Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 9.

தமிழ் காதலை சொல்லாமல் தனக்குள் மறைக்க உருவாகும் சூழ்நிலை.

 

தமிழ் நிலாவின் பிறந்த நாளுக்கு என்ன கிஃப்ட் வாங்கி தந்து தன் காதலை அவளிடம் சொல்வது என தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

 



Advertisement

இனி,

 

கவின் யாழினிக்கு போன் செய்து, ‘ எப்டி இருக்க யாழினி’, என கேட்க,

Advertisement

 

Advertisement

‘பார்ரா கவின் சார் எனக்கெல்லாம் போன் பண்றாரு. ம் ஐம் ஃபைன். நீ எப்டி இருக்க.  எப்டி போகுது உன்னோட ஒர்க். எப்ப இங்க வர்றதா உத்தேசம்’ என யாழினி கேட்க,

 

‘ம் ஐம் ஆல்ஸோ வெரி ஃபைன்.  இன்னும் ரெண்டு மாசத்துல ப்ராஜக்ட் முடிஞ்சிரும். கண்டிப்பா வந்துருவேன். அப்புறம் யாழினி உங்க வீட்ல உன் கல்யாணத்த பத்தி என்ன முடிவு எடுத்துருக்காங்க’ என கவின் கேட்க,

Advertisement

 

‘அத ஏன் கேக்குற. தமிழுக்கும் எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு தெளிவா சொல்லிட்டேன். சரி அதோட இந்த பிரச்சனை முடிஞ்சுரும்னு பாத்தா எங்க அம்மா தமிழ் வேண்டாம்னா வேற மாப்பிள்ளைய பாக்குறேன். கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி டார்ச்சர் பண்றாங்க. ஆனா அப்பா என் பக்கம் தான். நான் எப்ப யார சொல்றேனோ அப்ப அவரையே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு அம்மா கிட்ட சொல்லிட்டாரு. ஆமா இப்ப நீ ஏன் இத பத்தி கேக்கற’ என யாழினி கேட்க,

 

‘நிஜமா உங்க அப்பா அப்டியா சொன்னாரு. அப்ப ஓகே’ என கவின் சொல்ல,

 

‘என்னது அப்ப ஓகேன்னா புரியலயே. ஏன் நீ என்ன எங்கப்பா கிட்ட உங்க பொண்ண எனக்கு குடுக்கறீங்களான்னு கேக்க போறீயா’ என யாழினி கிண்டலாய் கேட்க,

 

‘சூப்பர் யாழினி. நீ ரொம்ப ஸ்மார்ட்னு எனக்கு தெரியும் ஆனா இவ்ளோ ஸ்மார்ட்னு இப்ப தான் தெரியுது. ஆனா நீ சொன்னதுல்ல  ஒரு சின்ன கரெக்ஷன் என்னனா உங்க அப்பா கிட்ட கேக்குறதுக்கு முன்னாடி உங்கிட்ட சொல்லிடறேன்’ என கவின் சொல்ல,

 

‘என்னடா விளையாடுறியா. அடி வாங்குவ பாத்துக்க. நீ என்ன சொல்ல வர இப்ப அத தெளிவா சொல்லு’ என்றாள் யாழினி.

 

‘சரி தயவு செஞ்சு நான் சொல்றத பொறுமையா கேளு. பர்ஸ்ட் உன்ன எனக்கு நல்ல ஃப்ரெண்டா தான் புடிச்சுது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உன்ன நான் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். எனக்கு உன் மேல இருக்கறது காதல் தான்னு நான் உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கற இந்த மூனு வருஷமா தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீ இல்லாம என்னால நார்மலா இருக்க முடியல. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். உன் கூடவே இருக்கனும்னு தோனுது. இந்த விசயத்தை தமிழ் கண்டுபுடிச்சிட்டான். அதனால தான் உங்க வீட்லயும் அவங்க வீட்லயும் கல்யாணத்த பத்தி பேசுனப்ப வேண்டாம்னு சொல்லிட்டான்’ என கவின் சொல்ல,

 

சிறிது நேர அமைதிக்கு பிறகு, ‘கவின் என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல. ப்ளீஸ் எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேனும்’ என யாழினி கேட்க,

 

‘தாராளமா நல்லா யோசிச்சு நல்ல பதிலா சொல்லு ப்ளீஸ்’ என்றான் கவின்.

 

‘சரி அப்ப தமிழ் லவ் பண்றேன்னு சொன்னது. அந்த பொண்ண அவங்க அம்மா அப்பா கிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணது எல்லாம் எப்டி. அவங்க அம்மா கூட அந்த பொண்ணு அவங்க கிட்ட நல்லா அன்பா பழகுறான்னு தமிழ அக்கறையா கவனிச்சிக்கறான்னு அவங்களுக்கு ஓகேன்ற மாதிரியும் சொன்னாங்க. நான் கூட அத நினச்சு எப்டியோ தமிழுக்கு நல்ல பொண்ணா கிடைச்சிருச்சுன்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டனே’ என யாழினி கேட்க,

 

‘அதை ஏன் கேக்குற யாழினி. அது எல்லாம் எனக்காக அவன் சொன்னது. அது ஒரு பெரிய கத ‘ என அக்ரிமெண்ட்டில் ஆரம்பித்து தமிழ், நிலா காதலிப்பது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் கவின்.

 

‘அடப்பாவிகளா பாவம்டா அந்த நிலா. எப்டியோ இப்ப ரெண்டு பேரும் ஒருத்தர் கொருத்தர் காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்கல்ல அது போதும். ஒரு நிமிஷம் லைன்ல இரு நான் தமிழ கனெக்ட் பண்றேன்’ என்று சொல்லி கான்ஃப்ரன்சில் தமிழுக்கு அழைத்தாள் யாழினி.

 

‘சொல்லு யாழினி நல்லா இருக்கியா. என்ன திடீர்னு கான்ஃபரன்ஸ் கால்ல வர்ற’ என தமிழ் கேட்க,

 

‘ம் ரொம்ப நல்லா இருக்கேன். அப்புறம் திடீர்னு கவின் கூப்டு என்னை லவ் பண்றேன்னு சொன்னான். திடீர்னு நீ உண்மையாவே ஒரு பொண்ண லவ் பண்ணல அவனுக்காக பொய்யா தான் நிலா கிட்ட லவ் பண்ண சொல்லி அக்ரிமண்ட் போட்ருக்கன்னு சொன்னான். திடீர்னு நீயும் நிலாவும் இப்ப உண்மையா லவ் பண்றீங்கன்னு சொல்றான். அதனால எத உண்மைன்னு உன் வாயால கேக்கலாம்னு திடீர்னு உனக்கு கான்ஃபரன்ஸ் கால் போட்டேன்’ என யாழினி சொல்ல,

 

‘டேய் கவினு வெரிகுட் டா . ரொம்ப தேங்க்ஸ் டா. இவ்ளோ சீக்கிரம் உன் லவ்வ யாழினி கிட்ட சொல்லுவேன்னு நான் நினைக்கவே  இல்லடா. அப்புறம் யாழினி கவினுக்கு ஓகே சொல்லிட்டியாடி’ என தமிழ் கேட்க,

 

‘ம் திடீர்னு வந்து சொன்னா . எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேனும். அது இருக்கட்டும். முதல்ல நிலா கிட்ட  போய் உன் லவ்வ சொல்லு. அவளுக்கு ஓகே வான்னு கேளு. அப்புறம் அந்த அக்ரிமண்ட்ட முடிச்சு விடு. பாவம்டா நிலா. அதே மாதிரி உன் பேரண்ட்ஸ்க்கு நிலா மருமகளா வர்றதுல ரொம்ப சந்தோஷம் தான். உன் அம்மாவே இத எங்கிட்ட சொன்னாங்க’ என யாழினி சொல்ல,

 

‘நிஜமாவே எங்க அம்மாக்கு நிலாவ பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களா.  அப்டினா சரி. மீதிய நான் பாத்துக்கறேன். அப்புறம் கொஞ்சம் நல்லா யோசிச்சு நல்ல முடிவா கவினுக்கு சொல்லிடு ப்ளீஸ். ஏன்னா நான் பட்ட கஷ்டம் எல்லாம் வேஷ்டாயிற கூடாதில்ல அதான். என்னடா பைனல் டச் ஓகேவா. சரி ரெண்டு பேருக்கும் பாய்’ என சொல்லி தமிழ் போனை வைக்க கவினும் யாழினியும் சேர்ந்து போனை கட் செய்தனர்.

 

‘அப்பாடா எப்டியோ ஒரு பெரிய பிரச்சனை முடிஞ்சுது. அவளுக்கு பர்த்டே கிஃப்ட் அக்ரிமெண்ட் க்ளோஸ் பண்ணி குடுத்தர வேண்டியது தான். கரெக்ட் ஒரு பர்த்டே விஷ் போட்டு பொக்கே,  ஒரு கவர்ல அக்ரிமண்ட் க்ளோஸ் பண்ண பேப்பர், அப்புறமா ஒரு லவ் கிரீட்டிங் கார்டு, ஒரு ரிங் . ஓகே லவ் ப்ரபோஸல் ப்ளஸ் பர்த்டே கிஃப்ட் ப்ளான் ரெடி. அப்புறம் அப்பா, ராஜி ரெண்டு பேர் கிட்டயும் போய் சொல்லி கல்யாணத்த பத்தி நிலா வீட்ல போய் பேச சொல்றோம். தமிழு பின்றடா’ என தனக்குத் தானே பேசிக் கொண்டான் தமிழ்.

 

நிலாவின் பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் யொசித்த படியே பொக்கேக்கு ஆர்டர் சொல்லி விட்டு, பார்த்து பார்த்து லவ் ப்ரபோசல் கிரீட்டிங் கார்டையும் , மோதிரத்தையும் வாங்கி விட்டு, தன்னிடம் இருந்த அக்ரிமண்ட் பேப்பரோடு அதை க்ளோஸ் பண்ணி ஒரு அக்ரிமண்ட் பேப்பர் ரெடி பண்ணி அதில் தனது கையெழுத்தையும் போட்டு வைத்திருந்தான்.

 

நிலாவின் பிறந்த நாளுக்கு முதல் நாள். ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் எதேச்சேயாக வெளியே வர, அது தெரியாமல் நந்தினியும், நிலாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

‘நந்தினி ஏன் காலைல இருந்து டல்லா இருக்க’ என நிலா கேட்க,

 

‘அத ஏன் கேக்குற என் வீட்டுகாரோட சின்ன சண்டை. அங்க நல்லா பதிலுக்கு பதில் பேசி திட்டிட்டு வந்துட்டேன். ஆனா இங்க வந்ததுக்கப்புறம் மனசு கஷ்டமா இருக்கு’ என நந்தினி ஃபீல் பண்ண,

 

‘அடிப்பாவி அண்ணன திட்டி சண்ட போட்டுட்டு இங்க வந்து ஃபீல் பண்றியா’ என நிலா கிண்டல் செய்ய,

 

‘உனக்கு இதெல்லாம் இப்ப புரியாது. கல்யாணம் ஆனா நீயும் இப்டி தான் ஆயிருவ. அது சரி நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க. யாரயாவது லவ் பண்றியா. எனக்கு என்னவோ நீயும் தமிழ் சாரும் லவ் பண்ற மாதிரி தோனுதே’ என நந்தினி போட்டு வாங்க பார்க்க,

 

‘நீ வேற நந்தினி. எனக்கு அவர பிடிச்சிருக்கு தான். ஆனா லவ் பண்ண எனக்கு தகுதி இல்லயே. எனக்கு தெரிஞ்சு அவரும் என்னை மாதிரி தான அவருக்கு பிடிச்சிருந்தா கூட நான் அவருக்கு ஏத்தவ இல்லைன்னு யோசிப்பாரு. அதுமட்டுமல்ல நான் இன்னும் கல்யாணத்த பத்தி யோசிக்கல. என் தம்பிய படிக்க வைக்கனும், எங்க ஹோட்டல் திரும்பி வாங்கி அத சக்ஸஸ் ஃபுல்லா ரன் பண்ணனும். அதுக்கப்புறம் தான் என் கல்யாணத்த பத்தி யோசிக்கனும்’ என நிலா சொல்ல,

 

‘அது சரி அப்ப இப்பதத்திக்கு மேடம்க்கு கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டம் இல்ல. ரொம்ப சந்தோஷம்’ என நந்தினி கூற அவளது கணவனிடம் இருந்து போன் வந்தது.

 

‘யாரு அண்ணாவா? ஒழுங்கா சமாதானமாயிரு. ஓகே’ என்று சொல்லி நிலா செல்ல இதுவரை இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த தமிழ்  வருத்தத்துடன் தன் அறைக்கு போனான்.

 

‘ஏன்டி நான் போய் நீ எனக்கு தகுதி இல்லைன்னு நினைப்பனா. என்னை நீ இவ்ளோ தான் புரிஞ்சிக்கிட்டியா. உன் மேல எப்ப எப்டி காதல் வந்துச்சுன்னு எனக்கு தெரியல. ஆனா இப்ப உன்மேல எவ்ளோ காதல் இருக்குன்னு என்னால வார்த்தைல சொல்ல முடியாது. உன்னைய ஏன் எனக்கு புடிச்சுதுன்னு எனக்கே தெரியல. அப்புறமா தான் புரிஞ்சுக்கிட்டேன் இதுக்கு பேர் தான் காதல்னு.  என்னென்ன வெல்லாம் ப்ளான் பண்ணேன் தெரியுமாடி உனக்கு. எல்லாம் ஒரு நிமிஷத்துல கலைச்சிட்ட. சரி நான் நினைச்சது தான் நடக்கல. நீ நினச்சதுதாவது நடக்கட்டும். நான் அதுவரைக்கும் உனக்காக வெய்ட் பண்றேன். உன்னை கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன்டி’ என தன்னைத் தானே தேத்திக் கொண்டான் தமிழ்.

 

வீட்டுக்கு போயும் உறங்காமல் இரவு முழுக்க தமிழ் நிலா சொன்னதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

 

நிலாவின் பிறந்த நாளன்று வீட்டில் அம்மாவிடம் ஆசி வாங்கி விட்டு தம்பியிடம் வாழ்த்தையும் கிஃப்டாக அவனே செய்த துணியாலான ஹேர் பேண்டையும் வாங்கிக் கொண்டு அம்மா செய்திருந்த அவளுக்கு பிடித்த ஸ்வீட்டை சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு ஆபீஸ்க்கு சென்றாள் நிலா.

 

ஆபீஸில் அனைவருக்கும் நிலா தனக்கு பிறந்த நாள் என்று சொல்லி ஸ்வீட் குடுக்க அனைவரும் எடுத்துக் கொண்டு கோரசாக பிறந்த நாள் வாழ்த்து பாடினார்கள்.

 

‘ஏங்க முன்னாடியே தெரிஞ்சிருந்தா எல்லாரும் சேர்ந்து கிஃப்ட் வாங்கி குடுத்திருப்போம், ஏங்க நந்தினி உங்களுக்கும் தெரியாதா?’ என அனைவரும் கேட்க,

 

‘நீங்க வேற எனக்கே தெரியாதுங்க. தெரிஞ்சிருந்தா நானாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்திருப்பேன்’ என நந்தினி சொல்ல,

 

‘பரவால்லப்பா விடுங்க. உங்க விஷஸ் தான் எனக்கு வேனும் கிஃப்ட  எல்லாம் வேணாம்’ என நிலா சொல்லி விட்டு கிளம்ப அனைவரும் அவரவர் இடத்திற்கு சென்றனர்.

 

நிலாவுக்கு தமிழ் பிறந்த நாள் பரிசாக தரப் போவது என்ன?

 

தமிழ் தரப்போகும் பிறந்த நாள் பரிசை நிலா ஏற்றுக் கொள்வாளா?

 

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!