Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 25.3

மறுநாள் குடும்பத்தோடு வாணி வீட்டிற்கு செல்வதாய் இருந்தாலும், ‘ஜெகதீஷூக்கு பள்ளி செல்ல வேண்டும்.. அதற்குள் வாணியை செய்ய சொல்வது சரியில்லை.. அது அவருக்கும் கஷ்டம்..’ என்பதால், 
முதல் நாளை போலவே எழுந்து, சிம்பிளாக வெஜிடபிள் ரைஸ் செய்து காலை தோசை ஊற்றி.. ஜெகாவிற்கு கொடுத்துவிட்டே அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.


Advertisement

காலை உணவே இவர்களுக்கு அங்கே தான்.. என்பதால் அதற்கு ஏற்ப கிளம்பி செல்ல, அங்கு சக்தியின் வகையில் முக்கிய உறவுகளும் தீனாவின் நெருக்கமான சில உறவுகளும் வந்திருந்தனர்.
“என்ன கண்ணழகா..! நமக்கு தானே விருந்துன்னு சொன்னாங்க.. நிறைய பேர் இருக்காங்க..?” என யமுனா மெல்லிய குரலில் விசாரிக்க, 

Advertisement

Advertisement

“எப்படியும் விருந்துன்னா இப்படி சிலரை கூப்பிடாம இருக்க முடியாது..” என அவளை போலவே மென்குரலில் விளக்கியவன் அவர்களின் வரவேற்பை ஏற்று அவர்களோடு அளவளாவ அமர்ந்தான்.
வாணிக்கு உதவும் பொருட்டு உள்ளே சென்றவளை பெண்கள் கூட்டம் பிடித்துக்கொள்ள நேரம் மின்னலென விரைந்தது.

Advertisement

மற்றவர்கள் மதியம் உண்ட கையோடு கிளம்ப, “நெறைய மிச்சமா கெடக்கு.. ஜெகா வந்தான்னா இங்கையே சாப்புட்டு ராவுக்கு ஊட்டுக்கு போயிக்கோங்க..” என சக்தி சொல்லி விட்டார்.
அதன்படி பள்ளி முடிந்து வந்த ஜெகதீஷூக்கு வாணி உணவு பறிமாற ஏதோ யோசனையில் இருந்தவனை கண்டு, 
“என்னடா ஜெகா, சோறு நல்லா இல்லையா..? சாப்புடாம யோசிச்சுட்டு இருக்கே..?” என வாணி கேட்க,
“நல்லா இருக்குக்கா.. என்னோட ப்ரண்ட் சொன்னத யோசிச்சேன்.. அதான்..” என்றுவிட்டு அவன் உண்ண,
“அப்படி யோசிக்கற அளவுக்கு என்னத்த சொன்னான் உன்னோட ப்ரண்ட்..?” என சிரித்தபடி கேட்ட வாணியின் தலையில் இடியை இறக்கினான் அவனறியாமலேயே.
“அவன் எப்ப பாத்தாலும் எங்க வீட்டுல அப்பா அம்மா நா எல்லாம் ஒண்ணா தான் தூங்குவோமுன்னு சொல்லிட்டே இருப்பானா.. நம்ம வீட்டுல அப்படி இல்ல தானே.. அத சொல்லியிருந்தேன்.
அதுக்கு அவன், அப்போ நீங்க இருக்கறது பேமிலியே இல்லன்னு கிண்டல் பண்ணிட்டே இருந்தான். 
இன்னைக்கு நா போயி நானும் இப்போ அண்ணா அண்ணி கூட தூங்கறேன். எனக்கும் பேமிலி வந்திடுச்சு ன்னு சொன்னேனா.. அதுக்கு அவன் சொல்றான்.. அப்பா அம்மா கூட தூங்கினா தான் அது கம்ப்ளீட் பேமிலி. நீ பேமிலி ட்ரீ படிக்கலன்னு கிண்டல் பண்ணறான்.
அண்ணா அண்ணி கூட அவங்க பாப்பா வந்தா அதான் படுக்கனுமுன்னு சொல்றான்.. அப்படியாக்கா..?” என கேட்டுவிட்டு உணவை வாயில் வைக்க,
வாணியோடு அமர்ந்து கேட்டிருந்த யமுனாவிற்கு, ‘அய்யோ..’ என்றானது.
வாணியோ ஜெகதீஷ் சொன்னதை ஜீரணிக்கவே சில நிமிடம் ஆனது.
வாணியின் வீடும் ஓரளவு பெரியது தான்.. என்பதால் வெளியே மற்றவர்கள் சேர் போட்டு அமர்ந்திருக்க, ஜெகதீஷூக்கு உணவு கொடுக்கவென வாணியும் யமுனாவும் மட்டும் தான் உள்ளே வந்திருந்தனர்.
அதனால் அவன் பேச்சு எதுவும் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது.
ஜெகதீஷ் சொன்னதன் முழு அர்த்தமும் புரிந்து கொண்ட வாணி லேசாக கலங்கிய விழியோடு யமுனாவை பார்க்க மிகவும் சங்கடப்பட்டு போனாள் யமுனா.
“அண்ணி ஜெகா முன்னாடி பேச வேண்டும்..” என கண் ஜாடையால் யமுனா சொல்ல,
அவசரமாக கண்ணை துடைத்த வாணி அதன் பின் அமைதியாய் ஜெகதீஷூக்கு உணவை பரிமாறினார்.
யமுனாவிற்கோ, “அச்சோ.. இத இப்ப அண்ணிகிட்ட எப்படி சொல்ல..? சொல்லாம இனி விடவும் மாட்டாங்க..” என மனதுக்குள் பேசியபடி புடவை முந்தானையை சுருட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் யோசனையில் இருக்கும் போதே.. ஜெகா உண்டு முடித்து பாலா விளையாட அழைக்கவும் வெளியே சென்றிருந்தான்.. நாளை விடுமுறை என்பதால் ஹோம் வொர்க் செய்யும் அவசரமின்றி.
பாத்திரத்தை எல்லாம் ஓரமாக எடுத்து வைத்த வாணி, யமுனாவின் கையை பற்றி இழுத்துக்கொண்டு அவர்களின் படுக்கை அறைக்குள் சென்றவள், 
“இப்ப சொல்லு யமுனா.. அங்கே என்ன தான் நடக்குது..? நீங்க சந்தோஷமா இருக்கீங்களா..?” என்றார் ஒரு வித தீவிரத்தோடு.
“அண்ணி.. அதெல்லாம் சந்தோஷமா தான் இரு..” என்றவளை ஒற்றை கை காட்டி நிறுத்திய வாணி, 
“எனக்கு தேவ உண்ம யமுனா. மொத நாளு பெட்ஷிட் வெளியே இருக்கற பாத்தேன். நா வந்தேப்போ கதவும் தெறந்துதா கிடந்துச்சு. 
அப்பவே சந்தேகப்பட்டு கேக்க வர்றதுக்குள்ள நீயா வந்து ஏதோ சொல்லி சமாளிச்சே..
அப்போ, எனக்கு சந்தேகம் வந்துடுச்சுன்னு உனக்கு தெரிஞ்சுதா அத செஞ்சிருக்கே.. அப்படி தானே..?” என ஒரு வித வலியோடு வாணி கேட்க,
ஒரு முறை கண்ணை இறுக மூடி திறந்தவள்.. வேறு எதையும் சொல்லி சமாளிக்க வழியின்றி.. நேற்று வரை நடந்த எல்லாவற்றையும் மொத்தமாக சொல்லி முடித்திருந்தாள்.
அவள் சொன்னதை கேட்ட நொடி தலையில் கைவைத்து அமர்ந்த வாணிக்கோ நெஞ்செல்லாம் அடைத்துக்கொண்டு வந்தது.
இதில், ‘தீனா சொன்ன தன் தாய் பற்றிய விசயங்களை எல்லாம் யமுனா மறைத்திருக்க, அதற்கே வாணியின் எதிர்வினை இப்படி என்றால்.. அது தெரிந்தால் என்னவாகுமோ..?’ என்ற அச்சம் யமுனாவிற்குள் எழுந்தது.
அவரின் நிலை கண்டு அவசரமாய் ஓடி தண்ணீரை கொண்டு வந்து குடிக்க வைத்தவள், 
“அண்ணி எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகறீங்க..? இதெல்லாம் ஒரு விசயமா.. விடுங்க..” என யமுனா சமாதானம் செய்ய,
“எது..! இது சின்ன விசயமா யமுனா உனக்கு..? வாழ வேண்டியவங்கள வாழவிடாம இருக்க வைக்க இப்படியெல்லா செய்வாங்களா..? 
நா ஜெகா மாதிரி சின்ன புள்ளையில்ல. அதெல்லாம் பிரச்சனை இல்லன்னு சொன்னதும் சரின்னு கேட்டுட்டு போக. 
இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்..” என அவசரமாய் கண்ணை துடைத்துவிட்டு எழுந்த வாணியை தடுத்த யமுனா,
“அண்ணி, இப்போ இதை பத்தி பேச வேண்டாம். இப்போ அதை பத்தி பேசினா ஜெகா மனசுல அது என்ன.. ஏன்னு பல கேள்விகள் வரும். 
அதுலையும் அவங்க சொல்ற பதிலை வச்சு தான் பேச்சு எப்படி போகுமுன்னே கணிக்க முடியும்.. 
பசங்க இல்லாத நேரத்துல பேசறது தான் சரி. நாளைக்கு  அவங்களுக்கு லீவ். அவங்க ஸ்கூல் போனதும் பேசிக்கலாம்..” என யமுனா சொல்ல,
அவளை ஒரு பார்வை பார்த்த வாணி, “அப்போ அது வர என்ன பண்ண போறீங்க ரெண்டு பேரும்..?” என்றார் கூர்ந்து.
“அது.. அது எப்பவும் போல..” என யமுனா தடுமாற,
“நிறுத்து யமுனா.. இதுக்கும் மேல இதை என்ன செய்யனுமுன்னு நான் முடிவு பண்ணிக்கறேன்..” என்றவர் ஒரு தீர்மானத்தோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.
வெளியே வந்த வாணியின் முகத்தை பார்த்தே சக்திக்கு ஏதோ சரியில்லை என்பது புரிந்துவிட, 
“மாப்ளே.. தண்ணீ குடுச்சுட்டு வர்றேன்..” என்றுவிட்டு எழுந்தவர்,
“வாணி தண்ணீ தா..” என சொன்னபடி உள்ளே விரைந்தார்.
அவரை வைத்து தானே முடிவெடுக்க வேண்டும்.. என்பதால் அவரின் பின்னாலேயே வாணியும் உள்ளே செல்ல, திருதிரு முழியோடு தீனாவிடம் வந்து அமர்ந்தாள் யமுனா.
விசயத்தை கேட்ட சக்திக்குமே சட்டென என்ன சொல்வது என்றே புரியவில்லை.
“என்ன வாணி இது..! எதுக்கு இப்புடி ஒரு வேலய பாத்து வச்சிருக்காங்க..? இரு இந்த அக்காள..” என கோபத்தோடு வேட்டியை மடித்துக்கட்டி கிளம்பியவனை தடுத்த வாணி,
யமுனா சொன்னதை சொல்ல, “ச்சை.. என்ன ஜென்மமோ என்ற உடன்பொறப்பு.. இதே நாளக்கி ஜெகானுக்குன்னா இத செஞ்சிடுவாளா..?” என புலம்பியவன்,
“சரி போனது வுடு. இப்போ என்ன பண்ணலாமுங்கறே..?” என வாணியிடம் கேட்க,
“அவங்க சந்தோஷமா வாழோனும்.. அதுக்கு எதாவது செய்ங்க..” என்றாள் கலங்கிய கண்ணோடு.
“ஏய்.. ஏன்டீ அழுகறே..? அவங்கள அப்படியே விட்டுடுவோமா..? பாத்துக்கலாம். 
இப்பவே தெரிஞ்சதேன்னு சந்தோஷப்படு.. இதுவே ஜெகா சொல்லாம போயிருந்தா என்னாகுமுன்னு யோசிச்சு பாரு..” என வாணியை தேற்ற தொடங்கினார்.
வெளியே சக்தி உள்ளே சென்றதும் தீனாவோ ஜெகா மற்றும் பாலா விளையாடுவதை பார்த்துக்கொண்டு, “இப்படி பாலப்போடு ஜெகா..” 
“பாலா.. பேட்ட நல்லா புடுச்சு அடி..” என விளையாட ஹிண்ட் கொடுத்துக் கொண்டிருந்தான் மும்முரமாக.
யமுனாவிற்கோ, ‘வாணி சக்தியிடம் சொல்ல தான் உள்ளே அழைத்து சென்றிருக்கிறார்.. என்பது வரை புரியும் போது.. தங்கள் அந்தரங்கம் இப்படியா அனைவருக்கும் தெரிய வேண்டும்..?
மீண்டும் சக்தியை அவள் எதிர் கொள்ள வேண்டுமே..!’ என்ற விசயம் ஒரு வித அசௌகரியத்தை தந்தது அவளுள்.
அதனை கொண்டு தீனாவை பார்த்தபடியே தவிப்போடு அமர்ந்திருக்க.. சில நிமிடம் தொடர்ந்த அவளின் பார்வை வீச்சில் அவள் புறம் திரும்பியவன், 
“பாப்பா பார்வையே சரியில்லையே.. என்ன விசயம்..?” என்றிருந்தான் புருவத்தை ஏற்றி இறக்கி.
‘அவனிடம் எப்படி சொல்வது..?” என தயங்கி அவள் விழிக்க,
 
“என்னடீ இப்படி பச்சபுள்ள லுக்கெல்லாம் விடறே..? சரியில்லையே..!” என்றவனிடம்,
‘எப்படி இதனை சொல்வது..?’ என அவள் தயங்கிக்கொண்டே அவனருகே சேரை நகர்த்தி அவள் அமர்ந்தாள். 
அவளின் செயலை தப்பாக புரிந்து கொண்டவனோ, “என்ன.. நேத்து மாதிரி எதாவது ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்கனுமா எனக்கு..?” என சரசமாய் வினவ,
‘அய்யோ.. இவர் என்னமோ நினச்சிட்டு கூலா பேசிட்டு இருக்கார். 
இப்போ நா சொன்னது சக்தி ண்ணாக்கு தெரிஞ்சதும் அவர் வந்து கேட்கப்போய்.. உன்னைய யாரு இதெல்லாம் சொல்ல சொன்னான்னு கோபப்பட்டா.. எப்படி இவர சமாளிக்க போறேனோ ஆண்டவா..’ என மனதோடு பேசியவளின் முகத்தில், குழப்பம்.. பயம், தயக்கம், தவிப்பு என மாறி மாறி வந்த பாவனையை யோசனையோடு பார்த்திருந்தவன்.. 
“பாப்பா..” என அழைக்க அது அவளின் செவியை சென்றே சேரவில்லை.
யோசனை மிக.. அவள் கண் முன் தனது கையை விசிறி போல ஆட்டி.. அவளின் சிந்தனையை கலைக்க முயன்றவனுக்கு வெற்றிகிட்ட.. அவனை கேள்வியாய் பார்த்தவளை கண்டு முறைக்க தொடங்க,
அதில் திருதிருவென விழித்தவள் பின் தெளிந்து அவனை அப்போதைக்கு சமாளிக்க வேண்டி, “ஹீ….” ஒரு அசட்டு புன்னகையை உதிர்க்க, வஞ்சியவள் பாவனையில் தீனாவிற்கு பக்கென சிரிப்பு பொங்கிவிட்டது.
அவனின் அந்த சிரிப்பில் மற்ற எல்லாம் அவளின் எண்ணத்திலிருந்து சற்றே விலகி விட, அவனின் அழகான வதனத்தையே கண்ணெடுக்காமல் பார்த்து வைத்தாள் கண்களின் மின்னும் ஆசையோடு.
வஞ்சிப் பெண் ஆசைக் கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கள்ளழகா
தேக்காலே சிற்பி செய்த தோலழகா
தோகைக்கு மோகம் தந்த ஆளழகா
நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைத்தால்
நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்
ஆசை பெருகுதையா இடையினில் ஆடை நழுவுதையா
மேனி உருகுதையா மனதினில் மோகம் வளருதையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!