Skip to content
Post Views: 8,041
“மிராண்டா என்னால ஒன்னும் செய்ய முடியாது வேணும்னா நானும் வந்து உன்கூட அங்க தங்கிக்கலாம் அதனால என்ன யூஸ் நீ கிளம்பி இங்க வா அதைத்தவிர வேற வழி இல்ல” என்றார் ஒஸ்கர் மகளிடம்.
“என்னால எப்படி வர முடியும் கடனை அடைக்காம எங்களை எப்படி போகவிடுவாங்க” என்க.
Advertisement
“அங்க இருக்குற அந்த வீட்டை வித்துடுங்க என்கிட்டே இதுவரைக்கும் இருக்குற சேமிப்பு பணத்தை தரேன் மிச்சம் அப்புறம் தரோம்னு சொல்லு, நாம எங்க இருக்கோம்னு அவங்களுக்கு தெரியுமே நேர்ல வந்துகூட வாங்கிட்டு போகட்டும் நாம ஏமாத்திட்டு போகப்போறதில்லை இதுக்குமேல சொல்ல எதுவும் இல்ல”.
“நீ இங்க வந்து உன் பொண்ணுகிட்ட நேர்ல கேக்காம… எனக்குத் தெரிஞ்சு கெஞ்சி கேக்காம அவன் நம்மள எதையும் செய்யவிடமாட்டான்” என்றார் முடிவாக.
Advertisement
Advertisement
“யாரை சொல்றீங்க” என்றாள் மிராண்டா.
“தேவசேனாபதி… ஐரிஸோட ஹஸ்பண்ட் அவனை மீறி என்னால இங்க எதையும் செய்யமுடியல”.
Advertisement
“கிளாராவை விட்டுட்டு அவர் வரமாட்டார்ப்பா பாய்பிரெண்ட்ன்னு ஒருத்தன் கூடப் போய்த் தங்கியிருக்கா, கூப்பிட்டாலும் வரமாட்டா எனக்குப் பைத்தியம் பிடிக்குது” என்றாள் மிராண்டா.
“அப்போ உன் புருஷனை அங்கேயே விட்டுட்டு நீ மட்டும் வந்துசேரு” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
பல மாதங்களாக அவரும் போராடுகிறார் மகள் அந்தப் பக்கம் பிடிவாதமாக நிற்க, இங்குச் சேனா மயூரியை நெருங்கவே விடுவதில்லை கொஞ்சம் அவளைக் கோபப்படுத்தி பேசினால் கேசை வாபஸ் வாங்கிவிடுவாள் கையெழுத்து போட்டுவிடுவாள் என்று அவர் பகற்கனவு கண்டுகொண்டிருந்தார் தேவா சொல்லாமல் ஒரு புள்ளியைக் கூட அவள் வைக்கமாட்டாள் என்று அவருக்கு இன்னும் புரியவில்லை.
காதல் சொல்லத் தயங்கி நிற்கும் ஆடவனை போலக் கையைப் பிசைவதும் தூரப்பார்ப்பதுமாக இருந்தார் ராஜேந்திரன் வெகுநேரம் அமைதியாக அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தவன் “என்ன விஷயம் சொல்லுங்க” என்றான் இப்பொழுதும் மாமா என்று அழைக்க வரவில்லை.
“பூஜாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு” என்றவர் அவனைத் தயக்கமாகப் பார்த்து “நிர்மல் விஷயத்துல நீ சொன்னதை நான் கேட்டிருக்கணும் அப்போ…” என்றவர் குரல் கொஞ்சம் இடறியது.
“என் பொண்ணுக்கு ஏதாவது ஆயிருந்தா நான் உயிரோட இருக்குறதிலே அர்த்தம் இல்லாம போயிருக்கும், குற்றஉணர்ச்சியே என்னைக் கொன்னுருக்கும் இந்தத்தடவ சரியா செய்யணும்னு நினைக்குறேன் நீ கொஞ்சம்… நீ கொஞ்சம்… விசாரிச்சு சொல்றியா” என்றவரை அப்படியே பார்த்து நின்றான்.
அவனுக்குச் செய்ய விருப்பமில்லை போல என்று எண்ணியவர் “நான் வரேன்” என்று திரும்பி நடக்க “பூஜாவுக்கு சம்மதமா அவகிட்ட கேட்டீங்களா” என்றான் சேனா.
“இல்ல நல்லா விசாரிச்சுட்டு சொல்லலாம்னு யார்கிட்டயும் சொல்லல” என்றார்.
“விசாரிக்கிறது அப்புறம் மொதல்ல அவகிட்ட கல்யாணத்துக்கு தயார் ஆயிட்டாளான்னு கேளுங்க, அவ சம்மதம் இல்லாம அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம் மயூரிகிட்ட சொல்லிப் பேசச் சொல்றேன் அப்புறமா முடிவு பண்ணலாம்” என்றவன்.
“பையன் டீடெயில்ஸ் இருக்கா” என்க.
அவர் ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்டினார் “சரி நான் சொல்றேன்” என்றவன் அவர் பதிலுக்குக் காக்காமல் புறப்பட்டுச்சென்றான், அன்று மாலையே பூஜாவை சர்ச்சுக்கு வரச்சொல்லி பேசினாள் மயூரி.
“வேண்டாம்” என்றாள் பூஜா.
“இப்போ வேண்டாமா கல்யாணம் வேண்டாமா” என்க.
“கொஞ்சநாள் போகட்டும்” என்றவளின் அருகில் அமர்ந்தவள் “அவனை மறக்கமுடியல அந்த வாழ்க்கைல இருந்து வெளில வரமுடியலைன்னு சொல்றதுக்கு உனக்கு அவன் மேல காதலும் இல்ல அவன் கூட வாழவும் இல்ல, ஏதோ வந்தான் போனான் அவ்ளோதான் அதை யோசிச்சு வேண்டாம் சொல்லாத டக்குனு மூவ் ஆன் பண்ணு” என்றாள் மயூரி.
“ஆமா கல்யாணம் பண்ணு லைப் என்ஜாய் பண்ணு” என்று மயூரியின் அருகில் அமர்ந்தான் சேனா.
“என்ன கடுப்பேத்துறீங்களா புருஷனும் பொண்டாட்டியும்” என்றாள் இருவரையும் முறைத்து.
“இப்போ பாத்தவனை எப்படி நம்புறது” என்றவளை பார்த்தவன் “அப்படிலாம் யாரையுமே நம்பாம வாழ முடியாது, அப்புறம் இந்தப் பையன் பத்தி நீ கவலைப்பட வேண்டாம் அவனுக்கு நான் கியாரண்ட்டி” என்க.
“ஏன் பையன் ப்ரீத்தி மிக்ஸியா” என்றாள் கடுப்பாக.
சிரித்தவன் “இல்ல என் கூடப் படிச்சவன் நல்லா தெரியும் குடும்பமும் நல்ல குடும்பம் உன்னைப் பத்தி எதையும் மறைக்கல அவனுக்கு எல்லாமே தெரியும் அவங்களுக்கு பிடிச்சுதான் சம்மதம் சொல்லியிருக்காங்க, எந்தக் கட்டாயமும் இல்ல யோசி என்ன முடிவா இருந்தாலும் யோசிச்சு உன் மனசுக்கு சரின்னு பட்டா தைரியமா எடு நான் சப்போர்ட் பண்றேன்” என்றவன் மாப்பிள்ளையின் போட்டோவை அவள் அருகில் வைத்துவிட்டு.
“பேசிப்பாரு ஓகேன்னு தோணுச்சுன்னா மேற்கொண்டு பேசலாம் நாளைக்கு ஈவினிங் அஞ்சு மணி இங்கேயே வரசொல்லியிருக்கேன் பேசிப் பாத்துட்டு சொல்லு” என்றவன் “எப்படி போற” என்க.
“முன்னாடிலாம் என்னைக் கேக்க மாட்டீங்க மாமா உங்க மயூரியை மட்டும் பத்திரமா கூட்டிட்டு போவீங்க” என்றவளை பார்த்துச் சிரித்த மயூரி “அதுக்குதான் உனக்குன்னு ஒரு ஆளைப் பாத்துக்கோன்னு சொல்றோம்” என்க.
“போடி போடி எங்களுக்கும் ஆளு வரும்” என்றவள் “கார்ல தான் வந்தேன்” என்றாள், அவளை அனுப்பிவைத்துவிட்டு இருவரும் சென்றனர்.
“அய்யா சேனா உடனே ஆஸ்பத்திரிக்கு வாய்யா அண்ணனைச் சேர்த்திருக்கு” என்ற சித்தப்பாவின் பதட்டக்குரலில் அடித்துப் பிடித்து வந்து சேர்ந்தான், பின்னாலே பூஜாவும் மயூரியும் வந்தனர்.
“என்னாச்சு” என்றான் செந்திலை நெருங்கி, அவர் உடுப்பில் ரத்தம் காய்ந்திருந்தது.
“நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு உன்னையும் மருமகளையும் பத்தி பேசிச் சிரிச்சுட்டு இருந்தாரு மயூரிக்கு சோறு கொண்டுபோகணும் குடுத்துட்டு வரேன்னு சொன்னார் திடீர்ன்னு செந்திலு படபடன்னு வருதுன்னு சொல்லிமுடிக்கவும் கீழ விழுந்துட்டார்”.
“கல்லுல தல பட்டுடுச்சு பிள்ளைங்க எல்லாம் சேந்து தூக்கி கொண்டுவந்துட்டோம் டாக்டர் இன்னும் ஒன்னும் சொல்லல” என்றார் அவர், ஒருமாதிரி பதட்டமாக இருந்தார் கைகள் இபோழுதும் நடுங்கியது.
“சித்தப்பா ஒண்ணுமில்ல நீங்க உக்காருங்க” என்றவன் மயூரியை அருகில் அழைக்கப் பவுனின் அருகில் அமர்ந்திருந்தவள் வேகமாக அவனை நெருங்கினாள் “போய்ச் சித்தப்பாக்கு ஒரு ஷர்ட் வாங்கிட்டு வா, அப்படியே அவருக்குக் குடிக்க ஏதாவது வாங்கிக்கோ நான் டாக்டரைப் பாத்துட்டு வரேன்” என்க.
“ஹ்ம்ம்” என்றவள் பூஜாவை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.
“அட்டாக் தான் சேனா தலைல அடிபட்டத்துல ப்ளேட் நிறைய போயிருக்கு, நீங்க யாரவது ப்ளேட் குடுக்குற மாதிரி இருக்கும்” என்றார் சந்தியா.
“கண்டிப்பா டாகடர் நானே கொடுக்குறேன், அப்பா எப்படி இருக்கார்” என்க.
“பயப்பட ஒண்ணுமில்ல காப்பாத்திடலாம்” என்றார் அப்பபோழுதுதான் மூச்சே சீரானது ரத்தம் கொடுத்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டான், அவன் அருகில் வந்து அமர்ந்த மயூரி அவன் கையைக் கோர்த்துக்கொண்டாள்.
“ஒன்னுமாகாது மாமா சரியாகிடுவாங்க” என்க.
“ஹ்ம்ம்” என்றவன் அவள் கையைத் தானும் அழுத்திப் பிடித்துக்கொண்டான்.
மூன்று நாட்களுக்குப் பிறகு கந்தசாமியை அறைக்கு மாற்றிவிட்டனர் அதன் பிறகே கனகம் வந்திருந்தார் அவரைக் காண, வேல்விழியும் அன்றுதான் வந்தாள் கார்த்திகாவல் வரமுடியவில்லை என்றார் கனகம், ஆனால் பிரபுவும் வந்து பார்க்கவில்லை.
தெய்வானை வீட்டிலே சமைத்து மூன்று நாட்களாகக் கொண்டு வருகிறார் இரண்டுமுறை ராஜேந்திரன் கூட வந்து பார்த்துச் சென்றார்.
பூஜாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வினோத்தை மறுநாள் சந்தித்து பேசினாள் பூஜா இருவருக்கும் சரியாக வரும் என்றே தோன்றியது, மீண்டும் ஒருமுறை சந்தித்து பேசினர் பத்து நாட்களுக்குப் பிறகு திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டாள் அதுவே ராஜேந்திரனுக்கு நிம்மதி அளித்தது.
நிச்சயம் மட்டும் இப்பொழுது வைத்துக்கொள்ளலாம் திருமணத்தை ஆறு மாதம் கழித்து வைக்கலாம் என்று பெரியவர்கள் பேசி முடிவும் செய்துவிட்டனர் இந்தமுறை அனைவரையும் அழைத்து நிறைவாக ஒரு பெண்பார்க்கும் சடங்கும் நடந்து முடிந்திருந்தது.
நிர்மலுக்கும் அவன் தந்தைக்கும் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது மருத்துவமனை சீல் வைக்கப்பட்டிருந்தது.
“ஏண்டி சொந்த புள்ளையா இல்லாதவங்க ரத்தம் குடுக்கலாமா ஒன்னும் ஆகாதா” என்றார் கனகம் விழியிடம்.
“என்னமா கேக்குற அப்படிலாம் ஒன்னும் ஆகாது சொந்தம் பந்தமெல்லாம் இதுல இல்ல யாரோட ரத்தம் சேருதோ அவங்க குடுக்கலாம்” என்றவள் “அம்மா ஏன் இப்போ இதைக் கேட்ட” என்க.
எதோ யோசனையில் இருந்த கனகம் “உன் பெரியப்பாவுக்குச் சேனா ரத்தம் குடுத்திருக்கான் அவருக்குப் பொறக்காதவன் எப்படி அவருக்குக் குடுத்தான் அதுதான் கேட்டேன்” என்க.
பின்னில் பாத்திரம் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டுத் தாயும் மகளும் திரும்பிப் பார்த்தனர், தாய் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் இருந்த விழி பின்னில் நின்ற குடும்பத்தைப் பார்த்து இன்னும் அதிர்ந்தாள்.
அறையைச் சுத்தப்படுத்தவும் கந்தசாமிக்கு உடை மாற்றித் துடைக்கவும் செவிலியர்கள் வந்தனர் “எல்லாரும் வெளில இருங்க” என்றவர்கள் கதவை அடைக்க வெளியில் வந்த குடும்பத்தின் செவியில் விழுந்தது அந்த வார்த்தைகள் அனைவரும் அதிர்ச்சியில் நிற்க.
“ஐயோ… ஐயோ நீ நல்லாயிருப்பியா இத்தனை வருஷம் இல்லாம உனக்கு என்ன கேடு வந்ததுன்னு இப்படி என் குடும்பத்துல பிரச்சனை மேல பிரச்சனை கூட்டுற” என்று கோசலை பெருங்குரலில் அழ அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றாள் மயூரி, விழிகள் கணவனை மட்டுமே பார்த்திருந்தது அந்த ஆண் மகன் தடுமாறி நின்றிருந்தான்.
தாயின் கையைப் பிடித்து அருகிலே அமர்ந்திருந்தான் சேனா “என் புள்ளத்தான் அவ பொய் சொல்றா என் புள்ளத்தான்” என்ற அவரின் புலம்பல் மட்டும் நிற்கவில்லை, அமைதியாக மனைவியையும் மகனையும் பார்த்துப் படுத்திருந்தார் கந்தசாமி.
“உண்மையா” என்று மகன் இந்த நொடிவரை கேட்க்கவில்லை எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டான் அவனின் குட்டிமாவை மட்டும் உடன் நிறுத்திக்கொண்டான் அவள் வேண்டும் அவள் அருகாமை வேண்டும்.
கந்தசாமியும் பவுனும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர் மருந்தின் உபாயத்தால் இருவரையும் நாளை வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்று கூறிவிட்டார்கள் எதுவானாலும் வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று தந்தை ஏதோ கூறவந்ததை கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.
அவனின் அருகில் வந்து தலைகோதி நின்றவளின் இடையோடு கைகோர்த்தவன் அவள் மார்பில் முகம் புதைத்தான் ஆறுதல் வார்த்தைகளை அவள் கூறவில்லை அவனுக்கு அது தேவையில்லை இப்பொழுது இந்த அணைப்பு வேண்டும் அவனுக்கான மொத்த ஆறுதலும் அவளிடம் மட்டுமே இருந்தது.
வீட்டிற்கு வந்த மறுநாள் காலைத் தந்தைக்கு மருந்துகளைக் கொடுத்துக்கொண்டிருந்தான் சேனா அவன் கையைப் பிடித்த கந்தசாமி “உன்கிட்ட பேசணும் தம்பி இப்படி ஒக்காரு” என்க.
“உடம்பு சரியாகட்டும்ப்பா பொறுமையா பேசிக்கலாம்” என்றான்.
“இல்ல இன்னைக்கே பேசிடுறேன்” என்றவர் தாயை திரும்பிப் பார்த்து “மருமகளை வரச்சொல்லுக்கும்மா அப்படியே பவுனையும் கூட்டிட்டு வாங்க” என்க அவரும் சென்று இருவரையும் அழைத்து வந்தார், செந்திலும் ஒருபக்கம் அமர்ந்திருந்தார்.
“பவுனு என் பக்கத்துல வந்து ஒக்காரு” என்றார் கந்தசாமி இத்தனை வருடத்தில் அறையைக் கடந்து வெளியே மனைவியை ஆசையாகக் கூடப் பார்த்ததில்லை, பவுனின் அழுகை இன்னும் முடிந்திருக்கவில்லை கணவனின் அருகில் சென்று அமர்ந்தவரின் கைகளைப் பிடித்துக்கொண்ட கந்தசாமி சேனாவை நிமிர்ந்து பார்த்து.
“உங்கள சுமந்து பெக்குற பாக்கியத்தை அந்தச் சாமி எங்களுக்குக் குடுக்கலயா” என்க சேனாவுக்கு தொண்டை அடைத்தது அவன் அருகில் வந்து அவன் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் மயூரி.
“நாங்க பெத்தெடுக்காம இருந்திருக்கலாம் ஆனா நாங்க தான்யா உனக்கு அப்பன் ஆத்தா அது என்னைக்கும் மாறாது” என்றவரின் தோளில் பெரும் கேவலோடு பவுனு சாய்ந்துகொள்ள இருவரையும் அப்படியே அணைத்துக்கொண்டான் சேனாபதி.
“பதினஞ்சு வர்ஷம் பிள்ளை இல்லாம… இவ எனக்கு வேற கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு என் அம்மாகிட்டயே சொல்ல ஆரம்பிச்சுட்டா, ஒரு பிள்ளையைத் தத்தெடுத்துக்கலாம்னு சொன்னேன், தத்தெடுங்க நான் வளத்துக்குறேன் ஆனா உங்க வாரிசு ஒன்னு வேணும் வேற கல்யாணம் செஞ்சுக்கோன்னு என்னையும் போட்டு உலுக்க ஆரம்பிச்சா அப்போதான் கரு உண்டாயிருக்குறது உறுதி ஆச்சு”.
“வேகமா கூட நடக்கமாட்டா பிரசவத்துக்கு கிட்டத்தட்ட பதினஞ்சு நாள் இருந்துச்சு இவளுக்கு முடியாம போச்சு, இங்க காமிச்சுட்டு இருந்த ஆஸ்பத்திரிக்கு போனோம் பிள்ளைக்குக் கொடி சுத்திக்கிச்சு கோயம்பத்தூர் போங்கன்னு சொல்லிட்டாங்க, அங்க கொண்டு போனோம் நானும் உன் அப்பத்தாவும் தான் கொண்டுபோனோம் அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சு”.
“மயக்கத்துல இருந்த இவ எழுந்து கேட்டா என்ன சொல்லன்னு எனக்கு ஒன்னும் புரியல, அதைத் தங்குற சக்திலாம் அவளுக்கு இல்ல ஆபரேஷன் பண்ண டாக்டர் கொஞ்ச நேரத்துல வேகமா வந்தாங்க கைல அப்போ பொறந்த ஆம்பிள பிள்ளை என் கைல குடுத்து இது இனிமே உங்க கொழந்த உங்க மனைவிகிட்ட கூட அப்படிதான் சொல்லணும் அப்படின்னு சொன்னாங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்ன சொல்றீங்கன்னு கேட்டேன்”.
“அவசரமா உங்க அம்மாவை வேற பெட்டுக்கு மாத்தி பின்னாடி வழியா பக்கத்துல இருந்த அவங்க வீட்டுக்கு ஒரு நர்ஸ் கூட அனுப்பி வெச்சாங்க, உங்க அம்மா கண்ணுமுழிச்சப்போ உன்னைத் தூக்கி கொடுத்துட்டேன் அவளுக்கு என்னய கூடக் கண்ணுக்குத் தெரியல உன்னைக் கீழக்கூட வெக்கமாட்டா எங்க கனவுனு ஆயிடுமோன்னு”.
“டாகடர் இடையில வந்து பாத்துக்கிட்டாங்க இப்போ நெறய பேருக்குக் காய்ச்சல் வந்திருக்கு அது பிள்ளைக்கு வரவேண்டாம்னு உங்களை இங்க வெச்சிருக்கோம்னு அவங்களே உன் அம்மாவையும் சமாளிச்சுட்டாங்க எதுக்கு இப்படி பண்ணாங்க என்ன ஒன்னும் புரியல எனக்கு”.
“நாலுநாளுக்கு அப்புறம் தான் என்கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க, அரசியல் கொலை… உன் அப்பாவை ரோட்டிலேயே வெச்சு… உன்னையும் உன் அம்மாவையும் கொல்ல பின்னாடியே வந்திருக்காங்க உன் உசுர காப்பாத்த டாக்டர் அந்தப் பொண்ணு பக்கத்துல இறந்துபோன பிள்ளையைப் போட்டுட்டு உன்னை எங்ககூட அனுப்பிட்டாங்க”.
“அப்படியும் அவனுங்க நம்பாம அங்கேயே சுத்திட்டு இருந்தானுங்க, அந்தப் பொண்ணோட சொந்தக்காரங்க அதைக் கூட்டிட்டு போக வந்தப்போ பிள்ளை இல்லாம அந்தப் பொண்ணு தனியா போகவும் அவனுங்களுக்கு சந்தோஷமாயிப்போச்சு சாமி குடுத்த வரமா உன்னைத் தூக்கிட்டு வந்துட்டோம், செந்திலுக்கு கூட இந்த உண்மை தெரியாது”.
“எனக்குதான் சில நேரம் மனசு அடிச்சிக்கும் புருஷனையும் பலி குடுத்து புள்ள உசுரோட இருக்குறது கூடத் தெரியாம அந்தப் பொண்ணு ஒத்தைல நின்னு அழுற மாதிரி அடிக்கடி கனவு வரும் அப்படியொரு நாள் அம்மாகிட்ட புலம்பும்போது கனகம் கேட்டுடுச்சு” என்றார் கந்தசாமி.
அதற்காகத்தான் மாதா மாதம் கனகத்திற்கு பணம் கொடுத்திருக்கிறார் என்று புரிந்தது.
கையைப் பிடித்துக்கொண்டு அமைதியாகவே அமர்ந்திருந்தான் அவனைச் சுற்றி அனைவரும் நின்றனர் ஏதேதோ எண்ணங்கள் ஒன்றும் பேசவில்லை ஒன்றையும் பேசும் நிலையிலும் அவன் இல்லை மயூரி அங்கிருந்து அவர்களின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அமைதியாகவே அமர்ந்திருந்தவன் “தூங்குங்கப்பா உடம்பு சரியாகட்டும், மா கொஞ்சம் நேரம் படுங்க இனிமே அழாதீங்க” என்றவன் “அப்புறம் பேசுறேன் சித்தப்பா” என்றதோடு அவன் அறைநோக்கி சென்றான்.
உள்ளே வந்து கதவை அவன் அடைக்க ஜன்னலின் அருகில் நின்றிருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள் வேக எட்டுக்களில் அவளை நெருங்கியவன் அவளை இழுத்து இறுக்கியனைத்தான் “ஐ நீட் யு மயூ நவ்” என்றவனின் நெஞ்சில் அழுத்தமாகக் கடித்துவைத்தாள்.
“மறக்கவை மயூ” என்றவன் அவளில் மொத்தமாகத் தொலைந்துகொண்டிருந்தான், அவன் ஒரு நிலையில் இல்லை அவனை மெல்ல மெல்ல சாந்தப்படுத்தினாள் அவன் மனைவி.
“சாரி சாரி காயப்படுத்திட்டேனா” என்றவனை மடிதாங்கியவள் “இல்ல” என்றாள்.
“நீங்க லக்கி தேவா யாருன்னே தெரியாம உங்களைச் சொந்த பிள்ளையா அவ்ளோ அன்போட வளர்த்திருக்காங்க நான் அந்த வீட்டு பொண்ணுதான் ஆனாலும் என்னை உண்மையா நேசிக்க அங்க ஒரு உறவுகூட இல்ல அதிலும் பாட்டி கிரேட்ல அந்தக் காலத்து மனுஷி ஆனா எவ்ளோ பெரிய மனசு அவங்களுக்கு” என்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டு “தேங்க்ஸ் இந்தக் குடும்பத்துல என்னையும் சேர்த்துக்கிட்டதுக்கு” என்றாள் நிறையும் விழிகளோடு.
“அழாதடி நீ அழறத பாத்தா எனக்கு மண்டை வெடிக்குது மயூ, உள்ள என்னமோ பண்ணுதுடி ப்ளீஸ் அழாத வேணும்னா என்னை இன்னும் கடிச்சுக்கோ” என்றவன் அவள் மடியில் படுத்துக்கொண்டு “கொஞ்சம் தூங்கவைடி” என்றான் தளர்வாக.
அவன் மண்டைக்குள் மத்தளம் கொட்டிக்கொண்டிருந்தது மொத்தத்தில் அனைத்தும் இருட்டாக எந்த யோசனையும் செய்யமுடியாத இயலாமையில் இருந்தான் அமைதியாக நேரம் பிடிக்கும்… அவளுக்குப் புரிந்தது அங்கே யாரிடமும் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் இங்கே அவளிடம் மொத்தமாக இறக்கிவைத்துக் கொண்டிருந்தான்.
கந்தசாமி சாதாரணமாக நடமாட தொடங்கியிருந்தார், பவுனின் விழிகள் எப்பொழுதும் மகனின் மீதே சட்டென்று மகன் எங்கோ தொலைவாகச் சென்றுவிட்டதை போலக் காலையில் எங்கோ செல்லக் கிளம்பி வந்தவனை பார்த்தே நின்றிருந்தார் பவுனு.
“அம்மா” என்றவன் அழைப்பில் “சொல்லுய்யா” என்று வேகமாக அவனை நெருங்கியவரை பார்க்கப் பாவமாக இருந்தது “என்னம்மா” என்றவனை பார்த்தவர் “எங்க மேல கோபமாய்யா எங்களை விட்டுட்டு போய்டுவியா” என்றவரை பிடித்து அருகில் அமர்த்தியவன்.
“உங்களை விட்டு எங்கம்மா போக நான்… இதுதானே என் வீடு நாங்க தான் உன்னைப் பெத்தவங்கன்னு யாராவது வந்து நின்னா என்னால அவங்க கூடப் போகமுடியுமா எனக்கு நீங்கதானே அப்பா அம்மா, நீங்க என்னைக் கொண்டுவந்திருக்கலானா இப்போ நான் உயிரோட கூட இருந்திருக்கமாட்டேன் அவங்களும் தப்பில்லை நான் இருக்குறது கூட அவங்களுக்கு தெரியாது இது இப்படியே இருக்கட்டும்மா” என்க.
“அவங்களுக்கு தெரியணும் தம்பி” என்று வந்து நின்றார் கந்தசாமி அவன் கையில் ஒரு பேப்பரை வைத்தார்.
“இங்கதான் நீ பொறந்த, அந்த டாக்டர் பேரு அட்ரெஸ் எல்லாம் இருக்கு அவங்க இப்போ இருக்காங்களா எனக்குத் தெரியாது ஆனா அங்க போனா விவரங்கள் தெரியலாம், உன்னை எங்களுக்குக் குடுத்த அந்தப் பொண்ணை ஒருதடவை பார்த்து மன்னிப்பு கேக்கணும், ரொம்ப வருஷமா மனசை அறுக்கிற வலில இருந்து விடுதலை வேணும்” என்றவர்.
“உன்னைப் போலீசா பார்த்திருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும், உன் அப்பா ஒரு போலீஸ் அந்த ரத்தம்தான் உனக்குள்ள கிடந்து கொடஞ்சிருக்கு போலீஸ் ஆகணும்னு இந்த விவரத்தை வெச்சு ஏதாவது கண்டுபிடிக்க முடியுமாப்பா” என்க.
விழிகளை மூடியவன் ஆழ மூச்செடுத்து சில நொடிகள் அமைதியாக இருந்தான் “முடியும்ப்பா… வந்துர்றேன்” என்றவன் மனைவியைப் பார்த்துக் கண்சிமிட்டிவிட்டு வெளியில் சென்றான்.
தெய்வானை வந்திருந்தார் பூஜாவோடு என்னதான் நடக்கிறது தங்களை சுற்றி என்ற எண்ணமே அவருக்கு, சேனா தங்கள் வீட்டு பிள்ளை இல்லை என்ற உண்மையையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அண்ணா உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது அவங்களுக்கு ஆள் மாறியிருக்கும் சேனா நம்ம புள்ளத்தான் எதோ டாகடர் சொன்னதை நம்பிட்டீங்களா” என்று அவர் ஒருபக்கம் புலம்பிக்கொண்டிருந்தார்.
அன்று மாலை வீட்டிற்கு வந்து நின்றவனை பார்த்து மயூரியை தவிர அனைவரும் அதிர்ந்தனர் காக்கி அணிந்து காவல் அதிகாரியாக வந்து நின்றிருந்தான்.
error: Content is protected !!