Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 39

அத்தியாயம் – 39

 

அடுத்த நாள் சூரிய ஒளி ஜன்னல் வழியே அறைக்குள் நுழைய, முதலில் கண்விழித்தது மிருதுளா தான், ரன்வீரின் மார்பில் தலைசாய்த்துப் படுத்திருந்தவளுக்கு, மெல்ல இரவில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் நினைவில் வரத் தொடங்கின, அந்தத் தீண்டல்கள், அந்தக் காதல் மொழிகள் எல்லாம் நினைவில் வந்தாலும் அவளுக்குள் இப்போது வெட்கம் வரவில்லை…

​மெல்ல அவனை விட்டு விலகி அமர்ந்தவள், தன் நெற்றியில் கைவைத்தபடி யோசனையில் ஆழ்ந்தாள், இரவில் அவனது முத்தத்திலும், அவன் காட்டிய அதீத அன்பிலும் உருகி, தன்னை மறந்து அவனோடு இழைந்துவிட்ட அந்தத் தருணங்களை எல்லாம் நினைக்கையில் இப்போது அவளுக்கு எரிச்சலாகத் தான் இருந்தது…



Advertisement

​’என் தாத்தாவைக் கொன்னவன் இவனா இல்லையான்னு இன்னும் உறுதியா தெரியல, அதுக்குள்ள அவன் பண்ணின சின்ன நாடகத்துல மயங்கி, இப்படி உடலளவுலயும் இவன்கிட்ட தோத்து போயிட்டேனே!’ என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு தன் மீதே கோபமும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தது.

​சோர்வில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ரன்வீரைத் திரும்பி முறைத்துப் பார்த்தவள்.. “நல்லா மயக்கி என்னை வசப்படுத்திக்கிட்டு எப்படி நிம்மதியா தூங்குறான் பாரு!” என்று பற்களைக் கடித்தபடி முணுமுணுத்தவள், விறுவிறுவென எழுந்து குளிக்கச் சென்றாள்…

​குளித்து முடித்து வந்த பின்னரும் அவளுக்கு அந்த அறையில் இருக்கவே பிடிக்கவில்லை, இத்தனை நாள் வைராக்கியம் ஒரு இரவில் சிதைந்து போனதை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அந்த அறையில் அதற்கு மேலும் இருக்க விருப்பம் இல்லாமல் சத்தமில்லாமல் கதவைத் திறந்து அறையை விட்டு வெளியேறிவிட்டாள்…

Advertisement

அவள் சென்ற வெகு நேரத்திற்குப் பிறகுதான் ரன்வீர் கண்விழித்தான், அவன் கண்கள் திறந்ததும் முதலில் தேடியது தன் மனைவியைத்தான், இரவு அவளோடு கூடி கழித்த அந்த இனிய தருணங்களின் சந்தோஷம் அவன் முகத்தில் பிரகாசமாகத் தெரிந்தது, அவனது மனமும் உடலும் மீண்டும் அவளது அருகாமைக்காக ஏங்கியது, ஆனால், அவளோ அறைக்குள் வரும் அறிகுறியே தெரியவில்லை.
​எனவே, எழுந்து குளித்து உடை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்,..

Advertisement

மாடிப்படிகளில் இறங்கி வரும்போது, தன் மனைவி அங்கே அவனது தாயுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்,
​நேற்று இரவு அவளுடன் இணைந்த அந்த உரிமையோ என்னவோ, அவனது பார்வை முன்பை விட அதிக ஆழமாகவும், உரிமையுடனும் அவள் மீது படர்ந்தது. அவனது வருகையை உணர்ந்த அவன் மனையாளோ, அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,..

​மகனின் வருகையைக் கண்ட காயத்ரி, “என்ன ரன்வீர், இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கிட்ட போல?” என்று வாஞ்சையுடன் கேட்டவர், அப்போது தான் அவனது கையில் இருந்த பேண்டேஜைக் கண்டு திடுக்கிட்டு, “என்னாச்சுப்பா? கையில என்ன காயம்?” என்று பதறியபடி அவன் அருகில் வந்தார்,..

​”அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… சின்னக் காயம் தான், கண்ணாடி கிழிச்சிடுச்சி” என்று லாவகமாகச் சமாளித்து, தன் தாயைத் தோளோடு அணைத்து அழைத்து வந்து சோபாவில் அமரவைக்க, ரன்வீர் அமர்ந்த அந்த விநாடியே, மிருதுளா அங்கே ஒரு நிமிடம் கூட நிற்க விரும்பாமல், விறுவிறுவென்று எழுந்து உள்ளே சென்றாள்.

Advertisement

​அவளது இந்தத் திடீர் மாற்றத்தையும் நடவடிக்கையையும் வித்தியாசமாக பார்த்தான் ரன்வீர், இருப்பினும், தாயின் முன்னிலையில் எதையும் கேட்டுக்கொள்ளாமல் அமைதி காத்தான்.

​சற்று நேரத்திற்குப் பின் வெளியே வந்த மிருதுளா, “அத்தை… டிபன் ரெடியா இருக்கு,” என்று சொல்ல,.. மகனிடம் பேசிக்கொண்டிருந்த காயத்ரி, “வரோம்மா” என்று கூறிவிட்டு, “சாப்பிடலாமாப்பா?” என்று மகனிடம் கேட்டார்.

ரன்வீரும் ஒரு சிறு தலையசைப்புடன் தாயுடன் உணவருந்தச் சென்றான், ஆனால் அவனது கண்கள் மட்டும் தொடர்ந்து மிருதுளாவின் அசைவுகளைக் கண்காணித்துக் கொண்டே இருந்தன…

சமுத்திரவேலும் சுமதியும், சுமதியின் சொந்தக்கார வீட்டு விசேஷத்திற்கு அதிகாலையிலேயே சம்யு மற்றும் வினோத்தையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர், வீட்டில் ரன்வீர் மற்றும் காயத்ரி மட்டுமே இருக்க, மிருதுளா அவர்கள் இருவருக்கும் மட்டும் பரிமாறினாள்…

​வழக்கம்போல இப்போதும் அவளிடம் ஒரு ஒட்டாத தன்மையும், இறுக்கமும் இருப்பதை உணர்ந்தவனுக்கு, அவளுக்குள் என்ன ஓடுகிறது என்பது தான் புரியவேயில்லை, இரவில் தன்னோடு காதலில் உருகிக் கரைந்தவள், இப்போது முகம் பார்த்துப் பேசக்கூட மறுப்பது அவனுக்குப் பெரும் நெருடலைத் தந்தது.

​”நீயும் உட்காரும்மா, ஒன்னா சாப்பிடலாம்” என்று காயத்ரி சொல்ல, அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமர்ந்தவள், பெயருக்கு ஒரே ஒரு இட்லியை மட்டும் வைத்துக்கொண்டு மெல்லச் சாப்பிடத் தொடங்கினாள். ரன்வீரின் தீட்சண்யமான பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது, ஆனால் அவள் அவனை ஒருமுறை கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை, அவனது இருப்பையே அவள் புறக்கணிப்பது போலத் தோன்றியது.

​காயத்ரி தான் அந்த அமைதியைக் கலைக்கப் பொதுவாகச் சில நாட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டிருந்தவர்,.. “ரன்வீர், இன்னைக்கு ஆபீஸ் போறியா? கையில காயம் இருக்குல, இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்ல?” என்று கேட்க “ம்ம்.. பார்ப்போம்மா” என்றவனின் பார்வை அப்போதும் மிருதுளாவின் மீது தான் படிந்தது. ஆனால், அவள் ஒரு இயந்திரத்தைப் போல உணவை மட்டும் கிளறிக் கொண்டிருந்தாள்.

​ஒவ்வொருவராகச் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கொள்ள, காயத்ரி, “நான் கொஞ்ச நேரம் ரூம்ல இருந்துட்டு வரேன்,” என்று கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட, மிருதுளாவும் அங்கிருந்து அடுகலையை  நோக்கி நடக்க முயல, ரன்வீர் அவளை விடவில்லை.

​”வா ரூம் போலாம்,” கட்டளையிடும் குரலில் அழைத்தவனை சட்டெனத் திரும்பி முறைத்தவள்.. “எதுக்கு? நைட் பண்ணதெல்லாம் போதாதா?” என்று கோபத்துடன் கேட்க, அவளை விழிகள் சுருங்கப் பார்த்தவன், “வாட் டூ யூ மீன்?” என்றான் புரியாமல்…

​”ப்ச்,” என்று ஒருவித எரிச்சலுடன் அவள் முன்னேற முயல, அவளது கரம் பற்றிச் சட்டென நிறுத்தியவன், “நான் பேசிக்கிட்டுத் தானே இருக்கேன்?” என்றான் அழுத்தமாக.

​”எனக்கு உங்ககிட்ட பேச இஷ்டம் இல்ல,” என்று வெடுக்கென்று சொன்னவளை வெறித்துப் பார்த்த ரன்வீர், அங்கே வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இவர்களது வாக்குவாதம் கேட்டுவிடும் என்பது புரிந்து, அதற்கு மேல் அங்கு நின்று விவாதிக்க விரும்பாமல், அவளது கரத்தை வலிமையாகப் பற்றி இழுத்துக் கொண்டு தனது அறையை நோக்கி விறுவிறுவென நடந்தான்…

​அவள் கையை உதற முயன்றும் அவனது பிடி தளரவில்லை, அறைக்குள் நுழைந்ததும் கதவைத் தாழிட்டவன், அவளைத் தன் பக்கம் திருப்பிச் சுவரோடு சாய்த்து..
“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி நடந்துக்கிற?” என்றான் அழுத்தமான குரலில்.

​”என்ன? எனக்கு என்ன?”  அவள் அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து வினவ, ரன்வீரின் பொறுமை எல்லை கடந்தது.

​”உன்னோட பிஹேவியரே சரி இல்ல மிருதுளா! நைட் நல்லா தானே இருந்த? நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டோம், எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆகிடுச்சுன்னு நான் சந்தோஷப்படுறதுக்குள்ள… திரும்பவும் காலையில இருந்து முகத்தைத் திருப்பிக்கிட்டு போற, திமிரா பேசுற! என்னதான் உன் மனசுல நினைச்சுட்டு இருக்க?” என்று அவன் ஆவேசமாக வினவிட,.. ​அவளோ  “என்ன ப்ராப்ளம் சால்வ் ஆச்சு ரன்வீர்? இன்னும் எதுவும் சால்வ் ஆகலை, எல்லாம் அப்படியே தான் இருக்கு!” என்று அழுத்தமாகச் சொன்னவள்,
​”நைட் யாரைக் கேட்டு என்னை தொட்டீங்க?” அவளின் அந்த கேள்வி அவனது இதயத்தையே ஒரு நிமிடம் நிறுத்தியது.

​அவளை பற்றியிருந்த அவனது பிடி சற்றே தளர, “மிருதுளா… என்ன பேசுற நீ? நீயும் தான சம்மதிச்ச? என்னை முதல்ல ஹக் பண்ணதும் நீ தான், ஆனா நான் ஏதோ உன்னை பலவந்தப்படுத்தின மாதிரி கேட்கிற?” என்று அவன் திகைப்புடன் கேட்க, ​”அது பயத்துல நீங்க கீழே விழுந்துடுவீங்களோங்கிற அந்தப் பதற்றத்துல நான் உங்களை அணைச்சேன், ஆனா அதையே சாக்கா வச்சு நீங்க என்கிட்ட எல்லை மீறினது தப்பு, என் தாத்தாவைக் கொன்ன கொலைகாரன் நீங்கதானோங்கிற சந்தேகம் எனக்குள்ள இன்னும் தீரல, அப்படி இருக்கும்போது… நான் எப்படி உங்ககூட…” என்று அவள் மேலே பேச முடியாமல் விக்கினாள்.

​”ஓ… அப்போ நைட் நடந்தது எல்லாம் உனக்கு ஒரு தப்பு, அப்படித்தானே?” அவன் குரல் இப்போது கரகரப்பாக மாறியது. அவனது கண்களில் தெரிந்த அந்தத் தாள முடியாத வலி அவளை சுட்டாலும், ​தன்னை சமன்படுத்திக் கொண்டு… “ஆமா! அது தப்புதான், நான் பலவீனமா இருந்த நேரத்துல நடந்த ஒரு பெரிய தப்பு, சரி நடந்தது ஏதோ நடந்துடுச்சு, ஆனா அதை மனசுல வச்சுக்கிட்டு என்கிட்ட உரிமையா பேசவோ, தொடவோ வராதீங்க,” என்று அவள் கறாராகச் சொல்லிவிட்டு அவனைத் தள்ளிவிட்டு நகர முயல,  ரன்வீர் அவளை விடவில்லை.

அவளது இரு தோள்களையும் பற்றி மீண்டும் சுவரோடு அழுத்தியவன், அவளது முகத்திற்கு மிக அருகில் குனிந்து, “இது தப்புன்னா… இந்தத் தப்பை நான் திரும்பத் திரும்ப செய்வேன், ஏன்னா நீ என் பொண்டாட்டி!” என்று மிரட்டலாகச் சொன்னவன், அடுத்த நொடியே அவளது இதழ்களையும் சிறை பிடித்திருந்தான், ஏற்கனவே கோபத்தில் இருந்தவளுக்கு அந்த முத்தம் இனிக்கவில்லை, தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனைத் தன்னிலிருந்து தள்ளி விட்டவள், “ச்சீ… பொறுக்கி!” என்று சொல்ல, அந்த வார்த்தை அவனை மேலும் கொன்றது, இருப்பினும் அமைதியாகவே நின்றான்,..

அவளோ.. ​”உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? உனக்கு அசிங்கமாவே இல்லையா?” ஆவேசமாகக் கத்தியவள்.. “ஒரு பொண்ணோட இஷ்டம் இல்லாம அவளைத் தொடுறதுக்கு எவ்வளவு கேவலமான புத்தி இருக்கணும்? உங்க மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் இப்போ போயிருச்சு” என்று சொல்ல,.. ​விழிகள் சிவக்க அவளை நோக்கியவனோ,..  “தாலி கட்டிய புருஷனுக்கு பொண்டாட்டியை தொட அவ அனுமதி தேவை இல்ல,” அவன் குரல் தாழ்ந்த ஆனால் பயங்கரமான ஒலியில் கூறினான்.

அவளோ… ​”புருஷனா? ஒரு கொலைகாரனை நான் எப்படி என் புருஷனா ஏத்துக்க முடியும்? நேத்து நைட்டு நான் பண்ணினதுதான் என் வாழ்க்கையிலேயே நான் செஞ்ச மிகப்பெரிய முட்டாள்தனம், அந்தத் தப்பை நீ அட்வான்டேஜா எடுத்துக்க நினைக்காத” மூச்சிரைக்கச் சொன்னவளை பார்த்து கசப்பாகச் சிரித்தவன்,..
“சரி… நான் பொறுக்கிதான், கொலைகாரன் தான், நான் எவ்வளவு தான் புரிய வைக்க நினைச்சாலும், உனக்கு என் மேல இருக்கும் இந்த கேவலமான அபிப்பிராயம் மாறாம இருக்கும் போது, இனி நான் உன்கிட்ட விளக்கம் சொல்லணும்னு அவசியமே இல்லை, ஆனா ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ… நீ என்னதான் வெறுத்தாலும், நீ எனக்குச் சொந்தமானவள்ங்கிற உண்மையை உன்னாலயும் மாத்த முடியாது, இந்தச் சமூகத்தாலயும் மாத்த முடியாது!” என்றவன்,.. ஆத்திரத்தில் அங்கிருந்த ஜாடியைத் தட்டிவிட்டு, அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

​மிருதுளா அங்கேயே தளர்ந்து போய் அமர்ந்தாள், கோபத்தில் அவன் இதழ்களைச் சிறைபிடித்த அந்தத் தருணமும், அவனது அந்த தாள முடியாத வலி நிறைந்த பார்வையும் அவளை என்னவோ செய்தது, இருப்பினும் அவளால் அவனை மன்னித்து அவனோடு வாழவும் முடியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!