அறையினுள்லிருந்த ஜன்னல் வழியாக வந்த சூரிய ஒளியின் வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த அஜய் மெல்ல சோம்பல் முறித்து எழுந்தான். மணியைப் பார்த்து விட்டுப் படுக்கையில் எழுந்த நேரம், “குட் மார்னிங்,” என்றவாறு, அஜய்யின் முன் மலர்ந்த முகத்துடன் நின்றாள் ஸ்மிருதி…
Advertisement
”குட் மார்னிங்,” என முகம் மலரச் சொல்லியவன், “டைம் 6.30 தான் ஆகுது, சீக்கிரம் எழுந்திட்டியா?” என்றவன், “இப்போ உன் ஹெல்த் எப்படி இருக்கு?” என்றான் அக்கறையாய்…
”ரொம்ப நல்லா இருக்கு,” என்றவள், “பிரஷ் பண்ணிட்டு வாங்க, நான் காஃபி எடுத்து வரேன்,” என்றாள்…
Advertisement
Advertisement
”ஓகே,” என சொன்னவனிடம், அவள் சிறு தயக்கத்துடன்… “தேங்க்ஸ் அண்ட் ஸாரி,” என்றாள்…
”நேத்து எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணீங்கள்ல அதுக்கு தேங்க்ஸ்,” என்றாள் இதழ் விரிய…
”அப்போ ஸாரி?” அவன் புருவத்தினை உயர்த்த,.. ”என்னால தானே உங்க மீட்டிங்கெல்லாம் கேன்சல் பண்ணிடீங்க, அதுக்கு ஸாரி,” என்றாள்…
இதழ் விரித்து தலையை மட்டும் அசைத்தவன் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்,…
அன்றைய காலை உணவை அஜய்க்குப் பரிமாறிவிட்டு, அவன் அலுவலகம் சென்றதும் தனது அன்றாட வேலையையும் முடித்தவள், அறையின் மெத்தையில் வந்து விழுந்தாள்.
சிறிது நேரம் போனில் கண்ணாக இருந்தவளின் கண்களில், அறையின் மூலையில் இருந்த சலவை கூடை கண்ணில் பட்டது. துவைக்கும் துணிகளை அந்த கூடையில்தான் நிரப்புவார்கள் இருவரும், இருவருக்கும் தனி தனி கூடை தான், அதுவும் ஸ்மிருதியின் கண்டிப்பினால்…
கூடைகளின் அருகில் சென்றவள், தன் துணியிருந்த கூடையிலிருந்த துணியை, அஜய் துணியிருக்கும் கூடையில் நுழைத்து விட்டு, காலியான கூடையைச் சமையலறையின் பரன் மேல் வைத்து விட்டு வந்தாள். மீண்டும் அறைக்கு வந்தவள், கூடை நிறைய அஜய்யின் துணிகள் நிரம்பியிருப்பதை அப்பொழுது தான் கவனித்தது போல அதனருகில் சென்று அவனது ஒரு சட்டையை கையில் எடுத்தாள்.
‘ஆபிஸ் போயிட்டு வந்ததும் சாப்பிட்டுத் தூங்குறதுக்கே அவருக்கு டைம் கரெக்ட்டா இருக்கும், ட்ரெஸ்ஸை எப்படி வாஷ் பண்ண டைம் இருக்கும், பேசாம நானே வாஷ் பண்ணிடட்டுமா?’ என யோசித்தவள், ‘நானா வாஷ் பண்ணப் போறேன், வாஷிங் மெஷின் தானே வாஷ் பண்ணப் போகுது,’ என நினைத்தவள், அவனது துணிகளை எடுத்துச் சென்று, வாஷிங் மெஷினில் போட்டாள்.
ஒரு மணி நேரத்தில், வாஷிங் மெஷின் தன் வேலையை முடித்ததும், துணிகளை வாளியில் நிரப்பியவள், பால்கனிக்குச் சென்று, அதனை காய வைப்பதற்காகக் கட்டிருந்த கயிற்றில் ஒவ்வொரு துணியாகப் பரப்பி விரித்தாள்.
அனைத்தையும் செய்து முடித்தவள், ‘நான் பாட்டுக்கு வாஷ் பண்ணிப் போட்டுட்டேன், தப்பா எதுவும் நினைச்சிடுவாரோ? அவர்மேல் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறதா நினைச்சிடுவாரோ?’
”நினைச்சா நினைச்சிட்டுப் போகட்டும், அவர் யாரோ ஒருவர் இல்லையே, தொட்டுத் தாலி கட்டுன ஹஸ்பண்ட் தானே,” எனத் தோளைக் குலுக்கிவிட்டு மீண்டும் படுக்கைக்கு வந்தாள்.ம்.
அன்றைய மதிய வேலையும் கடந்து, மாலை நேரம் ஆரம்பித்தது. அன்று அஜய் ஆறு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான். வந்தவன் ஃப்ரெஷ் ஆகிவிட்டு ஸ்மிருதி தந்த காபியை பருகிவிட்டு ஹாலின் சோஃபாவில் அமர்ந்தான். அந்த நேரம் வீட்டின் கதவு தட்டப்பட, ஸ்மிருதி சென்று கதவைத் திறந்தாள்…
வெளியே ஹாசினியும் அவளுடன் சேர்ந்து, புது முகமாக அவள் வயதேயொற்றியிருந்த சிறுவன் ஒருவனும் நின்றான்…
”ஹாய் ஹாசினி…” என்றவள், “சார் யார்?” என்றாள் அந்தச் சிறுவனைக் கண்களால் காண்பித்து..
”ஆண்ட்டி,… எங்களுக்குப் போரிங்கா இருக்கு, எங்க பேரண்ட்ஸ் எங்க கூட விளையாட வர மாட்டேங்கிறாங்க, அதான் உங்களைத் தேடி வந்தோம்,” என்றாள் ஹாசினி…
”இவ்வளவு தானா? ஓகே நாம விளையாடலாம். சொல்லுங்க, என்ன விளையாடலாம்?” என்றாள் ஸ்மிருதி இரு சிறுவர்களையும் நோக்கி…
”கேரம்போர்ட் விளையாடலாம் ஆண்ட்டி,” என்றான் அபி…
“வேண்டாம் அபி, கீழ கார்டன்ல பேஸ்கட் பால் விளையாடலாம்,” என்றாள் ஹாசினி…
”பட் ஹாசினி, கேரம் போர்ட் என்னோட ஃபேவரைட் கேம்,” என்றான் அபி…
”பேஸ்கட் பால் கூட, எனக்கு ஃபேவரைட் கேம் தானே அபி, நீ சொல்ற கேம் நாளைக்கு விளையாடலாம்,” என்றாள் ஹாசினி…
அரை மனதுடன் தலையை ஆட்டிய அபியைக் கண்ட ஸ்மிருதி, “நாம இப்போ ரெண்டு கேம்ஸும் விளையாடலாம், ஃபர்ஸ்ட் கேரம், நெக்ஸ்ட் பேஸ்கட் பால் ஓகேவா?” என அவள் கேட்க, இருவரும் சம்மதத்துடன் “ஓகே ஆண்ட்டி,” என்றனர்…
ஹாசினியின் வீட்டிலிருந்து, கேரம் போர்டை எடுத்து வந்தனர் சிறுவர்கள். ஸ்மிருதி, ஹாசினி, அபி, மூன்று பேரும் கேரம் போர்டின் மூன்று பக்கம் அமர, ஒரு இடம் மட்டும் காலியாக இருந்தது.
”அங்கிள் நீங்களும் வாங்களேன், அப்போ தான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்,” என்றாள், சோஃபாவில் கோப்புகளைப் பார்த்தபடி இருந்த அஜய்யிடம்…
வேறு வழி தெரியாமல், “பசங்க ஆசைப்படுறாங்கள்ல, நீங்களும் வாங்க,” என்றாள் அஜய்யிடம் ஸ்மிருதி.
அவளை ஏறிப் பார்த்தவன், என்ன நினைத்தானோ மறுப்புக் கூறாமல், தனது கோப்புகளை ஓரமாக வைத்துவிட்டு, அவர்களருகில் வந்தான். வந்தவன் ஸ்மிருதிக்கு எதிரிலிருந்த காலியான பக்கம் சென்று அமர, ஆட்டத்தைத் தொடங்கினர்…
சிறுவர்களிடமிருந்து தொடங்கியவர்கள், ஹாசினி, அபி, ஸ்மிருதி அடித்து முடிக்க, மூவராலும் ஒரு காயின் கூடப் போட முடியாமல் போனது…
நான்காவதாக அஜய்யின் முறை வர, அவன் ஒன்று, இரண்டு, மூன்று என அடுத்தடுத்த காயின்களைத் தொடர்ச்சியாகக் குழிக்குள் போட்டுக்கொண்டே வந்தான்.
அவன் ஸ்டைலின் படி கடைசியாக ரெட் காயினையும் அடித்து மீதமிருந்த கருப்பு நிற காயினையும் போட்டு ஆட்டத்தை முடித்து வைத்தான்.
இவனின் ஆட்டத்தைப் பார்த்து இரு சிறுவர்கள் உட்பட, ஸ்மிருத்தியும் வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்…
சிரித்தவன், “அப்படியும் வச்சிக்கலாம்,” என்றவன், “இப்போ நான் என் வொர்க்கைப் பார்க்கப் போகட்டுமா?” என்றான் அஜய்…
”அதெல்லாம் முடியாது, வாங்க கீழே போலாம், பேஸ்கட் பால் விளையாடலாம்,” என்றாள் ஹாசினி. அவளின் விருப்பத்திற்கேற்ப, அஜய்யும் ஸ்மிருதியும் சிறுவர்களைக் கார்டனிற்கு அழைத்துச் சென்றனர்…
பார்க்கிங் ஏரியாவுக்கு இடதுபுறமிருந்த கார்டனிற்கு வந்தனர் நால்வரும். வானம் இருட்டிவிட்ட நிலையில், அப்பார்ட்மண்ட் காம்பவுண்டைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த மின்விளக்கின் வெளிச்சம் கார்டனை வெளிச்சமாகக் காட்டியது. ஏற்கனவே அங்கு கூடைப்பந்து விளையாடுவதற்காக கூடை மாட்டி வைக்கப் பட்டிருந்தது…
சிறுவர்களின் உயரத்திற்கேற்ப, அதனைச் சரியான அளவில் இறக்கிச் சரி செய்து வைத்தான் அஜய்.
இரு சிறுவர்களும் மாறி மாறி பந்தைக் கூடைக்குள் போட்டு விளையாட, அஜய் மற்றும் ஸ்மிருதி இருவரும் ஓரமாக நின்று அவர்கள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தனர்.
”நான் வரல, உங்க அங்கிளைக் கூட்டிட்டுப் போங்க,” என்ற ஸ்மிருதி, அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தாள். சிறுவர்கள் சொன்ன அளவின் படி கூடையை மேலே சற்று உயரத்திற்கு மாட்டி வைத்தான் அஜய்.
”ஓகே, இப்போ நீங்க பால் போடுங்க பார்ப்போம்,” என்றாள் அஜய்யிடம் ஹாசினி…
அவள் சொன்னது போலச் செய்தவன், கூடையினுள் சரியாகப் பந்தை நுழைக்க, அது கீழே வந்து விழுந்தது…
”என்ன ஹாசினி, அங்கிள் இருக்க ஹைட்டுக்கு, இப்போ பேஸ்கட் மாட்டிருக்கிற ஹைட் ஈஸியா பால் போட்டுட முடியும், நீங்க இன்னும் கொஞ்சம் ஹைட்ல மாட்டுங்க அங்கிள்,” என்றான் அபி.
அவன் சொன்னது போலச் செய்தவன், அப்போதும் பந்தைச் சுலபமாகக் கூடைக்குள் போட்டான். இன்னும் கொஞ்சம் மேல, இன்னும் கொஞ்சம் மேல என்றவாறு சிறுவர்கள் இருவரும் மாறி மாறி அவன் ஒரு தடவையாவது, தவற விட மாட்டானா என்ற அசட்டு எண்ணத்தில் முயற்சி செய்தனர்.
அவர்களின் எண்ணத்தைப் பொய்க்காக்கி கொண்டே, ஒரு பந்தைக் கூடத் தவற விடாமல், பந்தை போட்டுக் கொண்டே இருந்தான் அஜய். இதனை அமர்ந்திருந்த ஸ்மிருதி இதழ் விரியப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்…
அப்பொழுது தான் ஸ்மிருதி இருக்கையிலிருந்து எழுந்தாள்.
எழுந்தவள் லிஃப்டை நோக்கி நடக்க, “ஸ்மிருதி, ஒன் செகண்ட்,” என அவளை நிற்க வைத்தான் அஜய்.
”என்ன?” என்றவாறு திரும்பியவளிடம், “டென்ஷன் ஆகாம, அமைதியா இரு,” என்றவன், கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து, அவளின் முதுகுப்புறம் ஏதோ செய்தான்…
”என்ன பண்ணுறீங்க, பூச்சி எதுவும் இருக்கா?” என்றாள் அவனின் செய்கையைப் புரிந்து சிறு பயத்துடன்…
”வெயிட்,” என்றவன், குச்சிக்கு அழுத்தம் கொடுத்து, அவள் முதுகுப்புற துணியில் ஒட்டிருந்த அட்டைப் பூச்சியை கீழே தள்ளி விழ வைத்தான்…
அதனை கண்ட அவளின் விழிகள் அகல விரிய, சத்தமான அலறலுடன் துள்ளிக் குதித்து, பயத்தில் தன் எதிரில் நின்ற அஜய்யை இறுக்கி அணைத்துக்கொண்டாள்….
நடுக்கத்துடன் தன்னை அணைத்திருந்தவளின் தோள்களைப் பற்றியவன், “ஒன்னுமில்ல ஸ்மிருதி, அதை தள்ளி விட்டாச்சு,” அவளின் பயத்தை அறிந்தவன் ஆறுதலாகக் கூறினான்…
ஆனால் அவளுக்கோ உடலில் இன்னும் அந்த பூச்சி ஒட்டிக் கொண்டிருப்பது போலவே பிரம்மை, இன்னும் ஆழமாக அவனுள் புரிய,… “ஸ்மிருதி.. யாராவது பார்க்க போறாங்க” என்றவனின் சொல்லில் சுயம் உணர்ந்து சட்டென்று விலகியவள்… “ஸாரி… அது, பயத்துல,” என்றாள் வார்த்தைகள் தந்தியடித்தப்படி…
”இட்ஸ் ஓகே,” என்றவனின் முகம் பார்க்க முடியாமல், அவள் “நான் போறேன்,” என்றவாறு வேகமாக அவ்விடத்திலிருந்து ஓடியே விட்டாள்,…