“என்ன.. முதல்ல இருந்து.. கடைசில இருந்துன்னு. எப்பவும் ஒரே பதில் தான். நானா போய் அவகிட்ட சொல்ல மாட்டேன்..” என்றான் தீனா தீர்மானமாக.
“அதையும் பார்க்கலாம். நீயா போய் பாப்பா நீ எனக்கு எப்பவும் வேணும். என்னை விட்டு போகாதே.. ஐ லவ் யூ.. சொல்லல..” என்று மனசாட்சி சவால் விட,
Advertisement
“அப்படி ஒண்ணு நடந்தா தானே நீ பார்க்க..?” என்றான் நக்கலாய்.
Advertisement
“அப்படி நடந்தா என்னடா பண்ணுவே..?” என்றது கோபமாய்.
Advertisement
“நடக்காதுங்கறேன். நீ வேற குண்டக்க மண்டக்க ஓடிட்டு.. ச்சை.. போய் தொல. இது வேற ஓயாம மனுஷனை..
Advertisement
ஏற்கனவே காதல் ங்கற பேரால போன உயிர் போதும்..” என எரிச்சலோடு சொல்லிக்கொண்டே கடைக்குள் சென்றவன் தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டு நின்றான்.
“அதுவும் இதுவும் ஒண்ணா..? போடா போ. எப்படியும் இப்ப எஸ்கேப் ஆகிட்டே. என்கிட்ட இன்னொரு நாள் சிக்காமயா போவே..? அப்ப இருக்கு..” என அவனிடம் சொல்லிவிட்டு மறைந்தது அவனின் மனசாட்சி.
அதனோடு நடந்த உரையாடலை நினைத்து இதழில் வழிந்த விரக்தி புன்னகையோடு பொருளை வாங்க நின்றிருந்தவன் காதில் விழுந்தது அந்த ஒலி.
அவனின் உடலை ஆட்டம் காண வைக்கும் அந்த சைரன் ஒலி.
அந்த ஒலி.. அது அவனின் காதில் எப்போது எல்லாம் ஒலிக்கிறதோ.. அப்போது எல்லாம் அவனுள் எழும் இந்த பயத்தையும், பதட்டத்தையும்.. என்றேனும் இல்லாமல் ஆக்க முடியுமா..? என்ற இயலாமை அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அப்போது அருகே கேட்ட பேச்சு குரலில் தெரிந்த செய்தி மேலும் அவனை பதட்டத்திற்குள்ளாக்க அவனின் மேனியெங்கும் வியர்த்து, நடுக்கம் கொள்ளச்செய்தது.
அவனின் முகமோ மொத்தமாக வெளுத்து அவன் கண்களில் இருந்த கலக்கத்தை கண்டவர்கள் அவனை இருபத்தி எட்டு வயது ஆண் மகனாய் நினைக்க முடியாது.
ஒரு பச்சிளம் பாலகனாய் தான் தெரிந்திருப்பான்.
ஆனால் அங்கு அவனை கண்டு கொள்ள ஏது மற்றவர்களுக்கு நேரம்..?
சுவாரசியமாக நடப்பதை பேசிக்கொண்டல்லவா இருந்தனர்.
முயன்று தன்னை மீட்டுக்கொண்டு தடுமாறிய நடையோடு வெளியே வந்ததும் தனது சைக்கிளை எடுத்தவன், அதை நடுங்கும் உடலை கட்டுக்குள் கொண்டுவர போராடிய படி ஓட்டத்தொடங்கினான்.
அவன் நினைத்த இடத்திற்கு வர எப்போதும் ஆகும் நேரத்தை விட முன்னதாகவே வந்திருந்தாலும் அவனால் சைக்கிளை விட்டு இறங்கியும் ஒரு அடி கூட முன்னால் எடுத்து வைக்க முடியாது கண்ணில் தவிப்போடு அதே இடத்தில் நின்றுவிட்டான்.
“எப்பா.. அந்த தண்ணீய இங்கே ஊத்துங்கப்பா..
பயர் சர்வீஸ் ஆளுங்க ஏறக்குறைய எல்லாத்தையும் அணச்சுட்டாங்க..
ரெண்டு மூனு பேரை இப்ப தான் ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போனாங்க..
இன்னும் யாரெல்லாம் மாட்டியிருக்காங்க தெரியல..”
என்ற பலவிதமான சத்தங்கள் தன்னை சுத்தி கேட்ட போதும், விழிகள் அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்ததே ஒழிய அவனின் நிலை மட்டும் அப்படியே இருந்தது.
யமுனா குடியிருந்த வீடு காம்பவுண்ட் வகை என்றாலும் முன் புறம் நிழலுக்காக ஓலை கொண்டு வேயப்பட்டிருந்ததை அவன் முதல் முறை வந்த அன்று கண்டு தான் அவளிடம் அப்படி கேட்டது.
ஏனோ அவனின் உள் மனம் அதை கண்டதும் அவனை உறுத்த செய்யத்தான் அவளிடம் கேட்டும் விட்டான்.
ஆனால் கேட்ட பிறகே, ‘என்ன முட்டாள்தனமான சிந்தனை..!’ என தன்னை தானே கடிந்து கொண்டு அங்கிருந்து விலகி சென்றது.
ஆனாலும் ஏனோ அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனை எச்சரிக்கை செய்தது இன்று நிஜமாய் நிறைவேறி போனதே..!!
தண்ணீர் காய வைக்கவென வெளியே பற்ற வைத்த அடுப்பிலிருந்து வெளிவந்திருந்த சிறு தீப்பொறி அந்த ஓலை மீது விழ, அடுத்த சில நொடியில் அந்த நெருப்பால் சிலிண்டர் ஒன்று வெடித்திருக்க அந்த கம்பவுண்ட் மொத்தமாக பற்றி எரிய ஆரம்பித்திருந்தது.
திருப்பூரில் நிறைய இடங்களில் இது போன்ற அடுப்புக்களை வீதிகளின் ஓரத்தில் காணலாம்.
அன்று ஞாயிறு என்பதால் சில வீடுகளில் நேரம் சென்று எழலாம் என இருக்க,
ஒரு சிலர் தண்ணீர் பிடிக்க வெளியே வர என இருந்த நிலையில், எத்தனை பேர் உள்ளே சிக்கியிருக்கிறார்கள்.. எத்தனை பேர் வெளியே இருக்கிறார்கள்.. என்பது பற்றிய தகவல் எதுவும் இன்றி அலைந்து கொண்டிருந்தனர் அனைவரும்.
அங்கிருந்த எல்லா வீடுகளும் ஏறக்குறைய அதே போன்ற அமைப்புள்ள வீடுகளாக இருந்ததால் அடுத்து இருந்த வீடுகளுக்கும் தீ பரவ ஆரம்பித்திருக்க அந்த பகுதியே பெரும் கலவரமாக இருந்தது.
தீயணைப்பு வண்டியில் வந்தவர்களும் போலீஸூம் உடனடியாக அங்கிருப்பவர்களை வெளியேற்ற முயன்று கொண்டிருக்க,
‘அப்பவே இந்த இடம் வேணாமுன்னு உன் மனசு சொல்லுச்சேடா.. அப்பவே அவள நீ கூட்டிட்டு போயிருக்க வேணாமா..? இப்போ அவள நா எங்கே போய் தேடுவேன்..?
என்னோட பாப்பாவுக்கு எதுவும் ஆயிருக்க கூடாதே..?
அய்யோ.. அம்மாவ தான் இப்படி பறிகொடுத்தேன்னா.. இப்ப இவளையுமா நா பறிகொடுக்கனும்.
இல்ல. என்னோட பாப்பா வந்திடுவா.. அப்படி இல்லன்னா.. நா.. நானும் இருக்க மாட்டேன்..’ என மனதுக்குள் ஓலமிட்டவனின் கால்கள் தன்னால் வேகமெடுத்து முன்னேறி போக, அவனின் வலது கரம் அவனோடு வராமல் பின்னால் இழுக்கப்பட்டது.
ஆனாலும் விடாப்பிடியாக தன் முன் எரியும் வீட்டை கண்ட படி உள்ளே போக எத்தனித்தவனை இன்னும் பலம் கூட்டி இழுக்க,
அவனின் பலத்திற்கு முன் அதெல்லாம் வேலைக்கு ஆகியிருக்காது தான் மற்றைய நேரமாய் இருந்தால்.
ஆனால் இன்று அவன் இருந்த நிலையில் இழுபட்ட வேகத்திற்கு பின்னால் வந்தவன் தடுமாறி சரியப்போக,
அவனை தாங்கிக்கொண்ட கரத்தின் வழி உணர்ந்த அந்த ஸ்பரிசத்தோடு, “தயா..!” என்ற குரலில் அவனின் விழியை ஆனந்தத்தில் பளிச்சிட வைக்க,
‘என்ன..?’ என யோசிக்கும் நேரம் கூட கொடாது திரும்பிய வேகத்தில் தாவி அணைத்திருந்தான் தன்னவளை.
“பாப்பா…! பாப்பா.. உனக்கு.. உனக்கு எதுவும் இல்ல தானே..?
நீயும், என்ன தனியா விட்டு போக மாட்ட தானே..? என்னோட எப்பவும் இருப்ப தானே..?
நீ எனக்கு வேணுமே.. என்னோட காலம் முழுக்க என்னோட உயிரா நீ எனக்கே எனக்குன்னு வேணுமே..” என அவனின் வாய் ஓயாமல் முணுமுணுக்க,
அவனின் மொத்த உடலோடு பந்தமாய் அடங்கி இருந்தவளின் கழுத்து வளைவில் தலை சாய்த்திருந்தவனின் விழிகளில் வழிந்த நீர் அவளின் தோளில் இறங்கியது.
அவனின் இறுகிய அணைப்பு மேலும் வலுப்பெற அதோடு அவனின் கண்ணீரின் ஈரம் அவளின் ஆடை தாண்டி உள்ளே செல்ல அவனை வலிக்கட்டாயமாக பிரிக்க முயன்றாள் யமுனா.
அதற்கு அவன் இசைந்தால் தானே..?!
அவளை விட்டு ஒரு இன்ச் கூட நகராது இன்னும் இறுக்கி அவனோடு புதைத்து கொள்ளவே முயன்றான் அவன்.
அவனின் தவிப்புக்கும், பயத்திற்கும் கிடைத்த ஆறுதலாய் அவன் அதை நினைக்கலாம்.
ஆனால் பொதுவெளியில் பலர் கூடி இருக்க தான் செய்யும் செயலின் வீரியம் உணர வேண்டாமா..?!
அதை உணர அவன் அவனாக இருக்க வேண்டுமே..?
அங்கு தான் அவன் சிறு பிள்ளையாய் மாறி இருந்தானே..!! அப்புறம் அதை எங்கு உணர..? எப்படி தவிர்க்க..?
எத்தனை நேரம் இது தொடருமோ..? என்ற பயமே எழுந்து விட்டது யமுனாவிற்கு.
காரணம் தங்களின் நிலையை அதிர்ந்து பார்த்தபடி அவளின் கண்பார்வையிலேயே நின்றிருந்தனரே அவளோடு இருக்கும் மற்ற மூவரும்.
அதிலும் கங்காவின் நிலையை சொல்லவும் வேண்டுமா..?!
‘தன் அக்கா எப்படி இதை செய்ய அனுமதிக்க முடியும்..?!