Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே – 8

“ஏண்டி இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல் நல்லாதானே இருக்கு” என்றார் செந்தில்.

 

“நல்லாத்தான் இருக்கு… ஆனா ரெண்டு ரூம்தானே இருக்கு மூணு இருந்தா நல்லா இருக்கும் கார்த்திகா வந்து தங்கும்போது தனியா ரூம் இருந்தா நல்லா இருக்கும் அதான்” என்றார் கனகம்.

 



Advertisement

“கால கொஞ்சம் தரைல வெச்சு நடந்து பழகு மிதந்துகிட்டே இருக்காத மேலே இருந்து விழுந்தா அடி பலமா இருக்கும்” என்றார் செந்தில்.

 

“இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன் கல்யாணமான பொண்ணு அவளுக்குத் தனியா ரூம் வேண்டாமா”.

Advertisement

 

Advertisement

“அவ வரும்போது ஒரு ரூமை அவளுக்குக் குடுத்தா போதாதா எப்போவோ வரவளுக்கு தனியா ஒரு ரூம் குடுத்து அதைப் பூட்டி வெச்சு பாதுகாக்க நாம என்ன அரசப்பரம்பரையாடி, ஆத்தாளும் மகளும் இருக்குற எடத்துல தூங்கி பழகுங்க” என்றவர் வெளியில் வந்து வீட்டு உரிமையாளரிடம் அட்வான்ஸ் கொடுத்தார் சேனாபதி பார்த்துக்கொடுத்த வீடு,  பக்கத்திலே இருப்பதை போலப் பார்த்துக்கொண்டான்.

 

கனகம் விலகிச் செல்ல நினைத்தாலும் அப்படியெல்லாம் மொத்தமாக விட்டுவிட முடியாதே, இரண்டும் பெண்பிள்ளையாக இருக்க அவர்களுடைய வாழ்வையும் பார்க்க வேண்டும் இந்த வயதுக்கு பிறகு தனிக்குடித்தனம் சென்றிருக்கும் பெரியவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும், என்னதான் தனியாகப் போகட்டும் என்று கோசலை சொன்னாலும் இந்த வயதில் மகன் குடும்பம் தனியே சென்றது அவருக்கும் மனவருத்தம் தானே அருகில் என்றால் அவருக்கு வேண்டும் சமயம் சென்றும் வரலாம்.

Advertisement

 

வீட்டின் பரணில் கிடந்த தட்டுமுட்டு சாமான் எல்லாம் இறக்கப்பட்டது சீதனமாகக் கொண்டுவந்த பலதும் அப்படியே இருந்தது அதோடு புதிதாகப் பாத்திரங்களும் வாங்கப்பட்டது அவர்களின் அறையில் இருந்த பீரோ கட்டில் அனைத்தும் இடம் பெயர்ந்தது, தன் இஷ்டத்திற்கு நல்ல நல்ல பாத்திரங்களை அல்லி கட்டிக்கொண்டிருந்த தாயை பார்த்த விழி.

 

“மா என்ன பண்ற? அப்பத்தாவும் பெரியம்மாவும் உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோன்னு சொல்லிட்டு போனது அவங்க பெரியமனசு நீ எடுத்ததுல பாதி பெரியம்மாவோடது,  இதெல்லாம் மருமக வரும்போது எடுக்கன்னு சொல்லி அவங்க ஆசையா வாங்கி வெச்சது இதுல பாதிய அக்கா கல்யாணம் ஆகி போனப்போ எடுத்துக் குடுத்த அப்போவும் அவங்க ஒன்னும் சொல்லல இதுக்கே அக்காக்கு சீரா அவ்ளோ பாத்ரம் அண்ணா வாங்கி குடுத்தாங்க இப்போ மிச்சம் இருக்கறதையும் எடுத்துட்டு போற வைமா” என்றாள்.

 

“என்னடி வாய் நீளுது தைச்சுப்புடுவேன், இது என்ன அவங்க காசு மட்டுமா நம்ம காசும்தான்” என்க.

 

“ஏன்மா இப்படி இருக்க அண்ணா ஒழைக்குது அக்காவும் நானும் என்ன வேலை செஞ்சோம், எங்களைக் காரணம் வெச்சு நீ ஏன்மா இங்க எல்லாத்தயும் சொரண்டுற, உங்க பேச்சாலதான் இப்போ நாம தனியாவே போறோம் எனக்கு அங்க வரவே பிடிக்கல நாம இங்கேயே இருக்கலாம்மா” என்ற வேல்விழியின் கன்னத்தைப் பதம் பார்த்தது கனகத்தின் கை அதோடு அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள் அவள்.  

 

 

 கோசாலைக்கு மனதே சரியில்லை இதையெல்லாம் பார்க்க விரும்பாமல் கோயிலுக்குச் சென்றுவிட்டார் உடன் பவுனும் ‘அப்படியென்ன அவள் மகளைக் கைவிட்டுவிட்டோம் என்று இப்படி வருஷக்கணக்காகப் புலம்புகிறாள், ஒன்றுக்கு இரண்டு பெண்பிள்ளைகள்…’.

‘அடுத்து வருபவனும் இப்படி பிடுங்குபவனாக இருந்தால் என்ன செய்வாள் இவள் எங்கே பேச வேண்டுமோ அங்கே பேச வேண்டும் இல்லையேல் காலம் முழுதும் நாம்  அடிமை வாழ்க்கைதான் வாழனும் நம்முடைய நிலைக்கு மேலே கடன் வாங்கி பிள்ளைகளை வாழவைத்து அதைக் கட்டமுடியாமல் கடைசியில் கயிற்றில் தொங்குபவர்கள் எத்தனை பேர் யாரிடம் சொல்ல’ என்று பெருமூச்சுவிட்டுக்கொண்டார்.

 

“அத்த அவங்க வீட்டுக்குப் போயிருப்பாங்க நாமளும் போலாமா” என்றார் பவுனு.

 

“ஹ்ம்ம் போலாத்தா” என்றவர் பவுனின் கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தார் அங்கிருந்து நடக்கும் தூரத்திலே செந்தில் கனகம் வீடு இருந்தது இருவரும் அப்படியே  மெதுவாக நடந்து அங்குச் செல்லக் கந்தசாமி தம்பியுடன் வெளியில் அமர்ந்திருந்தார், ஆட்கள் பொருட்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

 

சகோதரர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை மனம் கனத்து கிடந்தது இருவருக்கும், மற்றவரின் அருகாமை போதுமாக இருந்தது,  பவுனு குங்குமத்தை எடுத்து அனைவருக்கும் கொடுத்தார் ஆட்கள் பொருட்களை இறக்கிவைத்து சென்றுவிட்டனர்.

 

“எல்லாருக்கும் டீப்போடுறேன்” என்றார் கனகம் காலைதான் பால் காய்ச்சியிருந்தனர் “அம்மா” என்றார் செந்தில்.

 

“என்னய்யா” என்ற கோசாலையிடம் “உங்க கையாள டீப்போட்டுக் குடுங்க ஒரு வாய் குடிச்சுக்கிறேன்” என்க கோசலை மகனின் கையைப் பிடித்துக்கொண்டார், அந்த முதியவரின் விழிகள் நிறைந்து தளும்பியது.

 

“ஏன்யா இப்படி சொல்ற” என்றார் கோசலை .

 

“தெரில… வயசு எம்புட்டு ஆனா என்ன…  பொறந்ததுல இருந்து உங்க எல்லார்கூடவும் இருந்துட்டேன் இப்போ என்னமோ மனசு தனியா ஆயிட்ட மாதிரி தவிக்குது” என்றார் செந்தில், கந்தசாமி அவரைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார் அவருக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை.

 

கார்த்திகாவும் கனகமும் இப்படியே தொடர்ந்துகொண்டு இருக்க இனிமேலும் ஒன்றாக இருந்தால் உறவே முறிந்துவிடலாம் என்றும் செந்திலுக்கு அச்சமாக இருந்தது,  பொறுத்துக்கொள்பவர்கள் எத்தனை காலத்திற்கு தான் வாய் மூடியே இருப்பது.

 

கோசலை அடுக்களை சென்று டீ போட்டு எடுத்துவர சேனாவின் புல்லட் வாசலில் வந்து நின்றது “எல்லாம் வெச்சுட்டாங்களா சித்தப்பா” என்றான் செந்திலிடம்.

 

“ஆச்சுயா” என்றவர் அவனைத் தன் அருகில் அமர்த்திக்கொண்டார் அவன்தானே அந்தக் குடும்பத்தின் ஆணிவேர் மகனைப் பிரிந்திருப்பது இன்னும் வலி கொடுத்தது அவருக்கு.

 

“என்மேல நம்பிக்கை இல்லையா சித்தப்பா அப்படியா விட்டுருவேன், கொஞ்சம் வாழ்க்கை புரியட்டும் அவங்களுக்கும்” என்றான் கனகத்தை பார்த்துக்கொண்டே, அவன் வாயில் இருந்து சித்தி என்ற வார்த்தை வரவில்லை செந்தில் அதைக் கவனிக்கவும் இல்லை.

 

“உன்னைய நம்பாம யாரய்யா நம்பப்போறேன்” என்றவர் அவன் தோளில் தட்டிக்கொடுத்தார், சேனாவின் விழிகள் கனகத்தை கூர்மையாய் ஆராய்ந்தது.

 

ஒருநொடி போதும் அவரின் வேஷத்தை கலைக்க அதைத் தாங்கும் சக்தி இங்கு யாருக்கேனும் இருக்குமா தனியாக வந்ததற்க்கே உடைந்து அமர்ந்திருக்கும் சித்தப்பாவை பார்த்தவன் மனதெல்லாம் பாரம் ஏறியது இந்த உறவு ஏன் பொய்த்துபோனது என்று எண்ணியவன் முகம் இறுகியது அலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்னால் சென்றான்.

 

இந்த நேரத்தில் அவன் அழைப்பைத் தாங்கி மிளிர்ந்த  அலைபேசியை விழி விரித்துப் பார்த்திருந்தாள் மயூரி இறுதி நொடியில் அதை அவள் எடுத்திருக்க “ஒய் என்ன முட்டைக்கண்ண விரிச்சு பார்த்தியா” என்றவன் குரலில் தன்னையே ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொண்டாள்.

 

அவனுடைய கேள்விக்குத் தலை கூடத் தானாகவே ஆடியது “நாளைக்கு டவுனுக்கு போறேன் உனக்கு எதுவும் வாங்கணுமா வரியா” என்க அவளிடம் அமைதி, கண்ணைச் சிமிட்டி சிமிட்டி தன்னை தானே தெளியவைத்துக்கொண்டிருந்தாள் “மயூ…” என்ற அழைப்பில் “எத்தனை மணிக்கு” என்றாள் குரலே எழும்பாமல்.

 

“நாலு  மணிக்கு வரேன் அப்படியே திரும்பி வரும்போது மலைக்கோயிலுக்கு போயிட்டு வரலாம், நாளைக்கு பௌர்ணமி  நீ அங்க போய் ரொம்ப வர்ஷம் ஆச்சுல்ல” என்க.

 

“உண்மையா என்னை உங்ககூட கூட்டிட்டு போறீங்களா” என்றாள் இப்பொழுதும் நம்பாமல்.

 

“நாளைக்கு நாலுமணி” என்றவன் அழைப்பைத் துண்டித்த நொடி பின்னில் சட்டென்று ஒரு உருவம் மறைவதை அறிந்துகொண்டான் ‘யார்’ என்றும் எதற்கு என்றும் தெரியும் அமைதியாகத் திரும்பி வீட்டின் முற்றத்திற்கு வந்தவன் “அப்பா கிளம்பலாமா” என்க அவர் தம்பியைப் பார்த்தார்.

 

“காலைல தோட்டத்துக்கு வந்துடு” என்றவர் எழுந்துகொள்ள பெண்களும் எழுந்துகொண்டனர்.

 

“நான் முன்ன போய் ஆட்டோ அனுப்புறேன்” என்றவன் “சித்தப்பா நாளைக்கு வெளில போறேன் கடையையும் சேத்து பாத்துக்கோங்க” என்றான் கனகத்தை திரும்பியும் பார்க்காமல்.

 

“விழி” என்று அழைக்க.

 

“அண்ணா”  என்று ஓடிவந்தாள் அவள் “சித்தப்பா அவ அங்க இருக்கட்டும், இப்போதைக்கு ராத்திரி அங்கேயே தூங்கட்டும் காலேஜ் திறந்ததும் பாக்கலாம், பொருள் எல்லாம் எடுத்து வெக்குற வரைக்கும் சாப்பாடு அப்பா  கொண்டு வருவாங்க” என்றவன் “ஏறு” என்க, குதூகலமாக ஏறி அமர்ந்துகொண்டாள் தன்னிடம் ஒன்றும் கூறாமல் சித்தப்பாவிடம் மட்டும் பேசிச்செல்பவனை ஆராய்ச்சியாய் பார்த்திருந்தார் கனகம்.

 

கருப்பு  நிறத்தில் புல் ஸ்லீவ் டாப்ஸ் முழங்கால் வரை நீண்டு கிடந்த  வெள்ளை நிற பேனேலேட்  ஸ்கிர்ட்  அணிந்து அவன் முன் நின்றாள் மயூரி,  அந்த விழிகள் அவனை மொத்தமாக அடித்து வீழ்த்தியது சட்டென்று திரும்பிக்கொண்டான், தன்னை ஒருநொடி சமன் செய்தவன் பின்னில் வந்துகொண்டிருந்த ஒஸ்கரிடம்  பத்திரமாக அழைத்து வந்துவிடுவதாகக் கூற அவர் புன்னகை முகமாக அனுப்பி வைத்தார்.

 

நொடிக்கொருதரம் மயூரியின் விழிகள் அவனில் பதிந்து மீண்டது வெள்ளை நிற புல் ஸ்லீவ் சட்டை மடித்து விட்டுருக்க, அடர் நீல நிற டைல் கொண்ட டிஸ்ஸோட வாட்ச் அவன் கைகளில் அத்தனை பாந்தமாய் இருந்தது.

 

கரும்பாறை மனசுல

மயில் தோகை விரிக்குதே

மழைச்சாரல் தெளிக்குதே

புல்வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

புல்வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

 

பாடலுக்கு விரல்கள் தாளமிட சில்லென்ற குளிர்காற்று மனதை குளிர செய்தது. அவளிடம் ஒன்றுமே பேசவில்லை ஏதோ யோசனையிலே இருந்தான், தயங்கி தயங்கி அவனைப் பார்த்திருந்தவள் மெல்ல அவனின் அருகில் நெருங்கி அவன் இடது கையோடு தன் கையை இட்டுப் பூட்டிக்கொண்டு அவன் தோளில் தலை சாய்த்தாள்.

 

சட்டென்று யோசனை அறுபட்டது அவனுக்கு, அந்த நொடி முதல் முதலாக அவளைக் கையில் ஏந்திய தருணம் நினைவில் ஆடியது அவளுக்கு அவன்தானே அனைத்தும் அவனைத்தான் தேடியிருக்கிறாள் எப்பொழுதும், மெல்ல அவள் உச்சியில் இதழ் பதித்தான், தொண்டை அடைத்தது மயூரிக்கு அத்தனை நேரம் இருந்த தயக்கம் சஞ்சலம் மாறி இன்னும் கொஞ்சம் அவனோடு ஒன்றினாள்.

 

லண்டன் ஆர்ட்ஸ் காலேஜில் பைன் ஆர்ட்ஸ் படித்தவள், வண்ணங்கள் அவளுக்கு மிகவும் பிடித்தது, காணும் அனைத்தையும் கேன்வாஸில் கொண்டு வந்துவிடும் மாயக்காரி, போட்டோ ரியலிசம் என்னும் கலையில் சிறந்தவள் புகைப்படம் எடுத்ததை போல வரையப்படும் கலையே அது, அவளுக்குத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் இங்குக் கிடைக்காது பலதை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிடுவாள் சில பொருட்ட்களை மட்டும் இங்கே வாங்கிக்கொண்டாள்.

 

அதோடு வீட்டிற்கு தேவையான பொருட்கள் அலங்கார சாதனங்கள் என்று சிலதும், அவன் பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை வந்தது முதல் அலைபேசியில் பேசிக்கொண்டே   இருந்தான் அவள் வங்கிமுடித்து பில் இட எடுத்துச் செல்கையில் அவளிடமிருந்து கூடையை வாங்கிக்கொண்டான், இதழில் உறைந்த புன்னகையோடு அவன் பின்னே சென்றாள்.

 

“வேற ஏதும் வாங்கணுமா” என்க “இல்ல” என்றாள்.

 

“டீ சாப்பிடலாமா” என்க “ஹ்ம்ம்” என்றாள் சம்மதமாக.

 

எப்பொழுதும் அவன் செல்லும் கடைக்கே சென்றான் “அண்ணே…” என்று வணக்கம் வைத்த பையன் “டீக்கூட என்னண்ணே” என்க “இஞ்சி ஏலக்காய் டீ இவங்களுக்கு அப்படியே குழிப்பணியாரம் ஒரு பிளேட்” என்க அவனைத்தான் பார்த்திருந்தாள் தன்னை பற்றிய எதுவுமே மறக்கவில்லை.

 

“என்ன” என்று புருவம் உயர்த்தியவனை பார்த்துக் கண்சிமிட்டி இதழ் குவித்து முத்தம் கொடுத்தாள் “ஏய்” என்றவன் விழிகள் சுற்றிலும் பார்த்தது, அவள் சிரிப்பை அடக்கி அமர்ந்திருந்தாள் “வாலு” என்றவன் இதழ்களைக் கடித்து சிரிப்பை மறைத்தான்.

 

ஊருக்கு வெளியே இருக்கிறது மலை கோவில் வெகுவிரைவாக இருள் சூழ்ந்துவிடும் பிரதேசம் என்பதால் இருட்டிய பிறகு  பெரிதாக யாரும் அங்குச் செல்வதில்லை, எட்டு மணிக்கு நடை சாத்தி சென்றுவிடுவார் பூசாரி,  இவர்கள் செல்லும்போதே நேரம் ஏழேமுக்கால் ஆகியிருந்தது மேலே செல்லப் பூசாரி மட்டும் அமர்ந்திருந்தார் தொழுது பிரசாதம் வாங்கிக்கொண்டு இருவரும் அங்கேயே அமர்ந்தனர்.

 

“கோவில் பூட்டறேன் நீங்கப் போகலையா” என்றார் பூசாரி.

 

“கொஞ்ச  நேரத்துல கிளம்பிடுவோம்” என்றான் சேனா.

 

“சரி பாத்து இருங்க” என்றவர் கீழிறங்கி சென்றார்.

 

அருகில் அமர்ந்திருந்தவளை பார்த்தவன் “பயமா இருக்கா” என்க.

 

“எதுக்கு” என்றாள் அவனை நெருங்கி அமர்ந்து.

 

“இங்க தனியா இருக்க”.

 

“தனியா எங்க இருக்கேன் என் தேவா கூட இருக்கேன்”  என்றவள் கரங்களைக் கோர்த்துக்கொண்டான், அரைமனி நேரம் கடந்தும் அவனிடம் மாற்றமில்லை அவன் பேசாமல்  அமர்ந்திருந்தாலும் அவனுடைய அருகாமையே போதும் என்று அவளும் அமர்ந்திருந்தாள், வீட்டிற்கு போகும் எண்ணமே இல்லை.

 

பிடித்திருந்த அவள் கரத்தில் அழுத்தம் கூடியது அவனை நிமிர்ந்து பார்க்க, படிகளைக் கூர்மையாகப் பார்த்து அமர்ந்திருந்தான் சில நொடிகளில் ஆறு பேர் வேகமாக ஏறி வந்தனர் கைகளில் வீச்சரிவாள், அவர்கள் அருகில் நெருங்க மயூரியின் உடல் நடுங்க தொடங்கியது அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு ஒட்டி அமர்ந்தாள்.

 

அவள் கையைத் தட்டிக்கொடுத்தவன் “டேய் பொறுப்பு  இருக்காடா உங்களுக்கு நேரத்தோட வரதில்ல எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது வீட்டுக்குப் போக வேண்டாமா” என்றவன் எழுந்து நின்றான் அவளையும் சேர்த்துக்கொண்டு, அவள் அவனை விழிவிரித்து பார்த்தாள்.

 

“இவனுங்களுக்கு ஏன் வெய்ட் பன்றோம் அவங்க ஆறு பேர் இருக்காங்க எல்லாரையும் அடிச்சுடுவீங்களா” என்றாள் அவனின் பின்னே ஒளிந்துகொண்டு.

 

“அடிக்கவா…” என்றான் அவன்.

 

“வேண்டாம் அவங்க கைல அருவாள் இருக்கு பின்னாடி பக்கம் ஓடிடலாம்” என்க.

 

“டேய் அவளை விட்டுட்டு போ உனக்கு உயிர் மிஞ்சும்” என்ற ஒருவன் அருவாளை வீச அவளைத் தன்னோடு சேர்த்து நகர்த்தியவன் நொடியிடையில் அவனுடைய இடையில் சொருகி வைத்திருந்த பிஸ்டலை லாவகமாக எடுத்து முன்னில் வந்தவனின் முட்டியில் தோட்டாவை பாய்ச்சினான்.

 

அதிர்ச்சியில் அப்படியே படியில் விழுந்தாள் மயூரி, நாலாப்பக்கம் இருந்தும் தடதடவென்று ஓடிவந்த துப்பாக்கி ஏந்திய எட்டு பேர் இவர்களைச் சுற்றிநின்றனர் “டேய் போலீஸ் டா” என்றான் ரவுடிகளில் ஒருவன்.

 

“நம்மகிட்ட சொல்லவே இல்லையடா” என்றான் வேறொருவன்.

 

“அவங்களுக்கு தெரிஞ்சாதானேடா சொல்லுவாங்க” என்ற சேனாபதி “சக்தி” என்க “சார்” என்று வந்து நின்றான் ஒருவன்.

 

“விஷுவல்ஸ் கிளியரா” என்க.

 

“எஸ் சார், பக்கா அவங்க மேல ஓடி வரது உங்கள அட்டாக் பண்ண முயற்சி பண்றது எல்லாம் சூப்பரா பதிவாயிருக்கு” என்க.

 

“குட்… இவனைப் போற வழியில ஹாஸ்பிடல்ல தூக்கி போடுங்க டாக்டர் கிட்ட நான் பேசிக்குறேன், மத்த எல்லாரையும் கொண்டு போய் லாடம் கட்டு நான் பின்னாடியே வரேன்” என்க.

 

“எஸ் சார்” என்றவன் “தூக்குங்கடா” என்க அடிபட்டவனை அவனுடன் வந்தவர்களே தூக்கி சென்றனர், அனைவரையும் வண்டியில் ஏற்றி அவர்கள் சென்றுவிட சேனாபதி மயூரியை திரும்பிப் பார்த்தான்.

 

அவள் நேரே நீண்ட அவன் கரத்தைப் பற்றி  எழுந்து நின்றவள் “போலீஸ்!” என்றாள் அதிர்ச்சி விலகாமல்.

 

“ஹ்ம்ம்… கிரைம் பிரென்ச்” என்றவனை பார்த்தவள் “நிஜமா! சீரியஸ்லி!” என்றவளை அருகில் இழுத்தவன் அவள் நெற்றி முட்டி “எஸ்” என்க.

 

அவன் கன்னத்தைக் கைகளில் தயங்கியவள் “அமேசிங்… எப்படி? ஏன் சொல்லவேயில்லை, உங்களுக்குப் போஸ்டிங் வரலன்னு விழி சொன்னப்போ எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா, என்கிட்டே சொல்லவேயில்லை” என்றவளுக்கு சந்தோஷத்தை எப்படி வெளிக்காட்ட என்றே தெரியவில்லை.

 

“ரிலாக்ஸ்” என்றவன் “எல்லாம் சொல்றேன் வாப்போலாம் நேரமாச்சு” என்று அவளுடன் நடந்தான்,  போகும்போது இருந்ததை விடத் திரும்பிச் செல்கையில் அவனிடம் ஆதீத மவுனம், முகம் கடுமை பூசியிருந்தது, நேரே அவளின் வீட்டிற்கு சென்றவன் அவளை இறக்கிவிட்டு அவனும் கீழிறங்கினான்.

 

“வீட்ல ஏதும் சொல்ல வேண்டாம் நான் பொறுமையா சொல்லிக்கிறேன், இனிமே பயம் வேண்டாம் நீ எங்க வேணா தைரியமா போலாம்” என்று பேசிக்கொண்டிருந்தவன் முகத்தில் தெளிச்சமேயில்லை, என்னவென்று தெரியவில்லை என்றாலும் ஏதோ விரும்பத் தகாத அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏதோ ஒன்று அவன் மனதை உறுத்துகிறது என்ற புரிந்தது.

 

அவனை நெருங்கியவள் அவன் மார்பில் முகம் புதைத்து “சரியாயிடும்… எதுவா இருந்தாலும் எல்லாம் சரியாயிடும் இப்படி இருக்காதீங்க தேவா கஷ்டமா இருக்கு,  பிரச்சனை எதுவா இருந்தாலும் என்னாலயா இருந்தாலும் அது நானாவே இருந்தாலும்… எந்த முடிவு உங்க மனசுக்கு நிம்மதி தருமோ அதையே எடுங்க, என் தேவாவை என்னால புரிஞ்சுக்க முடியும் எப்படியிருந்தாலும் ஐ லவ் யு” என்றவள் அவனை விட்டு விலகி நடக்க.

 

“குட்டிமா” என்ற அழைப்பு அவளை நகரவிடாமல் தேக்கியது, தன்னை நோக்கி அவளை இழுத்தவன் தன்னுள் அவளைப் பொதிந்தான்.

 

“உன்னவிட பெருசில்லடி எனக்கு என் உசுர் கூட” என்றவனுள் மெல்ல மெல்ல பெய்திறங்கியது மயூரியின் கண்ணீர்த்துளிகள்.

 

 

 

நான் முழுசா

உன்னை எனக்குள்ள

பொதைச்சேன் என்

உசுர அழகே உன்ன

நித்தம் நித்தம் நெனச்சேன்

 

இனி வரும் ஜென்மம்

மொத்தம் நீயும் தான் உறவா

வரணும் மறுபடி உனக்கென

பிறந்திடும் வரம் நான் பெறணும்

 

பெண்ணே பெண்ணே

வாழ்க்க நீள என் கூட நீ மட்டும்

போதும் போதும் நீ நாளும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!