Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே –

அத்தியாயம் – 49

 

அடுத்த நாள் விடிந்தது, காலையிலேயே ஆரம்பித்து விட்டான் ரன்வீர்,  கற்சிலை போல் அசையாமல் நின்ற மிருதுளாவை நோக்கி, “ஏய்… இப்போ போறியா இல்ல கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளவா?” என்று ஆவேசமாக வினவினான்..

கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தவள்.. “எதுக்கு இப்படிப் பண்றீங்க ரன்வீர்? நான் பண்ண பாவத்துக்குத் தான் இத்தனை மாசம் என்னை தவிக்க விட்டுட்டீங்கள்ல… அப்புறமும் ஏன் இப்படி?” என்று கேவிக்கேவி அழத் தொடங்கிட, ​ஆனாலும் அவனது இதயம் கரையவில்லை.



Advertisement

“ஏய்… இந்த நீலிக் கண்ணீருக்கெல்லாம் நான் மசிய மாட்டேன், மரியாதையா போயிடு!” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள,.. ​”அப்போ… குழந்தை?” என்று அவள் விம்மல்களுக்கு இடையே கேட்டாள்…

​”அ… அவனும் தான்…” என்று சொல்ல வந்தவனுக்கு, அந்த பிஞ்சு முகத்தை நினைத்ததும் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை.

​”சொல்லுங்க… உங்க மகனையும் தான் வெளியே போக சொல்றீங்களா?” என்று அவள் விடாமல் வினவ, ரன்வீர் ஒரு கணம் தடுமாறிவிட்டு, “இல்ல… அவன் என்னோடவே இருக்கட்டும், நீ மட்டும் போ!” என்றான் கரகரப்பான குரலில்.

Advertisement

​மிருதுளாவின் முகத்தில் ஒரு கசப்பான புன்னகை படர்ந்தது. “ஓஹோ… அம்மா இல்லாம அவனை உங்களால வளர்க்க முடியுமா? வளர்க்கிறதை விடுங்க… நான் போயிட்டா அவனுக்கு எப்படி ஃபீட் பண்ணுவீங்க? பசிக்கு அவன் அழுதா என்ன செய்வீங்க?”

Advertisement

​”என்னமோ பண்ணுவேன்… அது உனக்குத் தேவை இல்லாதது!” என்று அவன் பிடிவாதமாக சொல்ல, “வளர்ந்ததும் அவன் அம்மா எங்கேன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க?” என்று அடுத்த அடியை அடிக்க, ​கோபத்தின் உச்சிக்கே சென்ற ரன்வீர், யோசிக்காமல்.. “ம்ம்… இன்னொரு கல்யாணம் பண்ணி, அவளைத்தான் அவன் அம்மான்னு அவன்கிட்ட சொல்லுவேன்!” என்றான்

​அவன் கோபத்தில் பதிலுக்குப் பதில் பேசிய வார்த்தையாக இருந்தாலும், அது அவளது மனதை ரணமாக சிதைத்தது. ‘இன்னொருத்தியை என் இடத்தில் நினைத்துப் பார்க்கக் கூட இவருக்குத் தோன்றுகிறதே’ என்ற எண்ணமே அவளை உடைத்து நொறுங்கியது…

இருப்பினும் தன் வலியை வெளிக்காட்ட விடும்பாமல்,.. ​”ஓ… இன்னொரு கல்யாணம் பண்ணிப்பீங்களா? ம்ம்… பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க!” என்று தழுதழுத்த குரலில் சொன்னவள், வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ​குழந்தையை ஒருமுறை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, அங்கிருந்த தனது பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு, எவ்விதப் பேச்சும் இன்றி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

Advertisement

​அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ரன்வீரின் இதயம் ஏனோ கனத்தது, அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு மனம் கூவினாலும், அவனது காயப்பட்ட மனம் அவனை அமைதியாகவே நிற்க வைத்தது.

அவள் கதவைத் தாண்டி வெளியேற, ரன்வீர் சிலையாக அங்கேயே நின்றான். ஒரு நிமிடம்… இரண்டு நிமிடம்… அந்த அறையில் நிலவிய மயான அமைதியைக் கலைப்பது போல, அடுத்த நொடி  குழந்தையின் அழுகுரல் கேட்டது. அது பசிக்கான அழுகை அல்ல தன் தாயின் பிரிவை உணர்ந்த அந்த பிஞ்சு உயிரின் அபயக் குரல்!

​குழந்தையை தூக்கிச் சமாதானம் செய்த ரன்வீரின் மனம் குறுகுறுக்கத் தொடங்கியது, சற்று நேரத்திற்கு முன்புதான் தாயிடம் பால் குடித்திருந்ததால், அவன் தட்டிக் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தை  உறங்கிவிட்டாலும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

​”என் உசுர வாங்குறதுக்கின்னே வந்திருக்கா!” என்று கோபமாக முணுமுணுத்தவன், வாசலில் நின்ற காவலாளியைக் குழந்தையின் அருகில் துணையாக இருக்கச் சொல்லிவிட்டு, மிருதுளா எங்கே போனாள் என்று பார்ப்பதற்காக வெளியே ஓடினான்.

​வீட்டின் வாசல் வரை எங்கும் அவளைக் காணாததால், பதற்றத்தில் காரின் சாவியை எடுத்துக்கொண்டு அவளைத் தேடிக் கிளம்பினான். ‘அவளைப் போக விட்டிருக்கக் கூடாதோ?’ என்று ஒரு மனம் தயங்கினாலும், ‘நீ செய்தது சரிதான்’ என்று அவனது கர்வம் மறுபுறம் வாதிட்டது.

​சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு, சாலையோரம் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அவள் அனாதையாக, தனியாக அமர்ந்திருப்பதை கண்டவன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளருகில் வந்தான். அப்போதும் அவனது முகம் இறுகிப் போய் தான் இருந்தது,..

​”ஏய்… எழுந்து வா!” அதிகாரக் குரலில் அவன் சொல்ல, நிமிர்ந்து அவனைப் பார்த்த மிருதுளாவின் கண்களில் கோபம் கொப்பளித்தது. அவனை முறைத்தவள், “முடியாது… போடா!” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க, ​மனைவியிடம் இருந்து வந்த அந்த ஒருமையில் அமைந்த பதில், ரன்வீரின் ஆத்திரத்தை கிளப்பிவிட.. “ஏய்!” என்று கத்தியபடி அவள் மேல் கை ஓங்கப் போன நேரம் அந்த சமயம் அங்கே சென்ற ஒரு லண்டன்வாசி குறுக்கிட்டு, ​”ஹேய் மேன்! என்ன பண்ற?” என்று ஆங்கிலத்தில் அதட்டலாகக் கேட்டபடி, ரன்வீருக்கும் மிருதுளாவிற்கும் இடையே அரணாக வந்து நின்றார்…

​ரன்வீர் ஆவேசமாக, “இது எங்க குடும்ப விஷயம், நீ தலையிடாதே!” என்று ஆங்கிலத்தில் பதிலளிக்க முயல, அந்த நபர் விடவில்லை.

“பெண்கள் மேல கை வைக்க நினைக்கிறது இந்த நாட்டுல பெரிய தப்பு, மரியாதையா இங்கிருந்து கிளம்பு, இல்லன்னா போலீஸை கூப்பிடுவேன்” என்று எச்சரித்தார்,..

​மிருதுளா அழுதுகொண்டே தலையைக் குனிந்து கொள்ள, ரன்வீரோ தேவையில்லாமல் பொது இடத்தில் பிரட்சனை வேண்டாம் என்று கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி அவளை ஏறிட்டவன்.. ​”இப்போ வர்றியா இல்லையா?” என்று அதட்டலான குரலில் கேட்டான்.

​”வர மாட்டேன்… இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னீங்கள்ல? போய் பண்ணிக்கிருங்க, நான் என் பையனை மட்டும் கூட்டிட்டு ஊருக்குப் போயிடுறேன்,” என்று அவள் பிடிவாதமாகச் சொல்ல, ரன்வீருக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

​”இப்போ எதுக்கு அந்த பேச்சை எடுக்குற? கோபத்துல மனுஷன் எதை வேணா பேசுவான், அங்க பையன் அழுதுட்டு இருக்கான்… வா!” என்று அவன் குரல் சற்றே தணிந்து வர, ​”அவன் தூங்கிருப்பான்னு எனக்குத் தெரியும். அவன் பசிக்காக அழுற நேரம் வரும்போது நான் அங்க இருப்பேன், அதுவரைக்கும் நான் வர மாட்டேன்,” என்று அவள் அந்த பெஞ்சிலேயே அமர்ந்திருக்க, அந்த வெள்ளைக்காரர் இன்னமும் ரன்வீரையே சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

​ரன்வீர் மெல்ல அவள் அருகில் குனிந்து,.. “இங்க பாரு… இப்போ நீ வரலைன்னா, அந்த ஆளு போலீஸை கூப்பிடுவான், நான் ஜெயிலுக்கு போகணும்னு ஆசைப்படுறியா? அன்னைக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லாம
கொலைகாரன் பட்டத்தை கொடுத்த, இன்னைக்கும் அதே தானா?” என்ற ​அந்த வார்த்தை அவளை சுட்டது, போலீஸ் என்றதும் அவள் மனது பதறியது. மெல்ல எழுந்து நின்றவள், அவனை முறைத்துக் கொண்டே காருக்குச் சென்றாள்.

​காரில் ஏறியதும் இருவரிடமும் மௌனம் குடிகொண்டது. வீடு வந்து சேரும் வரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, வீட்டுக்குள் நுழைந்ததும், அவள் நேராகத் தன் மகனிடம் தான் ஓடினாள். தூங்கிக் கொண்டிருந்தவனை அள்ளி அணைத்துக் கொண்டவளுக்கு இப்போதும் அழுகை நிற்கவில்லை.

​ரன்வீர் வாசலிலேயே நின்று அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான், அவனுக்கு தெரியும், அவள் இல்லாமல் அந்தப் பையனை வளர்ப்பது சாத்தியமில்லை என்று. ஆனால், அவள் செய்த அந்த ஒரு தப்பை அவனது ஆண்மையால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

​”இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்… நாளைக்கு நீ…” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க, அவள் அவனைத் திரும்பிப் பாராமலேயே.. “என்னால போக முடியாது, உங்களால முடிஞ்சதை பார்த்துக்கிருங்க” என்று கூறிவிட்டு அறைக்குச் சென்றவளை வெறித்து பார்த்தது அவன் விழிகள்…

அன்றைய இரவும் ரன்வீர் அந்த அறைக்கு வரவில்லை, ஆனால், மிருதுளா பசியோடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவளுக்கு  உணவை வாங்கி வந்து கொடுத்திருந்தான். கோபத்திற்கு இடையிலும் அவனது அந்த சிறு அக்கறை அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது,..

​அடுத்த நாள் விடிந்தது. ரன்வீர் அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அலுவலகத்திற்குப் புறப்பட்டு சென்றுவிட்டான், அவன் வேலைக்குத் தான் போயிருக்கிறான் என்ற விஷயமே காவலாளி மூலமாகத்தான் அவளுக்குத் தெரியவந்தது. அந்த பிரம்மாண்டமான வீட்டில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாததால், அவள் அந்த செக்யூரிட்டியிடம் தான் பேச்சை வளர்த்தாள், அவர் அந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஓரளவு தமிழ் பேசத் தெரிந்திருந்தது. மிருதுளாவிற்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தாலும், அந்நிய தேசத்தில் யாராவது தமிழில் பேசுவதைக் கேட்பது ஆறுதலாக இருந்ததால் அவரிடமே பேசிக் கொண்டிருந்தாள்.

​மதிய உணவை அலுவலகத்திலிருந்தே ரன்வீர் ஆர்டர்  செய்திருந்தான், ஆனால் தொடர்ந்து ஹோட்டல் சாப்பாட்டை சாப்பிடுவது அவளுக்குப் பிடிக்கவில்லை, அந்த வீட்டின் சமையலறையில் எல்லா வசதிகளும் இருந்தன, மளிகைச் சாமான்கள் மட்டும் இருந்தால் அவளே ருசியாகச் சமைத்துவிடுவாள். ஆனால், ரன்வீரிடம் கேட்டால் அவன் வாங்கிக் கொடுக்கப் போவதில்லை என்று அவளுக்குத் தெரியும். அதனால், லண்டன் வரும்போது நிதின் கொடுத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, நடக்கும் தொலைவிலேயே ஒரு சூப்பர் மார்க்கெட் இருப்பதை செக்யூரிட்டி மூலம் அறிந்து கொண்டு, மாலை நேரத்தில் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துத் தள்ளிக்கொண்டு அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்குப் புறப்பட்டாள்…

​அவள் கடைக்குள் நுழைந்த அதே சமயம் தான் ரன்வீரும் வீட்டிற்குத் திரும்பினான், மிருதுளா குழந்தையுடன் வெளியே சென்றிருப்பதை அறிந்ததும் அவனது கோபம் உச்சிக்கு ஏறியது.

‘இந்த ஊர் பேர் தெரியாத இடத்துல, என்னைத் கேட்காம எதுக்கு இப்போ வெளியே போனா?’ என்ற ஆத்திரத்துடன் அவனும் அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு விரைந்தான்.

​கடைக்குள் நுழைந்து சுற்றும் முற்றும் நோட்டமிட்ட ரன்வீரின் விழிகள் ஓரிடத்தில் நிலைத்தன, அந்த நாட்டு இளம் யுவன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவள்,
அவள் மீது தீராத கோபம் இருந்தாலும், அவள் இன்னொருவனுடன் அவ்வளவு அந்நியோன்யமாக சிரித்துப் பேசுவது அவனுக்குள் பொறாமையைத் தூண்டியது, அவன் இரத்தம் கொதித்தது.

​வேகமாக அவளது அருகில் வந்தவன், “இங்கே ஏன் வந்த?” என்று எரிமலையாய் வெடித்து எகிறத் தொடங்கினான்.

​அவனது திடீர் வருகையை எதிர்பார்க்காத மிருதுளா, “நீங்களா?” என்று அதிர்ந்து போக,
​அந்த அந்நிய இளைஞனோ ரன்வீரின் ஆவேசத்தை பார்த்துவிட்டு, “யார் இது?” என்று ஆங்கிலத்தில் வினவினான்.

​”என்னோட கணவர்” என்று மிருதுளா தயக்கத்துடன் கூறிட,..
​”ஓ… ஹாய்!” என்று அந்த இளைஞன் ஒரு நட்பான புன்னகையுடன் ரன்வீரை நோக்கித் தன் கையை நீட்டினான்.

​”ஹாய்” என்று வேண்டா வெறுப்பாக, கையைத் தொடாமல் ஒரு சொல்லில் கூறிவிட்டு, “கிளம்பு!” என்று மிருதுளாவை அதட்டினான் ரன்வீர்.

​”சரி” என்றவள், அந்த இளைஞனைப் பார்த்து, “அப்புறம் பார்க்கலாம்” என்று கூறி விடைபெற முயல, ​அவனோ, “கண்டிப்பா!” என்று உற்சாகமாக சொன்னதோடு நில்லாமல், வேகவேகமாகத் தனது போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி, “இது என்னோட நம்பர், கால் பண்ணு” என்று அவளிடம் நீட்டினான்.

​அவளும் எவ்வித தயக்கமுமின்றி அதை வாங்கிக் கொள்ள, ரன்வீருக்குப் பற்கள் கிடுகிடுத்தன. ‘என் முன்னாடியே நம்பர் வாங்குறாளா?’ என்ற ஆத்திரம் அவனை ஆட்டியது.

​”பை மிருது!” என்று அவன் செல்லமாக அழைத்துக் கையசைக்க, ரன்வீருக்குத் தலைக்கேறிய கோபத்தில் கண்கள் சிவந்தன. பற்களைக் கடித்துக் கொண்டு, தன் ஆத்திரத்தை விழுங்கியபடி அவளோடு கார் வரை வந்தான்.

​கார் கதவைத் திறந்ததும் “யாரவன்?” என்று அவளைப் பார்த்து உறுமினான்,..

​மிருதுளா எவ்வித சலனமுமின்றி, “மை நியூ பிரண்ட்  அவனோட பேர் லூகஸ், ரொம்ப ஸ்வீட்டான டைப்,” என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாள்.

​அவளை எரித்து விடுவது போலப் பார்த்தவன்,.. “ஊர் பேர் தெரியாத இடத்துல எவனோ ஒருத்தன் நம்பர் கொடுத்தா வாங்கிப்பியா? உனக்கு அறிவிருக்கா இல்லையா? அந்த பேப்பரை முதல்ல என்கிட்ட கொடு,” என்று கையை நீட்டிட,
அவளோ அந்தப் பேப்பரைத் தன் கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு.. “மாட்டேன்! இது எனக்காக அவன் கொடுத்தது, இங்க எனக்குத் தெரிஞ்சவங்க யாருமே இல்லை, ஒரு ஃபிரண்ட் கிடைச்சதுல எனக்கு சந்தோஷம் தான், உங்களுக்குத் தான் என்னைப் பிடிக்கலையே… அப்புறம் நான் யார்கிட்ட பேசினா உங்களுக்கு என்ன?” என்று அவள் எதார்த்தமாகச் சொல்ல, ரன்வீர் பேச்சற்று நின்றான்.

​அவள் சொன்ன அந்தப் பதிலில் இருந்த நியாயம் அவனைக் குத்தியது. ஆனால், ‘மிருது’ என்று அவன் அவளை அழைத்தது அவனது காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அமைதியாகக் காரைச் செலுத்திய ரன்வீரின் மனதிற்க்குள் இப்போது கோபத்தை விட பொறாமை எனும் நெருப்பு தான் அதிகமாக எரியத் தொடங்கியது.

​வீடு வந்து சேர்ந்ததும், மிருதுளா குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, ரன்வீர் அவள் கையில் இருந்த அந்தப் பேப்பரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!