Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 13

13.

மஞ்சம் – 13

அக்னி அதிர்ச்சியாக பார்க்க, நிவி கண்ணீரை உள்ளிழுத்து அந்த குரலை வைத்தே கண்டு கொண்டாள் அது பரஞ்சோதி என்று.

பாவாடை தாவணியில் கழுத்து நிறைய நகை போட்டு வாயெல்லாம் பல்லாக நின்று இருந்தாள்.



Advertisement

“நீயா?” என கசப்பாக கேட்டவன் வெடுக்கென்று கையை உதறி கொண்டான்.

அவன் செயலில் அவள் முகம் வாடி போக,

“அண்ணா! , ஜோதி!” என்று சந்தோஷ குரலில் அழைத்துக் கொண்டு ஓடி வந்தாள் சூடாமணி.

Advertisement

“வாங்க அண்ணா.”

Advertisement

“நமக்குள்ள என்ன வரவேற்பு? இந்தா இதுல உனக்கு புடவை, அக்னி, அமர் ரெண்டு பேருக்கும் புது துணி இருக்கு.” என் நீட்டியவர், பெற்ற தாய் அதே வீட்டில் இருக்க அவருக்கு எதுவும் வாங்கி வரவில்லை.

“மாமா உள்ள வாங்க.” அப்போதும் அமர் தான் அழைத்தான்.

“வரேன் டா. அக்னி வாயை திறக்கவே இல்லையே?” என்றார் அவனை பார்த்தபடி.

Advertisement

“உள்ள போங்க மாமா. நான் என் பொண்டாட்டியை அழைச்சிட்டு வரேன்.” என்றவன் அனைவரும் இவள் என் மனைவி என்பது போல் அவள் கையை பிடித்து அழைத்து கொண்டு முன்னே சென்றவன் திரும்பி “வாங்க எல்லோரும்” என்க, அனைவர் முகமும் நெருப்பை மிதித்தது போல் ஆனது.

நிவேதிதா யாரையும் நிமிர்ந்து பார்க்க விரும்பாமல், அவன் கையில் இருந்த தன் கையை பிரிக்க முயல, அவன் பிடி இறுக்கியது. அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு இனிப்பாக இல்லை.

வலிக்க தொடங்க, கையை அசைக்காமல் அப்படியே நின்று கொண்டாள்.

“மாமா உள்ள வாங்க. என்ன சண்டை காரங்க மாதிரி வெளியே நின்னு வேடிக்கை பாக்குறீங்க. அம்மா ரெண்டு பேரையும் இக்க அழைச்சிட்டு வா.” என இறுக்கமான குரலில் கூறியவன் அவளுடன் உள்ளே நுழைந்த பிறகு தான் அந்த பிடியை விட்டான்.

“ஜோதி உள்ளே போ.” என மகளிடம் கூறியவர் தன் ஆத்திரத்தை மனதுக்குள் புதைத்துக் கொண்டு அவரும் உள்ளே வந்தார்.

அக்னி மட்டும் நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.

“உக்காருங்க மாமா. அமர் மாமாவுக்கு நாற்காலி எடுத்து போடு.” என்றவன், “என்ன மாமா புது துணி எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கீங்க? வீட்டுல ஏதாவது விசேஷமாக?” ஆர்வமாக கேட்பது போல், தாய் கையில் இருந்த பையை வாங்கினான்.

அமர் இரண்டு நாற்காலி போட, ஒன்றில் அவன் மாமா உட்கார, மற்றொன்றில் ஜோதியும் உட்கார போக.

“ஜோதி கீழ அத்தை கூட உக்கார். என்ன பழக்கம் இது? வயது மூத்தவன் முன்னாடி நாற்காலியில் உக்காருவது.” என்றான் கோபமாக.

அவளுக்கு முகம் சுண்டி போனது. அவள் தந்தையை பார்க்க, அவர் கண்ணால் செய் என்றார்.

வேறு வழியில்லாமல் அவள் அத்தை அருகில் அமர, “அமர் நீயும் அவங்க கூட உட்கார்.” என்றான் அதே அதிகார தோரணையில்.

அமர் ஜோதி அருகில் அமர்ந்தான். இருவரும் ஜோடியாக அமர்ந்து இருந்தனர்.

அக்னி ஒவ்வொரு துணியாக பார்த்தவன், அதில் இருந்த விலையையும் பார்த்தான்.

அவன் மாமன் ஒன்னும் அத்தனை நல்லவர் இல்லை என்று அவனுக்கும் தெரியும்.

அக்னி துணி ஆயிரத்திற்கும் மேல். அமரனுக்கு மிக குறைந்த விலையில் பார்க்கவே கேவலமாக இருந்தது. தாய்க்கு எடுத்து வந்த புடவை புதிது தான். காட்டன் புடவை. அவனுக்கு நன்றாக தெரியும் இது ஜோதி அம்மா வாங்கி பிடிக்காமல் ஒதுக்கி வைத்திருந்த புடவை என்று. அதில் ஒன்றை தூக்கி வந்து பெருமை தேடுகிறார்.

ஒன்றும் சொல்லாமல் அப்படியே அள்ளி அம்மாவிடம் கொடுத்தவன், “உங்க அம்மா, என் பாட்டியை மறந்திட்டீங்க போல.” என்றவன் கேள்வியில் முழித்தவர், “அம்மாவுக்கு பிற்பாடு வாங்கிட்டு வரேன்.”

ஒரு மாதிரி சிரித்தான். “சொல்லுங்க மாமா. என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க? பரஞ்சோதி க்கு இப்போ பரிச்சை தானே? எழுதலையா?”

ஜோதி தலையை குனிந்து கொண்டாள்.

“ஜோதிக்கு படிப்பு வரலையே
அதான் பரிச்சைக்கு போகலனு வீட்டிலேயே நின்னுடுச்சு. வீட்டுல சும்மா தானே இருக்குன்னு இங்க அழைச்சிட்டு வந்தேன்.” என்றதும்,

“எதுக்கு பரிச்சை எழுத போகல? படிக்கலனா எவன் கட்டிப்பான்? இந்த காலத்தில் படித்த பொண்ணுக்கே கல்யாணம் ஆக மாட்டேங்குது. நீ படிக்காமல் இருந்து போற வீட்டில் ஆடு மாடு மேய்ப்பியா? வீட்டுல சும்மா தானே இருக்க? ஒரு எக்ஸாம் எழுத முடியலையா?” என கோபமாக அதட்ட, பொலுக்கென்று கண்ணீர் ஊற்றியது அவள் கண்களில் இருந்து.

அனைத்தையும் அறைக்குள் இருந்து நிவேதிதா கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். அவளுக்கும் நன்றாக தெரியும் படிக்காமல் இருந்தால் அவனுக்கு பிடிக்காது என்று. அவளையே படிக்க சொல்லிக் கொண்டே இருப்பான். அவளிடம் அவன் இப்போதைக்கு படி என்பதை தவிர வேறு எதுவும் பேச மாட்டான்.

அவள் விசும்பல் அழுகையாக மாறியது, “அத்தை!” என அவர் மடியில் படுத்துக் கொண்டு சத்தமாக அழுதாள்.

“அண்ணா ஜோதி படிக்கலனா என்ன இப்போ? இந்த வீட்டு மருமகள் தானே? இங்க அவளை யாரும் ஆடு, மாடு மேய்க்க சொல்ல போறோம்? சந்தோஷமா வீட்டில் இருக்கட்டும்.” என அவன் ஒரு அர்த்தத்தில் அவளுக்காக பேச,

ஜோதி அப்பா “அப்படி சொல்லுடா!” என மீசையை முறுக்கி சிரித்தார்.

“உனக்கு சம்மதமா? அப்போ எனக்கு என்ன இருக்கு? நீயாச்சு அவளாச்சு. அது உங்க ரெண்டு பேர் பிரச்சனை. படிச்சா என்ன படிக்காமல் மாடு மேய்த்தல் என்ன?” என அவனோ மொத்தத்தையும் மாற்றி விட்டான்.

அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.

“அண்ணா உலராத. நான் அப்படி சொல்லல. ஜோதியை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா…” என அவன் சொல்ல வருவதை புரிந்து,

“வாய மூடு கழுதை. என்ன பேச்சு இது. என் பொண்டாட்டி நான் கட்டுன தாலியோடு ரூமுக்குள்ள இருக்கா. எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ண பாக்கிறியா? உனக்கு தான் நான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். எனக்கு நீ பொண்ணு பார்க்க கூடாது. என் வாழ்க்கையில் நீ எதாவது பண்ண தொலைச்சிடுவேன்.” என அதிகாரமாக மிரட்ட, அனைவரும் மிரண்டு போனார்கள்.

கொஞ்ச நாளாக இந்த அக்னி மறைந்திருந்தான். இப்போது மீண்டும் வெளிப்படுகிறான். இது தான் இவன் இயல்பான குணம்.

சூடாமணி பார்வையால் மகனை அடக்க, அக்னி கண்டு கொண்டான்.

“அம்மா என் கல்யாணம் சிம்பிளாக முடிஞ்சு போச்சு. உனக்கு வருத்தம் இருக்கும்னு எனக்கு தெரியும். ஜோதிக்கும், அமருக்கும் ஆடம்பரமாக பண்ணிடுவோம். அவனுக்கு தான் படிக்கலனாகும் பரவயில்லை நு சொல்றான்.” என்றவன், அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல்,

“மாமா போய் கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.” என்றான்.

மூவருக்கும் முகம் சுருங்கி போக, அண்ணன் தங்கை இருவரும் பார்வையால் செய்து பரிமாறிக் கொண்டனர்

அமர் பரஞ்சோதியை திரும்பி பார்த்தவன், ‘இவ எனக்கு பொண்டாட்டியா? நடக்கவே நடக்காது.’ என எழுந்து நின்று கொண்டான்.

இவன் உருவாக்கிய சூழ்ச்சியில் இவனே சிக்கிக் கொள்ள போகிறான். இவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் இவன் காதலையும் சிதைக்கும்.

இவன் திட்டங்கள் அனைத்தையும் அக்னி எரித்து சாம்பல் ஆக்க போகிறான்.

“சூடாமணி என்ன சமையல்?”

“நான் இன்னும் பாக்கலானா. நம்ம வீட்டு வேலைகாரி சமைச்சது.” என்றார் வெறி தொட்ட குரலில்.

அக்னி இவ்வளவு நேரம் பேசியதில் அமைதியாக இருந்தவர், அந்த கோபத்தை எல்லாம் இப்போது காட்டினார்.

அக்னி கை முட்டியை இறுக்கியவன்,

“மாமா பொங்கல், சாம்பார், சட்னி. என் பொண்டாட்டி அவ கையால சமைச்சது. ரொம்ப ருசியா சமைப்பா.” என அம்மா முகத்தை உடைப்பது போல் கூற,

பேரன் கூறியதை கேட்டபடி உள்ளே வந்த பாட்டி தாய்க்கும், மணக்கும் நடக்கும் உள் போரை கண்டு மனம் வெதும்பினர்.

எது நடக்க கூடாது என்று பயந்தாரோ அது இப்போது ஆரம்ப நிலையில் இருக்கிறது.

இனி இப்படியே தொடர்ந்தால் என்ன ஆகுமோ? பயத்தில் மூச்சு கிட்டியது.

அதுவும் பரஞ்சோதி, மகன் இருவரையும் ஒன்றாக கண்டவர், மனதுக்குள் பய பந்து உருண்டது. அவருக்குள் இனம் புரியாத அச்சம்.

‘இந்த குடும்பத்தில் மிகப்பெரிய சேதாரம் ஒன்று உருவாக போகிறது. மீண்டும் குடும்பம் உருக்குலைய போகிறது.’ என உள் மனம் எச்சரிக்கை செய்தது.

“எப்போ வந்த ஜோதி?”

“கொஞ்ச நேரம் ஆகுது பாட்டி.”

“சரி எல்லாரும் போய் கை அலம்பிட்டு வாங்க. நான் எடுத்து வைக்கிறேன்.”

“பாட்டி நீங்க எதுக்கு வேலை செய்யணும்? அதுக்கு தான்….” என அமரன் நிவேதிதா வை குறிப்பிடும் முன்னே,

“பாட்டி அமரனும், ஜோதியும் எடுத்து வைப்பாங்க. நீங்க வந்து உக்காருங்க.” என அக்னி கூறியதும் இருவர் முகமும் மாறியது.

“ஜோதி காலேஜ் போகல?” என பாட்டி கோபமாக கேட்க,

“அவளுக்கு படிக்க பிடிக்கலையா.” அக்னி பதில் கூறினான்.

“நாலு பண்ணி வாங்கி மெய்க்கட்டும். ஒருத்தனும் கட்டிக்க மாட்டான்.” என கடுப்பாக கூறினார்.

“பாட்டி….” என ஜோதி சிணுங்க,

அவரோ அவளை கண்டு கொள்ளாமல் அவளை தாண்டி சென்றார்.

நிவேதிதா அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவர்கள் அழைத்ததும். எழியே செல்ல வேண்டும் என்று அமர்ந்து இருக்க,

அதற்குள் வெளியே அனைவரும் சாப்பிட தொடங்கினர்.

ஜோதிக்கும் , அவள் தந்தைக்கும் ருசியில் கண்கள் விரிந்தது.

நிவேதிதா இவ்வளவு ருசியாக சமைப்பாளா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

அதே போல் தான் இவளின் கைப்பக்குவத்தை அவள் வைத்த சாம்பாரே கூறி விட்டது.

பாராட்ட தான் மனம் வரவில்லை, அதற்கு பதில் பொறாமை தான் உருவானது.

பாட்டி எதையோ விழுங்கி கொண்டு நிற்பதை அக்னி உணர்ந்தான்.

சீக்கிரம் சாப்பிட்டு முடித்தவன் , “பாட்டி தண்ணி எடுத்துட்டு வாங்க.” என சத்தமாக கூற,

அவரும் தண்ணீர் எடுத்துக் கொண்டு பேரனிடம் ஓடினார்.

அவர் கையில் இருந்த தண்ணீரை வாங்கி குடித்தவன், “என்ன சொல்ல முழிக்கிறீங்க? அப்படி என்ன பிரச்சனை? உங்க முகம் வாடி போச்சு?” என்க,

“அக்னி தமிழ் வீட்டில் யாரும் இல்லை.” என்றதும் அவன் விழிகள் இடுங்கியது.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!