Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 7

அத்தியாயம் 7

 

அந்த வீட்டிற்கு தேவையான அனைத்தும் மகேஸ்வரனின் உழைப்பில் இருந்து வந்தது தான். அதை மறுக்க முடியாது.


Advertisement

 

இப்பொழுதும் கூட அதே தான் என்றாலும் கீர்த்திஸ்வரனின் உழைப்பும் சேர்ந்து இப்பொழுது அந்த வீட்டை தாங்கிக் கொண்டிருப்பதை ஏற்று தான் ஆக வேண்டும்.

Advertisement

Advertisement

 

இது இப்படி தான் என்று லதா அந்த வீட்டிற்கு மருமகளாய் வந்த பொழுதில் இருந்தே அனைத்தும் எழுதப்படாத விதிகள் தான் அனைத்தும்.

Advertisement

 

எங்கும் எதையும் நின்று ரசித்து அமர்ந்து என ஒய்வாய் ஓரிடத்தில் நின்றதே இல்லை மகேஸ்வரன். அதில் லதாவையும் சேர்த்து மூழ்கடித்துவிட்டது தான் பரிதாபம்.

 

இதை செய் இதை செய்யாதே எனும் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்ட வாழ்க்கை தான் லதாவினுடையது.

 

ஆரம்பத்தில் அழுது புரண்டு ஏங்கி தவித்து இந்த வாழ்க்கை வாழவா என நினைத்த நேரத்தில் தான் கீர்த்திஸ்வரன் உதயம். அவனுக்காக தான் அவரின் வாழ்க்கை என்றானது அதன்பின்.

 

எல்லாம் கடமைக்கு என்ற மகேஸ்வரனைப் பற்றி ஒரு கட்டத்திற்கு மேல் மனதில் இருந்து வெறுத்து போனது அவருக்கு. அதன்பின் அனைத்துமே கடமையோடு மகனின் அணைப்பில் என்ற பெயர் தான்.

 

மகேஸ்வரனை திருத்தவெல்லாம் லதா நினைக்கவே இல்லை. ஆசை, பாசம், காதல், உறவு, நட்பு, அன்பு என்று எதையும் அறியாத அறிந்து கொள்ள விரும்பாத நபர் தான் மகேஸ்வரன். அதை பாடம் சொல்லி எல்லாம் உணர வைக்க முடியுமா என்ன?.

 

நீ உன் போக்கில் இருந்து கொள். நான் இப்படி தான்! என்பதாய் லதாவும் இருந்ததால் தான் கீர்த்திஸ்வரனை வளர்க்க முடிந்தது அவருக்குமே.

 

அதற்கு ஈடாய் இதோ முழு உருவமாய் மகன் என்னும் க்ரீடம் லதாவிற்கு கிடைத்திருந்தது.

 

அத்தனை அன்பானவன் கீர்த்திஸ்வரன். அன்னை தங்கை தாண்டி அதிகம் யாரிடமும் அவன் பேசி யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு உறவுகள் நட்புகள் என யாரையும் வீட்டிற்குள் அனுமதித்ததும் இல்லையே கீர்த்திஸ்வரன்.

 

அப்படியே யாருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் தான் இத்தனை நாட்களும் சென்று கொண்டிருந்தது மகேஸ்வரன் குடும்பத்தில்.

 

இதில் அவரது தொழில் நண்பராய் இருவரை மகேஸ்வரனே தேர்ந்தெடுத்து அவர்களுடன் அத்தனை இறுக்கமாய் நட்பு பாராட்டி இதோ அவரில் ஒருவரின் மகளை தன் மகனுக்கு என பேசி முடித்து அனைத்தும் அவர் விருப்பமும் அவர் எண்ணமும் மட்டும் தான்.

 

ஈஸ்வரிடம் கூட அவர் முடிவெடுத்த பின் தான் சொல்லி இருந்தார். அவர் இருக்கும் இருப்புக்கு லதா மட்டும் தன் மகனைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் மகேஸ்வரன் மகன் என்ற அடையாளத்தோடு கீர்த்திஸ்வரன் வேறு ஒரு கோணத்தில் தான் இந்த வாழ்க்கையை அவன் வாழ்ந்திருப்பான்.

 

இப்பொழுது பல்லவி கணவனைப் பற்றி கேட்கவும் மீண்டும் மனதில் அனைத்தும் அலைஅலையாய் நினைவுகளை எழுப்பி சென்றது லதாவிற்கு.

 

“நான் ரொம்ப பேசுறேன் இல்ல? அம்மா அடிக்கடி சொல்லுவாங்க எனக்கு அறிவே இல்லைனு. பேசவே தெரியல” என்று பல்லவி சொல்லும் வரை தன் நினைவுகளில் தான் இருந்தார் லதாவும்.

 

“ஏன்? அப்படி என்ன தெரியாம பேசிட்ட?” என்று லதா சிரிக்க,

 

“தப்பு தப்பு! உங்க பையனை உங்ககிட்டயே பேசினது தப்பு. அதை அவங்க கேட்டது பெரிய தப்பு. இப்ப உங்களுக்கு ஹஸ்பண்ட்டையும் கேட்டேனே! அது தப்புக்கெல்லாம் தப்பு. அம்மாகிட்ட சொன்னேன். தோலை உரிச்சிடுவாங்க!” என்றாள்.

 

பேசும் போது ஏதோ வேகத்தில் லதாவிடம் கொட்டிவிட்டவளுக்கு நேரம் ஆக ஆக தான் தன் செயலே புரிந்தது.

 

எதையும் அன்னையிடம் பகிர்ந்து கொண்டு மாட்டிக் கொள்வதை போல இப்பொழுது லதாவிடமும் அதே மாதிரியான நிலை.

 

அதுவும் கீர்த்திஸ்வரன். அவனைப் பற்றி தேவையே இல்லாமல் பேசி அதை அவனும் கேட்டு… என்ன நினைத்திருப்பான் தன்னை என நினைத்த நொடியே உன்னை விட மோசமாய் நினைக்க முடியுமா என்று குத்திக் காட்டவும் தயங்கவில்லை அவள் மனம்.

 

“அந்த நேரம் உனக்கு தோணுச்சு சொல்லிட்ட.. அதையே நினைச்சு இப்ப அழுற மாதிரி நிக்குற!” என்ற லதாவிற்கும் அவள் நிலை புரிய தான் செய்தது.

 

“என்கிட்ட தானே சொன்ன? விடு ஒண்ணுமில்ல” என்று சமாதானமாய் அவர் சொல்லியும்,

 

“இதே மாதிரி தான் யார்கிட்டவா இருந்தாலும் சொல்லி இருப்பேன். அதுக்கு தான் அம்மா திட்டுறதே” என்றாள் பார்க்க பாவமாய்.

 

அதன்பின் அன்றைய நாள் முழுதும் அமைதி தான் அவளிடம். லதா தான் பேசிக் கொண்டும் அவள் குடும்பத்தைப் பற்றி அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டும் என அவர் நேரத்தை செலவிட்டார்.

 

பல்லவியை அவள் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பின் இன்னும் கவலையானது லதாவிற்கு.

 

அப்போதும் மகன் சொல்லியதை உடனே கூறவில்லை. அதனோடே சொல்லி அவள் எதுவும் நினைத்துக் கொள்ள கூடாதே என விட்டுப் பிடித்தவர் மாலை ஐந்து மணி இருக்கும் பொழுது அந்த பேச்சை எடுத்தார் பல்லவியிடம்.

 

“உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரு. ஈஸ்வர் உன்னை கரஸ்ல படிக்க சொன்னான். நீ எந்த காலேஜ்னு மட்டும் சொல்லு. மத்த எல்லாம் அவன் பார்த்துப்பான்” என பேச்சினூடே லதா சொல்ல,

 

“நான் உங்ககிட்ட வேலை கெட்டதா நியாபகம் லதாம்மா!” என்றவள் அழைத்த விதத்தில் இன்னும் விரிந்தது லதாவின் புன்னகை.

 

“ஆமாம்மா! ஆனா குட்டிப் பொண்ணா இருக்கியாமே! நான் என்ன பண்ணுவேன்?” என்றார் அவரும் அவளைப் போலவே.

 

“அப்போ வேலை தர மாட்டாங்க?” என்று முறைத்து அவள் கேட்க,

 

“அப்படி இல்லை டா! நீ கரஸ்ல படிச்சுட்டே பார்ட் டைம் வேலைக்கு போற மாதிரி பார்க்க ரெடி பண்றதா சொன்னான்!” என்றார்.

 

“பார்ட் டைமா? அதுல வர்ற காசு எப்படி என் காலேஜ்க்கும் என் அம்மாகும் பத்தும்?” பல்லவி கேட்க,

 

“அவ்ளோ காசு வேணுமா? ஆனா அதுக்கு டிகிரி ரொம்ப முக்கியமாமே!” என்ற லதா,

 

“நீ இந்த ஒரு வருஷ கேப் மட்டும் விடாம இருந்திருந்தால் அந்த டிகிரியை அடுத்த வருஷம் வாங்கி இருக்கலாம்!” என்று சொல்லி கவலை கொள்ள,

 

“அது தான் என் தாத்தாக்கே பொறுக்கல போல. போய் சேர்ந்துட்டாங்க. அப்படி மட்டும் முடிச்சிருந்தா யாருக்கும் கஷ்டம் இல்லாம கேம்பஸ்ல செலக்ட் ஆகுற வரை யோசிச்சு வச்சிருந்தேன் லதாம்மா. எல்லாம் போச்சு. முடிஞ்சு ஒரு வருஷமும் ஆகிப் போச்சு!” என்றாள் நினைவுகளின் தாக்கங்களோடு.

 

“சரி! அப்போ ஈஸ்வர்கிட்ட நான் சொல்றேன். மூணு வருஷம் படி. அப்புறம் இவன் ஆபீஸ் என்ன? அதை விட பெரிய ஆபீஸ்க்கே வேலைக்கு போகலாம் நீ!” என்று லதா அவளைக் கண்டு சொல்ல,

 

“அவ்ளோ தான்! சித்ரா துணிக்கு தைக்குற ஊசி வச்சு என் வாயை தச்சிடும். படிக்க நான் போய்ட்டா அம்மாவாய் யார் பாக்குறது? அவங்க பாவம்ல?” என விளையாட்டுத்தனமும் குறும்புத்தனமும் என அவள் பதில் சொல்ல, அதுவும் சரி தான் என்று விழித்தார் லதா.

 

“வேற என்ன தான் பண்றது? இப்படி வெகுளிப் பொண்ணா இருந்தா உன் அம்மா எப்படி வெளில அனுப்புவா? அதுக்கு பயந்து தான் அவ இங்க அனுப்பினானு எனக்கு இப்ப தான் புரியுது!” என்று லதா சொல்ல,

 

“அப்போ எதுவுமே பண்ண முடியாதா?” என்று பல்லவி பதிலாய் கேட்க,

 

“தெரிலயே! நீ படிக்குறேன்னு சொன்னா காலேஜ், கரஸ் எதுவா இருந்தாலும் ஈஸ்வர் பார்த்துப்பான். நீ தான் சொல்லணும்!” லதா சொல்ல,

 

“அம்மாகிட்ட கேட்கணும் லதாம்மா. படிச்சே ஆகணும். இல்லைனா அம்மாக்கும் கஷ்டம்.. பின்னாடி என் ஃபியூச்சர்?” என அவள் யோசிக்க,

 

“அவ்ளோ தெரியுது இல்ல உனக்கு? அப்போ நீ நிச்சயமா ஒரு நல்ல இடத்துக்கு போய் சேருவ!” என்று கூறியவர்,

 

“சித்ராகிட்ட நான் பேசுறேன்!” என்றார்.

 

அடுத்த சில நிமிடங்களில் அஞ்சலி வந்த பின் அவளோடும் சில நிமிடங்கள் இருந்த பல்லவி பின் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

 

அஞ்சலி தன் அன்னையிடம் தன் பள்ளியில் நடந்த கதைகளை எல்லாம் அன்னையிடம் பேசிக் கொண்டிருக்க, கீர்த்திஸ்வரன் நுழைந்தான் அந்த அறைக்குள்.

 

“காபி சொல்லவா ஈஸ்வர்?” லதா மகனின் களைத்த முகம் கண்டு கேட்க,

 

“தேவி அக்காகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் ம்மா. நீ எப்ப வந்த அஞ்சலி?“ என கேட்டு பேசிக் கொண்டு இருந்தவன் காபியையும் குடித்து முடித்து அன்னை அருகேவே அமர்ந்திருந்தான்.

 

“ஹோம் வொர்க் நிறைய இருக்கு ண்ணா. நான் முடிச்சுட்டு வர்றேன்!” என அஞ்சலி எழுந்து செல்ல, யோசனையாய் நீண்ட நேரம் மௌனமுமாய் அமர்ந்திருந்தாம் கீர்த்திஸ்வரன்.

 

“எதாவது சொல்லனுமா ஈஸ்வர்?” லதா கேட்க,

 

“ஹ்ம்!” என அவரைப் பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டினான்.

 

“என்னனு சொல்லு ஈஸ்வர். ரொம்ப யோசிக்குற? காலைல லாவண்யா அப்பாவை பார்க்க போனீங்களே! எதாவது பிசினஸ் டீலா?” என நேரே விஷயத்தைப் பிடித்தார் லதா.

 

“ஹ்ம் ஆமா ம்மா! சென்னை அவுட்டர்ல ஒரு லேண்ட். அதை வாங்குறதை பேச தான் கூட்டிட்டு போனாங்க!” என்றான்.

 

“நீயும் தெரிஞ்சிக்கணும் நினைக்குறாரே உன் அப்பா. பரவால்லை இல்ல?” என லதா கேட்க,

 

“எல்லாமே தெரிஞ்சிக்கணும் நினைக்குறாங்க ம்மா. அதான் யோசிக்குறேன்!” என்றான் அவனுமே.

 

“என்னனு சொல்லு ஈஸ்வர். உனக்கு அந்த லேண்ட் சரினு தோணலையா?” என அவன் முகம் பார்த்தே லதா பதில் சொல்ல,

 

“லேண்ட் பிரச்சனை இல்லை ம்மா. அதுவும் அவங்க வாங்குற முடிவுல தான் இருக்காங்க. கன்ஃபார்ம் பண்ணிட்டு தான் கூட்டிட்டு போனாங்க. ஆனா இப்பவே கல்யாணம்னு பேசுறாங்க” என்று சொல்லவும் தான் லதாவிற்கு விஷயமே புரிந்தது.

 

லதாவிற்கும் அதில் உடன்பாடு இல்லவே இல்லை. இந்த வயதிலேயேவா? என்று அவருக்குமே கொஞ்சம் விருப்பமின்மை தான்.

 

அவன் அனுமதி எல்லாம் கேட்கவே இல்லை லாவண்யா விஷயத்தில். அனைத்தும் கணவர் செயல் தான். அதற்காக வேண்டாம் என்று மகனும் சொல்லவில்லை. அப்போதைக்கு வேண்டான்னு என்று சொல்லி இருந்தான். இதோ மீண்டுமாய் அந்த பேச்சு. லதாவிற்கும் இப்பொழுது யோசனை தான் இதில் தான் என்ன செய்ய என்று.

 

“இன்னும் ஒரு ரெண்டு வருஷமாச்சு போனா பரவால்லைன்னு தோணுதும்மா. நான் ஃபீல்டுக்குள்ள வந்தே ஒரு வருஷம் தான் ஆகுது. அப்பா ஏன் புரிஞ்சுக்க மாட்றாங்க?” என்று நெற்றியை நீவிக் கொண்ட ஈஸ்வர்,

 

“இதுல அவ வேற! இப்ப கல்யாணம் பண்ணலைனா அவ்ளோ தான்னு என்னையே மிரட்டுறா!” என்றவன் முகத்தில் லாவண்யா மீதான பிடித்தம் என்பது கொஞ்சமும் தென்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!