Skip to content
Post Views: 8,489
வீடியோ காலில் தெரிந்தவனை முறைத்து பார்த்திருந்தாள் பூஜா “இருந்தாலும் நீங்க இவ்ளோ பெரிய வில்லனா இருக்க கூடாது மாமா” என்றவளை பார்த்துக் கன்னக்குழி தெரிய சிரித்தான் சேனா, வெகுகாலத்திற்கு பிறகு அவன் அப்படி சிரிப்பதை பார்த்திருந்தாள், ஆனால் இப்பொழுது மனதில் அவள் திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாமன் மகனாக அல்ல நல்ல ஒரு நண்பனாக.
“ஏங்க அவர் ஹீரோங்க” என்ற சக்தியைத் திரும்பிப் பார்த்தவள் “அது உங்களுக்கா இருக்கும் இன்னைக்கு எனக்கு வில்லன், அழகா பட்டுப் புடவை கட்டி கைல கட்டோட இப்படி படுத்தருக்கேன்” என்று முகத்தைச் சுருக்கினாள்.
Advertisement
நாங்க சொன்னதை கேட்டிருந்தா இவ்ளோ அடி பட்டிருக்காது இது நீயா கேட்டு வாங்கிக்கிட்டது, எல்லாம் உன் நல்லதுக்குதான் என்றான் சேனா.
“சும்மா சொல்லாதீங்க மாமா உங்க பிரெண்ட்க்கு ப்ரோமோஷன் கிடைக்க என்னை யூஸ் பண்ணிக்கிட்டிங்க” என்றதும் அவனிடம் சில நொடிகள் அமைதி.
Advertisement
Advertisement
“சாரி நான் சும்மாதான் சொன்னேன், நீங்கச் சொன்னதை நான் கேட்டிருக்கணும் எது சரி எது தப்புனு தெரியல… இப்போவும் என்னக்கு சரியா தெரியல” என்றவளை பார்க்கவும் பாவமாக இருந்தது “ஒன்னும் பிரச்சினையில்ல பாத்துக்கலாம் விடு டேக் கேர், இன்னும் ஒரு நாப்பது நாள் வீட்ல ரெஸ்ட் எடு உன்னை நிர்மல் வீட்டுக்கு அனுப்பாம இருக்கற வேலைய டாக்டர் பாத்துப்பாங்க, என்ன டாக்டர்…” என்றதும்.
“கண்டிப்பா” என்றார் சந்தியா மயூரியின் குடும்ப டாக்டர் “ஓகே சக்தி அங்க எல்லாத்தயும் முடிச்சுட்டு ஆபிஸ் வந்துடு” என்றான் சேனாபதி.
“வலிக்குது டாக்டர்” என்ற பூஜாவை பார்த்தவர் “இன்ஜக்க்ஷன் போடச் சொல்லியிருக்கேன் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்” என்றவர் “போலாமா” என்றார் சக்தியிடம்.
Advertisement
“ஹ்ம்ம் போலாம்” என்றவன் “டேக் ரெஸ்ட்” என்றான் பூஜாவிடம், அவள் முறைத்துப்பார்க்க மெல்லிய சிரிப்போடு டாக்டர் கோட் மற்றும் மாஸ்க் அணிந்துகொண்டான், இருவரும் வெளியில்வர முதல் ஆளாகத் தெய்வானை எழுந்து ஓடி வந்தார்.
“டாக்டர் என் பொண்ணு எப்படி இருக்கா” என்றார் பதட்டமாக.
“ஒண்ணுமில்லமா பிராக்ச்சர் தான் டிரீட்மெண்ட் பண்ணிருக்கோம் பயப்பட தேவையில்லை” என்றார் சந்தியா.
வேகமாக முன்னில் வந்த நிர்மல் “டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க நாங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போறோம், இன்னைக்கே எங்க வீட்டுக்குப் போய் விளக்கேத்தனும் அப்புறம் வேணும்னா எங்க ஹாஸ்பிடல்ல வெச்சு பாத்துக்குறோம்” என்றதும் ஒருநொடி சந்தியாவின் விழிகள் தெய்வானையில் பதிந்து மீண்டது.
நிர்மலை பார்த்தவர் “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க இப்போ அங்க கூட்டிட்டு போகணுமா… அவங்களுக்கு இப்போ எல்லா விஷயத்துலயும் ஹெல்ப் தேவை இங்கன்னா அம்மா தங்கச்சி இருக்காங்க உரிமையா கேப்பாங்க, உங்கவீட்டில இன்னும் செட் ஆகல இல்லையா, சோ அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்”.
“அதோட பூஜா கொஞ்சம் மென்டல்லி டிஸ்டர்ப் ஆயிருக்காங்க கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே கை ஒடிஞ்சு ஹாஸ்பிட்டல்ல இருக்குறது அவங்களுக்கும் ஒருமாதிரி இருக்கும்ல, நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன் இனிமே நீங்க முடிவு பண்ணுங்க” என்றார் பொதுவாக.
நிர்மல் அப்படி கேட்டதே தெய்வானைக்கு பிடிக்கவில்லை, ராஜேந்திரனிடம் நெருங்கிய தெய்வானை “கல்யாணம் உங்க இஷ்டப்படி நடந்தாச்சு என்ன அபசகுனம் தெரியல இப்படியெல்லாம் ஆயிடுச்சு, என் பொண்ணை எங்கேயும் அனுப்ப மாட்டேன் மொதல்ல அவளுக்குச் சரியாகட்டும் மலைக்கோவில் மாரியம்மனுக்கு பூஜை போட்டு அப்புறமா அனுப்பலாம்” என்று அவர் பாட்டிலும் புலம்பிக்கொண்டிருந்தார், ஒருவிதமான பதட்டம் தெய்வானையிடம்.
அந்த நேரத்தில் ராஜேந்திரனுக்கும் அதுவே சரியென்று பட்டது “மாப்ள பூஜாவை இப்போதைக்கு நாங்களே கூட்டிட்டு போறோம் கொஞ்சம் சரியாகட்டும் நல்ல நாள் பார்த்து மத்த சடங்கெல்லாம் செய்யலாம், என்ன சம்பந்தி நீங்க என்ன சொல்றீங்க” என்றார் நிர்மலின் பெற்றோரைப் பார்த்து.
“நீங்கச் சொல்றமாதிரியே செய்யலாம் ஒன்னும் பிரச்சினையில்ல” என்றார்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டவர்கள் பிறகு “சம்பந்தி அப்போ நாங்க கிளம்புறோம் பூஜாவை வீட்டுக்குக் கூட்டிட்டு போனதும் சொல்லுங்க நாங்க வரோம்” என்றவர்கள் அப்பொழுதே அங்கிருந்து சென்றும் விட்டனர்.
அறைக்குள் படுத்திருந்த பூஜாவின் சிந்தனை நான்கு நாட்கள் முன்பு நடந்த நிகழ்வுக்குச் சென்றது, அன்று பார்லரில் ரிசெப்ஷனுக்கு வேண்டிய முடி அலங்காரம் மற்றும் மேக்கப் ட்ரையல் பார்த்துக்கொண்டிருந்தாள், அதோடு ஃபேஷியலும் செய்ய வேண்டும், பூர்விகாவுக்கு வேறொரு அறையில் ஃபேஷியல் செய்துகொண்டிருந்தனர்.
“மேம்” என்ற பியூட்டிஷனை நிமிர்ந்து பார்த்தாள் பூஜா “உங்ககிட்ட பேசணும் சொன்னாங்க” என்றார் தன் அருகில் நின்ற பெண்ணைக் காண்பித்து.
“சொல்லுங்க” என்றவள் கையில் ஒரு மடிக்கணினியை வைத்தவள் “என் பேர் மோனிகா சேனாபதி சொல்லி உங்கள பாக்க வந்தேன்” என்க.
“மாமாவா! என்ன விஷயம்” என்றாள் ஒன்றும் புரியாமல், நேரிலே வந்து பேசலாமே எதற்க்காக இப்படி என்ற யோசனையே அவளுக்கு.
“நானும் என்னோட கொலீக் சக்தியும் ஒரு கேஸ் விஷயமா முக்கியமா பேசணும்” என்றவள் லேப்டாப்பில் பார்வை பதிக்க திரையில் சேனாவும் சக்தியும்.
“என்ன பிரச்சனை மாமா நேர்லயே வந்து பேசியிருக்கலாமே ஏன் இப்படி, இவங்க யாரு? என்றாள் பூஜா.
“நேர்ல பேச முடியாது பூஜா, நீ கவனிக்கல ஆனா கல்யாணம் முடிவானதுல இருந்து உன்னை உங்க அப்பா ஆளுங்க பாலோ பண்றாங்க, இப்போகூட வெளில ஆளுங்க நிக்குறாங்க சந்தேகம் இருந்தா மேலருந்தே எட்டி பாரு, ப்ளாக் மாருதி வேன் மூணு பேர் இருப்பாங்க” என்க ஆச்சர்யத்தில் விழி விரித்தாள் பூஜா.
வேகமாக எழுந்தவள் ரிசப்ஷன் வந்து அங்கிருந்த கண்ணாடி வழியே கீழே பார்க்க எதிர்பக்கம் நின்றிருந்த வேனின் அருகில் மூன்று பேர் நின்றிருந்தனர், திரும்பிவந்து அமர்ந்துகொண்டாள் இதுயென்ன எதற்க்காகத் தன்னை கண்காணிக்கிறார்கள் என்ற பயம் வந்தது.
“இது என்னோட பிரென்ட் சக்தி போலீஸ்ல இருக்கான், இவங்க மோனிகா இவங்களும் டிபார்ட்மென்ட் ஆளுதான்” என்றவன் “சக்தி நீயே சொல்லு” என்க.
“ஹலோ பூஜா… நிர்மல் மேல எங்களுக்குச் சில சந்தேகம் இருக்கு, அதைச் சொல்லி உங்க அப்பாவை எச்சரிக்கை செஞ்சோம், உங்க அப்பா மேலே கோவம் இருந்தாலும் உங்க லைப் பத்தி யோசிச்சு சேனா அதைச் செஞ்சாரு, ஆனா உங்க அப்பா அதை நம்பள அப்படியே விட்டுருந்தாக்கூட பரவாயில்ல விசுவாசத்தை மாப்பிள்ளைக்கிட்ட காமிச்சுட்டார், நிர்மல் கிட்ட இந்தமாதிரினு சொல்லிட்டாரு” என்றான் ஷக்தி.
“என்ன தப்பு பண்றார்” என்றாள் அவர்களைப் பார்த்து.
“தெரில” என்று ஷக்தி சொல்ல “தெரியாம எப்படி தப்பு பண்றார் சொல்றீங்க, உங்ககிட்ட ஆதாரம் இல்லாம எப்படி நீங்க இப்படி சொல்லலாம்” என்றவளிடம் கைகாண்பித்து நிறுத்தச் சொன்ன சக்தி “நான் பேசி முடிச்சுறேன் அப்பறம் நீங்கக் கேள்வி கேளுங்க” என்றவன், அவர்களுக்கு இதுவரை இருக்கும் சந்தேகத்தைக் கூறினான்.
“இதுல இப்போ நான் என்ன பண்ணனும் கல்யாணத்தை நிறுத்தணுமா” என்றாள்.
“அது உன்னால முடியுமா… உன் அப்பாகிட்ட சொன்னதுக்கு அப்புறமும் அவர் முழுமூச்சா கல்யாண வேலை பாக்குறார், நீ சொன்னா மட்டும் நிறுத்திடுவாரா” என்றவன் “என்ன தப்பா இருந்தாலும் இதெல்லாம் சாதாரணம் அப்படினு சொல்லி உன்ன அட்ஜஸ்ட் பண்ணி வாழத்தான் சொல்வார் உன் அப்பா, ஏன்னா இந்தக் கல்யாணம் உண்மையில ஒரு வியாபாரம் ரெண்டு பக்கமும் லாபம் தரும் வியாபாரம் அந்தப் பக்கம் பெரிய நன்கொடை இந்தப் பக்கம் ஹாஸ்பிடல்ல நடக்குறத வெளில வரவிடாம பண்ற அதிகார பலம்”.
“உங்க அப்பாவே நினைச்சாலும் கல்யாணம் நடக்கும் ஏன்னா மொத்த அதிகாரமும் உன் பெரியப்பா கைல, சரியான ஆதாரம் இல்லாம நிர்மலுக்கு எதிரா இப்போ சக்தி என்ன பண்ணாலும் அது அவன் வேலையைப் பாதிக்கும், வேல போகக்கூட வாய்ப்பிருக்கு, நிர்மல் தப்பு பண்ணனும் அதை ஆதாரத்தோடு பிடிக்கணும்”.
“எங்களுக்குக் கொஞ்ச நாள் டைம் வேணும் அவனை மடக்க யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராம எல்லாமே சரியா நடக்கிறதா அவங்களுக்கு தோனனும் அப்போதான் அவன் அவனுடைய நார்மல் லைப்க்கு போவான் சிக்குவான், கல்யாணத்தை யாரோ நிறுத்தினமாதிரி இருக்க கூடாது அதுக்குதான் உன்கிட்ட பேசிட்டுஇருக்கோம்” என்ற சேனாவை பார்த்தவள் எனக்குப் புரியல மாமா, கல்யாணம் எப்படி நிக்கும்” என்றாள் புரியாமல்.
“இவங்க அதைப் பாத்துப்பாங்க, உன் கை எலும்பை ஜஸ்ட் லைட்டா இவங்க உடைப்பாங்க” என்றதும் துள்ளி எழுந்தவள் “ஏதே… எலும்பை உடைப்பாங்களா என்ன விளையாடுறீங்களா” என்றாள் கோபத்தோடு.
“பூஜா உக்காரு” என்றான் சேனா.
“இல்ல நான் வீட்டுக்குப் போறேன் இது சரியா வராது” என்றவள் வேகமாகக் கதவை நோக்கி நடக்க “சரி போங்க… ஆனா இங்க நடந்த எதையும் யார்கிட்டயும் சொல்லாதீங்க, அப்படியே அவன் எவ்ளோ பெரிய கேடு கெட்ட அயோக்கியனா இருந்தாலும் சகிச்சுக்கிட்டு அவனோடவே வாழுங்க, நாந்தான் சொன்னேனே இது சரியா வராதுன்னு இவர்தான் கேக்கல”.
“உங்க அப்பாவாலதான் அவரோட போலீஸ் கனவே பாழாப்போச்சு இருந்தும் உங்களுக்காக அவர் யோசிச்சார் அத்தை பொண்ணு அவளோட லைப் ஒருதடவை பேசிப்பாக்கலாம் அப்படினு சொன்னார், இந்தப் பொண்ணும் நேரா போய் நிர்மல் கிட்ட சொல்லப்போவுது போலீசுக்கு உன் மேலே இந்த விஷயத்திலதான் சந்தேகம்ன்னு” என்ற ஷக்தி கோபமாக எழுந்து ஜன்னல் அருகில் சென்று நின்றான்.
நண்பனுக்கு உதவி செய்ய வந்தபோலவே காட்டிக்கொண்டான் சேனா எங்கேயும் இது அவனுடைய வேலை என்று காண்பிக்கவில்லை, பைத்தியம் ஒன்றுதான் பிடிக்கவில்லை பூஜாவிற்கு ஏற்கனவே இந்த வாழ்வை எப்படி எதிர்கொள்ள என்ற கவலை அதோடு இதுவேரா என்று ஆயாசமாக இருந்தது.
மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தவள் “நான் என்னதான் பண்ணனும்” என்றாள் தளர்வாக.
அவள் அருகில் நெருங்கிய மோனி “ப்ளீஸ் நாங்க சொல்றதை நீங்கச் சரியா புரிஞ்சுக்கோங்க எங்களுக்குக் கொஞ்சம் டைம் வேணும் ராத்திரி பகலா இதுக்காகக் கஷ்டப்படுறோம் எப்படியும் கண்டுபிடிச்சுடுவோம், சாதாரணமா ஒருத்தவங்க பாக்குற பார்வை இல்லை ஒரு போலிசோடாது எங்க உள்ளுணர்வு சொல்லும் அவங்ககிட்ட ஏதோ தப்பிருக்குனு”.
“நிர்மல் விஷயத்துல எங்களுக்கு அந்தப் பீல் வருது, எங்க கணிப்பு தப்பா இருந்து நிர்மல் நல்லவனா இருந்தா ரொம்ப சந்தோசம் அப்படியில்லன்னா என்ன பண்ண போறீங்க?” என்ற மோனிக்காவை பார்த்தவள் “சரி என்ன பிளான்” என்றாள்.
திட்டம் என்ன ஏதென்று தெளிவாக அவளிடம் கூறியிருந்தனர் முழுமனதாக இல்லையென்றாலும் சம்மதித்திருந்தாள், திருமணத்திற்கு இறுதினங்கள் முன்பு தாயும் தந்தையும் பேசுவதை கேட்டாள் பூஜா, எதார்த்தமாகக் கேட்டாளா அல்லது ராஜேந்திரனின் சூழ்ச்சியில் விழுந்தாளா தெரியவில்லை.
“உன் அண்ணன் மவனை நினைச்சாதான் கொஞ்சம் சுருக்குனு இருக்கு, என்ன தைரியமா என்கிட்டயே வந்து மாப்பிளை சரியில்லைன்னு சொல்லுவான் அவன் ஏதோ பிளான் பண்றான் இந்தக் கல்யாணத்தை நிறுத்த” என்றார் ராஜேந்திரன்.
“என்னங்க சொல்றீங்க! சேனா சொல்லியிருந்தா கண்டிப்பா உண்மை இருக்கும் நீங்க விசாரிக்கலயா” என்று படப்படத்த மனைவியை முறைத்து பார்த்தவர்.
“ஏய் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற, அப்போ நானும் என் அண்ணனும் மோசமானவங்க என் பொண்ணுக்கு நல்ல மாப்பிளையை பாக்கல உன் நொண்ணன் மவன் மட்டும் நல்லவன் அப்படித்தானே” என்று அவர் கத்த தெய்வானை அசையாமல் நின்றார் எத்தனை காலமாகப் பார்க்கிறார் இது ஒன்றும் புதியதில்லையே.
“அவனுக்கு வேலை கிடைக்காம செஞ்சேன்ல அந்த வஞ்சம், அதை நேரம் பாத்து தீக்க பாக்குறான் விடமாட்டேண்டி இந்தக் கல்யாணம் நடக்கும் அப்படி நடக்கல எல்லாரையும் வெட்டிபோட்டுடுவேன்” என்றவர் கோபமாக வெளியேறினார்.
ராஜேந்திரன் கூறியதில் ஒரு வார்த்தையைக் கூடத் தெய்வானை நம்பவில்லை அவருக்குக் கணவனையும் தெரியும் அவரின் மருமகனையும் தெரியும், இப்பொழுது நிர்மல் பற்றிய பயம் மட்டுமே முன்னில் ஆனால் ராஜேந்திரன் யாருக்காக இந்த வலையை விரித்தாரோ அவள் அதில் சரியாக வந்து விழுந்திருந்தாள், பூஜா முழுதாக நம்பினாள் தந்தையை.
‘மாமா பொய் சொல்லியிருக்கு, அதுதான் பிடிக்கல சொல்லிட்டாரே அவருக்குப் பிடிச்ச மாதிரி ஒருத்தி இருக்கும்போது நாம கண்ணுக்குத் தெரிவோமா’ என்று எதையோ எதனோடோ முடிச்சிட்டு யோசிக்க மறந்தாள்.
“என்ன சார்” என்று சேனாவின் அருகில் வந்து நின்றான் சக்தி “எனக்கு என்னமோ தப்பா படுது சக்தி, பூஜாவை எந்த அளவுக்கு நம்பலாம்” என்றான் யோசனையாக.
“இது அவங்க லைப் இல்லையா அதைப்பத்தி யோசிக்க மாட்டாங்களா” என்றான் சக்தி, அவனுக்குப் பூஜா விருப்பம் சொன்னதோ சேனா மறுத்ததோ தெரியாது, அவள் அதை மனதில் வைத்து முடிவெடுக்கலாம் என்ற சந்தேகம் சேனாவிற்கு இருந்தது.
“மோனிகா… ஒருவேளை ஏதாவது தப்பா ஆச்சுன்னா அதுக்கு அடுத்தது என்னனு யோசிச்சு செய்ங்க அங்க இருக்குற நிலைமையைப் பொறுத்து, உங்களுக்குப் பிரச்சனை ஆகாம நான் பாத்துக்குறேன், ஆனா பூஜா நிர்மல் வீட்டுக்குப் போகக் கூடாது” என்றதும் “ஷுயர் சார்” என்றாள் மோனிகா.
திருமண நாள் காலை முகூர்த்த நேரம் நெருங்க மோனிகா பூஜாவிற்கு சைகை காண்பித்தாள் ‘சரியான நேரம்’ என்று, அவர்கள் திட்டப்படி பூஜாவின் பியூட்டிஷனோடு உதவியாளராக மோனிகா வந்திருந்தாள், பெண்ணை அழைக்கும் நேரம் வெளியில் வந்துவிட்டு மீண்டும் ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் அல்லது உடை உடுத்தியதில் ஏதேனும் பிரச்சனை என்று பூஜா அவசரமாக உள்ளே செல்ல வேண்டும்.
புடவை கசங்கிவிடும் என்று அவள் பின்னையே மோனிகாவும் செல்ல வேண்டும் அந்த நேரத்தைப் பயன்படுத்தி அவசரத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொண்டதாகக் காண்பிக்க வேண்டும் இதுதான் திட்டம், மற்ற நேரம் முழுதும் ஆட்கள் இருந்துகொண்டே இருந்தனர் அவளைத் தனியே விடவேயில்லை.
முகூர்த்தம் நெருங்கும் நேரம் என்றால் அனைவரும் மணமேடைக்கு செல்லவே அவசரப்படுவார்கள் அந்த நேரத்தைப் பயன் படுத்திக்கொள்ள நினைத்தாள் மோனிக்கா, பூஜா அறையிலிருந்து வெளியேற அவள் பின்னேயே வந்த மோனிகா “பூஜா ரெஸ்ட்ரூம்” என்று மெல்லிய குரலில் கூற.
“எனக்கு ரெஸ்ட்ரூம் போக வேண்டாம் மோனிகா” என்றவள் அவளை மிதப்பாகப் பார்த்துவிட்டு மணவறைக்கு சென்றாள்.
“சார் அவங்க நம்மள ஏமாத்திட்டாங்க” என்ற அழைப்பே சேனாவை தேடி வந்தது.
error: Content is protected !!