Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 26.2

“ம்ப்ச்.. பாப்பா என்ன விசயம்..? என்கிட்ட இப்படி சொல்ல தயங்கினா என்ன அர்த்தம்..? எதாவது பர்ஷனல் இஸ்யூ வா..?” என்றான் வேறொன்றை மனதில் வைத்து.
ஆனால் அவளுக்கோ, ‘பர்ஷனல்..’ என்றதும் அவள் சொல்ல வருவதும் அவர்களுக்கான தனிப்பட்ட விசயம் தானே.. என்பதால், “ஆமா தயா..” என்றாள் தயக்கமாகவே.


Advertisement

“இத அப்பவே செல்லறதுக்கு என்ன.. இதுக்கு தான் அப்படி முழிச்சுட்டு இருந்தீயா..?” என்றவன் வண்டியை உதைத்து கிளப்பி யூடேர்ன் அடித்த வேகத்தில் பதறித்தான் போனாள் யமுனா.

Advertisement

‘அய்யோ இவருக்கு அப்பவே டவுட் வந்திடுச்சு போலவே..! அண்ணி வீட்டுக்கு போறாங்களா..? 

Advertisement

அச்சோ..! அப்போ அங்கே போய் சண்டை போடுவாங்களா.. எப்படி எங்க விசயத்த பேச ஆச்சுன்னு..?” என்ற தவிப்பு எழ,

Advertisement

“அய்யோ வேணாங்க.. அங்கெல்லாம் வேண்டாம்..” என்றாள் பதட்டத்தோடே.
“அங்கே வேணாமுன்னா.. நீ வச்சிருக்கீயா..?” என சுவாதீனமாக கேட்டுக்கொண்டே வண்டியின் வேகத்தை அவன் கூட்ட,
முற்றிலும் குழம்பி போன யமுனா, “என்ன வச்சிருக்கனும்..?” என்றாள் கேள்வியாய்.
“அதான் நீ யூஸ் பண்ண தேவைப்படற பேட்..” என்ற பிறகே அவள் சுற்றி பார்க்க, வாணியின் வீட்டிற்கு செல்லும் வழியின்றி வேறொங்கோ சென்று கொண்டிருப்பது புரிந்த போது தான்.. அவன் சொன்ன பர்ஷனல் எது.. என விளங்கியது அவளுக்கு.
அதில் வெளிப்படையாகவே நெற்றியில் அடித்துக்கொண்ட யமுனா,
“கண்ணழகா.. உங்கள வச்சுக்கிட்டு.. ஒழுங்கா வீட்டுக்கு வண்டிய திருப்புங்க..” என்றாள் பல்லைக்கடித்து கடுப்பாக.
முற்றிலும் அவள் நடவடிக்கையில் குழம்பிப்போன தீனா வண்டியை ஓரம் கட்டிவிட்டு அவள் புறம் திரும்பியவன்,
“என்ன தான்டீ உன் பிரச்சனை..? ஏதோ பர்ஷனல் இஸ்யூ ன்னே.. அப்ப அதுக்கு என்ன வேணுமுன்னு பார்த்து செய்ய போனா கடுப்பாகறே.. 
நா கூட வர்றதாலையா..? வாணிக்கே நிறைய தடவை நா வாங்கிட்டு வந்திருக்கேன்.. உனக்குன்னா செய்ய மாட்டேனா..?” என்றான் காட்டமாய்.
மழை வேறு தூறலை அப்போது ஆரம்பித்திருக்க, ‘சொல்ல வருவதை ஒழுங்காக சொல்லாமல் என்ன இது.?’. என்ற எண்ணம் அவனுள் கடுமையை உண்டாக்கியிருந்தது.
“பர்ஷனல் தான். ஆனா அது என்னோடது இல்ல. நம்மளோடது..” என்றாள் தடுமாற்றமாய் அவனை காணாது.
“நம்மளோடதா..?” என்றவனுக்கு சுத்தமாகவே யமுனா சொல்ல வருவது புரியவே இல்லை.
“அது வந்து..” என தயங்கி அவன் முகம் பார்த்தவள் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, 
“அண்ணிகிட்ட நடந்த எல்லாம் சொல்லிட்டேன்..” என்றவளின் வார்த்தையில் அதிர்ந்து போன தீனா,
“என்ன சொல்றே யமுனா..! ஏன் இப்படி செஞ்சே..? அவள கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் அம்மா விசயத்தை அவகிட்ட சொல்லாம எல்லாத்தையும் தனியா தாங்கிட்டு இருந்தேன். 
இப்போ ஏன் அவசரப்பட்டு அவகிட்ட சொன்னே..? அதான் அவ முகம் அப்படி இருந்துச்சா..?” என்றவனுக்குள், ‘இத்தனை வருடம் பட்ட பாடெல்லாம் வீணா..?’ என்ற வலி உண்டானது அந்த நொடி.
“அச்சோ தயா, நா கஸ்தூரி அத்தை விசயத்தை சொல்லல..” என்றவள், 
‘ஜெகதீஷ் பேசியதில் ஆரம்பித்து.. வாணியிடம் பேசியது.. சக்தி எடுத்திருக்கும் முடிவு..’ என எல்லாம் சொல்ல மழையின் வேகம் கூடியது.
எதுவும் சொல்லாமல் அமைதியாய் வண்டியை கிளப்பியவன் வீட்டை நோக்கி விரைந்தான். 
அவனின் எதிர்வினை இல்லாத நிலை யமுனாவை பயங்கொள்ளச்செய்ய மிகுந்த பயத்தோடே அவனுக்கு உடன்பட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வேகமாகவே வந்த போதும் ஓரளவு இருவரும் நனைந்த பின்னரே இல்லத்தை அடைந்திருந்தனர்.
யமுனாவிற்கு மழையில் நனைந்ததால் வந்த நடுக்கத்தை விட, தீனா முக இறுக்கமே அதீத பயத்தை கொடுத்து நடுங்கச்செய்திருந்தது. 
வண்டியை விட்டு கீழிறங்கிய யமுனா அவசரமாக கேட்டை திறந்துவிட, வண்டியை கொண்டு வந்து தாழ்வாரத்தின் அடியில் நிறுத்தியவன் தனது போனை எடுத்து சக்திக்கு அழைத்திருந்தான்.
அவர் எடுத்ததுமே, “மாமா.. அவங்ககிட்ட நீங்க எதுவும் பேச வேண்டாம்..” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல். 
“ஏன்டா..? என்னோட கூடபொறந்தவளுக்கு கெட்டு போயிருக்கற கூர சரியாக்க வேண்டியது என்னோட கடம தான்..” என்றார் மறுமுனையில் சக்தி கடுப்பாக.
தீனாவிற்கோ, ‘இதை பேசப்போய்.. வாணிக்கு தாயின் இறப்பு பற்றி தெரிந்துவிடுமோ..?’ என்ற தவிப்பே அதீதமாய் இருக்க, 
“மாமா இது என் வாழ்க்கை.. இதுல முடிவெடுக்க வேண்டியது நான். தயவு செய்து இதுல நீங்க இன்வால்வ் ஆகாதீங்க.. 
நிச்சயமா இதை இப்படியே தொடர நா விட்டிருக்க மாட்டேன். வந்து நாலு நாள்ல, அதும் சொந்தங்கள வச்சுக்கிட்டு எதுவும் பண்ண வேணாமேன்னு தான் அமைதியா இருந்தேன்.
என் வாழ்க்கையில நான் மட்டுமுன்னு இருக்கற வரை தான் அவங்க சட்டமெல்லாம் என்கிட்ட நிற்கும். 
என்னைய நம்பி ஒருத்தி இங்க வந்திருக்கா. அவளுக்காக நா பார்க்க மாட்டேனா..? அவசரப்பட்டு செய்ய வேணாமேன்னு தான் பார்த்தேன். புருஞ்சுக்கோங்க..” என கொஞ்சம் கடுமையாகவே பேசி ஒருவழியாய் அவர், 
“சரி பேசல.. ஆனா சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு எடு.. அவுங்க அங்க நைட் வரமாட்டாங்க. இன்னைக்கு கிடச்ச வாய்ப்பை கொண்டாவது வாழ ஆரம்பிடா..” என்றுவிட்டு காலை கட் செய்ய அதன் பிறகே ஆசுவாசமாய் உணர்ந்தான் தீனா.
தனது போனை திரும்ப பேண்ட் பாக்கெட்டில் போட்டவன், கண்ணை இறுக மூடி நனைந்திருந்த கூந்தலை இரு கரம் கொண்டு கோதி அதிலிருந்த ஈரத்தை முதுகு புறம் தள்ளியவனிடம் எழுந்து அடங்கியது நீண்டதொரு பெருமூச்சு.
அவனின் செய்கையை திகிலோடு பார்த்திருந்தாள் யமுனா.
தீனாவின் முகத்திலும் பேச்சிலும் நேற்று காலை அவள் கண்ட கடுமை மீண்டிருக்க அது அவளை பீதியடைய செய்தது. 
“எல்லாம் உன்னால வந்துச்சு.. உன்னைய யாரு எல்லாத்தையும் அக்காகிட்ட சொல்ல சொன்னா..? 
நேத்து அவன் எங்க கூட உட்கார்ந்து ஆழியார் போனத பத்தி பேசிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிட்டான். 
அதை வச்சு அவன் பேசினதை நீங்க பெருசு பண்ணாதீங்கன்னு சொல்லி சமாளிக்க முடியாதா உன்னால..? 
அப்போ நீயும் இதெல்லாம் வேணுமுன்னு ஆசப்படறீயா..? 
லவ்வு ன்னு நீ தானே மொதல்ல ஆரம்பிச்சே.. 
ச்சே.. அப்படிப்பட்ட பொண்ணா நீ..?” என எங்கே தீனா கேட்டிடுவானோ.. என்ற தவிப்போடு அவனையே பார்த்திருந்தாள்.
காதல்.. காமம்.. போன்ற விசயங்களில் பெண்ணின் முன்னெடுப்புக்கள் எப்போதும் பாராட்டப்படுவதில்லையே.. 
அவர்களின் உணர்வுகள் கொச்சைப்படுத்தும் வகையில் தானே பேச்சுக்கள் வரும்..
எவ்வளவு தெளிவான பெண் என்றாலும் இது போன்ற விசயம் எனில்.. தன்னை தவறாக எண்ணி விடுவார்களோ என்ற அச்சம் எழுவது இயல்பு தானே..?! 
இங்கே யமுனாவும் அப்படியான நிலையில் தான் இருந்தாள்.
சில நொடி இறுக மூடிய கண்ணை தன்னை நிதானப்படுத்திக்கொண்டு திறந்தவன் கண்டது பதட்டத்தோடு தன்னையே பார்த்திருந்த யமுனாவையே.
அவளின் விழியில் தெரிந்த அச்சமும், உடலின் நடுக்கமும் அவனின் புருவத்தை சுருங்க வைக்க, 
நொடியில் அவள் எண்ணம் புரிந்து கொண்டவனுக்கு, ‘அச்சோ அசட்டு பாப்பா.. இவ்வளவு தானா என்ன நீ புருஞ்சு வச்சிருக்கறது..?’ என்ற ஆற்றாமை தான் மீண்டும் தோன்றியது.
அவளின் பயத்திற்கு பின் இருக்கும் காரணம் விளங்க.. நேற்றை போல அவசரப்பட்டு பேசி.. அதை அவள் தவறான கோணத்தில் எடுத்துக்கொண்டு பின் சூழலை விளக்குவதற்கு பதிலாக, தன் நடத்தையில் புரிய வைக்க வேண்டும் என முடிவெடுத்து நிதானத்தை கையிலெடுத்தவன்,
“என்னாச்சு பாப்பா..! ஏன் என் முகத்தையே பயத்தோட பார்த்துட்டு இருக்கே..? 
அவ்வளவு கொடூரமாவா இருக்கு என் மூஞ்சி..?” என்றவன் வண்டியின் கண்ணாடியில் தன் முகத்தை பார்ப்பதாக பாவனை காட்டி, 
“பாத்தா அப்படி தெரியலையே.. என் பாப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னே விடாம சைட் அடுச்சப்ப இருந்த மாதிரி தானே இருக்கு..” என்றவாரே நிமிர்ந்து அவளை பார்த்து சிரிப்போடு கண்ணடிக்க,
அவனின் செய்கையில் இதுவரை இருந்த எண்ணம் முற்றும் யமுனாவிடம் விடுபட,
“கொஞ்ச நேரத்துல எப்படி பயப்பட வச்சுட்டீங்க தெரியுமா..? என்னை எதாவது சொல்லிடுவீங்களோ ன்னு எவ்வளவு டென்ஷனா இருந்தேன். உங்களுக்கு எல்லாம் விளையாட்டா இருக்கு..”
என அவனிடம் வந்து அவனின் தோளில் தன் பூக்கரம் கொண்டு அடித்தவளின் கரத்தை அழுத்தி பிடித்தவன் மறுகரத்தில் அவளின் இடை வளைத்து தன்னருகே நெருக்கி,
“நா உன்ன திட்டுவேன்னு நீயா பண்ணற கற்பனைக்கு நா எப்படி பொறுப்பாவேன் பாப்பா..? 
அங்கே நடந்ததை சொன்னப்பவே நீ அங்கே சூழ்நிலை கைதி.. அங்க நீ மாத்தி எதாவது சொல்லி தப்பிக்க நினைச்சிருந்தாலும்.. வாணி முழுசா விசயத்தை வாங்காம விட்டிருக்க மாட்டான்னு புருஞ்சுக்க முடியாத அளவு மக்கா நான்..? 
என்னோட யோசனை எல்லாம்.. மாமா அவங்ககிட்ட வாணி முன்னே பேசக்கூடாது. அதுக்கு என்ன செய்யனுங்கறது தான்.. 
அதுக்குள்ள நீயா எதையோ நினச்சுட்டு இப்படி என்னைய அடிக்கறது நியாயமா..? 
முதல்முறை கல்யாணத்துக்கு அப்புறம் நமக்கே நமக்காக கிடச்சிருக்கற தனிமை.. சில்லுன்னு மழை.. கொடுக்கற அடியை கொஞ்சம் கிக்கா.. உடம்பு சூடாகற மாதிரி கொடுத்தா நல்லா இருக்கும்..” என்றவனின் 
கிறக்கமான குரலும், அவளின் புடவைக்கு இடையே புகுந்து அவளின் இடையோடு சேர்ந்திருக்கும் கரத்தின் சேட்டையும் அவன் எண்ணத்தை பிரதிபலிக்க மொத்தமாய் காலை நேர வானத்தின் நிறம் கொண்டாள் பாவை.
அதனை கண்டு கிறங்கி அவளிடம் இன்னமும் தன் நெருக்கத்தை கூட்டியவன் அவளின் இதழை நெருங்க வேகமாக அவனை தள்ளி விட்டவள் வீட்டிற்குள் சென்றுவிட நினைத்து கதவருகே ஓடினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!