“என்னடீ.. புதுசா நீ எதோ பேசறே..? என்ன பண்ணி கிழிப்பா அவ..? மானத்த வாங்க வந்த கழுத..
எப்படி மாப்பள பாக்க ஆசப்பட்டேன். கடைசில இப்படி ஒருத்தனுக்கு வாக்கப்படனுமுன்னு.. இவளே இவ தலையில மண்ணள்ளி போட்டுக்கிட்டா.. அதுக்கு யார் என்ன செய்ய முடியும்..? எல்லாம் விதி..” என்றவருக்கு,
‘கண்கள் கலங்கிடுமோ..’ என்ற பயம் வர தன்னை திடமாக்கி கொள்ளவே அவசரமாக சின்ன மகளை இழுத்துக்கொண்டு விரைந்தார் பெரிய மகள் எடுக்க நினைக்கும் முடிவு தெரியாமல்.
வெளியே வர மறுத்து அடமாய் இருந்த கங்காவின் முதுகில் ஒன்று போட்டு அறையை விட்டு வெளிவந்தவர்,
ஆனா அவ எண்ணம் மட்டும் இந்த ஜென்மத்துல நடக்கவே நடக்காது..” என்றவரின் வார்த்தையில் உண்மையில் உயிரற்ற நிலையில் தான் யமுனா நின்றிருந்தாள்.
******
தீனாவிற்கு, ‘ஏதோ ஒன்று சரியில்லை..!’ என கடந்த இரண்டு நாட்களாய் உள்ளம் தவியாய் தவித்து கிடந்தது.
‘என்னாச்சு..?’ என யோசித்து யமுனாவிற்கு அனுப்பிய செய்திகள் எதுவும் பார்க்கப்படாமலேயே இருக்க,
ஊருக்கு போகும் முன், “அங்கே போனா போனை கையில வச்சிட்டு சுத்த முடியாது தயா. அம்மாக்கு பிடிக்காது.
அதனால நானே சமயம் பாத்து உங்களுக்கு மெசேஜ் பண்றேன். நீங்க பண்ணாலும் உடனே ரிப்ளை பண்ண மாட்டேன்..” என சொல்லி சென்றிருக்க,
“ஒரு நாளுங்கறது ரெண்டு நாளாகிடுச்சே அவளோட பேசி. அதனால இப்படி இருக்கா..?” என மனதில் எழுந்த குழப்பத்தோடு உலாவிக்கொண்டிருந்தான் அவன்.
இன்னும் அவன் அவர்களின் தந்தை இருக்கும் வீட்டிற்கு செல்லவில்லை.
ஊருக்கு வந்த இறங்கியதும் நேராக வாணியின் வீட்டிற்கு தான் வந்திருந்தான்.
“டேய் தீனா.. வாடா. ரெண்டு வருஷம் முன்னே என் மகனுக்கு காது குத்த வந்துட்டு போனவனுக்கு இப்ப தான் ஊருக்கு வழி தெரிஞ்சிருக்கு..” என ஆர்ப்பாட்டமாய் வரவேற்ற வாணியின் கண்களோ ஆனந்தத்தில் கண்ணீரை பொழிந்தது.
“என்ன வாணி.. எதுக்கு அழறே..? ஏன் நா வந்தது பிடிக்கலையா..?” என அவளை சீண்டி பேசி சகஜமாக்கியவனின் பொழுதுகள் அவனின் ஆசை மருமகனோடு அழகாய் கழிந்தது.
வருடங்கள் சென்று வந்த மாமனை கண்டுவிட்ட மருமகனுக்கு அத்தனை சந்தோஷம்.
அவனை விட்டு விலகாமல் அவன் மடியில் இருந்து கொண்டு அவன் பேசிய மழலையில் மூழ்கி இருந்தாலும் மனம் மட்டும் அவனவளின் நினைவிலேயே சுழன்றது.
அக்காவின் மூலமாகவே பணத்தையும், ஜெகதீஷூக்கும் மற்றவர்களுக்கும் எடுத்து வந்திருந்த உடையையும் பட்டாசு பலகாரம் ஆகியவற்றை கொடுத்து தந்தையிடம் சேர்த்து இருக்க, அவரின் தேவை நிறைவேறியதாலோ என்னவோ எந்த பிரச்சினையும் அங்கிருந்து வரவில்லை.
சக்தியை ஆரம்பத்தில் வாணிக்கு திருமணம் செய்வதில் தீனாவிற்கு உடன்பாடே இல்லாததால் அவரோடான பேச்சு என்பது அளவோடு தான்.
இப்போது அவரை பற்றிய நல்லெண்ணம் வந்திருந்தாலும், முதல் கோணல் போல இப்போதும் சரளமாய் அவரோடு பேச முடிவது இல்லை.
அவரும் அப்படி தான். “வாடா.. மாப்ளே..” என அழைத்தவர், “வாணி, ஆக்கி போட என்ன எடுத்துட்டு வர..?” என கேட்டு, வாணி சொன்ன எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து ஒதுங்கி கொண்டார்.
‘மாமாகிட்ட யமுனா விசயமா பேசலாமா..? அப்படி பேசினா இதுவரை அவரோட பெருசா எதுவுமே பேசாம.. இப்போ நம்ம காரியம் ன்னு பேசறேன்னு நினைப்பாரோ..?
விசயம் இவரு மூலமா அங்கே தெரிஞ்சா அங்கிருந்து என்ன வருமோ..?’ என யோசனையிலேயே சுற்றிக்கொண்டிருந்தவனுக்கு மருமகனின் பேச்சு ஒன்றே ஆறுதலாய் இருந்தது.
ஆனால் அந்த ஆறுதல் கூட இந்த இரண்டு நாளாய் இல்லாமல் ஏதோ ஒரு பதட்டம் அவனை ஆட்கொள்ள,
அதான் எனக்கு இப்படி இருக்கா..? அவ நல்லா இருக்களா..? இல்லையா..?’’ என பலவாறு குழம்பி அனுப்பிய எந்த செய்திக்கும் பதிலின்றி போனது.
அதில் இன்னும் அவன் பதட்டம் கூட வேறுவழியின்றி அவளின் பேசிக்கு அழைக்க, அதுவோ.. ‘ஸ்விட்சுடு ஆஃப்.. ஆர் நாட் இன் நெட் வொர்க் கவரேஜ் ஏரியா..’ என்ற பதிலையே திரும்ப திரும்ப சொல்ல அவனின் பதட்டம் பயமாக மாறத்தொடங்கியது.
அவனின் பயத்திற்கு ஏற்ற நிகழ்வுகள் தான் அங்கு தன்னவளை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதை சொல்ல தான் அவளின் மீது அக்கறை கொண்ட கங்காவிற்கும் வழியில்லையே..!!