Skip to content
Post Views: 1,632
இது நடந்து மேலும் ஓரிரு வாரங்கள் ஓட்டமாய் ஓடியிருக்க மாலை வீட்டுக்கு வந்த ஜெகதீஷ்,
“அண்ணி.. போன வாரம் நீங்க செஞ்சு கொடுத்தீங்க இல்ல பன்னீர் பிரியாணி.. அத நாளைக்கு செஞ்சு தர்றீங்களா..?
Advertisement
என்னோட பெஸ்ட் ப்ரண்ட் தருணுக்கு நாளைக்கு ப்ர்த் டே. அவனுக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு சொன்னான்..” என ஆசையாய் கேட்க,
அவன் முன் உச்சி முடியை கோதியபடி, “இதுல என்ன ஜெகா இருக்கு. கண்டிப்பா செஞ்சு தர்றேன்.. நீ போய் ஃப்ரஷ் ஆகிட்டு வந்து சாப்பிட்டு ஹோம் வொர்க் முடி..” என்றாள் பரிவோடு.
Advertisement
Advertisement
அதில் ஆனந்தமாய் தலையசைத்த பிள்ளையும், “தேங்க்..” என ஆரம்பித்து.. பின், அவளின் செல்ல முறைப்பில் ஒற்றைக்கண்ணை மூடி நாக்கை கொஞ்சமாய் நீட்டி, இரு காது மடலையும் விரலால் பற்றிக்கொண்டு, “சாரி..!!” என பாவனை காட்ட அத்தனை அழகு அந்த பிள்ளை முகத்தில்.
அதனை கண்டு தன் இரு கையாலும் முகத்தை சுற்றி.. சொடக்கி திருஷ்டி கழித்தவள், “அழகுடா நீ..” என அவன் தாடை பற்றி கொஞ்ச.. இன்னுமே அழகு புன்னகை அவனிடம்.
Advertisement
முன்பு சரியான கவனிப்பு இன்றி சிதைந்த ஓவியம் போல இருந்த பிள்ளை.. இந்த சில மாதங்களில் சரியான ஊட்டம் மற்றும் அன்பால் மெருகேறி இருந்தான்.
அதுவே அவனை அத்தனை அழகாக்கி இருக்க, சிறு குழந்தைகளுக்கே உண்டான சில பாவனைகள் அவனை இன்னும் கொஞ்சச் சொல்லும் விதமாய் மாற்றி இருந்தது.
அதனால் இது அடிக்கடி நிகழும் ஒன்றாகி போனது அண்ணிக்கும், கொழுந்தனுக்கும்.
தீனா இருந்தால் இருவருக்கும் இடையே புகுந்து, “அப்ப நா என்ன தக்காளி தொக்கா..? நா அழகா இல்லையா என்ன..? என்னையும் அவன மாதிரி கொஞ்சு..” என அவளிடம் மல்லுக்கு நின்று,
ஜெகா, “என்னோட அண்ணி எனக்கு தான் செய்வாங்க.. நீ போ..” என அவனை தள்ளி.. என ஏக கலாட்டாக்கள் நடக்கும்.
சகுந்தலா சின்ன புன்னகையோடு இதை கடந்தால், ஜெயசீலனின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறும். ஆனால் அதை கண்டு கொள்ள தான் ஆளில்லை அங்கே..
ஜெகதீஷ் ஃப்ரஷ் ஆக செல்ல, ‘அவன் கேட்டதை செய்வதற்கான பொருட்கள் எது இல்லை..’ என்பதை பார்த்துவிட்டு, அறைக்கு வந்து அங்கிருந்த போனிலிருந்து தீனாவிற்கு அழைத்தாள் யமுனா.
அங்கு தீனா முக்கியமான வேலையில் இருக்க முழுதாய் ரிங்காகி கட் ஆனது.
மீண்டும் ஐந்து நிமிடம் சென்று அழைக்க முதல் ரிங்கிலேயே போனை கட் செய்திருந்தான் தீனா.
“என்னோட போனை கட் பண்ணற அளவு தைரியமா உங்களுக்கு..!” என வேண்டுமென்றே அவனுக்கு அழைக்க, அப்போதும் அவன் கட் செய்திருந்தான்.
அதில் கடுப்பானவள், “கண்ணழகா என் போனையே கட் பண்ணற அளவு வந்தாச்சா..? வாங்க உங்களுக்கு இருக்கு..?” என மனதுக்குள் அவனை எண்ணையே இல்லாமல் தாளித்துக்கொண்டிருந்தாள்.
அது அவளுக்கு போன் வாங்கி தந்த போது இருந்து நடக்கும் வேடிக்கை நிகழ்வு.
‘அவள் போன் அடித்தால்.. அவன் எடுக்காமல் இருக்கக்கூடாது..’ என்பது அவளின் செல்லக்கட்டளை.
அப்படி அவன் போனை எடுக்காமல் இருந்தால்.. இரவில் அதற்கு தண்டனை.. என்ற பெயரில் அவள் செய்யும் சேட்டை, முடிவில் தீனாவிற்கு தான் சாதகமாக முடியும்.
அதற்காகவே அவன் சில நேரம் இப்படி செய்வது உண்டு.
இன்று நிஜமாகவே அவனுக்கு எடுக்க முடியாத நிலை இருக்க, யமுனா தண்டனை தர தயாராகி இருந்தாள்.
அரை மணி நேரம் கழித்து யமுனாவிற்கு தீனா அழைக்க, அறைக்குள் உலர்ந்த துணிகளை மடித்து வைத்து கொண்டு இருந்தவள் போனை இரு முறை எடுக்காமல் விட்டு மூன்றாம் முறை தான் எடுத்தாள்.
“என்ன பாப்பா கால் பண்ணியிருக்க..? என்ன விசயம்..?” என சிரித்தபடி கேட்டதும் பொங்கியிருந்தாள் மொத்தமாக.
“ஒருத்தி கால் பண்ணா எடுக்காம கட் பண்ணறே..? எம்புட்டு தைரியம்..! இன்னைக்கு வச்சு செய்யல.. என் பேரு யமுனா இல்ல..” என்ற அவளின் பேச்சை கேட்டு மேலும் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
அவளின் தண்டனை அவனுக்கு கசக்கவா போகிறது.. என்ற உல்லாசம் அவனுள்.
அவன் சிரிப்பு சத்தம் வேறு யமுனாவை உசுப்பிவிட, “யோவ் கண்ணழகா.. என்னய பாத்தா எப்படி இருக்கு..?” என எகிற,
“தினமும் சொல்லிட்டே இருக்கேன். என்னோட மக்கு பாப்பாக்கு புரியலயே..!
விடு, இன்னைக்கு நைட் வந்து இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்றேன் எப்படி இருக்குன்னு..” என சல்லாப குரலில் சொல்ல,
பேச வந்த வார்த்தையாவும் மொத்தமாய் மறந்து போனது பெண்ணிற்கு.
அவள் நிலை அறிந்து தனக்குள் சிரித்துக்கொண்ட தீனா, “பாப்பா கால் பண்ணது எதுக்குன்னு சொன்னா.. நா போய் வேலைய பார்ப்பேன். எவ்வளவு நேரம் இப்படி நிற்க..?” என்றதும் சுதாரித்து,
“நா வாட்ஸ்அப்ல அனுப்பியிருக்கற பொருளெல்லாம் வேணும்.. அதுல பன்னீர் மட்டும் அக்ஷயா டிபார்மெண்ட் பக்கத்துல இருக்கற டெய்ரி ஃப்ரஷ்ல வாங்குங்க. அங்கே தான் நல்லா இருக்கும்.
அப்புறம் அங்கையே பால்கோவா இருக்கும். ஜெகாவுக்கு அதும் பிடிக்கும் வாங்கிட்டு வந்திடுங்க..” என்றிட,
“உனக்கெதுவும் வேணாமா பாப்பா..?” என்றான் அக்கறையாக.
“எனக்கொன்னும் வேண்டாம்..” என யமுனா சொன்ன போதும், ‘அவளின் இஷ்டம் எதுவென தீனாவிற்கு தெரியும்..’ என்பதால்,
“வர்றப்போ உன் பேவரேட்டும் சேர்த்தே வாங்கிட்டு வர்றேன்.. அதுக்கான கவனிப்பு மட்டும் அம்மணிகிட்ட இருந்து ஸ்பெஷலா வந்திடனும்.. டீலுக்கு சம்மதமா..?” என்றான் கொஞ்சலாய்.
“வாங்கிட்டு வாய்யா முதல்ல. பார்த்துட்டு முடிவு செய்யலாம் அதை..” என்றாள் யமுனாவும் முறுக்கிக்கொண்டு கெத்தை விடாமல்.
“ஐ’ம் வெயிடிங் டார்லிங்..” என்றுவிட்டு புன்னகையோடு தீனா கட் செய்தான்.
அவன் பேச்சில் எழுந்த வெக்க முறுவலோடு அறைக்குள் இருந்து வெளியே வர,
“கொஞ்சங்கூட மட்டு மருவாதை இல்ல.. கட்டுன புருஷன பேசறத பாரு.. வாய்யா.. போய்யான்னு..” என்ற ஜெயசீலனின் நக்கல் குரல் அவளை தொட்டது.
அதில் கண்டானவள் வழக்கமான துடுக்குத்தனத்தோடு மீண்டும் காதில் போனை வைத்தவள்,
“அப்புறம் தயா, லிஸ்ட்ல முக்கியமான ஒண்ணு மிஸ் ஆகிடுச்சு..”
“என்னவா..?”
“இந்த மட்டு மருவாதைன்னு அங்க கடையில இருந்தா மொத்தமா அள்ளிட்டு வாங்க..
இங்க ஒருத்தர் அது இல்லன்னு ரொம்ப புலம்பிட்டு இருக்கார்.. கிடச்சா வாங்கிட்டு வந்து மொத்தமா அவர் முன்னாடி கொட்டுங்க..” என்றுவிட்டு போனை காதிலிருந்து எடுத்தவள்,
“புருஷன் பொண்டாட்டி பேசறத ஒட்டு கேக்கறதே கேவலம்.. இதுல கூச்சமே இல்லாம பேச்சப்பாரு..” என்றபடி அவரை அதே நக்கல் பார்வையோடு கடந்து சென்றிருந்தாள்.
அவளின் பார்வையை கண்டு அத்தனை ஆவேசம் உண்டான போதும்.. அதை மொத்தமாய் கக்க சரியான தருணத்திற்காக காத்திருக்க தொடங்கினார்.
அவரை கடந்து வந்ததுமே அதை மறந்து வேலையில் தன்னை தொலைத்து எப்போதும் போல ஜெகதீஷூடன் தனது நேரத்தை கடத்தினாள் தீனா வரும் வரை.
இரவு வந்தவன் யமுனா கொடுத்த லிஸ்ட்டில் இருந்ததோடு, ஜெகதீஷூக்காக என வாங்கி வந்ததை யமுனாவிடம் கொடுக்க,
“எனக்கும் ஏதோ வாங்கறேன்னாறே.. என்ன வாங்கியிருப்பாங்க..?” என்ற ஆசையோடு வேகமாய் அதை ஆராய அப்படியொன்றும் அதனுள் இல்லை.
அவன் சொன்ன நேரத்திலிருந்து ஸ்பெஷல் கவனிப்பை கொண்டே பெரும் எதிர்பார்ப்போடு இருந்தவளுக்கு ஏமாற்றமாகி போக,
“வெறும் வாய் மட்டும் தான்.. இதுல எனக்கு என்ன பிடிக்குமுன்னு ஐயாவுக்கு நல்லா தெரியுமாம்.
அதுக்கு ஸ்பெஷலா வேற கவனிக்கனுமாம்.
இன்னைக்கு என்னைய எவ்வளவு கெஞ்சினாலும் முடியாதுன்னு கவுந்தடுச்சு தூங்க விடறேன்..” என முணுமுணுத்தபடி சாமானங்களை எடுத்து வைத்தவள், அவனுக்கு உணவு கொடுத்து.. பின், கடுப்போடே தங்களின் அறைக்குள் நுழைந்தாள்.
அவளுக்கு முன் வந்து மெத்தையில் தளர்வாக அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்த தீனா, அவளை கண்டு மலர்ந்து புன்னகைக்க, உதட்டை சுழித்து காட்டி கதவடைத்து வந்து கீழே பாயை போட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள் வேகமாய்.
அவளின் கோபத்திற்கு காரணம் அறிந்திருந்த தீனாவோ எதுவும் கண்டு கொள்ளாமல் மேலே படுத்துக்கொண்டான் அமைதியாய்.
நேரம் கடக்க, ‘என்ன நம்மள கண்டுக்கவே இல்ல..?’ என நினைத்து, திரும்பி படுப்பது போன்ற பாவனையில் அவன் இருக்கும் புறம் திரும்பியவள், பட்டென எழுந்து அமர்ந்திருந்தாள் தீனாவின் செய்கையில்.
“அடப்பாவி..! என்ன அதுக்குள்ள தூங்கிட்டாங்க. அதும் நா இல்லாம..
நீ இல்லாம தூக்கம் வராதுடீ.. பாப்பான்னு.. தினமும் கொஞ்சிட்டே வேணுங்கறத சாதிக்கற மனுஷனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு..?
அவர் கட்டிக்காம நா எப்படி தூங்க..?
கொஞ்சமே கொஞ்சம் வெறுப்பேத்தி.. கெஞ்ச விடனுமுன்னு ப்ளான் போட்டா.. இப்படி தூங்கி.. எனக்கு பல்பு கொடுத்துட்டாரே..!” என வாய்விட்டே புலம்பியவள்,
“இப்ப என்ன செய்யலாம்..? எழுப்பி சண்டை போடலாமா..? ச்சே.. பாவம் வேலைக்கு போயி களைப்பா வந்து தூங்கறவர எழுப்ப கூடாது அது தப்பு..” என சொல்லி,
“ஆனா.. என்னை கண்டுக்காம இருக்கறதுக்கு என்னவாச்சும் செய்யனுமே.. என்ன செய்யலாம்..?” என யோசித்து.. பாயிலேயே படுத்து.. தூக்கம் வராமல் நேரத்தை ஓட்டியவள் ஒரு கட்டத்தில் முடியாமல் எழுந்து அவனருகே வந்திருந்தாள்.
தீனா மட்டுமா யமுனாவிற்கு பழகியிருந்தான். அவளும் இப்போது அவனை தேடும் நிலையில் தானே இருக்கிறாள்.
வேட்கை ஆணுக்கு மட்டுமே உரித்தானதா என்ன..?!
“உனக்குன்னு வாங்காததெல்லாம் பெருசா நினைக்கலாமா…? ஒருவேளை உனக்கு வாங்க நினைச்சது அந்த கடையில இல்லையோ என்னமோ..” என அவளுக்கு அவளே தேற்றி எழுந்து வந்திருந்தாலும்,
‘அவனை தானே விலக்கிவிட்டு.. இப்போது தானாக எப்படி அவனை நெருங்குவது..?’ என்ற தயக்கம் உண்டாக திருதிருவென விழித்தபடி நின்றுவிட்டாள் கட்டிலருகே.
அவனின்றி தூக்கமும் தன்னை அண்டாது என்பது திண்ணமாக.. கொஞ்சமே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கட்டிலில் அமர்ந்தவள்,
‘எழுப்பலாமா.. இல்ல நாமளே அவர கட்டிக்கிட்டு தூங்கலாமா..?’ என பட்டிமன்றம் நடத்தி.. முடிவாக அவனை தொட கை நீட்டியது மட்டுமே தெரியும் அவளுக்கு.. மொத்தமாய் தீனாவிற்கு அடியில் வந்திருந்தாள், ‘என்ன நடக்கிறது..?’ என உணரும் முன்.
அவன் செய்கையில் விளைந்த அதிர்ச்சியில் விழியோடு இதழ்களும் விரிந்து கிடக்க,
அதை சாதகமாக்கி அவளின் வாயிற்குள் அவன் வைத்து கரைந்து போன அந்த இனிப்பு.. இப்போது அவனின் இதழுக்குள் தஞ்சமாக தொடங்கியது.
அவனின் செய்கையில் லேசாக கிறங்கி.. மயங்கி.. நெகிழ.. ஆரம்பித்தவளை கண்டு சிரித்த தீனா,
“பாப்பா.. போன எடுக்கலன்னு தண்டனை கிடையாதா..?” என சல்லாபமாய் கேட்டு உசுப்பேத்திட,
‘அச்சோ.. ஆமால்ல இதுல அது எப்படி மறந்துச்சு..?’ என நினைத்தவள் எப்போதும் போல செய்ய.. அவனுக்கு இன்னும் அது தூண்டி விடுவது போல் தான் ஆனது.
சிறு பிள்ளை என முரண்டு பிடித்து அவனை தன்னை விட்டு நகர்த்த முனைந்தவளின் செய்கையை தனது ஆளுமையால் அணையிட்டு அடக்கியவன்..
அவளின் வேட்கையை தூண்டிவிட்டு மொத்தமாய் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து, மீண்டும் இனிப்போடு அவளை நெருங்க..
அங்கே யாருக்கு யார் கொடுத்தார்.. யார் எதை எடுத்தார்.. என அனுமானிக்க முடியாத படி அந்த இனிப்பு இனிமையாய் பரிமாறப்பட்டது அவர்களுக்குள்.
அங்கங்கள் யாவும் தித்திக்க இனிமையாய் ஓர் ஆலிங்கன அரங்கேற்றம்.
கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே
நின்றாலும்
சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை
வளையுமே
error: Content is protected !!