பேச்சுக்களை எதிர்பார்க்கவே இல்லை மகேஸ்வரன்.

 

“நீ வேணும்னே பேசுற. இத்தனை நாளும் என்னைக் கண்டாலே சத்தமில்லாம நிக்கிறவ. இன்னைக்கு நான் முடியாம படுத்ததும் இவ்வளவு பேச்சு!” என பல்லைக் கடித்தார்.

Advertisement

 

Advertisement

“அதான் இல்லைனு சொல்றேன் இல்ல? நான் சொன்னது தான். எனக்கு எல்லாரையும் விட ஈஸ்வர் வாழ்க்கை முக்கியம். அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வர்ற பொண்ணு வச்சு தான் நம்ம குடும்பம் எப்படி இருக்குனு நாம பார்க்க முடியும். அதுக்கு சரியான பொண்ணு கிடைச்சும் உங்க அகம்பாவத்தால எல்லாரையும் உடைச்சு போட்டுட்டு பேச்சு வேற! இதுக்கு மேல பேசி என்னையும் பேச வைக்காதிங்க. ஏதாச்சும் வேணும்னா சொல்லுங்க இல்லனா நான் போய் என் வேலையை பாக்குறேன்!” என சிடுசிடுவென்று லதா சொல்ல,

 

“உனக்கு அந்த வேலைக்காரப் பொண்ணை மருமகளா கொன்றுவேன் வரணும். அதுக்கு இவ்வளவு பேச்சு. இந்த நேரத்தையும் யூஸ் பண்ணிக்குற!” மகேஸ்வரன் பல்லைக் கடித்து சொல்ல,

Advertisement

 

‘என்ன ஈஸியா கண்டுபிடிச்சிட்டாரு!’ இப்படி தான் இருந்தது லதா எண்ணம்.

 

“போய் வேலையை பாரு. நீ இல்லைனா இங்க நான் அப்படியே கிடந்துட போறேன்னு நினைப்பு!” என்று அவர் சொல்லவும் லதா நகர்ந்துவிட, அடுத்த ஆறு மணி நேரத்திற்கு அவர் அருகே யாரும் வரவே இல்லை.

 

மகனாவது தன்னைப் பார்த்துவிட்டு தான் வெளியில் செல்வான் என நினைத்திருக்க, அவனை பார்க்க விடாமல் லதா அனுப்பி வைத்தது அவருக்கு தெரியாதே!.

 

நிஜமாய் லதா இதை வேண்டுமென்றே தான் செய்து கொண்டிருந்தார். இத்தனை நாட்கள் நானும் இப்படி தானே இருந்தேன்? இப்படி தானே வரும் பொழுதும் போகும் பொழுதும் என பேச்சு வாங்கிக் கொண்டிருந்தேன்? அனுபவிக்கட்டும் எனும் எண்ணம்.

 

ஒரு மாதம் என்றாலும் அதை லாபம் என்ற கணக்கில் தான் சேர்த்தார். அவருக்கு புரிகிறதோ இல்லையோ தனக்கு ஒருவித நிம்மதி என்றும் அதில் உறுதியாய் இருந்தார்.

 

இன்னும் இரண்டே மாதங்கள். பல்லவிக்கு கொடுக்க வேண்டிய அணைத்துக் கட்டணங்களும் வேறு கொடுத்தாகியாயிற்று. இனி எப்படி அவளை சந்திக்க என சிந்தனையோடு தான் இருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

அவள் பின்னேயே சென்றோ தேடி சென்றோ தன் காதலை சொல்ல மனம் இடம் தரவில்லை. அதற்காக பாகுபாடு என்று இல்லாமல் அதை siruபிள்ளைத்தனமாக நினைத்தான் ஈஸ்வர்.

 

அன்னையிடமும் அப்படி சொல்ல, “நல்லா நினைச்ச போ! உன் இடத்துல நான் இருந்தா உன் அப்பா இப்படி கால் உடைஞ்சு வீட்டுல இருக்குற நேரத்தை யூஸ் பண்ணி கல்யாணமே பண்ணிட்டு வந்திருப்பேன்!” என அவன் தோளில் ஒரு அடி வைக்க,

 

“அட போங்க ம்மா. எவ்ளோ ஈஸியா சொல்றிங்க!” என்றான் சலித்தான் அவன்

 

“ஆமாமா! அம்மாக்கு இப்ப இருபது வயசுக்கு வருது பாரேன் ஆசை!” என கிண்டல் செய்வாள் அஞ்சலி.

 

இப்படி வாரிவிட்டு சிரிக்கும் சமயங்களில் அஞ்சலி சத்தம் மட்டும் மகேஸ்வரன் இருக்கும் அறைக்குள் கேட்கும். ஈஸ்வர் லதா மெதுவாய் பேசி மெதுவாய் சிரிக்க, அஞ்சலி கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்து தந்தையிடம் பேச்சும் வாங்கிக் கொள்வாள்.

 

“ஒருத்தன் உடம்பு சரி இல்லாம வீட்டுல இருக்கேன்ற நினைப்பு இருக்கா. அப்படி சிரிக்குற?” என அத்தனை பேசுவார் மகளை.

 

“எனக்கு உடம்பு சரியில்லாதப்ப பையன் கல்யாணத்தையே முடிக்கப் பார்த்தவர் தானே நீங்க? உங்களுக்கு வலிக்குதுன்னு அவளா அழ முடியும்?“ என எதிர்த்து பேசி அஞ்சலியை மீட்டுவிடுவார் லதா.

 

இப்படி தான் நாட்கள் நகர்ந்தது. லதாவைப் பிடித்தபடி வீட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்தவர் லதா தோளில் கைபோட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்து அமர ஆரம்பித்தார்.

 

மீண்டும் அவர் அறைக்கு ஓய்வெடுக்க செல்ல வேண்டும் என்றால் அது லதாவாய் மனம் வைத்து வந்தபின் தான் செல்ல முடியும் என்பதால் பல்லைக் கடித்து அமர்ந்திருப்பார்.

 

“எங்கேயும் போகனுமா? அப்புறம் நான் வேலையா இருக்கும் போது கூப்பிட கூடாது!” என்று லதா கேட்கும் பொழுது இரண்டு மணி நேரங்களாவது குறைந்தது ஆகி இருக்கும்.

 

“சரியாகட்டும் அப்புறம் இருக்கு இவளுக்கு!” என அவரும் பொறுமை காக்க, தங்கள் அலுவகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த கீர்த்திஸ்வரன் வழியில் சித்ராவைப் பார்த்தவன் வண்டியை நிறுத்தி அவரருகே வர, அவரும் அவனைக் கண்டு சிறு புன்னகை கொடுத்து அவனிடம் வந்தார்.

 

“எப்படி இருக்கீங்க அத்தை?” என்று ஈஸ்வர் கேட்க,

 

“நல்லாருக்கேன் ப்பா. அம்மா எப்படி இருக்காங்க. அண்ணே நல்லாருக்காங்க இல்ல? “ என்று கேட்க, சாதாரணப் பேச்சிலேயே மகேஸ்வரன் நிலையை கூறி இருந்தான் ஈஸ்வர்.

 

அதற்க்கும் நிஜமான கவலையோடு அவனிடம் விசாரித்தவர், “பல்லவி அப்பாவோட தூரத்து சொந்தத்துல இருந்து பல்லவியை பொண்ணு கேட்டு வந்திருந்தாங்க!” என்று அவனிடம் சொல்ல, பெரிய அதிர்வு தான் என்றாலும் அதை அவரிடம் காட்டிக் கொள்ளாதவனுக்கு மனம் அங்கேயே தேங்கி நின்றுவிட்டது.

 

அந்த எண்ணத்தோடு வீடு வந்து சேர, மகேஸ்வரன் ஹாலில் அமர்ந்திருந்தார்.

 

“எல்லாம் இவரால!” என மகேஸ்வரனைkக் கண்டதும் எரிச்சலில் நினைத்தவன் எதுவும் சொல்லாமல் நகரப் போக,

 

“ஈஸ்வர் இங்க வா!” என அழைத்து அருகில் அமர கூறினார் மகேஸ்வரன்.

 

‘இவன் எப்ப வந்தான்?’ என கணவன் குரலில் தான் சமையலறையில் நின்ற லதா மகனைக் கண்டு கையில் மோருடன் வர,

 

“சாப்பிடுறியா ஈஸ்வர்?“ என்றார் அவர்.

 

அவரைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துவிட்டு அமைதியாய் இருக்க, அதன் வித்தியாசத்தில் கண்கள் சுருங்கப் பார்த்த லதா,

 

“என்ன ஈஸ்வர்?“ என்றார்.

 

சொல்லவா வேண்டாமா என சில நொடி தான் அவனுக்கும் யோசனை. அதான் அனைத்தும் கைமீறி விட்டதே! இனி இவருக்கு தெரிந்தால் என்ன என ஒரு முடிவுக்கு வந்தவன்,

 

“இப்ப தான் வழில சித்ரா அத்தையைப் பார்த்தேன்!” என்றான் அதுவும் கோபமாய்.

 

லதாவிற்கு முன், “சித்ராவா? ஏன் என்ன பேசினா? நீ ஏன் அவகிட்ட எல்லாம் நின்னு பேசுற?“ என மகேஸ்வரன் முந்திக் கொண்டு கேட்க,

 

“ப்ச்! சும்மா இருங்க ப்பா. எல்லாம் உங்களால தான்!” என்றுவிட்டான் உடனேயே. அதுவும் அத்தனை வேகமும் கோபமும் அவன் குரலில்.

 

“என்னாச்சு ஈஸ்வர்!” என்றார் லதா மீண்டும்.

 

“என்ன ஆகணும்? பல்லவிக்கு அவங்க அப்பா குடும்பத்துல இருந்து பொண்ணு கேட்டு வந்தாங்களாம்” என்றான் எரிச்சலோடு.

 

“பொண்ணுன்னு இருந்தா வர tதான் செய்வாங்க. இதுக்கா டென்ஷன் ஆகுற. நான் தான் அன்னைக்கே சொன்னேனே. நீ தான் லேட் பண்ற” என்றார் அன்னையும்.

 

“என்ன? என்ன லேட் பன்றான்? எனக்கு தெரியாம என்ன பிளான் பண்ணி வச்சிருக்கீங்க?” என?மகேஸ்வரன் கேட்க,

 

“நீங்க பேசாதீங்க. இந்நேரம் அவன் கல்யாணமே முடிஞ்சிருக்கும். சும்மா இருக்காம அங்க போய் பிரச்சனை பண்ணிட்டு வந்துட்டு பேச்சு வேற. இவன் எப்படி இருக்கான் பாருங்க!” என லதா கோபமாய் கேட்க,

 

“ஏன் அவ மட்டும் தான் பொண்ணா?” என்றார் அப்போதும்.

 

“நீங்க இப்படியே சொல்லிட்டு இருங்க ப்பா!” என இப்போது ஈஸ்வர் சொல்ல, மகேஸ்வரன் பார்க்க,

 

“அதான் பொண்ணு கேட்டு போயிருக்காங்களே! அவளும் உங்க விருப்பம்ன்னு சொல்லிட்டாளாம்!” என பொருமிக் கொண்டே சொல்லியவன்,

 

“ஆனா ஒண்ணு ப்பா. அவ யாரையும் கல்யாணம் பண்ணிகிட்டு போய்ட்டா அவ்வளவு தான். நான் இப்படியே தான் உங்க பையனாவே உங்க கூடவே வச்சு பார்த்துக்க வேண்டியது தான் நீங்க!” என்றான் கோபத்தோடே.

 

அதில் மகேஸ்வரன் அதிர்ந்தவர், “என்ன இப்படி பேசுறான்!” என மனைவியிடம் கேட்க,

 

“பின்ன! இதுக்கு தானே ஆசைப்பட்டிங்க? கூடவே வச்சு அழகு பாருங்க!” என்றார் லதாவும்.

 

“பல்லவி அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டாளே ஈஸ்வர்?” என லதா கேட்க,

 

“அவளுக்கு அவங்க அம்மா என்ன சொன்னாலும் சரியாம். அதுவும் அந்த பையன் ஐடில ஒர்க் பண்றானாம். எதுவும் வேண்டாம் பல்லவியை மட்டும் குடுங்கனு கேட்குறானாம்!” எனும் போதே நறநறவென இவன் பல்லைக் கடிக்க,

 

“இதே நாம கேட்டிருந்தாலும் யோசிக்காம பொண்ணை தந்திருப்பா சித்ரா!” என குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார் லதா கணவனை.

 

“இவளும் சும்மா இல்ல. எல்லாமே யோசிச்சிருப்பா. கல்யாணத்துக்கு அப்புறம் வேலை பார்த்து காசை மட்டும் அனுப்புற மாதிரி கூட யோசிச்சிருப்பா!” என்ற ஈஸ்வருக்கு கோபமான கோபம் பல்லவி மேலும்.

 

“இப்போ என்ன பண்ண ஈஸ்வர்?” லதா கேட்க,

 

“என்கிட்ட கேட்டா? நானும் பொறுமையா தான் இருந்தேன். அதுக்கு தான் இப்படி… இன்னும் ரெண்டு மாசம் இருக்கேனு நினைச்சேன்!” என்றவன் மனதில் கனல் கூட எரிச்சலாய் உணர்ந்தான்.

 

“நான் பேசுறேன் ஈஸ்வர்!” லதா சொல்ல,

 

“எதுவும் வேண்டாம். பேசாம இருங்க ம்மா!” என்றவன் எழுந்து அறைக்கு செல்ல, கணவனை முறைத்துக் கொண்டு வந்த மோரை மீண்டும் உள்ளே கொண்டு சென்றுவிட்டார் லதாவும்.

 

மகன் இத்தனை கோபமாய் பேசி பார்க்காத மகேஸ்வரன் அதையும் கூடவே மனைவியின் இந்த பரிமாணத்தையும் என பார்த்து ஒன்றும் புரியாத நிலையில் அங்கேயே அமர்ந்திருந்தார்.

 

ஆக மொத்தம் தன் பேச்சைக் கேட்டு எல்லாம் இவர்கள் திருமண விஷயத்தை தள்ளிப் போடவில்லை என்று தெளிவாய் தெரிந்தது அவருக்கு.

 

அறைக்கு வந்தவனுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை. தந்தைக்கான நேரம் கொடுத்து, பல்லவிக்கு அவள் படிப்பதற்கான நேரம் கொடுத்து என இவன் நேரங்களை எல்லாம் சேமித்து வைத்திருக்க, இங்கே அனைத்தும் கைமீறி போவதிலும் போனதிலும் அத்தனை கோபம்.

 

இன்னார் மேல் என்றல்லாமல் அனைவரின் மேலும் என அவன்மேலுமே அவனுக்கு கோபம்.

 

கிட்டத்தட்ட முடிவும் செய்து விட்டவராய் சித்ரா சொல்லி இருக்க, மனம் சமன்படவே இல்லை அவனுக்கு.

 

அதன்பின் வெளியில் செல்லவும் தோன்றாமல் அறைக்குள்ளேயே இருந்து கொண்டான். மகனை அவ்வபோது மாடியில் ஒரு கண் வைத்து எதிர்பார்த்து அமர்ந்திருந்த லதா கணவனை இன்னும் அறைக்குள் அழைத்து சென்றிருக்கவில்லை.

 

ஒருமுறை மகேஸ்வரன் தனக்கு உதவ அழைத்ததற்கு, “என் பையன் எவ்வளவு மனசு கஷ்டத்தோட ரூம்க்கு போனான். இன்னும் வரலையேன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு?“ எனக் கேட்டிருக்க, மறுபடியும் அழைக்கவே பயந்து அவருமே மகன் வருகிறானா எனப் பார்த்திருந்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!